Wednesday, December 26, 2007

149.நினைத்து நினைத்து....

இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான 7/G ரெயின்போ காலனி திரைப்படத்தில் இடம்பெற்ற சோகப்பாடல் ஒன்று. இந்த பாடலை இயற்றியவர் நா.முத்துக்குமார். ஒவ்வொரு வரிகளும் அழகான ஒப்புமைகளுடனும் பிரிவின் வலியை சொல்லுவதாகவும் எழுதியிருப்பார். பெண் குரலில் இடம்பெறும் பாடலின் வரிகளுக்கும் ஆண் குரலில் இடம்பெறும் பாடலின் வரிகளுக்கும் பெரிதான வித்தியாசம் தெரியாவண்ணமிருக்கும், ஆனால் கூர்ந்து கவனித்தால் அதிலிருக்கும் முரண் + அழகான வரிகள் புரியவரும்.






பெண்குரல்:- ஷரேயா கோசல்.

அம்மணிக்கு ழ,ள பிரச்சினை பெரும் பிரச்சினை. பெண் கண்டசாலா'ன்னு நினைத்து விட்டுவிடவேண்டியதுதான்.. :)

நினைத்து நினைத்து பார்த்தால்
நெருங்கி அருகில் வருவேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்துப்படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் உனக்கு தந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
நமது கதையை காலமும் சொல்லும்
உதிர்ந்து போன மலரின் வாசமா.......
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்
உடைந்து போன வளையலின் வண்ணமா....
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் உந்தன் கையில்
தோளில் சாய்ந்து கதைகள் பேச
நமது விதியில் இல்லை
முதல் கனவு போதுமே காதலா கண்கள் திறந்திடு

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
உனது பேச்சில் கலந்தே இருக்கும்
உலகம் அழியும் உருவம் அழியுமா.....
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்
உனது விழிகள் என்னை மறக்குமா......
தொடந்து வந்த நிழலின் பிம்பம் வந்து வந்து போகும்
திருட்டுப் போன தடயம் இருந்தும்
திரும்பி வருவேன் நானும்
ஒரு தருணம் என்னடா
காதலா உன்னுள் வாழ்கிறேன்

(நினைத்து)





ஆண் குரல்:- KK

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்துப்படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே?
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்பிடி சொல்லுவேன்
உதிர்ந்து போன மலர்களின் வாசமா
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்பிடி சொல்லுவேன்?
உடைந்து போன வளையலின் பேசுமா
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னே தூக்கம் கலைந்ததே!

(நினைத்து)

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா?
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா?

தொடந்து வந்த நிழலின் பிம்பம் வந்து வந்து போகும்
திருட்டுப் போன தடயம் பார்த்தும்
நம்பவே இல்லை நானும்
ஒரு தருணம் எதிரில் தோன்றுவாயென
நானும் வாழ்கிறேன்.

(நினைத்து)

படம்:- 7/G ரெயின்போ காலனி
இசை:- யுவன் சங்கர்ராஜா
பாடல்:- நா.முத்துக்குமார்.

3 Comments:

அனுசுயா said...

//எடுத்துப்படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே?
//
இதுக்கு விளக்கம் கொடுத்ததுக்கு நன்றிங்க :)

MyFriend said...

சூப்பர் பாட்டு.. அதுவும் கேகே வெர்ஷன் சூப்பரோ சூப்பர். :-)

ILA (a) இளா said...

ஷ்ரேயாவின் குரல்தான் அருமை. என்ன கொடுமைன்னா இந்தப் பாட்ட ரொம்ப நாள் கேட்டுட்டு (200 தடவைக்கு மேல இருக்கலாம்) படத்துல போயி பார்த்தா பாட்ட காணோம். வருது ஆனா படம் முடிஞ்சு எல்லாரும் எந்திரிச்சு போவும்போது. என்னை ரொம்பவுமே ஏமாற்றிய பாடல். ஆனா எப்போ வேணுமின்னாலும் கேட்கலாம்.

Last 25 songs posted in Thenkinnam