Sunday, December 9, 2007

87. விரும்புதே மனசு விரும்புதே - பாண்டவர் பூமி

Get this widget Track details eSnips Social DNA



பாடியவர் : சித்ரா
படம் : பாண்டவர் பூமி (2001)
இசை : பரத்வாஜ்


கவிஞன் கவிஞன் பாரதி கேட்டான் காணி நிலத்தில் ஒரு வீடு
கவிஞன் வழியில் நானும் கேட்டேன் கவிதை வாழும் சிறு வீடு
சிறு வீடு.. சிறு வீடு...

ஒரு பக்கம் நதியின் ஓசை.. ஒரு பக்கம் குயிலின் பாஷை..
இளம் தென்னையின் கீற்று ஜன்னலை உரசும் திரு வீடு

விரும்புதே மனசு விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே

சிறு தென்னங்குயில்கள் பாடி எழுப்பி விட
தென்றல் வந்து வாசல் தெளித்து விட
கொட்டும் பூக்கள் கோலம் வரையும் படி விரும்புதே

விரும்புதே மனசு விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே

தகதீம்ததீம்ததினதினனா..
தகதீம்ததீம்ததினதினனா..
தகதீம்ததீம்ததினதினதினதினதினனா..

தகதீம்ததீம்ததினதினனா..
தகதீம்ததீம்ததினதினனா..
தகதீம்ததீம்ததினதினதினதினதினதினதினதினதினனா..

கனா கண்டு தூங்கும் வரையில் நிலா வந்து கதைகள் சொல்ல கண்ணாடி முற்றம் ஒன்று வேண்டுமே
மின்னல் வந்து தீண்டும் போது வெட்கம் வந்து மூடிக்கொள்ள கண்களாக ஜோடி ஜன்னல் வேண்டுமே
பறந்தோடும் பறவைக்கூட்டம் இரவோடு தங்கிச்செல்ல மரகத மாடம் ஒன்று வேண்டுமே

கொலுசொலியும்.. கொலுசொலியும்..
சிரிப்பொலியும்.. சிரிப்பொலியும்..
எதிரொலித்து எதிரொலித்து இசை வரணும்..

இந்த வாசல் வந்தால் கோபம் தீரும்படி
வீசும் காற்றில் ஆயுள் கூடும்படி
பேசும் வார்த்தை கவிதையாகும்படி
விரும்புதே...

விரும்புதே மனசு விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே

கொடைக்கானல் மேகம் வந்து மொட்டைமாடி மேலே நின்று குடிதண்ணீர் பொழியும் வண்ணம் வேண்டுமே
வாழ்ந்தவர்கள் கதையைச் சொல்லி வருங்கால கனவை எண்ணி ஊஞ்சலாட தென்னை ரெண்டு வேண்டுமே
தலைமுறை மாறும் போதும் பரம்பரை தாங்கும் வண்ணம் தங்கமணித் தூண்கள் ஏழு வேண்டுமே..

சிலர் நினைவாய்..
பெரும் கனவாய்..
அரண்மனையாய்.. அதிசயமாய்.. இது வருமோ..

நல்லோர் கண்கள் கண்டு போற்றும்படி
பொல்லார் மனசும் நின்று வாழ்த்தும்படி
எல்லா உறவும் வந்து வாழும்படி
விரும்புதே..

விரும்புதே மனசு விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே

சிறு தென்னங்குயில்கள் பாடி எழுப்பி விட
தென்றல் வந்து வாசல் தெளித்து விட
கொட்டும் பூக்கள் கோலம் வரையும் படி விரும்புதே

விரும்புதே மனசு விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே

5 Comments:

ரசிகன் said...

//ஒரு பக்கம் நதியின் ஓசை.. ஒரு பக்கம் குயிலின் பாஷை..
இளம் தென்னையின் கீற்று ஜன்னலை உரசும் திரு வீடு//

சூப்பரா இருக்குங்க ஜி3

ரசிகன் said...

நெஜமாவே இந்த பாட்ட திரும்ப, திரும்ப கேக்க
// விரும்புதே மனசு விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே//

ரசிகன் said...

// பாடியவர் G3//
யப்பா..வ்வ்வ்..யாராவது என்னிய புடிங்களேன்.
அவ்வ்வ்.... ஏனுங்க ஜி3 இத்தன நாள் ஜி3 பண்ணது கூட ஓகே..
ஆனாக்கா யாரோ பாடனத நீங்க பாடனதா சொல்லறது அநியாயமுங்க...
ஹிஹி...

ரசிகன் said...

// 7:01 PM //
அதானே,ஏழு மணிக்கு இந்தோனேஷியாவுல சுனாமி வந்துச்சின்னாங்களே.. சும்மாவா? ஹிஹி..

கோபிநாத் said...

\\posted by G3 at\\

நீங்களுமா!?...ம்ம்ம்..நடத்துங்க ;)

Last 25 songs posted in Thenkinnam