Get Your Own Hindi Songs Player at Music Plugin
அடடா அகங்காரா அரக்க கைகளில் உலகிங்கே
அழிக்கும் அதிகாரம் இவர்க்கு தந்தவன் எவன் இங்கே
விடவாய் இவர் தம்மை வெந்து வேடிக்கை பார்த்திடவா
முடமாய் முடங்காது மூக்கர் இவர் தம்மை முடித்திடவா
மனித குலத்தின் துணையோடி
மனதை அறுக்கும் ரணமெல்லாம்
தனியனாக அறுத்தெரிவேன்
தகணம் நடக்கும் இடத்தில் எனது
ஜனனம் என்று புரிந்து கொள்ளும் மனிதா
(அடடா..)
வறுமை துறத்த வாழ்க்கையும் துறத்திட
வரண்டு போன மனிதனும் துறத்துவதோ
பரிவில்லாத பாவிகள் துறத்திட
பதுங்கி பதுங்கி பகை வரும் துறத்துவதோ
அந்தரி வாராகி சாம்பவி அமர சோதரி
அமல ஜகஜால சூலி சுந்தரி நிரந்தரி துரந்தரி
வனராக சுகுமாரி கௌமாரி
இறங்கும் நெஞ்சு இறுகுது இறுகுது
நெருப்பு கணலில் கீதியை காட்டிடவே
தோள் இரண்டும் துடிக்குது துடிக்குது
துரோக கூட்டம் தலைவதை தாக்கிடவே
வையமே வானமே வாழ்த்திடு
நாளை உலகில் நல் மனிதன் தோன்றட்டுமே
(விடவாய்..)
காற்றை விரட்டும் சருகுகள் உண்டோ
கடலில் ஆடும் அலைகளை தடுப்பதுண்டோ
ஆற்றை திருப்ப செய்பவன் உண்டோ
நேற்றை நிருத்தி பிடித்தவன் எவனும் உண்டோ
பொறியரவ முடித்தானே வெறுப்பு விழி துடிப்பவனே
கரி தோளை உடுப்பவனே புலியாடை உடையவனே
சுடு காடு திரிபவனே திரிசூலம் தரிப்பவனே
ஏழு கடல்கள் நெஞ்சில் எழுந்தது
இடி முழக்கம் என்னுள் முழங்கிடுதே
பிடி படாத பெயர்கள் எல்லாம்
பொடி பொடிக்க கரங்கள் துடிக்கிறதே
தடுப்பவன் எவனடா திறமுடன் தாண்டிவா
இருவன் இல்லை எவனும் இல்லையே
படம்: பிதாமகன்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜேசுதாஸ்
Sunday, March 14, 2010
அடடா அகங்காரா அரக்க கைகளில் உலகிங்கே
பதிந்தவர் MyFriend @ 1:35 AM
வகை 2000's, KJ ஜேசுதாஸ், இளையராஜா
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment