Monday, May 10, 2010

ஏதோ ஒன்று ஏதோ ஒன்று



ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்

ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்
உல்லாஹீ உல்லாஹீ உல்லாஹீ லாஹீ
உல்லாஹீ உல்லாஹீ லாஹீ
ஒரு ஆசை மனைவிப்போல் போதும்
அதை மட்டும் நீ தந்தால் போதும்
(ஏதோ..)

நல்ல மரம் உன் போல் கிடையாது
நன்றி சொல்ல வார்த்தை எனக்கேது
ஒரு தாயே நீ உன் சேய் நான்
இந்த உறவுக்கு பிரிவேது

தாய்மடியில் சேய்தான் வரலாமா
தள்ளி நின்று துன்பம் தரலாமா
உன்னை கொஞ்ச மனம் கெஞ்ச
என்னை தனியில் விடலாமா

குழந்தையும் குமரியின் ராயாச்சா
கொஞ்சிடும் பருவம் போயாச்சா
மனம் போலே மகள் வாழ
நீ வாழ்த்தும் தாய் ஆச்சா
(ஏதோ..)

வெண்ணிலவை பூவாய் வைப்பேனே
வானவில்லை உடையாய் தைப்பேனே
உனக்காக ஏதும் செய்வேன்
நீ எனக்கென செய்வாயோ

இந்த ஒரு ஜென்மம் போதாது
ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது
அந்த தெய்வம் உன்னை காக்க
தினம் சொல்வேன் தவறாது

என்ன நான் கேட்பேன் தெரியாதா
இன்னும் என் மனம் புரியாதா
அட ராமா இவன் பாடு
இந்த பெண்மை அறியாதா
(உன் பாதம்..)

படம்: லேசா லேசா
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, ஃப்ராங்கோ, ஸ்ரீலேகா பார்த்தசாரதி

1 Comment:

ஐயப்பன் said...

இங்கும் நிறைய வார்த்தைகள் பிழையாக உள்ளது...

எனினும் நினைவுக்குரிய பதிவிற்கு நன்றிகள்.

Last 25 songs posted in Thenkinnam