Thursday, January 17, 2013

எம்.ஜி.ஆர் - மூன்றெழுத்தில் என் மூச்சு



மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும்
உள்ளம் என்று ஒரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கு ஒரு பெயர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை

அந்த மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும்
உள்ளம் என்று ஒரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கு ஒரு பெயர் இருக்கும்

பதவி வரும் போது பணிவு வர வேண்டும்
துணிவும் வர வேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வர வேண்டும் தோழா

பதவி வரும் போது பணிவு வர வேண்டும்
துணிவும் வர வேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வர வேண்டும் தோழா
அன்பே உன் அன்னை அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில் ஒன்றே உன் தேவன்

மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும்
உள்ளம் என்று ஒரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கு ஒரு பெயர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை

வாழை மலர் போல பூமி முகம் பாக்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா

வாழை மலர் போல பூமி முகம் பாக்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா
அன்பே உன் அன்னை அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில் ஒன்றே உன் தேவன்

மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும்
உள்ளம் என்று ஒரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கு ஒரு பெயர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை

படம் : தெய்வத்தாய் (1964) 
இசை : விஸ்வநாதன் 
பாடியவர் : செளந்தர்ராஜன் 
வரிகள் : வாலி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam