ஆறாத கோபமில்லை என் அருகினிலே வா
இனி நானாக பிரிவதில்லை என் வாழ்வினிலே வா
என் வாரத்தையை அன்பே
சிறையில் நான் அடைத்தேன்
நீ தொட்டதும் அன்பே
உடையும் ஆசையின் வெள்ளமே
நாட்கள் போனதே
காதல் நின்றதே
பிரிவிலே உருகினேன்
தினம் தினம் மருகினேன்
(இது ஆறாத கோபமில்லை )
நேற்று வரையில் உனை நீங்கி இருந்தேனே
நெஞ்சின் திரையில் உனை மயக்க ஏங்கினேனே
தூரம் குறையும் என நம்பி நகர்ந்தேனே
தோன்றி மறையும் ஒரு கானல் நீரிலே
பருகிடச் சென்றேன்
பிறகும் தாகத்தில் நின்றேன்
குளிர் நீருடன் வந்தேன்
இதழால் நிரப்பிட நின்றேன்
(ஆறாத கோபமில்லை )
பேசும் பொழுதே சில வாரத்தை தடுமாறும்
தென்றல் நடுவே தலை நீட்டி பேசப் பார்க்கும்
பார்க்கும் பொழுதே இரு கண்கள் கவி பாடும்
நாணம் அதிலே இடை வந்து போகுமே
அனுபவமில்லை அதனால் ஆயிரம் தொல்லை
இந்த அன்பொரு தொல்லை
எதிலும் அடங்குவதில்லை
(ஆறாத கோபமில்லை )
படம்: பலே பாண்டியா (2010)
இசை: தேவன் ஏகாம்பரம்
பாடல்: தாமரை
பாடியவர்கள்: ராமன் மகாதேவன், மகாலட்சும் ஐயர்
Wednesday, May 19, 2010
ஆறாத கோபமில்லை - பலே பாண்டியா(2010)
பதிந்தவர் தேன்கிண்ணம் @ 7:30 PM
வகை 2000's, 2010, கேகே, தாமரை, தேவன், மகாலட்சுமி ஐயர், மலேசியா வாசுதேவன், ராமன் மகாதேவன்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment