சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை கடுக்கின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதோ
நெஞ்சத்தை தொட்டு தொட்டு காதல் செல்லு பச்சைக்கிளி
முத்தங்கள் என்ன சத்தம் மெல்ல வந்து சொல்லடி
(சொல்லாமலே..)
மல்லிகைப்பூ வாசம் என்னை கிள்ளுகின்றது
அடி பஞ்சுமெத்தை முன்னே போல குத்துகின்றது
நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுற்றுகின்றது
கண்கள் சத்தம் கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது
கண்ணே உன் முந்தானை காதல் வலயா
உன் பார்வை குற்றால சாரல் மழையா
அன்பே உன் ராஜாங்கல் எந்தன் மடியா
நீ மட்டும் பொன்வீணை எந்தன் இடையா
இடையில் நழுவுதடி உயிரும் கரையுதடி உன்னோடுதான்
நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப்போல பற்றிக்கொள் கண்மணி
(சொல்லாமலே..)
கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது
கை சொப்பனங்கள் என்னை வந்து சுற்றிக்கொண்டது
என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளிச்சென்றது
நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளிக்கொண்டது
அன்பே நான் எந்நாளும் உன்னை நினைக்க
முள்மீது பூவானேன் தேகம் இழக்க
வில்லோடு அம்பாக என்னை இணைத்து
சொல்லாதம் சந்தோஷ யுத்தம் நடந்தது
உலக அதிசயத்தில் ஒன்று கூடியது நம் காதலா
நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப்போல பற்றிக்கொள் கண்மணி
(சொல்லாமலே..)
படம்: பூவே உனக்காக
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், சித்ரா
Friday, May 7, 2010
சொல்லாமலே யார் பார்த்தது
பதிந்தவர் MyFriend @ 1:48 AM
வகை 1990's, SA ராஜ்குமார், சித்ரா, ஜெயச்சந்திரன்
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
அய்யா /அம்மா, தயவு செய்து பாடல்களை ஒழுங்காகக் கேட்டுவிட்டு வரிகளை மாற்றாமல் எழுத்துப் பிழை இல்லாமல் இங்கே பதிவு செய்யுங்கள். இந்தப் பாட்டிலிருந்து உதாரணங்கள்:
மழை கடுக்கின்றதே...
காதல் செல்லு
காதல் வலயா
உன் ராஜாங்கல்
சொல்லாதம் சந்தோஷ..
---------------------------
இங்கே போட்டிருக்கிற பெரும்பாலான பாட்டுக்கள் இப்படித்தான் இருக்கின்றன. யாரும் சொல்லவில்லையா? தேன்கிண்ணம் தமிழ்த் திரைப்பாடல்களின் நல்ல repository-யாக மாறிவரும் இந்த நேரத்தில் இதை யாராவது கவனித்தால் தேவலை.
இசை ராஜ்குமார் என்பது முழுமையான உண்மையா?. இந்தப் பாடல் bombay படத்தின் "கண்ணாளனே" பாடலின் அப்பட்டமான காப்பி.
இந்த விபரங்களையும் சேர்த்து சொல்லுங்கள்.
hi nanba bombay padathukku munbae intha padam vanthu vittathu..........
Post a Comment