Wednesday, April 28, 2010

கல்லில் ஆடும் தீவே



கல்லில் ஆடும் தீவே
சிறு கலகக்கார பூவே
கண்ணால் வார்த்தை சொன்னால்
என் கவிதை சேவல் கூவும்

பக்கம் நீயும் வந்தால்
என் பருவக் காற்றே மாறும்
என்னை நீங்கிச் சென்றால்
என் இளமைக் காய்ச்சல் ஏறும்

பூகளுக்கு உன் காய்ச்சலெல்லாம் நேர்வதில்லை
ஆண் உனக்கு நேர்ந்ததெல்லாம்
பெண் மேனியில் ஏன் இல்லை
(கல்லில்..)

உடல் எனும் தேசத்தில் ஹார்மோனே கலகம் வெடிக்கும்
காதலி உன் விழி கண்டும் காணாதிருக்கும்
ஓஹோ அன்பே உயிர் தான் என் தேடல்
உடலே என் ஊடல் நிறைவேறுது தேடல்
(கல்லில்..)

இயற்கையில் கிளர்ச்சியில் கொடியில் அரும்பு முளைக்கும்
இளமையின் காற்று தான் அரும்பின் கதவை திறக்கும்
அடடா நீ சொல்வது கவிதை
நீராட்டுது செவியை தாலாட்டுது மனதை
ஓஹோ நிலவே நான் என்பது தனிமை
நீ என்பது வெறுமை நாம் என்பது இனிமை
(கல்லில்..)

படம்: ஆனந்த தாண்டவம்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: பென்னி தயால், ஷ்வேதா
வரிகள்: வைரமுத்து

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam