Monday, December 17, 2007

119.கண்ணே கலைமானே

முன்றாம் பிறை படத்தில் இடம் பெற்ற கண்ணே கலைமானே பாடல்தான் கவியரசர் கண்ணதாசன் இயற்றிய இறுதி திரையிசை பாடல். படத்தில் KJ.யேசுதாஸ் அவர்கள் பாடிய பாடல் இடம் பெற்றது. பாடலின் முழுமையான பதிவிற்கு முன்னர் வேறு ஒரு பாடகர் பாடி பதிவு செய்யும் முன்னோட்டத்தில் இளையராஜா தன் தோழர் SPB அவர்களை வைத்து பதிவு செய்த இப்பாடலையும் கேட்டு மகிழுங்களேன்.

பாலுஜி பாடிய கண்ணே கலைமானே கன்னி ஒளீக்கோப்பு பார்க்க இங்கே அழுத்தவும்





வீடியோ காட்சி:-

(KJ.ஜேசுதாஸ் பாடியது)





கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ

(கண்ணே)

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது

(கண்ணே)

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி

(கண்ணே)



இசை: இளையராஜா
பாடல்: கண்ணதாசன்
குரல்: K.J.ஜேசுதாஸ்

6 Comments:

நாகை சிவா said...

இனிமையான தாலாட்டு பாடல்.

எஸ்.பி.பி குரலில் முதல் முறை கேட்டேன். யேசுதாஸ் குரல் கேட்டு கேட்டு பழகியதால் அந்த பீல் இதில் கொஞ்சம் கம்மி தான்.

பகிர்ந்தமைக்கு நன்றி ராயலு..

G.Ragavan said...

பாலு பாடுனதுலயும் ஏசுதாஸ் பாடுனதுலயும் சுர வேறுபாடெல்லாம் ஒன்னும் இருக்குறாப்புல தெரியலை. இலக்கணப்படி ரெண்டு பேரும் நல்லாப் பாடியிருக்காங்க. ஆனா இந்தப் பாட்டுக்கு ஏசுதாசின் குரல் மிகப் பொருத்தம். ஆழமான கொரல் அவருக்கு. அது தெரிஞ்சுதான் இளையராஜா பாலுவையே பயன்படுத்தாம ஏசுதாசைப் பயன்படுத்தீருக்காரு. என்னோட ஓட்டு ஏசுதாசுக்குத்தான்.

ILA (a) இளா said...

காலம் கடந்தாலும் மறக்க முடியாத பாடல்

இராம்/Raam said...

புலி,

படத்திலே வர்றாமே SPB பாடின பாட்டு இன்னும் இருக்கு... ஒவ்வொன்னா போடலாம்... :)

ஜிரா,


அதே அதே.... :)

மதுமிதா said...

குழைவும், உணர்வும் சேர்ந்து இயைந்த இந்தப் பாடல் மிகவும் பிடித்த பாடல்.

நன்றி ராம்.

Anonymous said...

பதிவிற்க்கு நன்றி இராம் சார்.

பாலுஜி பாடிய கண்ணே கலைமானே கன்னி ஒளீக்கோப்பு பார்க்க இங்கே அழுத்தவும்

Last 25 songs posted in Thenkinnam