[ரெண்டு கன்னம்]
இளம்பிறையே இளம்பிறையே வளர்ந்து விடாதே
இருளே இவளின் துணையே (இளம்பிறையே)
இனி தித்திக்கும் ராத்திரிகள் நிலவே சுடாதே...
அட தூங்கிய சூரியனே இரவைத் தொடாதே...
சுடாதே.. தொடாதே...
[ரெண்டு கன்னம்]
தாகம் எடுக்கையிலே மழை அடிக்காதோ
வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ (தாகம்)
நனைந்த மலர்களுக்கு குளிர் எடுக்காதோ
வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ
[ரெண்டு கன்னம்]
தான னன தான தன தானன னன
தான னன தான தன தானன னன
படம் : சிவப்புமல்லி
இசை : சங்கர்-கணேஷ்
பாடியவர் : K J யேசுதாஸ், P. சுசீலா
வரிகள் : வைரமுத்து
4 Comments:
சிபியின் நேயர் விருப்பமாக ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்...
அருமையான பாடல்.. மிக மிருதுவான இசை கண்ணை மூடி ரசித்தால் இன்பம்.
நல்ல பாடல் ஜே.கே.
சிறப்பான தேர்வு. நன்றி
Post a Comment