Tuesday, January 22, 2013

சமரசம் உலாவும் இடமே



சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

குடியின்றி அமையாது உலகடா அதில் நீந்தும் குதிரை நாமடா
நரை முடியில் இளமை ஏறலாம் நடனங்கள் ஆடலாம்
கண்ணாடி முகமும் உடையலாம் உண்மைகள் பிறக்கலாம்
நெருக்கடி தீர்ந்திட போதையில் மனங்களோ குறுக்கு வழி தேடுது
கலகமும் இங்கிருந்து பிறக்குது மாற்றங்கள் அதில் மறைந்து கிடக்குது

சமரசம் உலாவும் இடமே

இவனை பல சுமைகள் விரட்டும் எரியும் அதில் பல சுகமே
கலகம் பல கனவை அழிக்க உடையும் அதில் பல மனமே
போலி சரக்கு எல்லாம் வருகின்றது குடிமக்கள் கொலை இங்கு நடக்கின்றது
பாருக்குள் பணமெல்லாம் பறிபோகுது முதலைகள் சாராயம் வடிக்கின்றது
மனதிலே வரும் சுகம் ஒரு நொடியில் அழிகையில் அழும் இது வழியில்

சமரசம் உலாவும் இடமே
சமரசம் உலாவும் இடமே

குடியின்றி அமையாது உலகடா

ஜாதியில் மேலோர் என்றும்
தாழ்ந்தவர் தீயோர் என்றும் பேதமில்லாது

போதையில் பல நினைவு தொலையும் அதிலும் வேஷம் பல இருக்கும்
சாதியில் பல ஏற்ற தாழ்வினை தூக்கியே எறிய அது மறுக்கும்
மதுரை வீரன் குதிரை பறக்கின்றது
பொல்லாத பகையெல்லாம் அழிகின்றது
ஆனாலும் சண்டைகள் நடக்கின்றது
தள்ளாடும் உடலெல்லாம் விழுகின்றது
துரோகமும் தினம் வரும் இது வழியில்
சமரசம் அழும் பொது வழியில்

சமரசம் உலாவும் இடமே
சமரசம் உலாவும் இடமே
சமரசம் உலாவும் இடமே
சமரசம் உலாவும் இடமே
சமரசம் உலாவும் இடமே

குடியின்றி அமையாது உலகடா அதில் நீந்தும் குதிரை நாமடா
நரை முடியில் இளமை ஏறலாம் நடனங்கள் ஆடலாம்
கண்ணாடி முகமும் உடையலாம் உண்மைகள் பிறக்கலாம்
நெருக்கடி தீர்ந்திட போதையில் மனங்களோ குறுக்கு வழி தேடுது
கலகமும் இங்கிருந்து பிறக்குது மாற்றங்கள் அதில் மறைந்து கிடக்குது

சமரசம் உலாவும் இடமே

சமரசம் உலாவும் இடமே

படம் : மதுபான கடை (2012)
இசை : வேத் சங்கர்
பாடியவர் : பாலக்காடு ஸ்ரீராம், சீர்காழி கோவிந்தராஜன்
வரிகள் : ராஜ்குமார்

3 Comments:

Unknown said...

அற்புதமான வரிகள் ..........

Unknown said...

அற்புதமான வரிகள்

Unknown said...

அற்புதமான வரிகள் ..........

Last 25 songs posted in Thenkinnam