Wednesday, May 12, 2010

சிறு பார்வையாலே கொய்தாய் என்னை



சிறு பார்வையாலே கொய்தாய் என்னை விழியே விழியே
தலை சாய்த்துக்கொள்ள வேண்டும் உந்தன் மடியே மடியே

சிறு பார்வையாலே கொய்தாய் என்னை விழியே விழியே
தலை சாய்த்துக்கொள்ள வேண்டும் உந்தன் மடியே மடியே
நீ தூரப்பச்சை என் நெடுநாள் இச்சை
ஒரு மாறுவேடம் பூண்டு வந்த மல்லிப்பூவே முல்லைத்தீவே

தும்பியாக மாறி உந்தன் வீடு வரவா
தூங்கும் உன்னை தொட்டு பார்த்து முத்தமிடவா
தூங்கும் உன்னை தொட்டு பார்த்து முத்தமிடவா
(சிறு பார்வையாலே..)

உதைக்கும் அலைகளிலே மிதக்கும் படகனவே
மறைக்கும் முகிலிடையே ஸ்ரீக்கும் முழு நிலவே
அடக்கம் தடுக்கிறதே அடக்கி பிடிக்கிறதே
நெருங்கி வருகையிலே நொருங்கி உடைகிறதே

உன் நெஞ்சில் இட்டு என்னை தாலாட்ட
என் கர்வம் எட்டி பார்க்கும் வாலாட்ட
நீ மண்ணில் உள்ள பெண்ணே இல்லை
என்னை தேடி வந்தாய் பாராட்ட
(சிறு பார்வையாலே..)

சிலிர்க்கும் ச்டிகளிலே துளிக்கும் முதல் இலையே
இனிக்கும் கரும்பினிலே கிடைக்கும் முதல் சுவையே
விழுந்தேன் இரவினிலே எழுந்தேண் கனவினிலே
கனவ்ல் நீ இருந்தால் மறந்தேன் வெளி வரவே

ஒரு ஜோடி தென்றல் போகுது முன்னாலே
அதை கால்கள் என்று பொய்கள் சொன்னாயே
நீ கொஞ்சும் போது கொல்லும் நஞ்சு
ஆனால் கூட அள்ளி உண்பேனே
(சிறு பார்வையாலே..)

படம்: பீமா
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக், ஹரிணி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam