Wednesday, January 16, 2013

விஸ்வரூபம் - எவன் என்று நினைத்தாய்



எவன் என்று நினைத்தாய் எதை கண்டு சிரித்தாய்
விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் முழு ரூபம்

நெருப்புக்கு பிறந்தான் நித்தம் நித்தம் மலர்ந்தான்
வேளை வந்து சேரும் போது வெளிப்படும் சுயரூபம்

யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா

யாருக்கும் அடிமை இல்லை
இவன் யாருக்கும் அரசன் இல்லை
காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுதும்
காட்டுக்கு காயம் இல்லை

எவன் என்று நினைத்தாய் எதை கண்டு சிரித்தாய்
விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் புது ரூபம்

நெருப்புக்கு பிறந்தான் நித்தம் நித்தம் மலர்ந்தான்
வேளை வந்து சேரும் போது வெளிப்படும் சுயரூபம்

சின்ன சின்ன அணுவாய் மண்ணுக்குள்ளே கிடப்பான்
வெட்டுப்படும் வேளையிலே வெளிப்படும் விஸ்வரூபம்

என்ன ரூபம் எடுப்பான் எவருக்கு தெரியும்
சொன்ன ரூபம் மாற்றி மாற்றி எடுப்பான் விஸ்வரூபம்

யார் என்று புரிகிறதா 
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா
யாருக்கும் அடிமை இல்லை
இவன் யாருக்கும் அரசன் இல்லை
காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுதும்
காட்டுக்கு காயம் இல்லை

படம்: விஸ்வரூபம் (2013)
இசை: ஷங்கர் - எஷான்- லோய்
பாடியவர்: சுராஜ் ஜெகன்
வரிகள் : வைரமுத்து

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam