Thursday, March 18, 2010

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்



கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளையடித்தால்
மேகம் என்று அர்த்தம்
பூவை வண்டு கொள்ளையடித்தால்
புதையல் என்று அர்த்தம்
புதையல் என்னை கொள்ளையடித்தால்
மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம்

பறவைகள் தோன்றினால்
நதிகள் பக்கம் என்று அர்த்தம்
பாற்கடல் பொங்கினால்
வானில் பௌர்ணமி என்று அர்த்தம்
ஆளில்லாமல் அதிகாலை சிரித்தால்
ம்ம்ம் ம்ம்ம் என்று அர்த்தம்
அழகு பெண்ணின் தாயாரென்றால்
அத்தை என்று அர்த்தம்
தாவிடும் ஓடைகள் நதியின்
தங்கைகள் என்று அர்த்தம்
தூவிடும் தூறல்கள் மழையின்
தோழிகள் என்று அர்த்தம்
இரவின் மீது வெள்ளையடித்தால்
விடியல் என்று அர்த்தம்
எதிரி பேரை சொல்லியடித்தால்
வெற்றி என்றே அர்த்தம் அர்த்தம்

படம்: திருடா திருடா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: மனோ
வரிகள்: வைரமுத்து

7 Comments:

Anonymous said...

அட நாசமாபோனவனே அது கொல்லை இல்லடா கொள்ளை!!! கொல்லை என்பது வீட்டின் பின்பகுதி, இது கொள்ளை. தமிழ் உருப்பட்டமாதிரிதான்!!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அன்பான பெயரிலிக்கு!

இத் தவறு வேண்டுமென நடந்ததல்ல. இவர் தன்னார்வமாகத் தமிழ் பயின்றவர். தவறை அன்புடன் சுட்டுங்கள். அதை அவர் ஆவலுடன் திருத்துவார்.
கனியிருக்க காய் கவர்வதேன்.

நாமக்கல் சிபி said...

அன்பின் அனானி,

பிழைகளை அன்பாகச் சுட்டிக்காட்டுங்கள்!
செம்மைப்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்!

நன்றி!

Iyappan Krishnan said...

அடடே நாசமாப் போன அனானியா நீங்க...

தமிழ் உருப்படறது இருக்கட்டுங்கோவ்... நீங்க ஒழுங்கா பேச கத்துக்கோங்க ஸ்வாமி... தன்னார்வமா யாராச்சும் எதையாச்சும் செஞ்சா அதை ஊக்குவிக்கனும்முங்கோ... தவறைகோ .. தவறை சுட்டிக் காட்ட யாருக்கும் உரிமை உண்டு தவறுதலாக பேச உங்களுக்கு அனுமதி கொடுத்ததாருங்கோவ் ?

சென்ஷி said...

தமிழை உருப்பட வைக்க வந்த அனானி குல சாமி வாய்க..வாய்க...

Anonymous said...

அட நா.போ.அனானி அவர்களே..

அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா.. கூல்.. கூலாக கூவுங்களேன் அதுவும் இனிமையாக தான் இருக்கும்.

சீனு said...

//ஆளில்லாமல் அதிகாலை சிரித்தால்
ம்ம்ம் ம்ம்ம் என்று அர்த்தம்//

ஆளில்லாமல் அடிக்கடி சிரித்தால்
லூஸு என்றே அர்த்தம்

Last 25 songs posted in Thenkinnam