இன்று பிறந்தநாள் கொண்டாடும் சித்திரக்கூடம் பதிவர் முல்லைக்கு வாழ்த்துக்கள். அவருக்காக ஒலிக்கிறது இப்பாடல்.
மேகம் கறுக்குது ...மின்னல் சிரிக்குது..
சாரல் அடிக்குது ..இதயம் பறக்குது..
மேகம் கறுக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்கிறதே
என் மேனியில் ஆடிய மிச்சத் துளிகள்
நதியாய் போகிறதே
(மேகம்..)
நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும்
வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும்
மழையே துளி போடு
என் மார்பே உன் வீடு
(மேகம்..)
நிலாவே வா வா வா
நில்லாமல் வா வா வா
என்னோடு குளிப்பது சுகம் அல்லவா
உன் கறையை சலவை செய்து விட வா
புறாவே வா வா வா
பூவோடு வா வா வா
உன்னோட குளிருக்கு இடம் தரவா
என் கூந்தலில் கூடு செய்து தரவா
காற்றைப்போல் எனக்கு கூட
சிறகொன்றும் கிடையாது
தடை மீறி செல்லும்போது
சிறை செய்யமுடியாது
இளமையின் சின்னம் இளம்பட்டு வண்ணம்
இன்னும் இன்னும் வளர்த்து கொள்வேன்
இருபத்து ஒன்னு வயதுக்கு மேலே
காலத்தை நிறுத்தி வைப்பேன் ஹோய்
(நான் சொல்லும் நேரத்தில் )
கனாவே வா வா வா
கண்ணோடு வா வா வா
விண்வெளியை அளந்திட சிறகுகொடு
விண்மீனில் எனக்கு படுக்கை போடு
மைனாவே வா வா வா
மையோடு வா வா வா
என் கண்கள் அழகின் ஒளி பரப்பு
என் அழகை பறந்து பறந்து பரப்பு
பூமிக்கு ஒற்றை நிலவு போதாது போதாது
அதனால்தான் ரெண்டாம் நிலவாய்
நான் வந்தேன் இப்போது
பூக்களில் தங்கும் பனி துளி அள்ளி
காலையில் குளித்து கொள்வேன்
விடிகிற போது விடிகிற போது
வெளிச்சத்தை உடுத்தி கொள்வேன் ஹோய்
(மேகம்..)
படம்: குஷி
இசை: தேவா
பாடியவர்: ஹரிணி
பாடல்: வைரமுத்து
Wednesday, April 7, 2010
மேகம் கறுக்குது மின்னல் சிரிக்குது
Subscribe to:
Post Comments (Atom)
9 Comments:
வாழ்த்துக்கள் முல்லை.. :)
பதிவர் சந்தனமுல்லைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Happy Birthday akka :-)
thanks to Muthukka :-)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த நாள் மட்டுமின்றி எல்லா நாளும் இனிதாக அமைந்திடட்டும்.
அன்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
www.venkatnagaraj.blogspot.com
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஆச்சி பாஸ் :))))))
ஐ லைக் திஸ் சாங் ரொம்ம்ம்ம்ம்ம்ப!
பாடலாகட்டும் இசையாகட்டும் & ஜோ’வின் ஆட்டமாகட்டும் ஸோ க்யூட் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முல்லை.
//இளமையின் சின்னம் இளம்பட்டு வண்ணம்
இன்னும் இன்னும் வளர்த்து கொள்வேன்
இருபத்து ஒன்னு வயதுக்கு மேலே
காலத்தை நிறுத்தி வைப்பேன் ஹோய்//
பொருத்தமான பாடல்தான் முத்துலெட்சுமி:)!
பாடலை ஒலிபரப்பிய தேன்கிண்ணம் குழுவினருக்கும், பின்னூட்டத்தில் வாழ்த்திய முத்து, சென்ஷி,மை ஃபிரண்ட், வெங்கட் நாகராஜ், ஆயில்ஸ் பாஸ்,நான் ஆதவன் பாஸ்,ராமலஷ்மிக்கும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்! :-)
Post a Comment