Wednesday, May 5, 2010

முத்து மணி மாலை



முத்து மணி மாலை
உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட
வெட்கத்திலே சேலை
கொஞ்சம் விட்டு சிட்டு போராட
உள்ளத்திலே நீ தானே
உத்தமி உன் பேர் தானே
ஒரு நந்தவன பூ தானே
புது சந்தனமும் நீ தானே
(முத்து..)

கொலுசு தான் மௌனமாகுமா
மனசு தான் பேசுமா
மேகம் தான் நிலவு மூடுமா
மவுசு தான் குறையுமா
நேசப்பட்டு வந்த பாச கோடிக்கு
காசி பட்டு சொந்தமாகாதே
வாக்குப்பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே
தாழம் பூவில் வீசும் காத்திலா
பாசம் தேடி மாமா வா
(முத்து..)

காலிலே போட்ட மிஞ்சி தான்
காதுல பேசுதே
கழுத்துல போட்ட தாலிதான்
காவியம் பாசுதே
நெத்திச்சுட்டி ஆடும் உச்சந்தலையில்
பொட்டு வெச்சதாரு நாந்தானே
அத்தி மரப்பூவும் அச்சப்படுமா
பக்கத்துணையாரு நீதானே
ஆசை பேச்சுல பாதி மூச்சிலே
லேசா தேகம் சூடேர
(முத்து..)

படம்: சின்ன கவுண்டர்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், P சுசீலா

2 Comments:

ஐயப்பன் said...

நல்ல பாடல், பதிவிற்கு நன்றிகள்.

சீனு said...

//நெற்றிச்சுட்டி ஆடும் உச்சந்தலையில்//

நெத்திச்சுட்டி

Last 25 songs posted in Thenkinnam