Monday, January 14, 2013

விஸ்வரூபம் - துப்பாக்கி எங்கள்



துப்பாக்கி எங்கள் தொழிலே
துர்பாக்கியம் தான் வாழ்விலே
எப்போதும் சாவு நேரிலே
இப்போது வெல்வோம் போரிலே

போர்களை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை
போர் தான் எம்மை தேர்ந்தெடுத்து கொண்டது
எங்களின் கையில் ஆயுதங்கள் இல்லை
ஆயுதத்தின் கையில் எங்கள் உடல் உள்ளது
ஊரை காக்கும் போருக்கு ஒத்திகை செய்கின்றோம்
சாவே எங்கள் வாழ்வென்று சத்தியம் செய்கின்றோம்

ஓட்டக முதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது
டாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது
நீதி காணாமல் போர்கள் ஓயாது

துப்பாக்கி எங்கள் தோழனே
தோள் கொண்ட வீரன் தெய்வமே
எப்போதும் எங்கள் கோப்பையில்
தேனீர் பருகும் மரணமே

பூமியை தாங்க புஜவீரம் கேட்கின்றோம்
புயலை சுவாசிக்க நுரையிரல் கேட்கின்றோம்
எக்கு திசைகளால் ஒர் இதயம் கேட்கின்றோம்
இருநூறாண்டு இளமை கேட்கின்றோம்

துப்பாக்கி எம் தலையணையாய் தூங்கி திரிகின்றோம்
தோளோடு எம் மரணத்தை தூக்கி திரிகின்றோம்
ஓட்டக முதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது
டாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது
நீதி காணமல் போர்கள் ஓயாது

படம் : விஸ்வரூபம் (2013)
இசை : ஷங்கர் – எசான் - லொய்
பாடியவர்கள் : கமல்ஹாசன்
வரிகள் : வைரமுத்து

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam