Saturday, October 23, 2010

இயற்கை என்னும் இளைய கன்னி


Get Your Own Hindi Songs Player at Music Plugin

இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
தாமரையாள் ஏன் சிரித்தாள்
தலைவனுக்கோ தூது விட்டாள்

இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

தலையை விரித்துத் தென்னை போராடுதோ
எதனை நினைத்து இளநீராடுதோ
கன்னி உன்னைக் கண்டதாலோ
தன்னை எண்ணிக் கொண்டதாலோ

இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ
இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ
கட்டிக்கொண்ட கள்வன் யாரோ
கள்வனுக்கும் என்ன பேரோ

இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

மலையைத் தழுவிக் கொள்ளும் நீரோட்டமே
கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே
மஞ்சள் வெய்யில் நேரம் தானே
மஞ்சம் ஒன்று போடலாமே

தலையைத் தடவிச் செல்லும் காற்றோட்டமே
காலை மறைத்துச் செல்லும் ஆற்றோட்டமே
இன்னும் கொஞ்சம் நேரம் தானே
அந்திப் பட்டு பேசலாமே

இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
ஹ ஹ ஹா லலல ல் லல்ல லல்ல ஹ ஹ ஹ…

படம்: சாந்தி நிலையம்
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்: P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

4 Comments:

Arun Kumar N said...

ஹலோ மை ஃபிரண்ட் மிக்க நன்றி இந்த பாடல் பதிவிற்கு...

ஆனால்.. உங்களுக்கு நம் பாலுஜியின் மீது என்ன கோபம்...

இந்த பாடல் பாலுஜியின் வாழ்கையில் மட்டுமல்ல நம் அணைவரது வாழ்கையிலிருந்தும் நீங்காத பாடல்...

பாடியவர்கள் பட்டியலில் திரு.S.P.பாலசுப்பிரமணியம் அவர்களின் பயரையும் இணக்கவும்

இந்த பாடலில் பாலுஜியின் குரலில் என்ன ஒரு இளமை... அந்த இளமை இன்னும் அவர் குரலில் இருப்பது ஒரு அதிசயமே..
இந்த பாடலை அவர் அப்பொழுது எப்படி பாடினாரோ அதே போல் இன்றும் பல இசைக்கச்சேரியில் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்..


வாழ்துக்களுடன்
மதுரை அருண் குமார்.

சினிமா - 4D ஹிந்தி இசையமைப்பாளர்கள் said...

மதுரை அருண்குமார் 2010 இலேயே சுட்டிக்காட்டியும்
திருத்தம் மேற்கொள்ளப் படவில்லை. ஏனோ?

P JAYARAMAN said...

பதினொரு வருடங்களாகியும் திருத்தம் செய்யவில்லை என்றால் இந்த blog உயிர்ப்புடன் இல்லை என்று பொருள்.

P JAYARAMAN said...

இன்று (05-08-2021) வரை திருத்தவில்லை!

Last 25 songs posted in Thenkinnam