Monday, March 29, 2010

எம்.கே.டி நூற்றாண்டு ஒலித்தொகுப்புக்கள்



வணக்கம் அன்பு உள்ளங்களே..

ரொம்ப நாள் கழித்து தேன் கிண்ணத்தில் குதித்திருக்கேன்.

1.அம்பாள் மனம் திறந்து >> 2.ராதை உனக்கு கோபம் ஆகாதடி >> 3.சொல்லு பாப்பா சொல்லு பாப்பா >> 4.பூமியில் மானிட ஜென்மம் அடைந்து >> 5.தீன கருணாகரனே நடராஜா >> 6.கிருஷ்னா முகுந்தா முராரே >> மன்மத லீலையை வென்றோர் >> 7. சத்வ குண போதன் >> 8.வள்ளளை பாடும் வாயால் >> 9.என்னுடல்தனில்.

இசை ஜாம்பவான் எம்.கே.தியாகராஜ பாகவதரின் (1910 - 2010) நூற்றாண்டு சிறப்பு வானொலி சிறப்பு ஒலித்தொகுப்புகள் 2 பகுதிகளாக (பதிவுகளாகவும்) இங்கே தரப்பட்டுள்ளது எனது வேறோரு தளத்தில் பதிந்தேன். தேன் கிண்ண நேயர்களுக்காக இங்கே அவற்றை தொடர்பு கொடுத்துள்ளேன். இரண்டு பகுதிகளையும் பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள். அவரின் பாடல்களை கேட்டாலே இசைப்பிரியர்களாகிய நாம் அவருக்கு மரியாதை செய்தது போலாகும். ஆச்சரியமூட்டும் தகவல்களுடன் அறிவிப்பாளர் குடந்தை வேங்கிடபதி ஐயா அவர்கள் வழங்கியுள்ளார் அவருடன் சேர்ந்து தொகுப்பாளினிகள் திருமதி.சோபியா விஜயகுமார், திருமதி.சரஸ்வதி மற்றும் அறிவிப்பாலர் திரு.சந்திரன் அவர்களும் ஸ்வாரசியமாக ஒலிப்பதிவு கூடத்தில் கேட்டு மகிழ்ந்தார்கள். நீங்களும் கேட்டு மகிழ்ந்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

எம்.கே.டி நூற்றாண்டு ஒலித்தொகுப்பு முதல் பகுதி

எம்.கே.டி நூற்றாண்டு ஒலித்தொகுப்பு இரண்டாவது பகுதி

மேற்கண்ட பாடல்களை பாருங்கள் எல்லாமே பிரபலமான பாடல்கள் தான். இந்த ஒலித்தொகுப்பில் உள்ள அறிய தகவல்கள் போலே பாகவதரின் அதிகம் ஒலிப்பரப்ப படாத பாடல்கள் அதிகம் உள்ளன அறிவிப்பாளர் அவற்றை தேர்ந்தெடுத்து ஒலிபரப்பியிருக்கலாம் ஒலித்தொகுப்பு மிகவும் ஸ்வாரசியமாக இருந்திருக்கும். பரவாயில்லை பாகவதரை நினைத்து பார்க்க ஒரு வாய்ப்பாகவும் இது இருக்கட்டுமே.

என்றும் அன்புடன் உங்கள் கோவை ரவி.

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam