Thursday, January 24, 2013

மஞ்சள் நிற போதையிலே

மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே
என்னுடைய தேவதைகள் பின்னாலே வருகிறது
மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே
என்னுடைய தேவதைகள் பின்னாலே வருகிறது
இருக்கையில் நான் இருந்து பங்கு போட்டு குடிக்கையில்
சாத்தானும் சாமியுமே கூடவே குடிக்குது
சாத்தானும் சாமியுமே கூடவே குடிக்குது

மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே
என்னுடைய தேவதைகள் பின்னாலே வருகிறது
சாராயம் குப்பியின் குப்பிய நீ கழுட்டு
மூச்ச நீ பிடிச்சு அதுக்குள்ள இறங்கு
வட்ட வட்ட தத்துவம் அங்கே துளர்ருது
வட்ட வட்ட தத்துவம் அங்கே துளர்ருது
சட்டசபை கூட அங்கே திணறது
சட்டசபை கூட அங்கே திணறது

மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே
என்னுடைய தேவதைகள் பின்னாலே வருகிறது
ஒத்த காலில் தவம் செய்யும் கண்ணாடி கோப்ப
அத சுத்தி சுத்தி நிக்குதடா எத்தனை மனுசங்க
ஒன்னு ஒன்னும் எத்தனை என்று நான் கேட்கவா
ஒன்னு ஒன்னும் எத்தனை என்று நான் கேட்கவா
ஒன்னும் ஒன்னு ஒன்று தானடி காதல் கதை சொல்லவா

மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே
என்னுடைய தேவதைகள் பின்னாலே வருகிறது

விட்டு போன காதலியோ மூளையின் நரம்பினில்
பட்டாம்பூச்சியாக கூடவே இருக்கிறாள்
நான் குடிக்கும் கோப்பையில் பனித்துளி போலவே
நான் குடிக்கும் கோப்பையில் பனித்துளி போலவே
கண்ணீரை ஊற்றி மெல்ல எனக்கு தருகிறாள்
கண்ணீரை ஊற்றி மெல்ல எனக்கு தருகிறாள்

மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே
என்னுடைய தேவதைகள் பின்னாலே வருகிறது
கொஞ்சம் மது கிடைத்தால்
கொஞ்சம் மது கிடைத்தால்
கொஞ்சம் மது கிடைத்தால் எனக்கே தந்து
என்னை பாட்டு எடுத்து பாட சொல்லும் கூட்டம் இங்கு உள்ளது
என்னுடைய பாட்டு பல பூட்டுகளை திறக்கும்
என்னுடைய பாட்டு பல பூட்டுகளை திறக்கும்
மாந்தீரிக சாவி போல வந்து வந்து பறக்கும்
மாந்தீரிக சாவி போல வந்து வந்து பறக்கும்

மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே
என்னுடைய தேவதைகள் பின்னாலே வருகிறது
குடித்து குடல் அழுகி ரெண்டு நாளில் செத்து போவாய்
என்று சொன்ன மருத்துவன் நேத்தே செத்து போனான்
சாவுக்கு பயம் இல்லை சாத்திரங்கள் ஏதும் இல்லை
சாவுக்கு பயம் இல்லை சாத்திரங்கள் ஏதும் இல்லை
இன்று இருப்பர் நாளை இல்லை என்றே குடிக்கிறேன்
இன்று இருப்ப நாளை இல்லை என்றே குடிக்கிறோம்

மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே
என்னுடைய தேவதைகள் பின்னாலே வருகிறது
கொம்புகள் முளைத்த கிடா மூளையின் பின்னால் வந்து
ஆயிரம் நினைவுகளை முட்டியே கிளறது
காகங்கள் எல்லாம் என்னை சுற்றி ஆர்ப்பரித்து பாடுது
காகங்கள் எல்லாம் என்னை சுற்றி ஆர்ப்பரித்து பாடுது
மனிதனின் எச்சில் மட்டும் குற்றங்களை சொல்லுது
மனிதரின் எச்சில் மட்டும் குற்றங்களை சொல்லுது

மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே
என்னுடைய தேவதைகள் பின்னாலே வருகிறது
இருக்கையில் நான் இருந்து பங்கு போட்டு குடிக்கையில்
சாத்தானும் சாமியுமே கூடவே குடிக்குது
சாத்தானும் சாமியுமே கூடவே குடிக்குது

மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே
என்னுடைய தேவதைகள் பின்னாலே வருகிறது

மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே
என்னுடைய தேவதைகள் பின்னாலே வருகிறது
மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே
என்னுடைய தேவதைகள் பின்னாலே வருகிறது
மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே
என்னுடைய தேவதைகள் பின்னாலே வருகிறது
மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே
என்னுடைய தேவதைகள் பின்னாலே வருகிறது
மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே
என்னுடைய தேவதைகள் பின்னாலே வருகிறது

படம் : மதுபான கடை (2012)
இசை : வேத் சங்கர்
பாடியவர் : ராஜ்குமார்
வரிகள் : ராஜ்குமார்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam