மழை தருமோ என் மேகம்… மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்… தோகைக்கு தூதுவன் யாரோ… தோள் தொட்ட தென்றலடி தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன… பொன்வண்டே…. (மழை தருமோ) ஆஆஅஹஹா…ஒஹொஹோ….ம்ம்ஹ்ஹ்ஹூம்… தேனிருக்கும் வண்ண மலர் நேராடுது… தேனீயில் ஒன்று இங்கு போராடுது… (தேனிருக்கும்) அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்தக் கோலம் தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்… தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்… தளிர்மேனி அன்னப்பேடு எண்ணம் மாறுமா… (மழை தருமோ) ஆஆஅஹஹா…ஒஹொஹோ….ம்ம்ஹ்ஹ்ஹூம்… கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள்… காதலுக்குள் என்று அவள் படியேறுவாள்.. சிரிக்கின்ற தங்க சிற்பம் தேரில் வராதோ… சிலை வண்ணம் அங்கே… கலை உள்ளம் இங்கே.. நிலை தன்னை சொல்ல தூதுவன் எங்கே… பிழைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடி வா… (மழை தருமோ) ஆஆஅஹஹா…ஒஹொஹோ….ம்ம்ஹ்ஹ்ஹூம்…
விரும்பி கேட்டவர்: இளா
படம்: மனிதரில் இத்தனை நிறங்களா இசை: சியாம் பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம், S.P.சைலஜா
Shyam rocks!beautiful song!
மனதை மயக்கும் அழகான பாடல் பதிவிற்க்கு நன்றி.
ரொம்ப நாளா இந்தப்பாட்டை வரிகளோடு படிக்க ஆசையிருந்தது நன்றி..
அருமையான பாட்டுங்க. வரிகள் தேடி வந்தேன்:)!
மனதை மயக்கும் மன்மத கீதம்...
Post a Comment
5 Comments:
Shyam rocks!
beautiful song!
மனதை மயக்கும் அழகான பாடல் பதிவிற்க்கு நன்றி.
ரொம்ப நாளா இந்தப்பாட்டை வரிகளோடு படிக்க ஆசையிருந்தது நன்றி..
அருமையான பாட்டுங்க. வரிகள் தேடி வந்தேன்:)!
மனதை மயக்கும் மன்மத கீதம்...
Post a Comment