Monday, December 31, 2007
163. இளமை இதோ இதோ
பதிந்தவர் கப்பி | Kappi @ 11:58 PM 4 பின்னூட்டங்கள்
வகை 1980's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா
162. உன்னைத் தொட்ட தென்றல்

உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளி தள்ளி போவதென்ன நீதி
பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசி போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா..
(உன்னைத் தொட்ட..)
தலைவி உந்தன் கண் பார்க்கும் பொழுதே
தலைப்பு செய்தி தந்தாயே
தலைப்பு செய்தி புரியாமல் தவித்தேன்
தலைப்பை கையில் தந்தாயே
உறங்கும் போதும் உந்தன் பெயரை
சொல்லிப் பார்க்கிறேன்
உன்னை கண்டு பேசும்போதும்
உச்சி வேர்க்கிறேன்
இந்த சுந்தர வார்த்தைகள் தந்தது யாரடி
உன்னைக் கேக்கிறேன்
(உன்னைத் தொட்ட..)
உன்னை எண்ணி எண்ணி நீ மெலிய
உருகி உருகி நூலானேன்
உன்னை கண்டு ஓர் வார்த்தை மொழிய
உடைந்து உடைந்து தூளானேன்
பார்க்க வந்த சேதி மட்டும் சொன்ன முல்லையே
பருவம் வந்த தேதி மட்டும் சொல்லவில்லையே
நீ பார்வையும் காதலும் பழக்கத்தின்
கோர்தலும் சொல்லவில்லையே
(உன்னைத் தொட்ட..)
படம்: தலைவாசல்
இசை: பாலபாரதி
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்,
விரும்பி கேட்டவர்: சச்சின் கோப்ஸ்
பதிந்தவர் MyFriend @ 4:53 AM 2 பின்னூட்டங்கள்
வகை 1990's, SP பாலசுப்ரமணியம், பாலபாரதி
161. வைகை நதியோரம்...
எண்ணம் எனும் ஏட்டில்
நான் பாடும் பாட்டில்
நீ வாழ்கிறாய்..
நித்தம் வரும் ஊஞ்..
ஐயய்யே.. கொஞ்சம் இருங்க
கொஞ்சம் இருங்க..
என்னாங்க பாடுறீங்க?
அப்படியில்லை..
நான் பாடுறேன் பாருங்க..
வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
இது அன்பின் வேதம்
அதை நாளும் ஓதும்
இது அன்பின் வேதம் நாளும் ஓதும் காத்தே
வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
ஆமா..
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
கரெக்ட்டு.. இது கரெக்ட்டு..
மாலை மழை மேகம் தன்னை மெதுவாய் அழைத்தேன்
துணை வர வேண்டுமென்று தூது சொல்லத்தான்
மூண்டு வரும் மோகம் தன்னை மடலாய் வரைந்தேன்
நினைவுகள் பூத்த வண்ணம் நானும் மெல்லத்தான்
ஓர் சோலை புஷ்பம்தான்
திரு கோயில் சிற்பம்தான்
(ஓர் சோலை..)
இதன் ராகம் தாளம் பாவம் அன்பை கூறும்
(வைகை நதியோரம்..)
யாரின் மனம் யாருக்கென்று இறைவன் வகுத்தான்
இரு மனம் சேர்வதிங்கு தேவன் சொல்லித்தான்
பூஜைக்கிது ஏற்றதென்று மலரை படைத்தான்
தலைவனும் மாலையென்று சூடிக்கொள்ளத்தான்
ஓர் நெஞ்சின் ராகம்தான்
விழி பாடும் நேரம்தான்
(ஓர் நெஞ்சின்..)
இது அன்பின் வேதம் நாளும் ஓதும் காற்றே
(வைகை நதியோரம்..)
படம்: ரிக்ஷா மாமா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
விரும்பி கேட்டவர்: அனுசுயா
பதிந்தவர் MyFriend @ 2:35 AM 1 பின்னூட்டங்கள்
வகை 1990's, S ஜானகி, SP பாலசுப்ரமணியம், இளையராஜா
Sunday, December 30, 2007
160. உயிரிலே எனது உயிரிலே
உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
உணர்கிறேன் எனது உணர்விலே
அணுவென உடைந்து சிதறினாய்
ஏன் என்னை மறுத்துப் போகிறாய்
கானல் நீரோடு சேர்கிறாய்
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை
திருப்பி நான் வாங்க மாட்டேனே....
(உயிரிலே..........)
அருகினில் உள்ள தூரமே
அலைகடல் தீண்டும் வானமே
நேசிக்க நெஞ்சம் ரெண்டு
போதாதா போதாதா நீ சொல்லு
நேசமும் ரெண்டாம் முறை
வாராதா கூடாதா நீ சொல்லு
இது நடந்திடக் கூடுமா
இரு துருவங்கள் சேருமா
உச்சரித்தே நீயும் விலக
தத்தளித்தே நானும் மருக
என்ன செய்வேனோ...?
(உயிரிலே...........)
ஏதோ ஒன்று என்னைத் தடுக்குதே
பெண்தானே நீ என்று முறைக்குதே
என்னுள்ளே காயங்கள்
ஆறாமல் தீராமல் நின்றேனே
விசிறியாய் உன் கைகள்
வந்தாலும் வாங்காமல் சென்றேனே
வா வந்து என்னை சேர்ந்திடு
என் தோள்களில் தேய்ந்திடு
சொல்ல வந்தேன்
சொல்லி முடித்தேன்
வரும் திசை பார்த்து இருப்பேன்
நாட்கள் போனாலும்.......
(உயிரிலே..........)
படம்: வேட்டையாடு விளையாடு
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: மகாலட்சுமி, ஸ்ரீநிவாஸ்
விரும்பி கேட்டவர்: உதயா
பதிந்தவர் MyFriend @ 4:05 PM 2 பின்னூட்டங்கள்
159. ஏனோ கண்கள்...
[பெண்]
ஏனோ கண்கள் உன் முகமே கேட்கிறதே
ஏனோ கால்கள் உன் இடமே வருகிறதே
ஆசையோடு பேச வந்த வார்த்தை இன்று
விடுமுறை தருகிறதே
நூறு கோடி மான்கள் ஒடும் வேகம்
போல இருதயம் துடிக்கிறதே
[ஆண்]
அடி நாக்கில மூக்கில பேச்சில மூச்சில
உனக்கு இது புரியாதா ?
உன் போக்குல நாய்க்குல
நடையில உடையில
மயங்கிறேன் தெரியாதா?
அடி நிக்கிற நெளியுற
நொறுங்குற நெருங்குற
நெருப்புன்னு தெரியாதா?
தினம் சொக்குற சொறுகுற விக்கிற விலக்குற
விடுதலை கிடையாதா?
அடங்காதாது காமம் அதை நீயும் அடக்காதே
அடி பெண்ணே சாதம் உப்பின்றி ருசிக்காதே
[பெண்]
ஏதோ ஒன்று என் உள்ளே நடக்கிறதே
ஏனோ நெஞ்சம் மின்மினியாய் பறக்கிறதே
நேற்று பார்த்த பூமி வேறு
இன்று வேறு நிறம் என தெரிகிறதே
மூச்சை போல காதல் வந்து
உள்ளம் எங்கும் விரைவது புரிகிறதே
[ஆண்]
அடி நாக்கில முக்கில பேச்சில மூச்சில
உனக்கு இது புரியாதா ?
உன் போக்குல நாய்க்கில
நடையில உடையில
மயங்கிறேன் தெரியாதா?
அடி நிக்கிற நெளியுற
நொறுங்குற நெருங்குற
நெருப்புன்னு தெரியாதா?
தினம் சொக்குற சொறுகுற விக்குற விலகுற
விடுதலை கிடையாதா?
[இசை]
[பெண்]
கண்ணாடியை பார்த்தே காலம்
தான் கழிகிறதா?
உன் விட்டில் தினமும்
இது போல் தான் நடக்கிறதா?
இந்த தினசரி மாற்றம் காதலினாலே
இரவுகள் எல்லாமே வேகமாய் விடிகிறதா?
[ஆண்]
வயதோடு ஒரு பூதம் வன்முறையில் இறங்கிடுதா?
ஏமாந்திடும் நேரம் தன் வேலையை தொடங்கிடுதா?
பார்த்திடும் போது பழமுதிர் சோலை
அட பருகிட சொல்கிறது
வா வா வா வா வா வா.........வா
வா வா வா .........
[இசை..]
[பெண்]
மெதுவாய் ஒரு மௌனம்
மனதோடு பேசிடுதோ?
பொதுவாய் ஒரு நாணம்
புன்னகையை வீசிடுதோ?
தடு மாறிடும் நேரம்
வானிலை மாற்றம்
காற்றிலே நடைந்தே குளிர் காய்ச்சல் அடிக்கிறதா
[ஆண்]
புரியாதோரு வேட்கை பூ போல மலர்கிறதா
பூவொன்று தொட்டால் தீ போல சுடுகிறதா
மூடிய பூவுக்கு பூஜைகள் இல்லை...
சூடிட வேண்டும்
வா வா வா வா வா வா ......... வா
[பெண்]
ஏனோ கண்கள் உன் முகமே கேட்கிறதே
ஏனோ கால்கள் உன் இடமே வருகிறதே
ஆசையோடு பேச வந்த வார்த்தை இன்று
விடுமுறை தருகிறதே
நூறு கோடி மான்கள் ஒடும் வேகம்
போல இருதயம் துடிக்கிறதே
[ஆண்]
அடி நாக்குல மூக்குல பேச்சில மூச்சில
உனக்கு இது புரியாதா ?
உன் போக்கில நாய்க்கில
நடையில உடையில
மயங்கிறேன் தெரியாதா?
அடி நிக்கிற நெளியுற
நொறுங்குற நெருங்குற
நெருப்புன்னு தெரியாதா?
தினம் சொக்குற சொறுகுற விக்குற விலகுற
விடுதலை கிடையாதா?
அடங்காதது காமம் அதை நீயும் அடக்காதே
அடி பெண்ணே சாதம் உப்பின்றி ருசிக்காதே
படம்: கள்வனின் காதலி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, சாதனா சர்கம்
விரும்பி கேட்டவர்: உதயா
பதிந்தவர் MyFriend @ 3:44 PM 1 பின்னூட்டங்கள்
Saturday, December 29, 2007
158. பூங்காற்றிலே உன் சுவாசத்தை...
ஓ.. கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை..
(கண்ணில்..)
(கண்ணில்..)
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடி வா..
(பூங்காற்றிலே..)
காற்றின் அலை வரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும்
கண்ணீர் வழிக்கின்றதா
நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகின்றதா
காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதைச் சந்தனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடி வா..
(பூங்காற்றிலே..)
(கண்ணில்..)
(கண்ணில்..)
வானம் எங்கும் உன் விம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் முன்னே
ஓடோடி வா..
(பூங்காற்றிலே..)
படம்: உயிரே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி மேனன், ஸ்வர்ணலதா
பாடலாசிரியர்: வைரமுத்து
விரும்பி கேட்டவர்: ரசிகன்
பதிந்தவர் MyFriend @ 8:02 PM 4 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், உன்னி மேனன், மணிரத்னம், ஸ்வர்ணலதா
157. மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு...
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று... ஆ...
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே
நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானே
ஆத்தோரம் கொஞ்சிடும் தென்னஞ்சிட்டுத்தான்
அங்கே வா பேசலாம் அச்சம் விட்டுத்தான்
இளஞ்சிட்டு உனை விட்டு
இனி எங்கும் போகாது
இரு உள்ளம் புது வெள்ளம்
அணை போட்டால் தாங்காது... ஆ...
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
இராத்தூக்கம் ஏதம்மா கண்ணே உன்னாலே
ராசாவே நானுந்தான் கண்கள் மூடல்லே
அன்பே உன் ஞாபகம் வாழும் என்னோடு
ஒன்றல்ல ஆயிரம் ஜென்மம் உன்னோடு
ஒரு சொந்தம் ஒரு பந்தம் இரு ஜீவன் ஒன்றாகும்
இளங் கன்னி உனை எண்ணி உயிர் காதல் பண் பாடும்
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று
படம்: அண்ணா நகர் முதல் தெரு
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா
பதிந்தவர் MyFriend @ 10:00 AM 5 பின்னூட்டங்கள்
வகை 1980's, SP பாலசுப்ரமணியம், சந்திரபோஸ், சித்ரா
Friday, December 28, 2007
156. வா வா காதல் துஷ்யந்தா...
பெ: வா வா காதல் துஷ்யந்தா உந்தன் கண்கள் கற்கண்டா
தித்திக் தித்திக்கின்றதே நெஞ்சம் ரோஜா கல்கண்டா
(வா வா..)
பல முத்தம் சேர்த்து வைத்தேன்
எடை மொத்தம் கூடி போனேன்
ஏய் மன்மதா இது நல்லதா
நான் காயம் பட்ட மானாய் ஆனேனே
(வா வா..)
ஆ: உன் அழகால் என்ன வியர்க்க வைத்தாய்
என் ஜன்னல்கள் திறக்கின்றதே
பெ: உன்னை ரசித்தேன் அந்த நிமிஷம் முதல்
என் கடிகாரம் நிற்கின்றது
ஆ: முதன் முதலாய் பெண்ணின் வாசம் என் மூச்சில் நுழைகின்றதே
பெ: என் விழியின் பூ போல் இன்று வெளிநாடப்பு செய்கின்றதே
ஆ: கண்ணில் சரிகம பாடுகிறாய் நெஞ்சில் ததிமி ஆடுகிறாய்
எனக்கு இதுதான் நடன விழா இனி தினமும் மதன விழா
பெ: (வா வா..)
பெ: நீ குளித்தாய் நான் நனைந்து விட்டேன்
இந்த சேர்ப்பு இங்க யார் தந்தது
ஆ: நீ உறங்க நான் கனவு கண்சேன்
அந்த கனவிங்கு யார் தந்தது
பெ: அணில் கடிக்கும் பழத்தை போலே
நீ என்னை பார்க்காதே
ஆ: அணலருகில் சோளம் போலே
நீ என்னை வாட்டாதே
பெ: இந்த ஆசை வெட்கம் எல்லாம்
எங்கு இருந்தது தெரியவில்லை
உன்னை கண்டதும் வருகிறதே
அந்த காரணம் புரியவில்லை
(வா வா..)
ஆ: வா வா காதல் சகுந்தலா உந்தன் கண்கள் கல்கண்டா
தித்திக் தித்திக்கின்றதே நெஞ்சம் ரோஜா குல்கந்தா..
படம்: எங்கள் அண்ணா
இசை: தேவா
பாடியவர்கள்: சுஜாதா, கார்த்திக்
பதிந்தவர் MyFriend @ 11:01 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, கார்த்திக், சுஜாதா, தேவா
155. முதல் நாள் இன்று
பதிந்தவர் ஜே கே | J K @ 10:53 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, பா. விஜய், ஹாரிஸ் ஜெயராஜ்
Thursday, December 27, 2007
154. செந்தாழம் பூவில் வந்தாடும்
பதிந்தவர் ஜே கே | J K @ 9:15 PM 2 பின்னூட்டங்கள்
வகை 1970's, KJ ஜேசுதாஸ், இளையராஜா, கண்ணதாசன்
152. ஜூன் ஜூலை மாதம் பூக்கும் பூ
ஜூன் ஜூலை மாதம் பூக்கும் பூ
அதன் பேர் நட்பு
நெடுஞ்சாலை ஓரம் பூக்கும் பூ
அதுதான் நம் நட்பு
நெஞ்சோடு பூக்கும் ஞாபக பூ
அதன் பேர் நட்பு
பூமியில் உள்ள பூவெல்லாம்
ஒரு நாளிலே
மண்ணில் உதிரும் பூ
(ஜூன் ஜூலை..)
வாழ்க்கையில் நம் வாழ்க்கையில்
என்றும் பூக்குமே
அது தான் நட்பு
ஊர் கூடி வந்தாலும் எதிர்க்குமே
உன் விழி துடிக்கையில் துடிக்குமே
உன் சோகம் இறக்கி வைக்க
இறைவன் அனுப்பி வைத்த
தோள்கள் தோழமையில் இருக்குமே..
கல்லூரி என்ன கொடுத்தது
கண் மூடி நினைத்தால் புரியுது
வெறும் கல்வி மட்டும் இல்லை
கனவு மட்டும் இல்லை
கண்கள் கலங்க வைக்கும் உறவுகள்..
எத்தனையோ குறும்புகள் செய்தோம்
எத்தனையோ கனவுகள் செய்தோம்
எத்தனையோ காயங்கள் கண்டோம் தோழனே..
எத்தனையோ சண்டைகள் பார்த்தோம்
எத்தனையோ வம்புகள் செய்தோம்
எத்தனையோ பாடங்கள் கற்றோம்
அத்தனையும் நாங்கள்தான்
நெஞ்சுக்குள் என்றென்றும் இருக்கும்..
(ஜூன் ஜூலை..)
விதைக்குள் உறங்கும் மரங்களை
காற்றும் மழையும் எழுப்புமே..
உனக்குள் ஒளிந்திருக்கும் உனது திறமைகளை
நட்பு இனம் கண்டு உயர்த்துமே..
நாளைக்கு நம்முடைய பெயர்களை
மரமும் செடியும் உறைக்குமே..
எந்த வகுப்பின் மேஜையிலும்
நடந்த பாதையிலும்
நமது சிரிப்பொலிகள் இருக்குமே...
விடுமுறைகள் வந்திடும் போதும்
வீட்டுக்குள் இன்பங்கள் ஏது
மறுபடியும் இங்கே வர தோன்றுமே...
தனிமையில சில நொடிகள் போக
வருமையிலே சில நொடிகள் போக
எல்லாரும் ஒன்றாக சேர
மனசுக்குள் ஆசைகள் மோத
கல்லூரி நம்மை அழைக்கும்...
படம்: கல்லூரி
இசை: ஜோஷுவா ஸ்ரீதர்
பாடியவர்கள்: கிரீஷ், சுசித்ரா ராமன்
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்
பதிந்தவர் MyFriend @ 8:32 AM 2 பின்னூட்டங்கள்
வகை 2000's, க்ரீஷ், சுசித்ரா ராமன், ஜோஷுவா ஸ்ரீதர்
151. காதல் வந்தால் சொல்லி அனுப்பு...
Babe... Tell me you love me
I hope I hear it
While I'm alive
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்
சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்டவெளியிலே வாடுதடி
(சுட்ட...)
கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டம் கூடுதடி..
(காதல்..)
உயிரைத் தவிர சொந்தம் இல்லையே
காதலிக்கும் முன்பு
இந்த உலகே எந்தன் சொந்தமானதே
காதல் வந்த பின்பு
Babe.. Tell me you love me
It's never late.. Dont hesistate
சாவை அழைத்து கடிதம் போட்டேன்
காதலிக்கும் முன்பு
ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன்
காதல் வந்த பின்பு
உன்னால் என் கடலலை
உறங்கவே இல்லை
உன்னால் என் நிலவுக்கு
உடல் நலமில்லை
கடல் துயில் கொள்வதும்
நிலா குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும்
உன் சொல்லில் உள்ளதடி..
உன் இறூக்கம்தான்
என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி
(காதல்..)
என் கண்ணீர்..
பிறந்த மண்ணை அள்ளி தின்றேன்
உன்னை காணும் முன்பு
நீ நடந்த மண்ணை அள்ளித் தின்றேன்
உன்னைக் கண்ட பின்பு
அன்னை தந்தை கண்டதில்லை நன்
கண் திறந்த பின்பு
என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன்
உன்னை கண்ட பின்பு
பெண்ணே என் பயணமோ
தொடங்கவே இல்லை
அதற்க்குள் அது முடிவதா
விளங்கவே இல்லை
நான் கரையாவதும்
இல்லை நுரையாவதும்
வளர் பிறையாவதும்
உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம்தான்
என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி..
(காதல்..)
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
சொல்லி அனுப்பு சொல்லி அனுப்பு
படம்: இயற்கை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: திப்பு
பதிந்தவர் MyFriend @ 6:11 AM 1 பின்னூட்டங்கள்
வகை 2000's, திப்பு, வித்யாசாகர்
Wednesday, December 26, 2007
149.நினைத்து நினைத்து....
பதிந்தவர் இராம்/Raam @ 4:15 PM 3 பின்னூட்டங்கள்
வகை 2000's, SP பாலசுப்ரமணியம், நா. முத்துக்குமார், யுவன் சங்கர் ராஜா, ஷ்ரேயா கோஷல்
148. சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா...
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லே பகலா எனக்கும் மயக்கம்
நெஞ்சில் என்னவோ நெனச்சேன்
நானும்தான் நெனச்சேன்
ஞாபகம் வரல
யோசிச்சா தெரியும்
யோசன வரல
தூங்கினா விளங்கும்
தூக்கம்தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு
(சங்கீத..)
எந்தெந்த இடங்கள் தொட்டால் ஸ்வரங்கள்
துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லித்தா
சொர்க்கத்தில் இருந்து யாரீ எழுதும்
காதல் கடிதங்கள் இன்றுதான் வந்தது
சொர்க்கம் மண்ணிலே பிறக்க
நாயகன் ஒருவன்
நாயகி ஒருத்தி
தேன் மழை பொழிய
பூவுடல் நனைய
காமனின் சபையில்
காதலின் சுவையில்
பாடிடும் கவிதை சுகம்தான்
(சங்கீத..)
படம்: அழகன்
இசை: மரகதமணி
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சந்தியா
பதிந்தவர் MyFriend @ 12:35 PM 3 பின்னூட்டங்கள்
வகை 1990's, SP பாலசுப்ரமணியம், சந்தியா, மரகதமணி
147. மழை தருமோ என் மேகம்...
மழை தருமோ என் மேகம்…
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்…
தோகைக்கு தூதுவன் யாரோ… தோள் தொட்ட தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன… பொன்வண்டே….
(மழை தருமோ)
ஆஆஅஹஹா…ஒஹொஹோ….ம்ம்ஹ்ஹ்ஹூம்…
தேனிருக்கும் வண்ண மலர் நேராடுது…
தேனீயில் ஒன்று இங்கு போராடுது… (தேனிருக்கும்)
அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்தக் கோலம்
தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்…
தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்…
தளிர்மேனி அன்னப்பேடு எண்ணம் மாறுமா…
(மழை தருமோ)
ஆஆஅஹஹா…ஒஹொஹோ….ம்ம்ஹ்ஹ்ஹூம்…
கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள்…
காதலுக்குள் என்று அவள் படியேறுவாள்..
சிரிக்கின்ற தங்க சிற்பம் தேரில் வராதோ…
சிலை வண்ணம் அங்கே… கலை உள்ளம் இங்கே..
நிலை தன்னை சொல்ல தூதுவன் எங்கே…
பிழைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடி வா…
(மழை தருமோ)
ஆஆஅஹஹா…ஒஹொஹோ….ம்ம்ஹ்ஹ்ஹூம்…
விரும்பி கேட்டவர்: இளா
படம்: மனிதரில் இத்தனை நிறங்களா
இசை: சியாம்
பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம், S.P.சைலஜா
பதிந்தவர் ஜே கே | J K @ 11:30 AM 5 பின்னூட்டங்கள்
வகை 1970's, SP சைலஜா, SP பாலசுப்ரமணியம்
Tuesday, December 25, 2007
146. தங்கச் சங்கிலி மின்னும்...
பெண்: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோழில் துஞ்சியதோ...
[தங்கச் சங்கிலி...]
மலர்மாலை தலையணையாய்
சுகமே பொதுவாய்
ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி
[தங்கச் சங்கிலி...]
ஆண்: காவல் நூறு மீறி
காதல் செய்யும் தேவி
உன் சேலையில் பூ வேலைகள்
உன் மேனியில் பூஞ்சோலைகள்
பெண்: அந்திப் பூ விரியும்
அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும்
இவளின் கணவு கனியும் வரையில்
விடியாது திருமகள் இரவுகள்
ஆண்: [தங்கச் சங்கிலி...]
பெண்: ஆடும் பொம்மை மீது
ஜாடை சொன்ன மாது
ஆண்: லாலா லாலலாலா லால லால லாலா
பெண்: கண்ணோடு தான் போராடினாள்
வேர்வைகளின் நீராடினாள்
ஆண்: ராராரரா ராராரரா ராராரரா ராராரரா
அன்பே ஆடை கொடு
எனை அனுதினம் அள்ளி சூடிவிடு
பெண்: இதழில் இதழால் கடிதம் எழுது
ஒரு பேதை உறங்கிட மடி கொடு
ஆண்: [தங்கச் சங்கிலி...]
பெண்: [மலர்மாலை...]
ஆண் & பெண்: [தங்கச் சங்கிலி...]
விரும்பி கேட்டவர்: நாமக்கல் சிபி
படம்: தூறல் நின்னு போச்சு
இசை: இளையராஜா
பாடியவர்: s.J.ஜானகி, மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர்: வைரமுத்து
பதிந்தவர் ஜே கே | J K @ 10:55 AM 4 பின்னூட்டங்கள்
வகை 1980's, S ஜானகி, இளையராஜா, மலேசியா வாசுதேவன், வைரமுத்து
145. அன்பே அன்பே என் கண்ணே நீதானே...
மூச்சுக் காற்றாய் நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே
(அன்பே..)
காதல் ஒரு பரிட்சைதானே
எழுதிடவே நானும் வந்தேன்
இன்னொருவர் பேரில்தானே
தேர்வெழுதி சென்றேனே
ரயில் பயணம்தானே காதல்
நானும் அதில் பயணம் செய்தேன்
இறங்கச் சொல்லி காதல் கேட்க
நான் இறங்கி சென்றேனே
(அன்பே..)
சிலுவை சுமந்தானே
அவன் இந்தக் காதலில் விழுந்திருந்தால்
சிலுவை வலியென்ன
வாழ்க்கையில் வாய்வழி சொல்வானே
இதயம் ஒருநாள் இரண்டாய் உடையும்
அன்று வந்து பார் உன் விம்பம் தெரியும்
கண்ணீரிலே கடல் செய்து வைத்தேன்
நீ வந்துதான் நீராடிப்போ..
(அன்பே..)
(காதல் ஒரு..)
(அன்பே..)
முள்ளாய் நீ வந்தால்
கண்கள் திறந்து காத்திருப்பேன்
தீயாய் நீ வந்தால்
என்னையும் திரியாய் நான் தருவேன்
கொஞ்சம் கொஞ்சமாய் ஏன் என்னை கொன்றாய்
கருணைக்கொலைதான் செய்யாமல் சென்றாய்
மல்ர்மாலையாய் மாறிடவே நினைத்தேன்
மலர் வளையமாய் நான் மாறினேன்
(அன்பே..)
படம்: உள்ளம் கொள்ளை போகுதே
இசை: கார்த்திக் ராஜா
பாடியவர்: உன்னி கிருஷ்ணன்
பதிந்தவர் MyFriend @ 9:16 AM 1 பின்னூட்டங்கள்
Monday, December 24, 2007
144.அன்பென்ற மழையிலே...
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே
விண்மீங்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை சென்னீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே
போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே புகழ்மைந்தன் தோன்றினானே
(புகழ்மைந்தன் தோன்றினானே)
கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும் கருணைமகன் தோன்றினானே
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும் ஒளியாகத் தோன்றினானே
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே புவிராஜன் தோன்றினானே
(அன்பென்ற மழையிலே)
பதிந்தவர் இம்சை அரசி @ 10:52 PM 1 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், அனுராதா ஸ்ரீராம்
143. கடவுள் தந்த அழகிய வாழ்வு
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுவதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு
கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
என்றும் வாழணும் நூறு ஆண்டு
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்க்கையை அன்பில்
வாழ்ந்து விடை பெறுவோம்
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுவதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு
பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கொன்றும் குறைகள் கிடையாது
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ....... ம்..ம்ம்..
எதுவரை வாழ்க்கை அழைகிறதோ
அதுவரை நாமும் சென்றிடுவோம்
விடை பெறும் நேரம் வரும்போதும்
சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்
பரவசம் இந்த பரவசம்
என்னாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே
(கடவுள் தந்த அழகிய...)
நாமெல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது
மேகங்கள் மேகங்கள் இடங்களை பார்த்து பொழியாது
கோடையில் இன்று இலை உதிரும்
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தான் நீ கேளடீ...
(கடவுள் தந்த அழகிய ...)
படம்: மாயாவி
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: SPB சரண், கல்பனா
பாடலாரியர்: பழனி பாரதி
விரும்பி கேட்டவர்: ஆயில்யன்
பதிந்தவர் MyFriend @ 8:30 PM 4 பின்னூட்டங்கள்
வகை 2000's, SPB சரண், கல்பனா, தேவிஸ்ரீ பிரசாத்
142. முத்து மணி சுடரே...
ரஜினி அங்கிள்............
முத்து மணி சுடரே வா...
முல்லை மலர் சரமே வா...
முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுரங்க நேரமானதே...
கண்ணே என் பொண்ணே தாலேலோ
[முத்து மணி...]
ம்ஹ்ஹூஊம் நான் தூன்க மாட்டேன்...
அங்கிள் நான் ஒளிஞ்சுக்கிறேன்.. என்ன புடிங்க பாக்கலாம்
ஆயிரம் பூவோடு பாடிடும் வண்டே...
ஆசைகள் பூத்தாடும் தேன்மொழி எங்கே...
அழகாய் நாள் தோறும்
புதுமை கொண்டாடும்
மலரே நீ பேசு...அவளைக் கண்டாயோ...
தானாக தள்ளாடும் பூவண்ணமே...
தானாக தள்ளாடும் பூவண்ணமே...
உடைகள் அணிந்து கனவு சுமந்து
நடந்த நிலவை நீயும் தேடுவாய்...
ரஜினி அங்கிள்...நான் இங்க இருக்கேன்...இங்க...இங்க...
முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுரங்க நேரமானதே...
கண்ணே என் பொண்ணே தாலேலோ
காற்றினில் தேர் போல ஓடிடும் மானே...
தன் வழி போனாளே...கனிமொழி எங்கே...
அலை போல் பாய்ந்தோடும் முயலே நீ சொல்லு
தனியே பார்த்தாயோ...அவளும் வந்தாளோ...
நான் தேடும் பொன்மாலை கண்டேனடி...
நான் தேடும் பொன்மாலை கண்டேனடி...
அசைந்து குலுங்கி சிரித்து சிரித்து
ஒளிந்த பதுமை நேரில் வந்தது...
[முத்து மணி...]
படம்: அன்புள்ள ரஜினிகாந்த்
இசை: இளையராஜா
பாடியவர்: K.J. யேசுதாஸ்
பதிந்தவர் ஜே கே | J K @ 3:03 PM 1 பின்னூட்டங்கள்
வகை 1980's, KJ ஜேசுதாஸ், இளையராஜா
141. யார் வந்து பூவுக்குள் கிச்சு கிச்சு மூட்டியதோ
யார் வந்து பூவுக்குள் கிச்சு கிச்சு மூட்டியதோ
புன்னகை வெட்கம் புரிகிறதே
யார் வந்து மனசுக்குள் புகை வண்டி ஓட்டியதோ
பச்சை விளக்கு எறிகிறதே
வண்ணத்து பூச்சிகள் வானவில்லை சூடியதோ
வாலிப திறைகள் கிழிகின்றதே
அழகான மாற்றங்கள் ஆரம்பம்
யாரோடு யாரோ பூமியில் சேர்ந்திட கூடும்
திசை மாறும் போதும் தென்றலும் பூக்களை மோதும்
(யார் வந்து..)
முதல் முதல் ஒரு ஓலை வந்ததோ
உயிர் வரை அது ஊடல் செய்ததோ
(முதல்..)
ஆடை மறைவு ஓடை மீன்கள்
பரதம் தானுடுதோ
ஓடும் முகிலை தேடி பிடித்து
வானம் முகம் மூடுதோ
இதழோரம் ஏதேதோ வார்த்தைகள்
அலைப்போலே வந்து பாடுது காவடி சிந்து
இதழோரம் ஏதேதோ வார்த்தைகள்
அடிப்போட்டால் கூட ஆனந்த மௌனம் இன்று
(யார் வந்து..)
புது புது ஒரு யுத்தம் வந்ததோ
புயல் மழை இடி போலெ வந்ததோ
(புது..)
சிட்டுக்குருவி சிறகை வாங்கி
பறக்கத்தான் தோன்றுதோ
வெட்ட வெளியில் எட்டுப்போட்டு
ஓடத்தான் தோன்றுதோ
சந்தோச போர்க்களம் ஆரம்பம்
மழைக்கொட்டும் போதும் வானத்தை பார்த்திட தோன்றும்
சந்தோச போர்க்களம் ஆரம்பம்
மல்லிகை பூவில் ஆடைகள் தைத்திட தோன்றும்
(யார் வந்து..)
படம்: கண்டேன் சீதையை
இசை: உதயா
பாடியவர்: உன்னி கிருஷ்ணன்
பதிந்தவர் MyFriend @ 1:37 PM 2 பின்னூட்டங்கள்
வகை 1990's, உதயா, உன்னி கிருஷ்ணன்
140. நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு
நம் மனதை லேசானா காற்றில் மிதக்க விடும் பாடல் இது மறுமுறை கேட்டு மகிழுங்கள்.
படம்:ரட்சகன்
நடிகர்கள்: நாகர்ஜுனா, ஸுஸ்மிதாசென்
பாடகர்க:கே.ஜே.ஜேசுதாஸ், சாதானா சர்கம்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு
நினவினை கடந்துவிடு
நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு
நிஜங்களை துறந்துவிடு
கண்களை விற்றுத்தான் ஓவியமாஆஆ
தண்ணீரில் மீன்கள் தூங்குமாஆஆ
கண்ணீரில் காவல் காணுமா
நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு
நினவினை கடந்துவிடு
நெஞ்சே நெஞ்சே உறங்கிவிடு
நிஜங்களை துறந்துவிடு
பெண்ணே பெண்ணே உன் வளையல்
எனக்கொரு விளங்கல்லவோஓஓஓஒ
காற்றுக்கு சிறை என்னவோஓஓஓஒ
தன்மானத்தின் தலையை விற்று
காதலின் வாழ் வாங்கவோ
கண் மூடி நான் வாழவோ
உன்னை என்னி முள் விரித்து
படுக்கவும் பழகிக்கொண்டேன்
என்னில் யாவும் கல் எறிந்தால்
சிரிக்கவும் பழகிக்கொண்டேன்
உள்ளத்தை மறைத்தேன்
உயிர்வலி பொறுத்தேன் என்
சுயத்தை எதுவோ சுட்டதடி வந்தேன்
நெஞ்சே நெஞ்சே நெறுங்கிவிடு
நிகழ்ந்ததை மறந்துவிடு
நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்துவிடு
நிஜங்களில் கலந்துவிடு
கட்டி வைத்த காற்றே வந்துவிடு
கைகள் ரெண்டை ஏந்தினேன்
காதல் பிச்சை கேட்கிறேன் ம்ம்ம்ம்
நெஞ்சே நெஞ்சே..நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே
அன்பே அன்பே நீ பிரிந்தால்
கண்களில் மழை வருமே
காற்றினை கை விடுமே
விதை அழிந்து செடி வருமே
சிற்பிகள் உடைத்த பின்னே
முத்துக்கள் கைவருமே
காதல் ராஜா ஒன்றை கொடுத்தால்
என்னொன்றில் உயிர் வருமே
உன்னை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால்
காதலில் சுகம் வருமே
அஸ்தமனமெல்லாம் நிறந்தறம் அல்ல
மேற்கினில் விதைத்தால் கிழக்கினில் முளைக்கும்
நெஞ்சே நெஞ்சே நெறுங்கிவிடு
நிகழ்ந்ததை மறந்துவிடு
நெஞ்சே நெஞ்சே நெகிழ்ந்துவிடு
நிஜங்களில் கலந்துவிடு
கட்டி வைத்த காற்றே வந்துவிடு
கைகள் ரெண்டை ஏந்தினேன்
காதல் பிச்சை கேட்கிறேன் ம்ம்ம்ம்
நெஞ்சே நெஞ்சே..நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே
|
பதிந்தவர் Anonymous @ 1:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், KJ ஜேசுதாஸ்
Sunday, December 23, 2007
139. மழையின் துளியில் லயம் இருக்குது
மழையின் துளியில் லயம் இருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது
மாமா.. என் மாமா..
மலரின் இதழில் பனி விழுந்தது
மயங்கி மயங்கி மலர் எழுந்தது
மாமா.. என் மாமா
தூவானம் தூவும் அதில் ஏதேதோ கானம்
ஆராரோ பாடும் அதில் ஆனந்தம் கூடும்
(மழையின்..)
ஆகாயம் அங்கும் இங்கும் ஆயிரம் ஆயிரம் பூக்கோலம்
தாழ்வாரம் எங்கும் வண்ணம் தங்கம் மின்னும் மாக்கோலம்
(ஆகாயம்...)
பூவோடு பூங்காற்றும் பூபாலம் பாடாதோ
பெண்ணான என் உள்ளம் பூப்போல ஆடாதோ
பாசமெனும் கூட்டில் பல பாடம் பெறும் கிளிகள்
பாடி வரும் பாட்டில் பல பாவம் பெறும் மொழிகள்
நாதம் என்று கீதம் என்று சேர்ந்தது வழிகள்
(மழையின்..)
அன்பான நெஞ்சமெல்லாம் ஆண்டவன் வாழும் கோவிலது
யாரோடு யாரை கண்டு சங்கமமாகப்போகிறது
(அன்பான..)
எந்நாளும் சங்கீதம் நம்மோடு ஒன்றாகும்
எப்போதும் சந்தோஷம் நம்மோடு வந்தாடும்
வானம் எங்கும் பறந்து நான் தேடும் இளம் வயது
சோகங்களாய் மறந்து இது ராகம் தரும் மனது
சேர்ந்ததென்று பாடுதம்மா ஆனந்தம் எனது
(மழையின்..)
(மழையின்..)
படம்: சின்ன தம்பி பெரிய தம்பி
இசை: கங்கை அமரன்
பாடியவர்: சித்ரா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பதிந்தவர் MyFriend @ 3:57 PM 4 பின்னூட்டங்கள்
வகை 1990's, கங்கை அமரன், சித்ரா
138. நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேணில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பந்தாடும்
(நலம் வாழ..)
மனிதர்கள் சிலநேரம் தடம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் நிறம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் தவறாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் பிழையாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததை கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதர்கிந்த சோகம் கிளியே...
(நலம் வாழ..)
கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் இயல்பானது
கடலினில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் மரபானது
நிலவினை நம்பி வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்..
(நலம் வாழ..)
படம்: மறுபடியும்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர்: வாலி
பதிந்தவர் MyFriend @ 9:34 AM 6 பின்னூட்டங்கள்
வகை 1990's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா
Saturday, December 22, 2007
137. காதல் சடுகுடுகுடு...
காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு
அலையே சிற்றலையே கரை வந்து வந்து போகும் அலையே
என்னைத் தொடுவாய் மெதுவாய்ப் படர்வாய்
என்றால் நுரையாய் கரையும் அலையே
தொலைவில் பார்த்தால் ஆமாம் என்கின்றாய்
அருகில் வந்தால் இல்லை என்றாய்
நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ
பழகும்பொழுது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி என்னைக் கொல்வாய் கண்ணே
காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு
நீராட்டும் நேரத்தில் என்னன்னையாகின்றாய்
வாலாட்டும் நேரத்தில் என் பிள்ளையாகின்றாய்
நானாகத் தொட்டாலோ முள்ளாகிப் போகின்றாய்
நீயாகத் தொட்டாலோ பூவாக ஆகின்றாய்
என் கண்ணீர் என் தண்ணீர் எல்லாமே நீயன்பே
என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே
என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணின் அசைவிலே
நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ
பழகும்பொழுது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி என்னைக் கொல்வாய் கண்ணே
காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு
உன் உள்ளம் நான் காண என்னாயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது
என் காதல் இணையென்ன உன் நெஞ்சு காணாது
ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது
கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே
நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே
உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே
நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ
பழகும்பொழுது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி என்னைக் கொல்வாய் கண்ணே
காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு
படம்: அலைபாயுதே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: SPB சரண், நவீன்
பாடலாசிரியர்: வைரமுத்து
பதிந்தவர் MyFriend @ 4:35 PM 1 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், SPB சரண், நவீன்
136. அருவா மினு மினுங்க
ஆண்: எட்டு தெய்வத்துக்கும் மூத்த கருப்பா
எட்டு நாட்ட காக்க வந்த பெரியகருப்பா
எட்டு வச்சு நடந்து வாறோம்
கருப்பன் எல்லைக்குத்தான் உருண்டு வாறோம்
குழு: அருவா மினு மினுங்க
கருப்பனோட ஆவேசம் அருள் பொங்க
திருக்கு மீசபாரு திருநீறு பூச்சப்பாரு
முறுக்கு பல்லப்பாரு குங்கும பொட்டப்பாரு
கருப்பனோட வெற்றி பாரு கருங்கெடா குட்டி சோறு
சுருட்டுப்பீடி கட்டப்பாரு சுதி ஏத்த பட்டசாரு
கட்ட செருப்பு மாட்டி கருப்பனுக்கு காலுக்கு சலங்ககட்டி
காக்கும் கருப்பசாமி காலமாத்தி ஆடிவாறான் (அருவா)
ஆண்: பட்டி பேச்சி யாத்தா பளபளக்கும் சேலையக்கட்டி
ஜாக்கெட்டு போடாம வந்தாளே
பேச்சியாத்தா அழகக்கண்டு எத்தனையோ பெருசுக
எச்சிய ஒழுகவிட்டு நின்டாங்கே
அவ சட்ட மட்டும் போட்டிருந்தா சூப்பரு
ஜாக்கெட்டு போடாம வந்தது க்ளாமரு
எத்தனையோ பெருசுக தவிக்கிறான்
அவ அழகக் கண்டு நம்மாழு எழைக்கிறான்
எழைக்கிறான் ஆத்தாடி துடிக்கிறான்
இடிக்கிறான் சுருட்ட குடிக்கிறான்
ஆண்: மாட்டுக்கு பட்ட போட்டான் மனுசனுக்கு நாமம் போட்டான்
பேச்சுக்கு பேச்சு இங்கு தலைய ஆட்ட விட்டான்
அண்ணனுக்கு ரெண்டு தாரம் அதுக்கொரு தலையாட்டு
கெழவி சமையப்போறா அதுக்கொரு தலையாட்டு
புருஷன் இல்லாமல் புள்ளப்பெத்தா அதுக்கொரு தலையாட்டு
பொண்டாட்டி ஊருக்குப்போனா கொழுந்தியாளுக்கு தலையாட்டு
ஆண்: வீட்டுக்கு வீடு டீவி புள்ள எங்க படிப்பாண்டி போயி
அவன் ரேங்கு கார்ட வாங்கிப் பார்த்தா
நெஞ்சம் கொதிக்குதே பாவி
அடிக்கடி முத்தக்காட்சி வருகுதடி
நாம இப்படியா காதலிச்சோம் பாத்துக்கடி
தொப்புளுக்கும் கீழே சேலையடி
புள்ள பம்பரமா வாங்குறானே புருஞ்சுக்கடி
அடி தெனந்தெனம் என்ன மோதி
கலர் டீ.வி. ய வாங்கச் சொன்ன பாவி
ஆண்: சாமிக்கி மாலமிச்சம் பூசாரிக்கு பொங்கமிச்சம்
எளந்தாரிக்கி நடதான் மிச்சம்
கொமரிக்கி நெனப்புமிச்சம்
பூட்டுக்கு சாவி மிச்சம் ஆட்டுக்கு புழுக்க மிச்சம்
கெழவனுக்கு எளப்புமிச்சம் கெழவிக்கு ஒலக்கமிச்சம்
பெண்: எவன்டா அவன் எடுபட்ட பய எடு வெளக்கமாத்த
பெண்: அட குடிக்க இப்ப கூழுமில்ல உடுத்த ஒரு துணியுமில்லே
இப்பிடி குடிச்சுப்புட்டு வந்தியினா
இந்த குடும்பம் என்ன ஆகுறது
நீ பட்டத எண்ணிப்பாரு நல்ல பாதைய எனக்கு கூறு...
நீ பட்டத எண்ணிப்பாரு நல்ல பாதைய எனக்கு கூறு...
ஆண்: அடிவெட்டி வெட்டி வெறகு வெட்டி
வேதனைக்கி நான் குடிச்சா....
அடிவெட்டி வெட்டி வெறகு வெட்டி
வேதனைக்கி நான் குடிச்சா....
அடி ஊருப்பய பேச்சக்கேட்டு காரிதுப்ப வக்கிறியே
அடி அருவா எடுத்து வந்தா நாக்க அறுத்து புடுவேன்
அடி அருவா எடுத்து வந்தா நான் நாக்க அறுத்து புடுவேன்
பெண்: கண்டவங்க நிண்டவங்க காரித்துப்ப நின்னவனே
இப்படி கட்டுனவள விட்டுப்புட்டு
வப்பாட்டி கூட திரியிறயே
இப்ப உனக்கு ஒருவேட்டி நிக்கிற மனத்தக்காட்டி...
ஆண்: அடி வேதனையைச் சொல்லிச் சொல்லி
என்ன சோதனைக்கி ஆக்காதடி....
அடி வேதனையைச் சொல்லிச் சொல்லி
என்ன சோதனைக்கி ஆக்காதடி....
இப்ப போத கலஞ்சிருச்சு அடுச்சு நொறுக்கப் போறேன்
ஒன் மண்டைய ஒடச்சுப்பாரு
இப்ப சண்டைய முடிக்கப்போறேன்....
ஒன் மண்டைய ஒடச்சுப்பாரு
இப்ப சண்டைய முடிக்கப்போறேன்....
விரும்பி கேட்டவர்: இளா
படம்: வெயில்
இசை: பிரகாஷ்குமார் G.V.
பாடியவர்கள்: கரிசல் கருணாநிதி, கோட்டைசாமி, மதுரை சந்திரன், அழகுதாயி, தில்லை பன்னீர், ஜெயபால்
பதிந்தவர் ஜே கே | J K @ 2:45 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's
135. தாலாட்டும் பூங்காற்று
தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே
(தாலாட்டும் பூங்காற்று)
நள்ளிரவில் நான் கண்விழிக்க
உன் நினைவில் என் மெய்சிலிர்க்க
பஞ்சணையில் நீ முள் விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
காணும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்
(தாலாட்டும் பூங்காற்று)
எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
காலை நான் பாடும் காதல் பூபாளம்
காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்
ஆசையில் நாள்தோறும் நான் தொழும் ஆலயம் நீயல்லவா
(தாலாட்டும் பூங்காற்று)
படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா
பாடியவர்: ஜானகி
பதிந்தவர் இம்சை அரசி @ 12:10 PM 0 பின்னூட்டங்கள்
134. இரவா பகலா குளிரா வெயிலா...
இரவா பகலா குளிரா வெயிலா
என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா
என்னை ஒன்றும் செய்யாதடி
ஆனால் உந்தன் மௌளனம் மட்டும் ஏதோ செய்யுதடி
என்னை ஏதோ செய்யுதடி காதல் இதுதானா
சிந்தும் மணிபோலே சிதறும் என் நெஞ்சம்
கொஞ்சம் நீ வந்து கோர்த்தால் இன்பம்
நிலவின் முதுகும் பெண்ணின் மனமும்
என்றும் ரகசியம்தானா
கனவிலேனும் சொல்லடி பெண்ணே காதல் நிஜம்தானா
(இரவா பகலா குளிரா வெயிலா)
என்னை தொடும் தென்றல் உன்னை தொடவில்லயா
என்னை சுடும் காதல் உன்னை சுடவில்லயா
என்னில் விழும் மழை உன்னில் விழவில்லயா
என்னில் எழும் மின்னல் உன்னில் எழவில்லயா
முகத்திற்கு கண்கள் ரெண்டு
முத்தத்திற்கு இதழ்கள் ரெண்டு
காதலுக்கு நெஞ்சம் ரெண்டு
இப்பொது ஒன்றிங்கு இல்லையே
தனிமையிலே தனிமையிலே
துடிப்பது எதுவரை சொல்லு வெளியே
தனிமையிலே தனிமையிலே
துடிப்பது எதுவரை சொல்லு வெளியே
(இரவா பகலா குளிரா வெயிலா)
வானவில்லில் வானவில்லில் வண்ணம் எதுக்கு
வந்து தொடும் வந்து தொடும் தென்றல் எதுக்கு
அந்தி வானில் அந்தி வானில் வெட்கம் எதுக்கு
புரிந்தது புரிந்தது இன்று எனக்கு
மலையினில் மேகம் தூங்க
மலரினில் வண்டு தூங்க
உன் தோளிலே சாய வந்தேன்
சொல்லாத காதலை சொல்லிட
சொல்லி ரசிப்பேன் சொல்லி ரசிப்பேன்
சொல்லிச் சொல்லி நெஞ்சுக்குள்ள என்றும் வசிப்பேன்
அள்ளி அணைப்பேன் அள்ளி அணைப்பேன்
கொஞ்சிக் கொஞ்சி நெஞ்சுக்குள்ள உன்னை அணைப்பேன்
(இரவா பகலா குளிரா வெயிலா)
படம்: பூவெல்லாம் கேட்டுப்பார்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: சுஜாதா, ஹரிஹரன்
பாடலாசிரியர்: பழனி பாரதி
விரும்பி கேட்டவர்: ஆயில்யன்
பதிந்தவர் MyFriend @ 8:16 AM 7 பின்னூட்டங்கள்
வகை 1990's, சுஜாதா, யுவன் ஷங்கர் ராஜா, ஹரிஹரன்
Friday, December 21, 2007
133. புத்தம் புது காலை
புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்
(புத்தம்...)
பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள்
மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்
(புத்தம்....)
வானில் தோன்றும் கோலம்
அது யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றின்
சுகம் யார் தந்ததோ
வயதில் தோன்றிடும்
நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது
வழிந்தோடுது சுவைகூடுது
(புத்தம்...)
படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி
பாடலாசிரியர்: வைரமுத்து
விரும்பி கேட்டவர்: இளா
பதிந்தவர் MyFriend @ 11:23 PM 5 பின்னூட்டங்கள்
132. மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்...
மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்
தயக்கம் என்ன என்னை வந்து முத்தமிடு
குயில்களே உங்களை நான் காதலிக்கிறேன்
மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டுப்பாடு
கதிர்களே உங்களை நான் காதலிக்கிறேன்
நடுக்கம் என்ன என்னை வந்து தொட்டுவிடு
தென்றலே உன்னை நான் காதலிக்கிறேன்
மறுப்பு என்ன என்னை வந்து கட்டிபிடி
உலகமே என் வீடு இளமையே விளையாடு
(மலர்களே..)
நதிகளை மட்டுமல்ல நுரைகளையும் காதலித்தேன்
வெண்ணிலவை மட்டுமல்ல தரையையும் காதலித்தேன்
ஒரு பட்டு பூச்சியை காதலித்து பார்த்தேன்
அதன் உதிர்ந்த சிறகையும் மூடி வைத்து காத்தேன்
அந்தி வானத்தின் மேலே முகில் கூவுவதை போலவே
எந்தன் உடல் அங்கு பறந்திட வழி இல்லையா
(மலர்களே..)
மழைத்துளி மழைத்துளி முத்துக்களாய் சிதறுது
சிதறிடும் முத்துக்களை சேமித்தால் நல்லது
அந்த வானவில்லிலே மொத்த நிறம் ஏழு
அதில் ஒற்றை நிறத்திலே ஊஞ்சல் கட்டி ஆடு
சுகமானது பூமி இதமானது வாழ்க்கை
இந்த உலகத்தை ரசிக்கின்ற கலைஞன் இவன்
(மலர்களே..)
படம்: ஓன்ஸ் மோர்
இசை: தேவா
பாடியவர்: கிருஷ்ணராஜ்
பதிந்தவர் MyFriend @ 2:59 PM 2 பின்னூட்டங்கள்
வகை 1990's, கிருஷ்ணராஜ், தேவா
131. முதல் முதலாக காதல் டூயட்...
முதல் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே
(முதல்..)
என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே
(முதல்..)
சீதா என் கொடியே கண் பாரம்மா
ஆதரம் நீயில்லாமல் வேறேதம்மா
(சீதா..)
ஆசையுடன் நம்பி வந்த பெண்ணை இன்று
மோசம் செய்த துரோகியே
ஓஓஓ.. உன் கோபம் தேவைதானா அன்பே ஆருயிரே
அது யாரந்த பெண்
ஒரு நடிகையம்மா
அந்த கழுதையை நீ கொஞ்சி அணைப்பது தவறு
(முதல்..)
(முதல்..)
ஜீனத் என் கனவில் வந்தால் உன் போலவே
சிங்கார பாவை உந்தன் வடிவாகவே..
(ஜீனத்..)
ஜீனத்தை போல் என்னை எண்ணி வந்து
பாட்டு பாடும் துரோகியே
ஐயய்யோ.. சும்மாதான் ஜாடை சொன்னேன்
கண்ணே கண்மணியே
என்னை போல் ஒரு பெண்
இந்த உலகில் இல்லை
ஒரு நடிகையை போல் என்னை பார்ப்பது தவறு.
(முதல்..)
(முதல்..)
படம்: நிறம் மாறாத பூக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
பதிந்தவர் MyFriend @ 7:32 AM 6 பின்னூட்டங்கள்
வகை 1970's, S ஜானகி, SP பாலசுப்ரமணியம், இளையராஜா
Thursday, December 20, 2007
130. என் உயிர் நீதானே...
Hati Aku Suka-va
Lalu Aku Cinta-va
Hati Aku Suka-va
Lalu Aku Cinta-va
Saya pandang Dirimu
Saya Berhari-hari Hidupkah
Pada Sorang hati Pada mu
என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே
( என் உயிர்..)
பூங்கொடி தள்ளாட
பூவிழி வந்தாட
காதலை கொண்டாட
ஆசையில் வந்தேனே
Avak Cantik Macam
Bungaraya
Jangan Lupa
Sama Saya
(பூங்கொடி..)
நீ தந்த சொந்தம் மாறாதே
நான் கண்ட இன்பம் தீராதே
உன்னருகில் உன் இதழில்
உன் மடியில் உன் மனதில்
ஆயிரம் காலங்கள் வாழ்ந்திட வந்தேன்
(என் உயிர்..)
பாவையின் பொன்மேனி
ஜாடையில் தானாட
பார்வையில் பூந்தென்றல்
பாடிட வந்தேனே
Hati Kita Dua-Dua
Orang Sajala Dua Dua
நீ கொஞ்சும் உள்ளம் தேனாக
நான் கொள்ளும் இன்பம் நூறாக
என்னருகில் புன்னகையில்
கண்ணுறங்கும் மன்னவனே
காவியம் போலொரு வாழ்வினை கண்டேன்
(என் உயிர்..)
படம்: ப்ரியா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜான்ஸி, KJ ஜேசுதாஸ்
பாடலாசிரியர்: பஞ்சு அருணாசலம்
விரும்பி கேட்டவர்: முத்துலெட்சுமி
பதிந்தவர் MyFriend @ 5:09 PM 5 பின்னூட்டங்கள்
வகை 1980's, KJ ஜேசுதாஸ், இளையராஜா, ஜான்ஸி
129. போவோமா ஊர்கோலம
பெண்: போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
ஆண்: அரண்மன அன்னக்கிளி தரையில நடப்பது நடக்குமா அடுக்குமா
பெண்: பனியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ள சுகம் அரண்மன கொடுக்குமா
ஆண்: குளுகுளுகுளு அறையில கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்தது குடிசைய விரும்புமா
பெண்: சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கெடக்குமா
ஆண்: பளிங்கு போல உன் வீடு வழியில பள்ளம் மேடு
பெண்: வரப்பு மேடும் வயலோடும் பறந்து போவேன் பாரு
ஆண்: அதிசயமான பெண்தானே
பெண்: புதுசுகம் தேடி வந்தேனே
(போவோமா)
பெண்: கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிச்யம்
ஆண்: கற்பனையில் மெதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்
பெண்: ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது நடந்திடும் நதியிலே
ஆண்: உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது எனக்கொண்ணும் புரியல
பெண்: கவிதை பாடும் காவேரி ஜதிய சேத்து ஆடும்
ஆண்: அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும்
பெண்: போதும் போதும் ஒம் பாட்டு
ஆண்: பொறப்படப் போறேன் நிப்பாட்டு
(போவோமா)
பதிந்தவர் இம்சை அரசி @ 3:49 PM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, ஸ்வர்ணலதா
128. இரு விழிகளும் விழிகளும் இணைந்தன
இரு விழிகளும் விழிகளும் இணைந்தன
இரு இமைகளும் இமைகளும் திகைத்தன
ஒரு வேதியல் மாற்றம் நேருதே
தட்பம் வெப்பம் தடுமாறுதேஏஏஏ.....
மழைச்சாரலோ என் நெஞ்சிலே
சுகமாய் கீறலோ என் உயிரிலே (2)
இதுகீறலா மழைச்சாரலா
இதுகானலா இளவேனிலா
இதுமீறலா பரிமாறலா
இது காதலா கண் மோதலா
யாரிடமும் கண்டதில்லை இதுபோல்
நான் எனது ஏதுமில்லை இனிமேல் (2)
நான் கண்கள் மூடிப் பார்க்கிறேன்
ஒரு தென்றல் தீண்டி வேர்க்கிறேன் (2)
கார்மேகம் வந்து மோதியே
ஒரு விண்மீன் இன்று சில்லுச் சில்லாய் சிதறுதே
ஒரு விண்மீன் இன்று சில்லுச் சில்லாய் சிதறுதே
யாரிடமும் தோன்றவில்லை இதுபோல்
நான் எனது ஏதுமில்லை இனிமேல்....
இதுகீறலா மழைச்சாரலா
இதுகானலா இளவேனிலா
இதுமீறலா பரிமாறலா
இது காதலா கண் மோதலா
மழைச்சாரலோ என் நெஞ்சிலே
சுகமாய் கீறலோ என் உயிரிலே
நான் அறியாமல் எனை ரசித்தாய்
என் மெளனங்களை மொழிபெயர்த்தாய்
உன்னைக் கண்ட பின்னே எந்தன்
பெண்மைகளும் உயிர்பெறுதே
கண்ணாமூச்சி ஆட்டம் போட்ட
வெட்கங்களும் வெளிவருதே
தரையினில் நின்றபோதும் மிதக்கிறேன்
அணைத்திட நீளும் கையை அடக்கினேன்
என்னைத் தந்து உன்னை வாங்க வந்தேனே
இளவேனில் காற்றின் வெப்பம் தாக்க நின்றேனே
யாரிடமும் தோன்றவில்லை இதுபோல்
நான் எனது ஏதுமில்லை இனிமேல்.... (2)
நான் கனவுகளை கண்டதில்லை
கனவாய் யாரிடமும் சென்றதில்லை
முன்னே பின்னே பார்த்ததில்லை
இருந்தும் மனம் உன்னை நாட
முன்னூறாண்டு ஒன்றாய் வாழ்ந்த
நியாபகத்தில் தடுமாற்
விரல்களின் மோதிரங்கள் நீக்கினேன்
உன் விரல் தேடிவந்து கோர்க்கிறேன்
இந்தச் சொல்லும் இந்தக் கணமும் நிற்கட்டும்
நமை வானம் வந்து ஈரக்கையால் வாழ்த்தட்டும்
யாரிடமும் தோன்றவில்லை இதுபோல்
நான் எனது ஏதுமில்லை இனிமேல்....
நான் கண்கள் மூடிப் பார்க்கிறேன்
ஒரு தென்றல் தீண்டி வேர்க்கிறேன் (2)
கார்மேகம் வந்து மோதியே
ஒரு விண்மீன் இன்று சில்லுச் சில்லாய் சிதறுதே
ஒரு விண்மீன் இன்று சில்லுச் சில்லாய் சிதறுதே....
படம்: தொட்டி ஜெயா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடினது: ரமேஷ் விநாயகம், ஹரிணி
பதிந்தவர் காயத்ரி சித்தார்த் @ 1:30 PM 2 பின்னூட்டங்கள்
வகை 2000's, ரமேஷ் விநாயகம், ஹரிணி, ஹாரிஸ் ஜெயராஜ்
127. என் கண்மணி என் காதலி...
என் கண்மணி என் காதலி இள மாங்கனி
உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதே சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நானமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ
நல்லா சொன்னீர் போங்கோ..
என் மன்னவன் என் காதலன்
ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ
என் கண்மணி..
இரு மான்கள் பேசும்போது மொழியேதம்மா
பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா
ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்..
இளமாலையில்..
அருகாமையில்..
வந்தாடும் வேளை இன்பம் கோடியின்று
அனுபவம் சொல்லவில்லையோ..
இந்தாம்மா கருவாட்டு கூடை.. முன்னாடி போ..
(என் மன்னவன்..)
என் கண்மணி..
தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கேட் இறங்கு..
மெதுவாக உன்னை கொஞ்சம் தொடவேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே
அதற்கான நேரம் ஒன்று வரவேண்டுமே
அடையாளச் சின்னம் அன்று தறவேண்டுமே
இரு தோளிலும் மணமாலைகள்
கொண்டாடும் நேரமென்று கூடுமென்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ
(என் கண்மணி..)
(என் மன்னவன்..)
படம்: சிட்டுக்குருவி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், P. சுசிலா, பாஸ்கர், கோவை பாபு
பாடலாசிரியர்: வாலி
விரும்பி கேட்டவர்: ஆயில்யன்
பதிந்தவர் MyFriend @ 12:52 PM 5 பின்னூட்டங்கள்
வகை 1970's, P சுசீலா, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, கோவை பாபு, பாஸ்கர்
126. பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது...
பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்
30 நாளும் முகூர்த்தம் ஆனது எந்தன் மாதத்தில்
முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் தாகத்தில்
இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் காதல் செய்த மாயம்
(இது எப்படி..)
(பூவுக்கெல்லாம்..)
நிலவை பிடித்து எறியவும் முடியும்
நீல கடலை குடிக்கவும் முடியும்
காற்றின் திசையை மாற்றவும் முடியும்
கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை
சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்க கடலின் ஆழமும் தெரியும்
காதல் என்பது சரியா தவறா
இதுதான் எனக்கு தெரியவில்லை
ஒற்றை பார்வை உயிரை குடித்தது
கற்றை குழல் கையீடு செய்தது
மூடும் ஆடை முத்தமிட்டது
ரத்தமெல்லாம் சுண்டிவிட்டது
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை
மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை கொழுந்துவிட்டது
இதயம் இதயம் மலந்ர்துவிட்டது
இசை என் கதவு திறந்துவிட்டது
காதல் என்பது சரியா தவறா
இதுதான் எனக்கு தெரியவில்லை
(பூவுக்கெல்லாம்..)
படம்: உயிரோடு உயிராக
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், கேகே, ஹரிணி
வரிகள்: வைரமுத்து
பதிந்தவர் MyFriend @ 10:13 AM 5 பின்னூட்டங்கள்
வகை 1990's, கேகே, வித்யாசாகர், ஸ்ரீநிவாஸ், ஹரிணி
Wednesday, December 19, 2007
125. காதோடுதான் நான் பாடுவேன்
காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடிமீது கண்மூடுவேன்
[காதோடுதான்...]
வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளை தான்
நான் அறீந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துனையாக எனை மாற்றவா?
[உனக்கேற்ற...]
குல விளக்காக நான் வாழ வழிகாட்டவா?
[காதோடுதான்...]
பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
[பாலூட்ட...]
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
[எனக்காக...]
இதில் யார் கேட்டு என்பாட்டை முடிக்கின்றது
[காதோடுதான்...]
படம் : வெள்ளி விழா
இசை : குமார்.V
பாடல் : வாலி
பாடியவர் : L.R. ஈஸ்வரி
பதிந்தவர் ஜே கே | J K @ 5:00 PM 2 பின்னூட்டங்கள்
124.பாட்டு சொல்லி பாட சொல்லி
பதிந்தவர் இம்சை அரசி @ 3:13 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, இளையராஜா, சாதனா சர்கம்
123.காதலே காதலே சுவாசம் - காதலே சுவாசம்
|
படம் : காதலே சுவாசம்
பாடியவர்கள் : ஹரிஹரன், சுஜாதா
இசை : D. இமான்
காதலே காதலே சுவாசம்
என் காதிலே சம்திங் சம்திங் பேசும்
காதலே காதலே சுவாசம்
என் காதிலே சம்திங் சம்திங் பேசும்
காதலே பரவசம் கனவுகள் இலவசம்
மௌனம் கூட அழகு இருந்தும் பேச பழகு
காதலே... வா (காதலே காதலே வா வா)
ஜீவனை... நீ தா (ஜீவனை ஜீவனை நீ தா)
ஆ... காதலே காதலே சுவாசம்
என் காதிலே சம்திங் சம்திங் பேசும்
தூசி ஒன்று கண்ணில் வந்து விழுந்திட வேண்டுமே
ஊதி விடும் போது உந்தன் விரல்நுனி தீண்டுமே
என்னை யாரும் கேட்டதில்லை கேள்வி
ஓ.. காதல் என்றால் வெற்றி பெற்ற தோல்வி
காதலே... வா (காதலே காதலே வா வா)
ஜீவனை... நீ தா (ஜீவனை ஜீவனை நீ தா)
காதலே காதலே சுவாசம்
என் காதிலே சம்திங் சம்திங் பேசும்
நீ கண்ணை மூடும் போதெல்லாம் என் உலகம் இருண்டுபோகிறது
உன் சுவாசம் என்பது என் வாழ்வின் ஏற்ற இறக்கம்
என் கனவுகளை ஒரு போதும் விறக்மாட்டேன்
அவற்றின் சொந்தக்காரி நீ..
நான் தூங்கப் போகிறேன் அங்கே மீண்டும் சந்திப்போம்
காலை வந்தும் போர்வை விட்டு எழுந்திட மனமில்லை
உன்னையென்னி உருண்டுவிழா கனவொரு கனவில்லை
தன்னைத்தானே பார்த்துக் கொண்டும் கொஞ்சும்
என்னை கண்ணாடியே ஓய்வு கேட்டு கெஞ்சும்
உன்னைக் கண்டேன் என்னைக் காணவில்லையே
எந்தன் இதயம் என்னை வந்து சேரவில்லையே...
காதலே காதலே சுவாசம்
என் காதிலே சம்திங் சம்திங் பேசும்
காதலே காதலே சுவாசம்
என் காதிலே சம்திங் சம்திங் பேசும்
காதலே (காதலே) பரவசம் (பரவசம்)
கனவுகள் (கனவுகள்) இலவசம் (இலவசம்)
மௌனம் கூட அழகு (அழகு)
இருந்தும் பேச பழகு (பழகு)
காதலே... வா (காதலே காதலே வா வா)
ஜீவனை... நீ தா (ஜீவனை ஜீவனை நீ தா)
காதலே... வா (காதலே காதலே வா வா)
ஜீவனை... நீ தா (ஜீவனை ஜீவனை நீ தா)
சுவாசம்...
சம்திங் சம்திங்...
Tuesday, December 18, 2007
122.ஊருக்கும் வெட்கமில்லை
தேன் கிண்ணம் ரசிகர்கள் அனவருக்கும் என் வணக்கம். தமிழ்மண பதிவாளர்கள் மற்றும் வாசகர்கள் என்னன தெரிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். வற்றாயிருப்பு சுந்தர் அவர்களின் பாடும் நிலா பாலு தளத்தில் என் அபிமான பாடகர் எஸ்.பி.பி அவர்களின் பாடல்கள் சில வற்றை பதிந்து வருகின்றேன். இதோ இங்கே மற்ற ஜாம்பவான்களின் குரல்கள் என்னை பல நேரங்களீல் மயக்கியது உண்டு. அந்த பல பாடல்களை தங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். இதோ தாஸண்ணா அவர்களீன் முதல் பாடல் கேட்டு மகிழுங்கள்.
ஊருக்கும் வெட்கமில்லை
இந்த உலகுக்கும் வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை
இதிலே அவளுக்கு வெட்கமென்ன
ஹெ சமுதாயமே...
மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஒவியம்
நீ சொன்னால் காவியம்
ஓவியம் என்றால் என்னவென்று
தெரிந்தவர் இல்லையடா
குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால்
அதுதான் தொல்லையடா
மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஒவியம்
நீ சொன்னால் காவியம்
அத்தன பழமும் சொத்தைகள் தானே
ஆண்டவன் படைப்பினிலே
அத்திப் பழத்தை குற்றம் கூற
யாருக்கும் வெட்கமில்லை
மூடர்கள் ஏற்றிய குற்றத்தை
மறந்து முதுகை பாருங்கள்
முதுகினில் ஆயிரம் அழுக்கு
அதனை கழுவுங்கள்
மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஒவியம்
நீ சொன்னால் காவியம்
சுட்டும் விரலால் எதிரியை காட்டி
குற்றம் கூறுகையில் மற்றும்
மூன்று விரல்கள் உங்கள் மார்ப்பினை காட்டுதடா
எங்கேயாவது மனிதன் ஒருவன்
இருந்தால் சொல்லுங்கள்
இருக்கும் அவனும் புனிதன் என்றால்
என்னிடம் காட்டுங்கள்
மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஒவியம்
நீ சொன்னால் காவியம்
அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால்
அவனுக்கு வெட்கமில்லை
அத்தனை பேரையும் படைத்தானே
அந்த சிவனுக்கும் வெட்கமில்லை
இப்போது இந்த உலகம் முழுவதும்
எவனுக்கும் வெட்கமில்லை
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும்
எ..ம..னு..க்கும் வெட்கமில்லை
படம்: யாருக்கும் வெட்கமில்லை
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
இசை: ஜி.கே,வெங்கடேஷ்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
|
பதிந்தவர் Anonymous @ 4:17 PM 7 பின்னூட்டங்கள்
வகை KJ ஜேசுதாஸ், கண்ணதாசன்
121.தென்பாண்டி சீமையிலே
நாயகன் படத்தில் இளையராஜாவின் இசை தாலாட்டில் தென்பாண்டி சீமையிலே பாட்டை யாரும் கேட்கமால் இருந்திருக்க முடியாது. ஆறே ஆறு வரிகளில் அழுத்தமான அதுவும் எளிதான வார்த்தைகளில் இந்தளவுக்கு சோகத்தை கொண்டு வரமுடியாமென இனி வாய்ப்புக்கள் இல்லவே இல்லன்னு சொல்லலாம்.
தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே
மான் போலே வந்தவனே
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
வளரும் பிறையே தேயாதே,
இனியும் அழுது தேம்பாதே,
அழுதா மனசு தாங்காதே
(தென்பாண்டி சீமையிலே)
இங்கே பாடும் நிலா SP.பாலசுப்பிரமணியன் அவர்கள் பாடிய இந்த பாடலின் வெர்சனை கேட்டு மகிழுங்களேன்.
இளையராஜா & கமல்ஹாசன்:-
வீடியோ காட்சி:-
பதிந்தவர் இராம்/Raam @ 2:53 PM 1 பின்னூட்டங்கள்
வகை 1980's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, கமல்ஹாசன்