Friday, December 28, 2007

156. வா வா காதல் துஷ்யந்தா...




பெ: வா வா காதல் துஷ்யந்தா உந்தன் கண்கள் கற்கண்டா
தித்திக் தித்திக்கின்றதே நெஞ்சம் ரோஜா கல்கண்டா
(வா வா..)
பல முத்தம் சேர்த்து வைத்தேன்
எடை மொத்தம் கூடி போனேன்
ஏய் மன்மதா இது நல்லதா
நான் காயம் பட்ட மானாய் ஆனேனே
(வா வா..)

ஆ: உன் அழகால் என்ன வியர்க்க வைத்தாய்
என் ஜன்னல்கள் திறக்கின்றதே

பெ: உன்னை ரசித்தேன் அந்த நிமிஷம் முதல்
என் கடிகாரம் நிற்கின்றது

ஆ: முதன் முதலாய் பெண்ணின் வாசம் என் மூச்சில் நுழைகின்றதே

பெ: என் விழியின் பூ போல் இன்று வெளிநாடப்பு செய்கின்றதே

ஆ: கண்ணில் சரிகம பாடுகிறாய் நெஞ்சில் ததிமி ஆடுகிறாய்
எனக்கு இதுதான் நடன விழா இனி தினமும் மதன விழா

பெ: (வா வா..)

பெ: நீ குளித்தாய் நான் நனைந்து விட்டேன்
இந்த சேர்ப்பு இங்க யார் தந்தது

ஆ: நீ உறங்க நான் கனவு கண்சேன்
அந்த கனவிங்கு யார் தந்தது

பெ: அணில் கடிக்கும் பழத்தை போலே
நீ என்னை பார்க்காதே

ஆ: அணலருகில் சோளம் போலே
நீ என்னை வாட்டாதே

பெ: இந்த ஆசை வெட்கம் எல்லாம்
எங்கு இருந்தது தெரியவில்லை
உன்னை கண்டதும் வருகிறதே
அந்த காரணம் புரியவில்லை
(வா வா..)

ஆ: வா வா காதல் சகுந்தலா உந்தன் கண்கள் கல்கண்டா
தித்திக் தித்திக்கின்றதே நெஞ்சம் ரோஜா குல்கந்தா..

படம்: எங்கள் அண்ணா
இசை: தேவா
பாடியவர்கள்: சுஜாதா, கார்த்திக்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam