Tuesday, January 29, 2013

கடலோரம் ஒரு ஊரு

திரைப்பாடல்.காம் - சரண்

திரைப்பாடல்.காம் - யுவன்

கடலோரம் ஒரு ஊரு
ஒரு ஊரில் ஒரு தோப்பு
ஒரு தோப்பில் ஒரு பூவு
ஒரு பூவில் ஒரு வண்டு

முதல் முதல் வண்டொன்று தீண்டியதும்
விரல் பட்ட பூ வேர்த்ததோ
தொடத் தொட மோகங்கள் தூண்டியதும்
சுடச்சுட தேன் வார்த்ததோ

மெதுவா மெதுவா அனுசரி
இதமா பதமா அனுபவி
எது என் விருப்பம் கொடு கொடு
இருக்கும் நாணம் விடு விடு


கன்னங்களைக் காட்டு
கையெழுத்து போட்டிட வேண்டும்
ஈர உதடுகளால்

பல்லு படும் லேசா
கேலிப் பேச்சு கேட்டிட நேரும்
ஊரு உறவுகளால்

பாட்டன் பூட்டன் செஞ்ச தவறு இது
யாரு நம்ம இங்க தடுக்கறது
ஓசை கேட்காமல் முத்தம் வைக்கவோ

இருந்தும் எதற்கு இடையில
இரு கை மேயும் இடையில
இடை தான் எனக்கோர் நூலகம்
வழங்கும் கவிதை வாசகம்



ஓ பள்ளிக்கூட சிநேகம்
பள்ளியறைப் பாய் வரை போகும்
யோகம் நமக்கிருக்கு

கட்டுகளைப் போட்டு
நட்டு வச்ச வேளிகள் தாண்டி
காதல் ஜெயிச்சிருக்கு

புள்ளி வைக்க இந்த பூமி உண்டு
கோலம் போட அந்த சாமி உண்டு
இங்கே  நீ இன்றி நானும் இல்லையே

காத்தாயிருக்க மூச்சுல
மொழியாய் இருக்க பேச்சுல
துணியாயிருப்பேன் இடையில
துணையாயிருப்பேன் நடையில


படம்: குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடல்: வாலி
பாடியவர்கள்: S P B சரண், யுவன் சங்கர் ராஜா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam