Thursday, January 31, 2013

அகிலா அகிலா



அகிலா அகிலா கண் விழிச்சா அகிலா
பகலா இரவா பார்ப்பதெல்லாம் அகிலா
வா வா வா கட்டிக் கொள்ள வா
வா வா வா கட்டிக் கொள்ள வா
நீயின்றி போனால் கசக்கும் வெண்ணிலா

அகிலா அகிலா கண் விழிச்சா அகிலா
பகலா இரவா பார்ப்பதெல்லாம் அகிலா

அகிலா அகிலா அகிலா அகிலா
அகிலா அகிலா அகில் அகில் அகிலா
அகிலா அகிலா அகிலா அகிலா
அகிலா அகிலா அகில் அகில் அகிலா

உன் தோட்டத்தில் பூ நனையுமென்று தான்
குடை கொண்டு வருகிறேன்

உன் ஜன்னலில் வெயில் கால வேளையில்
தென்றல் கொண்டு வருகிறேன்

காதல் பித்து ஏதேதோ பண்ணும்

மின்னல் கொண்டு பாய் கூட பின்னும்

காதல் இது வார்த்தை அல்ல வாக்கியம்

ஆமாம் மனப்பாடம் செய்தல் பாக்கியம்

வா வா வா கட்டிக் கொள்ள வா
நீயின்றி போனால் கசக்கும் வெண்ணிலா

அகிலா அகிலா கண் விழிச்சா அகிலா
பகலா இரவா பார்ப்பதெல்லாம் அகிலா

அகிலா அகிலா அகிலா அகிலா
அகிலா அகிலா அகில் அகில் அகிலா
அகிலா அகிலா அகிலா அகிலா
அகிலா அகிலா அகில் அகில் அகிலா

நான் உன்னையே டி போட்டு பேசினால்
உரிமை கூடும் அல்லவா

நான் உன்னையே டா போட்டு பேசினால்
உறவு கூடும் அல்லவா

நீயே இங்கே நானாகி போனேன்

வார்த்தைகளில் மரியாதை வேண்டாம்

காதல் அது நெஞ்சில் வீசும் வாசனை

ஆமாம் வந்து நுகர என்ன யோசனை

வா வா வா கட்டிக் கொள்ள வா
வா வா வா கட்டிக் கொள்ள வா
நீயின்றி போனால் கசக்கும் வெண்ணிலா

அகிலா அகிலா கண் விழிச்சா அகிலா
பகலா இரவா பார்ப்பதெல்லாம் அகிலா
வா வா வா கட்டிக் கொள்ள வா
வா வா வா கட்டிக் கொள்ள வா
நீயின்றி போனால் கசக்கும் வெண்ணிலா

படம் : நேருக்கு நேர் (1997) 
இசை : தேவா 
பாடியவர்கள் : விஜய், அனுபமா
வரிகள் : வைரமுத்து

Wednesday, January 30, 2013

அன்புள்ள மான் விழியே




அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை

அன்புள்ள மன்னவனே
ஆசையில் ஓர் கடிதம்
அதை கைகளில் எழுதவில்லை
இரு கண்களில் எழுதி வந்தேன்

நலம் நலம்தானா முல்லை மலரே
சுகம் சுகம்தானா முத்துச்சுடரே

இளைய கன்னியின் இடை மெலிந்ததோ
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ
வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ
வாடைக் காற்றிலே வாடி நின்றதோ


நலம் நலம்தானே நீ இருந்தால்
சுகம் சுகம்தானே நினைவிருந்தால்

இடை மெலிந்தது இயற்கை அல்லவா
நடை தளர்ந்தது நாணம் அல்லவா
வண்ணப் பூங்கொடி பெண்மை அல்லவா
வாடவைத்ததும் உண்மை அல்லவா


உனக்கொரு பாடம் சொல்ல வந்தேன்
எனக்கொரு பாடம் கேட்டுக் கொண்டேன்

பருவம் என்பதே பாடம் அல்லவா
பார்வை என்பதே பள்ளி அல்லவா
ஒருவர் சொல்லவும் ஒருவர் கேட்கவும்
இரவும் வந்தது நிலவும் வந்தது


படம்: குழந்தையும் தெய்வமும்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: T.M.செளந்தர்ராஜன், P.சுசீலா

எல்லோரும் சொல்லும் பாட்டு



எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னை பார்த்து
மேடையே வையகம் ஒரு மேடையே
வேசமே அங்கெல்லாம் வெறும் வேசமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னை பார்த்து

நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான்
நாமெல்லாம் பொம்மையென்று நாடகம் காட்டுகின்றான்
காவியம் போலொரு காதலை தீட்டுவான்
காரணம் ஏதுமின்றி காட்சியை மாற்றுவான்
ரயில் சிநேகமா
புயலடித்த மேகமா
கலைந்து வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னை பார்த்து

கோவலன் காதை தன்னில் மாதவி வந்ததுண்டு
மாதவி இல்லையென்றால் கண்ணகி ஏது இன்று
மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே
மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவரும் நெஞ்சிலே
எது கூடுமோ எது விலகி ஓடுமோ
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னை பார்த்து
மேடையே வையகம் ஒரு மேடையே
வேசமே அங்கெல்லாம் வெறும் வேசமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

படம் : மறுபடியும் (1993)
இசை : இளையராஜா 
பாடியவர் : பாலசுப்ரமணியம் 
வரிகள் : வாலி

Tuesday, January 29, 2013

கடலோரம் ஒரு ஊரு

திரைப்பாடல்.காம் - சரண்

திரைப்பாடல்.காம் - யுவன்

கடலோரம் ஒரு ஊரு
ஒரு ஊரில் ஒரு தோப்பு
ஒரு தோப்பில் ஒரு பூவு
ஒரு பூவில் ஒரு வண்டு

முதல் முதல் வண்டொன்று தீண்டியதும்
விரல் பட்ட பூ வேர்த்ததோ
தொடத் தொட மோகங்கள் தூண்டியதும்
சுடச்சுட தேன் வார்த்ததோ

மெதுவா மெதுவா அனுசரி
இதமா பதமா அனுபவி
எது என் விருப்பம் கொடு கொடு
இருக்கும் நாணம் விடு விடு


கன்னங்களைக் காட்டு
கையெழுத்து போட்டிட வேண்டும்
ஈர உதடுகளால்

பல்லு படும் லேசா
கேலிப் பேச்சு கேட்டிட நேரும்
ஊரு உறவுகளால்

பாட்டன் பூட்டன் செஞ்ச தவறு இது
யாரு நம்ம இங்க தடுக்கறது
ஓசை கேட்காமல் முத்தம் வைக்கவோ

இருந்தும் எதற்கு இடையில
இரு கை மேயும் இடையில
இடை தான் எனக்கோர் நூலகம்
வழங்கும் கவிதை வாசகம்



ஓ பள்ளிக்கூட சிநேகம்
பள்ளியறைப் பாய் வரை போகும்
யோகம் நமக்கிருக்கு

கட்டுகளைப் போட்டு
நட்டு வச்ச வேளிகள் தாண்டி
காதல் ஜெயிச்சிருக்கு

புள்ளி வைக்க இந்த பூமி உண்டு
கோலம் போட அந்த சாமி உண்டு
இங்கே  நீ இன்றி நானும் இல்லையே

காத்தாயிருக்க மூச்சுல
மொழியாய் இருக்க பேச்சுல
துணியாயிருப்பேன் இடையில
துணையாயிருப்பேன் நடையில


படம்: குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடல்: வாலி
பாடியவர்கள்: S P B சரண், யுவன் சங்கர் ராஜா

பரதேசி - தன்னை தானே



தன்னை தானே நமக்காக தந்தானே
மண்ணை காக்க ஒளியாக வந்தானே

தன்னை தானே நமக்காக தந்தானே
மண்ணை காக்க ஒளியாக வந்தானே
மாட்டு தொழுவ கூட்டில் பிறந்த தேவ தூதனாம்
ஆட்டு மந்தையை ஓடி செல்லும் நல்ல ஆயனாம்
காட்டில் வழியில் பாதை காட்டும் கண்ணின் மைந்தனே
பாட்டு பாடி ஆட்டம் ஆடி ஆர்ப்பரிப்போமே

தன்னை தானே தந்தானே துதிப்போம்
தந்தானே துதிப்போமே தந்தானே துதிப்போமே
மண்ணை காக்க வந்தானே ஜெபிப்போம்
வந்தானே ஜெபிப்போமே வந்தானே ஜெபிப்போமே
சீறி பாயும் பேரலையாய் பொங்கி எழுந்து நீ
மாற்றம் தந்த மைந்தருக்கு சொல்லு சோஸ்த்திரம்
ஊற்றெடுத்த ஆத்மாவின் சாட்சியாக நீ
உள்ளிருந்து உரக்க சொல்லு உயிரின் சோஸ்த்திரம்

ஹல்லேலுயா ஹல்லேலுயா ஹல்லேலுயா ஹல்லேலுயா
ஹல்லேலுயா ஹல்லேலுயா ஹல்லேலுயா ஹல்லேலுயா

நாதியற்ற நாதியர்க்கெல்லாம் சொல்லி கொள்ள சொந்தம் ஒரே தேவன்
நீதியற்ற பாவிகளின் வாழ்வை தீர்க்க வந்த பரமபிதா யேசு
ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் சொல்வோம்

படம் : பரதேசி (2013)
இசை : பிரகாஷ்குமார்
பாடியவர் : கானா பாலா
வரிகள் : வைரமுத்து

Monday, January 28, 2013

பரதேசி - செந்நீர் தானா



செந்நீர் தானா செந்நீர் தானா
செந்தேனீரில் செம் பாதை கண்ணீர் தானா
நியாயம் தானா நியாயம் தானா
ஓர் ஏழைக்கு கை கூலி காயம் தானா
ஆண்டைக்கு ஒரு பாதி ஆவி போச்சே
அட்டைக்கு சரி பாதி ரத்தம் போச்சே
எங்க மேலு காலு வெறும் தோளா போச்சே
அது கங்காணி செருப்புக்கு தோதா போச்சே

செந்நீர் தானா செந்நீர் தானா
செந்தேனீரில் செம் பாதை கண்ணீர் தானா
நியாயம் தானா நியாயம் தானா
ஓர் ஏழைக்கு கை கூலி காயம் தானா

ஏ ஊசி மழையே ஊசி மழையே
எங்க உடலோடு உயிர் சூடு அத்து போச்சே
ஏ ஊதக்காத்தே ஊதக்காத்தே
எங்க பூர்வீக போர்வையும் பொத்து போச்சே
தேகத்தில் உள்ள எலும்புக்கு
ஒரு வெறி நாயும் தெரு நாயும் மோதுதே
வானத்தில் வாழும் நெஞ்சமோ
தன் மாராப்பை தாராமல் ஓடுதே
உயிர் காப்பாத்தும் தெய்வங்கள் கண் மூடுதே

ஊரெல்லாம் விட்டு நம் இளமை கெட்டு
நாம் வெளியானோம் பூனைக்கு வாக்கப்பட்டு
ஒரு மானம் கெட்டு சிறு சோறு திம்போம்
பேய் மழையோடும் பனியோடும் தூக்கங்கெட்டு
பாம்புக்கு பசி வந்ததே ஒரு சிறு கோழி என்னாகும் கூட்டிலே
யானையின் பெருங்காலிலே சிறு காளான்கள் என்னாகும் காட்டிலே
இவள் உயிர் காத்த ஒரு சொத்தும் பறிபோனதே

செந்நீர் தானா செந்நீர் தானா
செந்தேனீரில் செம் பாதை கண்ணீர் தானா
நியாயம் தானா நியாயம் தானா
ஓர் ஏழைக்கு கை கூலி காயம் தானா
ஆண்டைக்கு ஒரு பாதி ஆவி போச்சே
அட்டைக்கு சரி பாதி ரத்தம் போச்சே
எங்க மேலு காலு வெறும் தோளா போச்சு
அது கங்கானி செருப்புக்கு தோதா போச்சு

படம் : பரதேசி (2013)
இசை : பிரகாஷ்குமார்
பாடியவர்கள் : கங்கை அமரன், ப்ரியா ஹிமேஷ்
வரிகள் : வைரமுத்து

Sunday, January 27, 2013

பரதேசி - செங்காடே சிறுகரடே

To Listen

ஹோ செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ காடுகளே கள்ளிகளே போய் வரவா
சுடு சுடு காடு விட்டு போகிற பொணங்க போல
சன சன சனங்கள் எல்லாம் போகுது பாத மேல
உள்ளூரில் காக்கா குருவி இரை தேடுதே
ஒ பசியோடு மனுச கூட்டம் வெளியேருதே
சொத்த கள்ளியும் முள்ளும் தச்சதும் பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீர்த்துடோம் கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில் கொக்கு கால போல வத்தி போச்சயா வாழ்வு
கூட்டங் கூட்டமா வாழ போகிறோம் கூட வருகுதே சாவு

ஹோ செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ காடுகளே கல்லிகளே போய் வரவா

வெளையாத காட்ட விட்டு விளையாண்ட வீட்ட விட்டு
வெளந்தியா வெகுளி சனம் வெளியேருதே ஓ
வாழ்வோடு கொண்டு விடுமோ சாவோடு கொண்டு விடுமோ
போகும் தெசை சொல்லாமலே வழி நீளுதே
உயிரோடு வாழ்வது கூட சிறு துன்பமே ஹோ
வயிரோடு வாழ்வது தானே பெரும் துன்பமே
பொல்லாத விதியின் மறைக்க போறோமே பஞ்சம் பொழைக்க
யார் மீள்வதோ யார் வாழ்வதோ யார் கண்டது

பாலம் பாலம் வெடிச்சு கிடக்குதே பாடு பட்டவன் பூமி
வெடிச்ச பூமியில் புதைக்க பாக்குதே கேடு கெட்டவன் சாமி
புளியங்கொட்டைய அவிச்சு தின்னு தான் பொழைச்சு கிடக்குது மேனி
பஞ்சம் பொழைக்கவும் பசிய தீர்க்கவும் பச்சை பூமிய காமி

ஹோ செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ காடுகளே கள்ளிகளே போய் வரவா

காலோடு சரல கிழிக்க கண்ணோடு புழுதி அடிக்க
ஊர் தாண்டியே ஊர் தேடியே ஊர் போகுதே
கருவேலங்காடு கடந்து கல்லுத்தும் மேடும் கடந்து
ஊர் சேரலாம் உசுர் சேருமா வழி இல்லையே
கங்கானி பேச்ச நம்பி சனம் போகுதே ஓ
நண்டுகள கூட்டி கொண்டு நரி போகுதே
உடல் மட்டும் முதலீடாக ஒரு நூறு சனம் போறாக
உயிர் மீளுமோ உடல் மீளுமோ யார் கண்டது

சொத்த கள்ளியும் முள்ளும் தச்சதும் பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீர்த்துடோம் கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில் கொக்கு கால போல் வத்தி போச்சயா வாழ்வு
கூட்டங் கூட்டமா வாழ போகிறோம் கூட வருகுதே சாவு

ஹோ செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ காடுகளே கள்ளிகளே போய் வரவா
சுடு சுடு காடு விட்டு போகிற பொணங்க போல
சன சன சனங்கள் எல்லாம் போகுது பாத மேல
உள்ளூரில் காக்கா குருவி இரை தேடுதே ஒ
பசியோடு மனுச கூட்டம் வெளியேருதே
சொத்த கள்ளியும் முள்ளும் தச்சதும் பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீர்த்துடோம் கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில் கொக்கு கால போல் வத்தி போச்சயா வாழ்வு
கூட்டங் கூட்டமா வாழ போகிறோம் கூட வருகுதே சாவு

படம் : பரதேசி (2013)
இசை : பிரகாஷ்குமார்
பாடியவர்கள் : மது பாலகிருஷ்ணன், ப்ரகதி
வரிகள் : வைரமுத்து

Saturday, January 26, 2013

ஒரு ராகம் பாடலோடு



ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாடத் தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது

மாலை நேரக் காற்றில்
மகிழ்ந்தாடும் தென்னங்கீற்றே
மாலை சூடி நாளும்
எனை ஆளும் தெய்வம் நீயே

காதல் தேவி எங்கே
தேடும் நெஞ்சம் அங்கே
தேரில் போகும் தேவதை
நேரில் வந்த நேரமே
என் உள்ளம் இன்று வானில் போகுதே

ஏதோ நூறு ஜென்மம்
ஒன்று சேர்ந்து வந்த சொந்தம்
வாழும் காலம் யாவும்
துணையாக வேண்டும் என்றும்

காலம் தந்த பந்தம்
காதல் என்னும் கீதம்
ஜீவனாகக் கேட்குதே
சேர்ந்து இன்பம் கூட்டுதே
வராத காலம் வந்து சேர்ந்ததே


படம் :ஆனந்தராகம்
பாடியவர்கள்: K.J.யேசுதாஸ், S.ஜானகி
இசை: இளையராஜா

பரதேசி - யாத்தே கால



யாத்தே கால கூத்தே வாழ்வே பழுதாச்சே
ஏழை பாடு பார்த்தே காடும் அழுதாச்சே
ஓர் மிருகம் ஓர் மிருகம் தன்னை
தன்னடிமை செய்வதும் இல்லை
ஓர் மனிதன் ஓர் அடிமை என்றால்
அது மனிதன் செய்யும் வேலை
யாத்தே கால கூத்தே வாழ்வே பழுதாச்சே

தாழ் போன வீடு கால் போன ஆடு
ஒன்னோட ஒன்னா துணையானது ஏன்
தாய் போல நெஞ்சு தாளாத அன்பு
மழை தண்ணியோடு மாசு இல்லையே
வழி சொல்லவே இல்லையே வாய்மொழி
கண்ணீர் தான் ஏழையின் தாய்மொழி
எங்கோ தவிக்கும் உன் பிள்ளையே
இங்கே உறவு என் பிள்ளையே

கை கொண்ட நெல்லு உமியாகும் போது
கத்தாலை சோறும் சோறாகுமே
உண்டான சொந்தம் உடைகின்ற போது
இல்லாத சொந்தம் உறவாகுமே

ஒரு ஜீ(சீ)வனோ உறவிலே சேருதே
இரு ஜீ(சீ)வனோ ஒத்தையில் வாடுதே
கண்ணீர் துடைக்க ஆளில்லையே
காலம் நடக்கும் காலில்லையே

யாத்தே கால கூத்தே வாழ்வே பழுதாச்சே
ஏழை பாடு பார்த்தே காடும் அழுதாச்சே
ஓர் மிருகம் ஓர் மிருகம் தன்னை
தன்னடிமை செய்வதும் இல்லை
ஓர் மனிதன் ஓர் அடிமை என்றால்
அது மனிதன் செய்யும் வேலை

படம் : பரதேசி (2013)
இசை : பிரகாஷ் குமார்
பாடியவர்கள் : ப்ரகதி, பிரசன்னா
வரிகள் : வைரமுத்து

Friday, January 25, 2013

பரதேசி - அவத்த பையா



அவத்த பையா செவத்த பையா அழிச்சாட்டியம் ஏனடா
கவச்சி மேலே ஆசப்பட்ட கரிச்சாங்குஞ்சு நானடா
சரட்டையில் பெஞ்ச சிறுமழை போல
நெஞ்சு கூட்டுல நெரஞ்சிருக்க
கஞ்சியில் கரைஞ்ச உப்புக்கல்லு போல
கண்ணு கூட்டுல ஒளிஞ்சிருக்க
நம்ம பூமி வரண்டிருக்கு
உன் நாக்கு ஈரம் பட்டு வாழ்க்கை நனைஞ்சிருக்கு

அவத்த பொண்ணே செவத்த பொண்ணே அழிச்சாட்டியம் ஏனடி

வென்னி தண்ணி காச்சவா உன் மேலு காலு ஊத்தவா
காச்சு போன கையில உன் காஞ்ச மூஞ்சி தேய்க்கவா

கொட்டான் குச்சியில் மேலு தேச்சி குளிக்க வையடி
ஏ ஆக்குள் பக்கம் மக்கபோரு ஆகுதே
நீ தள்ளி நில்லடி ஆறாதடி தொடாதடி

அவத்த பையா செவத்த பையா அழிச்சாட்டியம் ஏனடா

கூத்து பாக்க போகலாம் கூட வாட வாரியா
சொல்லு பேச்சு கேக்குறேன் கொஞ்சம் நெல்லு சோறு தாரியா

எள்ளு போட்ட ஈசல் தாரேன் உன்ன தருவியா
நான் முந்தி போட்ட மூடி வச்சு பூக்கள
நீ மோந்து பாத்தியா 
முத்தாடையா முட்டா பையா

அவத்த பொண்ணே செவத்த பொண்ணே
அழிச்சாட்டியம் ஏன்னடி 
இழுத்து வச்சு கழுத்தருக்க இளிச்சவாயன் நானடி
கயித்த அறுத்த கன்னுக்குட்டி போல
சித்தன் போக்கில் நான் அலைஞ்சேன்
கருவா சிறுக்கி சீலையில் இறுக்கி
கட்டி போட்டு சிரிக்கிறியே
உன் சூழ்ச்சி பலிச்சிருச்சே
நெல்லு சோத்து பானைக்குள்ளே பூனை விழுந்திருச்சே

படம் : பரதேசி (2013)
இசை : பிரகாஷ் குமார்
பாடியவர்கள் : யாசின், வந்தனா சீனிவாசன்
வரிகள் : வைரமுத்து

Thursday, January 24, 2013

மஞ்சள் நிற போதையிலே



மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே
என்னுடைய தேவதைகள் பின்னாலே வருகிறது
மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே
என்னுடைய தேவதைகள் பின்னாலே வருகிறது
இருக்கையில் நான் இருந்து பங்கு போட்டு குடிக்கையில்
சாத்தானும் சாமியுமே கூடவே குடிக்குது
சாத்தானும் சாமியுமே கூடவே குடிக்குது

மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே
என்னுடைய தேவதைகள் பின்னாலே வருகிறது
சாராயம் குப்பியின் குப்பிய நீ கழுட்டு
மூச்ச நீ பிடிச்சு அதுக்குள்ள இறங்கு
வட்ட வட்ட தத்துவம் அங்கே துளர்ருது
வட்ட வட்ட தத்துவம் அங்கே துளர்ருது
சட்டசபை கூட அங்கே திணறது
சட்டசபை கூட அங்கே திணறது

மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே
என்னுடைய தேவதைகள் பின்னாலே வருகிறது
ஒத்த காலில் தவம் செய்யும் கண்ணாடி கோப்ப
அத சுத்தி சுத்தி நிக்குதடா எத்தனை மனுசங்க
ஒன்னு ஒன்னும் எத்தனை என்று நான் கேட்கவா
ஒன்னு ஒன்னும் எத்தனை என்று நான் கேட்கவா
ஒன்னும் ஒன்னு ஒன்று தானடி காதல் கதை சொல்லவா

மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே
என்னுடைய தேவதைகள் பின்னாலே வருகிறது

விட்டு போன காதலியோ மூளையின் நரம்பினில்
பட்டாம்பூச்சியாக கூடவே இருக்கிறாள்
நான் குடிக்கும் கோப்பையில் பனித்துளி போலவே
நான் குடிக்கும் கோப்பையில் பனித்துளி போலவே
கண்ணீரை ஊற்றி மெல்ல எனக்கு தருகிறாள்
கண்ணீரை ஊற்றி மெல்ல எனக்கு தருகிறாள்

மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே
என்னுடைய தேவதைகள் பின்னாலே வருகிறது
கொஞ்சம் மது கிடைத்தால்
கொஞ்சம் மது கிடைத்தால்
கொஞ்சம் மது கிடைத்தால் எனக்கே தந்து
என்னை பாட்டு எடுத்து பாட சொல்லும் கூட்டம் இங்கு உள்ளது
என்னுடைய பாட்டு பல பூட்டுகளை திறக்கும்
என்னுடைய பாட்டு பல பூட்டுகளை திறக்கும்
மாந்தீரிக சாவி போல வந்து வந்து பறக்கும்
மாந்தீரிக சாவி போல வந்து வந்து பறக்கும்

மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே
என்னுடைய தேவதைகள் பின்னாலே வருகிறது
குடித்து குடல் அழுகி ரெண்டு நாளில் செத்து போவாய்
என்று சொன்ன மருத்துவன் நேத்தே செத்து போனான்
சாவுக்கு பயம் இல்லை சாத்திரங்கள் ஏதும் இல்லை
சாவுக்கு பயம் இல்லை சாத்திரங்கள் ஏதும் இல்லை
இன்று இருப்பர் நாளை இல்லை என்றே குடிக்கிறேன்
இன்று இருப்ப நாளை இல்லை என்றே குடிக்கிறோம்

மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே
என்னுடைய தேவதைகள் பின்னாலே வருகிறது
கொம்புகள் முளைத்த கிடா மூளையின் பின்னால் வந்து
ஆயிரம் நினைவுகளை முட்டியே கிளறது
காகங்கள் எல்லாம் என்னை சுற்றி ஆர்ப்பரித்து பாடுது
காகங்கள் எல்லாம் என்னை சுற்றி ஆர்ப்பரித்து பாடுது
மனிதனின் எச்சில் மட்டும் குற்றங்களை சொல்லுது
மனிதரின் எச்சில் மட்டும் குற்றங்களை சொல்லுது

மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே
என்னுடைய தேவதைகள் பின்னாலே வருகிறது
இருக்கையில் நான் இருந்து பங்கு போட்டு குடிக்கையில்
சாத்தானும் சாமியுமே கூடவே குடிக்குது
சாத்தானும் சாமியுமே கூடவே குடிக்குது

மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே
என்னுடைய தேவதைகள் பின்னாலே வருகிறது

மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே
என்னுடைய தேவதைகள் பின்னாலே வருகிறது
மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே
என்னுடைய தேவதைகள் பின்னாலே வருகிறது
மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே
என்னுடைய தேவதைகள் பின்னாலே வருகிறது
மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே
என்னுடைய தேவதைகள் பின்னாலே வருகிறது
மஞ்சள் நிற போதையிலே கட்டெறும்பு போகையிலே
என்னுடைய தேவதைகள் பின்னாலே வருகிறது

படம் : மதுபான கடை (2012)
இசை : வேத் சங்கர்
பாடியவர் : ராஜ்குமார்
வரிகள் : ராஜ்குமார்

Wednesday, January 23, 2013

பொல்லாத குதிரை



பொல்லாத குதிரை ஏறி மோகம் தீர்க்கும் காதல்காரி
தீராத ஆசை மூட்டி போதை ஏற்றும் மாயக்காரி
நீ குதிரை ஏறி தீண்டும் இன்பம் தாராய்

உயிரோடு உயிர் சேர சுவாசத்தில் வேர்வை பூக்குதே
மனம் இரண்டும் பாம்பாகி பிணைந்தேரும் வாசம் வீசுதே
நெஞ்சின் ஓரத்தில் யாகங்கள் செய்கின்றாய்
ஜாலப்பறவை போல் நீ சுற்றி வருகின்றாய்
கூந்தல் கூட்டுக்குள் நீ வந்து அடைகின்றாய்
தீயில் தீயாக பற்றி கொள்வாய்
ஒழுகும் இளநீராய் நீ பேசி கொல்கின்றாய்
உள்ளங்கையில் நீ மருதாணி ஆகின்றாய்
துள்ளும் மழையாக நீ என்னை பொழிகின்றாய்
வேக மழையாக நீ என்னை குளிரூட்டுவாய்

உயிரோடு உயிர் சேர சுவாசத்தில் வேர்வை பூக்குதே
மனம் இரண்டும் பாம்பாகி பிணைந்தேரும் வாசம் வீசுதே

அதிரும் உடலுக்குள் புதிராக வருகின்றாய்
சிதறும் வண்ணத்தில் பூனை போல் அலைகின்றாய்
காம புனலாடி நீந்தி களிக்கின்றாய்
திமிரும் தோள் மீது அலை மோதவா
பென்சில் புருவத்தால் ஏதேதோ வரைகின்றாய்
சின்ன வெயிலாக தோள் மீது சாய்கின்றாய்
மூளைக்குள்ளே நீ பேயாக தெரிகின்றாய்
என்னை ஒருவாய் நீ பருகி கொள்வாய்

படம் : மதுபான கடை (2012)
இசை : வேத் சங்கர்
பாடியவர்கள் : கெளதம் பரத்வாஜ், வந்தனா சீனிவாசன்
வரிகள் : ராஜ்குமார்

Tuesday, January 22, 2013

ஆகாயம் மேலே பாதாளம் கீழே



ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே

ஆகா நான் தான் மைக்கேல்
அடி நீதான் மை கேர்ள்

நில்லாமல் சுழலும் பூமி இது
எல்லாரும் நடிக்கும் மேடை இது

 போட்டேன் நானும் வேஷங்களை
படித்தேன் வாழ்க்கைப் பாடங்களை
நடிப்பேன் உந்தன் மன்றத்திலே
இடம் பிடிப்பேன் உந்தன் நெஞ்சத்திலே
நாடகமா இன்னும் சாகசமா
இந்த ஊடல்கள் எனக்கு ஆகாதம்மா!

பொன்னாக மின்னும் நான் தொட்டது
உன் மீது எந்தன் கை பட்டது
இனிமேல் உன்னை யார் விட்டது
இளமை சுகங்கள் வேர்விட்டது
பெண்ணே எந்தன் எண்ணப்படி - அடி
கண்ணே என்னைக் கட்டிப்பிடி
பூங்கொடியே சிறுமாங்கனியே
உன் கண்களில் ஆயிரம் காதல் கதை

எல்லாமே புதுமை என் பாணியில்
சொல்லாமல் புரியும் என் பார்வையில்
திறமை இருந்தால் மாலையிடு
இல்லை என்றால் ஆளை விடு
ராணி என்றும் என்னோடுதான் இந்த
ராஜா உந்தன் பின்னோடுதான்
காவலில்லை ஒரு கேள்வியில்லை
இது ராத்திரி நேர ராஜாங்கமே




படம்: நான் வாழவைப்பேன்
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

சமரசம் உலாவும் இடமே



சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

குடியின்றி அமையாது உலகடா அதில் நீந்தும் குதிரை நாமடா
நரை முடியில் இளமை ஏறலாம் நடனங்கள் ஆடலாம்
கண்ணாடி முகமும் உடையலாம் உண்மைகள் பிறக்கலாம்
நெருக்கடி தீர்ந்திட போதையில் மனங்களோ குறுக்கு வழி தேடுது
கலகமும் இங்கிருந்து பிறக்குது மாற்றங்கள் அதில் மறைந்து கிடக்குது

சமரசம் உலாவும் இடமே

இவனை பல சுமைகள் விரட்டும் எரியும் அதில் பல சுகமே
கலகம் பல கனவை அழிக்க உடையும் அதில் பல மனமே
போலி சரக்கு எல்லாம் வருகின்றது குடிமக்கள் கொலை இங்கு நடக்கின்றது
பாருக்குள் பணமெல்லாம் பறிபோகுது முதலைகள் சாராயம் வடிக்கின்றது
மனதிலே வரும் சுகம் ஒரு நொடியில் அழிகையில் அழும் இது வழியில்

சமரசம் உலாவும் இடமே
சமரசம் உலாவும் இடமே

குடியின்றி அமையாது உலகடா

ஜாதியில் மேலோர் என்றும்
தாழ்ந்தவர் தீயோர் என்றும் பேதமில்லாது

போதையில் பல நினைவு தொலையும் அதிலும் வேஷம் பல இருக்கும்
சாதியில் பல ஏற்ற தாழ்வினை தூக்கியே எறிய அது மறுக்கும்
மதுரை வீரன் குதிரை பறக்கின்றது
பொல்லாத பகையெல்லாம் அழிகின்றது
ஆனாலும் சண்டைகள் நடக்கின்றது
தள்ளாடும் உடலெல்லாம் விழுகின்றது
துரோகமும் தினம் வரும் இது வழியில்
சமரசம் அழும் பொது வழியில்

சமரசம் உலாவும் இடமே
சமரசம் உலாவும் இடமே
சமரசம் உலாவும் இடமே
சமரசம் உலாவும் இடமே
சமரசம் உலாவும் இடமே

குடியின்றி அமையாது உலகடா அதில் நீந்தும் குதிரை நாமடா
நரை முடியில் இளமை ஏறலாம் நடனங்கள் ஆடலாம்
கண்ணாடி முகமும் உடையலாம் உண்மைகள் பிறக்கலாம்
நெருக்கடி தீர்ந்திட போதையில் மனங்களோ குறுக்கு வழி தேடுது
கலகமும் இங்கிருந்து பிறக்குது மாற்றங்கள் அதில் மறைந்து கிடக்குது

சமரசம் உலாவும் இடமே

சமரசம் உலாவும் இடமே

படம் : மதுபான கடை (2012)
இசை : வேத் சங்கர்
பாடியவர் : பாலக்காடு ஸ்ரீராம், சீர்காழி கோவிந்தராஜன்
வரிகள் : ராஜ்குமார்

Monday, January 21, 2013

ஆம்லெட் போட்டேன்



ஆம்லெட் போட்டேன் முட்டைய காணோம்
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
பூட்ட திறந்தா வீட்டை காணோம்
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
உச்சி வெயில மேல காணோம்
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
முழிச்சு பார்த்தேன் நைட்டை காணோம்
In between something missing
In between something missing

சரக்கு அடிச்சேன் பயத்தை காணோம்
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
இங்க தான் வச்சேன் எங்கேயோ காணோம்
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
போனை போட்டேன் பேலன்சை காணோம்
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
முதலும் காணோம் முடிவும் காணோம்

In between something missing
In between something missing
In between something missing

படம் : நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (2012)
இசை : வேத் சங்கர்
பாடியவர் : வேத் சங்கர்
வரிகள் : பேஸ்புக் பேன்ஸ்

Sunday, January 20, 2013

ஹேய் கிரேசி பெண்ணே



ஹேய் கிரேசி பெண்ணே யாரடி நீயே
மை கியூட்டி கட்டிலி டெட்லி லவ்லி மெலடி நீயே
ஹேய் க்ரேசி பெண்ணே லோன்லி நானே
தனியாய் தவிக்க விட்டு எங்கே சென்றாய் நீயே
உன்னாலே நெஞ்சினுள்ளே ட்ரிங் ட்ரிங்
சொன்னாலே உள்ளுக்குள்ளே சம்திங்
வெண்மதியே அடியேய்
ஜில் மழையே என் கண்மணியே
வெண்மதியே அடியேய்
ஜில் மழையே என் கண்மணியே

இட்லி சட்னி போல சென்னா பூரி போல
சூப்பர் ஜோடி கிடைச்சிடுமா மாமி
மேரி ஜானி தில் கி ராணி
என்னை நோக்கி வருவாயா நீயே
அடியே என் ரதியே ஒரு நொடியே நில் அடியே
விழியால் உன் விழியால் நான் விழுந்தேனடி
ஹேய் இருடி ஹேய் திருடி நீ கொஞ்சம் தானே சிரிடி
மருதாணி பூவே நீ கொஞ்சம் கொஞ்சடி
அழகி அழகி அழகி

ஹேய் கிரேசி பெண்ணே யாரடி நீயே
மை கியூட்டி கட்டிலி டெட்லி லவ்லி மெலடி நீயே
ஹேய் க்ரேசி பெண்ணே லோன்லி நானே
தனியாய் தவிக்க விட்டு எங்கே சென்றாய் நீயே

காதலி என்னை காதல் செய்ய
காலம் முழுதும் காப்பேனே நானே
மறுபடி நீயும் மறு உயிர் தந்தாய்
மனதினில் மிதந்தாய் மர்மமாய் நீயே
குயிலே கூ குயிலே அவளிடமே செல் அடியே
காதல் என் காதல் கொஞ்சம் சொல்லி வாயே
மறுப்பா அவ முறைப்பாள் உன்னை துரத்தி துரத்தி அடிப்பா
அவளே என் உயிரின் காதலியே

ஹேய் கிரேசி பெண்ணே யாரடி நீயே
மை கியூட்டி கட்டிலி டெட்லி லவ்லி மெலடி நீயே
ஹேய் க்ரேசி பெண்ணே லோன்லி நானே
தனியாய் தவிக்க விட்டு எங்கே சென்றாய் நீயே
உன்னாலே நெஞ்சினுள்ளே ட்ரிங் ட்ரிங்
சொன்னாலே உள்ளுக்குள்ளே சம்திங்
வெண்மதியே அடியேய்
ஜில் மழையே என் கண்மணியே
வெண்மதியே அடியேய்
ஜில் மழையே என் கண்மணியே

படம் : நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (2012)
இசை : வேத் சங்கர்
பாடியவர் : வேத் சங்கர்
வரிகள் : வேத் சங்கர்

Saturday, January 19, 2013

பூவும் பூவும் பேசும் நேரம் - ஆதலால் காதல் செய்வீர்


http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGYSR0566'&lang=en


பூவும் பூவும் பேசும் நேரம்
தூறல் தூறும் ஜன்னலோரம் நின்றேனடி
போதும் போதும் என்றபோதும்
தீயில் வாடும் தேவபோதை தந்தாயடி

என் தேவதை இது மாயமோ சொல்
என் பூமியில் நான் இல்லையே
தேடித் தேடி கண்கள் தேயுதே
வேறு பூமி செய்யத் தோணுதே
கோடி கோடி மின்னல்
என்னிலே பூ பூக்குதே

ஆயிரம் நாடகம் ஆடினாய் நீயடா
மாயமாய் காயங்கள் செய்கிறாய்
நாடகம் ஆடவே மேடையும் நீயடி
காற்றிலே ஓவியம் வரைகிறாய்

தீராத பொய்கள் பேசியே
தித்திக்கும் இம்சை செய்கிறாய்
பார்வையில் கத்திகள் வீசி நீ
நோகாமல் என்னைக் கொல்கிறாய்

அதனாலே நானுமிங்கே
தூங்காத கடலுமானேன்
தாலாட்ட நீயும் வருவாய்
அலையாய் அலையாய்

சித்திரை மார்கழி சேர்ந்ததோர் முத்தமே
செய்யவா செல்லமே உன்னிடம்
யாரிடம் கேட்கிறாய் நானில்லை என்னிடம்
வானவில் நாணலாய் ஆடுதே

நீரின்றி வானில் வாழ்ந்திடும்
விண்மீன்கள் மண்ணில் காண்கிறேன்
மேகத்தில் மேயும் வெண்ணிலா
தேகத்தில் வந்து காயுதே

உறங்காத இரவுகள் மேலே
அடங்காத கனவுகளாலே
மிதந்திடும் பனித்துளி போலே
புதிதாய்ப் பிறந்தேன்


படம்: ஆதலால் காதல் செய்வீர்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: ஜெ.ப்ரான்சிஸ் கிருபா
பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ், வினைதா

ஒ கிரேசி மின்னல்


ஒ கிரேசி மின்னல் அழகிய கண்ணில்
அச்சங்கள் பறவை போல பறந்து போகும் விண்ணில்
கண்ணாடி கண்ணில் உன் முகம் தானே
கண்ணீரை சீனி மிட்டாய் செய்து விட்டாய் நீயே
நீ தானே காதல் செல்லப்பிராணி
நீ போனால் வாழ இல்லை திராணி

ஜில் சுடரே சுடரே
நில் இடரே என் மன புதிரே
மின் மினியே மினியே
என் வழியே என் வழி துணையே

இட்லி மாவில் கோலம் போட்டேன்
மெடிக்கல் ஷாப்பில் கருவேப்பிலை கேட்டேன்
சாக்பீஸ் பொடியில் விண்மீன் பார்த்தேன்
சிலந்தியின் வலையில் வானவில்லை கண்டேன்
அடியில் மரத்தடியில் சிறு இலையாக இருந்தேன்
புயலில் ஒரு புயலில் என்னை நீ ஏற்றினாய்
கரையில் கடற் கரையில் ஒரு சுவடாக இருந்தேன்
அலையில் வெள்ளலையில் எனை நீ தீண்டினாய்
அழகாய் மெதுவாய் இயல்பாய்

ஒ கிரேசி மின்னல் அழகிய கண்ணில்
அச்சங்கள் பறவை போல பறந்து போகும் விண்ணில்
கண்ணாடி கண்ணில் உன் முகம் தானே
கண்ணீரை சீனி மிட்டாய் செய்து விட்டாய் நீயே
நீ தானே காதல் செல்லப்பிராணி
நீ போனால் வாழ இல்லை திராணி

ஜில் சுடரே சுடரே
நில் இடரே என் மன புதிரே
மின் மினியே மினியே
என் வழியே என் வழி துணையே

படம் : நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (2012)
இசை : வேத் சங்கர்
பாடியவர் : அண்ட்ரியா
வரிகள் : கார்த்திக் நேதா

Friday, January 18, 2013

யாவும் பொய்தானா - ஆதிபகவன்




thiraipaadal.com

யாவும் பொய்தானா
காதல் தவிர மண் மேலே
நீ என் உயிர்தானா
நானும் பிழைத்தேன் உன்னாலே

காதல் உன்னோடு கருவானதே
காற்றில் இசை போல பறிபோனதே
இதுவரை இது இல்லை
எதுவரை இதன் எல்லை
எனக்கொரு பதில் சொல்வாயடா

உனக்கான  மெளனத்தில்
எனக்கான வார்த்தையை
நான் தேடிப் பார்த்ததில்
சுகம் கண்டேன் கண்டேன் நான்தானடா
புவியெங்கும் இதயங்கள்
வாழ்கின்ற போதிலும்
எனக்கான இதயமாய்
உனைக் கண்டேன் கண்டேன் நான்தானடா

உந்தன் உறவே
போதும் எனக்கு அன்பே
உந்தன் அணைப்பால்
மூச்சை நிறுத்து அன்பே
கொஞ்சம் மயக்கம்
கொஞ்சம் தயக்கம்
ரெண்டும் காதல் தந்த பரிசுதான்
கொஞ்சம் நெருக்கம்
கொஞ்சம் இரக்கம்
ரெண்டும் பெண்மை கேட்கும் பரிசுதான்


ஆசை அனைத்தும்
உன்னை நோக்கியே போக
ஓசை இன்றியே
வார்த்தை அனைத்தும் சாக
தூங்கும் விழிகளில் தூறல் விழுந்ததாய்
தூரம் குறைகையில் உணர்கிறேன்
எந்தன் அறைகளில் அடைத்திரைகளை
விட்டு விலகி நான் மலர்கிறேன்


உனக்கான  மெளனத்தில்
எனக்கான வார்த்தையை
நான் தேடிப் பார்த்ததில்
சுகம் கண்டேன் கண்டேன் நான்தானடா
புவியெங்கும் இதயங்கள்
வாழ்கின்ற போதிலும்
எனக்கான இதயமாய்
உனைக் கண்டேன் கண்டேன் நான்தானடா


படம்: ஆதிபகவன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: சினேகன்
பாடியவர்: மதுஶ்ரீ

நினைவுகள் நெஞ்சினில்




நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்
தாய் தந்தைக்காக எனை பிரிய
காதலை காகிதமாய் தூக்கி எறிய
பெண்ணே உன்னால் முடிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை
எனக்கே எனக்கே என்னை பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்

காத்திருந்து காத்திருந்து பழகியவன்
நீ என்னை கடக்கின்ற ஒரு நொடிக்காக
காத்திருந்து காத்திருந்து பழகியவன்
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நீ என்னை காதலிக்க உன் தாய்மொழியை
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நொடிகள் எல்லாம் நோய்பட்டு எனை சுமந்து போக மறுக்கிறதே
மொழிகள் எல்லாம் முடமாகி என் மெளனத்தைக் கூட எரிக்கிறதே
சுவாசிக்க கூட முடியவில்லை
எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்
தாய் தந்தைக்காக எனை பிரிய
காதலை காகிதமாய் தூக்கி எறிய
பெண்ணே உன்னால் முடிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை
எனக்கே எனக்கே என்னை பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

படம் : ஆட்டோகிராஃப் (2004)
இசை : பரத்வாஜ்
பாடியவர் : உன்னிமேனன்
வரிகள் : சேரன்

Thursday, January 17, 2013

எம்.ஜி.ஆர் - மூன்றெழுத்தில் என் மூச்சு



மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும்
உள்ளம் என்று ஒரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கு ஒரு பெயர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை

அந்த மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும்
உள்ளம் என்று ஒரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கு ஒரு பெயர் இருக்கும்

பதவி வரும் போது பணிவு வர வேண்டும்
துணிவும் வர வேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வர வேண்டும் தோழா

பதவி வரும் போது பணிவு வர வேண்டும்
துணிவும் வர வேண்டும் தோழா
பாதை தவறாமல் பண்பு குறையாமல்
பழகி வர வேண்டும் தோழா
அன்பே உன் அன்னை அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில் ஒன்றே உன் தேவன்

மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும்
உள்ளம் என்று ஒரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கு ஒரு பெயர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை

வாழை மலர் போல பூமி முகம் பாக்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா

வாழை மலர் போல பூமி முகம் பாக்கும்
கோழை குணம் மாற்று தோழா
நாளை உயிர் போகும் இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்று தோழா
அன்பே உன் அன்னை அறிவே உன் தந்தை
உலகே உன் கோவில் ஒன்றே உன் தேவன்

மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும்
உள்ளம் என்று ஒரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கு ஒரு பெயர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை

படம் : தெய்வத்தாய் (1964) 
இசை : விஸ்வநாதன் 
பாடியவர் : செளந்தர்ராஜன் 
வரிகள் : வாலி

எம்.ஜி.ஆர் - போயும் போயும் மனிதனுக்கிந்த



போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை குடுத்தானே
இறைவன் புத்தியை குடுத்தானே
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியை கெடுத்தானே
மனிதன் பூமியை கெடுத்தானே
போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை குடுத்தானே

கண்கள் இரண்டில் அருள் இருக்கும்
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
கண்கள் இரண்டில் அருள் இருக்கும்
சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும்
அது உடன் பிறந்தோரையும் கருவறுக்கும்
பாயும் புலியின் கொடுமையை இறைவன் பார்வையில் வைத்தானே
புலியின் பார்வையில் வைத்தானே
இந்த பாழும் மனிதன் குணங்களை மட்டும் போர்வையில் மறைத்தானே
இதய போர்வையில் மறைத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை குடுத்தானே

கைகளை தோளில் போடுகிறான்
அதை கருணை என்று அவன் கூறுகிறான்
கைகளை தோளில் போடுகிறான்
அதை கருணை என்று அவன் கூறுகிறான்
பைகளில் எதையோ தேடுகிறான்
கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்

போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை குடுத்தானே
இறைவன் புத்தியை குடுத்தானே
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியை கெடுத்தானே
மனிதன் பூமியை கெடுத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை குடுத்தானே

படம் : தாய் சொல்லை தட்டாதே (1961)
இசை : மகாதேவன் 
பாடியவர் : செளந்தர்ராஜன் 
வரிகள் : கண்ணதாசன்

Wednesday, January 16, 2013

விஸ்வரூபம் - எவன் என்று நினைத்தாய்



எவன் என்று நினைத்தாய் எதை கண்டு சிரித்தாய்
விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் முழு ரூபம்

நெருப்புக்கு பிறந்தான் நித்தம் நித்தம் மலர்ந்தான்
வேளை வந்து சேரும் போது வெளிப்படும் சுயரூபம்

யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா

யாருக்கும் அடிமை இல்லை
இவன் யாருக்கும் அரசன் இல்லை
காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுதும்
காட்டுக்கு காயம் இல்லை

எவன் என்று நினைத்தாய் எதை கண்டு சிரித்தாய்
விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் புது ரூபம்

நெருப்புக்கு பிறந்தான் நித்தம் நித்தம் மலர்ந்தான்
வேளை வந்து சேரும் போது வெளிப்படும் சுயரூபம்

சின்ன சின்ன அணுவாய் மண்ணுக்குள்ளே கிடப்பான்
வெட்டுப்படும் வேளையிலே வெளிப்படும் விஸ்வரூபம்

என்ன ரூபம் எடுப்பான் எவருக்கு தெரியும்
சொன்ன ரூபம் மாற்றி மாற்றி எடுப்பான் விஸ்வரூபம்

யார் என்று புரிகிறதா 
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா
யாருக்கும் அடிமை இல்லை
இவன் யாருக்கும் அரசன் இல்லை
காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுதும்
காட்டுக்கு காயம் இல்லை

படம்: விஸ்வரூபம் (2013)
இசை: ஷங்கர் - எஷான்- லோய்
பாடியவர்: சுராஜ் ஜெகன்
வரிகள் : வைரமுத்து

Tuesday, January 15, 2013

விஸ்வரூபம் - உன்னை காணாது




உன்னை காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேறில்லையே
உன்னை காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேறில்லையே

மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா கண்ணா
கிருஷ்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா

உன்னை காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேறில்லையே
நிதம் காண்கின்ற வான் கூட நிஜமல்ல
இதம் சேர்க்கும் கனா கூட சுகமல்ல
நீ இல்லாமல் நான் இல்லையே
உன்னை காணாமல்
உன்னை காணாமல்
உன்னை காணாமல்
உன்னை காணாமல்

உன்னை காணாமல் பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேறில்லையே

நளினி மோகண சியாமள ரங்கா
நடன பாவ ஸ்ருதிலய கங்கா
சரிவர தூங்காது வாடும்
ராதா நான் உனக்கென
ராதா தான் உனக்கொரு
ராதா தான்

அவ்வாறே நோக்கினால் எவ்வாறு நாணுவேன்
கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்
ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்
ஒத்திக்கைகள் செய்து எதிர்பார்த்திருந்தேன்
எதிர்பாராமலே அவன்
எதிர்பாராமலே அவன்
ஒ பின் இருந்து வந்து எனை
பம்பரமாக சுழற்றி விட்டு
உலகுண்ட பெரு வாய்யன் எந்தன் வாயோடு வாய் பதித்தான்
இங்கு பூலோகம் என்று ஒரு பொருள் உள்ளதை
இந்த பூங்கோதை மறந்தாளடி

உடலணிந்த ஆடை போல் எனை அணிந்து கொள்வாயா இனி நீ
இனி நீ கண்ணா
தூங்காத என் கண்ணில் துயில் உரித்த கண்ணன் தான்
இனி நீ இனி நீ
இது நேராமலே நான்
உன்னை பாராமலே நான்
இந்த முழுஜென்மம் போயிருந்தால்
என்றும் அதை எண்ணி வீண் ஏக்கம் ஏங்காமலே
உன்னை மூச்சாகி வாழ்வேனடா

மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா
காமக் கலைஞன் கண்ணா
கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா

படம் : விஸ்வரூபம் (2013)
இசை : ஷங்கர் – எஷான் - லோய்
பாடியவர்கள் : கமல்ஹாசன், ஷங்கர் மகாதேவன்
வரிகள் : கமல்ஹாசன்

Monday, January 14, 2013

விஸ்வரூபம் - துப்பாக்கி எங்கள்



துப்பாக்கி எங்கள் தொழிலே
துர்பாக்கியம் தான் வாழ்விலே
எப்போதும் சாவு நேரிலே
இப்போது வெல்வோம் போரிலே

போர்களை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை
போர் தான் எம்மை தேர்ந்தெடுத்து கொண்டது
எங்களின் கையில் ஆயுதங்கள் இல்லை
ஆயுதத்தின் கையில் எங்கள் உடல் உள்ளது
ஊரை காக்கும் போருக்கு ஒத்திகை செய்கின்றோம்
சாவே எங்கள் வாழ்வென்று சத்தியம் செய்கின்றோம்

ஓட்டக முதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது
டாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது
நீதி காணாமல் போர்கள் ஓயாது

துப்பாக்கி எங்கள் தோழனே
தோள் கொண்ட வீரன் தெய்வமே
எப்போதும் எங்கள் கோப்பையில்
தேனீர் பருகும் மரணமே

பூமியை தாங்க புஜவீரம் கேட்கின்றோம்
புயலை சுவாசிக்க நுரையிரல் கேட்கின்றோம்
எக்கு திசைகளால் ஒர் இதயம் கேட்கின்றோம்
இருநூறாண்டு இளமை கேட்கின்றோம்

துப்பாக்கி எம் தலையணையாய் தூங்கி திரிகின்றோம்
தோளோடு எம் மரணத்தை தூக்கி திரிகின்றோம்
ஓட்டக முதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது
டாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது
நீதி காணமல் போர்கள் ஓயாது

படம் : விஸ்வரூபம் (2013)
இசை : ஷங்கர் – எசான் - லொய்
பாடியவர்கள் : கமல்ஹாசன்
வரிகள் : வைரமுத்து

Sunday, January 13, 2013

விஸ்வரூபம் - அணு விதைத்த




There’s place far away
I wanna go there someday
There’s place far away
I wanna be there someday

அணு விதைத்த பூமியிலே
அறுவடைக்கும் அணுக்கதிர் தான்
பேராசை கடல் பொங்கி விட்டால் தங்குமிடம் இல்லை
புது வீடெதுவும் பால்வெளியில் இன்று வரை இல்லை
போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன் தான்
நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவால் பாரடா

கருவறையும் வீடல்ல
கடல் சூழலதும் உனதல்ல
நிரந்தரமாய் நமதென்று சொல்லும் இடம் இல்லை
நம் நோய்க்கு அன்பன்றி வேறு மருந்தில்லை
போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன் தான்
நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவால் பாரடா

There’s place far away
I wanna go there someday
There’s place far away
I wanna be there someday
There’s place

படம் : விஸ்வரூபம் (2013)
இசை : ஷங்கர் - எசான் - லொய்
பாடியவர்கள் : நிகில், கமல்ஹாசன்
வரிகள் : கமல்ஹாசன்

Saturday, January 12, 2013

ஊரோரம் புளியமரம்



ஊரோரம் புளியமரம் உலுப்பி விட்டா சலசலங்கும்
ஊரோரம் புளியமரம் உலுப்பி விட்டா சலசலங்கும்
நாம் பிறந்த மதுரையிலே ஆளுக்காளு நாட்டாமைய்யா
நாம் பிறந்த மதுரையிலே ஆளுக்காளு நாட்டாமைய்யா

கூடுனமே கூடுனமே கூட்டு வண்டி காளை போலே
கூடுனமே கூடுனமே கூட்டு வண்டி காளை போலே
மாட்டினமே மாட்டினமே நாரப்பய கையி மேலே
மாட்டினமே மாட்டினமே நாரப்பய கையி மேலே

நாடறிஞ்ச அழகிகளா  நீங்க எங்க ஜோடி
உங்களை கட்டிக்கவா வச்சிக்கவா சொல்லிப்புடுங்கடி
கத்தரிப்பூ  ரவிக்கை போட்ட சின்னப்பைங்கிளி
கத்தரிப்பூ  ரவிக்கை போட்ட சின்னப்பைங்கிளி
உன்னை குவாட்டருக்கு ஊறுகாயா தொட்டுக்க வாடி
உன்னை குவாட்டருக்கு ஊறுகாயா தொட்டுக்க வாடி

ஆளில்லாத காட்டுக்குள்ளே பயலே
ரவுசு பண்ணும் சின்னத்தம்பி
நைட் எல்லாம் ஆட்டம் போட்டு
எனக்கு காலு ரெண்டும் நோகுதடா
எனக்கு காலு ரெண்டும் நோகுதடா

அடி ராவெல்லாம் ஆட்டம் போட்டு
உனக்கு காலு ரெண்டும் இப்போ நொந்தால் என்ன
இந்த பருவமுள்ள பையங்கிட்ட
நீயும் பாசாங்கம் பண்ணாதடி பண்ணாதடி

பருவமுள்ள பையங்கிட்ட
நானும் பாசாங்கம் பண்ணவில்லை
பாசாங்கம் பண்ணுரண்டு நீயும்
அறிவுக்கெட்டு பேசாதடா
நீ அறிவுக்கெட்டு பேசாதடா

அடி மாடி மேலே மாடி வெச்சு மாரளவு ஜன்னல் வெச்சு
அப்டி போடு சித்தப்பு
எட்டி எட்டி பாத்தாலுமே எரவ பொண்டாட்டி நீதான்டி
ஆஹா ஆஹா ஆஹா
அடி காதறுந்த மூளி உன்னை கட்டுவேன்டி தாலி
அடி காதறுந்த மூளி உன்னை கட்டுவேன்டி தாலி

அட இந்த பாட்டு படிக்காதடா எனக்கு வெக்கம் ஆகுதடா
ஆமா ஆமா ஆமோய்
பொசக்கெட்ட பயலே உனக்கு பொண்டாட்டியும் கேக்குதாடா

நெத்தியிலே ஆமோய்
நெத்தியிலே பொட்டு வைச்சு நீ வரணும் சேலைக்கட்டி
நெத்தியிலே பொட்டு வைச்சு நீ வரணும் சேலைக்கட்டி
மத்தியான வெயிலுக்குள்ளே ஒத்தை வெளியிலே
மத்தியான வெயிலுக்குள்ளே ஒத்தை வெளியிலே
நீ மனசு வெறுத்து போற காரணம் எனக்கும் தெரியலை
நீ மனசு வெறுத்து போற காரணம் எனக்கும் தெரியலை

கோணாங்கிரப்பு வேட்டி குதிக்கால் உயர்த்தி கட்டி
கோணாங்கிரப்பு வேட்டி குதிக்கால் உயர்த்தி கட்டி
ஆசை காட்டி மோசம் செய்யிற ஆம்பளை நீங்க
ஆசை காட்டி மோசம் செய்யிற ஆம்பளை நீங்க
உங்களை அறிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க
உங்களை அறிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க

அடி அல்லி ஆமோய்
அல்லி மயிருயர்த்தி ஆதாரமா கொண்டையிட்டு
அல்லி மயிருயர்த்தி ஆதாரமா கொண்டையிட்டு
புள்ளிமானை போல துள்ளி போகும் வழியிலே
புள்ளிமானை போல துள்ளி போகும் வழியிலே
உங்களை புரிஞ்சுகிட்டா மனசு சும்மா இருக்க முடியலை
உங்களை புரிஞ்சுகிட்டா மனசு சும்மா இருக்க முடியலை

போடா போடா பொடிப்பயலே புத்தி கெட்ட மடப்பயலே
போடா போடா பொடிப்பயலே புத்தி கெட்ட மடப்பயலே
ஈனங்கெட்ட சின்னப்பய என்னென்னமோ பேசுரானாம்
உனக்கும் எனக்கும் சண்டை இப்போ உடைய போகுது மண்டை
அட உனக்கும் எனக்கும் சண்டை இப்போ உடைய போகுது மண்டை

அடியே குட்டப்புள்ள அன்னக்கிளி கிட்ட வந்து சேதி கேளு
அடியே குட்டப்புள்ள அன்னக்கிளி கிட்ட வந்து சேதி கேளு
பொறுப்புடனே நாங்க இருந்தா வெறுப்பு வராது
பொறுப்புடனே நாங்க இருந்தா வெறுப்பு வராது
எங்களை புரிஞ்சுகிட்டா மனசு சும்மா இருக்க விடாது
எங்களை புரிஞ்சுகிட்டா மனசு சும்மா இருக்க விடாது

படம் : பருத்திவீரன் (2007)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள் : பாண்டி, லட்சுமி, கலா, சரோஜா
வரிகள் : சிநேகன்

Friday, January 11, 2013

நீர்ப்பறவை - பற பற பற



பற பற பற பறவை ஒன்று
கிறு கிறுவென தலையும் சுற்றி
உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா
அது பறந்திட வானம் இல்லை
அது இருந்திட பூமியும் இல்லை
உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா 
ஒ அன்பே எந்தன் வாழ்வுக்கு ஆசிர்வாதம் நீயடி
கண்ணீராடும் பிள்ளைக்கு நீயே கன்னி தாயடீ 
உன்னை காண மீண்டும் மீண்டும்
கண்கள் தூண்டும் இருமுறை வருமா வானவில் வருமா

பற பற பற பறவை ஒன்று
கிறு கிறுவென தலையும் சுற்றி
உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா
அது பறந்திட வானம் இல்லை
அது இருந்திட பூமியும் இல்லை
உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா 

தேவாலயம் மெழுகும் நானே
திரி எரியும் தீயும் நீயே
என் தேகம் கண்ணீர் விட்டு கரையுதே
மீன் கொத்த செல்லும் பறவை
மீன் வலையில் விழுந்தது போல
வாழ்கை உன் சாலை ஓரம் தவிக்குதே
மழையில் கழுவிய மணலிலே
தொலைந்த கால்நடை நானடி
முகத்தை தொலைத்த என் வாழ்வுக்கு
நிலைத்த முகவரி நீயடி
பெட்ரோல் மீது தீயை போல
உந்தன் மீது பற பற என பரவுது மனசு

பற பற பற பறவை ஒன்று
கிறு கிறுவென தலையும் சுற்றி
உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா
அது பறந்திட வானம் இல்லை
அது இருந்திட பூமியும் இல்லை
உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா 

என் உயிரை அர்ப்பணம் செய்தேன்
உன் பெயரை ஸ்தோத்திரம் செய்தேன்
சத்தியமும் ஜீவனுமாய் நிலைக்கிறாய்
பெற்றவரை வீட்டில் மறந்தேன்
மற்றவரை ரோட்டில் மறந்தேன்
மறதியிலும் உன் நினைவை மலர்க்கிறாய்
மங்கை என் குரல் கேளடி
நான் மதுவில் கிடக்கின்றேனடி
எனது அசுத்தங்கள் பாரடி
வந்து என்னை பரிசுத்தம் செய்யடி
பெட்ரோல் மீது தீயை போல
உந்தன் மீது பற பற என பரவுது மனசு

பற பற பற பறவை ஒன்று
கிறு கிறுவென தலையும் சுற்றி
உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா
அது பறந்திட வானம் இல்லை
அது இருந்திட பூமியும் இல்லை
உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா 
ஒ அன்பே எந்தன் வாழ்வுக்கு ஆசிர்வாதம் நீயடி
கண்ணீராடும் பிள்ளைக்கு நீயே கன்னி தாயடீ 
உன்னை காண மீண்டும் மீண்டும்
கண்கள் தூண்டும் இருமுறை வருமா வானவில் வருமா

பற பற பற பறவை ஒன்று
கிறு கிறுவென தலையும் சுற்றி
உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா
அது பறந்திட வானம் இல்லை
அது இருந்திட பூமியும் இல்லை
உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா 

படம் : நீர்ப்பறவை (2012)
இசை : ரகுநந்தன்
பாடியவர் : பிரகாஷ் குமார்
வரிகள் : வைரமுத்து

Thursday, January 10, 2013

நீர்ப்பறவை - ரத்த கண்ணீர்



ரத்த கண்ணீர் முடியவில்லை
என் ராத்திரி மட்டும் விடியவில்லை

ரத்த கண்ணீர் முடியவில்லை
என் ராத்திரி மட்டும் விடியவில்லை

காயம் செய்த ஊருக்கு என் நியாயம் மட்டும் தெரியவில்லை
அறிந்தே நான் செய்த பிழை ஆண்டவர் தான் பொறுப்பாரே
அறியாமல் செய்த பிழை அன்பே நீ பொறுப்பாயா
மன்னித்தே என்னை கொள்ள மாட்டாயா

ரத்த கண்ணீர் முடியவில்லை
என் ராத்திரி மட்டும் விடியவில்லை

ஏன் இந்த கதி ஏன் இந்த விதி நொந்தேன் உயிர் நொந்தேன்
நான் கண்ட பழி நீ கொண்டு விட ஆவி வெந்தேன்
என் பாவங்களில் நான் வெட்கமுறவில்லை அடி இல்லை
என் பாவங்களில் நீ பங்கு பெற நியாயம் இல்லை
பாதை தான் காணாமல் பட்டம் தான் விடுகின்றேன்
போதை தான் இல்லாமல் இன்றே நான் அழுகின்றேன்
பாவத்தின் பள்ளம் விட்டு எழுகின்றேன்

ரத்த கண்ணீர் முடியவில்லை
என் ராத்திரி மட்டும் விடியவில்லை

ஊர் பேசியதே யார் ஏசியதையும் நெஞ்சை சுடவில்லை
நீ துன்பமுற நான் கண்டு வர ஜீவன் இல்லை
என் தண்டனையில் நீ வாடுவது குற்றம் என் குற்றம்
என் பாவநிலை ஏழு ஜென்மம் வரை சுற்றும் சுற்றும்
போதைக்குள் பிறந்தாலும் என் காதல் பொய் இல்லை
சேற்றோடு பிறந்தாலும் தாமரையில் அழுக்கில்லை
வா பெண்ணே உன்னை விட்டால் வாழ்வில்லை

ரத்த கண்ணீர் முடியவில்லை
என் ராத்திரி மட்டும் விடியவில்லை
காயம் செய்த ஊருக்கு என் நியாயம் மட்டும் தெரியவில்லை
அறிந்த நான் செய்த பிழை ஆண்டவர் தான் பொறுப்பாரே
அறியாமல் செய்த பிழை அன்பே நீ பொறுப்பாயா
மன்னித்தே என்னை கொள்ள மாட்டயா

ரத்த கண்ணீர் முடியவில்லை
என் ராத்திரி மட்டும் விடியவில்லை

படம் : நீர்ப்பறவை (2012)
இசை : ரகுநந்தன்
பாடியவர் : ஹரீஷ் ராகவேந்திரா
வரிகள் : வைரமுத்து

Wednesday, January 9, 2013

நீர்ப்பறவை - யார் வீட்டு மகனோ



யார் வீட்டு மகனோ மகனோ தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில் நீ வாழ இடமா இல்லை

யார் வீட்டு மகனோ மகனோ தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில் நீ வாழ இடமா இல்லை
நீ வந்து நிறையும்போது வாழ்வோடு வெறுமையில்லை
நாம் ஒன்று சேரும் போது நீ இங்கு ஒருமை இல்லை
மகனே நீயும் அன்பால் வளர்வாய்
கடலும் அன்னை கரை தான் தந்தை

யார் வீட்டு மகனோ மகனோ தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில் நீ வாழ இடமா இல்லை

நிலங்கள் நீளும் வரையில் உயிர்கள் வாழும் வரையில்
யாருமே அனாதை இல்லையே 
யாதும் இங்கு ஊரே ஆகுமே

புலங்கள் மாறிய போதும் புலன்கள் மாறுவதில்லை
ஊர்கள் தோறும் வானம் ஒன்று தான்
உயிர்கள் வாழ மானம் ஒன்று தான்

மழை சொட்டு மண்ணில் வீழ்ந்தால் மறுக்கின்ற பூமியும் இல்லை
மனிதர் இருவர் உள்ள வரைக்கும் அகதி என்று யாரும் இல்லை
கால தேசம் எல்லாம் மாறலாம் 
காதல் பாசம் எல்லாம் ஒன்று தான்

யார் வீட்டு மகனோ மகனோ தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில் நீ வாழ இடமா இல்லை
நீ வந்து இணையும்போது வாழ்வோடு வெறுமையில்லை
நாம் ஒன்று சேரும்போது நீ இங்கு ஒருமை இல்லை
மகனே நீயும் அன்பால் வளர்வாய்
கடலும் அன்னை கரை தான் தந்தை

யார் வீட்டு மகனோ மகனோ தாய் வீடு வந்தது பிள்ளை
நீர்ப்பறவை வாழும் நிலத்தில் நீ வாழ இடமா இல்லை

படம் : நீர்ப்பறவை (2012)
இசை : ரகுநந்தன்
பாடியவர் : அனந்த் அரவிந்த்கஷான்
வரிகள் : வைரமுத்து

Tuesday, January 8, 2013

நீர்ப்பறவை - மீனுக்கு சிறு மீனுக்கு



மீனுக்கு சிறு மீனுக்கு நான் மீன் வலை விரித்தேன்
தேவதை கடல் தேவதை வந்து விழுந்ததால் விழித்தேன்
கிச்சு கிச்சு பண்ணும் கிறிஸ்தவ பெண்ணே
பச்சை முத்தம் தர மனமில்லையா
ஒரு கன்னம் தர மறு கன்னம் காட்டு
திருமறை வரி நினைவில்லையா

அடடா முத்தம் பறிக்கிற வழி இது தான் குறுக்கு வழி
அது தான் என்னை கெடுக்குற வழி சிக்குமா படித்த கிளி

மீனுக்கு சிறு மீனுக்கு நான் மீன் வலை விரித்தேன்
தேவதை கடல் தேவதை வந்து விழுந்ததால் விழித்தேன்

பெண் கடல்களில் அலைகள் இல்லை அது போல் மெளனம் காக்கிறாய்
ஆண் கடல்களில் அலைகள் உண்டு அது போல் உன்னை தீண்டினேன்

அலை என்னும் கரம் நீட்டி நீட்டி அடி வருடியே போகிறாய்
வெட்கம் வந்து விழி மூடும் நேரம் முத்தம் கொள்ளையிட பார்க்கிறாய்

அன்பை தந்து அன்பை தந்து ஆளாக்கினாய் அப்போது
அள்ளி தந்து அள்ளி தந்து ஆணாக்குதல் எப்போது

அடடா முத்தம் பறிக்கிற வழி இது தான் குறுக்கு வழி
அது தான் என்னை கெடுக்குற வழி சிக்குமா படித்த கிளி

மீனுக்கு சிறு மீனுக்கு நான் மீன் வலை விரித்தேன்
தேவதை கடல் தேவதை வந்து விழுந்ததால் விழித்தேன்

விழி நீயும் சொல்லி வாழும் பெண்ணால்
வெட்கம் என்னை விட்டு போகுமா
அக்கம் பக்கம் இங்கு ஆட்கள் உண்டு
அஞ்சுகின்ற மனம் கொஞ்சுமா

கடற்கரைகளில் சோலை இல்லை
பறவைக்கு என்ன பஞ்சமா
தனிமைக்கு இங்கு வாய்ப்பு இல்லை
தவிக்கின்ற மனம் அஞ்சுமா

ஒ பெண்கள் மட்டும் ஆணையிட்டால் பேசும் கடல் பேசாது
ஆண்கள் கொண்ட ஆசை மட்டும் ஆணையிட்டால் நிற்காது

அடடா என்னை தவிர்க்கிற வழி இது தான் குறுக்கு வழி
எது தான் உன்னை பிடிக்கிற வழி சிக்குமா படித்த கிளி

மீனுக்கு சிறு மீனுக்கு நான் மீன் வலை விரித்தாய்
தேவதை கடல் தேவதை வந்து விழுந்ததால் விழித்தாய்

கிச்சு கிச்சு பண்ணும் கிறிஸ்தவ பெண்ணே
பச்சை முத்தம் தர மனமில்லையா
ஒரு கன்னம் தர மறு கன்னம் காட்டு
திருமறை வரி நினைவில்லையா

அடடா முத்தம் பறிக்கிற வழி இது தான் குறுக்கு வழி
அது தான் என்னை கெடுக்குற வழி சிக்குமா படித்த கிளி

மீனுக்கு சிறு மீனுக்கு நான் மீன் வலை விரித்தேன்
தேவதை கடல் தேவதை வந்து விழுந்ததால் விழித்தேன்

படம் : நீர்ப்பறவை (2012)
இசை : ரகுநந்தன்
பாடியவர்கள் : விஜய் பிரகாஷ், ஹரிணி
வரிகள் : வைரமுத்து

Monday, January 7, 2013

நீர்ப்பறவை - தேவன் மகளே



தேவன் மகளே தேவன் மகளே
சிலுவை காடு பூத்தது போலே
சிரியன் வாழ்வில் பூக்க வைத்தாயே
தேவன் மகளே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

தேவன் மகனே தேவன் மகனே
சிலுவை காடு பூத்தது போலே
சிரியன் வாழ்வில் பூக்க வைத்தாயே
தேவன் மகனே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

என்றோ அடி என்றோ உன் உயிரில் உரிமை தந்தாய்
இன்றே அடி இன்றே உடல் உரிமை தந்தாய்

நுனியில் விரல் நுனியில் ஒரு நுதன தீண்டல் செய்தாய்
அடியில் உயிர் அடியில் ஓர் அற்புதம் செய்தாய்

உன் ஆசை பாசை எல்லாம் பூட்டி கொண்டே
நான் முத்த சாவி போட்டு திறப்பேன்

தேவன் மகனே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

கண்ணீர் என் கண்ணீர் என் கன்னம் காயும் முன்னே
பன்னீர் உன் பன்னீர் உயிர் பரவ கண்டேன்

கொடியில் ஒரு கொடியில் இரு இளநீர் காய்க்கும் பெண்ணே
மடியில் உன் மடியில் சிறு மரணம் கொண்டேன்

என் கர்தரங்கள் படைத்த வேற்ற பாண்டம் நான்
அதில் உன்னை ஊற்றி என்னை நிறத்தாய்

தேவன் மகளே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

தேவன் மகனே தேவன் மகனே
சிலுவை காடு பூத்தது போலே
சின்னவள் வாழ்வில் பூக்க வைத்தாயே
தேவன் மகனே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

தேவன் மகளே தேவன் மகளே
சிலுவை காடு பூத்தது போலே
சிரியன் வாழ்வில் பூக்க வைத்தாயே
தேவன் மகளே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

தேவன் மகனே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

படம் : நீர்ப்பறவை (2012)
இசை : ரகுநந்தன்
பாடியவர்கள் : பிரசன்னா, சைந்தவி
வரிகள் : வைரமுத்து

Sunday, January 6, 2013

நீர்ப்பறவை - பற பற பற பறவை



பற பற பற பறவை ஒன்று கர கர கர கரையில் நின்று
கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே
கட கட கட கடலுக்குள்ளே பட பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே
என் தேவன் போன திசையிலே ஜீவன் சேர்த்து அனுப்பினேன்
என் ஜீவன் வந்து சேருமா தேகம் மீண்டும் வாழுமா
இதோ எந்தன் கண்ணீர் அந்த அலை சேரும்
அலை மறுபடி உன்னிடம் வருமா

பற பற பற பறவை ஒன்று கர கர கர கரையில் நின்று
கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே
கட கட கட கடலுக்குள்ளே பட பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே

தண்ணீரில் வலையும் நிற்கும் தண்ணீரா வலையில் நிற்கும்
எந்தேவன் எப்போதும் திரிகிறான்
காற்றுக்கு தமிழும் தெரியும் கண்ணாளன் திசையும் தெரியும்
கட்டாயம் துன்பம் சொல்லும் மறக்கிறான்
உனது வேர்வை என் மார்புக்குள்
பிசுக்கு பிசுக்கென்று கிடக்குதே
ஈர வேர்வைகள் தீரவும் எனது உயிர்பசி காய்வதா
வானும் மண்ணும் கூடும் போது
நானும் நீயும் கூடாமல் வாழ்வது கொடுமை

பற பற பற பறவை ஒன்று கர கர கர கரையில் நின்று
கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே
கட கட கட கடலுக்குள்ளே பட பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே

ஊரெங்கும் மழையும் இல்லை வேரெங்கும் புயலும் இல்லை
என்றாலும் நெஞ்சில் இடி இடிக்குதே
கண்ணாளன் நிலைமை என்ன கடலோடு பார்த்து சொல்ல
கொக்குக்கும் நாரைக்கும் கண் அலையுதே
நீரின் மகன் எந்தன் காதலன்
நீரின் கருணையில் வாழுவான்
இன்று நாளைக்குள் மீளுவான்
எனது பெண்மையை ஆளுவான்
என்னை மீண்டும் தீண்டும் போது
காதல் தேவன் இருமுறை முதலிரவுகள் பெறுவான்

பற பற பற பறவை ஒன்று கர கர கர கரையில் நின்று
கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே
கட கட கட கடலுக்குள்ளே பட பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே

என் தேவன் போன திசையிலே ஜீவன் சேர்த்து அனுப்பினேன்
என் ஜீவன் வந்து சேருமா தெய்வம் மீண்டும் வாழுமா
இதோ எந்தன் கண்ணீர் அந்த அலை சேரும்
அலை மறுபடி உன்னிடம் வருமா

பற பற பற பறவை ஒன்று கர கர கர கரையில் நின்று
கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே
கட கட கட கடலுக்குள்ளே பட பட பட இதயம் தேடி
கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே

படம் : நீர்ப்பறவை (2012)
இசை : ரகுநந்தன்
பாடியவர் : ஷ்ரேயா கோஷல்
வரிகள் : வைரமுத்து

Saturday, January 5, 2013

வேணா வேணா விழுந்திடுவேனா



வேணா வேணா விழுந்திடுவேனா
கண்கள் கண்டால் கவுந்திடுவேனா
ஓரு முறை சிரிக்கிறாய்
என் உயிரினை பறிக்கிறாய்
கண்கள் ரெண்டும் அணுகுண்டா
கத்தி கொண்ட பூச்செண்டா
இன்பமான சிறை உண்டா 
ஈர விழியில் இடம் உண்டா 
கடவுள் பூமி வந்தால்
உன் கண்ணை பார்க்க வேண்டும்
மனிதன் பாவம் என்று
அவன் மறைந்து போக வேண்டும்

வேணா வேணா விழுந்திடுவேனா
கண்கள் கண்டால் கவுந்திடுவேனா

வளையாத நதிகள் எல்லாம் நதிகள் என்று ஆகாது
சிணுங்காத கொலுசுகள் எல்லாம் சங்கீதங்கள் பாடாது

மடியினில் தலையணை செய்தாய் 
மெல்ல வந்து மனதினில் கலவரம் செய்தாய் 

ஓரு கண்ணில் வன்முறை செய்தாய் 
பாவம் என்று மறு கண்ணில் மருந்துகள் தந்தாய் 

ஒஹோ வசீகரா வசீகரா 
நீ வதம் செய்ய நிதம் வர வேண்டும் 
வலைக்கரம் உடைத்திட வேண்டும்

இதயம் வருடி விடவா உன் இதயம் திருடி விடவா
விழியில் நுழைந்து விடவா என் வழியை மறந்து விடவா 

வேணா வேணா விழுந்திடுவேனா
கண்கள் கண்டால் கவுந்திடுவேனா

அய்யய்யோ ஹிட்லர் பெண்ணே என்னை என்ன செய்தாயோ
ஹார்மோன்கள் ஹார்மோனியம்கள் வாசிப்பதை கண்டாயோ 

ஜனவரி நிலவென்னை கொள்ளும் வெட்கமின்றி ஜனகனமன சொல்லி செல்லும் 

குறு குறு பார்வைகள் சொல்லும் சேதி என்ன கடவுளும் குழம்புவான் இன்னும் 

ஓஹோ குண்டு மல்லி குண்டு மல்லி 
அதில் பட்டு பட்டு பட்டாம்பூச்சி ஆனாய் 
தொட்டு தொட்டு குண்டு வைத்து போனாய் 

எனக்குள் உன்னை தொலைத்து 
நீ உனக்குள் என்னை தேடு 
இரண்டு உயிர்கள் இருந்தால் 
அதை காதல் என்று கூறு 

வேணா வேணா விழுந்திடுவேனா
கண்கள் கண்டால் கவுந்திடுவேனா
ஓரு முறை சிரிக்கிறாய்
என் உயிரினை பறிக்கிறாய்
கண்கள் ரெண்டும் அணுகுண்டா
கத்தி கொண்ட பூச்செண்டா
இன்பமான சிறை உண்டா 
ஈர விழியில் இடம் உண்டா 
கடவுள் பூமி வந்தால்
உன் கண்ணை பார்க்க வேண்டும்
மனிதன் பாவம் என்று
அவன் மறைந்து போக வேண்டும்

படம் : வசீகரா (2003)
இசை : ராஜ்குமார் 
பாடியவர்கள் : உதித் நாராயணன், சாதனா சர்கம் 
வரிகள் : பா. விஜய்

Friday, January 4, 2013

ஒரு தடவை சொல்வாயா



ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகையை போல மறைத்து வைத்தால் தெரிந்து விடும்
காதலில் தான் பூக்கள் மோதி மலைகள் கூட உடைந்து விடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே

நதியில் தெரியும் நிலவின் உருவம்
நதிக்கு சொந்தமில்லை
நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்க்கை
யாருக்கும் அமைவதில்லை

உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு 
தானாய் விழுந்ததில்லை
உலக உருண்டை உடையும் போதும் 
காதல் உடைவதில்லை

மின்மினி தேசத்து சொந்தக்காரன் விண்மீன் கேட்பது தவறாகும்

வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம்
வலியோடு போராடும் காதல் தானே

ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று

நெருங்க நினைக்கும் நினைவை மறக்க நெஞ்சம் நினைக்கிறது
கனவில் பூக்கும் பூக்கள் பறிக்க பெண்மை அழைக்கிறது

கிளையை முறித்து போட்டு விடலாம்
வேரை என்ன செய்வாய்
தரையை உடைத்து முளைக்கும் போது
அன்பே எங்கு செல்வாய்

மல்லிகை பூக்கள் உதிர்வதெல்லாம் மரத்தடி நிழலுக்கு சொந்தமில்லை

உன்னோடு நான் வாழ போராடுவேன்
நீ இன்றி போனாலும்  தள்ளாடுவேன்

ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்குப் பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகையை போல மறைத்து வைத்தால் தெரிந்து விடும்
காதலில் தான் பூக்கள் மோதி மலைகள் கூட உடைந்து விடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே 

படம் :வசீகரா (2003)
இசை :ராஜ்குமார்
பாடியவர்கள் : ஹரிஹரன், சின்மயி
வரிகள் : பா.விஜய்

Thursday, January 3, 2013

நீ மலரா மலரா



நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம்

நீ மழையா மழையா மழையானால் எந்தன் பேரே மண்வாசம்

ஒரே சுவாசமே ஜோடி ஜீவன் வாழுமே
உயிரே உயிரே

பிறந்தாயே எனக்காய் பிறந்தாயே

நீ கூட எனக்கும் ஒரு தாயே 

நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம்

வாழாமலே வாழ்ந்த நாள் எந்த நாளோ

பார்க்காமல் நாம் இருவரும் இருந்த நாளே

அட காதல் என்பதென்ன இன்ப சிகிச்சை

இது இரண்டு நபர் ஒன்றாய் எழுதும் பரீட்சை

தினம் உன் பேரேயே நான் கூறியே உயிர் வாழ்கிறேன்

நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம்

காற்றோடு நான் ஈரமாய் சேர்கிறேன்

மரமாகி நான் ஈரத்தை ஈர்க்கிறேன்

என் அந்தபுரம் எங்கும் சாரல் அலைகள்

என் நந்தவனம் எல்லாம் ஈர இலைகள்

ஒரு மழையோடு தான் வெயில் சேர்ந்ததே நம் காதலே

நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம்

நீ மழையா மழையா மழையானால் எந்தன் பேரே மண்வாசம்

ஒரே சுவாசமே ஜோடி ஜீவன் வாழுமே
உயிரே உயிரே

பிறந்தாயே எனக்காய் பிறந்தாயே

நீ கூட எனக்கும் ஒரு தாயே 

படம் : அற்புதம்(2002)
இசை : ஷிவா
பாடியவர்கள் : சித்ரா, உன்னி கிருஷ்ணன்
வரிகள் : பா. விஜய்

Wednesday, January 2, 2013

ஒரு பூ எழுதும் கவிதை



ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்
நதி நீர் எழுதும் கவிதை
அலை ஒவியமாய் விரியும்

ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்
நதி நீர் எழுதும் கவிதை
அலை ஒவியமாய் விரியும்

உலகத்தின் மெல்லிய தாள்களின் மேலே
இளமையின் கவிதைகள் எழுதிட வேண்டும்
அழகிய இதழ் கொண்டு வா
முத்தம் என்பது நாம் காணும் தியானம்
அது முடியும் முன்னமே நாம் காண்போம் ஞானம்

ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்

ஊசி துளைத்த குமிழிகள் போலே உடைவது உடைவது வாழ்வு

காற்று துரத்தும் கடல் அலை போல தொடர்வது தொடர்வது காதல்

உடல் மீது கொஞ்ச காலம் இளைப்பாறும் காதலே
உடல் தீர்ந்து போன பின்னும் உயிர் வாழும் காதலே

காலங்கள் எங்கு தீரும் அதுவரை செல்வோமா
காலங்கள் தீருமிடத்தில் புது ஜென்மம் கொள்வோமா

உன் மூச்சிலே நானும் என் மூச்சிலே நீயும்
காற்றில் ஒலிகள் கேட்கும் வரையில் காதல் கொள்வோமா

ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்

நதி நீர் எழுதும் கவிதை
அலை ஒவியமாய் விரியும்

கண்கள் இருக்கும் பேர்களுகெல்லாம் சூரியன் மட்டும் சொந்தம்

காதல் இருக்கும் பேர்களுகெல்லாம் சூரியக்குடும்பம் சொந்தம்

உலகம் திறந்து வைத்த முதல் சாவி காதல் தான்
திறந்தவன் தொலைத்து விட்டான் இன்னும் அந்த தேடல் தான்

சுடர் கோடி எதற்கு வந்தோம் தொலைத்ததை காணத்தான்
உதட்டினில் தொடங்கி அந்த உயிர் சென்று தேட தான்

நீ என்பதும் பாதி நான் என்பதும் பாதி
உன்னில் என்னை என்னில் உன்னை ஊற்றி கொள்வோமா

ஒரு பூ எழுதும் கவிதை

சிறு தேன் துளியாய் உருளும்

நதி நீர் எழுதும் கவிதை

அலை ஒவியமாய் விரியும்

உலகத்தின் மெலிய தாள்களின் மேலே

இளமையின் கவிதைகள் எழுதிட வேண்டும்

அழகிய இதழ் கொண்டு வா

முத்தம் என்பது நாம் காணும் தியானம்

அது முடியும் முன்னமே நாம் காண்போம் ஞானம்

முத்தம் என்பது நாம் காணும் தியானம்
அது முடியும் முன்னமே நாம் காண்போம் ஞானம்

படம் : பூவேலி (1998)
இசை : பரத்வாஜ்
பாடியவர்கள் : உன்னிகிருஷ்ணன், சித்ரா 
வரிகள் : வைரமுத்து

Tuesday, January 1, 2013

ஆச அதிகம் வச்சு

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்



ஆச அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி

ஆச அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா

சின்ன பொண்ணு நான் ஒரு செந்தூரப்பூ நான்
செங்கமலம் நான் புது தேன்கிண்ணம் நான்
வெல்லக்கட்டி நான் நல்ல வெள்ளி ரதம் நான்
கண்ணுக்குட்டி நான் நல்ல கார்காலம் நான்
ஒரு செந்தேரில் உல்லாச ஊர் போகலாம்
நீ என்னோடு சல்லாப தேரெறலாம்
அடி ஆத்தாடி அம்புட்டும் நீ காணலாம்
இது தேன் சிந்தும் பூஞ்சோலை தான் என் செல்லக்குட்டி

ஆச அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா

சின்ன சிட்டு நான் ஒரு சிங்காரப்பூ நான்
தங்கத்தட்டு நான் நல்ல தாழம்பூ நான்
வானவில்லும் நான் அதில் வண்ணங்களும் நான்
வாசமுல்லை நான் அந்தி வான்மேகம் நான்
என் மச்சானே என்னோடு நீர் ஆடலாம்
என் பொன்மேனி தன்னோடு நீ ஆடலாம்
வா தென்பாண்டி தெம்மாங்கு நாம் பாடலாம்
இது தேன் சிந்தும் பூஞ்சோலைதான் என் செல்லக்குட்டி

ஆச அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி

ஆச அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமோய்

படம் : மறுபடியும் (1993)
இசை : இளையராஜா
பாடியவர் : ஜானகி
வரிகள் : ரவி பாரதி

Last 25 songs posted in Thenkinnam