குண்டு மாங்கா தோப்புக்குள்ளே
நண்டு போல வந்தாயே
யாருமில்லா நேரம் பார்த்து
கை புடிச்சாயே ஏ..
(குண்டு..)
கைய புடிச்சா என்ன தப்பு
வளையல் போல கத்துறியே
அந்த இடத்தில் விட்டுப்புட்டு
இப்ப திட்டுறியே
தண்டவாள நரம்பு மேல
ரயிலு போல ஓடுறியே
துண்டு துண்டா உயிர வெட்டி
தூக்கி போடுறியே
வெயில் கால வேர்வை போல
மார்பு மேலே பூக்குறியே
எந்தன் கண்ணின் இமையை தொறந்து
எட்டி பார்க்குறியே
கொப்பலங்கா குருவிலங்கா கொப்பலங்கா கொகொகொ
கொப்பலங்கா குருவிலங்கா கொகொகொகொகொ ஹோய்
(குண்டு..)
முந்தானை சேலைக்குள்ள
ஒன்ன நானும் மூட்ட கட்டி வைக்க போறேன்
என்னோட கூந்தல ஒன்னோட மீசையா
கண்ணால ஒட்ட போறேன்
திருப்பாச்சி திருப்பாச்சி
கத்தியாக நீ என்னை கீறாதே
தூங்காத சூரியன் சுண்டு விரல் பட்டது
தாங்காத காயமே ஆறாதே
(குண்டு..)
ஏ பாவடை பச்சைக்கிளியே
என்ன பாத்து ஆளான இச்சை கிளியே
பச்ச கிளி ஓடாத இச்சு தந்து வெளுப்பேனே
என்னோட வாடி வெளியே
ஏ சிங்கார சின்ன புலியே
என்ன பார்ட்து சீராத செல்ல புலியே
பூவாசம் வேணுமா மாமிசம் வேணுமா
எங்கிட்ட சொல்லு புலியே
புள்ளி மானே உன்னை நானே
குண்டூசி மீசையால குத்த போறேன்
பஞ்சான ஏனிய நெஞ்சோடு தூக்கியே
பஞ்சாங்கம் பாக்காம சுத்த போறேன்
(குண்டு..)
படம்: சச்சின்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியாவ்ர்கள்: ஜேஸ்ஸி கிஃப்ட், மாலதி
Wednesday, March 31, 2010
குண்டு மாங்கா தோப்புக்குள்ளே
பதிந்தவர் MyFriend @ 1:19 AM 0 பின்னூட்டங்கள்
Tuesday, March 30, 2010
ஓஹோ மேகம் வந்ததோ
ஓஹோ மேகம் வந்ததோ ஏதோ ராகம் வந்ததோ
எல்லாம் பூவைக்காகத்தான் பாடும்
பாவைக்காகத்தான் பூக்கள் மேல் நீர்த்துளிகள்
வெண்பாக்கள் பாடாதோ தூறல் போடும் நேரம்
பூஞ்சாரல் வீசாதோ
(ஓஹோ..)
யாரும் சொல்லாத காவியம்
ஆடை கொண்டிங்கு ஆடுது
ஈரம் கொண்டாலென்ன பொன்னோவியம்
வண்ணம் மாறாமல் மின்னுது
நாம் பொண்ணானது கல்யாணம் தேடவா
ஓர் கண்ணாளன் வந்து பூமாலை போடவா
ஏன் அம்மாடியோ பெண் பார்க்கும் நாடகம்
யார் வந்தாலென்ன திரும்பாததென் ஞாபகம்
பூவிலங்கு தேவையில்லையே
(ஓஹோ..)
கால்கள் எங்கேயும் ஓடலாம்
காவல் இல்லாமல் வாழலாம்
வண்ன மின்னல்களாய் நின்றாடலாம்
வாழ்வின் சங்கீதம் பாடலாம்
நாம் இந்தாளிலே சிட்டாக மாறலாம் வா
செவ்வான மெங்கும் ஜிவ்வென்று ஏறலாம்
நாம் எல்லாருமே செம்மீன்கள் ஆகலாம் வா
நீரோடையெங்கும் வெள்ளோட்டம் போகலாம்
வாழ்க்கை என்ன வாழ்ந்து பார்க்கலாம்
(ஓஹோ..)
படம்: மௌன ராகம்
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி
பதிந்தவர் MyFriend @ 1:46 AM 1 பின்னூட்டங்கள்
Monday, March 29, 2010
எம்.கே.டி நூற்றாண்டு ஒலித்தொகுப்புக்கள்
வணக்கம் அன்பு உள்ளங்களே..
ரொம்ப நாள் கழித்து தேன் கிண்ணத்தில் குதித்திருக்கேன்.
1.அம்பாள் மனம் திறந்து >> 2.ராதை உனக்கு கோபம் ஆகாதடி >> 3.சொல்லு பாப்பா சொல்லு பாப்பா >> 4.பூமியில் மானிட ஜென்மம் அடைந்து >> 5.தீன கருணாகரனே நடராஜா >> 6.கிருஷ்னா முகுந்தா முராரே >> மன்மத லீலையை வென்றோர் >> 7. சத்வ குண போதன் >> 8.வள்ளளை பாடும் வாயால் >> 9.என்னுடல்தனில்.
இசை ஜாம்பவான் எம்.கே.தியாகராஜ பாகவதரின் (1910 - 2010) நூற்றாண்டு சிறப்பு வானொலி சிறப்பு ஒலித்தொகுப்புகள் 2 பகுதிகளாக (பதிவுகளாகவும்) இங்கே தரப்பட்டுள்ளது எனது வேறோரு தளத்தில் பதிந்தேன். தேன் கிண்ண நேயர்களுக்காக இங்கே அவற்றை தொடர்பு கொடுத்துள்ளேன். இரண்டு பகுதிகளையும் பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள். அவரின் பாடல்களை கேட்டாலே இசைப்பிரியர்களாகிய நாம் அவருக்கு மரியாதை செய்தது போலாகும். ஆச்சரியமூட்டும் தகவல்களுடன் அறிவிப்பாளர் குடந்தை வேங்கிடபதி ஐயா அவர்கள் வழங்கியுள்ளார் அவருடன் சேர்ந்து தொகுப்பாளினிகள் திருமதி.சோபியா விஜயகுமார், திருமதி.சரஸ்வதி மற்றும் அறிவிப்பாலர் திரு.சந்திரன் அவர்களும் ஸ்வாரசியமாக ஒலிப்பதிவு கூடத்தில் கேட்டு மகிழ்ந்தார்கள். நீங்களும் கேட்டு மகிழ்ந்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
எம்.கே.டி நூற்றாண்டு ஒலித்தொகுப்பு முதல் பகுதி
எம்.கே.டி நூற்றாண்டு ஒலித்தொகுப்பு இரண்டாவது பகுதி
மேற்கண்ட பாடல்களை பாருங்கள் எல்லாமே பிரபலமான பாடல்கள் தான். இந்த ஒலித்தொகுப்பில் உள்ள அறிய தகவல்கள் போலே பாகவதரின் அதிகம் ஒலிப்பரப்ப படாத பாடல்கள் அதிகம் உள்ளன அறிவிப்பாளர் அவற்றை தேர்ந்தெடுத்து ஒலிபரப்பியிருக்கலாம் ஒலித்தொகுப்பு மிகவும் ஸ்வாரசியமாக இருந்திருக்கும். பரவாயில்லை பாகவதரை நினைத்து பார்க்க ஒரு வாய்ப்பாகவும் இது இருக்கட்டுமே.
என்றும் அன்புடன் உங்கள் கோவை ரவி.
பதிந்தவர் Anonymous @ 12:34 PM 0 பின்னூட்டங்கள்
உன் மார்பில்
Get Your Own Hindi Songs Player at Music Plugin
ஆசை நாயகனே சௌக்கியமா
உந்தன் நலம் நாடும் பிரியமானவளின் கடிதம்
உன் மார்பில் விழி மூடித் தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்
எந்தன் வளையல் குலுங்கியதே கொலுசும் நழுவியதே
வெக்கத்தில் கன்னங்கள் கூசியதே
உன் காலடி ஓசையை எதிர்ப்பார்த்தே துடிக்கின்றதே அன்பே
(உன் மார்பில்..)
சின்னக் குயில்கள் உன்னை உன்னை நலம் கேட்குதா
நெஞ்சில் பறவும் அலை அலை உன்னை ஈரம் ஆக்குதா
மெல்ல நகரும் பகல் யுகம் வேகுதா
நெஞ்சம் எதிலும் ஒட்டாமல் கண்ணில் கனவும் வற்றாமல்
தினமும் தினமும் உருகும் மனதே
ஏன் இந்த நிலமை தெரிவதில்லை
இந்தப் பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா அன்பே
(உன் மார்பில்..)
காலை வெயில் நீ பனித்துளி இவளல்லவா
என்னை கொடித்தே இனி இனி உன் தாகம் தீர்க்கவா
துள்ளும் நதி நீ இவள் அதில் நுரையல்லவா
இருவருக்கும் இடைவெளி இனி இலை அல்லவா
நிலவே வேகும் முன்னாலே
வருவாய் எந்தன் முன்னாலே
அழகும் உயிரும் உனக்கே சொந்தம்
ஏறலாம் ஆசை நெஞ்சில் உண்டே
அதை எழுதிட நாணங்கள் தடுக்கிறதே அன்பே
(உன் மார்பில்..)
படம்: நினைத்தேன் வந்தாய்
இசை: தேவா
பாடியவர்: சித்ரா
பதிந்தவர் MyFriend @ 1:09 AM 0 பின்னூட்டங்கள்
Sunday, March 28, 2010
வண்ண நிலவே வண்ண நிலவே
வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
வாசனைகள் வருகிறடே வருவதே நிஜம்தானா
ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்
ஒரு கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில்
கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்
(வண்ண நிலவே..)
கண்கள் அறியாத காற்றைப் போலே கனவில் வந்து தழுவியதென்ன
பாதி இரவில் தூக்கத்தைக் கலைக்கும் பூவே உந்தன் முகவரி என்ன
மெது மெதுவாய் முகம் காட்டும் பௌர்ணமியே ஒழியாதே
பெயரை கூட சொல்லாமல் என் உயிரே பிரியாதே
நினைவோடு தந்ததையெல்லாம் நிஜமாகத் தருவாயா
உயிருக்கு உயிரைத் தந்தே உறவாட வருவாயா
(வண்ண நிலவே..)
கூந்தல் காட்டில் வழி தெரியாமல் மாட்டிக்கொண்டேன் என் வழியென்ன
உன்னை எங்கோ தேடித்தேடி தொலைந்தே போனேன் என் கதி என்ன
மழை மேகம் நான் ஆனால் உன் வாசல் வருவேனே
கனவோடு வந்தாய் பெண்ணே நேரில் வரப் பொழுதில்லையோ
தவம் போதவில்லை என்றே தேவதை வரவில்லையோ
(வண்ண நிலவே..)
படம்: நினைத்தேன் வந்தாய்
இசை: தேவா
பாடியவர்கள்: ஹரிஹரன்
வரிகள்: பழனி பாரதி
Saturday, March 27, 2010
போட்டு வைத்த காதல் திட்டம்
போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி
ஒஹோ காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி
இதுதான் காதல் எக்ஸ்ப்ரஸ்
ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ்
வேலன் வேலை சக்ஸஸ்
இனி காலை மாலை கிஸ் கிஸ்
நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி
ஒஹோ காதலா ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி
காவேரி அல்ல அணை போட்டு கொள்ள
இந்த காதல் விலை வாசி போல
விஷம் போல ஏறும் இந்த காதல்
கேட்காத லவ் சாங் ஒன்று
கேட்கின்ற நேரம் இது வா வா
பார்க்காத ஹனிமூன் ஒன்று
பார்க்கின்ற வேலை இன்று வா வா
பயம் விட்டு புது புரட்சி நடத்தலாம்
(போட்டு வைத்த..)
ராகத்தில் தோடி தாளத்தில் ஆதி ஒன்று கூடும்
ரஸ்ஸியாவை போலே உண்டாவதில்லை எந்த நாளும்
நூலாடை சூடி கொள்ளும் கோளாரின் தங்க பாலம் நீதான்
மேலாக தட்டி தட்டி மெருகேற்றும் ஆளும் இன்று நாந்தான்
பயம் விட்டு புது புரட்சி நடத்தலாம்
(போட்டு வைத்த..)
படம்: சிங்கார வேலன்
இசை: இளையராஜா
பாடியவர்: கமல் ஹாசன்
வரிகள்: வாலி
பதிந்தவர் MyFriend @ 2:33 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, GV பிரகாஷ் குமார், இளையராஜா, கமல்ஹாசன், வாலி
Friday, March 26, 2010
உனக்குள் நானே உருகும் இரவில்
மின்னும் பனிச் சாரல்
உள் நெஞ்சில் சேர்ந்தாளே
கண்ணில் உன்னை வைத்து
பெண் தைத்துக் கொண்டாளே
வெண்ணிலாத் தூவி
தான் காதல் சொன்னாளே
மல்லிகை வாசம்
உன் பேச்சில் கண்டாளே
பொன் மான் இவளா
உன் வானவில்லா
பொன் மான் இவளா
உன் வானவில்லா
உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா
சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்து மொழி சொல்லவா
சொல்லா சொல்லும் என்னை வாட்டும்
ரணமும் தேனல்லவா
(உனக்குள்..)
ஏனோ நம் பொய் வார்த்தை தான்
ஏன் அதில் உன் என் மௌனமே தான்
உதட்டில் சிரிப்பைத் தந்தாய்
மனதில் கனத்தைத் தந்தாய்
ஒரு முறை உன்னை
எனக்கென்று ஸ்வாசிக்கவா
மறுமுறை உன்னை
புதிதாக ஸ்வாசிக்கவா
(உனக்குள்..)
தீப்போல் தேன்போல் சலனமே தான்
மதி என் நிம்மதி சிதையாதா
நிழலை விட்டுச் சென்றாயே
நினைவை விட்டுச் சென்றாயே
இனி ஒரு பிறவி
உன்னோடு வாழ்ந்திடவா
அது வரை என்னை
காற்றோடு சேர்த்திடவா
(உனக்குள்..)
படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
வரிகள் : ரோகிணி
பதிந்தவர் MyFriend @ 1:24 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, பாம்பே ஜெயஸ்ரீ, ரோகிணி, ஹாரிஸ் ஜெயராஜ்
Thursday, March 25, 2010
தாஜ்மஹால் தேவை இல்லை
Get Your Own Hindi Songs Player at Music Plugin
தாஜ்மஹால் தேவை இல்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே
இந்த பந்தம் இன்று வந்ததோ
ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
உலகம் முடிந்தும் தொடரும் உறவு இதுவோ
(தாஜ்மஹால்..)
பூலோகம் என்பது பொடியாகி போகலாம்
பொன்னாரமே நம் காதலோ பூலோகம் தாண்டி வாழலாம்
ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம்
ஆனாலுமே நம் நேசமே ஆகாயம் தாண்டி வாழலாம்
கண்ணீரிலே ஈரமாகி கரை ஆச்சி காதலே
கரை மாற்றி நாமும் வெல்ல கரை ஏற வேண்டுமே
நாளை வரும் காலம் நம்மை கொண்டாடுமே
(தாஜ்மஹால்..)
சில் வண்டு என்பது சில மாதம் வாழ்வது
சில் வண்டுகள் காதல் பண்ணால் செடி என்ன கேள்வி கேட்குமா
வண்டு ஆடும் காதலை கொண்டாடும் கூட்டமே
ஆணும் பெண்ணும் காதல் கொண்டால் அது ரொம்ப பாவம் என்பதா
வாழாத காதல் ஜோடி இம்மண்ணில் கோடியே
வாழாத பேருக்கும் சேர்த்து வாழ்வோமே தோழியே
வாணும் மண்ணும் பாடல் சொல்லும் நம் பேரிலே
(தாஜ்மஹால்..)
படம்: அமராவதி
இசை: பால பாரதி
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
வரிகள்: வைரமுத்து
பதிந்தவர் MyFriend @ 2:47 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, S ஜானகி, SP பாலசுப்ரமணியம், பால பாரதி, வைரமுத்து
Wednesday, March 24, 2010
ஒரு பண்பாடு இல்லையென்றால்
Get Your Own Hindi Songs Player at Music Plugin
ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை
நம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை
சிறகில்லாமல் தள்ளாடும் செல்ல கிளிகள்
என் கண்ணோரம் இப்போது கண்ணீர் துளிகள்
(ஒரு பண்பாடு..)
வளர்ந்து வராத பிறை இல்லை
வடிந்து விடாத நுரை இல்லை
திரும்பி வராத பகல் இல்லை
திருந்திவிடாத மனம் இல்லை
ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்
ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்
உயிரை சுவைக்கும் பொய் இல்லை
இதை இன்பம் என்பது இழக்காகும்
நீ குளித்தால் கங்கை அழுக்காகும்
(ஒரு பண்பாடு..)
மயக்கம் என்பது மாத்திரையா
மரணம் போகும் யாத்திரையா
விளக்கு இருந்தும் இருட்டரையா
விடிந்த பின்னும் இருட்டறையா
வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து
வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து
இந்த உலகம் உன்னை அழைக்கிறது
அட இன்னும் வாழ்க்கை இருக்கிறது
(ஒரு பண்பாடு..)
படம்: ராஜா சின்ன ரோஜா
இசை: சந்திரபோஸ்
பாடியவர்: KJ ஜேசுதாஸ்
வரிகள்: வைரமுத்து
பதிந்தவர் MyFriend @ 2:55 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, KJ ஜேசுதாஸ், சந்திரபோஸ், வைரமுத்து
Tuesday, March 23, 2010
பூக்கும் மலர்கள் கைகள் குலுக்கி
Get Your Own Hindi Songs Player at Music Plugin
பூக்கும் மலர்கள் கைகள் குலுக்கி
தென்றல் சொல்லும் காலை வணக்கம்
ஓஹோ அலார சேவல் அதிகாலை
மெல்ல மெல்ல விழிக்கும் தெருக்கள்
அன்னை வயல்கள் பிள்ளை மனங்கள்
உள்ளம் திறந்து பேசும் ஜனங்கள்
(பூக்கும்..)
சின்ன சிரிப்பு போதுமே செல்ல நண்பனே
கோடி செல்வம் எதற்கு
நெற்றி சுளிக்கும் போதிலும் பதறும் நண்பனே
உறவு போதும் எனக்கு
(சின்ன..)
பச்சை தாளில் வெள்ளை எழுத்து
கள்ளி செடியில் காதல் கவிதை
கிச்சு கிச்சு யார் மூட்டிவிட்டது
வெடித்து சிரிக்கும் பருத்தி செடிகள்
ஓஹோ பட்டு பூக்கும் புல் வெளிகள்
இவை அல்லவா சுக வரங்கள்
(சின்ன..)
பின்னல் செடி விழுந்து ஊஞ்சல் ஆட கொடுக்கும்
ஆலமரம் கூட தோழி எனக்கு
(பின்னல்..)
சேர் படிந்த வேட்டி மெல்லிய செருப்பு
மாலை சந்தை கூச்சல் இசை எனக்கு
கைகளை நீட்டி நிலவை தொடும்
யோகம் வேண்டும் எனக்கு
யோகம் வேணும் எனக்கு
யோகம் வேண்டும் எனக்கு
(சின்ன..)
கோடி செல்வம் எதற்கு
படம்: உதயா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஹரிஹரன்
பதிந்தவர் MyFriend @ 1:01 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், ஹரிஹரன்
Monday, March 22, 2010
ரகசிய கனவுகள் ஜல் ஜல்
ரகசிய கனவுகள் ஜல் ஜல்
என் இமைகளை கழுவுது சொல் சொல்
இளமையில் இளமையில் ஜில் ஜில்
என் இருதயம் நழுவுது செல் செல்
முதல் பிறை போல் மனதினிலே
விழுந்தது உனதுருவம்
உதடுகளால் உன்னை படிப்பேன்
இருந்திடு அரை நிமிடம்
தொலைவது போல் தொலைவதுதான்
உலகில் உலகில் புனிதம்
இறகே இறகே மயிலிறகே வண்ண மயிலிறகே
வந்து தொடு அழகே
தொட தொட பொழிகின்ற சுகம் சுகமே
கண் பட பட புதிர்களும் அவிழ்ந்திடுமே
(இறகே..)
மறுபடி ஒரு முறை பிறந்தேனே
விரல் தொட புருவம் சிவந்தேனே
ஓ இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ
சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ
சுடும் தனிமையை உணர்ந்திட
மர நிழல் போல என்னை சூழ
நரம்புகளோடு குறும்புகள் நானும்
எழுது என் கணக்கு
எனதிரு கைகள் தழுவிட
நீங்கும் இருதய சுலுக்கு
(ரகசிய..)
உயிர் அனு முழுவதும் உனை பேச
இமை தொடும் நினைவுகள் அணல் வீச
நினைச்சாலே செவப்பாகும் மருதாணி தோட்டம் நீ
தலை வைத்து நான் தூங்கும் தலகாணி கூச்சம் நீ
எனதிரவினில் கசிகிற இரவொளி நீயே படர்வாயே
நெருப்புகளாலே நொறுங்கி விடாது இருபது வருடம்
ஹோ.. தவறுகளாலே தொடுகிற நீயும் அழகிய மிருகம்
(ரகசிய..)
குயிலே குயிலே குயிலினமே
எனக்கொரு சிறகு கொடு
முகிலினமே முகிலினமே
முகவரி எழுதி கொடு
அவனிடமே அவனிடமே
எனது கனவை அணைத்தும்
(இறகே..)
படம்: பீமா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், மதுஸ்ரீ
பதிந்தவர் MyFriend @ 4:52 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, மதுஸ்ரீ, ஹரிஹரன், ஹாரிஸ் ஜெயராஜ்
Sunday, March 21, 2010
உன் பார்வை என் மேல் பட்டால்
உன் பார்வை என் மேல் பட்டால்
நான் தூசி ஆகின்றேன்
ஒரு வார்த்தை பேசக்கேட்டால்
நான் கவிதை என்கின்றேன்
விரல் தீண்டியே உயிர் வார்க்கிறாய்
எனை சேர நீ எதை கேட்கிறாய் சொல்
(உன் பார்வை..)
இரவெல்லாம் நெஞ்சில் சின்ன சின்ன அவஸ்தை
எதுவென்று சொல்ல இல்லை ஒரு விவஸ்தை
உன்னை எண்ணி தினம் புல் அறிக்கும் மனதினை
செல்லறிக்க விடுபவள் நீதானே
விடாமல் கொஞ்சம் விட்டு விட்டு துடிக்க
தினமும் நீ என்னை தொந்தரவுகள் பண்ணி
நள்ளிரவு ஒவ்வொன்றும் முள் இரவு செய்தாயே
நுரையீரல் தேடும் ஸ்வாசமே
விழி ஓரம் ஆடும் சொப்பனமே
மடியில் நீ வந்தால் சௌக்கியமே
ஹேய் ஹேய் அன்பே
(உன் பார்வை..)
சில காதல் இங்கு கல்லரைக்குள் அடக்கம்
சில காதல் இங்கு சில்லறைக்குள் தொடக்கம்
அது போல அல்ல கல்லரையை கடந்திடும்
சில்லறையை ஜெயித்திடும் என் காதல்
உலகெல்லாம் சுற்றி மெட்டு கட்டி படிப்பேன்
அதுபோல காதல் சிக்காகோவும் கண்டதில்லை
சோவியட்டும் கண்டதில்லை என்பேன்
மழை நாளில் நீதான் வெப்பமே
வெயில் நாளில் தண்ணீர் தெப்பமே
உலி எதும் தீண்ட சிற்பமே ஹேய் அன்பே
(உன் பார்வை..)
படம்: சென்னை 600028
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: விஜய் ஜேசுதாஸ்
பதிந்தவர் MyFriend @ 1:29 AM 1 பின்னூட்டங்கள்
Saturday, March 20, 2010
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
ஒன்றாக சேர்ந்தால் எந்தன் தேகம்
கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்
ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்
கொஞ்சம் மிருகம் கொஞ்சம் கடவுள்
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் நெஞ்சம்
சந்திரலேகா சந்திரலேகா
என் கனவில் எவனோ ஒருவன்
என் இரவில் ஒளியாய் தெரிவான்
வான் மழை போல் உயிரில் விழுவான்
தினம் நான் விரும்பும் வலையில் பொழிவான்
தேன் இதழை இவள் தந்து மாயாது
இனி பாற்கடலில் அலை என்றும் ஓயாது
வந்து நான் மண்ணிலே
ஏன் பிறந்தேன் என்ற கேள்வி வாராது
இங்கு நீ இருந்தால் ஒரு தோல்வி நேராது
மங்கை உன் கால் பட்டால்
மண்ணும் ஒரு மண்ணல்ல
வெள்ளை பொன் தேகத்தில்
வேர்வைத்துளி உப்பல்ல
செந்தாழம்ப்பூவுக்கு முல்லோன்றும் குறையல்ல
உள்ளொன்று வைத்தாலும் உன் மீது பிழையல்ல
பெண்ணே உன் கண்ணாலம் பிறையேறி வருவானே
விண்கொண்ட மீனெல்லாம் விளையாட தருவானே
படம்: திருடா திருடா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: அனுபாமா
பதிந்தவர் MyFriend @ 1:58 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், அனுபமா
Friday, March 19, 2010
வீரப்பாண்டி கோட்டையிலே
வீரப்பாண்டி கோட்டையிலே
மின்னலிக்கும் வேளையிலே
ஊரும் ஆறும் தூங்கும் போது
பூவும் நிலவும் சாயும் போது
கொலுசு சத்தம் மனச திருடியதே
(வீரப்பாண்டி..)
வைரங்கள் தாரேன் வளமான தோளுக்கு
தங்க செருப்பு தாரேன் தளிர் வாழ காலுக்கு
பவலங்கள் தாரே பால் போல பல்லுக்கு
முத்துச்சரங்கள் தாரேன் முன் கோபச்சொல்லுக்கு
உன் ஆசை எல்லாம் வெறும் காணல் நீரு
நீயெல்லாம் போடா வேரல்ல பாரு
நீ சொல்லும் சொல்லுக்குள்ளே எம் பொழப்பு வாழும் புள்ள
நீ போட்ட வெத்தலைக்கு என் நாக்கு ஊரும் புள்ள
படம்: திருடா திருடா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: மனோ, சித்ரா
வரிகள்: வைரமுத்து
Thursday, March 18, 2010
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளையடித்தால்
மேகம் என்று அர்த்தம்
பூவை வண்டு கொள்ளையடித்தால்
புதையல் என்று அர்த்தம்
புதையல் என்னை கொள்ளையடித்தால்
மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம்
பறவைகள் தோன்றினால்
நதிகள் பக்கம் என்று அர்த்தம்
பாற்கடல் பொங்கினால்
வானில் பௌர்ணமி என்று அர்த்தம்
ஆளில்லாமல் அதிகாலை சிரித்தால்
ம்ம்ம் ம்ம்ம் என்று அர்த்தம்
அழகு பெண்ணின் தாயாரென்றால்
அத்தை என்று அர்த்தம்
தாவிடும் ஓடைகள் நதியின்
தங்கைகள் என்று அர்த்தம்
தூவிடும் தூறல்கள் மழையின்
தோழிகள் என்று அர்த்தம்
இரவின் மீது வெள்ளையடித்தால்
விடியல் என்று அர்த்தம்
எதிரி பேரை சொல்லியடித்தால்
வெற்றி என்றே அர்த்தம் அர்த்தம்
படம்: திருடா திருடா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: மனோ
வரிகள்: வைரமுத்து
பதிந்தவர் MyFriend @ 1:42 AM 7 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், மனோ, வைரமுத்து
Wednesday, March 17, 2010
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேலை உடுத்த தயங்குறியே
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேலை உடுத்த தயங்குறியே
நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையுறியே
கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே
(செந்தமிழ்..)
எழந்த காட்டில் பொறந்தவ தானே லண்டன் மாடல் நடை எதுக்கு
காஞ்சிபுரங்கள் ஜொலிக்கின்ற போது காத்து வாங்கும் உடை எதுக்கு
உடம்பு வேர்க்கும் உஷ்ண நாட்டில் உரசி பேசும் ஸ்டைல் எதுக்கு
டக்கர் குங்குமம் மணக்கும் நாட்டில் ஸ்டிக்கர் பொட்டு உனக்கு எதுக்கு
(செந்தமிழ்..)
கற்பு என்பது பிற்போக்கு இல்ல கவசம் என்றே தெரிஞ்சிக்கணும்
காற்றில் மிதக்கும் கார்குழல் பின்னி கனக பூக்கள் அணிஞ்சிக்கணும்
பழமை வேறு மழசு வேறு வேறுப்பாடை அறிஞ்சிக்கணும்
புரட்சி எங்கே மலர்ச்சி எங்கே புரிஞ்சு நீயும் நடந்துக்கணும்
(செந்தமிழ்..)
படம்: வண்டிச்சோலை சின்னராசு
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஷாஹுல் ஹமீட்
பதிந்தவர் MyFriend @ 1:03 AM 3 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், சாகுல் ஹமீது
Tuesday, March 16, 2010
கண்களில் என்ன ஈரமோ
Get Your Own Hindi Songs Player at Music Plugin
கண்களில் என்ன ஈரமோ
நெஞ்சினில் என்ன பாரமோ
கைகளில் அதை வாங்கவா
ஒரு தாயை போல உன்னை தாங்கவா
(கண்களில்..)
பெற்றவள் விட்டு போகலாம்
அன்னை பூமியும் விட்டு போகுமா
தன்னுயிர் போல காப்பதில்
தாயும் நிலவும் ஒன்றுதான்
இருக்கும் தாயை காத்திடு
மயக்கம் தீர்ந்து வாழ்ந்திடும்
புது கோலம் போடு
விழி வாசலில் கலக்கம் ஏனையா
(கண்களில்..)
அம்மம்மா இன்று மாறினேன்
அன்புக்கு நன்றி கூறினேன்
உள்ளத்தின் காயம் ஆறவே
உதவியது உன் வார்த்தை தான்
நிம்மதி இன்றி வாடினேன்
நின்றிட நிழல் வாடினேன்
திக்கற்று போன வேளையில்
தெரிந்தது என் பாதைகள்
உனது பாடல் கேட்டது
மனதில் பாலை வார்த்தது
புயல் காற்றில் வாடி நின்ற ஓடம் தான்
கரையை சேர்ந்தது
(கண்களில்..)
படம்: உழவன்
இசை: AR ரஹ்மான்
பாடிய்வர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா
பதிந்தவர் MyFriend @ 1:54 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், SP பாலசுப்ரமணியம், சித்ரா
Monday, March 15, 2010
ஸ்ரீரங்க ரங்க நாதனின்
ஸ்ரீரங்க ரங்க நாதனின்
பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி
நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தேன் கங்கை
நீராடி தென்றல் போல நீ ஆடடி
மஞ்சல் குங்குமம் மங்கை நீ
சூடி தெய்வப் பாசுரம் பாடடி
(ஸ்ரீரங்க...)
கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர்சொல்லி சாமரம் வீசும்
அந்நந்நாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்த நல் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வ பூந்தமிழ்ப் பாயிரம்
கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மருவீடு தென்னகமாகும்
கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம்
மங்கல நீராட முன் வினை நஞ்சை புஞ்சங்கள் தானடி
ஊர் வஞ்சம் என்ன கூருவேன் தேவ லோகமே தானடி
வேரெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி
படம்: மகாநதி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், மகாநதி ஷோபனா, உமா ரமணன்
பதிந்தவர் MyFriend @ 1:40 AM 1 பின்னூட்டங்கள்
வகை 1990's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, உமா ரமணன், மகாநதி ஷோபனா
Sunday, March 14, 2010
அடடா அகங்காரா அரக்க கைகளில் உலகிங்கே
Get Your Own Hindi Songs Player at Music Plugin
அடடா அகங்காரா அரக்க கைகளில் உலகிங்கே
அழிக்கும் அதிகாரம் இவர்க்கு தந்தவன் எவன் இங்கே
விடவாய் இவர் தம்மை வெந்து வேடிக்கை பார்த்திடவா
முடமாய் முடங்காது மூக்கர் இவர் தம்மை முடித்திடவா
மனித குலத்தின் துணையோடி
மனதை அறுக்கும் ரணமெல்லாம்
தனியனாக அறுத்தெரிவேன்
தகணம் நடக்கும் இடத்தில் எனது
ஜனனம் என்று புரிந்து கொள்ளும் மனிதா
(அடடா..)
வறுமை துறத்த வாழ்க்கையும் துறத்திட
வரண்டு போன மனிதனும் துறத்துவதோ
பரிவில்லாத பாவிகள் துறத்திட
பதுங்கி பதுங்கி பகை வரும் துறத்துவதோ
அந்தரி வாராகி சாம்பவி அமர சோதரி
அமல ஜகஜால சூலி சுந்தரி நிரந்தரி துரந்தரி
வனராக சுகுமாரி கௌமாரி
இறங்கும் நெஞ்சு இறுகுது இறுகுது
நெருப்பு கணலில் கீதியை காட்டிடவே
தோள் இரண்டும் துடிக்குது துடிக்குது
துரோக கூட்டம் தலைவதை தாக்கிடவே
வையமே வானமே வாழ்த்திடு
நாளை உலகில் நல் மனிதன் தோன்றட்டுமே
(விடவாய்..)
காற்றை விரட்டும் சருகுகள் உண்டோ
கடலில் ஆடும் அலைகளை தடுப்பதுண்டோ
ஆற்றை திருப்ப செய்பவன் உண்டோ
நேற்றை நிருத்தி பிடித்தவன் எவனும் உண்டோ
பொறியரவ முடித்தானே வெறுப்பு விழி துடிப்பவனே
கரி தோளை உடுப்பவனே புலியாடை உடையவனே
சுடு காடு திரிபவனே திரிசூலம் தரிப்பவனே
ஏழு கடல்கள் நெஞ்சில் எழுந்தது
இடி முழக்கம் என்னுள் முழங்கிடுதே
பிடி படாத பெயர்கள் எல்லாம்
பொடி பொடிக்க கரங்கள் துடிக்கிறதே
தடுப்பவன் எவனடா திறமுடன் தாண்டிவா
இருவன் இல்லை எவனும் இல்லையே
படம்: பிதாமகன்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜேசுதாஸ்
பதிந்தவர் MyFriend @ 1:35 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, KJ ஜேசுதாஸ், இளையராஜா
Saturday, March 13, 2010
அழகான சூரியன் கண்ணால் பேச
அழகான சூரியன் கண்ணால் பேச
அலங்கார வெண்ணிலா கைகள் சேர
புல்லாங்குழல் மீண்டுமே பாடுதே
என் நன்றியே பாடலா ஆனதே
(அழகான..)
மின்சாரம் பூப்பூக்குமா பூத்ததே
உன்னாலேதான் என் குரல் பாடுதே
(அழகான..)
ரோஜா பூவின் மென்மை எல்லாம்
உந்தன் மனம்தானே
காலை பனியின் தூய்மை எல்லாம்
உந்தன் குணம்தானே
உன்னாலே இசை என்னும் நீர்வீழ்ச்சி
உன்னாலே எந்தன் வாழ்வில் மலர்காட்சி
உன் பாச கைகளில் பூப்பூக்க
பூந்தோட்டம் ஆயவள் வந்தாள்
உன் கோவில் நெஞ்சிலே வாசம் செய்ய
காதல் தீபமாய் நின்றாள்
மூங்கில்கள் என்பது தென்றலால் பாடுது
மேகங்கள் என்பது தூரலால் பாடுது
எனக்குள்ளே பாட்டு சத்தம் நீ செய்தாய்
இதயத்தில் நாடி சத்தம் நீ தந்தாய்
நன்றி சொல்ல வார்த்தை இன்றி நானும் பாடினேன்
பாட்டுக்குள்ளே பூக்கள் அள்ளி உன் மேல் தூவினேன்
(அழகான..)
படம்: மனதை திருடிவிட்டாய்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: சுஜாதா
பதிந்தவர் MyFriend @ 1:32 AM 1 பின்னூட்டங்கள்
வகை 2000's, சுஜாதா, யுவன் ஷங்கர் ராஜா
Friday, March 12, 2010
ஆல் டே ஜாலி டே
ஆல் டே ஜாலி டே
கவலைக்கெல்லாம் ஹாலிடே
காலேஜ் வாழ்க்கையில்
என்றும் ஹாலிடே
இசையென்னும் எவெரெஸ்டில் ஏறும்
கூட்டனி சீக்கிரன் கிடைக்கும் சிம்பனி
இது ஒரு அழகிய இளமை காலனி யே
புதுமை சோ மேனி யே
Life is a life is a game show
Music என்பது thrill show
Life is a life is a game show
Music என்பது thrill show
சின்ன ஆர்ட்டில் லட்சம் நரம்பு
அதை மெல்ல சுண்டி பார்க்கும்
அதன் பேரென்ன? இசை
உள்ளங்கையில் ஆயுள் ரேகை
அதை இன்னும் நீளம் ஆக்கும்
பவர் என்ன? அது இசை
ஒரு கெமிக்கல் மாற்றத்தை
தரும் மெடிசந்தான் இசை
உயிரோடு வந்து வலியிது இசை
இசைதான் இந்த உலகத்தின் திசை
இந்த மியூசிக் செய்யும் மேஜிகை பார்
ஃப்ளாவர் ஷோவே இந்த வாழ்க்கை
அதில் வரும் நருமனமே
இளமையின் ஓரு குணம்
மொட்டு போட்டு கட்டி போட
இதயத்தின் ஃப்ராக்சுர் இல்லை
அனுபவி தினம் தினம்
அந்த லவ்பேர்ட்ஸ் பாட்டுக்கு
நம் கீபோர்ட் இசைக்கலாம்
அந்த குயில்கள் குரலைத்தான்
வா டிஜிட்டலில் பதியலாம்
இனி ஏது இங்க இளமைக்கு நரை
கிடையாது ஒரு வீதி வரை முறை
நூற்றாண்டு இனி நம் திசை வசமே
யே யே யே யே
(ஆல் டே..)
படம்: மனதை திருடிவிட்டாய்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன்
பதிந்தவர் MyFriend @ 1:30 AM 0 பின்னூட்டங்கள்
Thursday, March 11, 2010
எங்கள் மூச்சுக்குள்ளே உண்டு பாட்டு சத்தம்
Get Your Own Hindi Songs Player at Music Plugin
எங்கள் மூச்சுக்குள்ளே உண்டு பாட்டு சத்தம்
என்றும் பாட்டுக்கெல்லாம் எங்கள் சூர்யோதயம்
எங்கள் பாட்டுக்களை தென்றல் ஏந்தி செல்லும்
இந்த ஊரெங்கிலும் எங்கள் பேரை சொல்லும்
(எங்கள் மூச்சுக்குள்ளே..)
உங்கள் உள்ளங்களை தொட்டு
சிறு பூவை போலே
கிள்ளி செல்லும் எங்கள் பாட்டு பாட்டு
உங்கள் எண்ணங்களை எல்லாம்
சிறு புள்ளை போல
அள்ளி செல்லும் எங்கள் பாட்டு பாட்டு
நீங்கள் ரசிக்க நாங்கள் இசைக்க
கை தட்டியே வாழ்த்தை சொல்லுங்களேன்
உங்கள் கைத்தட்டல் போலே இல்லை செல்வங்களே
(எங்கள் மூச்சுக்குள்ளே..)
சங்கீதம்தான் சாப்பாடாச்சு
எல்லாம் தேவன் ஏற்பாடாச்சு
ஒரு நாள் நான் பாடாவிட்டால்
மூச்சை அடிக்கும்
எப்போதெல்லாம் சோகம் வரும்
அப்போதெல்லாம் ராகம் வரும்
கைக்குட்டை போலே வந்து
கண்ணீர் துடைக்கும்
சின்ன பிறைக்குள் மூடி கிடந்த
முழு நிலவை போல இருந்தோம்
இன்று உலகம் எங்கள் வீச
இசை வெளிச்சம் கொண்டு வந்தோம்
நல்ல நண்பன் கிடைத்தால்
இன்று சிரிக்கிறோம்
இசையின் பயணத்தில் தடைகள் இல்லை
இனி எங்கெங்கிலும் எங்கள் கான மழை
(எங்கள் மூச்சுக்குள்ளே..)
படம்: புன்னகை தேசம்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்
பதிந்தவர் MyFriend @ 1:28 AM 0 பின்னூட்டங்கள்
Wednesday, March 10, 2010
ஜூலை மாதம் வந்தால்
Get Your Own Hindi Songs Player at Music Plugin
ஜூலை மாதம் வந்தால்
ஜோடி சேறும் வயசு
மாலை நேரம் வந்தால்
பாட்டு பாடும் வயசு
அச்சம் நாணம் என்பது
ஹைடர் கால பழசு
முத்து முத்தம் போடவா
ரத்தம் புத்தம் பொதுசு
வெட்ட்ட வெளியில் போவோமா
அடி சிட்டுக்குருவியின் சிறகை கேள்
நட்ட நடு நிசி நேரத்தில்
நாம் சற்றே உறங்கிட நிலவை கேள்
காடு மலைகள் தேசங்கள்
காண்போமா காற்றை கேள்
வீடு வேண்டாம் கூடன்று
வேண்டாமா கட்டை கேள்
காதல் என்று சொன்னதும்
காற்றும் கைகள் கட்டும்
காதல் என்னும் வார்த்தைதான்
சர்வ தேச சட்டம்
புதியதல்ல முத்தங்கள்
இனி பொய்யாய் வேஷம் போடாதே
உள்ளம் எல்லாம் என் சொந்தம்
அதை உள்ளங்கையில் மூடாதே
காதல் வந்தால்
கட்டில் மேல் கண்ணீரே கூடாதே
கண்கள் பார்த்து
ஐ லவ் யூ சொல்லிப்பார் ஓடாதே
காதல் என்னும் ஏட்டிலே
நீயும் நானும் உச்சம்
கோடி மக்கள் வேண்டுகோள்
படம்: புதியமுகம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், அனுபாமா
பதிந்தவர் MyFriend @ 1:24 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், SP பாலசுப்ரமணியம், அனுபமா
Tuesday, March 9, 2010
பிறையே பிறையே வளரும் பிறையே
பிறையே பிறையே வளரும் பிறையே
இது நல்வரவே
மலரே மலரே மலர்ந்தாய் மலரே
உனக்கேன் தளர்வே
பயணம் எவர்க்கும் இங்கு முடியும்
இங்கு பிறந்தாயோ
உதயம் உனக்கு இங்கு தொடக்கம்
விழிகள் திறந்தாயோ
(பிறையே..)
தன்னன் தனியாக மண்ணில் வர ஏங்கினாயோ
என்ன துணிச்சலோடு இந்த வரம் வாங்கினாயோ
சோலையில் நின்ற போதிலும் மாலையே என்ற போதிலும்
பூவெல்லாம் என்றும் பூக்களே
இங்கு மாறுமா அதின் பெயர்களே
குடிசை என்ன செய்யும் கோட்டை என்ன செய்யும்
உன்னை மாற்றுமா
(பிறையே..)
ஊர்வலங்கள் எல்லாம் வரும் உன்னை நோக்கி தானே
ஊரும் உறவும் எது எல்லாம் உனக்கு ஒன்று தானே
பணத்திலே தினம் புரண்டவர்
பதவியில் தலை கணத்தவர்
புகழிலே எல்லை போனவர்
நிலை உயர்ந்தவர் அதில் தாழ்ந்தவர்
இந்த பேதம் எல்லாம் வந்து போக கண்டு
தெளிந்த மனிதன் நீ
(பிறையே..)
படம்: பிதாமகன்
இசை: இளையராஜா
பாடியவர்: மது பாலகிருஷ்ணன்
பதிந்தவர் MyFriend @ 2:23 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, இளையராஜா, மது பாலகிருஷ்ணன்
Monday, March 8, 2010
பக்தி பாடல் பாடட்டுமா
பக்தி பாடல் பாடட்டுமா
பாலும் தேனும் ஓடட்டுமா
சந்தோஷம் காண்போமா
சாமிக்கு புஷ்பங்கள் வேண்டாமா
சம்போ சம்போ சம்போ சம்போ
சாயங்காலம் வம்போ வம்போ
பூமி தாண்டி போகாமல் சாகாமல்
மோட்சங்கள் காண்போம் இப்போ
உச்சி மேகம் என்னை பார்த்ததும்
கொஞ்சம் நீர் செந்தும் அல்லவா
உப்பு காற்று என்னை தீண்டினால்
சற்றே தித்திக்கும் அல்லவா
என்னை பெண் கேட்டு சீசர் வந்தான்
எந்தன் பின்னாலே ஹிட்லர் வந்தான்
யாரும் இல்லாத நேரத்திலே
சொல்லாமல் பிரம்மன் வந்தான்
மேடை போட்டு மேதை கொள்ளவே
ஜட செய்தாலே போதுமே
எங்கள் வீட்டு காஷ்மீர் கம்பளி
இருவர் குளிர் தாங்க கூடுமே
இந்த மோகத்தில் என்ன குற்றம்
கடல் யோகத்தின் உச்ச கட்டம்
அந்த சொர்கத்தில் சேர்க்கட்டுமா
படம்: புதியமுகம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சுபா, மின்மினி
பதிந்தவர் MyFriend @ 1:21 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், சுபா, மின்மினி
Sunday, March 7, 2010
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
மானம் பெரியதென வாழும் மனிதர்களை
மாண் என்று சொல்வது இல்லையா
தன்னை தானும் அறிந்து கொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவது இல்லையா (மானம்)
( உன்னை அறிந்தால்)
லலல்லாலா லலல்லாலா லலல்லாலி லாலாலிலா
மாபெரும் சபைகளில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழ வேண்டும்
ஒரு மாற்று குறையாத மன்னவன்
இவன் என போற்றி புகழ வேண்டும் (மாபெரும்)
( உன்னை அறிந்தால்)
பாடலை எழுதியவர்: கண்ணதாசன்
பாடலைப்பாடியவர் : டி.எம்.எஸ்
படம் : வேட்டைக்காரன்
இசை: எம்.எஸ்.வி
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 10:40 AM 4 பின்னூட்டங்கள்
வகை MGR, MS விஸ்வநாதன், TM சௌந்தர்ராஜன், கண்ணதாசன்
வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல
யே வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல
இந்த பச்சக்கிளி சுத்துது என் கிறுக்குல
யே சுத்திக்க சுத்திக்கவா சுருக்குல
என தூக்கி போட்டு பிடிச்சிக்கடா தடுக்குல
நான் பதினெட்டு பட்டிக்கு ராசா
என் நகம் பட்டு மலராதோ ரோசா
நான் பதினெட்டு பட்டிக்கு ராணி
என எங்காச்சும் கூட்டிட்டு போ நீ
பசிக்காம தொட மாட்டேன்
ருசிக்காம விட மாட்டேன்
பொசுக்குன்னு தர மாட்டேன்
இசுக்குன்னு விச மாட்டேன்
நீ கும்முனுதான் கும்முனுதான் கும்மாங்குத்து குத்து
நீ கம்முனுதான் கம்முனுதான் வாய கொஞ்சம் பொத்து
(வச்சிக்க..)
மூவாறு நீயே அட நாளாறு நானே
பசி கோளாறு தானே வந்துடுச்சி
தேனாகத்தானே விரல் மேலேரத்தானே
உடல் கூழாகத்தானே வெந்துருச்சி
வேனா வெக்கப்படும் கிளியே
பூனா தொட்டுடுச்சி உரிய
மீச குத்திடுச்சு பயலே
ஆசை பொத்தி வச்ச புயலே
நீ முன்னாலே போனா
நான் பின்னாலே வாரேன்
நீ பின்னாலே வந்தா
நான் தன்னால தாரேன்
மல மேலே மழை தூர
அல மேல அல மோதும்
நீ கும்முனுதான் கும்முனுதான் கும்மாங்குத்து குத்து
நீ கம்முனுதான் கம்முனுதான் வாய கொஞ்சம் பொத்து
(வச்சிக்க..)
யே சுத்திக்க சுத்திக்கவா சுருக்குல
என தூக்கி போட்டு பிடிச்சிக்கடா தடுக்குல
மாரோடு நானே தினம் போராடுகிறேனே
பசி தாளாமல்தானே தின்றால் என்ன
வேரோடு நீயே விழி கோடாளியாலே
என் சாய்ச்சாயே மானே தள்ளாடுறேன்
கொஞ்சி கொஞ்சிக்கிட்டு வரியா
பஞ்சி பஞ்சி மிட்டாஉ தாரியா
வாடி வாடிப்பட்டி தவுலா
தேடி செந்துக்கடி நிழலுல
ஒரு பச்சைக்கிளி போல
நான் தொட்டுகவா தோள
இரு வெட்டுக்கிளி போல
கண்ணு வெட்டுதடி ஆள
கரும்போரம் எறூம்பேற
நரம்போரம் குறும்பேர
நீ கும்முனுதான் கும்முனுதான் கும்மாங்குத்து குத்து
நீ கம்முனுதான் கம்முனுதான் வாய கொஞ்சம் பொத்து
(வச்சிக்க..)
படம்: எம் குமரன் s/o மகாலெட்சுமி
இசை: ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர்கள்: ஸ்ரீலேகா பார்த்தசாரதி
பதிந்தவர் MyFriend @ 1:15 AM 0 பின்னூட்டங்கள்
Saturday, March 6, 2010
முண்டாசு சூரியனே முக்குளத்தில் மூத்தவனே
முண்டாசு சூரியனே முக்குளத்தில் மூத்தவனே
தேயாத சந்திரனே தேர்ப்போல நின்னவனே
நூறு தலைமுறையா ஊராளும் குளமே
வீர பரம்பரைக்கு வித்தான இனமே
வீச்சருவா சாமி இது வேலுகம்பு பூமி
கத்தி தீட்ட வந்தா உன் நெஞ்செடுத்து காமி
(முண்டாசு..)
மானமுள்ள வீரமுள்ள வம்சம் வருதையா
அட மறையாத சூரியனின் வம்சம் வருதையா
வெட்டருவா வெரலிருக்கும் சிங்கம் வருதையா
எங்க தங்கமானம் காத்து நிக்கும் தங்கம் வருதையா
எட்டுப்பட்டி சனத்துக்கும் சாமிபோலடா
ஐயா வெரலுகூட சாஞ்சதுள்ள பூமி மேலடா
நீ தல குனிஞ்சு யாரு பார்த்ததில
நீ தல நிமிர்ந்து நாங்க பார்க்கவில்லை
(வீச்சருவா..)
அள்ளி அள்ளி கொடுத்ததிலே செவந்த கையடா
இது அருவால தூகி நின்ன ஐயனாருடா
கம்ப கூழு குடிக்கும் கடவுள் ஏதடா
அத எங்க ஊரு எல்லக்குள்ள வந்து பாருடா
நம்ம வம்சத்துல ஒருத்தன் கூட கோழை இல்லடா
ஐயா வாழும் மண்ணுல யாரும் இங்கே ஏழை இல்லடா
இது பரம்பரையா அள்ளி தந்த வானம்
ஏழு தலைமுறையா வாழ்ந்து வரும் மானம்
(வீச்சருவா..)
(முண்டாசு..)
படம்: சண்டைக்கோழி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஸ்ரீராம், கார்த்திக்
வரிகள்: நா. முத்துக்குமார்
பதிந்தவர் MyFriend @ 1:25 AM 2 பின்னூட்டங்கள்
வகை 2000's, கார்த்திக், நா. முத்துக்குமார், யுவன் ஷங்கர் ராஜா, ஸ்ரீராம்
Friday, March 5, 2010
சைட் அடிப்போம் தம் அடிப்போம்
சைட் அடிப்போம் தம் அடிப்போம்
தண்ணியைத்தான் கலந்தடிப்போம்
பூக்சை மட்டும் எடுக்கவே மாட்டோம்
நாங்க பஸ்ஸுலத்தான் தொங்கிடுவோம்
ட்ரேயினுலேயும் தொத்திடுவோம்
டிக்கெட்டை மட்டும் எடுக்கவே மாட்டோம்
பொண்ணு முகங்களே பார்க்கவே மாட்டோம்
ஆன முகத்தை தவிர மத்தத பார்ப்போம்
நாங்க அக்கவுண்ட் வச்சி தம் அடிப்போமே
அதுல ஆறு பேரு சேர்ந்திழுப்போமே
(சைட்..)
நங்கநல்லூரில் ஒரு ஆண்டி
அவள் நாலாறு மாதமாய்
ஹஸ்பண்டை வேண்டி
கொண்டு வந்தாள் ஒரு ஸ்கூட்டி
அத தள்ளிட்டு போனானே
தெர்ட் இயர் பாண்டி
க்ரூப் ஸ்டடி என்று சொல்லி
நண்பனோட வீட்டுக்குள்ள
நீலப்படம் பாக்கலைன்னா கண்ணுக்கழகா
கண்களால் காண்பதும் பொய்
காதல் காய்ப்பதும் பொய்
டி-ஷெர்ட் பெண்களைத்தான் நம்பிவிட்டாய்
சில கல்லூரி பெண்கள் தான் தூரதர்ஷன் போலத்தான்
உம்மென்று போவார்கள் பார்
சில பள்ளிக்கூட பெண்கள் தான் எப் டிவி போலத்தான்
ஆள் பாதி ஆடையும் பாதி
மனசுல தோன்றும் எண்ணம்
வெளியே சொல்லுவீர்
வயசுல யாரும்
ஃபிகரை யாவரும் கேளீர்
(சைட்..)
இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
பட்டம் பட்டம்
பட்டங்களை வாங்கியதும்
வேலை ஒன்னும் கிடைக்கலையா
லேடீஸ் காலேஜ் முன்னால ஒரு STD
பூத் வை
ஏசியில் வாழ்ந்திடும்
வீசி மேயில் கோபம் வந்தா
எலெக்ஷன் கூட்டத்தில
லேசா கைய வை
ஒரு ப்ரப்பஸர் யாராச்சும்
ப்ராக்டிஸில் கைய வச்ச
அவருக்கிட்ட டியூஷன் தான் வை
மாதத்தில் ஒரு நாள்
மாஸ் கட்டிங் செய்தால் தான்
கல்லூரி வாழ்வுக்கு பெருமை மை
லைவ் பாய் இருக்குமிடம் ஆரோக்கியம் தான்
நீ ஒரு ப்லே பாய் ஆகுமிடம்
காலேஜு தான்
(சைட்..)
படம்: ஏப்ரம் மாதத்தில்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: கார்த்திக், சிலம்பரசன்
பதிந்தவர் MyFriend @ 1:18 AM 1 பின்னூட்டங்கள்
Thursday, March 4, 2010
தோ தோ தோ தோ தோ தோ தோ தோடா தோடா
தோ தோ தோ தோ தோ தோ தோ தோடா தோடா
கியூட்டான பெண்ணென்றால் நீ கியூவில் நில்டா
டேய் டேய் டேய் டேய் டேய் டேய் டேய் நீ வாடா வாடா
அட்லாண்டிக் ஆசைக்குத்தான் கம்பாவுண்ட் கேட்டா
ரெட் ஆப்பிள் போல சில கண்கள்
மிக கனிவாய் பேசிவிடும்
பைன் ஆப்பிள் போல பல பெண்டள்
பொடி முள்ளாய் குத்திவிடும்
அட தினுசா தினுசா பார்த்தால் கூட
கண்கள் கேட்குமே மோர் மோர்
அதில் கருப்போ சிவப்போ எது வந்தாலும்
உள்ளம் கேட்குமே மோர் மோர்
(தோ தோ..)
அப்பர் பெர்த்தில் அவள் தூங்கினால்
உள்ளம் கேட்குமே மோர் மோர்
அபார்ட்மெண்டில் ஆண்டி பேசினால்
உள்ளம் கேட்குமே மோர் மோர்
மில்லிமீட்டர்கள் உயரம் மிடி உயரம் நேரம் தான் பார்த்து
செண்டிமீட்டர்கள் உயர நம் உள்ளம் கேட்குமே மோர் மோர்
கண்ணாலே கண்களில் க்ளோரோஃபார்ம் தந்தாளே
ABC வைட்டமின் புன்னகை பூத்தாளே
(தோ தோ தோ..)
ஐஸ் க்ரீமில் செய்த சிலை என்றால்
டீ ஸ்பூனாய் மாறிக்கோ
கேட் வால்கில் செய்த நடை என்றால்
ப்ளாக் கேட்சாய் மாறிக்கோ
ஹேய் மோர் மோர் ஹேய் மோர் மோர்
நண்பன் காதலி ஹெல்லோ சொல்கையில்
உள்ளம் கேட்குமே மோர் மோர்
தங்கை தோழிகள் ஷேக் ஹேண்ட் தருகையில்
உள்ளம் கேட்குமே மோர் மோர்
க்ளோனிங் நிலவுகள் கூட்டம்
அது ஈர நெஞ்சில் தீ மூட்டும்
க்ரிஸ்டல் பதுமைகள் ஆட்டம்
அது என்று இளமையின் கூட்டம்
Excuse me I dont care
I need it Please kiss me
I want it
சினிமாஸ்கோப் போலவே சில பெண்களின் தோற்றம் பார்
பாயஸ்கோப் போலவே நில பெண்களின் நோட்டம் பார்
(தோ தோ..)
படம்: உள்ளம் கேட்குமே
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்:ஃப்ரேன்கோ
பதிந்தவர் MyFriend @ 1:15 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, ஃப்ரேன்கோ, ஹாரிஸ் ஜெயராஜ்
Wednesday, March 3, 2010
ஹலோ டார்லிங் பறந்தோடி வா
ரொம்ப நாள் கழித்து வந்துருக்கேன் இனிமையான தேன்கிண்ணத்துடன் சுவைத்து மகிழுங்கள். இந்த தொகுப்பை தொகுத்து வழங்கியிருப்பவர் அறிவிப்பாளினி அகிலா அவர்கள் அவருக்கு தேன்கிண்ண நேயர்கள் சார்பாக நன்றி.
1.கண்ணிரண்டும் மின்ன மின்ன >> 2.வசந்தங்கள் வரும் முன்பே >> 3.கண்பாடும் பொன் வண்ணமே >> 4.சின்னப் புறாவொன்று என்னக்கனாவினில் >> 5.ஹலோ டார்லிங் பறந்தோடி வா >> 6.ஹலோ ரீட்டா ஐ லவு யூ >> 7. பொம்பளை சிரிச்ச போச்சு (சங்கே முழங்கு >> 8.இவள் உன்னை நினைத்த போதே >> 9.பாடுவதற்க்கு ஏற்ற தமிழ் >>
பதிந்தவர் Anonymous @ 9:51 AM 0 பின்னூட்டங்கள்
வகை வானொலி
கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடரும்
கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடரும்
ஜனுவரி மாதத்தில்
காதலை சொல்ல தேதிகள் உண்டு
பிப்ரவரி மாதத்தில்
தவறுகள் வந்து தொல்லை கொடுக்கும்
மார்ச் மாதத்தில்
எல்லா நாளும் விடுமுற நாளே
ஏப்ரல் மாதத்தில்
நெஞ்சோடு பூச்செடி வைக்கும்
நட்புக்கு மாதம் உண்டா
மாதம் பண்ணிரெண்டும் நட்பிருக்கும்
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து
இங்கே ஒன்றானோம்
எல்லோர் வீடும் ஒன்றாய் மாற
ஏழு எட்டு தாய் கண்டோம்
தலை கோர தோழன் வந்தான்
துயரங்கள் ஓடி போகும்
முடியெல்லாம் நரைக்கும்போதும்
நட்போடு நாம் வாழ்வோம்
கல்லூரி தந்த பாடம்தான்
காலத்தால் மறந்து போகுமே
கல்லூரி நட்புடன் அட என்றும் மறக்காதே
காதல் மனதில் புகழை போலே
மறைத்தால் தெரிந்துவிடும்
காதலில்தானே பூக்கள் கூட
மலைகளாய் உடைந்துவிடும்
ஏதேதோ மாற்றம் வந்து
என்னைத்தான் தூண்டு போடுதே
ஐயங்காந்த காற்று வந்து
என் நெஞ்சை தொட்டு போகுதே
நின்றாலும் நடக்கும்போதிலும்
நண்பர்கள் சிரிக்கும்போதிலும்
கொட்டாமல் வாழ்கிறேன்
அடி என்னிடம் நான் இல்லை
படம்: ஏப்ரல் மாதத்தில்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ஷாலினி சிங்
பதிந்தவர் MyFriend @ 1:28 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, SP பாலசுப்ரமணியம், யுவன் ஷங்கர் ராஜா, ஷாலினி சிங்
Tuesday, March 2, 2010
ஓ மனே மனே மானே மானே
ஓ மனே மனே மானே மானே
ஓ மனே மனே மானே
ஓ மனே மனே மானே மானே
ஓ மனே மனே மானே
மீண்டும் வருமே காலம்
வசந்தம் தருமே வாழ்வில்
மேக நிழலே போகும்
தீ போலியே சேறும்
உனது சுகம் இனி வரும் நாளில் நூறாகும்
ஓ மனே மனே மானே மானே
ஓ மனே மனே மானே
ஓ மனே மனே மானே மானே
ஓ மனே மனே மானே
பூவொன்று காற்றோடு சாய்ந்தால்
செடியும் சாய்வதில்லை
பகல் மாறி இருளும் வந்து போகும்
விதியில் மாற்றம் இல்லை
பாதை கொஞ்சம் மாறினாலும்
பயணம் மாறுமா
பாசம் கொண்டு வாழ்வை நம்பு
காலம் மாறுமே
எங்கே எங்கே இன்பம் எங்கே
அங்கே உந்தன் நெஞ்சின் உள்ளே
தேடி வந்திடும் சந்தோஷமே
ஓ மனே மனே மானே மானே
ஓ மனே மனே மானே
ஓ மனே மனே மானே மானே
ஓ மனே மனே மானே
சொந்தங்கள் நான் கண்டதில்லை
உறவு என்று வந்தாய்
உன் பார்வை சந்தித்த போது
மின்னல் நெஞ்சில் தந்தாய்
உந்தன் பாடல் கேட்டபோது
வந்த ஆனந்தம்
தேடல் இன்றி தானே வந்த
இன்பம் ஆயிரம்
உந்தன் கண்ணில் எந்தன் கண்ணை
நானும் கண்டேன் நீயும் கண்டால்
தேடி வந்திடும் சந்தோஷமே
ஓ மனே மனே மானே மானே
ஓ மனே மனே மானே
ஓ மனே மனே மானே மானே
ஓ மனே மனே மானே
மீண்டும் வருமே காலம்
வசந்தம் தருமே வாழ்வில்
மேக நிழலே போகும்
தீ போலியே சேறும்
உனது சுகம் இனி வரும் நாளில்
நூறாகும்
ஓ மனே மனே மானே மானே
ஓ மனே மனே மானே
ஓ மனே மனே மானே மானே
ஓ மனே மனே மானே
படம்: ரிஷி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ஹரிஹரன்
பதிந்தவர் MyFriend @ 1:37 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, யுவன் ஷங்கர் ராஜா, ஹரிஹரன்
Monday, March 1, 2010
நெஞ்சை கசக்கி பிழிந்து
நெஞ்சை கசக்கி பிழிந்து போற பெண்ணே ரதியே ரதியே
வந்து தீ மூட்டிவிட்டு போறவளே கிளியே கிளியே
அடி மயிலே மா மயிலே மதி மயக்கும் பூங்குயிலே
(நெஞ்சை..)
கம்மங்காட்டில் கொளத்து மேட்டில்
வண்டி ஓட்டும் ஆசை மாமா
கூச்சத்த தூக்கி குப்பையில் போடு
ஓ பார்க்க பார்க்க மனசு ஏங்கும்
பழகி பார்க்க வயசு வேண்டும்
இதயத்தில் இடம் இங்கு இல்லையே
அதைஅ எடுக்கவும் கொடுக்கவும் இல்லையே
காதல் எனாக்கு வேண்டாமே
கவலை மறந்து வா மாமா
கைய பிடிச்சு கன்னம் தேச்சு
கதைகள் பேச வா வா
உள்ளம் கொடுப்பது ஒரு முறைதான்
இனி வாழ்வோ சாவோ அவளோடுதான்
வாஇப்புகள் வருவது ஒரு முறைதான்
நீ இலக்கணம் பார்த்தால் தலை வலிதான்
(நெஞ்சை..)
பார்வை பார்த்து மயக்கி போனால் பாவி நெஞ்சை
ஆண்களின் ஜென்மம் என்றுமே துன்பம்
நெருங்கி வந்தால் விலகி போகும்
விலகி போனால் நெருங்கி வருவோம்
பெண்களின் மனதில் என்னவோ
அது பெண்ணுக்கு புரிவது இல்லையோ
ஆசைய வைத்தேன் உன் மேல் தான்
வாழ்ந்து பார்ப்பேன் உன்னுடன் தான்
வாழ்க்கை தெரிந்தால் பயணம் புரிந்தால்
பாறை இடுக்கில் ஒரு பூ தான்
கனவுகள் காண்பது உன் உரிமை
அடு கலைந்தால் தெரியும் என் நிலமை
இரவும் பகலும் உன் மடியில்
கண்மூடி கிடப்பேன் உன் அருகில்
(நெஞ்சை கசக்கி..)
படம்: யாரடி நீ மோகினி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: உதித் நாராயணன்
பதிந்தவர் MyFriend @ 1:54 AM 0 பின்னூட்டங்கள்