Wednesday, April 14, 2010

தீயில் விழுந்த தேனா



தீயில் விழுந்த தேனா இவன் தீயில் வழிந்த தேனா
தாயைக் காக்கும் மகனா இல்லை தாயுமானவனா
மழையின் நீர் வாங்கி மழையே அழுவது போல்
தாயின் உயிர் தாங்கி தனையன் அழுவானோ
உயிரை தந்தவளின் உயிரைக் காப்பானா
கடனைத் தீர்ப்பானா ஏய்
தங்கம் போலே இருந்தவள் தான்
சருகைப் போலே ஆனதனால்
சிங்கம் போலே இருந்த மகன்
செவிலியைப் போலே ஆவானா
(தீயில்..)

ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா ஆ
உலகெல்லாம் ஓர் சொந்தம் அம்மா ஆ
(ஓர்..)
நீ சுமந்த பிள்ளையாய் நானிருந்தேன் அம்மா
நான் சுமக்கும் பிள்ளையாய் நீ ஆனாய் அம்மா
எனக்கேதும் ஆனதென்றால் உனக்கு வேறு பிள்ளை உண்டு
உனக்கேதும் ஆனதென்றால் எனக்கு வேறு தாயிருக்கா ஆ
நெஞ்சை க்கூட்டி வளர்த்தவளை கண்ணில் மணியாய் சுமந்தவளை
மண்ணில் இட்டு விடுவானா மனதில் மட்டும் சுமப்பானா
(தீயில்..)

தாயின் மடிதானே உலகம் தொடங்கும் இடம்
தாயின் மடிதானே உலகம் முடியும் இடம்
கருணைத் தாயின் நினைவினிலே
கல்லும் மண்ணும் அழுது விடும் கண்ணீர் துளிகளின் வேகத்திலே
கண்ணின் மணிகளும் இழந்து விடும்
(தீயில்..)

படம்: வரலாறு
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: AR ரஹ்மான்

1 Comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Last 25 songs posted in Thenkinnam