Friday, September 30, 2011

தலைமகனே கலங்காதேதலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே

தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே
உன் தந்தை தெய்வம் தானடா ஆ
உன் தந்தை தெய்வம் தானடா

தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே

ஏ மேகங்கள் அது போல சோகங்கள் கலந்தோடும்
நீ போகும் பாதையெல்லாம் ஞாயங்கள் சபையேறும்
எந்நாளும் உன்னோடு உன் அன்னை மனம் வாழும்
தெய்வங்கள் அருளோடு திசையாவும் மலர் தூவும்

தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே
தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே

படம்: அருணாச்சலம்
இசை: தேவா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

காதல் நெருப்பின் நடனம்

காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் நீரின் சலனம்
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

காதல் மாய உலகம்
சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்
புள்ளி மான்கள் புன்னகை செய்து
வேடனை வீழ்த்தும்
காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்


கனவுகள் பூக்கின்ற செடி என
கண்கள் மாறுதுன்னாலே
வயதிலும் மனதிலும்
விட்டு விட்டு வண்ணம் வழியிதுன்னாலே

உனது வளையாடும் அழகான
கை சீண்டவே
தலையில் இலை ஒன்று விழ வேண்டுமே

குடைகள் இல்லாத நேரத்து
மழை வாழ்கவே
உனது கை ரெண்டும் குடை ஆனதே
உனது முத்ததில் நிறம் மாறுதே
உடலில் ஒரு சோடி நதி பாயுதே


காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயனம்
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

வானத்தின் மறுபுறம்
பறவையாய் நீயும் நானும் போவோமே
பூமியின் அடிப்புறம்
வேர்களாய் நீண்ட தூரம் போவோமே

கோடி மேகங்கள் தலை மீது தவழ்ந்தாடுதே
காதல் மொழி கேட்டு மழை ஆனதே
நூறு நூற்றாண்டு காணாத பூவாசமே
பூமி எங்கெங்கும் தான் வீசுதே
என்உள் உன்னை உன்னுள் என்னை
காலம் செய்யும் காதல் பொம்மை

காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

திரைப்படம்: வெயில்
பாடியவர்கள் : சின்மயி , கார்த்திக், நிதிஷ்
இசை: G.V.பிரகாஷ்
வரிகள் : நா.முத்துக்குமார்

Thursday, September 29, 2011

மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும்மீனம்மா
அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே
அம்மம்மா
முதல் பார்வையிலே சொன்ன வார்த்தையெல்லாம் ஒரு காவியமே

சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும்
மின்னல் போல வந்து வந்து போகும்
மோதல் வந்து ஊடல் வந்து முட்டிக்கொண்ட போதும்
இங்கு காதல் மட்டும் காயம் இன்றி வாழும்
இது மாதங்கள் நாட்கள் செல்ல
நிறம் மாறிடும் பூக்கள் அல்ல

மீனம்மா
அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே

ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்திக்கோர் புது வித்தை காட்டிடவா
ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பார்ப்பதற்கு
அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டு தீண்டுவதா
மாமன் காரன் தானே மால போட நானே
மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம்

மீனம்மா
மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும்
அம்மம்மா
வெயில் உன்னை அணைத்தால் இங்கு எனக்கல்லவா உடல் வேர்த்து விடும்

அன்று காதல் பண்ணியது உந்தன் கண்ணம் கிள்ளியது
அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது
அன்று பட்டுச் சேலைகளும் நகை நட்டும் பாத்திரமும்
உனை கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது
ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே
ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு

மீனம்மா
உன்னை நேசிக்கவும் அன்பை வாசிக்கவும் தென்றல் காத்திருக்கு
அம்மம்மா
உன்னைக் காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு

உன்னைத் தொட்ட தென்றல் வந்து என்னைத் தொட்டு
என்னென்னவோ சங்கதிகள் சொல்லிவிட்டு போக
உன் மனமும் என் மனமும் ஒன்றையொன்று ஏற்றுக்கொண்டு
ஒப்பந்தத்தில் கையெழுத்து போட
பின்பு மோகனப் பாட்டெடுத்தோம் முழு மூச்சுடன் காதலித்தோம்

மீனம்மா
அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே

படம்: ஆசை
இசை: தேவா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்

Wednesday, September 28, 2011

கொஞ்சனாள் பொறு தலைவாகொஞ்சனாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா அந்த மின்மினியத் தோற்கடிப்பா

அட காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ என்னாடோ எந்த ஊரோ நானறியேன்

கொஞ்சனாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா அந்த மின்மினியத் தோற்கடிப்பா

நேத்துக்கூட தூக்கத்தில பார்த்தேனந்தப் பூங்கொடிய
தூத்துக்குடி முத்தெடுத்து கோர்த்துவெச்ச மால போல
வேர்த்துக்கொட்டி கண்முழிச்சுப் பார்த்தா அவ
ஓடிப்போனா உச்சிமலக் காத்தா
சொப்பனத்தில் இப்படிதான் எப்பவுமே வந்து நிற்பா
சொல்லப்போனா பேரழகில் சொக்கத்தங்கம் போலிருப்பா
வத்திகுச்சி இல்லாமலே காதல் தீயப் பத்தவெப்பா

அட காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ என்னாடோ எந்த ஊரோ நானறியேன்

கொஞ்சனாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா அந்த மின்மினியத் தோற்கடிப்பா

பச்சைதாவணி பறக்க அங்கு தன்னையே இவன் மறக்க
வச்ச கண்ணு வாங்கலையே மாமன் கண்ணு மூடல்லையே

என்னோடுதான் கண்ணாமூச்சி என்றும் ஆடும் பட்டாம்பூச்சி
காட்டாயம் என் காதல் ஆட்சி கைகொடுப்பா தென்றல் சாட்சி
சிந்தனையில் வந்துவந்து போனா அவ
சந்தனத்தில் செஞ்சுவெச்ச தேனா
என்னுடைய காதலியே ரொம்ப ரொம்ப பத்திரமா
எண்ணம் எங்கும் ஒட்டிவச்ச வண்ண வண்ணச் சித்திரமா
வேரொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா

அட காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ என்னாடோ எந்த ஊரோ நானறியேன்

கொஞ்சனாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா அந்த மின்மினியத் தோற்கடிப்பா

படம்: ஆசை
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன்
வரிகள்: வாலி

அய்த்தானே அய்த்தானே கூறு

அய்த்தானே அய்த்தானே கூறு
உன்னுள்ளே உன்னுள்ளே யாரு
ஓ அய்த்தானே அய்த்தானே கூறு
உன்னுள்ளே உன்னுள்ளே யாரு
கேக்காதே இதுபோலே மானே மானே
நீ என்று சொல்வேனே நானே நானே
சொல்லாமலே போகாதே தூரம் தூரம்
சொன்னாலுமே கேக்காதே காதல் பூதம்
சரிதானே
இன்னும் இன்னும் என்ன சொல்ல

அய்த்தானே அய்த்தானே கூறு ஓ
உன்னுள்ளே உன்னுள்ளே யாரு

எத்தனையோ அழகான பெண்ணிலவு இருந்தாலும்,
உன்னிதையம் நானாக என்ன காரணம்
ஓ கட்டழகில் உருவாகும் காதல் வேறு
உன்னவிட மகராசி ஊரில் யாரு
தர நானும் பயம்தாலே வந்து நீ முத்தம் கேப்பியா
அடி போடீ முத்தம் இல்ல மொத்தம் தேவ

அய்த்தானே அய்த்தானே கூறு
உன்னுள்ளே உன்னுள்ளே யாரு ஓ
கேக்காதே இதுபோலே மானே மானே
நீ என்று சொல்வேனே நானே நானே

என்னுடைய நினைவாக எப்போழுதும் இருப்பாயா
வந்து உன்ன சேர்ந்தாலே மாறிப்போவியா ஹோ
இங்கிதமே தெரியாத பேச்ச மாத்து
உன்ன விட்டா கிடையாது மூச்சு காத்து
வயதாகி விடும்போது என்ன நீ தள்ளிப் போவியா
என் உயிர் நீயே தள்ளிப் போனா செத்துப் போவேன்

கேக்காத இதுபோல மானே மானே
நீ என்று சொல்வேன் நானே நானே
சொல்லாமலே போகாதே தூரம் தூரம்
சொன்னாலுமே கேக்காதே காதல் பூதம்
சரிதானே இன்னும் இன்னும் என்ன சொல்ல

அய்த்தானே அய்த்தானே கூறு உன்னுள்ளே உன்னுள்ளே யாரு

படம் : முதல் இடம்
பாடியவர்கள் : சின்மயி.. D.இமான்
இசை :D.இமான்
பாடல்வரிகள்: யுகபாரதி

ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம் நானே நானா

ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம் நானே நானா...
ஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும் நானே நானா...
புது வெயிலா புது மழையா நானே நானா....
புது மலரா புது நிறமா நானே நானா.....
இனி கவலை எப்போதும் இல்லை...
புது சிறகு ஆகாயம் இல்லை
தினம் தினமே சந்தோசம் தானே
புது விடியலில் என் தேசம் தானே
வானம்பாடி நான்..... புதுமை பெண்ணே நான்...
வானம்பாடி நான்..... புதுமை பெண்ணே நான்...
(ஆயிரம் )

நானே தேடும் முகம் நானே பாடும் சுகம்...
நானே காணும் நிலவு...
வானம் பூமி இனி எந்தன் தோழி என
நாளும் சேர்ந்து வருமே...
கால்தடம் கால்தடமாய்.....
ஆ....ஆ.....ஆ.....ஆ...........
நான் எனை நான் எனை தொடர்வேனே...
போதும் போதும் இனி எந்தன் வாழ்வு தனில்
சந்தோசங்கள் கோடி.......

(ஆயிரம்)

நானே எந்தன் குறை நானே தந்த வரம்
நானே சொந்த வெளிச்சம்...
இல்லை வேறு சிறை
சொல்வேன் நூறு முறை
நானே செய்யும் உலகம்
புன்னகை சிறகாலே....
ஆ......ஆ......ஆ......ஆ......
நான் இனி நான் இனி பறப்பேனே...
இன்னும் என்ன சொல்ல நாளை உண்டு வெல்ல
வாழும் வாழ்கை எனக்கே... (ஆயிரம்)
இசை : பரத்வாஜ்
பாடியவர்: சின்மயி
திரைப்படம்: வல்லமை தாராயோ
பாடல் வரிகள் : ஆண்டாள் பிரியதர்ஷிணி

Tuesday, September 27, 2011

புல்வெளி புல்வெளி தன்னில்புல்வெளி புல்வெளி தன்னில்
பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா
அதை சூரியன் சூரியன் வந்து
செல்லமாய் செல்லமாய் தட்டி
எழுப்புது எழுப்புது ஏனம்மா
இதயம் பறவை போலாகுமா
பறந்தால் வானமே போதுமா
நான் புல்லில் இறங்கவா
இல்லை பூவில் உறங்கவா

சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி
சிட்டாகச் செல்லும் சிறகைத் தந்தது யாரு
பட்பட்பட் பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி
பலநூறு வண்ணம் உன்மேல் தந்தது யாரு
இலைகளில் ஒளிகின்ற கிளிக்கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்
கிளைகளில் ஒளிகின்ற குயில் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்
பூவண்ணமே எந்தன் மனம்
புன்னகையே எந்தன் மதம்
வானம் திறந்திருக்கு பாருங்கள்
எனை வானில் ஏற்றி விட வாருங்கள்

புல்வெளி புல்வெளி தன்னில்
பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா

துள்துள்துள் துள்துள்துள்துள்ளென துள்ளும் மயிலே
மின்னல் போல் ஓடும் வேகம் தந்தது யாரு
ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்ஜலென ஓடு நதியே
சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு
மழையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்
வழியுது வழியுது வெள்ளை அருவி
அருவியை முழுவதும் பருகிவிட
ஆசையில் பறக்குது சின்னக்குருவி
பூவண்ணமே எந்தன் மனம்
புன்னகையே எந்தன் மதம்
வானம் திறந்திருக்கு பாருங்கள்
எனை வானில் ஏற்றி விட வாருங்கள்

புல்வெளி புல்வெளி தன்னில்
பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா
அதை சூரியன் சூரியன் வந்து
செல்லமாய் செல்லமாய் தட்டி
எழுப்புது எழுப்புது ஏனம்மா
இதயம் பறவை போலாகுமா
பறந்தால் வானமே போதுமா
நான் புல்லில் இறங்கவா
இல்லை பூவில் உறங்கவா

படம்: ஆசை
இசை: தேவா
பாடியவர்: சித்ரா / உன்னி கிருஷ்ணன்
வரிகள்: வைரமுத்து

Monday, September 26, 2011

தெய்வ திருமகன் - ஆரிரோ ஆராரிரோஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு
தாயாக தந்தை மாறும் புது காவியம்
இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம்
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே
கருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே..


ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு


முன்னம் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே
மழை நின்று போனால் என்ன மரம் தூருதே
வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே
பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே
இதுபோல் ஆனந்தம் வேறில்லையே
இரு மனம் ஒன்று சார்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே
ஒரு நொடி போதும் போதும் என்று ஒர் குரல் கேட்குதே
விழி ஓரம் ஈரம் வந்து குடை கேட்குதே


ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு

கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள்
கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள்
அடடா தெய்வம் இங்கே வரமானதே
அழகாய் வீட்டில் விளையாடுதே
அன்பின் விதை இங்கே மரமானதே
கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே
பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே


ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு

படம்: தெய்வ திருமகள்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்: ஹரிசரண்
வரிகள்: நா. முத்துக்குமார்

Sunday, September 25, 2011

இகலோகமே இனிதாகுமே
இகலோகமே இனிதாகுமே
இகலோகமே இனிதாகுமே
இசையோடு காவியம் போலே
உள்ளம் இணைந்தாடும் பேரன்பினாலே
(இகலோகமே)

விழியின்றி ஓவியம் அழகாகுமா?
விரலின்றி வெறும் வீணை ஒலிகாணுமோ?
மழையின்றியே பயிர் வாழுமா?
மனமேவும் அன்பின்றி நலம்சேருமா?

இகலோகமே இனிதாகுமே
இககாகமே இககேகமே
அப்படி இல்லை இப்படி
இகலோகமே இனிதாகுமே
இசையோடு காவியம் போலே
உள்ளம் இணைந்தாடும் பேரன்பினாலே


ஆஆஆ ஆஆஆ
குளிர்ந்தோடும் பூங்காற்று பதம்பாடுதே
இளந்தளிர்யாவும் கிளைமீதில் சதிராடுதே
(குளிர்ந்தோடும்)
வழியெங்கும் கோடிவீடு நிழல்சேர்க்குதே
மலரெல்லாம் விழி போல நமைப்பார்க்குதே
இகலோகமே இனிதாகுமே)

வானவர் காணாத வனராணியே
யவ்வன ராணியே ஏஏ ( வானவர்)
தேவ கானமே பொழிகின்ற கலைவாணியே
வானவர் காணாத வனராணியே

தேனினும் இனிதான மொழி பேசியே
ஆஆஆ
தேனினும் இனிதான மொழி பேசியே
என் மோனத்தின் இருள் நீக்க ஒளி வீசினாய்
மோனத்தின் இருள் நீக்க ஒளி வீசினாய்
இணையாகவே இனி என்றுமே (2)
கனியோடு சுவை போல கலந்தாடுவோம்

படம்: தங்கமலை ரகசியம்
பாடல் கு.மா.பாலசுப்ரமணியம்.
இசை டி.ஜி. லிங்கப்பா.
ஆண்டு 1957.
பாடியவர்கள் : p.லீலா, டி. எம். சௌந்தரராஜன்..

தெய்வ திருமகன் - விழிகளில் ஒரு வானவில்விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்

உன்னிடம் பார்க்கிறேன் நான் பார்க்கிறேன்
என் தாய்முகம் அன்பே
உன்னிடம் தோற்கிறேன் நான் தோற்கிறேன்
என்னாகுமோ இங்கே
முதன் முதலாய் மயங்குகிறேன்
கண்ணாடி போல தோன்றினாய்
என் முன்பு என்னை காட்டினாய்
கனா எங்கும் வினா

விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்

நீ வந்தாய் எ ந் வாழ்விலே
பூப்பூத்தாய் என் வேரிலே
நாளையே நீ போகலாம்
என் ஞாபகம் நீ ஆகலாம்
தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ
யார் இவன் யார் இவன்
நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில்
இனம் புரியா உறவிதுவோ
என் தீவில் பூத்த பூவிது
என் நெஞ்சில் வாசம் தூவுது
மனம் எங்கும் மனம்

விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்

நான் உனக்காக பேசினேண்
யார் எனக்காக பேசுவார்
மௌனமாய் நான் பேசினேன்
கைகளில் மை பூசினேன்
நீ வந்த கனவெங்கே காற்றில் கை வீசினேன்
அன்பெனும் தூண்டிலை நீ வீசினால்
மீன் ஆகிறேன் அன்பே
உன் முன்பு தானடா இப்போது நான்
பெண்ணாகிறேன் இங்கே
தயக்கங்களால் திணறுகிறேன்
நில்லென்று சொன்ன போதிலும்
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி

படம்: தெய்வ திருமகன்
இசை: GV பிரகாஷ்குமார்
பாடியவர்: சைந்தவி
வரிகள்: நா. முத்துக்குமார்

Saturday, September 24, 2011

தெய்வ திருமகள் - பபாப்பா பாப்பாபபபாப்பா பாப்பபாப்பா
வருதே எனக்கு பாப்பா
அப்பப்பா அப்பாப்பாப்பா
புதுசாக பொக்கே கேப்பா
இனிமே என் ஆட்டமும் கொண்டாட்டமும்
தூளு தூளுதான்பா

பபபாப்பா பாப்பபாப்பா
வருதே எனக்கு பாப்பா
அப்பப்பா அப்பாப்பாப்பா
புதுசாக பொக்கே கேப்பா
இனிமே என் ஆட்டமும் கொண்டாட்டமும்
தூளு தூளுதான்பா

எதுக்கு கிருஷ்ணா இவ்ளோ பணம்
என்ன வாங்க போற

கண்ணுக்கு கண்ணுக்கு மை வாங்க
காலுக்கு கொலுசு தான் வாங்க
அப்புறம் ஏதோ சொன்னாங்க
ஐயய்யோ மறந்தேண்க்க
ஆ கை சட்டை வாங்க போறேன்
கவுனும்தான் வாங்க போறேன்
கடைத் தெருவ தேடி போறேன்
குதிரை மேலே

எல்லாம் பாப்பாவுக்குத்தானா
பானுவுக்கு ஒன்னும் இல்லையா

இருக்கு
ஆப்பிள் நான் வாங்க போறேன்
ஹார்லிக்ஸும் வாங்க போறேன்
அவள நான் தாங்க போறேன்
குழந்தை போல

கழுத்துக்கு கழுத்துக்கு மணி வாங்க
இடுப்புக்கு அருணாகொடி வாங்க
அப்புறம் ஏதோ சொன்னாங்க
ஆஹா இது தாங்க

ஓஹோ இதுவும் பானுக்கா
இல்ல பாப்பாவுக்கு

பபபாப்பா பாப்பபாப்பா
வருதே எனக்கு பாப்பா
அப்பப்பா அப்பாப்பாப்பா
புதுசாக பொக்கே கேப்பா
இனிமே என் ஆட்டமும் கொண்டாட்டமும்
தூளு தூளுதான்பா

ஏன் கிருஷ்ணா
பாப்பா அப்பா மாதிரி இருக்கணுமா
அம்மா மாதிரி இருக்கணுமா

அப்பா போல வேணாமே
அம்மா போல வேணாமே
ரெண்டும் கலந்து இருக்கணுமே
அழகா சிரிக்கணுமே

இதான் அந்த அழகான சிரிப்பா

குழந்தை பிறக்க போது
எங்களுக்கெல்லாம் என்ன வாங்கி தருவே?

சாக்லெட்டு வாங்கி தருவேன்
ஊட்டிக்கே ஊட்டி விடுவேன்
வேறென்ன வாங்கி தருவேன்
அப்புறம் சொல்றேன்

சரி குழந்தையோட என்ன பண்ணுவே

விளையாடி கூட்டி வருவேன்
பழம் விட்டு டூவும் விடுவேன்
அப்புறம் என்ன நான் செய்வேன்
பானுவ கேட்டு சொல்றேன்

ஆனா இனிமே பானுவோட விளையாட மாட்டியா?

பத்து மாசம் பொறுக்கணுமாம்
பாப்பா நல்லா வளரணுமாம்
அதுவரை சும்மா இருக்கணுமாம்
டாக்டர் சொன்னாங்க

டுடுடுடுடு..

படம்: தெய்வ திருமகள்
இசை: GV பிரகாஷ் குமார்
பாடியவர்: விக்ரம்
வரிகள்: நா. முத்துக்குமார்

Friday, September 23, 2011

வேங்கை - என்ன சொல்ல போறேஉன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ல
வீணாக இவன் மனசை கிள்ளாதே
மூனு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயப்புள்ள
நீயாக இவன் மனழை கொல்லாதே
நீ கொல்லாதே ஓ கொல்லாதே

என்ன சொல்ல போறே நீ என்ன சொல்ல போறே
எப்ப சொல்ல போறே நீ எப்ப சொல்ல போறே ஓ
என்ன சொல்ல போறே நீ என்ன சொல்ல போறே
எப்ப சொல்ல போறே நீ எப்ப சொல்ல போறே ஓ

காத்திருப்பேன் காத்திருப்பேன் ஆறு மாசம் தான்
கண் ம்முழிச்சு படுத்திருப்பேன் மூணு மாசம் தான்
என்னமோ நடக்குது இதயம் வலிக்குது
உன்னோடைய வார்த்தைக்காக

என்ன சொல்ல போறே நீ என்ன சொல்ல போறே
எப்ப சொல்ல போறே நீ எப்ப சொல்ல போறே ஓ

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ல
வீணாக இவன் மனசை கிள்ளாதே
மூனு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயப்புள்ள
நீயாக இவன் மனழை கொல்லாதே
நீ கொல்லாதே ஓ கொல்லாதே

சின்னப்புள்ள நேசம் இது பச்சப்புள்ள பாசம் இது
என் மனசை தாக்கியது முன்னால முன்னால
ஜாதி மதம் பார்க்கலையே சம்மதத்தை கேக்கலையே
காதல் என்று ஆகிடுச்சு தன்னாலே தன்னாலே
நெசமா நெசமா நெஞ்சுக்குள்ள நான் ஒளிஞ்சிருக்கேன்
உன்னோடைய வார்த்தைக்காக

என்ன சொல்ல போறே நீ என்ன சொல்ல போறே
எப்ப சொல்ல போறே நீ எப்ப சொல்ல போறே ஓ

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ல
வீணாக இவன் மனசை கிள்ளாதே
மூனு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயப்புள்ள
நீயாக இவன் மனழை கொல்லாதே
நீ கொல்லாதே ஓ கொல்லாதே

வெட்டருவாள் தூக்கிக்கிட்டு வெட்டிப்பயல் போலிருந்தேன்
வெட்க்கப்பட்டு நான் நசந்தேன் உன்னாலே உன்னாலே
கட்டை கம்பை தூக்கிட்டு கண்டபடி நான் திரிஞ்சேன்
கட்டுப்பட்டு நான் நடந்தேன் பின்னால உன் பின்னால
புதுசா புதுசா மாறிருக்கேன் தேறிருக்கேண்
உன்னோடைய பார்வையாலே

என்ன சொல்ல போறே நீ என்ன சொல்ல போறே
எப்ப சொல்ல போறே நீ எப்ப சொல்ல போறே ஓ

உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கா இந்தப் புள்ல
வீணாக இவன் மனசை கிள்ளாதே
மூனு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயப்புள்ள
நீயாக இவன் மனழை கொல்லாதே
நீ கொல்லாதே ஓ கொல்லாதே

படம்: வேங்கை
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: தேவிஸ்ரீ பிரசாத், கார்த்திகேயன்
வரிகள்: நா. முத்துக்குமார்

Thursday, September 22, 2011

வேங்கை - ஒரே ஒரு வார்த்தையாலேயாரோ மனசு உலுக்க ஏதோ உடைந்து வலிக்க
நானோ தனித்து நடக்க நீயோ மௌனமாக

ஒரே ஒரு வார்த்தைக்காக ஓயாம காத்திருப்பேன்
ஒரே ஒரு பார்வைக்காக என்னாலும் தவமிருப்பேன்
ஒரே ஒரு நொடிக்காக உன்னோடுதான் வாழ்வேனே
ஒரே ஒரு உயிர் அதை உன் கையில் தந்து சாய்வேன்

ஒரே ஒரு வார்த்தையாலே என் நெஞ்சு கலைகிறதே
ஒரே ஒரு பார்வையாலே உல்லூர கரைகிறதே

யாரோ மனசு உலுக்க ஏதோ உடைந்து வலிக்க
நானோ தனித்து நடக்க நீயோ மௌனமாக

ஓ சிக்கிக்கொண்டு சிக்கிக்கொண்சு தவிக்கும் ஒரு இதயம்
மெட்டிக்கொண்டு மெட்டிக்கொண்டு தவிக்கும் ஓர் இதயம்
காதல் என்னும் கைக்குழந்தை கதறி அழுகிறதே
மறுநாள் நெனச்சு உள்ளம் இப்போ போராடுதே
ஒரே ஒரு வார்த்தைக்காக என் நெஞ்சு வெடிச்சிருச்சே
ஒரே ஒரு பார்வஇ புயலாய் என் மேலே அடிச்சிருச்சே

உள்ளுக்குள்ள முள்ள வச்சு எதுக்கு நீ சிரிச்ச
காதலென்னும் பேரைச் சொல்லி கழுத்த நீ நெரிச்ச
ஒன்ன நெனச்ச பாவத்துக்கு இதுதான் தண்டனையா
என்ன பெத்த தெய்வத்துக்கே சோதனையா

ஒரே ஒரு வார்த்தை பேச என்னால முடியலையே
ஒரே ஒரு தியாகம் தாங்க என் நெஞ்சில் பலமில்லையே

யாரோ மனசு உலுக்க ஏதோ உடைந்து வலிக்க
நானோ தனித்து நடக்க நீயோ மௌனமாக

படம்: வேங்கை
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: திப்பு, ஹரிணி
வரிகள்: நா. முத்துக்குமார்

Wednesday, September 21, 2011

மங்காத்தா - இது எங்க பல்லேலக்காஇது எங்க பல்லேலக்கா நீ கேளு கொக்கா மக்கா
நியூ டைப்பு நாக்கு மூக்கா ஆடிக்கோ கிக்கா
அபி சப்ஹோ அச்சா அச்சா ஆண்டவன் கண் வச்சான் வச்சான்
அடிடா த்ஊள் மச்சான் மச்சான் வாங்கிக்கோ எக்ஸ்ட்ரா
சூதில்லா சூது அது சுத்தமாக ஏதப்பா
உலகெல்லாம் பூந்து அத உருட்டி போடப்பா
தப்பு கூட தப்பாகாது சத்தம் போட்டு சொல்லப்பா
அண்ணன் சொன்ன பாட்டை கேளு கைய கோர்த்து அள்ளப்பா

ஹேய் தானா கிடைக்குமா சந்தோஷம்தான்
நீயா எடுத்துக்கோ உனக்காகத்தான்
வீணா புலம்புனா விடியாதப்பா
விளக்க ஏத்துனா இருட்டாதப்பா
முடியாதது படியாதது ஏதும் கிடையாதடா
இதுதான் கணக்கு
விடியாதது ஒன்னும் புரியாதது
அட அதுதானடா இருட்டோ இருட்டு
திட்டம் போட்டு தட்டிப் பாரு கிட்ட சேரும் தன்னால
வட்டம் போட்டு கட்டிப்போடு வரும் லாபம் முன்னால

வீணா தூங்குது பல கோடிதான்
அத முழிக்க வைப்பவன் கில்லாடிதான்
உழைச்சு வாழவே வேண்டாமடா
பிறர் உழைப்பில் வாழ்வதே வரம்தானடா
ஆசைப்படு அளவே இல்லை ஆம்பளைக்கு அதுதான் அழகு
கோபப்படு குறையே இல்லை பொம்பளைக்கு அதுதான் பொறுப்பு
திட்டம் போட்டு தட்டிப் பாரு கிட்ட சேரும் தன்னால
வட்டம் போட்டு கட்டிப்போடு வரும் லாபம் முன்னால

இது எங்க பல்லேலக்கா நீ கேளு கொக்கா மக்கா
நியூ டைப்பு நாக்கு மூக்கா ஆடிக்கோ கிக்கா
அபி சப்ஹோ அச்சா அச்சா ஆண்டவன் கண் வச்சான் வச்சான்
அடிடா த்ஊள் மச்சான் மச்சான் வாங்கிக்கோ எக்ஸ்ட்ரா
சூதில்லா சூது அது சுத்தமாக ஏதப்பா
உலகெல்லாம் பூந்து அத உருட்டி போடப்பா
தப்பு கூட தப்பாகாது சத்தம் போட்டு சொல்லப்பா
அண்ணன் சொன்ன பாட்டை கேளு கைய கோர்த்து அள்ளப்பா

படம்: மங்காத்தா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், கார்த்திக், அனுஷா தயாநிதி
வரிகள்: வாலி

Tuesday, September 20, 2011

மங்காத்தா - மச்சி Open the Bottleமச்சி Open the Bottle

இது அம்பானி பரம்பரை அஞ்சாறு தலமுறை
ஆனந்தம் வளர்பிறைதான்
நம்ம கொட்டுன்னு ஒரு முறை சொன்னாக்க பலமுறை
கொட்டாதோ பண மழைதான்
நாம முன்னேறும் படிக்கட்டு என்றாச்சு நம் வாழ்வில் கிரிக்கெட்டு
இப்போ ஒம்பது கிரகமும் ஒன்னாக இருக்கு
ஓஹோன்னு நம் ஜாதகம்

ஆடாம ஜெயிச்சோமடா நம் மேனி வாடாமல் ஜெயிச்சோமடா
ஓடாம ரன் எடுத்தோம் சும்மாவே ஒக்காந்து வின் எடுத்தோம்

இது அம்பானி பரம்பரை அஞ்சாறு தலமுறை
ஆனந்தம் வளர்பிறைதான்
நம்ம கொட்டுன்னு ஒரு முறை சொன்னாக்க பலமுறை
கொட்டாதோ பண மழைதான்

ஹே ஒண்ணா ரெண்டா ஆசை உன்ன கண்டா
ஜில்லுனு நிக்கற ஜிகருதண்டா
தப்பு தண்டா செய்ய ஒப்புக்கொண்டா
பூ மேலே குந்துவேன் சோள வண்டா

ஏழுமலை இருக்கும் கடவுளுக்கும்
காசு தேவையின்னா கடன் கொடுப்போம்
அந்த குபேரன் ஆவான் குசேலன்
நம்ம ப்ரோப்பெர்ட்டி முன்னால சிங்கள் டீ
என்றாகும் சொர்க்கத்தில் சொத்துக்கள்தான்
ஹே உள்ளாற வேற்காடு உன்னால உண்டாச்சு நோக்காடு
போடேண்டி சாப்பாடு தொட்டாக்கா போடாத கூப்பாடு

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலை இல்ல
ஹே நாந்தாண்டா என் மனசுக்குள் ராஜா
வாங்குங்கடா ஹே தங்கத்தில் கூஜா
நான் கேட்டால் கேட்டதை கொடுப்பேன்
கேக்குற வரங்களை கேட்டுக்கோடா

தோழா மீன் வாழ நீர் வேணும்
நான் வாழ பீர் வேணும்
நீ கொஞ்சம் ஊத்து ஊத்து
தோழா இப்போதும் எப்போதும் முப்போதும்
வீசிடும் நம் பக்கம் காத்து காத்து
காத்து காலத்தில் தூத்திக்குவேன்
கால நேரத்தில் மாத்திக்குவேன்
போத ஆனாலும் மீறி போனாலும்
பாத ஓர் நாளும் என் கால்கள் மாறாது
என் பாடு வேற தான் எந்நாளும் என் ரூட்டு வேறதான்
என்னோட வேலைதான் என்னான்னு ஊர் பேசும் நாளைதான்


இது அம்பானி பரம்பரை அஞ்சாறு தலமுறை
ஆனந்தம் வளர்பிறைதான்
நம்ம கொட்டுன்னு ஒரு முறை சொன்னாக்க பலமுறை
கொட்டாதோ பண மழைதான்
நாம முன்னேறும் படிக்கட்டு என்றாச்சு நம் வாழ்வில் கிரிக்கெட்டு
இப்போ ஒம்பது கிரகமும் ஒன்னாக இருக்கு
ஓஹோன்னு நம் ஜாதகம்

ஆடாம ஜெயிச்சோமடா நம் மேனி வாடாமல் ஜெயிச்சோமடா
ஓடாம ரன் எடுத்தோம் சும்மாவே ஒக்காந்து வின் எடுத்தோம்

படம்: மங்காத்தா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: மனோ, பிரேம்ஜி அமரன், திப்பு, ஹரிசரண், நவீன்
வரிகள்: வாலி

Monday, September 19, 2011

மங்காத்தா - வாடா பின் லேடாவாடா பின் லேடா ஒளியாதே அச்சோடா
என்னை ட்வின் டவர் என்று இடிடா
ஜப்பானின் ஹைக்கூவா ரஷ்யாவின் வொட்காவா
நீ என்னுள் என்னை கண்டுப்பிடிடா
நூடாலை நிக்காத இடுப்பு ஓ
நீதான் என் தோதான உடுப்பு ஓ
என்னை தொடாமலே செம்ம சூடேத்துற
நானா நானா வந்து மோதுறேன்

வாடா பின் லேடா ஒளியாதே அச்சோடா
என்னை ட்வின் டவர் என்று இடிடா
ஜப்பானின் ஹைக்கூவா ரஷ்யாவின் வொட்காவா
நீ என்னுள் என்னை கண்டுப்பிடிடா

மத்துக் கடைவது தயிரைத்தான்
மையல் கடைவது உயிரைத்தான்
இன்று அது ஏதோ அது ஏதோ என்னை வாட்டுதே
பன்றிக்காய்ச்சல் மாதிரி பருவக்காய்ச்சல் தானடி
உதட்டு ஒத்தடம் உடம்பு மொத்தமும் கேட்கும்
படுக்கை சுத்துது ராத்திரி புரண்டு கத்துது பூங்கிளி
நிலவு சுட்டது நரம்பில் பட்டது தீப்பொறி
ஒதுங்கி நின்னது காளை தான்
உரசி வந்தது கரவை தான்
மனசும் கெட்டது மயங்கி விட்டது எம்மா எம்மா
என்னை சும்மா சும்மா நின்னா தாக்குவே

க்ரிக்கெட் என்பது ஃபிக்ஸிங்தான்
காதல் என்பது மிக்ஸிங்தான்
இங்க்ய் பெட் மேலே பெட் கட்டி தினம் ஆடலாம்
பந்தக் கண்டதும் கேட்சுதான்
புடிச்சு ஜெயிப்ப மேச்சுதான்
விடியும் மட்டுலும் வெளுத்து கட்டுவ பேட்டில்
எனக்கு வாச்சது பிச்சுதான்
உனக்கு வைக்கணும் இச்சுதான்
இளமை பிகரு ட்வெண்டி ஓவரு போதுமா
அடிச்சு ஆடுற தோணிதான்
அதுக்கு ஏங்குற மேனிதான்
விரகம் என்பதும் நரகம் என்பதும் ஒன்னு ஒன்னு
சின்ன பொண்ணு பொண்ணு உன்னை தேடுதே

ஒண்ணா ஒன்னொன்னா நான் சொன்னா சும்மா சொன்னா
அத செய்வது உன் டூட்டியடி
ஏய் எம்மா எம்மம்மா சும்மா நீ சும்மா
உன் இஷ்டம் போல லூட்டியடி
நூடாலை நிக்காத இடுப்பு ஓ
நீதான் என் தோதான உடுப்பு ஓ
என்னை தொடாமலே செம்ம சூடேத்துற
நானா நானா வந்து மோதுறேன்

படம்: மங்காத்தா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: க்ரீஷ், சுசித்ரா
வரிகள்: வாலி

Sunday, September 18, 2011

வந்தான் வென்றான் - காஞ்சனமாலாமயில் தோகை ஒன்று மடியில் வந்து சாய்ந்துகொள்ள
மனப்பாடம் செய்த வாரத்தை எல்லாம் தொண்டை கிள்ள
நொடி நேரம் நானே என்னை விட்டு தள்ளி செல்ல
செல்ல செல்ல செல்ல செல்ல

காஞ்சனமாலா காஞ்சனமாலா காஞ்சனமாலா
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா
மலையாள மண் மேலே உன் தமிழ் நடக்க
ஆறு ஏழு பந்தாக என் நெஞ்சம் துடிக்க
காஞ்சனமாலா

பெண்ணே என் உள்ளங்காலில் மின்சாரங்கள் ஓடுதே
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே

மாளிகை போலே வீடுகள் கட்டி
மார்கழி நாளில் நான் தரவா
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்
உன்னை நானும் தேடட்டா விண்ணிலே
சஞ்சலம் கொண்டு கண்களை மூடி
சந்திரன் காண காத்திருந்தேன்
நீ வரவில்லை நீ வரவில்லை
விடிஞ்சே போச்சே என் செய்வேன்

காஞ்சனமாலா காஞ்சனமாலா
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா
காஞ்சனமாலா

போகும் தூரம் என்ன சொல்லு வானம் வானம்
நானும் வாரேன் கொஞ்சம் நில்லு நீ தான் மேகம்
நீ தேட சொல்லும் காடானால் தேடி பாது
நீ தூங்க செய்யும் வீடானால்
ஹே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே
மாளிகை போலே வீடுகள் கட்டி
மார்கழி நாளில் நான் தரவா
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்
உன்னை நானும் தேடட்டா விண்ணிலே
சஞ்சலம் கொண்டு கண்களை மூடி
சந்திரன் காண காத்திருந்தேன்
நீ வரவில்லை நீ வரவில்லை
விடிஞ்சே போச்சே என் செய்வேன்

காஞ்சனமாலா

கல்லும் ஒன்றி சொல்லி தந்தாய் கற்று கொண்டாய்
நீ காணும் போலே காற்றில் வந்தாய், கண்டு கொண்டாய்
என் ஆற்றில் ஓடும் தெப்பம் நீ கரை சேர்வேன்
என் உள்ளங்கையில் வெப்பம் நீ
ஹே என் உள்ளங்களில் மின்சாரங்கள் ஓடுதே
உற்சாகம் வந்து உச்சந்தலை ஏறுதே
மாளிகை போலே வீடுகள் கட்டி
மார்கழி நாளில் நான் தரவா
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில்
உன்னை நானும் தேடட்டா விண்ணிலே
சஞ்சலம் கொண்டு கண்களை மூடி
சந்திரன் காண காத்திருந்தேன்
நீ வரவில்லை நீ வரவில்லை
விடிஞ்சே போச்சே என் செய்வேன்

காஞ்சனமாலா காஞ்சனமாலா
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா
காஞ்சனமாலா

படம்: வந்தான் வென்றான்
இசை: S தமன்
பாடியவர்கள்: கார்த்திக், பிரியா ஹிமேஷ்
வரிகள்: தாமரை

Saturday, September 17, 2011

வேலாயுதம் - மொளச்சு மூணுமொளச்சு மூணு இலயே விடல
தருவா ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா

மொளச்சு மூணு இலயே விடல
தருவா ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா

வயசோ பதினஞ்சு அடி வாடி மாம்பிஞ்சு
பாவம் என் நெஞ்சு என்ன பார்த்து நீ கொஞ்சு
பார்வை திருபாச்சி உன் தீண்டல் நெருபாச்சு
உன்ன பார்த்தாலே என் பாலம் மேருவாச்சு
ஹே கன்னாபின்னான்னு நீ அழகா இருக்குறியே
கண்கள் ரெண்டும் மாடவெயில் என்ன போரிகிரியே
இமைகள் மூடாமல் கொஞ்சம் பார்வை பகுறியே
அஞ்சு நொடியில் நெஞ்சு குழியில் என்ன பொதைகிரியே
ஒடம்பெல்லாம் மச்ச காரி உசுபேத்தும் கச்சைகாரி
இதமா மொத்தக்காரி மோசக்காரி
ஒடம்பெல்லாம் மச்ச காரா உசுபேத்தும் கச்சகாரா
இதமா மொத்தக்காரா மீசைக்காரா

மொளச்சு மூணு இலயே விடல
தருவா ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா

சிரிப்பு கல்கண்டு உன் சிணுங்கள் அணுகுண்டு
விழிகள் கருவண்டு அடி விழுந்தேன் அதை கண்டு
உனது நகம் கீறி என் உடம்பில் தழும்பேறி
அலறும் நாள் தேடி என் ஆவல் திருக்காச்சு
ஹே தினுசு தினுசாக தெனம் கனவில் தோனுறியே
உடைய திருப்பி உசுர வருத்தி படுத்தி எடுகுறியே
முழுசு முழுசாக என்ன முழுங்க நெனைகிறியே
ஒடம்ப முறுக்கி வளையல் நொறுக்கி கதைய முடிகிரியே
மெடன பள்ளதாகே மிதமான சூறை காற்றே
புரியாத என்ன கொன்ன ஒத்தத சூடே
காதோரம் காதல் பேசி அழகான அரிவாள் வீசி
உயராதோ உயிரின் பேச்சே ஏதோ ஆச்சே..

மொளச்சு மூணு இலயே விடல
தருவா ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா

மொளச்சு மூணு இலயே விடல
தருவா ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா

படம்: வேலாயுதம்
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்கள்: பிரசன்னா, சுப்ரியா ஜோஷி
வரிகள்: விவேகா

Friday, September 16, 2011

எங்கேயும் எப்போதும் - கோவிந்தா கோவிந்தாகோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப்பொண்ணு
சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு
எதுக்கு வந்தாளோ இம்சை தந்தாளோ

கோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப்பொண்ணு
சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு
எதுக்கு வந்தாளோ இம்சை தந்தாளோ
டாடி மம்மி என்ன பேரு இவளுக்கு வச்சாங்க
அட என கேட்டா கொடச்சலுன்னு பேர் வைப்பேங்க

கொஞ்சம் கூட நம்பிக்கை இல்ல கூட வந்து ஒட்டிக்கிட்ட தொல்லை
கழட்டி விடவும் மனசே இல்ல என்ன கொடுமையடா
காஞ்சு போன மொளகா உள்ள கொட்டிக்கிடக்கும் விதையைப்போல
காரமாக வெடிச்சா உள்ள பாவ நெலமையடா
ஆகாயம் மேலேதான் அழகான மேகங்கள்
அண்ணாந்து பார்க்க நேரமின்றி போவது எங்கேயோ
மெயிலோடு மழையும் ஒன்று சேர்ந்து வந்ததுபோல்
இந்த கொஞ்ச நேரப் பயணம் சென்று முடிவது எங்கேயோ

டாடி மம்மி என்ன பேரு இவனுக்கு வச்சாங்க
அட என கேட்டா சுமைதாங்கின்னு பேரு வைப்பேங்க

கப்பல் வாங்க வந்திருப்பாளோ செப்பல் வாங்க வந்திருப்பாளோ
உசுர வாங்க வந்திருப்பாளோ ஒன்னும் புரியலையே
ட்ரைலர் போல முடிந்திடுவாளோ ட்ரைன போல நீண்டுடுவாளோ
எப்ப இவன இவ விடுவாளோ ஒன்னும் தெரியலையே
அப்பாவி போலத்தான் தப்பாக நெனச்சானே
ஐநூறு கேள்வி கேட்டு கேடு ஆளக் கொல்றாளே
இவ இவ வந்தபோது வந்த கோபம் இப்போ இல்லையடா
இவள் நேர்த்து வைத்த சந்தேகங்கள்

கோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப்பொண்ணு
சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு
எதுக்கு வந்தாளோ இம்சை தந்தாளோ

படம்: எங்கேயும் எப்போதும்
இசை: சத்யா
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், ரனினா, போனி
வரிகள்: நா. முத்துக்குமார்

Thursday, September 15, 2011

எங்கேயும் எப்போதும் - உன் பேரே தெரியாதுஉன் பேரே தெரியாது உனைக் கூப்பிட முடியாது
நான் உனக்கோர் பேர் வைத்தேன் உனக்கே தெரியாது
அந்த பேரை அறியாத அட யாரும் இங்கேது
அதை ஒரு முறை சொன்னாலே தூக்கம் வராது
அட தினந்தோறும் அதைச் சொல்லி உனைக் கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே உனை மிஞ்சுவேன்

ஓ சூடான பேரும் அதுதான் சொன்னவுடன் உதடுகள் கொதிக்கும்
சூரியனை நீயும் நினைத்தால் அது இல்லையே
ஜில்லென்ற பேரும் அதுதான் கேட்டவுடன் நெஞ்சம் குளிரும்
நதியென்று நீயும் நினைத்தால் அது இல்லையே
சிலிர்க்கவைக்கும் தெய்வமில்லை
மிரளவைக்கும் மிருகமில்லை
ஒளிவட்டம் தெரிந்தாலும் அது பட்டப்பேரில்லை
என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா..

பெரிதான பேரும் அதுதான் சொல்லச் சொல்ல மூச்சே வாங்கும்
எத்தனை எழுத்துக்கள் என்றால் விடையில்லையே
சிறிதான பேரும் அதுதான்
சட்டென்று முடிந்தேபோகும் எப்படி சொல்வேன் நானும்
மொழி இல்லையே
சொல்லிவிட்டால் உதடு ஒட்டும்
எழுதிவிட்டால் தேனும் சொட்டும்
அது சுத்த தமிழ் பெயர்தான்
அயல் வார்த்தை அதில் இல்லை
என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா..

உன் பேரே தெரியாது உனைக்கூப்பிட முடியாது
நான் உனக்கோர் பேர் வைத்தேன் உனக்கே தெரியாது
அட தினந்தோறும் அதை சொல்லி உனைக் கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே உனை மிஞ்சுவேன்

படம்: எங்கேயும் எப்போதும்
இசை: சத்யா
பாடியவர்: மதுஸ்ரீ
வரிகள்: நா. முத்துக்குமார்

Wednesday, September 14, 2011

எங்கேயும் எப்போதும் - மாசமா ஆறு மாசமாமாசமா ஆறு மாசமா
ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு
வாரமா சில பல வாரமா
காத்துக்கிடந்தேனே பூவிழிக்கு
கண்ணுறங்கல செவி மடுக்கல
பசி எடுக்கல வாய் சிரிக்கல
கை கொடுக்கல கால் நடக்கல
அந்து வெறுப்புல ஒன்னும் புரியல
ஏ மாசமா மாசமா ஏங்கித் தவிச்சேன்

மாசமா ஆறு மாசமா
ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு

ரோட்டுல பாக்கல பார்க்குல பாக்கல
பஸ்ஸுல பாக்கல ஆட்டோல பாக்கல
தியேட்டர்ல பாக்கல ஸ்ட்ரீட்டுல பாக்கல
பாத்து எல்லாம் தொலவுல
காட்டுல நிக்கல மேட்டுல நிக்கல
அங்கேயும் நிக்கல இங்கேயும் நிக்கல
எங்கேயும் நிக்கல நிக்கல நிக்கல
நின்னது அவளோட மனசுல
நின்னாளோ பார்த்தாளோ தெருவுல
நான் பாக்காம போனேனே முதலுல
நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு

மாசமா ஆறு மாசமா
ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு

நம்பரும் வாங்கல போனும் பண்ணல
அட்ரஸ் வாங்கல லெட்டரும் கொடுக்கல
ஃபாலோ பண்ணல தூது அனுப்பல
எப்படி வந்தா ரில
கிண்டலும் பண்ணல சண்டையும் போடல
மொறச்சு பாக்கல சிரிச்சு பேசல
வழி மறிக்கல கையப்பிடிக்கல
எப்படி விழுந்தா காதல்ல
அவ மூர்ச்சாகி போனாளே உயிரிலே
எனக்கு மேட்ச்ஜ் ஆகி விட்டாளே லைஃப்புல
நான் ஏங்கி தவிச்சேன் இந்த பூங்கொடிக்கு

மாசமா ஆறு மாசமா
ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு
கண்ணுறங்கல செவி மடுக்கல
பசி எடுக்கல வாய் சிரிக்கல
மோசமா மோசமா காதலிச்சேன்

படம்: எங்கேயும் எப்போதும்
இசை: சத்யா
பாடியவர்: சத்யா
வரிகள்: நா. முத்துக்குமார்

Tuesday, September 13, 2011

மங்காத்தா - என் நண்பனே

என் நண்பனே என்னை எய்த்தாய் ஓ
என் பாவமாய் வந்து வாய்த்தாய்
உன் போலவே நல்ல நடிகன் ஓ
ஊரெங்கிலும் இல்லை ஒருவன்
நல்லவர்கள் யாரோ தீயவர்கள் யாரோ
கண்டுக்கொண்டு கன்னி யாரும் காதல் செய்வதில்லையே
கங்கை நதியல்ல கானல் நதியென்று
பிற்பாடு ஜானம் வந்து லாபம் என்னவோ?

காதல் என்பது கனவு மாளிகை
புரிந்துக்கொள்ளடி என் தோழியே
உண்மை காதலை நான் தேடிப்பார்க்கிறேன்
காணவில்லையே என் தோழியே

வலைகையைப் பிடித்து வலைகையில் விழுந்தேன்
வலக்கரம் பிடித்து வளம் வர நினைத்தேன்
உறவெனும் கவிதை உயிரினில் வரந்தேன்
எழுதிய கவிதை ஏன் முதல்வரி முதல் முழுவதும் பிழை
விழிகளின் வழி விழுந்து மழை எல்லாம் உன்னால்தான்
இதுவா உந்தன் நியாயங்கள்? எனக்கேன் இந்த காயங்கள்?
கிழித்தாய் ஒரு காதல் ஓவியம் ஓ
முருகன் முகம் ஆறுதான்
மனிதன் முகம் நூறுதான்
ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ

என் நண்பனே என்னை எய்த்தாய்

காதல் வெல்லுமா காதல் தோற்குமா?
யாரும் அறிந்ததில்லையே என் தோழியே
காதல் ஓவியம் கிழிந்துபோனதால்
கவலை ஏனடி இதுவும் கடந்திடும்

அடிக்கடி என்னை நீ அணைத்ததை அறிவேன்
அன்பென்னும் விளக்கை அணைத்ததை அறியேன்
புயல் வந்து சாய்த்த மரமொரு விறகு
உனக்கென்ன தெரியும்!
என் இதயத்தில் வந்து விழுந்தது இடி
இள மனம் எங்கும் எழுந்தது வலி
யம்மா யம்மா
உலகில் உள்ள பெண்களே உரைப்பேன் ஒரு பொன்மொழி
காதல் ஒரு கனவு மாளிகை ஓ
எதுவும் அங்கு மாயம்தான் எல்லாம் வர்ணஜாலம்தான்
நம்பாமல் வாழ்வதென்றும் நலமே

காதல் என்பது கனவு மாளிகை
புரிந்துக்கொள்ளடி என் தோழியே
உண்மை காதலை நான் தேடிப்பார்க்கிறேன்
காணவில்லையே என் தோழியே

படம்: மங்காத்தா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: மதுஸ்ரீ, யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: வாலி

மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே

மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே (2)
ஆயிரம் நினைவாகி ஆனந்தக்கனவாகி (2)
காரியம் தவறானால் கண்களில் நீராகி
மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே
மனசாட்சியே

ரகசியச்சுரங்கம் நீ நாடக அரங்கம் நீ (2)
சோதனைக்களம் அல்லவா?
நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா?
ஒருகணம் தவறாகி பலயுகம் துடிப்பாயே
ஊமையின் பரிபாஷை கண்களில் வடிப்பாயே (2)

(மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே)

உண்மைக்கு ஒரு சாட்சி பொய் சொல்ல பலசாட்சி (2)
யாருக்கும் நீயல்லவா
நெஞ்சே மனிதனின் நிழல் அல்லவா
ஆசையில் கல்லாகி அச்சத்தில் மெழுகாகி
யார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிப்பாய் நீ (2)
(மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே)

பாடியவர் : பாலமுரளி கிருஷ்ணா
படம் : நூல்வேலி

Monday, September 12, 2011

கல்யாண ஊர்வலம் வரும் உல்லாசமே தரும்

கல்யாண ஊர்வலம் வரும் உல்லாசமே தரும்
மகிழ்ந்து நான் ஆடிடுவேன் ஓ
மகிழ்ந்து நான் ஆடிடுவேன் (கல்யாண ஊர்வலம்)

மாப்பிள்ளை நுதலின் திலகம் போலே
மணமகள் எழில் சிந்தவே (?)
மணமகள் எழில் சிந்தவே
பார்த்திட எந்தன்
உள்ளத்தின் கனவே
பூர்த்தி பெறும் விரைவே
பூர்த்தி பெறும் விரைவே

சிங்காரம் செய்வாள் சேடியே
மருதாணி சூடியே
மகிழ்ந்து நான் ஆடிடுவேன் ஓ
மகிழ்ந்து நான் ஆடிடுவேன்
கல்யாண ஊர்வலம் வரும்

கல்யாண பெண்ணும் பிள்ளை
பல்லக்கில் ஏறி
செல்வார் விரைந்து வெளியூர் (கல்யாண)
கணம் கணம் அவர்கள்
ஞாபகம் வந்தால்
கருத்தும் கலங்கிடுமே
கருத்தும் கலங்கிடுமே
கண் சிந்தும் காரின் மழைதான்
மென்மேலும் இருள்தான்
தன்னந்தனி ஆகிடுவேன் ஓ
தன்னந்தனி ஆகிடுவேன்
கல்யாண ஊர்வலம் வரும்
உல்லாசமே தரும்
மகிழ்ந்து நான் ஆடிடுவேன் ஓ
மகிழ்ந்து நான் ஆடிடுவேன்

திரைப்படம் : அவன்
பாடியவர் : P.லீலா
எழுதியவர் : கம்பதாசன் (?)
இசை: சங்கர் ஜெய்கிஷன்


மங்காத்தா - கண்ணாடி நீ கண் ஜாடை நான்கண்ணாடி நீ கண் ஜாடை நான்
என் வீடு நீ உன் ஜன்னல் நான்
என் தேடல் நீ உன் தேவை நான்
என் பாடல் நீ உன் வார்த்தை நான்
என் பாதி நீ உன் பாதி நான்
என் ஜீவன் நீ உன் தேகம் நான்
என் கண்கள் நீ உன் வண்ணம் நான்
என் உள்ளம் நீ உன் எண்ணம் நான்

கண்ணோடு வா நீ ஹே ஹே
மோக தளம் போடு நீ ஹே ஹே
நாஜா இன்று வானோடு மேகங்கள்
தீண்டாமல் தொட்டு செல்ல

என் மேனி நீ உன் ஆடை நான்
என் பேச்சு நீ உன் மேடை நான்
என் பாதை நீ உன் பாதம் நான்
என் தென்றல் நீ உன் வாசம் நான்

என்னை நீ இன்று உணர்ந்து கொண்டே
உன்னை என்னோடு தொடர்ந்து நான் கண்டேன்
எதோ ஏதேதோ நடந்து நான் நின்றேன்
வானம் மேலே தான் பறந்து நான் சென்றேன்
உன் கண்கள் ஓயாமல் என் நெஞ்சை தீயில் தள்ள

கண்ணாடி நீ கண் ஜாடை நான்
என் வீடு நீ உன் ஜன்னல் நான்
என் தேடல் நீ உன் தேவை நான்
என் பாடல் நீ உன் வார்த்தை நான்

தூரம் எல்லாமே உடைந்து போக
பாரம் எல்லாமே வளர்ந்து நோயாக
வீரம் கொண்டாடும் கலஞனாக
ஈரம் மண்மேலே விழுந்து தீயாக
தீராத போர் ஒன்று நீர் தந்து என்னை வெல்ல

என் மேனி நீ உன் ஆடை நான்
என் பேச்சு நீ உன் மேடை நான்
என் பாதை நீ உன் பாதம் நான்
என் தென்றல் நீ உன் வாசம் நான்

படம்: மங்காத்தா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: SPB சரண், பவதாரிணி
வரிகள்: நிரஞ்சன் பாரதி

கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே

கனவு கண்ட காதல்
கதை கண்ணீராச்சே

கதை கண்ணீராச்சே (கனவு)
நிலா வீசும் வானில்
மழை சூழலாச்சே
மழை சூழலாச்சே
கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே

முன்பே எண்ணிப் பாராமல்
நெஞ்சம் ஈந்திட்டேனே
எந்தன் ஆசையே இன்று
என்னைக் கொல்லலாச்சே
உந்தன் காதலின் கனவெல்லாம் கண்ணீராச்சே - ஆச்சே

கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே
நிலா வீசும் வானில்
மழை சூழலாச்சே
மழை சூழலாச்சே


அகம் வாட்டும் காதல் தீ
யார்க்கும் சொல்லாதே
மறைத்தே நான் வாழ்கின்ற மார்கம் கெடாதே
ஜெகம் வாழ்கிறேன்
வாழ்க்கையே கண்ணீராச்சே- ஆச்சே

கனவு கண்ட காதல்
கதை கண்ணீராச்சே
நிலா வீசும் வானில்
மழை சூழலாச்சே
மழை சூழலாச்சே
கனவு கண்ட காதல்
கதை கண்ணீராச்சே
கதை கண்ணீராச்சே

திரைப்படம் : அக்பர்(1961)
வரிகள் : கம்பதாசன்
இசை : நவ்ஷத்

Sunday, September 11, 2011

வெப்பம் - வெப்பம்வெப்பம்
நெருப்பிலும் வரும் வெப்பம்
நீரிலும் வரும் வெப்பம்
காற்றிலும் வரும் வெபம்
புதிதானதிது

ரத்தம் கொதிக்கையில் வெப்பம் அழைக்கலாம்
வெப்பம் அழைக்கையில் குற்றம் நடக்கலாம்
குற்றம் நடக்கையில் தர்மம் மறக்கலாம்
தர்மம் மறக்கையில் வெப்பம் துரத்தலாம்
வெப்பம் துரத்தினால் வாழ்க்கை நடுங்கலாம்
வாழ்க்கை நடுங்கினால் நெஞ்சம் கலங்கலாம்
நெஞ்சம் கலங்கினால் நியாயம் புரியலாம்
நியாயம் புரிகையில் வெப்பம் கொதிக்கலாம்

வெப்பம்
நெருப்பிலும் வரும் வெப்பம்
நீரிலும் வரும் வெப்பம்
காற்றிலும் வரும் வெப்பம்
புதிதானதிது

ரத்தம் கொதிக்கையில் வெப்பம் அழைக்கலாம்
வெப்பம் அழைக்கையில் குற்றம் நடக்கலாம்
குற்றம் நடக்கையில் தர்மம் மறக்கலாம்
தர்மம் மறக்கையில் வெப்பம் துரத்தலாம்
வெப்பம் துரத்தினால் வாழ்க்கை நடுங்கலாம்
வாழ்க்கை நடுங்கினால் நெஞ்சம் கலங்கலாம்
நெஞ்சம் கலங்கினால் நியாயம் புரியலாம்
நியாயம் புரிகையில் வெப்பம் கொதிக்கலாம்

வெப்பம்
நெருப்பிலும் வரும் வெப்பம்
நீரிலும் வரும் வெப்பம்
காற்றிலும் வரும் வெப்பம்
புதிதானதிது

ரத்தம் கொதிக்கையில் வெப்பம் அழைக்கலாம்
வெப்பம் அழைக்கையில் குற்றம் நடக்கலாம்
குற்றம் நடக்கையில் தர்மம் மறக்கலாம்
தர்மம் மறக்கையில் வெப்பம் துரத்தலாம்

வெப்பம்
நெருப்பிலும் வரும் வெப்பம்
நீரிலும் வரும் வெப்பம்
காற்றிலும் வரும் வெப்பம்
புதிதானதிது

படம்: வெப்பம்
இசை: ஜோஷுவா ஸ்ரீதர்
பாடியவர்கள்: ஜோஷுவா ஸ்ரீதர், நரேஷ் ஐயர்
வரிகள்: நா. முத்துக்குமார்

Saturday, September 10, 2011

வேலாயுதம் - மாயம் செய்தாயோ

மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ
வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணாய்
எது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை

மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ..
ஹோ.. ஹோ..

நானே செடி வளரும் தோட்டம் ஆனேன்
யானை வந்து போன சோலை ஆனேன் ..
காதல் கரை புரண்டு ஓட பார்த்தேன்
தூண்டில் முள் நுனியில் உயிரை கோர்த்தேன்
என்னை செவி கண்டு சிறு வெகு தூரம் விழுந்தேன்
என் பேரை நான் மறந்து கல் போல கிடந்தேன்

மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ..
ஹோ.. ஹோ..

வேர்வை துளி முகத்தில் வைர கற்கள்
அழகை கூற தமிழில் இல்லை சொற்கள்
மீசை முடி கரிய அறுகம் புற்கள்
தாவி மெல்ல கடிக்க ஏங்கும் பற்கள்
உணருகில் முள் செடியும் அழகாக தெரியும்
உன்னை விரல் தோன்றுகையில் துரும்பாகும் மலையும்

மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ
வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணாய்
எது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை

மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொள்ள வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ..
ஹோ.. ஹோ..

படம்: வேலாயுதம்
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்: சங்கீதா ராஜேஸ்வரன்
வரிகள்: கபிலன்

Friday, September 9, 2011

வந்தான் வென்றான் - திறந்தேன் திறந்தேன்திறந்தேன் திறந்தேன் நீ முட்டி திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து தீ முட்ட திறந்தேன்
உறைந்தே உறங்கும் என் உள்ளே செல் எல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை நீ கேட்க திறந்தேன்

தொலை தொலை என் எனை நானே கேட்டு கொண்டேனே
என் மமதையினை
நுழை நுழை உன்னை என நானே மாற்றிக்கொண்டேனே
என் சரியுதனை
துளை ஏதும் இல்லாத தேன் கூடு
நுழை வேதும் இல்லாத உன் காதோ
விளைவேதும் இல்லாத மனதோ
உன் இதயம் என் நினைத்திருந்தேன் பொய்தானோ

திறந்தேன் திறந்தேன் நீ முட்டி திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து தீ முட்ட திறந்தேன்
உறைந்தே உறங்கும் என் உள்ளே செல் எல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை நீ கேட்க திறந்தேன்

முகத்தினை திருடினாய் திரை கதை படி
அகத்திணை வருடினாய் அதை கடை பிடி
பெண்ணே உன்னை துறவி என்றுதான்
இந்நாள் வரை குழம்பி போயினேன்
துறவரம் துறக்கிறேன்
துளை ஏதும் இல்லாத தேன் கூடு
நுழை வேதும் இல்லாத உன் காதோ
விளைவேதும் இல்லாத மனதோ
உன் இதயம் என் நினைத்திருந்தேன் பொய்தானோ

திறந்தேன் திறந்தேன் நீ முட்டி திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து தீ முட்ட திறந்தேன்
உறைந்தே உறங்கும் என் உள்ளே செல் எல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை நீ கேட்க திறந்தேன்

உரிமைகள் வழங்கினேண் உடை வரை தொடு
மரங்குகள் மீறியே மடை உடைத்திடு
ஓராயிரம் இரவில் சேர்த்ததை
ஒரே நொடி இரவில் கேட்கிறாய்
பொறுமையின் சிகரமே

துளை ஏதும் இல்லாத தேன் கூடு
நுழை வேதும் இல்லாத உன் காதோ
விளைவேதும் இல்லாத மனதோ
உன் இதயம் என் நினைத்திருந்தேன் பொய்தானோ

திறந்தேன் திறந்தேன் நீ முட்டி திறந்தேன்
என்னுள்ளே நீ வந்து தீ முட்ட திறந்தேன்
உறைந்தே உறங்கும் என் உள்ளே செல் எல்லாம்
ஒப்பிக்கும் உன் பேரை நீ கேட்க திறந்தேன்

சொட்டு சொட்டாக உன் பார்வை என்னுள் இறங்க
பட்டு பட்டாக என் ரெக்கை ரெண்டும் துளிர்க்க
திட்டு திட்டாக உன் காதல் என் மேல் படிய
செட்டு செட்டாக ஒரு முத்திலே முடிய

படம்: வந்தான் வென்றான்
இசை: S தமன்
பாடியவர்கள்: ஆலாப் ராஜு, ஷ்ரேயா கோஷல்
வரிகள்: மதன் கார்க்கி

Thursday, September 8, 2011

வந்தான் வென்றான் - அஞ்சனா அஞ்சனாஇன்று முதல் நான் புதிதானேன்
உன் இனிய சிரிப்பினால் முகிலானேன்
கொட்டும் மழை போல் சுகமானேன்
உன் கொஞ்சும் உதட்டினில் தமிழானேன்
உன் கொஞ்சும் உதட்டினில் தமிழானேன்

அஞ்சனா அஞ்சனா அன்பே அன்பே அஞ்சனா
உன் ஒற்றை பார்வை போதும் அஞ்சனா
அஞ்சனா அஞ்சனா இன்னை நானே அஞ்சனா
நானும் நீயும் ஆனேன் அஞ்சனா
அஹ போடு போடு அஹ தந்தனத போடு
நீ அந்தரத்தில் ஆடு அஹ துள்ளி விளையாடு
அட தொட்டு தொட்டு பாடு எதுக்கு கட்டுப்பாடு
நீ வந்து வந்து தேடு அஹ கிட்ட கிட்ட சூடு
நீ முட்டி முட்டி மூடு மொத்தத்தில் என்னை நாடு
உனது விழியோடு என்னை மறந்தேனே

உண்மையாலே உண்மையாலே உன்னைபோலே அண்மையாலே
வெண்மையானேன் வெண்மையானேன் மெல்ல நானும் நன்மையானேன்

காதல் காதல் வந்தாலே
தண்ணீரும் கூட தீப்போலே
தன்னாலே மாறூம் மண் மேலே
சந்தோஷம் கூடும் நெஞ்சுகுள்ளே
ஆகாயம் உந்தன் கால் கீழே
புது கோலம் போடும் அன்பாலே
வேதாளம் ஒன்று உன்னுள்ளே
விளையாடி போகும் செல்லுல்லே

அஞ்சனா அஞ்சனா இல்லை நானே அஞ்சனா

ஒரு சின்ன பார்வையில்
நான் விடுதலை விடுதலை அறிந்தேனே
உனது அன்பு வார்த்தையில்
நான் பிறவியின் பயனையும் அறிந்தேனே
ஹே கேளு கேளு நீ என்னவென்று கேளு
நீ எப்பொழுதும் கேளு நான் சொல்லுவதை கேளு
சொல்லாததையும் கேளு நெருங்கி வந்து கேளு
உனதருகில் மொழியாய் வருவேனே
உணமையாலே உண்மையாலே

சிறகில்லை ஆயினும் நான் இறகென இறகென பறந்தேனே
காணவில்லை ஆயினும் நான் முழுவதும் முழுவதும் கலைந்தேனே
ஹே பாரு பாரு நீ பக்கம் வந்து பாரு
நீ பாடி பாடி பாரு அட பத்திரமா பாரு
ஆனதேச பாரு பது வில்லை பாரு
சில நொடியில் அதை நான் தருவேனே

உண்மையாலே உண்மையாலே உன்னைபோலே அண்மையாலே
வெண்மையானேன் வெண்மையானேன் மெல்ல நானும் நன்மையானேன்

காதல் காதல் வந்தாலே
தண்ணீரும் கூட தீப்போலே
தன்னாலே மாறூம் மண் மேலே
சந்தோஷம் கூடும் நெஞ்சுகுள்ளே
ஆகாயம் உந்தன் கால் கீழே
புது கோலம் போடும் அன்பாலே
வேதாளம் ஒன்று உன்னுள்ளே
விளையாடி போகும் செல்லுல்லே

அஞ்சனா அஞ்சனா இல்லை நானே அஞ்சனா

படம்: வந்தான் வென்றான்
இசை: S தமன்
பாடியவர்: ஆலாப் ராஜு
வரிகள்: யுகபாரதி

Wednesday, September 7, 2011

வெப்பம் - காற்றில் ஈரம்காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ
பூமி முடியும் அந்த எல்லை வரை போவோமா
நேற்று நாளை அது பொய்யானதோ
இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ
மேகம் அலையும் அந்த வானம் வரை போவோமா

இன்றென்ன இத்தனை இன்பம் இதய கூட்டில் நீந்திடுதே
நடை பாதை பூக்கள் எல்லாம் கைகள் நீட்டிடுதே
நீங்காத புன்னகை ஒன்று உதட்டின் மீது பூத்திடுதே
வாழ்க்கை பிடிக்கிறதே

காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ
பூமி முடியும் அந்த எல்லை வரை போவோமா
நேற்று நாளை அது பொய்யானதோ
இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ
மேகம் அலையும் அந்த வானம் வரை போவோமா

ஹோ ஒரு நாள் இந்த ஒரு நாள் உயிரோடு இருந்தாலும் வாழும்
பயணம் இந்த பயணம் இது தொடர்ந்திட வேண்டும்
அருகில் உனதருகில் நான் வாழும் நிகழ் காலம் போதும்
நிமிடம் இந்த நிமிடம் இது உறைந்திட வேண்டும்
மௌனத்தில் சில நேரம் மயக்கத்ஹ்டில் சில நேரம்
தயக்கத்தில் சில நேரம் இது என்னவோ புது உலகிங்கே
கண்ணருகில் சில தூரம் கை அருகில் சில தூரம்
வழி துணையை கேட்கிறதே வா வா

ஹோ நம் நெஞ்சத்தில் ஓரம் ஏன் இங்கு இத்தனை ஈரமோ
நம் கண்களில் ஓரமா புது கனவுகள் நூறும்
இது என்ன இது என்ன இந்த நாள்தான் திருநாளா?
இதற்காக இதற்காக காத்திருந்தோம் வெகு நாளா?

இன்றென்ன இத்தனை இன்பம் இதய கூட்டில் நீந்திடுதே
நடை பாதை பூக்கள் எல்லாம் கைகள் நீட்டிடுதே
நீங்காத புன்னகை ஒன்று உதட்டின் மீது பூத்திடுதே
வாழ்க்கை பிடிக்கிறதே

காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ
பூமி முடியும் அந்த எல்லை வரை போவோமா
நேற்று நாளை அது பொய்யானதோ
இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ
மேகம் அலையும் அந்த வானம் வரை போவோமா

படம்: வெப்பம்
இசை: ஜோஷுவா ஸ்ரீதர்
பாடியவர்கள்: கார்த்திக், ஸ்ரீசரண்
வரிகள்: நா. முத்துக்குமார்

மொழியின்றி விரிகின்ற என் கீதம்

மொழியின்றி விரிகின்ற என் கீதம்
வழிகின்ற இளங்காதல் சங்கீதம்
இமையோரம் இதழாலே
இசை சொல்வேன் இளமானே
இனிக்கின்ற துயர் நீக்க வா
எந்தன் ஆசை சொல்லும்
ஓசை காதல் பாஷை
உந்தன் ஆசை சொல்லும் ஓசை
இது என்ன பாஷை

நிலவொன்று பொழிகின்ற நிறம் கண்டு
நிலம் மீது நிஜமாக நீ வந்து
ஏன் தோன்றினாய்
கண் வீணை காதல் இசை மீட்ட
பண் தேனைப் பதமாக்கி நான் ஊற்ற
துளிர் விட்ட ராகங்கள்
சுகம் கொட்டும் நேரங்கள்
சுவை ஊற்றும் வாழ்வுக்கு வரமாகுமோ
கண்ணே கீதா
கீதம் தா தா

வாழ்வென்ற மலர்மீது வழிகின்ற
அழகாகி வலம் வந்து
என் வாழ்வில் கரம்பற்றுவாய்
உயிர் சேரும்
ஒரு இருள்நேரம்
பயிராகி மெய்யொன்று உயிர் பூக்கும்
கவிபேசி நான் ஒட்ட
காதோரம் தேன் சொட்ட
கனவொன்று உன்னாலே நனவாகுமோ
உள்ளம் தந்தேன் உள்ளே வா வா"

இசை:ராஜ் தில்லையம்பலம்
பாடலைப்பாடியவர்: எஸ்.பி.பி
வரிகள் : சுதர்ஷன்
திரைப்படம்: 1999 (கனடிய தமிழ்ப்படம்)

Tuesday, September 6, 2011

வெப்பம் - மழை வரும் அறிகுறிமழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்றூ நனையுதே இது என்ன காதலா சாதலா?
பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ?

உன் தோளில் சாயும்போது உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று உன்னை தேடி தேடி பார்க்கிறது
உன்னோடு போகும் போது பூப்பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே

மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்றூ நனையுதே இது என்ன காதலா சாதலா?
பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ?

அறியாத ஒரு வயதில் விதைத்தது ஹோ
அதுவாகவே தானாய் வளர்ந்தது ஓஹோ
புதிதாய் ஒரு பூவும் பூக்கையில் ஹோ
அட யாரதை யாரதை பறித்ததோ ஹோ
உன் கால் தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேனே
அது பாதியில் தொலைந்ததடா

நான் கேட்டது அழகிய நேரங்கள் ஹோ
யார் தந்தது விழிகளில் ஈரங்கள்? ஹோ
நான் கேட்டது வானவில் மாயங்கள் ஹோ
யார் தந்தது வழிகளில் காயங்கள்? ஹோ
இந்த காலும் ஒரு வகை சித்ரவதை தானே
அது உயிருடன் எறிக்குதடா ஓஹோ

மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்றூ நனையுதே இது என்ன காதலா சாதலா?
பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ?

உன் தோளில் சாயும்போது உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று உன்னை தேடி தேடி பார்க்கிறது
உன்னோடு போகும் போது பூப்பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே

மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்றூ நனையுதே இது என்ன காதலா சாதலா?
பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ?

படம்: வெப்பம்
இசை: ஜோஷுவா ஸ்ரீதர்
பாடியவர்: சூசன்
வரிகள்: நா. முத்துக்குமார்

Monday, September 5, 2011

வேலாயுதம் - சொன்னா புரியாதுசொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கெல்லாம் என்மேல வெச்ச பாசம்


சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கெல்லாம் என்மேல வெச்ச பாசம்
ஒன்னா பொறந்தாலும் இது போல இருக்காது
நா உங்க மேல எல்லாம் வெச்ச நேசம்


வேலாயுதம் பேரு என் பத்து வெரல் வேலு
நிக்காது இந்த காலு கொட்டிருச்சு டா தேளு


சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கெல்லாம் என்மேல வெச்ச பாசம்
ஒன்னா பொறந்தாலும் இது போல இருக்காது
நா உங்க மேல எல்லாம் வெச்ச நேசம்


தலையில் ஆடும் கரகம் இருக்கும்
தலயில கணம் தான் இருந்ததில்ல
தர தப்பு ஆட்டம் தான் இருக்கும்
தப்பான ஆட்டம் நா போட்டதில்ல
புலி வேஷம் போட்டுக்கிட்டு புலி ஆட்டம் ஆடுகிறேன்
வேட்டையாடி மட்டும் நானும் வாழ்ந்ததில்ல
சண்டையில MGR'ru சாடையில்ல அய்யனாரு
தில்லிருந்தும் வம்பு சண்ட போட்டதில்ல


வரப்பா மிதிச்சு ரா பாக்கள உழைச்சு
வாழுற ஜனங்க நம்ம கட்சி
இவங்க மனச சந்தோஷ படுத்த..
தப்பு'னு செஞ்சாலும் ரைட்'டு மச்சி
ஆடுகிற ஆட்டதுக்கு கூடுகிற கூட்டத்துக்கு
கைய வெச்சு இப்போ நானும் கும்படுறேன்
உங்க வீட்டு செல்ல புள்ள என்ன போல யாரும் இல்ல
உங்களைதான் எப்போவோமே நம்பிடுரேன்..


சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கெல்லாம் என்மேல வெச்ச பாசம்
ஒன்னா பொறந்தாலும் இது போல இருக்காது
நா உங்க மேல எல்லாம் வெச்ச நேசம்


வேலாயுதம் பேரு என் பத்து வெரல் வேலு
நிக்காது இந்த காலு கொட்டிருச்சு டா தேளு

படம்: வேலாயுதம்
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்கள்: விஜய் அந்தோணி, வீர ஷங்கர்
வரிகள்: அண்ணாமலை

Sunday, September 4, 2011

ஐயா சாமி ஆவோஜி சாமி

ஓ சாமி
ஐயா சாமி ஆவோஜி சாமி
ஐயா ராய்யா வாய்யா யூ கம்மைய்யா
ஐயா சாமி ஆவோஜி சாமி
நரிக்கொம்பிருக்கு வாங்கலியோ
(ஐயா)
ஐயா சாமி ஓ ஐயா சாமி

கோழியாட்டை பிடிக்கும்
எங்க குள்ள நரி
ஏழை ரத்தம் குடிக்கும்
இங்கே உள்ள நரி
பல்லிளித்துக்காட்டி
பட்டம் பலதைத் தேடி
கட்சிப் பேரைச் சொல்லி
ஊரை ஏமாத்திடும்
(ஐயா சாமி ஆவோஜி சாமி)

வேட்டையாடியாடி பிழைக்கும்
எங்கக் காட்டு நரி
மூட்டைக்காட்டி பதுக்கும்
உங்க நோட்டு நரி
வேலை ரொம்ப வாங்கும்
கூலி தர ஏங்கும்
பட்டினி பார்த்தும்
புளி ஏப்பம் விடும்
(ஐயா)

காட்டிலுள்ள நரி ரொம்ப
நல்லதுங்க
உங்க நாட்டிலுள்ள நரி
ரொம்ப பொல்லாதுங்க
குள்ள நரிக் கொம்பை
கோத்துப்போடு சாமி (குள்ள)
புள்ளைக்குட்டிக்காக்கும்
நல்ல புத்தி வரும்
(ஐயா)

படம் :ஓர் இரவு
பாடியவர் : எம்.எல்.வசந்தகுமாரி
இசை : ஆர் சுதர்சனம்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

வேலாயுதம் - ரத்தத்தின் ரத்தமேரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..
சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..

அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீதானே என் வாழ்கை உண்ணக்கல்லவா..
செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்
என் வாசம் உன்னகல்லவா..

ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..
சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..

அன்பென்ற ஒற்றை சொல்லை போல் ஒன்று வேறு இல்லை
நீ காடும் பாசத்துக்கு தெய்வங்கள் ஈடு இல்லை
என் நெஞ்சம் உன்னை மட்டும் கடிகார முல்லை சுற்றும்
நொடி நேரம் நீ பிரிந்தால் அம்மாடி உயிரே போகும்
நீ சொன்னால் எதையோ செய்வேன் தலை ஆட்டும் பொம்மை ஆவேன்
செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்
என் வாசம் உன்னகல்லவா..

அஹ.. ஒ..
ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..
சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..

நீங்க ரொம்ப நாள் நல்ல இருக்கனும்
இதே மாதிரி நீங்க ரொம்ப நாள் நல்ல இருக்கனும்
நூறு புள்ள பெத்து
கோடி அன்பு சேர்த்து நீங்க வாழனும் சந்தோஷமா
இந்த ஜோடி போலே ஜோடி இல்லை என்று பாத்து பாடனும் சந்தோஷமா
தாஜ் மஹால் உனக்கு தங்கத்தில் கட்ட போறேன்
மேகத்தில் நூல் எடுத்து சேலையாக நெஞ்சு தரேன்
என்னோடு நீ இருந்தால் வேற ஏதும் ஈடாகுமா
கண்டாங்கி செல போதும் வேற ஏதும் நான் கேப்பேனா
வானத்தில் நீளம் போலே பூமிக்கு ஈரம் போலே
இருட்டாலும் எரியாது முடிந்தாலும் முடியாது
நாம் கொண்ட உறவல்லவா..

ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..
சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..

படம்: வேலாயுதம்
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்கள்: ஹரிசரண், மதுமிதா
வரிகள்: பா. விஜய்

Saturday, September 3, 2011

சரசர சாரக்காத்து வீசும்போதும்

சரசர சாரக்காத்து
வீசும் போதும்
சார(ரை)ப் பாத்து பேசும்போதும்
சாரப்பாம்பு போல
நெஞ்சு சத்தம்போடுதே (சரசர)

இத்து இத்து இத்துப்போன
நெஞ்சு தைக்க
ஒத்தப்பார்வை பாக்கச்சொல்லு
மொத்த சொத்தை எழுதித்தாரேன்
மூச்சு உட்பட (த்த்)
டீ போல நீ
என்னைய ஆத்துற
(சரசர)

எங்க ஊரு புடிக்குதா
எங்கத் தண்ணி இனிக்குதா
சுத்தி வரும் காத்துல
சுட்ட ஈரல் மணக்குதா
முட்டக்கோழி புடிக்கவா
மொறைப்படி சமைக்கவா
எலும்புகள் கடிக்கையில்
எனைக்கொஞ்சம் நினைக்கவா
கம்மஞ்சோறு ருசிக்கவா

சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்கவா
மொடக்கத்தான் ரசம் வச்சி மடக்கத்தான் பாக்குறேன்
ரெட்டை தோசை சுட்டு வச்சு
காவக் காக்கரேன்
மொக்குன்னே நொங்கு நான் நிக்கிறேன்
மண்டு நீ கங்கைய கேக்கறே
(சரசர)

புல்லு கட்டு வாசமா
புத்திக்குள்ள வீசுர
மாட்டு மணி சத்தமா
மனசுக்குள் கேக்குறே
கட்டவண்டி ஓட்டுறே
கையளவு மனசுல

கையெழுத்து போடுறே
கன்னிப்பொண்ணு மார்புல
மூணு நாளா பாக்கல
ஊரில் எந்த பூவும் பூக்கல
ஆட்டுக்கல்லு குழியிலே
உறங்கிப்போகும் பூனையா
வந்து வந்து பார்த்து தான்
கிறங்கி போறயா
மீனுக்கு ஏங்கற கொக்கு நீ
கொத்தவே தெரியல மக்கு நீ
(சரசர) (2)
(இத்துஇத்து)
காட்டு மல்லிக பூத்துருக்குது
காதலா காதலா
வந்து வந்து ஓடிப்போகும்
வண்டுக்கென்ன காய்ச்சலா

திரைப்படம் : வாகை சூடவா
பாடியவர் : சின்மயி
இசை : ஜிப்ரான்
வரிகள் : வைரமுத்துகோ - என்னமோ ஏதோஎன்னமோ ஏதோ
எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்

ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஒ ஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஒ ஹோ அரைமனதாய் விடியுது என் காலை

என்னமோ ஏதோ
மின்னி மறையுது விழியில்
அண்டி அகலுது வழியில்
சிந்தி சிதறுது வெளியில்
என்னமோ ஏதோ
சிக்கி தவிக்குது மனதில்
ரெக்கை விரிக்குது கனவில்
விட்டி பறக்குது தொலைவில்

ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஒ ஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏதோ... ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஒ ஹோ அரைமனதாய் விடியுது நாளை

நீயும் நானும் எந்திரமா?
யாரோ செய்யும் மந்திரமா? பூவே

முத்தமிட்ட மூச்சு காற்றில்
பட்டு பட்டு கெட்டு போனேன்
பக்கம் வந்து நிற்கும் போது
திட்டமிட்டு எட்டி போனேன்
நெருங்காதே பெண்ணே எந்தன்
நெஞ்செல்லாம் நஞ்சாகும்
அழைக்காதே பெண்ணே எந்தன்
அச்சங்கள் அச்சாகும்
சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்

ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்

நீயும் நானும் எந்திரமா?
யாரோ செய்யும் மந்திரமா? பூவே

சுத்தி சுத்தி உன்னை தேடி
விழிகள் அலையும் அவசரம் ஏனோ
சத்த சத்த நெரிசலில் உன் சொல்
செவிகள் அறியும் அதிசயம் ஏனோ
கனா காண தானே பெண்ணே
கண் கொண்டு வந்தேனோ
வினா காண விடையும் காண
கண்ணீரும் கொண்டேனோ
நிழலை திருடும் மழலை நானோ

ஏதோ.. எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
ஒ ஹோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்

ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஒ ஹோ உருவமில்லா உருவமில்லா நாளை... ஏதோ
ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஒ ஹோ அரைமனதாய் விடியுது என் காலை... ஏதோ

ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஒ ஹோ உருவமில்லா உருவமில்லா நாளை
ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி பேழை
ஒ ஹோ அரைமனதாய் விடியுது என் காலை.. ஏதோ
....... ஏதோ

படம்: கோ
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஆலாப் ராஜு, பிரஷாந்தினி, ஸ்ரீசரண், MC Jazz
பாடல் வரிகள் : மதன் கார்க்கி

விரும்பி கேட்டவர்: ரவி

Friday, September 2, 2011

தலைகீழாய் பிறக்கிறான்

தலைகீழாய் பிறக்கிறான்
தலை கீழாய் நடக்கிறான்
வயிறு என்ற பள்ளத்தில்
இதயத்தையே புதைக்கிறான்
ஞானத்தங்கமே... ஞானத்தங்கமே..

மனிசன் ஒரு கட்டை
மக்கப் போற மட்டை
தேகம் ஒரு சட்டை
நீ யாரை வாழ விட்ட?

ஒற்றை துளியில ஒற்றை துளியில
ஒரு லட்சம் ஒரு கோடி உயிரு இருக்குது
அத்தனை உயிரையும் அடிச்சு துரத்திட்டு
ஒற்றை உயிர் ஒற்றை உயிர்
கருவில் வளருது..!
ஞானத்தங்கமே... ஞானத்தங்கமே..

கண்ணுக்குள்ள மண்ணு பட்டா
கண்ணு கலங்குறோம்
கடைசியில் மொத்தத்தையும்
மண்ணுல புதைக்கிறோம்..!
ஞானத்தங்கமே... ஞானத்தங்கமே..

மனிசன் ஒரு கட்டை
மக்கப் போற மட்டை
தேகம் ஒரு சட்டை
நீ யாரை வாழ விட்ட?

(தலைகீழாய்...)


எப்ப பிறக்குறோம் எப்ப பிறக்குறோம்
பெத்துப் போடும் ஆத்தாளுக்கும் தேதி தெரியலை..
எப்போ இறக்கிறோம் எப்போ இறக்கிறோம்
சாகப்போகும் ஆளுக்கும் தேதி தெரியலை..
ஞானத்தங்கமே... ஞானத்தங்கமே..

வாழ்க்கையை முழுசா வாழ்ந்தவன் யாரம்மா?
மனுசன் ஒரு ஓட்டைப்பானை மனசு நிறையுமா?
ஞானத்தங்கமே... ஞானத்தங்கமே..

மனிசன் ஒரு கட்டை
மக்கப் போற மட்டை
தேகம் ஒரு சட்டை
நீ யாரை வாழ விட்ட?

(தலைகீழாய்...)

படம்: ஜெமினி
இசை: பரத்வாஜ்
பாடியவர்: மாணிக்க விநாயகம்

விரும்பி கேட்டவர்: அருண் குமார்

Thursday, September 1, 2011

பூவினை திறந்து கொண்டுபூவினை திறந்து கொண்டு போய் ஒழிந்த வாசமே
பூவுடன் மறுபடியும் உனக்கென்ன ஸ்நெஹமெ
காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே

விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்
நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம்
காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில் உனக்கென்ன ஸ்நெஹமெ

தண்டவாளம் பக்கம் பக்கம்
தொட்டு கொள்ள ஞாயம் இல்லை
நீயும் நானும் பக்கம் பக்கம்
கட்டி கொள்ள சொந்தம் இல்லை

வாசனை தீண்டிட நினைக்கிறாய்
அது வசப்பட போவதில்லை
வானுக்கும் பூமிக்கும் என்றுமே
மழை உறவுடன் சேர்வதில்லை

இதய கூட்டை பூட்டிக் கொண்டு
கதவை தட்டி கலகம் செய்தாய்
கதவை பூட்டி உள்ளே சென்றேன்
கண்கள் வழியே மீண்டும் வந்தாய்

வருஷங்கள் மாறிய போதிலும்
புது வசந்தங்கள் வருவதுண்டு
வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள்
புது வடிவத்தில் மலர்வதுண்டு

பூவினை திறந்து கொண்டு போய் ஒழிந்த வாசமே
பூவுடன் மறுபடியும் உனக்கென்ன ஸ்நெஹமெ
விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்
நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம்

ம்ம்ம் ......

படம்: ஆனந்த தாண்டவம்
இசை: GV பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், ஷ்ரேயா கோஷல்
வரிகள்: வைரமுத்து

Last 25 songs posted in Thenkinnam