இருவர் வாழும் உலகம் எது
காதல் வாழும் இதயம் அது
இருவர் போகும் பாதை எது
இதயம் போகும் பாதை அது
இதயம் பேசும் மொழியும் எது
மொழி ஏதும் இல்லாத மௌனம் அது
மொழி ஏதும் இல்லாத மௌனம் அது
(இருவர்..)
நேற்று வரைக்கும் இல்லாத ஏக்கம்
இன்று அல்லவோ அரங்கேறுதே
ம்ம்.. நெஞ்சில் இருக்கும் பொல்லாத மயக்கம்
திகட்டாத தேன் எதிர் பார்க்கிறேன்
கண்ணாடி முன்னாடி நீ வந்து நின்றால்
கை நீட்டி கொஞ்சாதோ கண்ணே
பின்னாடி நாணங்கள் தாளங்கள் போட்டு
உனை சேர கெஞ்சாதோ கண்ணே
ஓ பேரழகினால் போர் நடத்தினால்
காயங்கள் ஆகாமல் எனை தாக்கினாய்
(இருவர்..)
காதல் வந்து பந்தாடும் போது
கனவோடு இவன் அனு சேட்டைகள்
கண்கள் நாங்கும் கொண்டாடும் போது
கிளி கூட்டிலே புலி வேட்டைகள்
உனை தானே தாளாட்டும் பாட்டு ஒன்று உண்டு
என் இதய துடிப்போடு ஒன்று
அடங்காத மரம் போல
நீ சென்றும் பின்பும்
உன் நினைவு தூரல்கள் இங்கு
ஆடாமலே எனை ஆழ்கிறாய்
ஆதிக்கம் செய்யாமலே மடி சாய்கிறாய்
(இருவர்..)
படம்: ஆதி
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: கார்த்திக், கல்யாணி
வரிகள்: பா. விஜய்
Wednesday, May 19, 2010
இருவர் வாழும் உலகம் எது
பதிந்தவர் MyFriend @ 1:04 AM
வகை 2000's, கல்யாணி, கார்த்திக், பா. விஜய், வித்யாசாகர்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment