Sunday, February 19, 2012

என்னில் என்னில் நீயென

என்னில் என்னில் நீயென
உன்னில் உன்னில் நானென
(என்னில்)
விழியிரண்டில் வேள்வியென வளர்த்தது
வேரருந்த மரமெனத்தான் சரிந்தது
காதல் தீ தீ வாட்டுது
கள்ளிப்பால் பாலூட்டுது(காதல்)

மாறும் காலம் என்றே
மாறாக்காதல் கொண்டேன்
கண்ணுக்குள் பூட்டித்தான்
கற்பூரம் ஏற்றித்தான்
பூஜித்தேன்

மௌனம் ஒன்றே உந்தன்
பாஷை என்றே நின்று
உன்னை நீ தண்டிக்க
என்னையும் நீ வஞ்சிக்க
வாழ்ந்தததேன்

யார் தந்த சாபக்கேடோ
துடிக்கிறேன்
கார்மேகம் கண்ணில் சூழ
தவிக்கிறேன்
முதல் முதலாய் கடிதம் பிறந்தது
முகவரியை எழுதும்முன்னே
பறந்தது
காதல் தீ தீ வாட்டுதே
கள்ளிப்பால் பாலூட்டுதே
என்னில் என்னில் நீயென
உன்னில் உன்னில் நானென

மின்னும் கானல் நீரில்
காதல் மீனைத்தேடி
நாளும் தான் நான் சென்றேன்
ஏமாற்றம் ஒன்றே தான்
கண்டேனே
எட்டும் தூரம் தன்னில்
கிட்ட நின்றாய் நீயும்
கண்ணைத்தான் கட்டித்தான்
காட்டுக்குள் தானாய்த்தான்
சென்றேனே
செவ்வானம் நாளை மீண்டும் உதிக்குமோ
செந்தூரம் உந்தன் கையால் கிடைக்குமோ
மூடுபனி பாதைதனை மூடலாம்
காத்திருந்தால் காட்சி அது தோன்றலாம்
(காதல்தீ)

திரைப்படம்: பாரிஜாதம்
பாடியவர்கள்: ஹரிச்சரண் , மாலதி
இசை: தரண்

ஒன்ன நம்பி நெத்தியிலே

ஒன்ன நம்பி நெத்தியிலே
ஒன்ன நம்பி நெத்தியிலே
பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டே வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே
பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சுக்க ராசா
விட்டுப்போனா உதிர்ந்து போகும் வாசன ரோசா

(ஒன்ன நம்பி நெத்தியிலே )

நீரிருந்தா மீனிருக்கும்
நீயிருந்தா நானிருப்பேன்
ஊருங்கூட ஒன்ன நம்பி இருக்குது ராசா

நீரிருந்தா மீனிருக்கும்
நீயிருந்தா நானிருப்பேன்
ஊருங்கூட ஒன்ன நம்பி இருக்குது ராசா
ஒண்ணாரு எனக்கு கண்ணாரு
ஒன்னத்தான் எண்ணி இந்தக் கன்னி
ஒரு சிந்து படிச்சேனே
ஒன்னத்தான் கனாக்கண்டு கண்ணு முழிச்சேனே

(ஒன்ன நம்பி நெத்தியிலே)


வீரத்துல கட்டபொம்மன் ரோஷத்துல ஊமத்தொர
சூரத்துல நீயும் ஒரு தேசிங்குராசா
வீரத்துல கட்டபொம்மன் ரோஷத்துல ஊமத்தொர
சூரத்துல நீயும் ஒரு தேசிங்குராசா
சிங்கம்தான் எனக்கு தங்கம்தான்
அந்தக் கத அப்போ அட இப்போ
நம்ம சொந்தக்கத சொல்லு
நெனப்புல கட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள நில்லு

(ஒன்ன நம்பி நெத்தியிலே )
திரைப்படம்: சிட்டுக்குருவி
பாடியவர்: சுசீலா

Thursday, February 16, 2012

மன்னிக்க மாட்டாயா

மன்னிக்க மாட்டாயா உன்மனமிரங்கி
நீ ஒரு மேதை
நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை
நான் படும் வேதனை போதும்
போதும்
மன்னிக்க மாட்டாயா
(மன்னிக்க மாட்டாயா உன் மனமிரங்கி)

என் விழிகள் தீபங்களாய்
உனக்கென ஏற்றிவைத்தேன்
பொன்னழகு தேவி உந்தன்
தரிசனம் பார்த்து வந்தேன்

உன்னடிமை உன்னருளை
பெற ஒரு வழி இல்லையா
உன்னருகில் வாழ உந்தன்
நிழலுக்கு இடமில்லையா
(மன்னிக்கமாட்டாயா)

என் மனதில்
நாள் முழுதும் இருப்பது நீயல்லவா
என் குரலில்
ராகங்களாய் ஒலிப்பதும் மூச்சல்லவா
என் இதயம் உன் உடமை
உனக்கது புரியாதா
இன்னுமதை நீ மிதித்தால்
உனக்கது வலிக்காதா
( மன்னிக்க மாட்டாயா)


திரைப்படம்: ஜனனி
இசை: எம்.எஸ்.வி
பாடியவர்: ஜேஸுதாஸ்

நானே தொலைந்த கதை நானறியேன் கண்மணியே

நானே தொலைந்த கதை நானறியேன் கண்மணியே
காதல் நுழைந்த வழி கண்டறிவாய் காதலியே

விண்ணில் மழை துளிகள் மின்னலாய் நின்றுவிட
மண்ணில் எனது நிழல் உன்னைப்போல மாறி விட
விரலோரம் கவிதை ஊறியதே
விழியோரம் காதல் கசிகிறதே
நதி மேலே ஓற்றை காலில் மழை ஆடும் ஆனந்தமாய்
கனவு ஊறும் மனசுக்குள்ளே
காதல் வந்து ஓற்றை காலில் சுற்றி சுற்றி மூழ்கடிக்குதே

நானே தொலைந்த கதை நானறியேன் கண்மணியே

உன் இதயம் நான் படிக்க கள்வனாய் மாறி வந்தேன்
என்னைப் போல நீயும் ஓரு கள்ளி என கண்டு கொண்டேன்
என் விரலை உன் விரலாய் இரவினில் தீண்டுகிறேன்
முத்தமென்று தண்ணீரை முகத்தினில் ஊற்றுகிறேன்
உன் முகம் தேடி காலையில் வெயிலாகிறேன்
உன் குரல் தேடி சாலையில் குயிலாகிறேன்

தேர்வு அறை முழுதும் தேவதையே உன் நினைவு
நாளை விடுமுறையாம் காதல் வதை உன் பிரிவு

கண்கள் எனை மறந்து உன்னையே தேடியது
சுவாசம் உன் பெயரை என்னுள்ளே பாடியது
லேசாக சண்டை போடவா
பேசாமல் முத்தம் கேட்கவா
வெயில் காயும் சாலையிலே மழை தூவும் ஆனந்தமாய்
தனிமை நீங்கும் வேளையிலே
காதல் நம்மை காற்றைப் போல எங்கோ எங்கோ கொண்டு செல்லுதே...

திரைபடம்: தவமாய் தவமிருந்து
இசை: சபேஷ் முரளி
பாடியவர்: ப்ரசன்னா

Last 25 songs posted in Thenkinnam