பனிவிழும் இரவில் நனைந்தது இரவில்
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது
வா வா வா
(பனி..)
பூவிலே ஒரு பாய் போட்டு பனித்துளி தூங்க
பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க
மாலை விளக்கேத்தும் நேரம் மனசில் ஒரு கோடி பாரம்
தனித்து வாழ்தென்ன லாபம் தேவையில்லாத தாபம்
தனிமையே போ இனிமையே வா
நீரும் வேரும் சேர வேண்டும்
காவலில் நிலை கொள்ளாமல் தாவுது மனது
காரணம் இல்லாமல் வாடிடும் வயது
ஆசை கொல்லாமல் கொல்லும் அங்கம்
தாளாமல் துள்ளும் என்னை கேட்காமல் ஓடும்
இதயம் உன்னோடும் கூடும்
விரகமோ நரகமோ சொல்
பூவும் முள்ளாய் மாறிப்போகும்
படம்: மௌன ராகம்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
Saturday, April 10, 2010
பனிவிழும் இரவில்
பதிந்தவர் MyFriend @ 2:36 AM
வகை 1980's, S ஜானகி, SP பாலசுப்ரமணியம், இளையராஜா
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment