Sunday, January 31, 2010

முந்தினம் பார்த்தேனே - இன்றே இன்றேமுதல் முறை இவன் உயிருக்குள் மாற்றம்
இனம் புரியா அவஸ்தையின் கூட்டம்
எதிரினில் ஒரு அழகிய தோட்டம்
ஜாடை காட்டும் ஜாடை காட்டும்
இடம் தடம் இவன் மறந்தான் மறந்தான்
இவள் முகம் கண்டு கரைந்தான் கரைந்தான்
சுகத்தில் விண்வெளியில் மிதந்தான்
உரைந்தான் உடைந்தான்

இன்றே இன்றே உன்னால் இங்கே
முழுதாய் நானும் புதிதானேன்
அடை மழை போலே உன் அழகாலே
உயிர் வரை நானும் நனைகின்றேன்
பெண்ணே உன் கண்ணில் சிக்கிக்கொண்டேன்
தப்பிக்கத் தானே
நான் மறந்தேன் ஏன் மறந்தேன்
நதி மீதி நகரும் இலையை போலே
அன்பே நான் மிதந்தேன்
உனக்குள் நான் விழுந்தேன்
தொலைந்தேன் புதிதாய் பிறந்தேன்
(முதல் முறை..)
(இன்றே..)

இன்றே இன்றே
இன்றே இன்றே
ஓஹோ
இன்றே இன்றே..

படம்: முந்தினம் பார்த்தேனே
இசை: தமன்
பாடியவர்கள்: ரஞ்சித், சுசித்ரா
வரிகள்: பிரியன்

Saturday, January 30, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா - கண்ணுக்குள் கண்ணைகண்ணுக்குள் கண்ணை ஒற்றிக்கொண்டே
இல்லை இல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து
பார்வை தந்து சென்றாயே
காதல் கொண்டு நான் பேச
கத்தி தூக்கி நீ வீச
பக்கம் வந்து தொட்டுப் பேசும்
கனவுகள் கண்டேன்
இன்னும் சற்றே அருகே வந்து
முத்தமும் தந்தேன்
இத்தனை நடந்தும் காதல் இல்லை
என்பது சரியா
ஆணாய் நானும் பெண்ணாய் நீயும்
இருப்பது பிழையா
உன் நண்பன் இல்லை
நானும் உன் வானின் நிலா
உன் நண்பன் இல்லை
நானும் உன் வானின் நிலா
உன் நண்பன் இல்லை
நீ என் உயிரின் விழா
(கண்ணுக்குள்..)

நீயும் நானும்
ஒரே புள்ளி ஒரே கோடு
நீயும் நானும் வாழப் போகும்
அந்த இடம் ஒரே வீடு
காதல் என்றால் காயம் தான்
அன்பே ஓடோடி
வந்து என் கண்ணை பார்த்து
காதல் தான் என்று
சொல்லி என் காயம் ஆற்று
(அன்பே..)
(கண்ணுக்குள்..)

படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: நரேஷ் ஐயர்
வரிகள்: தாமரை

Friday, January 29, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா - அன்பில் அவன்அன்பில் அவன் சேர்த்த இதை
மனிதரே வெறுக்காதீர்கள்
வேண்டும் என இணைந்த இதை
வீணாக மிதிக்காதீர்கள்

உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக
ஏற்க்கின்றேன் ஏற்க்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே

உன்னை தாண்டி எதையும்
என்னால் யோசனை செய்ய
முடியாதே முடியாதே

நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஒரு ஜோடி போட்டுத்தான்
ஹேய் நீங்கள் போனாலே
கண் பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ
(உயிரே..)

நீளும் இரவில் ஒரு பகலும்
நீண்ட பகலில் சிறு இரவும்
கண்டு கொள்ளும் கலை அறிந்தோம்
என்று ந்ங்கு அதை பயின்றோம்

பூம் வானம் காற்று
தீயை நீராய் மாற்று
புதிதாய் கொண்டு வந்து நீட்டு
(நீ வானவில்லாக..)
(உயிரே..)
(உன்னை..)
(நீ வானவில்லாக..)

காதல் எல்லாம் நுழையும் இடம்
கல்யாணம் தானே
இன்று தொடங்கும் இந்த காதல்
முடிவில்லா வானே

படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: தேவன், சின்மயி
வரிகள்: தாமரை

Thursday, January 28, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா - விண்ணைத்தாண்டி வருவாயா


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஊனே உயிரே
உனக்காக துடித்தேன் விண்மீனே
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்மீனே வருவாயா

நேற்றும் இரவில்
உன்னோடு இருந்தேன்
அதை நீயும்
மறந்தாயா மறந்தாயா
கனவோடு விளையாட
விண்ணைத்தாண்டி வருவாயா
நிலவே நீ வருவாயா

ஊனே உயிரே
உனக்காக துடித்தேன் விண்மீனே
விண்ணைத்தாண்டி வருவாயா

உயிரே நீயும் நானும் பிரிந்தது
புவி ஈர்ப்பு மையத்தில்தானே
இரு துருவம் சேறும் அந்த ஓர் இடம்
அங்கே தான் நாம் சேர்ந்தோமே
இனிமேல் நானும் நீயும் பிரிவதில்லை
அன்பே..

விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்ணைத்தாண்டி வருவாயா
விண்மீனே வருவாயா

படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: கார்த்திக்
வரிகள்: தாமரை

Wednesday, January 27, 2010

ஓம்காரமாய் விளங்கும் நாதம்

Image and video hosting by TinyPic

ஓம்..ஓம்..ஓம்..ஆம் அன்பர்களே ஓம்காரமாய் விளங்கும் நாதம், தமிழுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பை பல அறிஞர் பெருமக்கள் பலவித ஆராய்ச்சிகளில் தொகுத்து வழ்ங்கியிருக்கிறார்கள் என்பது உண்மை. இதோ அதே தமிழிசையை அக்குவேறு,ஆணிவேறாக பிரித்து மேய்ந்து ஒரு சாதாராண வானொலி நேயர் வான்வெளியில் வர்ணஜாலம் காட்டியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், மிக மிக அறிதான வானொலிகளில் அதிகம் ஒலிப்பரப்பாத, ஏன் வானொலி நிலையங்கள் ஒலிப்பரப்பவே யோசிக்கும் சில பாடல்களை தேடி பிடித்து தொகுத்து வழங்கியிருப்பது அபாரம், என் இருபுருவங்களை வில்லென வளைத்தது என்றால் மிகையல்ல. தமிழுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பை இந்த நேயரின் கைவணணத்தில் தனக்கே உரிய பாணியில் வழ்ங்கியிருக்கிறார். மேலும், அறிதான தகவல்களை பல நூல்களில் மூலம் படித்து சேகரித்து ஓரே நூலில் அற்புதமாக கோர்த்து வண்ணத்தோரணமாக கட்டி கோவையில் நடைபெறவிருக்கும் செந்தமிழ் மாநாட்டிற்காக வான்வெளி வரவேற்பு தோரண வாயிலை அமைத்துபோல் உள்ளது இந்த ஆக்கம். நமது வானொலி ஆதர்ஸ நேயர் திருப்பூர் அகிலா விஜயகுமார் அவர்களின் இந்த தொகுப்பில் ஒவ்வொரு வரிகளிலும் அவரின் கடின உழைப்பு தெரிகிறது. இந்த தொகுப்பை உருவாக்க இரவு பகல் பாராமல் எவ்வளவு உழைத்திருப்பார் என்று அவரின் ஒவ்வொரு ரசணை வரிகளிலும் என்னால் உணரமுடிகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த தொகுப்பை ஒட்டு மொத்தமாக கொடைக்கானல் வானவில் பண்பலைக்கு சர்வ சாதரணமாக அனுப்பிவிட்டார் அன்பர் அகிலா விஜயகுமார் அவர்கள், இந்த ஒலித்தொகுப்பை ஒரு மணி நேரத்திற்க்குள் எடிட் செய்து பதிவு செய்து ஒலிப்பரப்ப அறிவிப்பாளர் மிகவும் சிரமப்பட்டிருப்பார் என்றும் உணரமுடிகிறது. இந்த ஒலித்தொகுப்பை மிகவும் அழகாக தொகுத்து வழங்கியிருப்பவருக்கு தேன்கிண்ண நேயர்கள் சார்பாக நன்றி. இந்த ஒலிக்கோப்பு எனக்கு அனுப்பிவைத்த அன்பர் சேலம் காசக்காரணூர் ராஜ்குமார் (இவரின் ஒலித்தொகுப்புக்கள் இந்த தளத்தில் முன்னமே வந்திருக்கின்றன) அவருக்கும் மிக ஆவலுடன் கேட்டு ரசித்த அன்பர்களூக்கும் நன்றி. இப்பேர்பட்ட ஆக்கங்களை உருவாக்குபவர்கள் இருக்கும் வரை வானொலி மற்றும் இணைய நேயர்க்ளுக்கு கொண்டாட்டம் தான் கேளூங்கள் இசையன்பர்களே உஙக்ளூடன் நானும் மறுமுறை சேர்ந்து கொண்டு கேட்டு மகிழ்கின்றேன்.

ஒலித்தொகுப்பை கேட்டு உங்கள் மனதில் தோன்றும் உணர்வுகள் எதுவாக இருந்தாலும் ஒருவரியில் தெரிவியுங்கள் ஆக்கத்தை உருவாக்கியவருக்கும், அறிவிப்பாளருக்கும் மிகவும் உற்சாகமாக இருக்கும்.

தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்

1.ஓதுவார் என் பெயர் ஓதுவார்
2.ஓம்காரமாய் விளங்கும் நாதம்
3.குயிலோசையை வெல்லும்
4.உலகின் முதலிசை தமிழிசையே
5.தமிழுக்கு அமுதம் என்று பேர்
6.ஆனா, டானா,
7.அகரமுதல எழுத்தெல்லாம்
8.பிறவாத வரம் வேண்டும்
9.ஏடுதந்தானடி தில்லையிலே
10.ஓசை கொடுத்த நாயகியே
11.பாட்டும் நானே பாவமும் நானே

Get this widget | Track details | eSnips Social DNA

கேள்வியின் நாயகனே..

Image and video hosting by TinyPic

இந்த ஒலிக்கோப்பு பதிந்து 10 நாளாயிற்று பதிய நேரமில்லையாதலால் (அது மட்டுமல்லங்க பி.எஸ்.சசிரேகா நல்ல படம் ஒன்று இணையத்தில் 2 நாளாக தேடினேன் கிடைக்கவில்லை) நேற்று ஞாயிறு அன்று ஜெயா டிவியில் அவர் பேட்டி ஒலிப்பரப்பினார்கள் உடனே என் செல் பேசியில் படத்தை கபால்ன்னு பிடித்து வைத்து போட்டுட்டேன் படம் சுமாராகதான் இருக்கும். தொலைகாட்சியில் சிறிது நேரமே பார்த்தேன் அதிக பட்ச பாடல்கள் இந்த ஒலித்தொகுப்பில் வந்ததைப் பற்றி தான் பேசினார். நல்ல குரலினுடைய பாடகி அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா? கேட்டு மகிழுங்கள் அன்பரக்ளே.இந்த ஒலித்தொகுப்பை மிகவும் அழகாக தொகுத்து வழங்கியவர் எனது நண்பர் வானொலி அறிவிப்பாளர் திரு. தொண்டாமுத்தூர் ரவி அவருக்கு தேன்கிண்ண நேயர்கள் சார்ப்பாக நன்றி.

1.மேளம் கொட்ட நேரம் >>2.வடுகசம்பா >>3.கேள்வியின் நாயகனே என் >>4.வாழ்வே மாயமா >>5.எந்தன் கற்பனைத் தேரில் >>6.நின்னையே ரதியென்று >>7.இதோ இதோ என் ந்0எஞ்சிலே >>8.விழியில் விழுந்து இதயம் >>9.செந்தூரப்பூவே >>10.ஊமைவிழிகள் பாடல்கள் >>1.வெல்கம் ஹீரோ.

Get this widget | Track details | eSnips Social DNAfor download

விண்ணைத்தாண்டி வருவாயா - மன்னிப்பாயாகடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் கடலிடமே

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா
(ஒரு நாள்..)

கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் தவர விட்டேன்
மன்னிப்பாயா அன்பே

காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே
(ஒரு நாள்..)

அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்
ஆர்வளர்க்கும் கண்ணீர் பூசல்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் எல்லாம் உரியர் பிறர்க்கு
புலம்பல் என சென்றேன்
புலினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
பூவாயா காணல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்
(ஒரு நாள்..)
(கண்ணே..)

படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: AR ரஹ்மான், ஷ்ரேயா கோஷல்
வரிகள்: தாமரை

Tuesday, January 26, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா - ஓமன பெண்ணேஆஹா.. அடடா பெண்ணே உன் அழகில்
நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன்
ஹேய் ஆனால் ஹேய்
கண்டேன் ஹேய் ஓர் ஆயிரம் கனவு
ஹேய் கரையும் என் ஆயிரம் இரவு
நீதான் வந்தாய் சென்றாய்
என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய்
ஒஹோ

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

நீ போகும் வழியில் நிழலாவேன் ஓஹோ
காற்றில் அசைகிறது உன் சேலை
விடிகிறது என் காலை
உன் பேச்சு உன் பார்வை
நகர்ந்திடும் பகலை இரவை ஓஹோ
பிரிந்தாலும் இணைந்தாலும்
உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே
உன் இன்பம் உன் துன்பம் எனதே
என் முதலோடு முடிவானாய்

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

மரகத தொட்டிலில் மலையாளிகள் தாலாட்டும் பெண்ணழகே
மாதங்க தோப்புகளில் பூங்குயில்கள் இணைச் சேரானு
புல்லாங்குழல் பூந்துகையான நின் அழகே
நின் அழகே

தள்ளிப்போனால் தேய் பிறை
ஆகாய வெண்ணிலாவே அங்கேயே நின்றிடாதே
நீ வேண்டும் அருகே
ஒரு பார்வை சிறு பார்வை
உதிர்த்தால் உதிர்த்தால்
பிழைப்பேன் பிழைப்பேன் பொடியன்

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓஹோ ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: பென்னி தயால், கல்யாணி மேனன்
வரிகள்: தாமரை

Monday, January 25, 2010

பொறக்கும் போது பொறந்த குணம்

ரொம்ப நாள் கழித்து தேன்கிண்ண பதிவு கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

Clik here for Download

1.உள்ளம் இரண்டும் ஒன்றை ஒன்று,சிவகாமியின் செல்வன்,டி.எம்.எஸ்
2.ஹார்ட் பார் மைண்ட் டூ மைண்ட்,ஸ்வாதி நட்சத்திரம், பானுமதி
3.ஒரு கொடியில் இருமலர்கள்,காஞ்சித்த்லைவன்,டி.எம்.எஸ்,பி.சுசீலா
4.உன்னை ஏமாற்றினார்,வாழ்க்கை
5.பொறக்கும் போது பொறந்த குணம்,சக்கரவர்த்தி திருமகள்,சீர்காழி கோவிந்தராஜன்
6.நாளை நாளை என்றிருந்தேன்,உத்தமன்,டி.எம்.எஸ்,பி.சுசீலா
7.வடிவேலன் மனசு வெச்சான்,தாயில்லாமல் நானில்லை,டி.எம்.எஸ்,பி.சுசீலா
8.மழை கூட ஒரு நாளீல் தேனாகலாம்,ராஜெஸ்வரி
9.பொம்பளைக்கு பொம்பளை நான், எங்கள் தங்கம்,டி.எம்.எஸ்,எல்.ஆர்.ஈஸ்வரி

Get this widget | Track details | eSnips Social DNA

அசல் - ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தாஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா
உன் சகுந்தலா தேடி வந்தா

ஏ துஷ்யந்தா நீ மறந்ததை
உன் சகுந்தலா மீண்டும் தந்தா

கள்ள பெண்ணே
என் கண்ணை கேட்கும் கண்ணே
என் கற்பை திருடும் முன்னே
நான் தப்பை விட்டு தப்பி வந்தேன்
மீண்டும் நீ நேரில் வந்து நின்றாய்
என் நெஞ்சை கொத்தி தின்றாய்
எனக்கு உன்னை நினைவில்லையே

பூங்காவில் மழை வந்ததும்
புதர் ஒன்று குடை ஆனதும்
மழை வந்து நனைக்காமலே
மடி மட்டும் நனைந்தாய்
மறந்தது என்ன கதை
(ஏ துஷ்யந்தா..)

அழகான பூக்கள் பூக்கும் தேன் ஆற்றங்கரையில்
அடையாளம் தெரியாத ஆல மரத்திருட்டில்
இருள் கூட அறியாத இன்பங்களின் முகத்தில்
இரு பேரும் கைதானோம் முத்தங்களின் திருட்டில்
வருடித் தந்தாய் மனதை திருடி கொண்டாய் வயதை
அது கிளையோடு வேர்களும் பூத்த கதை ஆளாலன் காட்டுக்குள்
ஒரு ஓட்டு வீட்டுக்குள்ளே உன்னை போர்த்திக் கொண்டு படுத்தேன்
பால் ஆற்றில் நீட் ஆடும் போது துவட்ட துண்டு இல்லை
கூந்தல் கொண்டு உன்னை துடைத்தேன்

அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றுருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோ சில நேரம்
(ஏ துஷ்யந்தா..)

மான் ஆடும் மலை பக்கம் ஏரிக்கரை அருகில்
மயில் ஆடும் ஜன்னல் கொண்ட மாளிகையில் அறையில்
கண்ணாடி பார்த்துக்கொண்டே கலை யாவும் பயின்றோம்
கரு நீல போர்வைக்குள்ளே இரு நாட்கள் இருந்தோம்
பகலில் எத்தனை கனவு இரவில் எத்தனை நனவு
தூங்காத கண்ணுக்குள்ளே சுக நினைவு
சம்மதம் கேளாமல் என்னை சாய்த்து சாய்த்து கொண்டு
சட்டென்று சட்டென்றூ முத்தம் தந்தாய்
மாந்தோப்பில் மாந்தோப்பில் என்னை
மடியில் போட்டுக்கொண்டு
புல் இல்லா தேகத்தில் கொஞ்சம் மேய்ந்தாய்

அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றுருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோ சில நேரம்

பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ

ஏ துஷ்யந்தா..
ஏ துஷ்யந்தா..
ஏ துஷ்யந்தா..
ஏ துஷ்யந்தா..

படம்: அசல்
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: சுர்முகி, குமரன்

Sunday, January 24, 2010

அசல் - சிங்கம் என்றால் என் தந்தைதான்சிங்கம் என்றால் என் தந்தைதான்
செல்லம் என்றால் என் தந்தை தான்
கண் தூங்கினால் துயில் நீங்கினால்
என் தந்தை தான் என் தந்தை தான்
எல்லோருக்கும் அவர் விந்தை தான்
விண்மீன்கள் கடன் கேட்கும் அவர் கண்ணிலே
வேல் வந்து விளையாடும் அவர் சொல்லிலே
அவர் கொண்ட புகழ் எங்கள் குலம் தாங்குமே
அவர் பேரை சொன்னாலே பகை நீங்குமே
அழியாத உயிர் கொண்ட என் தந்தையே
அழியாத உயிர் கொண்ட என் தந்தையே
ஆண் வடிவில் நீ என்றும் எம் அன்னையே

வீர்த்தின் மகன் என்று விழி சொல்லுமே
வேகத்தின் இனம் என்று நடை சொல்லுமே
நிலயான மனிதன் என வேர் சொல்லுமே
நீதானே அசல் ஊர் சொல்லுமே
உன் போல சிலர் இங்கு உருவாகலாம்
உன் உடல் கொண்ட அசைவுக்கு நிகர் ஆகுமா?
எப்போதும் தோற்காது உன் சேவைதான்
இருந்தாலும் இறந்தாலும் நீ யானைதான்
கண்டங்கள் அரசாலும் கலைமூர்த்தி தான்
கடல் தாண்டி பொருள் ஈட்டும் உன் கீர்த்தி தான்
தலை முறைகள் கடந்தாலும் உன் பேச்சுதான்
தந்தயெனும் மந்திரமே என் மூச்சுதான்
(சிங்கம்..)

படம்: அசல்
இசை: பரத்வாஜ்
பாடியவர்: பரத்வாஜ்

Saturday, January 23, 2010

கோவா - இடை வழிஇடை வழி ஒரு மோதல் செய்
இதழ் வழி ஒரு ஊதல் செய்
இடைவெளி இன்றி காதல் செய்
ஓ சினேகிதா

விழி வழி ஒரு ஊடல் செய்
விரல் வழி ஒரு தேடல் செய்
வித விதம் என கூடல் செய்
ஓ சினேகிதி

ஆள் என்பதும் பாராததும்
ஆனால் பின்பு திருமஞ்சனம்
அன்பே எந்தன் என்பால் சொன்னால்
அப்பீல் இல்லை ஆரம்பம் செய்யட்டுமா
கோயில் பூஜைக்கு போகாத மேளம் இது
(இடை..)

ஒத்தடங்கள் வெய்த சத்தங்கள் செய்த
யுத்தங்கள் நடத்தும் உதடு நான்கையும் அனுமதி
முத்தாடும் போது கத்தாதோ மாது
ரத்தங்கள் கொதிக்க ரணங்கள் ஆகலாம் அனுசரி
அத்தைக்கு பாடி ஆனாமட்டும்
மொட்டு குழியும் மெல்லிய அணைச்சுப்போ இது
அதிகல் பேசி ஆவதென்ன
கட்டி பிடித்தால் கட்டுக்குள் அடங்கும் நோ இது
(இடை..)

மொத்தத்தில் கூச்சம் மொத்தமும் போச்சல்
போட்டுதான் இருக்கும் உடைகள் யாவையும் வழங்கிடு
வெட்கத்தை நேற்றே விட்டாச்சு காற்று
ஒவ்வொரு வரியும் விவரமாக நீ விளக்கிடு
முதலில் கேளு பால பாடம்
ஒட்டி உரசு உள்ளுக்குள் உரசி ஊரிடும்
முடிஞ்சு போச்சு ராகு காலம்
மெல்ல தொடங்கும் நமது அடுத்த அனுபவம்
(இடை..)

படம்: கோவா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: பென்னி தயால், மம்தா மோகந்தாஸ்

Friday, January 22, 2010

கோவா - அடிடா நையாண்டியஅடிடா நையாண்டிய தெற்கு தெச அதிர
தெற்கு தெச ஒசர ஊர் குலுங்கணும்
பம்பைய தட்டிக்கிட்டு பாட்டெடுத்து படிச்சா
பாறையிலும் பால் வடியும்
நமக்கு சாமி துணை எப்போதும்தான் இருக்கு
தப்பாதுடா கணக்கு பேர் விளங்கிடும்
வகது கால் எடுத்து வெச்ச இடம் செழிக்கும்
வேர்வையில வெற்றி முளைக்கும்
மஞ்ச நீர் அள்ளி மாம் மேல் அள்ளி தெளிச்சு
வயசு பொண்ணுங்க வம்பிழுக்கும்
ஒர கண்ணால உன்ன ஒன்னு திட்டிக்கிட்டு
உள்ள ஆசையில வாசம் இழுக்கும்
சிறுசு சிறுசுதான் இளசு இளசுதான்
கிழிச்ச எல்லையில காத்து நிக்குது
(அடிடா..)

உசுருக்கு உசுரா ஒரு மர பறவையா
பகலோசு இரவா பழகிய பசங்கதான்
பரம்பரை பகையென வருங்குது ஒதுங்குது
இருப்பினும் நீர்த்துளி இமையில வழியுது
நேத்து ஓயாம வாயாடி கிடக்க
இன்று போட்டாச்சு வாய் குத்த இருக்கு
நாளை இதுக்கு மாற்றம் இருக்கு
எல்லாம் நல்ல இடம் ஆத்தா கருவாத்த

அடடா பண்ணபுறம் தெய்வ மகன் இவந்தான்
தெய்வ மகன் இவந்தான் ஊர் வணங்குது
நம்ம ஊரு அம்மனுக்கு இஷ்ட மகன் இவந்தான்
நேந்துக்கிட்டு விட்ட மகந்தான்
அழகு குத்துறாங்க தீக்குளியில் இறங்க
பூக்குழியில் இறங்க தூள் பறக்குது
அம்மனோ அம்மனுன்னு பக்தி உள்ள சுத்த மனம் தான்

வாடி பட்டி வனவன் உருமியில் வெளுக்குறான்
வீரப்பாண்டி முருகன் நாயனத்தில் பொளக்குறான்
கரவந்து குலுங்குது கண்ணும் காத்தும் தலையில
கழையுது கெறங்குது ராம ராசன் நெனப்புல
பாரு அருக்காணி பொய்க்காலு குத்துறா
நெஞ்ச திம்பான உனாட்டம் எதிரா
ஊரு முழுக்க பேரு இருக்க
இப்ப தென்னப்புட்டா நீயும் நானும்தான்

படம்: கோவா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: SPB சரண், யுகேந்திரன்

Thursday, January 21, 2010

கோவா - ஒத்துமையா வாழ்ந்தாஒத்துமையா வாழ்ந்தா
இங்கே உறுத்தும் நாலு பேருக்க
உருக்குழைச்சு பார்த்தா
அப்போ சந்தோஷம்தான் ஊருக்கு
அஞ்சு பேரு வார்த்த
இங்கே வேதம் ஆக ஆச்சு
மூனு பேரு வாழ்க்கை
அங்க சேதம் ஆக போச்சு

ஊரார் கண்ணு பொல்லா கண்ணு
ஒறவா இருந்தா புடிக்காதே
ஊரார் கண்ணு பொல்லா கண்ணு
ஒறவா இருந்தா புடிக்காதே

காலம் காலமாக
இந்த ஊருக்கு இதே வேலை
கண்ணு பட்டதேனோ
இப்போ இங்கே நம்ம மேல
எல்லை புற சாமி
நீ தட்டி கேட்க வேணும்
இல்லாமதான் போனா
நீ கல்லுனுதான் தோணும்

கண்ண தொறந்து கொஞ்சம் பாரு
பசங்க கலங்க விடலாமா
கண்ண தொறந்து கொஞ்சம் பாரு
பசங்க கலங்க விடலாமா
ஓஹோ..

படம்: கோவா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: இளையராஜா

Wednesday, January 20, 2010

கோவா - வாலிபா வா வாவாலிபா வா வா இனி வட்டம் அடிக்கலாம்
வந்ததே சட்டம் இனி கொட்டம் அடிக்கலாம்
போகும் வரை போவோம் புகுந்து விளையாடலாம்
ஆனவரைஅ அச்சு அரங்கேறலாம்

லோங் வாழ்வுதான் சாங் வாழவே
வாழும் உனக்கு அந்த லோங் ஸ்டாரிதான்
ஸ்மால் ச்சேன்ங்ஜுதான் இப்ப இங்க ஈஸி
(வாலிபா..)

தப்பாகத்தான் நெனைக்காதே
இங்கு தப்பு எல்லாம் டப்பு இல்லை
ஹேய் இப்போதெல்லாம் உலகம் இங்கே
ரைக்ட்டு டு டு டு டு
எங்கே நான் தொடங்கணும்
மடங்கணும் அடங்கணும் சொல்லிக்கொடு நீயே
அத தெரிஞ்சுக்க அஹா புரிஞ்சிக்க
(லோங்..)

அழகனே தலைவனே
அறிவுக்கு ந்கர் இந்த அறிஞனே
தலைவி உன் தமிழுக்கு
என் தமிழ் நாட்டையே தருவியே
உனக்கொரு ஈடு
உன்னை அன்றி எவரை சொல்லிட
எவர் இங்கு ஏது
என்னைவிட தன்னடக்கம் கொண்ட
பொன்மல செம்மலே
புரட்சி தலைவரின் பேரனே
போதும் உன் அர்ச்சனை எதற்கு
இறைவனின் செல்ல மகன் நான்

கண்ணனை போலே
என் சொல்லில் தோன்றுதே
கார் மேக வண்ணன்
அவன் கானம் மயக்குதே
ராதையை பார்த்தால் ராகம் போல ஊருதே
சேர்ந்து விளையாட பிருந்தாவனம்

வைகுண்டமும் மார் விண்டமும்
ரெண்டும் ஒன்றுதானே
ஆ ஹா பூர் பாஷையும்
ரங்க பாஷையும் ரெண்டும் ஃபிரண்டுதானே
(வைகுண்டமும்..)

படம்: கோவா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: இளையராஜா, SP பாலசுப்ரமணியம், சித்ரா

Tuesday, January 19, 2010

கோவா - காதல் என்றால்இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தை துண்டாக்கும் நினைவிது
மனதினை மண்ணோடு புதைத்திடும்
பெண்ணை நம்பாதே

காதல் என்றால் அத்தனையும் கனவு
கண் மூடியே வாழ்கின்ற உறவு
பெண்கள் என்றால் ஆணை கொல்லும்
நோய் ஆனதே

ஐயோ இந்த இளமையின் தொடக்கம்
இன்றே முற்றுப்புள்ளி
அதை சொல்லாமல் சொல்லி
நம்மை பைத்தியம் ஆக்கும்
பெண்ணை தேடி தொலையாதே

படம்: கோவா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா

Monday, January 18, 2010

கோவா - இதுவரை இல்லாத உணர்விதுஇதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ
(இதுவரை..)

மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே
(மூடாமல்..)

இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே
இல்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொள்ள
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம்

அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்
என் நெஞ்சமோ உன் போல அள்ள
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத தோற்றம்
இது நிரந்தரம் அல்ல
மாறிவிடும் மன நிலை தான்

மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உணர்வுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே
(மனதிலே..)

தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே
(தேகம்..)

படம்: கோவா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: அஜீஷ், அண்ரியா

Sunday, January 17, 2010

கோவா - கோ என்பதுHey I Swear
Chynk Show
will play
fly like a bird

அராபியன் சீ கோவா
அழகை ரசி கோவா
ஆஹா குஷி கோவா
ஆல்வேய்ஸ் பிஸி
நம் ஆசைப்படி கோவா
வாசப்படி கோவா
தொட்டு வெற்றி கொடி
தட்டி ஹேட்ரிக் அடி
ஹிப்பிஸ் எல்லாம்
தம் அடிக்கிற ஊர் தானே கோவா
டூ பீஸ் எல்லாம்
ஸ்விம் அடிக்கிற ஊர் தானே கோவா
ஹாலி சேர்ச்
வான் இடிக்கிற ஊர் தானே கோவா
பெலிசியன் பெர்ட்ஸ்
மீன் பிடிக்கிற ஊர் தானே கோவா
போட்ட திட்டங்கள் கை கூடும் நாள் வந்தது
ஓ ஹேய் ஓ ஹேய் கேட்ட பூ மாலை
தோழானம் தோள் வந்தது ஓ ஹேய் ஓ ஹேய்
(அராபியன்..)

fly like a butterfly
sting like a bee
I'll leave for the sky
the one who want's to be
hey body's shakin
let me fly through the land
you're lookin like Archie
heart, feel and soul
international
see I've got to grab my cash note
gotta pick my flight rationalle
goa
I'll be so high in that plane
when I just stare I'll pick that brain
three quarter crore people thinkin that I am strange
got the body for the chance
but I'm gettin that change in me
relax on the beach now we've gotta little feather
you're my jack on the beach
join the breeze in the palm trees
we're standing there looking at the brown trees

கடாவும் போட்டாவும் நம் வீட்டிற்க்குள் நிற்காதடா
கனாவும் வினாவும் நம் கண் விட்டு போகாதடா
ஹ ஹ ஹ..
கோ என்பது முன் வார்த்தைதான்
வா என்பது பின் வார்த்தைதான்
கோ என்றது துன்பங்களை
வா என்பது இன்பங்களை
(அரபியன்..)

when you're comin to goa
got to get that girl
we party we party
we twist and touch
no freaks all around me kiss
chynk show tyme
I'm man again no chicks
so
look at her
got her eyes on her wrists
so they can't be faint
when I also grip
I roll up
swag dee scroll up
...
I'm swearing baby now with
now I'm in town
crazy down with
have a good trip
and buy another phone with
I'm all over me and
got another Jim cove me
t-bone and I freak
by the surface
give money here
and reek out the purchase

கோவா கோவா கோவா
கோ கோ கோவா தொட்டு
கோ கோ கோ தட்டி
கோ கோ கோவா

போட்ட திட்டங்களை கை கூடும் நாள் வந்தது
கேட்ட பூ மாலை தோள்வானம் தோள் வந்தது
(அராபியன்..)

படம்: கோவா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: தான்வி, சுசித்ரா, ரஞ்சித், கிரீஷ், பாவ் பண்டி, சின்க் ஷோடைம்

Saturday, January 16, 2010

கோவா - ஏழேழு தலைமுறைக்கும்ஏழேழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம்
எழுத்து வந்தோம் நல்ல வரம்
ஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும்
எங்க புறம் பண்ண புறம்
முல்லையாரு முதல் முதலா முத்தமிடும் அந்த இடம்
எல்லைகளை தாண்டி வந்த எங்க அப்பன் பொறந்த இடம்
(முல்லையாரு..)
(ஏழேழு..)

வீரப்பாண்டி மாரியம்மா எங்குமுள்ள காளியம்மா
தாய் சீல காரியம்மா தந்தா வங்கடம்மா
பாட்டி சின்ன தாயி தந்த பாசமுள்ள பாவலரு
கூட்டி எடுத்துத் தந்த பாட்டு பொங்குதம்மா
பட்டிக்காட்ட விட்டுப்புட்டு பட்டணத்தில் குடி புகுந்து
மெட்டுகளை கட்டி தந்த மொத்த சொத்தும் எங்களுக்கு
ஆத்தி என்ன சொல்ல
அன்புக்கும் பண்புக்கும் அளவு எங்கிருக்கு
அப்பருந்து இப்ப வர எங்களுக்கு என்ன குறை
எப்போழுதும் மக்களுக்கு சொல்வோம் நன்றிகளை
(ஏழேழு..)

அள்ளி உறளுல நெல்ல போட்டு
அழுத்தி அழுத்தி குத்துங்கடி
அத்த மகனைத்தான் பாத்துக்கிட்டு
அமுக்கி புடிச்சு குத்துங்கடி
நம்ம நெல்லு குத்துகிற அழகைக் கண்டு
மச்சான் நேருல வர்றத பாருங்கடி
அவன் நேருல வர்றத பார்த்துப்புட்டு
நம்ம நெஞ்சு துடிக்குது கேளுங்கடி

மேத்து மழை சாரலிலே மேஞ்சு வந்த மேகம் எல்லாம்
கோர்த்து தந்த பாட்டு சத்தம் எப்போதும் கேட்கும்
நாத்தெடுத்து நடவு நட்டு நம்ம சனம் பாடுனது
ஊர் அறிய கேட்கும்போடு உற்சாகமா தோணும்
அப்பனோட அறிவிருக்கு அன்னையோட அறவனைப்பு
சத்தியமா நிச்சயமா அஸ்திவரம் எங்களுக்கு
தாயின் அன்பிருக்கு அது கொடுக்குது மகிழ்ச்சி உங்களுக்கு
வயலுல வெளஞ்ச நெல்லு நகரத்த தேடி வந்து
பசிகளை தீர்ப்பதுப்போல் பாரு எங்க கதை
(ஏழேழு..)

படம்: கோவா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: பவதாரினி, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன்
வரிகள்: கங்கை அமரன்

Friday, January 15, 2010

தமிழ் படம் - குத்து விளக்குகுத்து விளக்கு குத்து விளக்கு
சத்தியமா நான் குடும்ப குத்து விளக்கு
அச்சம் விலக்கு வெட்கம் விலக்கு
ஆச தீர அப்பளமாய் என்னை நொறுக்கு
வா ராஜா என் ரோஜா சூடாம கிடக்கு
நோகாம கையால லேசாக மடக்கு

இச்சி முச்சி முத்தம் கொடுப்போம்
உடம்பில் மச்சம் நூறு தேடி பிடிப்போம்
பிச்சி பிச்சி பிச்சி எடுப்போம்
நல்லா குடிச்சுப்புட்டு கும்மாளம் அடிப்போம்
(குத்து..)

மீட்டர் எகுறுது சுட சுட சூடாச்சு
குவாட்டர் கேட்குது ஊத்தி நாள் ஆச்சு
சிக்கி முக்கி போல உரச உரச தேயாச்சு
சூடு பறக்குது எல்லாம் பார்த்தாச்சு
புலிபோலே தேகம் துடிக்கும்
எனக்கே உசுரோட தின்ன பிடிக்கும்
ஐரமீனை மனசு துடிக்கும்
அந்த ஆசையில மூளை வெடிக்கும்
அட பஞ்சும் தீயும் சொந்தம்தானே
பத்திக்கிட்டா இன்பம்தானே
திருட்டுகோழி ரொம்ப ருசிக்கும்
மனசை தெரிஞ்சுக்கிட்டா வாழ்வே சலிக்கும்
வானவில்லின் தோளை உரிப்போம்
நாங்க பூமி பந்த அப்பிட் பிடிப்போம்
(குத்து..)

டில் பரு ஜானீ தில் தீவானி
நெஞ்சமெல்லாம் அழகா அழகா கொதிக்குற தானே

டாப்பு கியருதான் ஓவரு ஸ்பீடு தொட்டாச்சு
வாழ்க்கை பாருதான் கவல விட்டாச்சு
பார்த்து பார்த்துதான் பயந்த காலம் போயாச்சு
ரைக்டு ராங்குதான் எல்லாம் பிடிக்கும்
சூடான முத்தம் இனிக்கும்
நோயே நெருங்குது ஆயுள் வரைக்கும்
அட மோசமான ஆளு ஒன்னா
கண்ட நீயும் இங்கே கொண்ட
தூண்டில் போட்டு யானை பிடிப்போம்
உன் சுடுகாட்டுக்குள்ளே ஆவி புடிப்போம்

வாழும்போதே செஞ்சி முடிப்போம்
இதுதான் வாழ்க்கைன்னு சொல்லி அடிப்போம்
(குத்து..)

படம்: தமிழ் படம்
இசை: கண்ணன்
பாடியவர்: உஜ்ஜயினி

Thursday, January 14, 2010

அசல் - டொட்டொயிங்...புடிச்சிருக்குது புடிச்சிருக்குது உன்னைதான்
எப்போதுமே ஒன்னா நீ என்னைதான்

அதிரி புதிடி பண்ணிக்கடா
எதிரி உனக்கு இல்லையடா
தொட்டதெல்லாம் வெற்றியடா
தொடாதையும் தொட்டுக்கடா
கண்களை தொட்டதும் கற்பு பதறுதே
உன் கையால் நீ தொட்டால்
கன்னி மொட்டுக்குள்ள
டொட்டொயிங் டொட்டொயிங்

அதிரி புதிரி பண்ணட்டுமா
எகிறி எகிறி விழட்டுமா
பின் அழகை பின்னட்டுமா
ப்ச்சி பிச்சி தின்னட்டுமா
காதலின் உலையிலே ரத்தம் கொதிக்குதே
முழு முத்தம் நீ இட்டால்
என் முதுகு தண்டுக்குள்ளே
டொட்டொயிங் டொட்டொயிங்

ரெண்டு பேரும் குடிக்கணுமே ரெட்டை இதழ் தீம்பால்
எத்தனை நாள் தின்னுவது இட்லி வடை சாம்பார்
முக்கினியில் ரெண்டு கனி முட்டி திங்க ஆசை
அப்பப்ப சலிச்சிருச்சே அப்பள வடை தோசை
பணைய கைதிய போல என்னைய ஆட்டி படைக்குற
பங்கு சந்தைய போல என்னை ஏத்தி இறக்குற
ஹேய் நெத்தியில எப்பவும் சுத்தி அடிக்கிற
கத்தி கண்ணு வத்தி வெச்ச என் உச்சி மண்டையில
டொட்டொயிங் டொட்டொயிங்

டொட்டொயிங் டொட்டொயிங் டொட்டொயிங்

பச்ச புள்ள போல் இருப்பா லட்ச கெட்ட பாப்பா
நெஞ்சுக்குள்ள வெச்சதென்ன முந்திரிக்கா தோப்பா
கத்திரிக்கா மூட்ட போல கட்டழகு சீப்பா
ஓரம் போட்டு வளர்த்ததப்பா போத்திருக்குது போப்பா
ஏப்ரல் மாத ஏறி போல ஹார்ட்டு எறங்குதே
தங்கம் வெலைய போல சும்மா ஏறுதே
புத்தியில் எப்பவும் நண்டு ஊருதே
பச்சு பச்சு இச்சு வெச்சா நரம்பு மண்டலத்தில்
டொட்டொயிங் டொட்டொயிங்
(ஹேய் அதிரி..)
டொட்டொயிங்...

படம்: அசல்
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: ஜனனி, முகேஷ்

Wednesday, January 13, 2010

அசல் - தல போல வருமாகாற்றை நிருத்தி கேளு
கடலை அழைத்து கேளு
இவந்தான் அசல் என்று சொல்லும்

கடமை செய்வதில் கொம்பன்
கடவுள் இவனுக்கு நண்பன்
நம்பிய பேருக்கு மன்னன்
நன்றியில் இவன் ஒரு கர்ணன்
அடடா அடடா அடடா
தல போல வருமா

தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா

காற்றில் ஏறியும் நடப்பான்
கட்டாந்தரையிலும் படுப்பான்
எந்த எதிர்ப்பையும் ஜெயிப்பான்
எமனுக்கு டீ கொடுப்பான்

முகத்தை குத்துவான் பகைவன்
முதுகை குத்துவான் நண்பன்
பகையை வென்றுதான் சிரிப்பான்
நண்பரை மன்னித்தெழுவான்

போனான் என்று ஊர் பேசும் போது புயல் என வீசுவான்
பூமி பந்தின் ஒரு பக்கம் மோதி மறுபுறம் தோன்றுவான்
தோட்டங்களில் பூக்களில் தோட்டா தேடுவான்
தோழர்களில் பகைவரையும் சுட்டே வீழ்த்துவான்
மாயமா மந்திரமா

தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா

நித்தம் நித்தமும் யுத்தம்
இவன் நீச்சல் குளத்திலும் ரத்தம்
நெற்றி நடுவிலும் சத்தம்
நிம்மதி இவனுக்கு இல்லை
படுக்கும் இடமெல்லாம் சொர்க்கம்
படுக்கை முழுவதும் ரொக்கம்
காட்டு சிங்கம்போல் வாழ்ந்தும்
கண்களில் உறக்கம் இல்லை
ஊரை நம்பி நீ வாழும் வாழ்க்கை
இழிவென்று ஏசுவான்
உன்னை நம்பி நீ வாழும் வாழ்க்கை
உயர்வென்று பேசுவான்
சட்டங்களின் வேலிகளை சட்டென்று தாண்டுவான்
தர்மங்களின் கோடுகளை தாண்டிட கூசுவான்
மாயமா மந்திரமா

தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா

தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா

படம்: அசல்
இசை: பரத்வாஜ்
பாடியவர்: சுனிதா மேனன்
வரிகள்: வைரமுத்து

Tuesday, January 12, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா - ஹோசானா ஹோசானாஏன் இதயம் உடைத்தாய் நொருங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

ஹோ ஹோசானா ஹோசானா
ஹோ ஹோ ஹொசானா ஹொசானா ஹோ

அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து
கந்தல் ஆகி போன நேரம் ஏதோ ஆச்சே
ஓ வானம் தீண்டி வந்தாச்சு
அப்பாவின் திட்டு எல்லாம்
காற்றோடு போயே போச்சே

ஹோசானா என் வாசல் தாண்டி போனாளே
ஹோசானா வேறு ஒன்றும் செய்யாமலே
நான் ஆடி போகிறேன் சுக்கு நூறு ஆகிறேன்
அவள் போன பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்
ஹோசானா வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்
ஹோசானா சாவுக்கும் பக்கம் வந்தேன்
ஹோசானா ஏன் என்றால் காதல் என்பேன்
ஹோசானா

everybody wanna know what we like-a feel like-a
I really wanna be here with you
It's not enough to say that we're made for each other
It's love that is hosaana true
hosaana, be there when you callin out my(me) name
hosaana, feeling like my(me) whole life has changed
I never wanna be the same
It's time we rearrange
I take a step, you take a step
I'm here callin out to you
ஹேல்லோ ஹெல்லோ ஹெல்லோ
யோ யோ ஹோசானா ஹோசானா
ஹோ ஹோசானா ஹோ
ஹா மீ & யூ ஓஹோ

வண்ண வண்ண பட்டுப்பூச்சி பூ தேடி பூ தேடி
அங்கும் இங்கும் அழைக்கின்றதே
ஹ சொட்டு சொட்டாய் தொட்டு போக
மேகம் ஒன்று மேகம் ஒன்று எங்கெங்கோ நகர்கின்றதே
ஹோசானா பட்டுப்பூச்சி வந்தாச்சா
ஹோசானா மேகம் உன்னை தொட்டாச்சா
கிழிஞ்சல்கள் ஆகிறேன் நான் குழந்தை ஆகிறேன்
நான் உன்னை அள்ளி கையில் வைத்து பற்றி கொள்கிறேன்
ஹேல்லோ ஹெல்லோ ஹெல்லோ ஓஹோ
ஹோசானா என் மீது அன்பு கொள்ள
ஹோசானா என்னோடு சேர்ந்து செல்ல
ஹோசானா உம் என்று சொல்லு போதும்
ஹோசானா

ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே
ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், பிளாஸே, சுசன்

Monday, January 11, 2010

இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் - நெஞ்சம் நெஞ்சம் துடிக்குதடாநெஞ்சம் நெஞ்சம் துடிக்குதடா
நினைவு அணலாய் எறிக்குதடா
பருவம் படுத்துது பசியும் எடுக்குது
பாவை உயிரை பறிக்குதடா

நெஞ்சம் நெஞ்சம் துடிக்குதடி
நினைவு அணலாய் எறிக்குதடி
பருவம் படுத்துது பசியும் எடுக்குது
பழகி கழந்தால் புரியுமடி

ஓ வாளில் முனை என்னை வீழ்த்தாதடி
கூந்தல் எனை குத்தி வீழ்ந்தேனடி
காற்று மழை தாங்கும் உன் பூங்கொடி
காதல் சிறு முத்தம் தாங்காதடா
காற்று மழை தாங்கும் உன் பூங்கொடி
காதல் சிறு முத்தம் தாங்காதடா
உன்னை நான் தாங்க என்னை நீ தாங்க
பாரம் தெரியாதடி
ஓ காதல் கண்ணாளன் கண்டாளுமே
கன்னி மை கூட சிவப்பாகுமே
தீண்டல் ஓர் இன்பம் சீண்டல் வேர் இன்பம்
தாங்கல் பேரின்பம் நீங்காது வா தங்கமே
(நெஞ்சம்..)

ஆசை என்பது ஒர் பசி
அன்பு கனியாக என்னை பசி
வாழ்ந்த்து கொஞ்சம்தான் வா ஊர்வசி
வேர்வை உன் என்றும் காதல் ருசி
விழியில் சில காலம் மடியில் பல காலம்
வந்து நீயே வசி
ஓ மடியில் வாசங்கள் உண்டாகவே
வானில் வழியெங்கும் என் தங்கமே
உன்னின் வாசங்கள் என்னில் உண்டாக
ஆணின் வலை வேண்டும்
மஞ்சத்தில் வா சிங்கமே
(நெஞ்சம்..)

படம்: இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: GV பிரகாஷ், ஹரிணி, சுலபா

Sunday, January 10, 2010

இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் - கண்ணா நீ என்னை ஆட்கொள்ளவாகண்ணா நீ என்னை ஆட்கொள்ளவா
கதறும் சலங்கைக்கு பதில் சொல்லவா
காதல் கொண்டவள் பாவி
கண்ணில் வழியுது ஆவி
காவல் கடந்திங்கு வா
(கண்ணா..)

இரு விழி எழுத துளி இருகடல் ஆகியதே
சலங்கை மணி தெறித்து இலங்கையில் விழுகிறதே
எனது பாடல் உன்னை மீட்கட்டும்
உனது கைகள் என்னை காக்கட்டும்
வான் செல்லும் பறவைக்கும் என் குரல் புரியுது உனக்கா தெரியாது
என் தோட்ட அரும்பெல்லாம் மலர் செய்த காற்றே
உனக்கென்ன உனக்கென்ன சிறையா
(என் தோட்ட..)
உனக்கில்லை ஒரு மரணம்
உன் அடி நான் சரணம்
சிறை விட்டு வெளி வரணும்
வழி விட்டு வரம் தரணும்
வான் உன்னை அழைக்குது வா

இதழ் வழியுது ரத்தம் வேதனை சொல்கிறதே
விழி வழி வழியும் துளி விடியல் கேட்கிறதே
உனது பாதம் தடையும் தாண்டும் வா
உனது பார்வை உயிரை தீண்டுமா
ஓளிவிட்டு வால் ஒன்னு உரை விட்டு வருவது போல்
சிறை விட்டு வருவாயா
உயிர் காம்பும் உடல் பூவும் உனக்காண பரிசு
பொருள் ஏற்று அருள் காண வருக
(உயிர்..)
எறிமலை வாய் அருகே இளங்கிளிபறக்கிறதே
மழை வந்து அணைத்துவிடில் கிளி இங்கு கூடு கட்டும்
(கண்ணா..)

படம்: இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ, நவின் ஐயர், DA ஸ்ரீநிவாஸ்

Saturday, January 9, 2010

அசல் - எங்கே எங்கே மனிதன் எங்கேஎங்கே எங்கே மனிதன் எங்கே
மனிதன் உடையில் மிருகம் இங்கே
ஓனாய் உள்ளம் நரியின் கள்ளம்
ஒன்றாய் சேர்ந்த உலகம் இங்கே
வரிகளால் அந்த வரங்களால்
வாழ்க்கையில் ஞானம் கொண்டேன்

காதல் என்றால் கண்ணில் யுத்தம்
கண்ணீர் எல்லாம் வெள்ளை ரத்தம்
உறவும் நட்பும் பிம்பம் பிம்பம்
உள்ளம் எங்கே நம்பும் நம்பும்
பொய்களின் கரைக்கு நடுவிலே
போகுதே வாழ்க்கை நதி

ஜனம் உண்மை மரணம் உண்மை
தந்தானே கடவுள் தந்தானே
அந்த ரெண்டை தவிர எல்லாம் பொய்யாய்
செய்தானே மனிதன் செய்தானே

கழுகை பிழந்து காணும் போது
வானம் இருண்டிட கண்டேன்
நான் உறவை திரந்து காணும் போது
உலகம் தெரிந்திட கண்டேன்
என் உடலை தொட்டாய் நான் மனிதன் ஆனேன்
என் உயிரை தொட்டால் நான் கடவுள் ஆவேன்

இங்கே இங்கே மனிதன் இங்கே
இமயம் தாங்கும் இதயம் இங்கே
காடும் மரமும் என் காலில் பூக்கள்
குன்றும் மலையும் கூலாங்கற்கள்
சாதிக்கவே பறக்கின்றேன்
சாதிக்கவே பறக்கின்றேன்..

படம்: அசல்
இசை: பரத்வாஜ்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

Friday, January 8, 2010

தமிழ் படம் - பச்ச மஞ்ச கறுப்பு தமிழன் நான்சுனாமியின் பிணாமியே
குள்ள நரிகளை ஒழிக்கும் நல்ல நரியே
கன்னி கழியாத கவர்ச்சி கண்ணனே
ஏழைகளை ஏற்றிவிடும் லிஃப்ட்டே
நீ உட்கார்ந்தால் எழுந்திருக்கும் எழுச்சி நாயகன்
ஓர் அப்பனுக்கு பிறந்த ஆம்பள

பச்ச..
பச்ச மஞ்ச கறுப்பு தமிழன் நான்
உலகத்தை ரசிக்க வந்த கடவுளும் நாந்தான்
அட என்ன மிஞ்ச எவனும் இங்கில்ல
நம்ம தாய்க்குலத்துக்கு நான்ந்தான் செல்லப்புள்ள

ஆமா ராசா..

2011ன்னு நம்ம கையில
சந்திப்போண்டா போடா நம்ம சட்ட சபையில
எமனுக்கு என்ன கண்டா உள்ளுக்குள்ள நடுங்கும்
என் பார்வை பட்டாலே சிங்கமும் பதுங்கும்

பச்ச..
பச்ச யெல்லோ பிங்கு தமிழன் நான்
உலகத்தை ரசிக்க வந்த கடவுளும் நாந்தான்
அட என்ன மிஞ்ச எவனும் இங்கில்ல
நம்ம தாய்க்குலத்துக்கு நான்ந்தான் செல்லப்புள்ள

உலகத்துக்கே தானவன் நீ
ஒபாமாவை வீழ்த்த வந்த இறைவன் நீ
நீ எட்டு வெச்சா பூமியெல்லாம் கிடுகிடுக்கும்
உன்னை பார்க்கும்போது பெண் இதயம் படப்படக்கும்
தயிருல போட்டா தயிர்வடை போடலைன்னா மெதுவடை
ஊத்து இருந்தா அது ஊத்த வடை
இவ்ளோ தத்துவம் தாங்காதுன்னா நீ பில்ட்-அப்பு ஏத்து

ஓக்கே..

தனியாளா சிகரம் தொட்டேன்
சரித்திரமா உயர்ந்துப்புட்டேன்
தலைவன் நாந்தானே தளபதி நாந்தான்
அகில உலக சூப்பர் ஸ்டாரு யாரு?
வேற யாரு நாந்தானே பாரு
என்னை வாழ்த்தி பாரு வாழ்க்கை செழிக்கும்
என்னை வணங்கி பாரு மோட்சம் கிடைக்கும்

பச்ச..
ஏய் பச்ச மஞ்ச வைட்டு ரோசு தமிழன் நான்
உலகத்தை ரசிக்க வந்த கடவுளும் நாந்தான்
அட என்ன மிஞ்ச எவனும் இங்கில்ல
நம்ம தாய்க்குலத்துக்கு நான்ந்தான் செல்லப்புள்ள

நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
ஆஹா..
ஓக்கே..

ஏஞ்சலினா ஜோலியேவே ஏண்க்க வெச்ச அழகன் நான்
கல்லூரி பொண்ணுங்களுக்கு கனவு கண்ணந்தான்
ஆஸ்காரு எல்லாம் எனக்கு அம்பாசடர் காருடா
ஸ்லம்டாக் கூட எனக்கு சப்ப மேட்டருடா
உன் புள்ளைக்குதான் என் பேர வச்சிப்பாரு
பரிட்சையில் எடுப்பாண்டா நூத்துக்கு நூறு

தலைவன் தலைவன் நாந்தான் தலைவன்
தமிழன் தமிழன் நாந்தான் தமிழன்

பச்ச..
பச்ச மஞ்ச ஆரஞ்சு தமிழன் நான்
உலகத்தை ரசிக்க வந்த கடவுளும் நாந்தான்
அட என்ன மிஞ்ச எவனும் இங்கில்ல
நம்ம தாய்க்குலத்துக்கு நான்ந்தான் செல்லப்புள்ள

2011ன்னு நம்ம கையில
சந்திப்போண்டா போடா நம்ம சட்ட சபையில
எமனுக்கு என்ன கண்டா உள்ளுக்குள்ள நடுங்கும்
என் பார்வை பட்டாலே சிங்கமும் பதுங்கும்

மச்சா..
எல்லா கலரு தமிழனும் நாந்தான்
உலகத்தை ரசிக்க வந்த கடவுளே நாந்தான்
அட என்ன மிஞ்ச எவனும் இங்கில்ல
நம்ம தாய்குலத்துக்கு நாந்தான் செல்லப்புள்ள

படம்: தமிழ் படம்
இசை: கண்ணன்
பாடியவர்: முகேஷ்

Thursday, January 7, 2010

தமிழ் படம் - ஒரு சூராவளி கிளம்பியதேஒரு சூராவளி கிளம்பியதே
சிவன் தாண்டவம் தொடங்கியதே
சும்மா கிடந்த சங்கை ஊதி விட்டாய்
சிவனேன்னு கிடந்தவனை தீண்டிவிட்டாய்
(சும்மா..)
முனீஸ்வரா அனுபவிப்பாய்
முனீஸ்வரா நீ அனுபவிப்பாய்
(ஒரு சூராவளி..)

தடகளை உடைப்பதும் படைகளை எதிர்ப்பதும்
இவனுக்கு கை வந்த கலை தான்
பணம் திமிரினை எதிர்ப்பவன் பதிலடி கொடுப்பவன்
துணிந்தவன் யாரு இவந்தான்
இவன் உடம்பில் தெறிக்குது தெறிக்குது
லட்சிய வெறி
எடுத்த சபதங்களை முடிக்கும் வரையினில்
காது கிழி
தலை தெறிக்கும் வேகத்தினில் தலைவிதி மாறுது
இவன் எடுக்கும் முடிவினில் இந்தியா மாறுது
சிவா சிவா சிவா சிவா
சிவா சிவா சிவா சிவா

படம்: தமிழ் படம்
இசை: கண்ணன்
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்

Wednesday, January 6, 2010

குட்டி - life-ஏ ஜாலிதான்If you keep smiling you will be happy
If you dont smile you will get BP
Open your eyes and look at this world
life-ஏ ஜாலிதான்

If you keep rocking you will be happy
If you keep worry you will get BP
Open your eyes and look at this world
life-ஏ ஜாலிதான்

ஈஸ்டு வெஸ்டு நோர்த்து சவுத்து
எங்கும் எங்கள் யூத்து கூத்து
வாஸ்து பார்த்து வாழாதே life-ஏ ஜாலிதான்
ஏய் ஹாட்டு கோல்டு ஸ்வீட்டு சால்ட்டு
எதுவுன்னாலும் பாரு பேஸ்ட்டு
திட்டம் போட்டு வாழாதே life-ஏ ஜாலிதான்
ஏய் எக்ஸாமினேஷன் அடிக்கடி டியூஷன்
இல்லாமல் போனால் ஜாலிதான்

ஹேய் கைகளை ரெக்கையாய் மாத்து ஜாலிதான்
குழந்தையின் பாஷை புரிஞ்சா ஜாலிதான் அட ஜாலிதான்
குடையிருந்தாலும் நனைஞ்சா ஜாலிதான் ஜாலிதான்
அடிக்கடி மனசை திறந்தா ஜாலிதான் அட ஜாலிதான்
மனசுக்கு பிடிச்சதை ரசிச்ச ஜாலிதான்

If you keep smiling you will be happy
If you dont smile you will get BP
Open your eyes and look at this world
life-ஏ ஜாலிதான்

அரும்பான மீசை வரும்போது
விரலால மெல்ல தொடும்போது
மனதோடு தோன்றும் சந்தோஷம் ஜாலிதான்
மிளகாயை போல பேசாம
மெதுவாக அன்பா நீ பேசு
கொலைகாரன் கூட குழந்தைன்னா ஜாலிதான்

கராத்தே குங்ஃபு தெரிகிற போதும்
நண்பனிடம் தோற்றா ஜாலிதான்
அலாரம் வைத்து விடியலில் எழுந்து தூங்கு ஜாலிதான்
ஹேய் தூரலில் ஜன்னலின் ஓரம் ஜாலிதான்
எமனிடம் ஜோக்கு அடிச்சா ஜாலிதான் அட ஜாலிதான்
எமறிலையில் குளிர் காய்ஞ்சா ஜாலிதான் ஜாலி ஹேய்
இளமையில் முதுமை ரசிச்சா ஜாலிதான்
முதுமையில் மனசில் மதிச்சா ஜாலிதான்

ஈஸ்டு வெஸ்டு நோர்த்து சவுத்து
எங்கும் எங்கள் யூத்து கூத்து
வாஸ்து பார்த்து வாழாதே life-ஏ ஜாலிதான்

பல நூறு ஆண்டு முன்னால
உன் வீடு தெருவும் உனதில்ல
புரிந்தால் வாழ்க்கை எப்போதும் ஜாலிதான்
பல நூறு பேரை வென்றாலும்
அது வீரம் என்று ஆகாது
மனதார மண்ணின் வீரம் ஜாலிதான்

பொறாமை கோபம் இல்லாமல் வாழ உன்னால முடிஞ்சா ஜாலிதான்
எல்லோரும் போல வாழாம புதுசா இருந்தால் ஜாலிதான்
ஹே லட்சியம் ஆகிற கனவு ஜாலிதான்
ஜெயிக்கிற போது அழுகையும் ஜாலிதான் அட ஜாலிதான்
தோல்வியை கண்டு சிரிச்சா ஜாலிதான் ஜாலிதான்
அடுத்தவன் தாகம் புரிஞ்சா ஜாலிதான் அட ஜாலிதான்
அடிக்க வந்தவனை அணைச்சா ஜாலிதான் ஜாலி

If you keep smiling you will be happy
If you dont smile you will get BP
Open your eyes and look at this world
life-ஏ ஜாலிதான்

படம்: குட்டி
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: தேவிஸ்ரீ பிரசாத், ரேய்னா

Tuesday, January 5, 2010

தமிழ் படம் - ஓ மஹ ஜீயாஓ முஹலை ஓ முஹலை

ஓ மஹ ஜீயா ஓ மஹ ஜீய
நாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா
ஓ ரண்டக்கா
(ஓ மஹ..)

ஹுல்லாஹி ஹுல்லாஹி ஆகாயக்கியாஹி
மெஹூ மெஹூ டைலாமோ டைலாமோ
ரஹதுல்லா சோனாலி
(ஓ மஹ..)
ஹா ஹா ஹோஹோ
ஹா ஹா..

சமபசமாலே ஹுசூசே சாயோ சாயோ
ஹசிலி ஃபிசிலி இல்லாஹி யப்பா ஜிம்பா
சமபசமாலே ஹுசூசே சாயோ சாயோ
ஹசிலி ஃபிசிலி இல்லாஹி யப்பா ஜிம்பா
டைலமோ டைலமோ பல்லேலக்கா
டைலமோ டைலமோ பல்லேலக்கா
நாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா
ஓ ரண்டக்கா
( மஹ..)

ஏ சலசாலா இஸ்குபராரா ஒசகா முராயா
பூம்பூம் சக்லக்கா முக்காலா மையா மையா
ஏ சலசாலா இஸ்குபராரா ஒசகா முராயா
பூம்பூம் சக்லக்கா முக்காலா மையா மையா
லாலாக்கு லாலாக்கு டோல் டப்பிமா
லாலாக்கு லாலாக்கு டோல் டப்பிமா
நாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா
ஓ ரண்டக்கா
( ஹோ மஹ..)

படம்: தமிழ் படம்
இசை: கண்ணன்
பாடியவர்கள்: ஹரிஹரன், ஷ்வேதா

Monday, January 4, 2010

சித்து ப்ளஸ் டூ - ஏ குண்டுச் சட்டிக்குள்ளே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஏ குண்டுச் சட்டிக்குள்ளே
அட குதிரை ஓட்டும் புள்ள
வெறும் ஏவள் மட்டும்தானா
இந்த உலகம் இப்ப இல்ல

உங்க ஜன்னல் ஜாக்கேட் அழக
இந்த அண்ணன் சகிப்பான் சொல்லு
நீங்க ல்லோ ஹிப் கட்டும் ஸ்டைல
எந்த அப்பன் சகிப்பான் சொல்லு

அதுக்கே நாங்க வேலை வெட்டி உட்டுப்புட்டு
பாடிகார்ட்டா டூட்டி பார்க்கிறோம்
அதுக்கே நீங்க மிஸ்ட் காலு தரும்போது
செல் பில்ல கட்டி அழுவோம்
அதுக்கே தினம் ஆளு இல்லா தியேட்டருகு
மேட்னிக்கு டிக்கேட் எடுப்போம்
அதுக்கே ஈவ் டீஸிங்குல மாட்டுக்கிட்டு
உசுரிருக்கும் மானம் கெடுறோம்

ஸ்வீடா ஏதும் பார்த்தா அடி எறும்பு அங்க ஊரும்
நல்லா கியூட்டா பிகர பார்த்தாஎங்க கண்கள் எறும்பா மாறும்
போட்டி போட்டு நாங்க உங்க பின்னால் கியூவில் ஏங்க
ஓர கண்ணால் பார்காதீங்க கிக்கில் சொக்குவோங்க

ஏராளம் அழகுனக்கு ஏடாகூட திமிருனக்கு
தாராளம் ஸ்டைல் உனக்கு அ தொட்டு பார்க்க தடை எதுக்கு
தேர் போல நடை உனக்கு நூலைப்போல இடை உனக்கு
பாம்பாட்டம் ஜடை உனக்கு ஹ பத்திக்கிச்சு மனசெனக்கு

அடடா அடடா உன் புருஷனா வேலை வேணும் தறியா
ஒடனே கெடச்சா நீங்க தொட்டிலுக்கு ஆர்டர் பண்ணலாம்
சொக்க தங்கம் என்றால் அதை உரசி பார்க்க வேண்டும்
ஒரு டக்கர் ஃபிகரு பக்கம் வந்தா பேசி பார்க்க வேண்டும்
பார்க்க கூடாதென்றால் நீங்க போர்த்திக்கொண்டு போங்க
ஏன் தொப்புள் மேல வளையம் மாட்டி மனச கெடுக்குறீங்க

ஹீரோவா இருந்தாலும் சோலோவாக மாட்டிக்கிட்டா
ஜீரோன்னு மார்க் போட்டு நார் நாரா கிழிப்பீங்க
நீ செஞ்ச டைம் பாடா நாங்க செஞ்சா வெட்டி கேஸா
பெண்ணே உன் டிஷ்னரில ஆண்கள் எல்லாம் அற லூசா

ரைக்டா ரைக்டா உன் நெஞ்ச தொட்டு சொல்லு இது ரைக்டா
குவையட்டா குவையட்டா நீங்க மாறலன்னா கொடி பிடிப்போம்
கானா பாட்டு கொஞ்சம் இங்க கடலை போட்டது கொஞ்சம்
பல வருஷம் தாண்டி திரும்பி பார்த்தா காலேஜ் டேய்ஸே மிஞ்சும்
எங்களுக்கும் கூட ஒரு அக்கா தங்கை உண்டு

படம்: சித்து ப்ளஸ் டூ
இசை: தரன்
பாடியவர்கள்: ராகுல் நம்பியார், ரஞ்சித்

Sunday, January 3, 2010

வேட்டைக்காரன் - என் உச்சி மண்டையிலஎன் உச்சி மண்டையில சுர்ருங்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருங்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது டர்ருங்குது
(என் உச்சி..)

கை தொடும் தூரம் காய்ச்சவளே
சக்கரையாலே செஞ்சவளே
என் பசி தீர்க்க வந்தவளே சுந்தரியே
தாவணி தாண்டி பார்த்தவனே
கண்ணாலே என்னை சாய்ச்சவனே
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே சந்திரனே

மியாவ் மியாவ் பூனை நான் மீசை வச்ச யானை
கள்ளு கடை பானை நீ மயக்குர மச்சானை
புல்லு கட்டு மீசை என் மேல பட்டு கூச
அச்சுதடி ஆசை உன் கிட்ட வந்து பேச

மந்திர காரி மாய மந்திர காரி
காகிதமா நீ இருந்தா பேனா போல நான் இருப்பேன்
ஓவியமா உன் உருவம் வரஞ்சுடுவேனே
உள்ளங் கையா நீ இருந்தா ரேகையா நான் இருப்பேன்
ஆயுலுக்கும் உன் கூட இணைஞ்சிருப்பேனே

அஞ்சு மணி பஸ் நான் அதை விட்டா மிஸ்
ஒரே ஒரு கிஸ் நீ ஒத்துக்கிட்டா யெஸ்
கம்மா கரை காடு நீ சுத்த கருவாடு
பந்திய நீ போடு நான் வரேன் பசியோடு

மந்திரகாரா மாய மந்திரக்காரா
ஹேய் அப்பாவியா மூஞ்ச வச்சு அங்கே இங்கே கைய வச்சு
நீயும் என்னை பிச்சு தின்ன கேக்குறியேடா
துப்பாக்கியா மூக்கை வச்சு
தொட்டவ போல மூச்சை விட்டு
நீயும் என்னை சுட்டு தள்ள பார்க்கிறியேடி
(என் உச்சு..)

படம்: வேட்டைக்காரன்
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்கள்:கிருஷ்ண ஐயர், ஷோபா சந்திரசேகர்

Saturday, January 2, 2010

ஞான் ஞான் பாடனும்-ஜென்சி1.என் வாழ்விலே >> 2.இரு பறவைகள் மலை முழுவதும் >> 3.தந்தனம் தனம் தாளம் வரும் >> 4.அடி பெண்னே பொன்னூஞ்சல் >> 5.காதல் ஓவியம் பாடும் காவியம் >>
6.பூச்சூடி பொட்டு வெச்சேன் >> 7.இதயம் போகுதே என்னையே >>8.என்னுயிர் நீதானே >>
9.கீதா சங்கீதா >> 10.ஞான் ஞான் பாடனும்.

ஜென்சி பாடல் தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

அன்பு உள்ளங்களே, மேலே பாடல் வரிகள் படித்தீர்களா? ஆமாம் தன் குரல் வசத்தால் எல்லோரையும் சிலிர்க்கவைக்கும் ஜென்சியின் குரல் தான் அவரின் சின்ன சின்ன பேட்டியுடன் அவரின் இனிமையான பாடல் தொகுப்பு தான் இது. எனது நண்பர் வானொலி அறிவிப்பாளர் திரு.தொண்டாமுத்தூர் ரவி அவர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு வழங்கியுள்ளார். அவரின் ஒலித்தொகுப்பு கேட்க தேனினும் இனிமையாக இருந்தது. இதை தேன் கிண்ண நேயர்களுக்காக வழங்குவதில் நானும் அறிவிப்பாளரும் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இதுவும் ஒரு புத்தாண்டு வானொலி நிகழ்ச்சி தான்.
இதே ஜென்சி அவர்களின் ஒரு பதிவு வேறொரு பண்பலையில் நமது ஆர்.ஜி.லகிஷ்மிநாராயான தொகுத்து வழங்கியது பாசப்பறவைகள் தளத்தில் வந்துள்ளது. இங்கே அதையும் நேரம் கிடைக்கும் போது கேட்டு மகிழுங்கள்.

ஒளிமயமான எதிர்காலம் - எனது பேட்டி1.வெற்றி நிச்சயம் >> 2.வாழ்க்கையில் ஆயிரம் தடைகல்லப்பா >> 3.புலிக்கு பிறந்தவனே >> 4.புதுமை பெண்களடி >> 5.சரீகமெ பதநிசெ >> 6.தமிழா தமிழா நாளை நம் நாடே >>
7.ஜெய் ஹோ ஜெய் ஹோ.

மேலே கண்ட பாடல்கள் வரிசைகளை பாருங்கள் தன்னம்பிக்கையும் முயற்சியின் ஆற்றலையும் ஆணித்தரமாக எடுத்து சொல்லும் பாடல்களின் வரிசைதான் அவை. பாடல்களின் நடு நடுவே கோவை நகரில் சில நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் ஒளிமயமான எதிர்காலம் பற்றி கருத்துக்களை கேட்டு வாங்கி நிகழ்ச்சியை தொகுத்துள்ளார் அறிவிப்பாளினி திருமதி. தேவகி ஸ்ரீனிவாசன் அவர்கள். இவர் அற்புதமாக நிகழ்ச்சியை தொகுத்துள்ளார் தேர்ந்தெடுத்து பாடல்களை வழங்கியுள்ளார். கலந்து கொண்ட நேயர்களிடம் இருந்து சிரித்து கொண்டே அவர் கேள்வி கேட்டு பதில் வாங்கும் பாணி அபாரம் ஏற்கெனவே பாசப்பறவைகள் தளத்தில் இந்த பதிவில்குறிப்பிட்டுள்ளேன். 5 பேரில் இணைய பதிவாளர்கள் 2 பேர் எனக்கு பரிச்சயமானவர் உங்களூக்கும் தெரிந்தவர்கள் தான் இரண்டாவதாக வருபவர் உங்களை அடிக்கடி தேன்கிண்ணத்தில் தொந்தரவு செய்பவர் மிகவும் பரிச்சயமானவர். இவர்களின் கருத்துக்களையும் சேர்த்து பாடல்களை பதிவிறக்கம் செய்து நேரம் கிடைக்கும் போது கேட்டு மகிழுங்கள். உங்கள் ஆசிர்வாதங்களையும் அவர்களுக்கு தாருங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

இந்த நிகழ்ச்சியை மிகவும் அற்புதமாக தொகுத்து வழங்கிய திருமதி. தேவகி ஸ்ரீனிவாசன் அவர்களூக்கு தேன் கிண்ண நேயர்கள் சார்பாக நன்றி.

முதன் முறையாக இந்த நிகழ்ச்சிக்கு எனது பெயரையும் தந்து உதவிய அறிவிப்பாளர் திரு.சசிக்குமார் அவர்களூக்கும், எனது திருப்பூர் நண்பர் தண்ணீர்பந்தல் திரு.அகிலா விஜயக்குமார் அவர்களுக்கும் பேட்டியை கேட்டு உடனே செல் பேசியில் தொடர்பு கொண்ட அணைத்து வானொலி ஆஸ்தான நேயர்களூக்கும் என் மனமார்ந்த நன்றி.

Get this widget | Track details | eSnips Social DNA


ஒளிமயமான எதிர்காலம் - புத்தாண்டு வானொலி சிறப்பு பேட்டி - பதிவிறக்கம் இங்கே

புகைப்படம் உதவி நன்றி: http://sumanjk.blogspot.com

வேட்டைக்காரன் - புலி உருமுதுபுலி உருமுது புலி உருமுது
இடி இடிக்குது இடி இடிக்குது
கொடி பறக்குது கொடி பறக்குது
வேட்டைக்காரன் வர்ரத பார்த்து

கொல நடுங்குது கொல நடுங்குது
துடித்துடிக்குது துடித்துடிக்குது
நலக்கொலையுது நலக்கொலையுது
வேட்டைக்காரன் வர்ரத பார்த்து

பட்டா கத்தி பலப்பலக்க
பட்டி தொட்டி கலக்கலக்க
பறந்து வர்றான் வேட்டைக்காரன்
வாமரரின் கூத்துக்காரன்
நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
வர்றான் பாரு வேட்டைக்காரன்
(புலி..)

யாரிவன் யாரிவன் யாரிவன்
அந்த ஐயனார் ஆயுதம் போல் கூர் இவன்
இருபது நகங்களும் கழுகுடா
இவன் இருப்பதே உலகுக்கு அழகுடா

அடங மறுத்த உனை அழிச்சிடுவான்
இவன் அமிலத்த மொண்டு தானம் புடிச்சிடுவான்
இவனோட நியாயம் தனி நியாயம்
அது இவனால அடங்கும் அனியாயம்

போடு அடிய போடு போடு அடிய போடு
தங்கரு தங்கரு தங்கரு தங்கரு
தங்கரு தங்கரு நா
போடு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு
தங்கரு தங்கரு நா
(புலி..)

அஷதோமா ஷர்கமய தமசோமா ஜோதிர்கமய
ப்ரித்யோர்மா அமிர்தம்கமய ஓம் ஷாந்தி ஷாந்தி ஹே

யாரிவன் யாரிவன் யாரிவன்
ஒத்தையாக நடந்து வரும் ஊரிவன்
சினத்துக்கு பிறந்த சிவனடா
அட இவனுக்கு இணைதான் எவனடா

இவனுக்கு இல்லடா கடிவாளம்
இவன் வரலாறை மாற்றிடும் வருங்காலம்
திரும்பும் திசையெல்லாம் இவன் இருப்பான்
இவன் திமிருக்கு முன்னால எவன் இருப்பான்

போடு அடிய போடு போடு அடிய போடு
தங்கரு தங்கரு தங்கரு தங்கரு
தங்கரு தங்கரு நா
போடு தங்கரு தங்கரு தங்கரு தங்கரு
தங்கரு தங்கரு நா
(புலி..)

படம்: வேட்டைக்காரன்
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்கள்: மாணிக்க விநாயகம், ஆனந்து
வரிகள்: கபிலன்

Friday, January 1, 2010

தீராத விளையாட்டு பிள்ளை - பூ முதல் பெண் வரைபூ முதல் பெண் வரை
கார் முதல் கண் வரை
க்னைவ் முதல் வைவ் வரை
எனக்கு தான் வேண்டும் பெஸ்ட்

ஒரே ஒரு நிலா
அட போரடிக்குது வானம்
லட்சம் நீயும் கொண்டா
அதில் ஒன்றெடுப்பேன் நானும்

அழகான பெண்ணொன்று
அறிவான பெண்ணொன்று
அன்பான பெண்ணொன்று
பூம் பூம் பூம் பூம்

ஒவ்வொன்றாய் பார் இன்று
என்னவள் யார் என்று
சொல்கின்ற நாள் இன்று
பூம் பூம் பூம் பூம் பூம்
எனக்கு தான் வேண்டும் பெஸ்ட்

நாட்டு காப்பியோ
காக்டெயில் போற பார்ட்டியோ
இந்த சின்ன அழகியோ
இங்கிலாந்து குமரியோ
எனக்கு வேண்டும் பெஸ்ட்

ஐஃபில் டவர் ஆனாலும்
லண்டன் ப்ரிட்ஜ் ஆனாலும்
எனக்கென்றும் பெஸ்டாக
எஒம்ப ஸ்பெஷலாக
அட வேணும் வேணும் வேணுமே

பூவுக்குள் ரோஜா பெஸ்ட்
ரம்மிக்கு ராஜா பெட்
பெண்ணுக்குள் யார்தான் பெஸ்ட்
பூம் பூம் பூம்

தேவதை தேசம் இது
தேவையை தேடி எடு
ஐ விஷ் யூ ஆல் தி பெஸ்ட்
பூம் பூம் பூம் பூம் பூம்
பூம் பூம் பூம்

அமேரிக்கா ஆப்பிளோ
அஏபியா ஆலிவ்வோ
எனக்கு வேண்டும் பெஸ்ட்

தோக்யோ லண்டன் நகரமோ
தூக்கி போட்ட தகரமோ
எனக்கு வேண்டும் பெஸ்ட்
டைக்ட் ஜீன்ஸ் ஆனாலும்
ந ந நைட் ட்ரீம்ஸ் ஆனாலும்
எனக்கென்றும் பெஸ்ட்டாக
ரொம்ப ஸ்பெஷலாக
அட வேணும் வேணும் வேணும் வேணுமே

மன்மதன் அண்ணன் நான்
அசராத மன்னன் நான்
காதலின் கம்பன் நான்
பூம் பூம் பூம் பூம்
ரெயின்போவில் கலர்ஸ் உண்டு
சூஸ் பண்ண சாய்ஸ் உண்டு
உன் வாழ்க்கை உன்னோடு
பூம் பூம் பூம்

எனக்கு தான் வேண்டும் பெஸ்ட்
ஒரே ஒரு நிலா
அட போரடிக்குது வானம்
லட்சம் நீயும் கொண்டா
அதில் ஒன்றெடுப்பேன் நானும்

படம்: தீராத விளையாட்டு பிள்ளை
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா

Last 25 songs posted in Thenkinnam