Saturday, January 19, 2013

பூவும் பூவும் பேசும் நேரம் - ஆதலால் காதல் செய்வீர்


http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGYSR0566'&lang=en


பூவும் பூவும் பேசும் நேரம்
தூறல் தூறும் ஜன்னலோரம் நின்றேனடி
போதும் போதும் என்றபோதும்
தீயில் வாடும் தேவபோதை தந்தாயடி

என் தேவதை இது மாயமோ சொல்
என் பூமியில் நான் இல்லையே
தேடித் தேடி கண்கள் தேயுதே
வேறு பூமி செய்யத் தோணுதே
கோடி கோடி மின்னல்
என்னிலே பூ பூக்குதே

ஆயிரம் நாடகம் ஆடினாய் நீயடா
மாயமாய் காயங்கள் செய்கிறாய்
நாடகம் ஆடவே மேடையும் நீயடி
காற்றிலே ஓவியம் வரைகிறாய்

தீராத பொய்கள் பேசியே
தித்திக்கும் இம்சை செய்கிறாய்
பார்வையில் கத்திகள் வீசி நீ
நோகாமல் என்னைக் கொல்கிறாய்

அதனாலே நானுமிங்கே
தூங்காத கடலுமானேன்
தாலாட்ட நீயும் வருவாய்
அலையாய் அலையாய்

சித்திரை மார்கழி சேர்ந்ததோர் முத்தமே
செய்யவா செல்லமே உன்னிடம்
யாரிடம் கேட்கிறாய் நானில்லை என்னிடம்
வானவில் நாணலாய் ஆடுதே

நீரின்றி வானில் வாழ்ந்திடும்
விண்மீன்கள் மண்ணில் காண்கிறேன்
மேகத்தில் மேயும் வெண்ணிலா
தேகத்தில் வந்து காயுதே

உறங்காத இரவுகள் மேலே
அடங்காத கனவுகளாலே
மிதந்திடும் பனித்துளி போலே
புதிதாய்ப் பிறந்தேன்


படம்: ஆதலால் காதல் செய்வீர்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: ஜெ.ப்ரான்சிஸ் கிருபா
பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ், வினைதா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam