Saturday, February 28, 2009
977. வராக நதிக்கரை ஓரம்
பதிந்தவர் MyFriend @ 12:30 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், சங்கர் மகாதேவன்
976. பாம்பே மெட்ராஸ் டெல்லி
பதிந்தவர் MyFriend @ 8:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், கவிதா பட்வால், கோபால்
Thursday, February 26, 2009
975 திகைக்கவைக்கும் திரையிசைச்சொல்
திகைக்கவைக்கும் திரையிசைச்சொல்
|
இந்த வாரம் மீண்டும் நேற்று திகைக்கவைக்கும் திரையிசைசொல் ஒலித்தொகுப்பு ஒன்றை வழங்கினார் அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.எல். நாராயாணா அவர்கள்.
பட்டாசை திரியை பற்ற வைத்து தூக்கி போடுவது போல் சும்மா அனாயசமாக போட்டுள்ளார். வானொலி நேயர்கள் மீண்டும் பழைய உற்சாகத்திற்க்கு வந்து விட்டார்கள்
என்று தெரிகிறது. ஒலிக்கோப்பை கேட்டுப்பாருங்கள் நேயர்கள் தட்டு தடுமாறி எந்த வார்த்தையை கண்டு பிடிக்கவேண்டுமோ அதை விட்டுவிட்டு என்னனென்னமோ
வார்த்தைகளை சேகரித்து குறுஞ்செய்தியாக அனுப்பியுள்ளார்கள் என்னையும் சேர்த்து தான் சொல்றேன். கேட்டுப்பாருங்கள் ஒரே தமாசாக இருக்கும் அத்துடன் மூளைக்கும்
நல்ல வேலை. ஏதோ ஒரு நல்ல மெலோடி பாட்டு கேட்டுவிட்டு நிம்மதியாக தூங்கலாம் என்று நினைக்கும் நேய்ர்களுக்கு இது போல் ஒலித்தொகுப்பு வந்தால் துள்ளிக்குதித்து
எழுந்து உட்கார்ந்து கொண்டு உற்சாகமாகிவிடுகிறார்கள் ஒலித்தொகுப்பு ஒரு மணி நேரம் தான் ஆணால் நேயர்களூக்கு தூக்கம் அவ்வளவு சீக்கிரம் தூக்கம் வராது. தூக்கம் வரும் ஆனால் வராது. இது தான் உண்மை. இந்த ஒலித்தொகுப்பில் ஆழ்ந்து அவரின் பேச்சை கவ்னித்தாலே போதும் பாதி வேலை நமக்கு சுலபமாகி விடுகிறது.
சரிங்க விசயத்துக்கு வருகிறேன் பாடல்களை கேளூங்கள் தரவிறக்கம் செய்து கேளூங்கள் அவசரப்பட்டு ஓர் ஆர்வத்தில் கடைசியில் கேட்டு விடாதீர்கள் ஒரு ஸ்வாரசியம் இல்லாமல் போய்விடும். அப்படியே உங்கள் உணர்வுகளையும் தாருங்கள் ஆக்கத்தை உருவாக்கியவருக்கும் உற்சாகமாக இருக்கும். தேன்கிண்ண நேயர்கள்
சார்பாக ;ஆக்கத்தை உருவாகியவருக்கு நன்றி. ஆர்.ஜி.எல். சார் வாரத்திற்க்கு ஒரு முறையாவது இதுபோல் ஆக்கம் தாருங்கள். நமது இணையதள நண்பர்களூம் தலமுடியை
பிய்த்துக்கொள்ளட்டூம் ஹி.. ஹி.. ஹி.. தருவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.
பதிந்தவர் Anonymous @ 2:45 PM 2 பின்னூட்டங்கள்
வகை வானொலி
974 முதல் அனுபவங்களூம் அற்புதங்களூம்
முதல் அனுபவங்களூம் அற்புதங்களூம்
1. பூப்போல பூப்போல பிறக்கும், 2. அம்மா என்பது தமிழ் வார்த்தை, 3. அல்லித் தண்டு காலெடுத்து, 4. சிட்டுக்குருவிக்கென கட்டுப்பாடு, 5. நானொரு கோவில் நீயொரு தெய்வம்
6. பௌர்னமி நிலவில் பனிவிழும் இரவில், 7. அத்தானின் முத்தங்கள், 8. ஆயிரம் இரவுகள் வருவதுண்டு, 9. நல்ல இடம் நீ வந்த இடம், 10.காதல் சிறகை காற்றில் விரித்து
11.தூக்கமும் கண்களை தழுவட்டுமே, 12.ஐம்பதிலும் ஆசை வரும்
|
முதல் அனுபவங்களூம் அற்புதங்களூம் என்ற தலைப்பில் வானொலி நேயர் ஒருவர் ஒரு ஆக்கத்தை சென்ற வாரம் வழங்கியிருந்தார். மேலே பாடல்கள் தான் அவை மிகவும் ரசித்து விளக்கங்கள் தந்திருந்தார். கேட்டு மகிழுங்கள். உங்கள் உணர்வுகளையும் எழுதுங்கள். ஆக்கத்தை உருவாக்கியவர் மகிழ்ச்சியடைவார்.
நேயர்: ரேணுகா தேவி
357, மயுரி நகர் குடியிருப்பு
சின்னவேடம் பட்டி
கோவை
பதிந்தவர் Anonymous @ 2:32 PM 2 பின்னூட்டங்கள்
வகை வானொலி
Wednesday, February 25, 2009
973. தனியே தன்னந்தனியே
பதிந்தவர் MyFriend @ 12:30 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், சங்கர் மகாதேவன்
971. விடுகதையா இந்த வாழ்க்கை
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 12:30 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், ரஜினி, வைரமுத்து, ஹரிஹரன்
970.ஹேய் உலகமெல்லாம் எங்கள் தமிழ் பாட்டு
ஹேய் உலகமெல்லாம் எங்கள் தமிழ் பாட்டு
அட நிலவு சாய்ந்தாட என்ன ரேட்டு
வெஸ்டர்ன் எங்களுக்கு விளையாட்டு
நோ ப்ராப்ளம்
நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
உன்னை சேலை கட்ட சொன்னா நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
உன்னை சைட் வர சொன்னா நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
நான் ஷேவ் பண்ணி வந்தா நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
நான் வேட்டி கட்டி வந்தா நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
கிழக்கு உலகத்தை அந்நாளில்
இந்த மேற்கு உலகங்கள் ஆண்டனவே
இன்று கிழக்கு மேற்க்காக மாரியதே
நோ ப்ராப்ளம்
ஒரு விதைக்குள் எம்மை வைத்தாலும்
மிக விரைவில் வெளியேறி வருவோமே
ஒரு விஷ்வரூபங்கள் கொள்வோமே
நோ ப்ராப்ளம்
நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
நான் உன்னை விட பெருசு நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
நான் உன்னை விட சிறுசு நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
நான் இரவுக்கு புதுசு நோ ப்ராப்ளம் நோ ப்ராப்ளம்
நோ ப்ராப்ளம்
நோ ப்ராப்ளம்
படம்: லவ் பெர்ட்ஸ்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: AR ரஹ்மான், Apache Indian
பதிந்தவர் MyFriend @ 12:30 AM 2 பின்னூட்டங்கள்
Tuesday, February 24, 2009
969 இசைப்புயலுக்கு வாழ்த்தொலி தொகுப்பு
இசைப்புயலுக்கு வாழ்த்தொலி தொகுப்பு
|
”இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்” தற்போது இந்த வரிகளை உச்சரிக்காத உதடுகள் இந்தியாவில் எங்கும் காணமுடியாது. ஆமாம் இசையன்பர்களே இசையை ரசிக்கும் ஒவ்வொரு மனிதனும் ஆத்மார்த்மாக அடிமனதில் இருந்து தன்னையும் அறியாமல் மேற்கண்ட வரிகளை உச்சரிக்க வைக்கும். ஒட்டு மொத்த இந்தியாவின் ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம் பெறுவது என்பது அந்த ஆஸ்கர் அவார்டை விட பெரிது எனலாம்.
ஏனென்றால் அனைத்து இந்திய இசைப்பிரியர்களூக்கும் ஒவ்வொருவரும் தானே பெற்றதாக உணர்கிறார்கள்.
ரஹ்மான் அவரக்ளில் துவக்க காலத்தில் இசையமைக்கும் போது சிலபேர் “என்னது ஒரே இரைச்சலாக இருக்கிறதே” என்று முணு முணுத்தவர்களூம் உள்ளனர். ஏன் வாய் திறந்து சொன்னவர்களூம் உண்டு. அவர்களையெல்லாம் தன் திறமையால் திறந்த வாயை ஒரே ஆப்பாக அடித்து மூடவைத்துவிட்டார் இப்படியும் சிலபேர் என்னவென்று சொல்ல?.
ஆமாம் “இசைப்புயல்” என்று யார் இவர்க்கு பெயர் வைத்தார்களோ அவர்கள் நீடுழி வாழனும். ஏனென்றால், ரஹ்மான் தான் இசையமைக்க துவக்க காலத்தில் இசையமைக்க வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது என்று ஒரு கேள்விக்கு ஒரு பேட்டியில் படித்த நினைவு. நான் சிறியவர்களையும், இளைஞர்களையும் கவர்ந்து இழுக்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் தான் இசையமைக்க ஆரம்பித்தேன். எப்போதுமே இளம் உள்ளங்களில் சொல்லும் வழியில் சொன்னால் அவர்கள் மனதில் நன்றாக பதியும் என்று பேட்டி தந்தார். அது எவ்வளவு உண்மை என்று ஒவ்வொரு ரசிகர்களின் குடும்பங்களீல் உள்ள குழந்தைகளை கேட்டால் தெரியும். இது தான் உண்மை. ரஹ்மான் இசையமைப்பு இரைச்சல் தான் இல்லையென்று சொல்லவில்லை கடலின் சீற்றம், புயலின் ஆர்பரிப்பு இயற்க்கையான இரைச்சல் தான். இயற்க்கையை என்றுமே யாராலும் மாற்றமுடியாதே இது என் கருத்து. ஆணால் அந்த
இரைச்சலுக்கும் இறுதியில் ஓர் அமைதி ஏற்படுமே அதுவே இனம் புரியாத சுகம். அது போலவே பல மெலோடி பாடல்களூக்கும் இசையமைத்திருக்கிறார். ரஹ்மான் அவர்கள். அவர் மேன் மேலும் பல விருதுகள் வாங்கி உலக அளவில் பல ஆங்கில படங்களூக்கு இசையமைக்க வேண்டும் அதற்கு இறைவன் அருள் புரியவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேனுங்கே ஆமாங்க நேற்று இனிய இரவில் பண்பலையிலும் அவரின் திறமையை பாராட்டி ஓர் ஒலித்தொகுப்பு வழங்கினார்
நமது ஆதர்ஸ அறிவிப்பாளர் ஆர்.ஜி.எல் சார். நேற்று எல்லா வானொலிகளூம் இந்த பதிவு பதியும் வரையும் ரஹ்மான் அவர்களின் படப்பாடல்கள் தான் ஒலிப்பரப்பிவருகிறார்கள். எல்லோருமே அதிகபட்சம் மெலோடி அவரின் மெலோடி பிரபல பாடல்கள் தான் ஒலிப்பரப்பினார்கள். நமது அறிவிப்பாளர் தேடிப்பிடித்து அதிகம் சில ஒலிபரப்பாத பாடல்களையும் சில பிரபல மெலோடி பாடல்களையும் ஒலிப்பரப்பி தன் பங்குக்கு
தன் வாழ்த்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். நான் கேட்டு ரசித்த அந்த ஒலித்தொகுப்பை தேன் கிண்ண் நேயர்களான உங்களிடம் பகிர்ந்து கொண்டு ரஹ்மானுக்கு உங்களூடன் சேர்ந்து மீண்டும் வாழ்த்துக்கள் சொல்வதில் மிகவும் பெருமையடைகிறேன். ஒலித்தொகுப்பு தரவிறக்கம் செய்து கேட்டு மகிழலாம் அன்பர்களே. நன்றி.
பதிந்தவர் Anonymous @ 12:50 PM 5 பின்னூட்டங்கள்
வகை AR ரஹ்மான், வானொலி
968. ஆறரை கோடி பேர்களில் ஒருவன்
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 6:49 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், வாலி
Monday, February 23, 2009
966. விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
பதிந்தவர் MyFriend @ 12:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, மதுமிதா, யுவன் ஷங்கர் ராஜா
Sunday, February 22, 2009
Saturday, February 21, 2009
963. நாளை உலகம் இல்லை
பதிந்தவர் நாகை சிவா @ 6:49 PM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், வைரமுத்து
962. கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
பதிந்தவர் MyFriend @ 12:32 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, கேகே, யுகேந்திரன், ஸ்ரீலேகா பார்த்தசாரதி, ஹரிஷ் ராகவேந்திரா, ஹாரிஸ் ஜெயராஜ்
961. உள்ளத்தில் நல்ல உள்ளம் - கர்ணன்
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 3:54 AM 4 பின்னூட்டங்கள்
வகை 1960's, MS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி, கண்ணதாசன், சீர்காழி கோவிந்தராஜன்
Friday, February 20, 2009
960 கவிஞர் புலமைப் பித்தன் பாடல் தொகுப்பு
கவிஞர் புலமைப் பித்தன் பாடல் தொகுப்பு
பொதுவாகவே பாடல்களின் தகவல்கள் இணையத்தில் படம் பெயர், இசையமைப்பாளர், பாடகர் பாடகிகள் பெயர்கள் தகவல்கள் தான் அதிகபட்சம் இருக்கும். பாடாலாசிரியர் பெயர் மற்றும் அவரைப் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் இடம் பெறுவதில்லை நான் பல
பாடல் இணைய தளங்களில் கண்டு இருக்கிறேன். பாடல் ஏற்றும் போதே பாடாலாசிரியர் பெயர்கள் எழுத மறந்து விடுகிறார்கள் எல்லாம் சோம்பேறித்தனம் தான். நீங்களே ஒரு எந்தவொரு இணையத்திலும் பாடல் பெயர் தேடி பாருங்கள் பாடலாசிரியர் பெயர்
விடுபட்டு போயிருக்கும். அதுஒரு பக்கம் இருந்தாலும் இப்போது வரும் புதிய பாடல்களில் அதிகபட்சம் பாடலாசிரியர் பெயர் எழுதப்பட்டு வருகிறது இது வரவேற்க தக்க விசயம். சரி சரி விசயத்துக்கு வருகிறேன். நேற்று ஒரு ஒலித்தொகுப்பு பண்பலையில் கேட்டேன். அந்த ஒலித்தொகுப்பு அடடா என்று என் புருவங்களை உயர்த்த வைத்தது. ஆமாங்க, புலவர் புலமைப்பித்தன் அவர்களைப் பற்றி நமது ஆதர்ஸ அறிவிப்பாளர் ஆர்.ஜி.எல் சார் அருமையாக தொகுத்து வழங்கினார். எப்படி தான் அவரால் இப்படி பேச முடிகிறதோ பலதடவை என்னை யோசிக்க வைத்தது. மனுசன் மிகவும் சரளமாக அதுவும் அவருக்கே உரிய பாணியில் வழங்குவது அவரின் மகத்தான் சிறப்பு.
புலவர் புலமைப்பித்தன் அவர்களின் பாடல் வரிகள் எல்லோருக்கும் போல் எனக்கும் மிகவும் பிடிக்கும் மற்றவர்களை விட இன்னும் எனக்கு அதிகம் பிடிக்குக்ம் ஏனென்றால். பெரும்பாளும் அவரின் பாடல் வரிகளுக்கு என் அபிமான பாடகர் பாலுஜி பாடியிருப்பார். அவரும் துடிக்கும் கரங்கள் போன்ற அவர் இசையமைத்த படங்களூக்கு அவருக்கு பாடல் எழுத வாய்ப்பு தந்துள்ளார்.
புலவரைப் பற்றி அறிவிப்பாளர் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் தகவல்கள் பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நமது மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா அவர்களின் இசையமைப்பு பற்றியும் அதன் அதிசயத்தை பற்றிய தகவல் ஒன்றை வழங்கினார். இளையராஜா ரசிகர்களுக்கு தெரிந்த விசயமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். இருந்தாலும் பண்பலை நேயர்களூக்கு அந்த தகவல் புதிது. என்னவென்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறதா அன்பர்களே. மன்னிக்கவும் அதற்க்கு நீங்கள் ஒலித்தொகுப்பை தரவிறக்கம் செய்து கேட்டுதான் தீர வேண்டும். நீங்கள் கேள்விப்படாத
தகவலாக இருந்தால். கேட்டுவிட்டு உங்கள் உணர்வுகளையும் ஒரு வரியில் எழுதுங்கள்.
பலவருடங்களூக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கவிஞர் புலமைப்பித்தன் அவரகளை ஒரு தடவை பார்த்த நினவு. அறிவிப்பாளர் சொன்னது போல் உடுத்தும் உடை, அவரின் முறுக்கிய மீசை, தலைமுடி அது மட்டுமல்லாமல் அவரின் மனதும் மிகவும் வெள்ளை. அவரின் பாடல்கள் பலவற்றை கேட்டு வியந்து போயிருக்கிறேன். ஏன் உங்களூக்கும் இருந்திருக்கும். இந்த ஒலித்தொகுப்பில் வரும் பாடல்கள் கேட்டீர்களானால் எப்போதும் யார் கேட்டாலும் அந்த பாடல் யார் எழுதியது என்றால் நிச்சயம் அதுவா புலமைப் பித்தன் சார் எழுதியது என்று சட்டென்று சொல்லிவிடுவீர்கள். இது மாதிரி ஒலித்தொகுப்புகள் பலவற்றை பண்பலை ஒலிப்பரப்ப வேண்டும் அப்போது தான் ரசிகர்கள் மனதில் பாடலாசிரியர்கள் மிகவும் ஆழமாக பதிவார்கள். ஒலித்தொகுப்பை உருவாக்கியவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி.
|
பதிந்தவர் Anonymous @ 2:03 PM 9 பின்னூட்டங்கள்
வகை புலமைப்பித்தன, வானொலி
959. நெஞ்சம் ஒரு முறை
பதிந்தவர் MyFriend @ 12:32 PM 1 பின்னூட்டங்கள்
வகை 2000's, SA ராஜ்குமார், கேகே, மகாலட்சுமி ஐயர், மலேசியா வாசுதேவன், ஸ்ரீநிவாஸ்
958. மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா
பதிந்தவர் MyFriend @ 12:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை பரத்வாஜ், ரேஷ்மி, ஹரிஷ் ராகவேந்திரா
Thursday, February 19, 2009
957. கண்கள் கண்டது கண்கள் கண்டது
பதிந்தவர் MyFriend @ 8:31 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, கேகே, சுஜாதா, யுவன் ஷங்கர் ராஜா
Wednesday, February 18, 2009
956 இதமான இ(ம்)சை
|
சூரியன் பண்பலையில் இனிய இரவில் பழைய பாடல்கள் வைத்து வானொலி அன்பர்கள் நிகழ்ச்சிகள் வழங்கி மூன்று மாதங்களுக்கும் மேல் இருக்கும் என்று நினைக்கிறேன். அப்படிதானே ஆர்,ஜி.எல். சார்?. தற்போது இடைக்கால அதாவது 1980 முதல் 1990 வருடங்களில் வெளிவந்த திரையிசை பாடல்கள் ஒலிபரப்பி வருகிறார்கள் என்ன காரணம் என்று தெரியவில்லை. பழைய பாடல்கள் கேட்க முடியாமல் மிகவும் சோர்ந்து
போயிருந்த வானொலி நேயர்களூக்கு வாரம் ஒரு முறை இரவின் மடியில் நிகழ்ச்சி ஆறுதலாக இருக்கிறது. வாராவாரம் இரவின் மடியில் நேயர்களின் ஆதங்கத்தை அந்த நிகழ்ச்சிகளில் நன்றாக உணரமுடிகிறது. பழைய பாடல்களூக்கு என்று ஒரு பெருங்கூட்டமே இன்னும் இருந்து வருகின்றது. இருந்தாலும் இடைக்கால பாடல்களூக்கு என்று ஒரு மாபெருங்கூட்டம் இருக்கிறது. அதை வாராவரம் ஞாயிறு அன்று முழுவதும் ஒலிப்பரப்பி வரும் க்ளாசிக் சண்டே நிகழ்ச்சியிலும் நேயர்களின் ஆவலை அதிகம் காண முடிகிறது. அதனால் என்னவோ வார நாட்களில் இனிய இரவில் இடைக்கால பாடல்கள் ஒலிப்பரப்புவது தவிர்க்கமுடியாமல் போயிற்று போலும். அந்த இடைக்கால பாடல்கள் நிகழ்ச்சியிலும் வித்தியாசமான பாடல் தொகுப்புகள் வர ஆரம்பித்துள்ளன முதற்கட்டமாக 2 நாட்களூக்கு முன் கானகந்தர்வன் கே.ஜே. யேசுதாஸ் அவர்கள் பாடிய ஒலித்தொகுப்பு
ஒலிப்பரப்பினார்கள். அதற்க்கு அடுத்த நாள் மீண்டும் ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. நேயர்களை குழப்ப ஆரம்பிச்சிட்டாங்கய்யா.
ஆமாம் அன்பர்களே நேற்றைய இனிய இரவு ஒலிபரப்பு 17.02.2009 இசையன்பர்களின் மனதிற்க்கு ஒரு “இதமான இசை இம்சை” நிகழ்ச்சி வழங்கினார் நமது ஆதர்ஸ் அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.எல். நாராயணன் அவர்கள். வழக்கம் போல நேயர்களை தூங்கவிடமாட்டாம பன்னீட்டாங்க சாமி. இதுவும் ஒரு வித இதமான இம்சை தான். அருமையான ஆக்கத்தை உருவாக்கியவருக்கு எனது வாழ்த்துக்கள்.
நமது அறிவிப்பாளர் துவக்கத்திலே சொன்னது போல “உட்கார்ந்து யோசிப்பீங்களோ?” என்று நீங்களூம் கேட்பது கேட்கிறது. வழக்கம் போல பாடல்களில் ஒரு சொற்றோடரை ஒழித்து வைத்து அதை கண்டு பிடியுங்கள் என்று நமது வானொலி நேயர்களை மீண்டும் கதி கலங்க வைத்துவிட்டார் அறிவிப்பாளர். உதாரணத்திற்க்கு ஏற்கெனவே இந்த தேன்கிண்ணத்தில் சொல்லிசை சதிராட்டம், போன்ற சில ஒலித்தொகுப்புகள் வழங்கியிருக்கிறேன் அதை
கேட்டு ரசித்திருப்பீர்கள் அதே போல் தான் இந்த ஒலித்தொகுப்பு. என்ன வித்தியாசம் என்னவென்றால் அதில் பழைய பாடல்கள் தொகுப்பு இருக்கும் இதில் மத்தியகால பாடல்கள், அந்த ஒலித்தொகுப்புக்களில் அதிகம் ஏழிசை வேந்தனின் திரு. டி.எம்.எஸ் அவர்களின் பாடல்கள் அதிகம் இருக்கும். இந்த ஒலித்தொகுப்பில் எனது ஆதர்ஸ பாடகர் பாலுஜியின் பாடல்களும் சிலது இடம் பெற்றிருக்கும் இவை தான் வித்தியாசம். ஒரு பழமொழி சொல்வார்கள் கோழி குருடாயிருந்தால் நமக்கு என்ன குழம்பு ருசியாக இருக்கனும் அவ்வளவு தானே?. யார் பாடினால் என்ன நமக்கு வேண்டியது ஸ்வாரசியமான நிகழ்ச்சி அவ்வளவு தானே
நேயர்களே. நான் சொல்வது சரிதானுங்களே?
ஆமாங்க.. நுழைவாயில் கட்டும் மலர் தோரணத்திலே ஆதாராமாக இருப்பது ஒரு நூலோ அல்லது நாறோ? அது போல இந்த ஒலித்தொகுப்பின் தோரணத்திலே ஆதாரமாக ஒரு சொற்றொடரில் அழகாக கோர்த்து அமர்க்களமாக வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளர். நமது இசை ஜாம்பவான்கள் மெல்லிசை மன்னர்கள், இசைஞானி, இசைப்புயல் ஆகியோர் இசையமைத்த பாடல்களில் வரிகளில் பல இடங்களில் சங்கதிகளை தூவி விட்டு அருமையான கீதங்களை வழங்கியிருக்கிறார்கள் இவர்கள் இதை நாம் மறுக்க முடியாது. இசையன்பரக்ள் அந்த வரிகளையும் சங்கதிகளையும் அனுபவித்து ரசித்தாலே போதும். இந்த ஒலித்தொகுப்பின் ஒழிந்து கொண்டிருக்கும் சொற்றொடரை சிரமம் இல்லாமல் அடையாளம் காணலாம். நம் அன்றாட வாழ்க்கையில் உடலுடன் உயிருடன் கலந்து போயிருக்கும் உணவு, உடை, இசை இம்மூன்றும் நம் வாழ்க்கையில் ஒன்றாக ஆகிவிட்டன. இசையுடன் ஒன்றாக கலந்து கொண்ட இசையன்பர்களுக்கு இன்னும் சீக்கிரம் புரியும்.
தொகுப்பில் 9 மத்தியகால பாடல்கள் உள்ளன தேன் கிண்ண நேயர்கள் மிகவும் உஷாராக இருங்கள் அறிவிப்பாளர் அவருக்கே உரிய பாணியில் அர்த்ததுடன் குழப்பியிருக்கிறார்.
அதென்ன அர்த்தமான குழப்பம்' என்கிறீர்களா? ஒலித்தொகுப்பை கேட்டுத்தான் பாருங்களேன். முதல் இரண்டு பாடல்களிலே நீங்கள் கண்டு பிடித்துவிட்டால் அறிவிப்பாளர் சொன்னது போல்
நீங்களும் இறுதியில் அறிவிக்கப்பட்ட அசகாய சூரர்கள் பட்டியலில் இடம் பெற்றுவிடுவீர்கள். என்னங்க ரெடிதானே? அவசரப்பட்டு ஒலித்தொகுப்பை தரவிறக்கம் செய்து இறுதி பகுதியில்
கேட்டு விடாதீர்கள் இந்த இதமான இம்சையின் ஸ்வாரசியம் கிடைக்காமல் போய்விடும். ரொம்ப சோதித்து விட்டேனா? நீங்களூம் கேட்டு விட்டு உங்கள் உணர்வுகளை ஒருவரியில் எழுதிடுங்க சார்.
பதிந்தவர் Anonymous @ 3:46 PM 3 பின்னூட்டங்கள்
வகை வானொலி
955. செந்தமிழ் பேசும் அழகு ஜூலியட்
பதிந்தவர் MyFriend @ 12:30 PM 1 பின்னூட்டங்கள்
வகை 2000's, அண்ட்ரியா, தேவிஸ்ரீ பிரசாத், ரஞ்சித்
Tuesday, February 17, 2009
953. உயிரே உயிரே பிரியாதே
பதிந்தவர் MyFriend @ 12:28 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, சாகர், தேவிஸ்ரீ பிரசாத்
Monday, February 16, 2009
Saturday, February 14, 2009
949 ஏழிசை வேந்தனின் இனிய கீதங்கள்
யார் தருவார் இந்த அரியாசனம் >> சின்னப் பயலே சின்னப் பயலே >> உன்னை அறிந்தால் நீ >> கண்ணில் வந்து மின்னல் >> பாட்டும் நானே பாவமும் நானே >> சுந்தரி சௌந்தரி >> அந்த நாள் ஞாபகம் >> கொடியசைந்ததும் காற்று வந்ததோ >> முத்தைதரு பத்தி >> புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே.
ஏழிசை வேந்தனின் எழில்மிகு தோற்றத்துடன் பாடல் தொகுப்பு மற்றும் தகவல்கள்.
ஏழிசை வேந்தனின் இனிய கீதங்கள் உடைய பாடல்களின் தலைப்புகள் தான் மேலே எத்தனை தடவை கேட்டாலும் காதுக்கு தெவிட்டாத இனிய கானங்கள். இந்த த்லைமுறைக்காகவே ரீசார்ஜ் செய்யப்படுகிறது. இந்த பாடல்கள தனித்தனியாக தான் கேட்டிருப்பீர்கள் இதோ அவர் துவக்க காலங்களில் பாடல்கள் வாய்ப்பு பெற எப்படி படாத பாடு பட்டார் என்பதை இந்த ஒலித்தொகுப்பில் கேட்டு மகிழுங்கள்.
அமைதியாக, அழகாக இனிமையான குரலில் வார்த்தைகளை தேடித்தேடி வெண்முத்துமாலை போல் கோர்த்து தகவல்களூடன் வழங்கிய அறிவிப்பாளர் திருமதி. சாரதா ராமனாதன் அவர்களூக்கு நன்றி. தரவிறக்கம் செய்து கேட்டு விட்டு உங்கள் உணர்வுகளையும் ஒரு வரியில் எழுதுங்கள் இசையன்பர்களே.
|
பதிந்தவர் Anonymous @ 3:46 PM 2 பின்னூட்டங்கள்
வகை TM சௌந்தர்ராஜன், வானொலி
948 இடைக்கால கீதங்கள் ஒலித்தொகுப்பு 1
இடைக்கால கீதங்களில் சங்கமிக்கும் காதலர்களூக்கு வாழ்த்துக்கள்.
சில வாரங்களாக தளத்தில் வரமுடியவில்லை வானொலியில் இரவு நேரங்களில் பழைய பாடல்கள் ஒலிப்பரப்புவதை நிறுத்திவைத்துள்ளார்கள் இடைக்காலகீதங்கள் ஒலிப்பரப்பி வருகிறார்கள். எப்படி பழைய பாடல்களூக்கு ஒரு கூட்டமே உள்ளதோ அதே போல் இருமடங்கு இடைக்கால கீதங்களூக்கும் இருக்கிறார்கள். இடைக்கால ஒலித்தொகுப்புக்கள் வரிசைக்கட்டி வரவிருக்கின்றன எல்லா பாடகர்களின் பாடல்களூம் தொகுப்புகளாக வரவிருக்கின்றன தரவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள். அவ்வப்போது பழைய பாடல்களூம் வரவிருக்கின்றன. இப்போது இந்த ஒலித்தொகுப்பை அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்ஷ்மி நாரயாணன் அவர்களின் குரலில் கேட்டு மகிழுங்கள்.
இடைக்கால கீதங்கள் ஒலித்தொகுப்பு 1
1) என்னடா பொல்லாத வாழ்க்கை, புவனா ஒரு கேள்வி
2) இங்கே இறைவன், சார் ஐ லவ் யூ
3) அம்மன் கோவில் பேரழகு, சொந்தம் 16
4) தங்க நிலவே உன்னை உருக்கி, தங்கைக்கோர் கீதம்
5) ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே, ப்ரியா
6) வண்ணம் வண்ணம், பிரேமபாசம்
7) ஆள அசத்தும் மல்லியே மல்லியே, கன்னிராசி
8) சோலைப்பூவில், வெள்ளைரோஜா
|
பதிந்தவர் Anonymous @ 1:08 PM 0 பின்னூட்டங்கள்
வகை வானொலி
Friday, February 13, 2009
945. கண்டுபிடி கண்டுபிடி
பதிந்தவர் MyFriend @ 12:30 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, சபேஷ் - முரளி, ஹரிணி, ஹரிஹரன்
944. ஆயிரத்தில் நான் ஒருவன் - இருவர்
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 12:34 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், மனோ, வைரமுத்து
Thursday, February 12, 2009
942. பேட்டைராப்
பதிந்தவர் MyFriend @ 12:30 AM 3 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், குஞ்சாரம்மா, சாகுல் ஹமீது, சுரேஷ் பீட்டர்ஸ், ஷாஹுல் ஹாமீட்
Wednesday, February 11, 2009
941. காற்று குதிரையிலே
பதிந்தவர் MyFriend @ 12:38 PM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், சுஜாதா
Tuesday, February 10, 2009
939. காதல் மழையே காதல் மழையே
பதிந்தவர் MyFriend @ 12:26 PM 1 பின்னூட்டங்கள்
வகை 2000's, பரத்வாஜ், ஸ்ரீநிவாஸ்
Monday, February 9, 2009
937. வாழ்க்கையை யோசிங்கடா
பதிந்தவர் MyFriend @ 12:42 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, கார்த்திக், திப்பு, யுவன் சங்கர் ராஜா, ரஞ்சித், ஹரிச்சரண்