Sunday, December 9, 2007

85. என் மேல் விழுந்த மழைத் துளியே...



என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்
(என் மேல்)

மண்ணைத் திறந்தால் நீரிருக்கும் - என்
மனதைத் திறந்தால் நீயிருப்பாய்
ஒலியைத் திறந்தால் இசை இருக்கும் - என்
உயிரைத் திறந்தால் நீயிருப்பாய்
வானம் திறந்தால் மழை இருக்கும் - என்
வயதைத் திறந்தால் நீயிருப்பாய்
இரவைத் திறந்தால் பகல் இருக்கும் - என்
இமையைத் திறந்தால் நீயிருப்பாய்
(என் மேல்)

மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கடலும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ
காற்றும் மலையும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமை ஆய்விடுமோ
(என் மேல்)

படம்: மே மாதம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஜெயசந்திரன், சித்ரா
வரிகள்: வைரமுத்து


விரும்பி கேட்டவர்: ஆயில்யன்

2 Comments:

ஆயில்யன் said...

கேட்டுக்கொண்டேஏஏஏஏ இருக்கிறேன்
நன்றி மை பிரண்ட்

G.Ragavan said...

மிகவும் அருமையான பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல், இசையமைப்பாளர், பாடகர். நன்றி. நன்றி.

Last 25 songs posted in Thenkinnam