Wednesday, October 31, 2012

அரளி விதையில் முளைச்ச



அரளி விதையில் முளைச்ச துளசி செடியா காதல்
துளசி செடியா காதல்

அரளி விதையில் முளைச்ச துளசி செடியா காதல்
துளசி செடியா காதல்
உறவை மனது வளர்க்குதே
உயிரை அறுத்து எடுக்குதே
கண்ணில் காதல் விதைக்குதே
கடைசியில் உசுரை கொல்லுதே

அரளி விதையில் முளைச்ச துளசி செடியா காதல்
துளசி செடியா காதல்

 உள்ளத்தில் காதலை சுமந்துக் கொண்டு உதட்டில் மறைச்சால் மறையாதே
உறவின் நிழலில் நின்றுக் கொண்டு வெயிலில் காதலை வீசாதே
மனதில் ஆசையை புதைத்து விட்டு மறைஞ்சு மறைஞ்சு வாழாதே
என்னை மறக்க நினைத்து விட்டு உன்னை நீயே இழக்காதே
யாரோட சதி
நீ வச்ச பொறி
நெஞ்சுக்குள் வலி
வலி வலி வலி வலி வலி வலி வலி வலியே

அரளி விதையில் முளைச்ச துளசி செடியா காதல்
துளசி செடியா காதல்
உறவை மனது வளர்க்குதே
உயிரை அறுத்து எடுக்குதே
கண்ணில் காதல் விதைக்குதே
கடைசியில் உசுரை கொல்லுதே
கடைசியில் உசுரை கொல்லுதே
கடைசியில் உசுரை கொல்லுதே

படம் : கோவில் (2003)
இசை : ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : ஸ்ரீராம்
வரிகள் : சினேகன்

Tuesday, October 30, 2012

6ம் ஆண்டில் தேன்கிண்ணம் - கான கருங்குயிலே கச்சேரிக்கு

6ம் ஆண்டில் உங்கள் தேன் கிண்ணம். ஆதரவு அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.



கான கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
வரியா வரியா வரியா வரியா வரனே வரனே
அட உன்னயில்லடா  மடையா
கண் மயக்கும் பாட்டுச் சொல்லி பாட்டு ஒன்னு தர்றியா தர்றியா
தர்றியா தர்றியா தர்றியா தர்றியா

மனசில் இடம் புடிச்சா
எலக்சனுல ஜெயிச்சா
ஊரு சனம் மூக்குல விரல வைக்கும்

ஏய் தக்கு முக்கு தக்கு தாளம்
அடி தக்கு முக்கு தக்கு மேளம்
ஆஹா பிசுகிச்சு எக்கச்சக்க தக்கு முக்கு தக்கு மேளம்

கான கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
வரியா வரியா வரியா வரியா
கண் மயக்கும் பாட்டுச் சொல்லி பாட்டு ஒன்னு தர்றியா தர்றியா
தர்றியா தர்றியா தர்றியா தர்றியா

பொட்டும் வச்சு பூவும் வச்சு பொண்ணு ஒன்னு போனா
ஏய் சிட்டான் சினுக்கு சிட்டான் சினுக்கு சான்
ஏய் சிட்டான் சினுக்கு சிட்டான் சினுக்கு சான்
இள வட்டம் எல்லாம் கெட்டு மனம் சுத்தி வரும் தானா
இளசுகள தடுத்தா அது கேட்காது ஏய் அடடடடா
பழசுகள திரும்பி அது பார்க்காது ஏய் அடடடடா
சேட்டை எல்லாம் செய்யுறது சின்ன சின்ன பருவம் ஹே
ஆசிகள் எல்லாம் உங்களுக்கு கல்வி என்னும் செல்வம்
காலம் இருக்குது வாயா இந்த மண்ணோட மன்னர்களே

கான கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
கண் மயக்கும் பாட்டு சொல்லி பாட்டு ஒன்னு தர்றியா தர்றியா

அட ஒன்னுமே நல்லாலே தப்பு மேல கிள்ளலே
ஒண்ணுமே நல்லாலே ஹே ஹே
ஒண்ணுமே நல்லாலே தப்பு மேல கிள்ளலே
ஒண்ணுமே நல்லாலே ஒண்ணுமே நல்லாலே

அந்தியிலே பந்தடிச்சு ஆடி விளையாடு
ஏய் சிட்டான் சினுக்கு சிட்டான் சினுக்கு சான்
ஏய் சிட்டான் சினுக்கு சிட்டான் சினுக்கு சான்
நீ தந்தி ஒன்ன நீட்டிக்கிட்டு முந்தி வந்து பாரு
பொழுதிருக்கும் போதே புகழ் தேடு ஏய் அடடடடா
இளமை அது போன திரும்பாது ஏய் அடடடடா
கல்லூரிக்குள் கண்ட கனா நல்ல கனவாக
கண் முழிச்சு கற்றதெல்லாம் நல்ல நனவாக
காலம் இருக்குது வாயா இந்த மண்ணோட மன்னர்களே

கான கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
கண் மயக்கும் பாட்டுச் சொல்லி பாட்டு ஒன்னு தர்றியா தர்றியா
மனசில் இடம் புடிச்சா ஆஹா
எலக்சனுல ஜெயிச்சா ஒஹோ
ஊரு சனம் மூக்குல விரல வைக்கும்

ஏய் தக்கு முக்கு தக்கு தாளம்
அடி தக்கு முக்கு தக்கு மேளம்
ஆஹா பிசுகிச்சு எக்கச்சக்க தக்கு முக்கு தக்கு மேளம்
கான கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
கண் மயக்கும் பாட்டு சொல்லிச் பாட்டு ஒன்னு தர்றியா தர்றியா
தர்றியா தர்றியா வரியா வரியா

படம் : சேது (1999)
இசை : இளையராஜா
பாடியவர் : கோவை கமலா
வரிகள் : பொன்னடியன்

Monday, October 29, 2012

மாலை என் வேதனை




மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
எனை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பெளர்ணமி
என் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி

காதலில் தோற்றவர் கதை உண்டு இங்கே ஆயிரம்
வேண்டாத பேச்சுக்கள் ஏண்டா அம்பி

காதலும் பொய்யும் இல்லை உண்மை கதை மண்ணில் ஆயிரம்
உன் காதல் சஸ்பென்ஸ் ஏண்டா அம்பி

காதல் செஞ்சா பாவம் அந்த ஆதாம் காலத்தில்
எதுக்கு வீணா சோகம் கதையை முடிடா நேரத்தில்

பூங்கிளி கைவரும் நாள் வருமா
பூமியில் சொர்க்கமும் தோன்றிடுமா

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி

காற்று விடும் கேள்விக்கு மலர் சொல்லும் பதில் என்னவோ
வாசங்கள் பேசாத பதிலா தம்பி

மேகம் விடும் கேள்விக்கு வெண்ணிலவின் பதில் என்னவோ
கடல் ஆடும் அலை கூட பதில் தான் தம்பி

அவளின் மெளனம் பார்த்து பதைபதைக்கும் என் மனம்
வேண்டாத எண்ணம் வரும் காதல் திருமணம்

மோகமுள் நெஞ்சிலே பாய்கிறதே
என் மனம் அவள் மடி சாய்கிறதே

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி

எனை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பெளர்ணமி
என் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே


மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி



படம் : சேது (1999)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன், அருண்மொழி
வரிகள் : அறிவுமதி

Sunday, October 28, 2012

எங்கே செல்லும் இந்த பாதை



எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார்

எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார்
காலம் காலம் சொல்ல வேண்டும் யாரோ உண்மை அறிவார்
நேரத்திலே நான் ஊர் செல்ல வேண்டும்
வழி போக துணையாய் அன்பே வாராயோ

எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார்

ஊரை விட்டு ஓ ஓர் குடிசை
அங்கே யார் சென்று போட்டு வைத்தார்
காதலிலே ஓர் பைத்தியமே
சொர்க்கம் அதுவென்றே கட்டி வைத்தார்
காணும் கனவுகளில் இன்பம் இன்பம்
உண்மை அதற்கு வெகு தூரம் தூரம்
காதலென்றால் ஓ வேதனையா

எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார்
காலம் காலம் சொல்ல வேண்டும் யாரோ உண்மை அறிவார்

மண் கேட்டா அந்த மழை பொழியும்
மேகம் பொழியாமல் போவதுண்டா
கரை கேட்டா அந்த அலைகள் வரும்
அலைகள் தழுவாமல் போவதுண்டா
கண்ணீர் மழை உந்தன் முன்னே முன்னே
காதல் மழையை பொழி கண்ணே கண்ணே
என் உயிரே ஓ என் உயிரே

எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார்
காலம் காலம் சொல்ல வேண்டும் யாரோ உண்மை அறிவார்
நேரத்திலே நான் ஊர் செல்ல வேண்டும்
வழி போக துணையாய் அன்பே வாராயோ
எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார்
காலம் காலம் சொல்ல வேண்டும் யாரோ உண்மை அறிவார்

படம் : சேது (1999)
இசை : இளையராஜா
பாடியவர் : இளையராஜா
வரிகள் : அறிவுமதி

Saturday, October 27, 2012

மாரி மழை பெய்யாதோ




கமலத்தண்ணி இறக்கு மச்சான்
ஏரப்பூட்டி உழுது வச்சான்
வித்துநெல்ல எடுத்து வச்சான்
விதைக்க நாளு காத்திருந்தான்
மாரி மழை பெய்யாதோ
மக்க பஞ்சம் தீராதோ

மாரி மழை பெய்யாதோ மக்க பஞ்சம் தீர
சார மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
மயில்கள் ஆடும் கொண்டாட்டம் போடும் வானங்கருக்கையிலே
குயில்கள் நாளும் தெம்மாங்கு பாடும் சோலை வயலங்கில்லையே
மாரி மழை பெய்யாதோ மக்க பஞ்சம் தீர
சார மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற

சட்டியில மாக்கரிசி சந்தியில கோலமிட்டு
கோலம் அழியும் வர கோடை மழை பெய்யாதோ
வானத்து ராசாவே மழை திரும்பும் புண்ணியரே
சன்னல் ஒழுவாதோ சாரல் மழை பெய்யாதோ

வடக்கே மழை பெய்ய வரும் கிழக்கே வெள்ளம்
கொலத்தாங் கரையிலே அயிரை துள்ளும்
கிழக்கே மழை பெய்ய கிணறெல்லாம் புது வெள்ளம்
பச்சை வயக்காடு நெஞ்சை கிள்ளும்
நல்ல நெல்லு கதிரருத்து
புல்ல நெலி நெலியா கட்டுக்கட்டி
அவக்கட்டு கொண்டு போகையிலே
நின்னு கண்ணடிப்பான் அத்தை மகன்
உழவன் சிரிக்கணும் உலகம் செழிக்கணும்
மின்னல் இங்கு படபடக்க
மாரி மழை பெய்யாதோ மக்க பஞ்சம் தீர
சார மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
மயில்கள் ஆடும் கொண்டாட்டம் போடும் வானங்கருக்கையிலே
குயில்கள் நாளும் தெம்மாங்கு பாடும் சோலை வயலங்கில்லையே
மாரி மழை பெய்யாதோ மக்க பஞ்சம் தீர
சார மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற

வரப்புல பொன்னிருக்கு பொன்னு கையில் கிளி இருக்கு
கிளி இருக்கும் கைய நீ எப்போ புடிப்ப

விதையெல்லாம் செடியாகி செடியெல்லாம் காய்யாகி
காய வித்து உன் கைய புடிப்பேன்
புது தண்டட்டி போட்ட புள்ள
சும்மா தல தலன்னு வளந்த புள்ள
ரா தவளையெல்லாம் குலவை இட
நான் தாவுரேன் உன் மடி மேல

கனவுகள் பளிக்கனும் கழனியும் செழிக்கணும்
வானம் கரு கருக்க

மாரி மழை பெய்யாதோ மக்க பஞ்சம் தீர
மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
மயில்கள் ஆடும் கொண்டாட்டம் போடும் வானங்கருக்கையிலே
குயில்கள் நாளும் தெம்மாங்கு பாடும் சோலை வயலங்கில்லையே
மாரி மழை பெய்யாதோ மக்க பஞ்சம் தீர
சார மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற

மாரி மழை பெய்யாதோ மக்க பஞ்சம் தீர
சார மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற

படம் : உழவன் (1993)
இசை : ரஹ்மான்
பாடியவர் : சாகுல் ஹமீது 
வரிகள் : வாலி

Friday, October 26, 2012

எங்கெங்கோ கால்கள் செல்லும்



எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்
உன் சொந்தம் இங்கு யார் யாரோ
நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ
நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு

எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்

காதில்லா ஊசியுமே கடைசி வரைக்கும் வராதே
பட்டினத்தார் சொன்னானே பாட்டு ஒன்று அப்போதே
எதனை கொண்டு நாம் வந்தோம்
எதனை கொண்டு போகின்றோம்
ஓடும் பொன்னும் ஒன்றாய் எண்ணும் இதயம் வேண்டுமே

எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்

காற்றுக்கு யார் இங்கே பாட்டு சொல்லி தந்தாரோ
ஆற்றுக்கு யார் இங்கே பாதை போட்டு தந்தாரோ
வாழ்க்கை எங்கு போய் சேரும்
காலம் செய்யும் தீர்மானம்
என்னை உன்னை கேட்டா வாழ்க்கை பயணம் போகுது

எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்
உன் சொந்தம் இங்கு யார் யாரோ
நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ
நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு

படம் : நந்தா (2001)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : இளையராஜா
வரிகள் : புலமைப்பித்தன்

Thursday, October 25, 2012

ஓம் சிவோஹம்



ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்

ஓம் பைரவ ருத்ராய மஹா ருத்ராய கால ருத்ராய கல்பாந்த ருத்ராய வீர ருத்ராய ருத்ர ருத்ராய கோர ருத்ராய அகோர ருத்ராய மார்த்தாண்ட ருத்ராய அண்ட ருத்ராய பிரமாண்ட ருத்ராய சண்ட ருத்ராய ப்ரசண்ட ருத்ராய தண்ட ருத்ராய சூர ருத்ராய வீர ருத்ராய பவ ருத்ராய பீம ருத்ராய அதல ருத்ராய விதல ருத்ராய சுதல ருத்ராய மஹாதல ருத்ராய ரஸாதல ருத்ராய தலாதல ருத்ராய பாதல ருத்ராய நமோ நமஹா

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம்

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம்

வீர பத்ராய அக்னி நேத்ராய கோர சௌகாரஹா
சகல லோகாய சர்வ பூதாய சத்ய சாஷ்டாத்கரா

சம்போ சம்போ சங்கரா

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்

ஓம் நமஸ்வாமாயச ருத்ராய ஜநமஸ்தமரயச ருடாய ஜனமஷரிங்காயதபஸ்துபதஜே ஜநமஹுக்ராயச பீமாய ஜனமோ ஹக்ரே வதாய சதுரே வதாய ஜனமோ ஹந்த்ரே ஸஹமியதெ தனமோ வருக்ஷே ப்யோஹரிகேஷே ப்யோநமஸ்தராய நமஸ்ஷம்பவே தம யோபவேச்ச நமஷங்கராய தபயஷ்கராய தனமஷிவாய தஷிமதவாதச்சா

அண்ட பிரம்மாண்ட கோடி அகில பரிபாலனா
சூரனா ஜெகத் காரனா சத்ய தேவ தேவ ப்ரியா
வேத வேதாந்த சாரா யக்ன யக்யோமையா
நிஷ்டரா துஷ்ட நிக்ரஹா சப்த லோக சௌரச்சனா
சோம சூர்ய அக்னி லோச்சனா ஷ்வேதரி சபவாஹனா
சூலபானி புஜக பூசனா த்ரிபுலநாஸ ரக்தனா
யோமகேச மகாசேன ஜனகா
பஞ்சவத்ற பரசுஹஸ்த்த நமஹா

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

கால த்ரிகால நித்ர த்ரிவேந்தற சூல திரிசூல காத்ரம்
சத்ய பிரவாக நித்ய பிரகாஸ மந்த்ர ஸ்வரூப மாத்ரம்

நிஷ்ட பஞ்சராதி நிஸ்கலம் கோஹ நிஜ பூர்ண போத ஹம் ஹம்
சத்ய காத்மாய நித்ய பரம்மோஹ ஸ்வப்ன ஹாஸ்மோஹ ஹம் ஹம்

சத்ஷி ப்ரவாஹம் ஓம் ஓம்
மூல பிரவேயம் ஓம் ஓம்
அயம் பிரம்ஹாஸ்மி ஓம் ஓம்
அஹம் பிரம்ஹாஸ்மி ஓம் ஓம்

தனதன தனதன தனதன தனதன தன சஹச ஹத்ரசப்த விஹரவி
டமடம டமடம டுபடுப டுபடுப சிவடப டுப நாத விஹரவி

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

வீர பத்ராய அக்னி நேத்ராய கோர சௌகாரஹா
சகல லோகாய சர்வ பூதாய சத்ய சாஷ்டாத்கரா

சம்போ சம்போ சங்கரா

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

படம் : நான் கடவுள் (2009)
இசை : இளையராஜா
பாடியவர் : விஜய் பிரகாஷ்
வரிகள் : வாலி 

Wednesday, October 24, 2012

ஊரான ஊருக்குள்ள




ஊரான ஊருக்குள்ள உன்ன போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல
கொஞ்ச நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல
கொஞ்ச நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல
ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும் தீண்டவே இல்ல
உன்ன உத்து பாத்த கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல
உன்ன உத்து பாத்த கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல

காணாம காண வைச்ச கண்ணுக்குள்ள தீய வைச்ச
ஆனா நீ என்ன மட்டும் பாக்கவே இல்ல
கொஞ்சி நாலு வார்த்த நல்லா பேசி கேக்கவே இல்ல
கொஞ்சி நாலு வார்த்த நல்லா பேசி கேக்கவே இல்ல

பேசாம பேச வச்ச பிரியத்தோட கண்ணடிச்ச
பேசாம பேச வச்ச பிரியத்தோட கண்ணடிச்ச
ஆனா நீ என்ன மட்டும் பேசவே இல்ல
மஞ்ச தாலி வாங்கி கூட சேரும் ஆசையே இல்ல
மஞ்ச தாலி வாங்கி கூட சேரும் ஆசையே இல்ல

ஊரான ஊருக்குள்ள உன்ன போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல
கொஞ்ச நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல

கூவாம கூவ வச்ச கொண்டயில பூவ வச்ச
ஆனா நீ என்ன மட்டும் கூடவே இல்ல
அய்யோ தொலஞ்சு போன ஆள நீயும் தேடவே இல்ல
அய்யோ தொலஞ்சு போன ஆள நீயும் தேடவே இல்ல
மூடாம மூடி வச்ச முந்தானையில் சேதி வச்ச
மூடாம மூடி வச்ச முந்தானையில் சேதி வச்ச
ஆனா நீ என்ன மட்டும் மூடவே இல்ல
கள்ளி காதலோட நான் இருக்கேன் மாறவே இல்ல
கள்ளி காதலோட நான் இருக்கேன் மாறவே இல்ல

ஊரான ஊரான ஊரான ஊருக்குள்ள

ஊரான ஊருக்குள்ள உன்ன போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல

தானாக உன்ன வந்து சேரவா புள்ள

கொஞ்ச நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல
கொஞ்ச நேரங்கூட ஒத்தாசையா வாழவே இல்ல
உன்ன உத்து பாத்த கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல
உன்ன உத்து பாத்த கண்னு ரெண்டும் தூங்கவே இல்ல

கொஞ்சம் நோகாம கண்ண மூடி தூங்கு மாப்புள்ள

படம் : மனம் கொத்தி பறவை (2012)
இசை : இமான் 
பாடியவர் : சந்தோஷ் ஹரிஹரன்
வரிகள் : யுகபாரதி

Tuesday, October 23, 2012

கல்வியா செல்வமா வீரமா





கல்வியா செல்வமா வீரமா
அன்னையா தந்தையா தெய்வமா
கல்வியா செல்வமா வீரமா
அன்னையா தந்தையா தெய்வமா
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா
கல்வியா செல்வமா வீரமா

படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா
பொருள் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா
படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா
பொருள் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா
படித்தவன் படைத்தவன் யாராயினும்
படித்தவன் படைத்தவன் யாராயினும்
பலம் படைத்திருந்தால் அவனுக்கிணையாகுமா
பலம் படைத்திருந்தால் அவனுக்கிணையாகுமா
கல்வியா செல்வமா வீரமா

ஒன்றுக்குள் ஒன்றாக கருவானது
அது ஒன்றினில் ஒன்றாக பொருளானது
ஒன்றுக்குள் ஒன்றாக கருவானது
அது ஒன்றினில் ஒன்றாக பொருளானது
ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது
ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது
மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் நிகரேது
மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் நிகரேது
கல்வியா செல்வமா வீரமா

மூன்று தலைமுறைக்கும் நிதி வேண்டுமா
காலம் முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா
மூன்று தலைமுறைக்கும் நிதி வேண்டுமா
காலம் முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா
தோன்றும் பகை நடுங்கும் பலம் வேண்டுமா
தோன்றும் பகை நடுங்கும் பலம் வேண்டுமா
இவை மூன்றும் துணை இருக்கும் நலம் வேண்டுமா
இவை மூன்றும் துணை இருக்கும் நலம் வேண்டுமா
கல்வியா செல்வமா வீரமா

படம் : சரஸ்வதி சபதம்
இசை : மகாதேவன்
பாடியவர் : செளந்தர்ராஜன்
வரிகள் : கண்ணதாசன்

ஓராயிரம் யானை



ஓராயிரம் யானை கொன்றால் பரணி
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி
தாய் வயிற்றில் தலை கீழாக
உன் வழியோ இல்லை நேராக
தோள் சாய புது உறவிங்கே
தூண் எல்லாம் இனி தூளாக

ஓராயிரம் யானை கொன்றால் பரணி
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி

குழலோசை இல்லை குயிலோசை இல்லை
இடியோசை ஒன்றே அறிந்தாயே
முரணோடு வாழ்ந்து முள்ளோடு சேர்ந்து
அன்பால் இன்று பூப்பூக்கின்றாய்
ஒரு ராஜா வருந்தாமல் அட புத்தன் ஜனனம் இல்லை
மனம் நொந்து நொறுங்காமல் அட சித்தன் பிறப்பதும் இல்லை
வாழ்ந்தாய் தீயின் மடியில்
சேர்ந்தாய் தீர்த்தக் கரையில்

ஓராயிரம் யானை கொன்றால் பரணி
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி

படம் : நந்தா (2001)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : உன்னிகிருஷ்ணன்
வரிகள் : நா. முத்துக்குமார்

Monday, October 22, 2012

வாய மூடி சும்மா இருடா



வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

கடிகாரம் தலைகீழாய் ஓடும்
இவன் வரலாறு எதுவென்று தேடும்
அடிவானில் பணியாது போகும்
இவன் கடிவாளம் அணியாத மேகம்
பல நிலவொளிகளில் தலை குளித்திடும் போதும்
இவன் மனவெளிகளில் கனவுகள் இல்லை ஏதும்
காணாமலே போனானடா
ஏனென்று கேட்காத போடா

வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

பார்வை ஒன்றில் காதல் கொண்டா
எந்தன் நெஞ்சேங்கும் நுன்பூகம்பம்
பேரே இல்லா பூவை கண்டா
எந்தன் வேரெங்கும் பேரானந்தம்
என் தோற்றத்தில் மாற்றம்
காற்றெல்லாம் வாசம்
தானாக உண்டானதெனோ
நீ வாழவென்று என் உள்ளம் இன்று
தானாக ரெண்டானதெனோ
ஓயாமலே பெய்கின்றதே என் வானில் ஏனிந்த காதல்

வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

நாளை என் காலை கீற்றே நீதானே
கையில் தேநீரும் நீதானடி
வாசம் பூவோடு பேசும் நம் பிள்ளை
கொல்லும் இன்பங்கள் நீதானடி
கன்னம் சுருங்கிட நீயும்
மீசை நரைத்திட நானும்
வாழ்வின் கரைகளை காணும்
காலம் அருகினில் தானோ
கண் மூடிடும் அவ்வேளையும் உன்
கண்ணில் இன்பங்கள் காண்பேன்

வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

வாய மூடி சும்மா இருடா
ரோட்ட பாத்து நேரா நடடா
கண்ண கட்டி காட்டுல விட்டுடும்டா
காதல் ஒரு வம்புடா

படம் : முகமூடி (2012)
இசை : கிருஷ்ணகுமார்
வரிகள் : மதன் கார்க்கி
பாடியவர் : ராஜு

Sunday, October 21, 2012

அட்டகத்தி - வழி பார்த்திருந்தேன்



வழி பார்த்திருந்தேன் உன் தடம் தோன்றுமென்றே
என் விழி மூடவில்லை பார்வை இடம் மாறவில்லை
பல யுகம் தாண்டி வந்தேன் உன் முகம் காட்டு பெண்ணே
வழி பார்த்திருந்தேன் உன் தடம் தோன்றுமென்றே

நொடி ஒவ்வொன்றும் உன்னை தேடி வாழ்கிறதே
சில்லென்ற காற்று என்னை கடிக்கின்றதே
காத்திருக்கும் நேரம் மிகவும் சுடுகின்றதே
என் இமை மூடா கண்கள் உன் நிழல் பார்க்க துடிக்கின்றதே


படம் : அட்டகத்தி (2012) 
இசை : சந்தோஷ் நாராயணன்  
பாடியவர் : பிரதீப் 
வரிகள் : கபிலன்

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்



இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம் துணை நீ
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

ஓடுது ரயில் பாதை மனம் போலவே
பாடுது குயில் அங்கே தினம் போலவே
மா மரம் பூ பூத்து விளையாடுது
காடெங்கும் புது வாசம் பரந்தோடுது
பார்த்தது எல்லாம் பரவசம் ஆக
புதுமைகள் காண்போம் என்னாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்

தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான்
தேன்கொண்ட மலராக மறு பாதி நீ
காற்றினில் ஒலியாக வருவேனடி
கனவுக்குள் நினைவாக வருவாயடி
நிலவுக்கு வானம் நீருக்கு மேகம்
கொடிகொரு கிளைபோல் துணை நீயம்மா
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்

ஓடமும் நீரின்றி ஓடாதம்மா
நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா
தோழமை உறவுக்கு ஈடேதம்மா
நீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா
உனக்கென நானும் எனக்கென நீயும்
உலகினில் வாழ்வோம் என்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்

ராமனின் குகனாக உனை பார்க்கிறேன்
மாலதி அணுவாக நான் வாழ்கிறேன்
இரு மனம் அன்பாலே ஒன்றானது
நேசத்திலே உள்ளம் பண்பாடுது
பறவைகள் போலே பறந்திடுவோம்
மகிழ்வுடன் வாழ்வோம் என்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம் துணை நீ
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

படம் : வட்டத்துக்குள் சதுரம் (1978)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : சசிரேகா, ஜானகி
வரிகள் : பஞ்சு அருணாச்சலம்


Saturday, October 20, 2012

மனசு மயங்கும்



மனசு மயங்கும்
மனசு மயங்கும்
மெளன கீதம்
மெளன கீதம்
மனசு மயங்கும் மெளன கீதம் பாடு

மன்மத கடலில்
மன்மத கடலில்
சிப்பிக்குள் முத்து
சிப்பிக்குள் முத்து
மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து தேடு

இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு
இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு
சுகங்கள் இரு மடங்கு

மனசு மயங்கும் மெளன கீதம் பாடு
மன்மதக் கடலில் சிப்பிக்குள் முத்து தேடு

மார்பில் உண்டு பஞ்சணை மடிகள் ரெண்டும் தலையணை
மடிகள் ரெண்டும் தலையணை
நீரில் நெருப்பின் வேதனை அணைத்துக் கொண்டேன் தலைவனை
அணைத்துக் கொண்டேன் தலைவனை
இதயம் மாறியதோ எல்லை மீறியதோ
இதயம் மாறியதோ எல்லை மீறியதோ
புதிய பாடம் விரக தாபம்
புதிய பாடம் விரக தாபம் போதையேறியதோ

மனசு மயங்கும் மெளன கீதம் பாடு
மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து தேடு

காதல் எங்கே பலவகை உனக்கு மட்டும் புதுவகை
உனக்கு மட்டும் புதுவகை
காமன் கலைகளும் எத்தனை பழக வேண்டும் அத்தனை
பழக வேண்டும்
காதல் யாகங்களோ காம வேதங்களோ
காதல் யாகங்களோ காம வேதங்களோ
உனக்குள் மறைந்து உயிரில் கரைந்து
உனக்குள் மறைந்து உயிரில் கரைந்து
உருகும் நேரங்களோ

மனசு மயங்கும்
மனசு மயங்கும்
மெளன கீதம்
மெளன கீதம்
மனசு மயங்கும் மெளன கீதம் பாடு

மன்மத கடலில்
மன்மத கடலில்
சிப்பிக்குள் முத்து
சிப்பிக்குள் முத்து
மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து தேடு

இதழில் தொடங்கு எனக்குள் அடங்கு
இதழில் தொடங்கு எனக்குள் அடங்கு
சுகங்கள் இரு மடங்கு

படம் : சிப்பிக்குள் முத்து
இசை : இளையராஜா
பாடியவர்கள் : பாலசுப்ரமணியம், ஜானகி
வரிகள் : வைரமுத்து

தாண்டவம் - உன்னாலே அழகானேன்



Will you be there when I need You
Will you be there when I want You
Oh will you be there I can feel You
Oh will you be there I love You
உன்னாலே அழகானேன் உன்னருகே பெண்ணானேன்
உன் சிரிப்பில் தூளானேன்
இன்றேனோ வேறானேன்

இது வலி எல்லாம் நோயோ நோயோ
இது தந்தவன் யார் நீயோ நீயோ
நடந்ததை நினைப்பதே தனி
நினைப்பதும் நடக்குமா இனி
உன் கைவிரலில் என் கைவிரல்கள்
ஒன்றாக தீண்டும்போது சாரலாகி

Will you be there when I need You
Will you be there when I want You
Oh will you be there I can feel You
Oh will you be there I love You

என்னை தோற்றேனே ஏனோ ஏனோ
உன்னை வென்றேனே நானோ நானோ
இழப்பதும் காதலில் சுகம்
அலைகிறேன் உன்னிடம் தினம்
என் யோசனையில் உன் வாசனையை
நீ வந்து தூவி தூவி தாவிபோகிறாய்

Will you be there when I need You
Will you be there when I want You
Oh will you be there I can feel You
Oh will you be there I love You

உன்னாலே அழகானேன் உன்னருகே பெண்ணானேன்
உன் சிரிப்பில் தூளானேன்
இன்றேனோ வேறானேன்

படம் : தாண்டவம் (2012)
இசை : பிரகாஷ் குமார்
பாடியவர் : அலிசா, மரியா
வரிகள் : நா. முத்துக்குமார்

Friday, October 19, 2012

கண்ணோடு கண்ணான என் கண்ணா



கண்ணோடு கண்ணான என் கண்ணா
உன்னை எவரடித்தார் கண்ணா

கண்ணோடு கண்ணான என் கண்ணா உன்னை எவரடித்தார் கண்ணா
கண்ணோடு கண்ணான என் கண்ணா உன்னை எவரடித்தார் கண்ணா
அன்னை உன்னை அடித்தாளோ சாமி
பிஞ்சு நெஞ்சு வலிக்காதோ சாமி
அன்னையும் நான் தானே
உன் அப்பனும் நான் தானே
கண்ணோடு கண்ணான என் கண்ணா உன்னை எவரடித்தார் கண்ணா
கண்ணோடு கண்ணான என் கண்ணா உனை யாரடித்தார் அப்பா

நல்ல தாயின் கண்ணிரண்டில் கோபம் வந்த மாயமென்ன
பாசம் நெஞ்சில் இருந்தாலும் நடிப்பதில் லாபமென்ன
வெண்ணையைக் கண்ணன் போல் திருடி விட்டாயோ
வீதியில் மண்ணெல்லாம் தின்று விட்டாயோ
அம்மா மண்ணைத் திங்க நான் சிறுவனோ
மாயவனோ கிறுக்கனோ நீயே பாரு

வெறுப்பது அம்மா தான்
வெறுப்பது அம்மா தான் விட்டு விட்டு போகாதே
கோழி ஒண்ணு குஞ்சை  மிதிச்சா சேதங்கள் வாராதே
அழுகை வராதோ எனக்கு அழுகை வராதோ
ஊர விட்டுப் போனாலும் போக ஒரு ஊரி்ல்லை
சொந்தம் பந்தம் பாத்தாலும் சோறு தர ஆளில்லை
பக்கத்துல அவ இருந்தா பசியே எடுக்காது
கோபத்துல அடிச்சாலும் கொஞ்சமும் வலிக்காது
போடம்மா போடு நல்லா போடு இன்னும் போடு போடு
கண்ணோடு கண்ணான என் கண்ணா உன்னை எவரடித்தார் கண்ணா
கண்ணோடு கண்ணான என் கண்ணா உன்னை எவரடித்தார் கண்ணா

சின்னப் பையன் நீயல்ல அள்ளி வைத்து தாலாட்ட
பெரிய பையன் நீயல்ல புத்திமதி நான் சொல்ல
அனாதையாய் வாழ்ந்தது அடடா அன்று
இப்போது நான் கொண்டது பி்ள்ளைகள் ரெண்டு
சொந்தம் என்பது
சொந்தம் என்பது தொடர்கதை ஆனது
பந்தம் என்பது விடுகதை ஆனது
வாழ்வே விடுகதை ஆனது
என்னம்மா மனசுக்குள் பாரமா

கண்ணோடு கண்ணான என் கண்ணா உன்னை எவரடித்தார் கண்ணா
கண்ணோடு கண்ணான என் கண்ணா உன்னை எவரடித்தார் கண்ணா

அன்னை என்னை அடித்தாளே சாமி
பிஞ்சு நெஞ்சு வலிக்காதோ சாமி
அன்னையும் நான் தானே உன் அப்பனும் நான் தானே

கண்ணோடு கண்ணான என் கண்ணா உன்னை எவரடித்தார் கண்ணா
கண்ணோடு கண்ணான என் கண்ணா உன்னை எவரடித்தார் கண்ணா

படம் : சிப்பிக்குள் முத்து
இசை : இளையராஜா
பாடியவர்கள் : பாலசுப்ரமணியம், ஜானகி
வரிகள் : வைரமுத்து

தாண்டவம் - யாரடி யாரடி மோகினி



யாரடி யாரடி மோகினி போல என் கண்முன் வந்து சென்றாய்
உன் காலடி பட்டதும் பூமியில் அவ்விடம் பூக்கள் தந்து சென்றாய்
நிலா போலவே உலா போகிறாய்
நிழல் வீசியே புயல் செய்கிறாய்
கருங்கூந்தலில் வலை செய்கிறாய்
குறும் பார்வையில் கொலை செய்கிறாய்

கண்ணாடி இவள் பார்த்தால் கவிதை என்று சொல்லும்
வேறொரும் பார்க்கும் முன்னே கண்ணை மூடி கொள்ளும்
ஒரு கோடி பூக்கள் கொய்து
அதில் தேனை ஊற்றி செய்தான் உன்னை
இவள் தேவதை இதழ் மாதுளை
இவள் பார்வையில் சுடும் வானிலை
சுடர் தாரகை முகம் தாமரை
இரு கண்களில் இவள் நேரலை

யாரடி யாரடி மோகினி போல என் கண்முன் வந்து சென்றாய்
உன் காலடி பட்டதும் பூமியில் அவ்விடம் பூக்கள் தந்து சென்றாய்

உடை போடும் விதம் பார்த்து ஊரே ஆடி போகும்
இடை ஆடும் நடம் பார்த்து இதயம் நின்று போகும்
அலை ஆடும் நுரையை சேர்த்து
அதில் பாலை ஊற்றி செய்தால் உன்னை
மயில் போல் இவள் விருந்தாடினால்
துயில் யாவுமே தொலைந்தாடுமே
நடை பாதையில் இவள் போகையில்
மரம் யாவுமே குடை ஆகுமே

யாரடி யாரடி மோகினி போல என் கண்முன் வந்து சென்றாய்
உன் காலடி பட்டதும் பூமியில் அவ்விடம் பூக்கள் தந்து சென்றாய்
நிலா போலவே உலா போகிறாய்
நிழல் வீசியே புயல் செய்கிறாய்
கருங்கூந்தலில் வலை செய்கிறாய்
குறும் பார்வையில் கொலை செய்கிறாய்

படம் : தாண்டவம் (2012)
இசை : பிரகாஷ் குமார்
பாடியவர் : ராகுல் நம்பியார், மேகா
வரிகள் : நா. முத்துக்குமார்

Thursday, October 18, 2012

துள்ளி துள்ளி நீ பாடம்மா



துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
துள்ளி துள்ளி துள்ளீ துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

கட்டிய தாலி உண்மையென்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய்
கட்டிய தாலி உண்மையென்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய்
மன்னவன் உன்னை மறந்ததென்ன உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
மன்னன் உன்னை மறந்ததென்ன
மன்னவன் உன்னை மறந்ததென்ன உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
தாயே தீயில் மூழ்கி
அட தண்ணீரில் தாமரை போல நீ வந்தாய்
நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தூங்கு
நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு
துள்ளி துள்ளி துள்ளீ துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

துன்பம் என்றும் ஆணுக்கல்ல அது அன்றும் இன்றும் பெண்களுக்கே
துன்பம் என்றும் ஆணுக்கல்ல அது அன்றும் இன்றும் பெண்களுக்கே
நீ அன்று சிந்திய கண்ணீரில் இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா
நீ அன்று சிந்திய கண்ணீரில் இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா
இரவென்றால் மறுநாளே விடியும்
உன் தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும்
அன்பு கொண்டு நீ ஆடு காலம் கூடும் பூப்போட
அன்பில்லை நான் ஆட தோளில்லை நான் பூப்போட

துள்ளி துள்ளி துள்ளீ

படம் : சிப்பிக்குள் முத்து
இசை : இளையராஜா
பாடியவர்கள் : பாலசுப்ரமணியம், ஜானகி
வரிகள் : வைரமுத்து

தாண்டவம் - அனிச்சம் பூவழகி



 என் கண்ணே
தந்தானா
தனனானா

மையல் குயல் ஏஹே மையல் குயல்
மையல் குயல் ஓஹோ மையல் குயல்
மையல் குயல் ஏஹே மையல் குயல்

அனிச்சம் பூவழகி ஆட வைக்கும் மேலழகி
கருத்த விழியழகி கெறங்க வைக்கும் பேரழகி
எங்கெங்கோ எங்கெங்கோ பறந்தே நான் போனேனே
சண்டாளி உன்கிட்ட சருகாகி நின்னேனே
 
வாராண்டி வாராண்டி வரிசை கொண்டு வாராண்டி
மாட்டு வண்டி எடுத்துக்கிட்டு பரிசும் போட வாராண்டி
மாட்டிக்கிட்ட மாப்பிளைக்கு மல்லு வேட்டி வாங்கிக் கொடு
தாலி ஒண்ணு கட்டிக் கிட்டு பாட்டு ஒண்ணு எடுத்து விடு

நேத்து வர வெண்ணிலவு  வீண் நிலவு என்று இப்போ தோணுதடி அடியே தோணுதடி
நாளை வரும் வெண்ணிலவு தேன் நிலவு என்று இனி மாறுமடி   அடியே மாறுமடி
சொல்லாத சந்தோஷம் அள்ளாம அள்ளுதடி
பொல்லாத ஒரு பாரம் கிள்ளாம கிள்ளுதடி
ஏ புள்ள வா மெல்ல கனவுகள் எடுத்துச் சொல்ல
 
வாராண்டி வாராண்டி வரிசை கொண்டு வாராண்டி
மாட்டு வண்டி எடுத்துக்கிட்டு பரிசும் கொண்டு வாராண்டி
மாட்டிக்கிட்ட மாப்பிளைக்கு மல்லு வேட்டி வாங்கிக் கொடு
தாலி ஒண்ணு கட்டிக் கிட்டு பாட்டு ஒண்ணு எடுத்து விடு

புதுப் பொண்ணு மாப்பிளைக்கு பூவ அள்ளி சூடுங்கடி
மாப்பிள்ளையும் பொண்ணும் நல்லா வாழணும்னு வாழ்த்துங்கடி
புதுப் பொண்ணு மாப்பிளைக்கு பூவ அள்ளி சூடுங்கடி
மாப்பிள்ளையும் பொண்ணும் நல்லா வாழணும்னு வாழ்த்துங்கடி

சாத்தி வச்ச நெஞ்சில் இப்போ சேத்து வச்ச காதல் வந்து தாக்குதடி அடியே தாக்குதடி
போர்களத்த தாண்டி இப்போ பூக்கடைக்கு கால்கள் இனி போகுமடி அடியே போகுமடி
மரியாதை இல்லாம மனசும் தான் திட்டுதடி
உம் பேர சொல்லச் சொல்லி உள் நாக்கு கத்துதடி
ஏ புள்ள வா மெல்ல கனவுகள் எடுத்துச் சொல்ல
 
வாராண்டி வாராண்டி வரிசை கொண்டு வாராண்டி
மாட்டு வண்டி எடுத்துக்கிட்டு பரிசும் போட வாராண்டி
மாட்டிக்கிட்ட மாப்பிளைக்கு மல்லு வேட்டி வாங்கிக் கொடு
தாலி ஒண்ணு கட்டிக் கிட்டு பாட்டு ஒண்ணு எடுத்து விடு

ஓ அனிச்சம் பூவழகி ஆட வைக்கும் மேலழகி
கருத்த விழியழகி கெறங்க வைக்கும் பேரழகி
எங்கெங்கோ எங்கெங்கோ பறந்தே நான் போனேனே
சண்டாளி உன் கிட்ட சருகாகி நின்னேனே

மையல் குயல் ஏஹே மையல் குயல்
மையல் குயல் ஓஹோ மையல் குயல்
மையல் குயல் ஏஹே மையல் குயல்
மையல் குயல் ஓஹோ மையல் குயல்
மையல் குயல் ஏஹே மையல் குயல்

படம் : தாண்டவம் (2012)
இசை : பிரகாஷ் குமார்
பாடியவர் : பிரகாஷ் குமார், சின்ன பொண்ணு, வேல் முருகன்
வரிகள் : நா. முத்துக்குமார்

Wednesday, October 17, 2012

ஆராரிரோ பாடியதாரோ



ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப் போனதாரோ
யாரோ யாரோ எனக்காரோ யாரோ
என் தெய்வமே இது பொய் தூக்கமா
நான் தூங்கவே இனி நாளாகுமா

ஆராரிரோ பாடியதாரோ யாரோ

நீ முந்தி போனது நியாயம் இல்லையே
நான் முந்தி போகவே யோகம் இல்லையே
கூட்டை விட்டு தாய்க்கிளி பறந்தது எங்கே
பசித்தவன் கேட்கிறேன் பால் சோறு எங்கே
என் தேவியே நான் செய்த குற்றம் என்ன கூறு
ஒரு பார்வை பாரு

ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப் போனதாரோ
யாரோ யாரோ எனக்காரோ யாரோ

பொழுதாகி போனதே இன்னும் தூக்கமா
சொல்லாமல் போவது தாயே நியாயமா
உயிர் தந்த தேவிக்கு உயிர் இல்லையோ
பால் ஊத்தி பார்த்தியே பால் ஊத்தலாமோ
அன்னம் போட்ட என் தாயே உனக்கு
அரிசி போட வந்தேன் எனை நானே நொந்தேன்

ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப் போனதாரோ
யாரோ யாரோ எனக்காரோ யாரோ
என் தெய்வமே இது பொய் தூக்கமா
நான் தூங்கவே இனி நாளாகுமா

ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப் போனதாரோ
யாரோ யாரோ எனக்காரோ யாரோ

படம் : தாய்க்கு ஒரு தாலாட்டு (1986) 
இசை : இளையராஜா 
பாடியவர் : ஜேசுதாஸ் 
வரிகள் : வைரமுத்து

தாண்டவம் - அதிகாலை பூக்கள்



அதிகாலை பூக்கள் உனை பார்க்க ஏங்கும்
அந்திமாலை மேகம் உனை பார்த்தே தூங்கும்
உன் கண்கள் தானே விண்மீன்கள் தேடும்
உன்னோடு வாழ்ந்தால் வரமல்லவா
கனவுகள் தருகிறாய் கவிதைகள் தருகிறாய்
உறவுகள் தருகிறாய் உயிரிலே

படம் : தாண்டவம் (2012)
இசை : பிரகாஷ் குமார்
பாடியவர் : பிரகாஷ் குமார்
வரிகள் : நா. முத்துக்குமார்

Tuesday, October 16, 2012

லாலி லாலி லாலி லாலி



லாலி லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி
வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
வயதான பிள்ளைக்கு சுகமான லாலி
ராஜாதி ராஜனுக்கு
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
பாசமுள்ள ஜீவனுக்கு கண்ணீரில் லாலி
லாலி லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி

அழகான தேவதைக்கு அழுகின்ற லாலி
அன்பான தேவிக்கு கண்ணீரில் லாலி
கடல் வானம் உள்ள வரை
கடல் வானம் உள்ள வரை அலை பாடும் லாலி
விழி இன்று போனதும் இமை பாடும் லாலி
வசந்தங்கள் போன பின்பு உயிர் பாடும் லாலி
என் தேகம் உறங்க பஞ்சபூதங்கள் பாடும்
லாலி லாலி
என் தேவி உறங்க பஞ்சபூதங்கள் பாடும்

படம் : சிப்பிக்குள் முத்து
இசை : இளையராஜா
பாடியவர்கள் : பாலசுப்ரமணியம், சைலஜா
வரிகள் : வைரமுத்து

தாண்டவம் - நீ என்பதே நான் தான்னடி



நீ என்பதே நான் தான்னடி
நான் என்பதே நாம் தான்னடி

ஒரு பாதி கதவு நீயடி மறு பாதிக் கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம் சேர்த்து வைக்க காத்திருந்தோம்

ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா
தாழ் திறந்தே காத்திருந்தோம் காற்று வீச பார்த்திருந்தோம்

நீ என்பதே நான் தான்னடி நான் என்பதே நாம்தான்னடி
ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி


இரவு வரும் திருட்டு பயம் கதவுகளை சேர்த்து விடும்

ஓ கதவுகளை திருடி விடும் அதிசயத்தை காதில் செய்யும்

இரண்டும் கைக் கோர்த்து சேர்ந்தது இடையில் பொய்ப்பூட்டு போனது

வாசல் தள்ளாடுதே திண்டாடுதே கொண்டாடுதே

ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி


ஓ இடி இடித்தும் மழை அடித்தும் அசையாமல் நின்றிருந்தோம்

ஓ இன்றேனோ நம் மூச்சும் மென்காற்றில் இணைந்து விட்டோம்

இதயம் ஒன்றாகி போனதே கதவு இல்லாமல் ஆனதே

இனி மேல் நம் வீட்டிலே பூங்காற்று தான் தினம் வீசுமே


ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம் சேர்த்து வைக்க காத்திருந்தோம்

ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா
தாழ் திறந்தே காத்திருந்தோம் காற்று வீச பாத்திருந்தோம்


நீ என்பதே நான் தான்னடி
நான் என்பதே நாம் தான்னடி

படம் : தாண்டவம் (2012) 
இசை : பிரகாஷ் குமார் 
பாடியவர்கள் : ஹரிச்சரண், வந்தனா சீனிவாசன்
வரிகள் : நா. முத்துக்குமார்

Monday, October 15, 2012

பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு



பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு
வருக வருக வந்தேன்
வாழ்வால் ருசி கண்டேன்

நீ எனக்குள்ளே நான் உனக்குள்ளே
பிரிவது ஏது பெண்ணே உயிரை பரிமாறு
இணையும் பசுவைப்போல் நீ இணைந்தாய்
என் நெஞ்சில் தன்னாலே
நீயும் நானும் நடப்போம் நிலவின் மேலே

பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு
வருக வருக வந்தேன்
வாழ்வால் ருசி கண்டேன்

பூ பூத்திருக்கும் முல்லை கொடி தான்
பூ பூத்துவைத்து காத்து இருங்கள்
திருமண மாலைக்கு தேதி சொல்லி
பறித்துக் கொள்வோம்
தேன் சுமந்திருக்கும் பெண்ணை மறந்தால்
தேன் சேர்ர்த்து வைத்து காத்திருங்கள்
திருமண இரவுக்கு தேவைப்படும்
எடுத்துக் கொள்வோம்

ஹேய் கங்கா சிந்தாமல் நின்றாடுங்கள்
நீ வாட பன்னீரைத்தான் தூவுங்கள்
முத்தம் சிந்தவா கண்ணோடு கண்ணோடு
முத்துக் குளிக்க நெஞ்சோடு நெஞ்சோடு
மொத்தத்தில் உன்னைக்கொடு

பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு
வருக வருக வந்தேன்
வாழ்வால் ருசி கண்டேன்

நான் மௌனங்களில் கதைப்படித்தேன்
நீ செய்கைகளில் மொழி பெயர்ந்தாய்
நாணத்தின் சாயத்தை முத்தமிட்டு முத்தமிட்டு
நீ கருத்தாய்
என் கனவுகளின் உருவங்களை
நீ காற்றில் வந்து படம் பிடித்தாய்
வலைகளின் ஒலிகளை வாலிப தூக்கத்தை
கலைத்து விட்டாய்

உன் மார்பு சுத்தாத குற்றாலமே
உன் பெயரை சொன்னாலும் சங்கீதமே
முத்தம் கொடுப்போம் சொல்லாதே சொல்லாதே
சொல்லி சொல்லியே கொல்லாதே கொல்லாதே
உன் கைகள் இடம் மாறுதே

பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு
வருக வருக வந்தேன்
வாழ்வால் ருசி கண்டேன்

நீ எனக்குள்ளே நான் உனக்குள்ளே
பிரிவேது பெண்ணே உயிரை பரிமாறு
இணையும் பசுவைப்போல் நீ இணைந்தாய்
என் நெஞ்சில் தன்னாலே
நீயும் நானும் நடப்போம் நிலவின் மேலே

படம்: முகவரி (2000)
இசை: தேவா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்

வரிகள் : வைரமுத்து

தாண்டவம் - உயிரின் உயிரே



உயிரின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும் போதும் உறங்கிடாமல் கனவிலே நீ தோன்ற வேண்டும்
காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலாய் நானாகிறேன்
காலம் தாண்டி வாழ வேண்டும் வேறு என்ன கேட்கிறேன்

உயிரின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும் போதும் உறங்கிடாமல் கனவிலே நீ தோன்ற வேண்டும்

சாயங்காலம் சாயும் நேரத்தில் தோழி போல மாறுவேன்
சோர்ந்து நீயும் தூங்கும் நேரத்தில் தாய போல தாங்குவேன்
வேறு பூமி வேறு வானம் தேடியே நாம் போகலாம்
சேர்த்து வைத்த ஆசையாவும் சேர்ந்து நாமங்கு பேசலாம்
அகலாமலே அணுகாமலே இந்த நேசத்தை யார் நெய்தது
அறியாமலே புரியாமலே இரு நெஞ்சுக்குள் மழை தூவுது

உயிரின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும் போதும் உறங்கிடாமல் கனவிலே நீ தோன்ற வேண்டும் 

தண்டவாளம் தள்ளி இருந்தது தூரம் சென்று சேரத்தான்
மேற்கு வானில் நிலவு எழுவது என்னுள் உன்னை தேடத்தான்
ஐந்து வயது பிள்ளை போலே உன்னை நானும் நினைக்கவா
அங்கும் இங்கும் கன்னம் எங்கும் செல்ல முத்தம் பதிக்கவா
நிகழ்காலமும் எதிர்காலமும் இந்த அன்பெனும் வரம் போதுமே
இறந்தாலுமே இறக்காமலே இந்த ஞாபகம் என்றும் வாழுமே

உயிரின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும் போதும் உறங்கிடாமல் கனவிலே நீ தோன்ற வேண்டும்
காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலாய் நானாகிறேன்
காலம் தண்டி வாழ வேண்டும் வேறு என்ன கேட்கிறேன்

படம் : தாண்டம் (2012) 
இசை : பிரகாஷ் குமார் 
பாடியவர்கள் : சைந்தவி, சத்யபிரகாஷ்  
வரிகள் : நா. முத்துக்குமார்

Sunday, October 14, 2012

நான் ரொம்ப ரொம்ப



நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல

நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல

ஃபிரண்ட் எல்லாம் பொறுக்கி புள்ள எச்சக்கல திருட்டு புள்ள
எங்களுக்கு ஊரும் இல்ல பெர்மணெண்டு பெயரும் இல்ல
தட்டி கேட்க ஆளும் இல்ல டாவடிக்க நேரம் இல்ல
சொந்தம்ன்னு யாரும் இல்ல செண்டிமென்டு ஏதும் இல்ல

ராஜா ராஜா நான் ராக்கெட் ராஜா
ஹேய் ராஜா ராஜா பிக் பாக்கெட் ராஜா
நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல

அஞ்சாம் க்ளாஸு படிக்கும் போது ஆட்டைய போட்டவன்
நான் ஆறாம் க்ளாஸு படிக்கும் போது ப்ளேட் போட்டவன்
ஹெட்மாஸ்டர் பைக்கை திருடி எடைக்கு போட்டவன்
நான் செண்ட்ரல் ஜெயிலில் நூறு தடவை டெண்ட்டு போட்டவன்
ஏமாந்தா ஏமாத்து என் வேல பம்மாத்து
சொல்லுறதெல்லாம் சுத்தமான பொய்
வைக்குறதெல்லாம் பாக்கெட்ல கை
பாறாங்கல்லில் கூட நானும் எடுத்துடுவேன் நெய் நெய்

ராஜா ராஜா நான் ராக்கெட் ராஜா
ஹேய் ராஜா ராஜா பிக் பாக்கெட் ராஜா
நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல

கம்பி எண்ணி கம்பி எண்ணி கணக்கு படிச்சவன்
நான் நாலு வயசில் நம்பியார் போல சுட்டவன்
வஞ்சிக்கோட்டை வாலிபனா வாழ நெனச்சவன்
நான் பிஞ்சுலேயே பழுத்தவன்னு பேரு எடுத்தவன்
என் ரூட்டு தனி ரூட்டு என் வேட்டு அடி வேட்டு
சொல்லுறதெல்லாம் சுத்தமான பொய்
வைக்குறதெல்லாம் பாக்கெட்ல கை
பாறாங்கல்லில் கூட நானும் எடுத்துடுவேன் நெய் நெய்

ராஜா ராஜா நான் ராக்கேட் ராஜா
ஹேய் ராஜா ராஜா பிக் பாக்கேட் ராஜா
நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல

படம்: சிறுத்தை (2011)
இசை: வித்யாசாகர்
பாடியவர்: ரஞ்சித்
வரிகள்: நா. முத்துக்குமார்

தாண்டவம் - சிவ தாண்டவம்



தகிட தகிட தகதா
தகிட தகிட தகதா
தகிட தகிட திமி தகிட தகிட திமி
தகிட தகிட திமி தாண்டவம்

சுடலை சாம்பல் அதை உடலில் பூசிக் கொண்டு
கையிலைநாதன் வரும் தாண்டவம்
ஜனனம் தாண்டி வந்து மரணம் வேண்டி வந்து
இறைவனாகி வரும் தாண்டவம்

இரவும் நடுங்கி விட பகலும் ஒடுங்கி விட
சுழன்று சுழன்று வரும் தாண்டவம்
இருவி இருகி ஒரு இரும்பை போல
மனம் திருகி தேடி வரும் தாண்டவம்

ஊழி காற்றடிக்க ஆழி கூத்தடிக்க
அகிலம் நடுங்கிவிடும் தாண்டவம்
பாவம் செய்தவனை கோபம் கொன்று
ஒரு சாபம் தீர்க்க வரும் தாண்டவம்
தர்மம் காக்கும் நடனம்
இது நியாயம் வெல்லும் தருணம்
ரத்தம் பருகும் நடனம்
இதன் முற்றுப்புள்ளி மரணம்

அற்புதத் தாண்டவம்
மனவரன தாண்டவம்
ஆனந்தத் தாண்டவம்
பிரளய தாண்டவம்
சம்ஹாரத் தாண்டவம்

நன்மை வெல்வததற்கு தீமை கொல்வதற்கு
சிவனின் கோபம் இந்த தாண்டவம்
சிவ தாண்டவம்
சிவ தாண்டவம்
சிவ தாண்டவம்
சிவ தாண்டவம்
சிவ தாண்டவம்
சிவ தாண்டவம்
சிவ தாண்டவம் சிவ தாண்டவம்
சிவ தாண்டவம்
சிவ தாண்டவம்
சிவ தாண்டவம்

படம் : தாண்டவம் (2012)
இசை : பிரகாஷ் குமார்
பாடியவர் : பாலசுப்ரமணியம்
வரிகள் : முத்துக்குமார்

Saturday, October 13, 2012

உன் உதட்டோர சிவப்பே



உன் உதட்டோர சிவப்பே
அந்த மருதாணி கடனா கேக்கும் கடனா கேக்கும்
நீ சிரிச்சாலே சில நேரம்
அந்த நிலவு வந்து உளவு பாக்கும் உளவு பாக்கும்

என் செவ்வாழை தண்டே ஏ
என் செவ்வாழை தண்டே சிறுக்காட்டு வண்டே
உன்ன நெனச்சு தான் இசை பாட்டு
கொஞ்சம் நெருங்கி வா இதை கேட்டு

ஏன் மம்முதா அம்புக்கு ஏன் இன்னும் தாமதம்

அடி ஏ அம்மணி வில்லு இல்ல இப்போ கைவசம்

ஹே மல்லுவேட்டி மாமா மனசிருந்தா மார்க்கம் இருக்குது

என்ன பொசுக்குன்னு கவுக்க பொம்பளைக்கு நோக்கம் இருக்குது

என் சேலைக்கு கசங்கி விடும் யோகம் என்னைக்கி

அட என் வேட்டிக்கு அவுந்து விடும் யோகம் இன்னிக்கி

முருகமலை காடுக்குள்ள விறகெடுக்கும் வேளையிலே
தூரத்துல நின்னவளே தூக்கி விட்டாலாகாதா

பட்ட விறகு தூக்கி விட்டா கட்டை விரலு பட்டுபுட்ட
விறகில்லாம தீ புடிக்கும் வெட்கம் கெட்டு போகாதா

நீ தொடுவத தொட்டுக்கோ சொந்தத்துல வரைமுறை இருக்கா

நீ பொம்பளை தானே உனக்கு அது நியாபகம் இருக்கா

உன் நெனப்புத்தான் நெஞ்சுகுள்ள பச்சை குத்துது

உன் கிறுக்குல எனக்கு இந்த பூமி சுத்துது

சிங்கம் புலி கரடி கண்டா சேர்த்தடிக்க கை துடிக்கும்
பொட்டுக்கன்னி உன்ன கண்டா புலி கூட தொடை நடுங்கும்

உம்ம நெனச்சு பூசையிலே வேப்பெண்ணையும் நெய் மணக்கும்
நீ குளிச்ச ஓடையிலே நான் குளிச்ச பூ மணக்கும்

ஹே வெட்கம் கெட்ட பெண்ணே என்னை ஏன் தூக்கி சுமக்குற

என் மனசுக்குள் புகுந்து ஏன் மச்சான் இறங்க மறுக்குற

அடி என் நெஞ்சிலே ஏண்டியம்மா வட்டி வைக்கிற

உன் ஆசைய எதுக்கு இன்னும் பொத்தி வைக்கிற

படம்: பாஞ்சாலங்குறிச்சி (1996)
இசை: தேவா
பாடியவர்கள் : ஹரிஹரன் , அனுராதா ஸ்ரீராம்
வரிகள்: சினேகன்

ஒருவான் இருவான் பலவான்



ஒருவான் இருவான் பலவான்
கேட்பவன் அரவான்
எழுவான் விழுவான் இனத்தை
காப்பவன் அரவான்

ஒருவான் இருவான் பலவான்
கேட்பவன் அரவான்
எழுவான் விழுவான் இனத்தை
காப்பவன் அரவான்

பலவான் பலவான்
பகையை முடிப்பான்
அரவான்
வருவான் ஒரு நாள்
வெற்றியை குடிப்பான் அரவான்

தேர் தருவான் போர்வை தருவான்
கவசகுண்டலங்கள் தருவான்
கடையெழு வள்ளல்கள் எல்லாம்
கொடை மட்டும் தருவான்

தேர் தருவான் போர்வை தருவான்
கவசகுண்டலங்கள் தருவான்
கடையெழு வள்ளல்கள் எல்லாம்
கொடை மட்டும் தருவான்
படை தருவான் கோட்டை கொத்தளங்கள் தருவான்
பெருகும் பட்டணங்கள் தருவான்
உருகும் ஊனை
உருகும் ஊனை
உருகும் ஊனை அவன் தருவான்

அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்டா

பாம்பாகி வந்தவன் அரவான்
மாயன் பெண்ணாகி வந்தவன் அரவான்
போராளி இனத்தவன் அரவான்
தன் பங்காளி மதித்தவன் அரவான்
தன் வில்லை தனக்கே
விடுத்தவன் தன் பெண்ணை தானே கெடுத்தவன்
பொல்லாத பூவாய் பூத்தவன் அரவான்
கல்லாகி கடவுளானவன் அரவான்

ஒரு நாள் அவன் வெற்றியை குடிப்பான் அரவான்

அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்

ஒருவான் இருவான் பலவான்
கேட்பவன் அரவான்
எழுவான் விழுவான்
இனத்தை காப்பவன் அரவான்

பலவான் பலவான்
பகையை முடிப்பான்
அரவான்
வருவான் ஒரு நாள்
வெற்றியை குடிப்பான் அரவான்

அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்டா
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்டா

படம் : அரவான் (2011)
இசை : கார்த்திக்
பாடியவர்கள் : கார்த்திக்
வரிகள் : நா. முத்துக்குமார்

Friday, October 12, 2012

கொஞ்சும் மஞ்சள் பூக்கள்



கொஞ்சும் மஞ்சள் பூக்கள் அழகே உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை அங்கே இங்கே கிள்ளும்
சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்
நிலாவும் மெல்ல கண் மூடும்
கொஞ்சும் மஞ்சள் பூக்கள் அழகே உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை அங்கே இங்கே கிள்ளும்

தீ மூட்டியதே குளிர்க் காற்று
என் வெட்கத்தின் நிறத்தினை மாற்று
உன் ஆசைக்கு எத்தனை வண்ணம்
ஒரு ராத்திரி ஓவியம் தீட்டு

வியர்வையிலே தினம்
பாற்கடல் ஓடிடும் நாளும்
படகுகளா இது பூவுடல்
ஆடிட இவள் மேனியை
என் இதழ் அளந்திடும் பொழுது
ஆனந்த தவம் இது

உன் விரல் ஸ்பரிசத்தில்
மின்னலும் எழுமே
அடடா என்ன சுகமே

கொஞ்சும் மஞ்சள் பூக்கள் அன்பே உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை அங்கே இங்கே கிள்ளும்
சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்
நிலாவும் மெல்ல கண் மூடும்

உன் மேனியில் ஆயிரம் பூக்கள்
நான் வாசனை பார்த்திட வந்தேன்
புல் நுனியினில் பனித்துளியை போலே
உன் உயிருக்குள் நனைந்திட வந்தேன்

மயங்குகிறேன் அதில்
உணர்வுகள் ஓய்ந்தது ஏனோ
வழங்குகிறேன் இவள்
உதடுகள் காய்ந்தது இவள் சேலையில்
பூக்களும் கட்டிலின் கீழே தூங்கிடலானது

உன் வளையோசையில் நடந்தது இரவே
நினைத்தால் என்ன சுகமே

கொஞ்சும் மஞ்சள் பூக்கள் அன்பே உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை அங்கே இங்கே கிள்ளும்
சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்
நிலாவும் மெல்ல கண் மூடும்

கொஞ்சும் மஞ்சள் பூக்கள் அழகே உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை அங்கே இங்கே கிள்ளும்

படம் : உல்லாசம் (1997)
இசை : கார்த்திக் ராஜா
பாடியவர்கள் : ஹரிஹரன், ஹரிணி
வரிகள் : அறிவுமதி

ஊரே ஊரே என்ன பெத்த ஊரே



ஊரே ஊரே என்ன பெத்த ஊரே
ராத்திரி திங்க போறோம் சுடு நெல்லுச் சோறே

ஊரே ஊரே என்ன பெத்த ஊரே
ராத்திரி திங்க போறோம் சுடு நெல்லுச் சோறே
தேரே தேரே கர்ணன் தேரே
காஞ்சா ஊருக்குள்ளே கர்ணராசன் தேரே

ஆடு கோழி வெட்டாம அய்யனார கெஞ்சமா
நூறு கோட்டை நெல்லு இப்போ ஊருக்குள பாருடா

ஆடு கோழி வெட்டாம அய்யனார கெஞ்சமா
நூறு கோட்டை நெல்லு இப்போ ஊருக்குள பாருடா

மூனு மாசம் முழுகாத மொக்கசாமி பொண்டாட்டி
நெல்லுச் சோறா தின்னுப்புட்டு நிறமா புள்ள பெப்பாடா

மக்கட் மனசு குளிர்ந்திருச்சு இந்த வேளை தான்
வெட்கை காலம் போச்சு இனி மாரி காலம் தான்

ஆடி வரான் மாயாண்டி அழுக்கு பூச்சாண்டி
ஓடி வந்தா அவசரத் கோவணத்தை விட்டாண்டி

ஊரே ஊரே என்ன பெத்த ஊரே
ராத்திரி திங்க போறோம் சுடு நெல்லுச் சோறே
தேரே தேரே கர்ணன் தேரே
காஞ்ச ஊருக்குள்ளே கர்ணராசன் தேரே

பாதம் வச்சி பூமி மேல நடந்திட மாட்டோம்
பச்ச புள்ள இருக்கிற வீடு புக மாட்டோம்
வீடு புக மாட்டோம் வீடு புக மாட்டோம்
நாங்க காத்தடிக்கும் திக்குல கண்ணு போட மாட்டோம்
கண்டுக்கிட தடயம் ஒன்னும் வைக்க மாட்டோம்
களவாண்ட வீட்டுக்குள ரத்தம் பாக்க மாட்டோம்
அட கன்னி பொண்ணு தூங்கினாலும் உத்து பாக்க மாட்டோம்

ஊரே ஊரே என்ன பெத்த ஊரே
ராத்திரி திங்க போறோம் சுடு நெல்லுச் சோறே
தேரே தேரே கர்ணன் தேரே
காஞ்சா ஊருக்குள்ளே கர்ணராசன் பேரே

யாரோ யாரோ யாரோ யாரோ யாரோ
கூரைய பிரிச்சுட்டு கொட்டியது யாரோ
யாரோ யாரோ யாரோ யாரோ யாரோ
குறைய தீர்த்தது வீர அய்யனாரோ

கருப்பா
காணிடறாம கனவு குலையாமல்
ஆந்தை கத்தாம அறுவா படாமல்
களவு செழிக்கனும் கருப்பா

கண்ணு சொருகற நேரம் சேர்ந்து களவுக்கு போறோம்
என்ன அங்க நடந்தாலும் எங்க குடும்பங்க பாவம்

ஒரு மயித்துக்கும் இல்ல வயித்துக்கு தானே
இவ்வளவு போரிடுறோம் நாங்க

அட செத்து செத்து வாழும் எங்களோட வாழ்க்க
வாழ்க்க இல்ல வாழ்க்க இல்லையே

குலச் சாமி மறந்தாலும் இந்த பூமி மறக்காது

நாடு சுத்தி வந்தாலும் சொந்த மண்ணில் சாஞ்சா தான்
பொங்க வச்ச பான போல எங்க மனம் ஆகுமே

ஊரே ஊரே என்ன பெத்த ஊரே
உசுரல ரத்ததுல கலந்திட்ட ஊரே
ஊரே ஊரே எங்க பாட்டான் ஊரே
உன்ன விட்டா எங்களுக்கு நாதி இல்லை வேறே

ஊரே ஊரே என்ன பெத்த ஊரே
உசுரல ரத்ததுல கலந்திட்ட ஊரே
ஊரே ஊரே எங்க பாட்டான் ஊரே
உன்ன விட்டா எங்களுக்கு நாதி இல்லை வேறே
உன்ன விட்டா எங்களுக்கு நாதி இல்லை வேறே
உன்ன விட்டா எங்களுக்கு நாதி இல்லை வேறே

உன்ன விட்டா எங்களுக்கு நாதி இல்லை வேறே

படம் : அரவான் (2011)
இசை : கார்த்திக்
பாடியவர்கள் : கிருஷ்ணராஜ், பெரிய கருப்புத்தேவர், ரீட்டா, ப்ரியா, முகேஷ்
வரிகள் : விவேகா

Thursday, October 11, 2012

சொர்க்கம் மதுவிலே சொக்கும்



சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே
மது தரும் சுகம் சுகம் எதில் வரும் நிதம் நிதம்
இன்பம் இரவு தான் எல்லாம் உறவு தான்
இன்பம் இரவு தான் எல்லாம் உறவு தான்

காதல் ஒரு கீதம் அதை கண்டேன் ஓர் இடம்
போனால் அவள் போனால் நான் பார்த்தேன் நூறிடம்
காதல் ஒரு கீதம் அதை கண்டேன் ஓர் இடம்
போனால் அவள் போனால் நான் பார்த்தேன் நூறிடம்
குடிக்கிறேன் அணைக்கிறேன் நினைத்ததை மறக்கிறேன்

சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே
மது தரும் சுகம் சுகம் எதில் வரும் நிதம் நிதம்
இன்பம் இரவு தான் எல்லாம் உறவு தான்

பாலில் பழம் போலே இந்த பாவை கொஞ்சுவாள்
பள்ளி வரச்சொல்லி இந்த தோகை கெஞ்சுவாள்
பாலில் பழம் போலே இந்த பாவை கொஞ்சுவாள்
பள்ளி வரச்சொல்லி இந்த தோகை கெஞ்சுவாள்
மறந்து நான் மயங்கவா இதற்கு நான் இணங்கவா

திராட்சை ரசம் ஊற்றி மனத்தீயை அணைக்கிறேன்
செவ்வாய் இதழ் பெண்ணில் எனை மூழ்கி களிக்கிறேன்
நடந்த நாள் மறக்கவே நடக்கும் நாள் சிறக்கவே
சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே
மது தரும் சுகம் சுகம் எதில் வரும் நிதம் நிதம்
இன்பம் இரவு தான் எல்லாம் உறவு தான்
இன்பம் இரவுதான் எல்லாம் உறவு தான்

படம் : சட்டம் என் கையில் (1978)
இசை : இளையராஜா
பாடியவர் : பாலசுப்ரமணியம்
வரிகள் : கண்ணதாசன்

முகமூடி - குடி வாழ்த்து


நாட்டுல நம்ம வீட்டுல
நாம பாட்டிலுக்குள் மாட்டிக்கிட்டோம் மாப்பிள்ள
காட்டுல நம்ம ரோட்டுல
நாம போதையில சிக்கிக்கிட்டோம் மாப்பிள்ள

ஒரு இன்பம் வந்தா இல்ல துன்பம் வந்தா
இந்த சாராயம் மருந்தாக மாறுது
ஒரு சொந்தம் பெத்தா ஒரு பந்தம் செத்தா
இந்த கூடாரம் கோயிலா ஆகுது

போதை இல்லாத சந்தோஷமா
ராஜா இல்லாத சங்கீதமா

காதல் கல்யாணம் நடந்தா
ஜாலி ஜாலி தான்
பாரில் கொண்டாட்டம்தான்
மோதல் உண்டாகி பிரிஞ்சா
காலி காலி தான்
வீடு திண்டாட்டம் தான்
விடிஞ்சா வாழ்க்கை சோகம்
இத குடிச்சா மரத்துப் போகும்
சுகவாசிக்கும் பரதேசிக்கும்
இதுதாண்டா ரைட்டு தர்பாரு

இங்க வந்தா எல்லாருமே
புத்தன போலாகலாம்
நூறு மில்லி ஊத்திக்கிட்டு
சித்தன போல் பேசலாம்

தூக்கம் இல்லாமப் போனா
குவாட்டரு டாக்டரு தான்
வாட்டரு இல்லாம அடிச்சா தில்லு
ஆட்டோ மீட்டரு தான்
மனுசன் மனசு மோசம்
இத அடிச்சா கலையும் வேசம்
சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும்
இதுதான்டா திருவாரூர் தேரு

படம் : முகமூடி(2012)
இசை :  கே
பாடியவர் : மிஷ்கின்
வரிகள்:மிஷ்கின்

நிலா நிலா நிலா நிலா




நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா

நிலா நிலா போகுதே நில்லாமல் போகுதே
உலா உலா போகுதே ஊர்வலமா போகுதே
காடு மலை மேடு எல்லாம் மறைஞ்சி மறைஞ்சி போகுதே

நிலா நிலா போகுதே நில்லாமல் போகுதே
உலா உலா போகுதே ஊர்வலமா போகுதே
காடு மலை மேடு எல்லாம் மறைஞ்சி மறைஞ்சி போகுதே
இன்ப நிலா போகுதே இடம் மறந்து போகுதே
மணல் விரிந்து போகுதே மயக்கி மயக்கி போகுதே
வான் நிலவை நான் தழுவ தேன் நிலவா மாறுதே

நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா போகுதே
நில்லாமல் போகுதே
காடு மலை மேடு எல்லாம்
மறைஞ்சி மறைஞ்சி போகுதே

மாலை வேளையில் பூக்கும் பூவையே
மனதில் பொக்கிஷத்தை வைக்கும் பேழையே

மெளன கூட்டினை திறக்கும் சாவியே
கனவை உருட்டி விடும் கள்ளச் சோழியே
மஞ்சம் வந்த மதியே
மஞ்சம் வந்த மதியே என்னுயிரின் விதியே
விரகத்தை கூட்டும் விழிகளின் சதியே
சிறகுள்ள சிலையே சிற்றின்ப நதியே

நிலா நிலா மோக நிலா
மஞ்சள் நிலா போகுதே
மோக நிலா போகுதே
காடு மலை மேடு எல்லாம்
மறைஞ்சி மறைஞ்சி போகுதே

மூன்று ஜாமமும் மயங்கும் வேளையில்
மருகி மருகி நிலா என்ன பேசுதோ

காதல் கண்ணிலே வெட்கம் நெஞ்சிலே
இருந்தும் பார்வையிலே ஜாடை பேசுதோ

மங்கை உடல் நிலாவா
மங்கை உடல் நிலாவாய் மௌனத்தில் தேய

பொங்கி வரும் ஒலியாய் அங்கம் அலை பாய

முழு மதியோ காய மூச்சுக் குழல் தீய

நிலா நிலா போகுதே நில்லாமல் போகுதே

உலா உலா போகுதே ஊர்வலமா போகுதே

காடு மலை மேடு எல்லாம் மறைஞ்சி மறைஞ்சி போகுதே

இன்ப நிலா போகுதே இடம் மறந்து போகுதே
மணல் விரிந்து போகுதே மயக்கி மயக்கி போகுதே
வான் நிலவ நான் தழுவ தேன் நிலவா மாறுதே

நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா

படம் : அரவான் (2011)
இசை : கார்த்திக்
பாடியவர் : விஜய் பிரகாஷ், ஹரிணி
வரிகள்: நா. முத்துக்குமார்

Wednesday, October 10, 2012

சொர்க்கம் என்பது நமக்கு



சொர்க்கம் என்பது நமக்கு
சொர்க்கம் என்பது நமக்கு
சுத்தம் உள்ள வீடு தான்
சுத்தம் உள்ள வீடு தான்
சொர்க்கம் என்பது நமக்கு
சுத்தம் உள்ள வீடு தான்

சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்
சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பைமேடு தான்

சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்
சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பைமேடு தான்

உலாவும் நிலாவில் வெள்ளை அடிக்கலாம்
எங்கேயும் எப்போதும் சுத்தப்படுத்தலாம்

சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்
சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பைமேடு தான்

குளிக்கும் அறைக்குள் கெட்ட கெட்ட வார்த்தைகள்
படிக்கும் மனத்தில் என்ன ஆசைகள்
இதற்கா இதற்கா கல்வி கற்கும் சாலைகள்
எதற்கா எதற்கா இந்த வேலைகள்
மீதியாக வந்த பக்கம் போதை ஏற மாத்திரை

சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்
சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பைமேடு தான்
உலாவும் நிலாவில் வெள்ளை அடிக்கலாம்
எங்கேயும் எப்போதும் சுத்தப்படுத்தலாம்

படிக்கும் படிப்பு நல்ல பண்பை ஊட்டலாம்
ஒழுங்காய் நடக்கும் பாதை காட்டலாம்
உனக்கும் எனக்கும் ஆடு மாடு தேவல
உனை போல் எனை போல் கெட்டு போகல
நல்லவங்க கூட இப்போ கெட்ட வார்த்தை ஆனது

சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்
சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பைமேடு தான்

சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்
சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பைமேடு தான்
உலாவும் நிலாவில் வெள்ளை அடிக்கலாம்
எங்கேயும் எப்போதும் சுத்தப்படுத்தலாம்

படம் : நம்மவர் (1994)
இசை : மகேஷ்
பாடியவர்கள் : ஸ்ரீநிவாஸ், ஸ்வர்ணலதா
வரிகள் : வாலி

நாகமலை சாய்ஞ்சுடுச்சே



நாகமலை சாய்ஞ்சுடுச்சே நட்டச்செடி காய்ஞ்சுடுச்சே
வாழும் விதி பாய்ஞ்சுடுச்சே
ஒத்த கல்லு சொன்ன சொல்லு
உன் உசுரை வாங்கிடுச்சே
விதியே உன் விதியே

என் சூரியன் சூரியன் சட்டுனு சட்டுனு இருட்டாய் போனது ஏனோ
என் சந்திரன் சந்திரன் பட்டுனு பட்டுனு உடைஞ்சே போனது ஏனோ
விதி கண்ணீரு சிந்தாம அணையாத ஜோதி
இந்த கதைய எழுதிய விதியை பார்த்து கேட்டானொரு கேள்வி
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்

ஏய் வானம் கேட்கல பூமி கேட்கல வெயிலும் கேட்கல மழையும் கேட்கல
காத்தும் கேட்கல கடவுள் கேட்கல மனுஷன் கேட்குறானே
மனுஷன் கேட்குறானே

அந்த பறவை கேட்கல மிருகம் கேட்கல
பாம்பு கேட்கல பல்லி கேட்கல
நாயும் கேட்கல பேயும் கேட்கல மனுஷன் கேட்குறானே

அவன் நாக வம்ச புள்ள  இங்க யாரும் ஈடு இல்லை
தன் தலையைப் பார்த்துத் தானே அவன் திருப்புறானே வில்லை

அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்டா

இந்த மரணப்பாதையின் தூரம் ரொம்ப தூரமோ
வரும் மரணம் பார்த்து வரும் வலிகள் ரொம்ப பாரமோ

இந்த உயிரும் பறந்து ஒரு புகையை போல போகுமோ
இந்த உயிரும் போன பின்பு மூளும் பகையும் போகுமோ
அன்பில்லாத உலகம் பண்பில்லாத நரகம்
இந்த தேகம் தாகம் எல்லாம் இனிமேல் தீயில் வேகும் விறகு
அந்த நோகும் கேட்கல தீயும் கேட்கல
மாடன் கேட்கல காடன் கேட்கல
ஈசன் கேட்கல எமனும் கேட்கல
மனுஷன் கேட்குறானே
உசுர கேட்குறானே என் உசுர கேட்குறானே

அவன் மரணம் சொல்லும் கதை மண்ணில் வீழ்ந்த விதை
என்றும் வாழ்பவனை என்ன செய்யும் சிதை
வெயிலாய் நிலவாய் காற்றாய் வாழ்வானே
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்

அவன் தான்

அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்
அவன் தான் அரவான் அவன் தான் அரவான்

அரவான் அரவான் அரவான் அரவான்
அரவான்  அரவான்  அரவான்

நந்தகுமாரா
நவநீத கண்ணா மாயன் முகுந்தா

நந்தகுமாரனை பார்த்தேனோ எங்கள் நந்தகுமாரனை பார்த்தேனோ
நந்தகுமாரனை பார்த்தேனோ எங்கள் நந்தகுமாரனை பார்த்தேனோ
கார்மேக வண்ணன் கருநீல கண்ணன்
கார்மேக வண்ணன் கருநீல கண்ணன்
எங்கள் பெருங்காதல் தீர்க்கின்ற மன்னன் மன்னன் மன்னன்
நந்தகுமாரனை பார்த்தேனோ பார்த்தேனோ பார்த்தேனோ
பார்த்தேனோ

குளிர் கூதல் வரும் போது அனல்தானவன்
தளிர் கைகள் தொடும் போது தனப்பானவன்
இருகொங்கை அனல் மேட்டில் புனல்தானவன்
இருகொங்கை அனல் மேட்டில் புனல்தானவன்
மிருதங்கம் இடை சேரும் குரல்தானவன்

நந்தகுமாரனை பார்த்தேனோ எங்கள் நந்தகுமாரனை பார்த்தேனோ
கார்மேக வண்ணன் கருநீல கண்ணன்
கார்மேக வண்ணன் கருநீல கண்ணன்
எங்கள் பெருங்காதல் தீர்க்கின்ற மன்னன் மன்னன் மன்னன்
நந்தகுமாரனை பார்த்தேனோ பார்த்தேனோ பார்த்தேனோ
பார்த்தேனோ

படம் : அரவான் (2011)
இசை : கார்த்திக்
பாடியவர் : கோபால், சீர்காழி G. சிவசிதம்பரம், சுபிக்ஷா
வரிகள்: நா. முத்துக்குமார்

Tuesday, October 9, 2012

பூசாரி பட்டி களவு



பூசாரி பட்டி களவு
கோடாங்கி பட்டி களவு
கொலைகாரன் பட்டி  களவு
கோடாலி பட்டி களவு
பேய்க்காரன் பட்டி களவு
காநாடு காத்தான் களவு
நாட்டமை பட்டி

என் சாமி பேரு கருப்பு
எம்புட்டு பேரு நெருப்பு
கன்னக்கோல் எங்க துருப்பு
களவுக்கு நாங்க பொறுப்பு
கவுதாரி போல பதுங்கி
வவ்வால போல தப்பிச்சி
இங்கிட்டு எல்லாம் மறைஞ்சி
காத்தடிச்சு கெளம்புடா

சாராயத்த ஊத்தி தாரேன்
ரத்த துளி நானும் தாரேன்
போற வழி காட்டு வழி
பாதை எல்லாம் கூட வாடி
ஜக்கம்மா ஜக்கம்மா

மலையா தாண்டி போகும் போதும்
மறுவ தாண்டி போகும் போதும்
மனசுக்குள்ள ரொம்ப தாடி

களவு களவு களவு களவு களவு களவு
களவு களவு களவு களவு களவு களவு

இம்புட்டு களவாணி பயலுகள பிடிங்களேன்
ஈன எடுவட்ட பயலுகள புடிங்க புடிங்க புடிங்க

போட்ட களவுக்கும்
பேட்டை களவுக்கும்
உடும்ப பிடிச்சாச்சு

ஆட்டுக் களவுக்கும்
மாட்டுக் களவுக்கும்
சலங்கைய அவுத்தாச்சு

கடவுளும் நம்ம போல களவுக்கு வந்தவன்
கன்னதாசாச்சு
களவுல மாட்டிகிட்டு கழுத்த இழந்தவன்
கம்புக்கு பேராச்சு

கொண்டி கம்போடு தயாளு நம்மோடு
கடத்து ராசா களவுக்கு வா

டேய்
எடு எடு எடு முந்திக்கோ
புடி புடி புடி கொண்டி கம்பு
தொடு தொடு கண்ணா வாசல் தோடு
வேட்டைக்கு நீ  கெளம்பு

இது களவுக்கு மந்திரமே

என் சாமி பேரு கருப்பு
எம்புட்டு பேரு நெருப்பு
கன்னக்கோல் எங்க துருப்பு
களவுக்கு நாங்க
கவுதாரி போல பதுங்கு
வவ்வால போல தப்பிச்சி
இங்கிட்டு எல்லாம் மறைஞ்சி
காத்தடிச்சு கெளம்புடா

படம் : அரவான் (2012)
இசை : கார்த்திக்
பாடியவர் : மனோ, பசுபதி, கோட்டைச்சாமி, ராகுல் நம்பியார், கார்த்திக்கேயன், விஜய் நரேன், மாலதி, ஹரிஷ்
வரிகள்: நா. முத்துக்குமார்

Monday, October 8, 2012

உன்னை கொல்ல போறேன்



உன்னை கொல்ல போறேன் உன்னை கொல்ல போறேன்
முத்தம் கொடுத்தே நான் உன்னை கொல்ல போறேன்
முந்தானையில மூடி ஆச வார்த்தை பேசி
முத்தம் கொடுத்தே நான் உன்னை கொல்ல போறேன்
சூரியன் பார்வை சந்திரனார் மேல விழுவது போல
சூரியன் பார்வை சந்திரனார் மேல விழுவது போல
நீயும் நானும் பார்த்த போதும்
நீயும் நானும் பார்த்த போதும் நீயும் நானும் பார்த்த போதும்
நீயும் நானும் பார்த்த போதும் பத்து புள்ள பொறக்கும்

உன்னை கொல்ல போறேன் உன்னை கொல்ல போறேன்
முத்தம் கொடுத்தே நான் உன்னை கொல்ல போறேன்
முந்தானையில மூடி ஆச வார்த்தை பேசி
முத்தம் கொடுத்தே நான் உன்னை கொல்ல போறேன்

அன்னந்தண்ணி வேணா வேணா
உன்னை எண்ணி வாழ்ந்தால் போதும்
உன் கூட இந்த ஜென்மம் போதும்

பொன்னும் மண்ணும் வேணா வேணா
கொலைக்காரி பேச்சி போதும்
செத்தாலும் கண்கள் உன்னைத் தேடும்

கடல் பாஞ்சு ஊரும் நாடும் மூழ்கும் போது
மூழ்காது மாமன் பாசம் தான்

விதி வாளை வீசி என்ன சாய்க்கும் போதும்
சாய்க்காது இந்த நேசம் தான்

யாரும் இல்லா காட்டுக்குள்ளே

யாரும் இல்லா காட்டுக்குள்ளே

யாரும் இல்லா காட்டுக்குள்ளே
உன்ன என்ன விட்டால் போதும்

நீயும் நானும் பார்த்த போதும்
பத்து புள்ள பொறக்கும் பேச்சி

உன்னை கொல்ல போறேன்

உன்னை கொல்ல போறேன்

உன்னை கொல்ல போறேன் உன்னை கொல்ல போறேன்
முத்தம் கொடுத்தே நான் உன்னை கொல்ல போறேன்

சூரியனார் பார்வை சந்திரனார் மேல விழுவது போல
சூரியனார் பார்வை சந்திரனார் மேல விழுவது போல

நீயும் நானும் பார்த்த போதும்
நீயும் நானும் பார்த்த போதும்

நீயும் நானும் பார்த்த போதும்

பத்து புள்ள பொறக்கும்

படம் : அரவான் (2011)
இசை : கார்த்திக்
பாடியவர்கள் : பவதாரிணி, MLR கார்த்திகேயன்
வரிகள்: நா. முத்துக்குமார்

கருப்பான கையாலே என்ன புடுச்சான்



கருப்பான கையாலே என்ன புடுச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா

கருப்பான கையாலே என்ன புடுச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய் புடுச்சு ஆட்டுதம்மா
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
அவன் மீச முடிய செஞ்சுக்குவேன் மோதிரமா

செவப்பாக இருக்காளே கோவப்பழமா
கலரு இந்த கலரு என்ன இழுக்குதம்மா
அருகம் புல்லு ஆட்ட இப்போ மேயுதம்மா
பார்வையால ஆயுள்ரேகை தேயுதம்மா
இவ காதல் இப்போ ஜோலிய தான் காட்டுதம்மா

கருப்பான கையாலே என்ன புடுச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா

வெள்ளிக்கிழமை பத்தரை பணிரெண்டு உன்னை பாத்தேனே
அந்த ராகு கால நேரம் எனக்கு நல்ல நேரமே

தண்ணியால எனக்கு ஒண்ணும் கண்டமில்லையே
ஒரு கன்னியால கண்டமின்னு தெரியவில்லையே

ஆத்துக்குள்ள மீன் பிடிக்க நீச்சல் தெரியணும்
காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க பாய்ச்சல் புரியணும் ஐயா

செவப்பாக
ஆஹா
இருப்பாளே
ஆமா
செவப்பாக

செவப்பாக இருக்காளே கோவப்பழமா
கலரு இந்த கலரு என்ன இழுக்குதம்மா

ஓ உருக்கி வச்ச இரும்பு போல உதடு ஒனக்கு
அட நெருங்கும் போது கரண்டு போல ஷாக்கு எனக்கு

ஏ வெட்டும் புலி தீப்பெட்டி போல் கண்ணு உனக்கு
நீ பாக்கும் போது பத்திக்கிச்சு மனசு எனக்கு

பூமியிலே எத்தனையோ பூவு இருக்கு
உன் பூப்போட்ட பாவாடையில் எனக்கு கிறுக்கு

கரு கரு கருப்பான கையாலே என்ன புடுச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய் புடுச்சு ஆட்டுதம்மா
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா

இவ காதல் இப்போ ஜோலிய தான் காட்டுதம்மா

கருப்பான கையாலே என்ன புடுச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா பூக்குதம்மா

படம் : தாமிரபரணி (2006)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள் : ரஞ்சித், ரோசிணி
வரிகள்: நா. முத்துக்குமார்

Sunday, October 7, 2012

கருத்த மச்சான் கஞ்சத்தனம்



கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ யப்பப்போ பிப்பீபி டும் டும் டும் டும் டும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ யப்பப்போ பிப்பீபி டும் டும் டும் டும் டும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்

பூட்டி வச்ச குதிரை ஒன்னு புட்டு கிச்சு மாமா
இப்ப புடிச்சு அத அடக்கி வைக்க கிட்ட வரலாமா
தோட்டக்கிளி கூட்டுக்குள்ளே மாட்டிக்கிச்சு மாமா
அந்த பூட்ட ஒரு சாவி வச்சு பூட்ட தொற மாமா
பஞ்சாங்கம் நீ பாரு பந்தக்காலும் நீ போடு
உன் மார்பில் சாயாம தூங்காத கண்ணு
என்னை தான் புடிச்சு மெல்ல தான் அணைச்சு
முத்தம் தான் நித்தம் தான் வச்சு தான் கொஞ்சனும் கொஞ்சனும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ யப்பப்போ பிப்பீபி டும் டும் டும் டும் டும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்

முளைச்சு இங்கே மூணு இலை விட்டவளும் நானே
என்ன கருக வைச்சு பாக்கிறியே காஞ்ச நிலம் போல
நேத்து இங்கே சமஞ்சதெல்லாம் புள்ளக்குட்டியோட
அந்த நெனப்பு என்ன வாட்டுதய்யா சுட்ட சட்டி போல
எப்போதும் உன் நேசம் மாறாது என் பாசம்
என் சேலை மாராப்பு நீ தானே ராசா
என்னை தான் புடிச்சு மெல்ல தான் அணைச்சு
முத்தம் தான் நித்தம் தான் வச்சு தான் கொஞ்சனும் கொஞ்சனும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ யப்பப்போ பிப்பீபி டும் டும் டும் டும் டும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்

படம் : புது நெல்லு புது நாத்து (1991)
இசை : இளையராஜா
பாடியவர் : ஜானகி
வரிகள்: முத்துலிங்கம்

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு



கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும் என்னை மயக்கும் டவுசண்ட் வாட்ஸ் பவரு
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு

டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா டண்
டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா டண்

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும் என்னை மயக்கும் டவுசண்ட் வாட்ஸ் பவரு
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
சாமி கருப்பு தான் சாமி சிலையும் கருப்பு தான்
யானை கருப்பு தான் கூவும் குயிலும் கருப்பு தான்
என்னை ஆசைப்பட்டு கொஞ்சும் போது குத்துற மீசை கருப்பு தான்
அசத்தும் கருப்பு தான்

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும் என்னை மயக்கும் டவுசண்ட் வாட்ஸ் பவரு
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு

வெண்நிலவை உலகம் பாக்க வச்ச இரவு கருப்பு தான்
வேர்வை சிந்தி உழைக்கும் எங்க விவசாயி கருப்பு தான்
மண்ணுக்குள்ளே இருக்குறப்போ வைரம் கூட கருப்பு தான்
மதுரை வீரன் கையிலிருக்கும் வீச்சரிவா கருப்பு தான்
பூமியில முதன் முதலா பொறந்த மனுஷன் கருப்பு தான்
மக்கள் பஞ்சம் தீர்க்கும் அந்த மழை மேகம் கருப்பு தான்
உன்னை என்னை ரசிக்க வைச்ச
உன்னை என்னை ரசிக்க வைச்ச கண்ணு முழி கருப்பு தான்
கற்பு சொல்லி வந்தாள் அந்த கண்ணகியும் கருப்பு தான்
தாய் வயிற்றில் நாமிருந்த
தாய் வயிற்றில் நாமிருந்த கருவறையும் கருப்பு தான்
மனமும் கருப்பு தான்
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும் என்னை மயக்கும் டவுசண்ட் வாட்ஸ் பவரு
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு

உன்னை கண்ட நாள் முதலா வச்ச பொட்டும் கருப்பு தான்
ரெட்டை ஜடை பின்னலலிலே கட்டும் ரிப்பன் கருப்பு தான்
பூக்கடையில் தேடினேன் பூவில் இல்லை கருப்பு தான்
அன்று முதல் எனக்குத் தான் பூக்கள் மீது வெறுப்பு தான்
பாவாடை கட்டி கட்டி பதிஞ்ச தடம் கருப்பு தான்
முத்தம் கேட்டு காத்திருக்கும் அந்த இடம் உனக்கு தான்
உன்னை பொத்தி வச்சிருக்கும்
உன்னை பொத்தி வச்சிருக்கும் நெஞ்சுக்குழி கருப்பு தான்
ஊரரிய பெத்துக்கணும் புள்ளை பத்து கருப்பு தான்
நம்மூரு சூப்பர் ஸ்டாரு
நம்மூரு சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்தும் கருப்பு தான்
அழகு கருப்பு தான்

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
அவன் கண்ணு ரெண்டும் என்னை மயக்கும் டவுசண்ட் வாட்ஸ் பவரு
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
சாமி கருப்பு தான் சாமி சிலையும் கருப்பு தான்
யானை கருப்பு தான் கூவும் குயிலும் கருப்பு தான்
என்னை ஆசைபட்டு கொஞ்சும் போது குத்துற மீசை கருப்பு தான்
அசத்தும் கருப்பு தான்

படம் : வெற்றிக்கொடி கட்டு (2000)
இசை : தேவா
பாடியவர் : அனுராதா ஸ்ரீராம்
வரிகள்: பா. விஜய்

Saturday, October 6, 2012

அன்பை சுமந்து சுமந்து




அன்பை சுமந்து சுமந்து
அல்லும் பகலும் நினைந்து
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா

அன்பை சுமந்து சுமந்து
அல்லும் பகலும் நினைந்து
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா
என்னை தவிக்க விடலாமா

வான் மழையில் தான் நனைந்தால்
பால் நிலவும் கரைந்திடுமா
தீயினிலே நீயிருந்தால்
நிலவொளி தான் சுகம் தருமா
மரக்கிளையில் ஒரு குருவி கூடுக்கட்டி வாழ்ந்ததே
அந்தரத்தில் ஆடவிட்டு ஆலமரம் சாய்ந்ததே
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா
என்னை தவிக்க விடலாமா

நீ அரைச்ச சந்தனமே
வாசனை தான் மாறலியே
நேசமெனும் கோட்டையிலே
காவல் இன்னும் தீறலையே
பேசாமல் போனதென்ன
பாசப்புறா விண்ணிலே
வீசாமல் வீசுகின்ற
பாசப்புயல் மண்ணிலே
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா

அன்பை சுமந்து சுமந்து
அல்லும் பகலும் நினைந்து
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா
என்னை தவிக்க விடலாமா

அன்பை சுமந்து சுமந்து

படம் :பொன்னுமணி (1993)
இசை : இளையராஜா
பாடியவர் : SP பாலசுப்ரமணியம்
வரிகள்: RV உதயகுமார்

கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்




கருப்பு நிலா கருப்பு நிலா

கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்
துளி துளியா கண்ணீர் விடுவது ஏன்

கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்
துளி துளியா கண்ணீர் விடுவது ஏன்

சின்ன மானே மாங்குயிலே
உன் மனசுல என்ன குறை
பெத்த ஆத்தா போல் இருப்பேன்
இந்த பூமி வாழும் வரை
எட்டு திசையாவும்
கட்டி அரசாள வந்த ராசா நீதானே

கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்
துளி துளியா கண்ணீர் விடுவது ஏன்

பத்து மாசம் மடி ஏந்தி
பெத்தெடுத்த மகராசி
பச்சப்புள்ள உன்னை விட்டு
போனத எண்ணி அழுதாயா
மாமன் வந்து எனை காக்க
நானும் வந்து உனை காக்க
நாம் விரும்பும் இன்பம் எல்லாம்
நாளை வரும் நமக்காக
காலம் உள்ள காலம்
வாழும் இந்த பாசம்
பூ விழி இமை மூடியே
சின்ன பூவே கண்ணுறங்கு

கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்
துளி துளியா கண்ணீர் விடுவது ஏன்

வண்ண வண்ண முகம் காட்டி
வானவில்லின் நிறம் காட்டி
சின்ன சின்ன மழலை பேசி
சித்திரம் போல் மகனே வா
செம்பருத்தி மலர் போலே
சொக்க வல்லி மணி போலே
கன்னம் இரண்டும் மின்ன மின்ன
கண்மணியே மடி மேல் வா
பாட்டு தமிழ் பாட்டு பாட அதை கேட்டு
ஆடிடும் விளையாடிடும் தங்க தேரே நீ தானே

கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்
துளி துளியா கண்ணீர் விடுவது ஏன்

கருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்
துளி துளியா கண்ணீர் விடுவது ஏன்

என் மானே மாங்குயிலே
உன் மனசுல என்ன குறை
பெத்த ஆத்தா போல் இருப்பேன்
இந்த பூமி வாழும் வரை
எட்டு திசையாவும்
கட்டி அரசாள வந்த ராசா நீதானே

படம் :என் ஆசை மச்சான் (1994)
இசை : தேவா
பாடியவர் : சித்ரா
வரிகள்: வாலி

Friday, October 5, 2012

நெஞ்சுக்குள்ளே இன்னாருனு



நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி

நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா

நேசப்பட்டு பட்டு நான் இளைத்தேனே
ஏட்டுக்கல்வி கேட்டு நான் சலித்தேனே

தூக்கம் கெட்டு கெட்டு
துடிக்கும் முல்லை மொட்டு
தேக்கு மர தேகம் தொட்டு
தேடி வந்து தாளம் தட்டு

என் தாளம் மாறாதய்யா
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் சிந்தாமணி

நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் சிந்தாமணி

நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா

காஞ்சிப்பட்டு ஒண்ணு நான் கொடுப்பேனே
காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே

மாமன் உன்னை கண்டு
ஏங்கும் அல்லி சண்டு
தோளில் என்னை அள்ளிக்கொண்டு
தூங்க வைப்பாய் அன்பே என்று

என் கண்ணில் நீ தானம்மா
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி

நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி

நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா

நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா

படம் : பொன்னுமணி (1993)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : SP பாலசுப்ரமணியம், ஜானகி
வரிகள்: RV உதயகுமார்

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே



முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்ளை தைக்காதே

என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி
என்னாளுமே என் பாட்டுக்கு நீ முதல் வரி

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்ளைத் தைக்காதே

அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா நீ
உருது கவிஞன் உமர்கையாவின் கவிதையா

ஏய் உன்னுடைய நெற்றி உன்னை பற்றி கூறுதே
உள்ளிருக்கும் பொட்டு உந்தன் குட்டு சொல்லுதே
என்னுடய பார்வை கழுகு பார்வை தெரிஞ்சிக்கோ
எனக்கு இருக்கும் சக்தி பராசக்தி புரிஞ்சிக்கோ
கால் கொலுசு தான் கலகலக்குது
கையின் வளையல் காதுக்குள்ளே கானம் பாட

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்ளைத் தைக்காதே

போட்டிருக்கும் கோஷா வேசம் பேஷா பொருந்துதே
பெண்ணழகு மொத்தம் காண சித்தம் விரும்புதே
வெண்ணிலவில் வேகம் ஓடும் மேகம் விலகுமா
வண்ண உடல் யாவும் காணும் யோகம் வாய்க்குமா
கொஞ்சம் கொழுப்பு கொஞ்சம் திமிரு
எனக்கும் இருக்கு உனக்கு மேலே அன்பு தோழி

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில் முள்ளை தைக்காதே

படம் : தொட்டால் பூ மலரும் (2007)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள் : ஹரிச்சரண், யுவன் சங்கர் ராஜா
வரிகள் : வாலி

Thursday, October 4, 2012

காட்டு செடிக்கு காவல் கிடைச்சாச்சே



காட்டு செடிக்கு காவல் கிடைச்சாச்சே
காட்டுக்குள பாடம் படிச்சாச்சே
ரொம்ப பழைய உலகம்
இப்ப புதுசா தெரியுதே
அடி ஆத்தி இந்த ரத்ததிற்கு பேரென்ன
அடி ஆத்தி இது அன்பு தானே வேரென்ன


காட்டு செடிக்கு காவல் கிடைச்சாச்சே
காட்டுக்குள பாடம் படிச்சாச்சே


பருத்தி பஞ்ச போல மனசு
பச்ச தண்ணி போல வயசு
பாசம் தவிர ஏதும் தெரியாதே
பொய்கள் இல்லா வேறு உலகம்
போட்டியின்றி நெஞ்சம் பழகும்
வன்முறைக்கு வேலை கிடையாதே
உப்பு மூட்டை ஏறிக்கொண்டு
ஊர சுத்தி பார்க்கும் போது
தப்புத்தண்டா ஏதும் இன்றி
பயணம் தொடருதே
அடி ஆத்தி மனம் துள்ளி துள்ளி குதிக்குதே
சுதி ஏத்தி தினம் காத்து போல பறக்குதே

பள்ளிக்கூட பாடம் நமக்கு
சொல்லிடாத வாழ்க்கை இருக்கு
அந்த பாடம் இங்கே நடக்கிறதே
அன்பு ஒன்றே சாமி கணக்கு
அதுக்கு ஈடு என்ன இருக்கு
கொடுத்து வாங்கும் மனிதம் ஜெயிக்கிறதே
ஒத்த பருக்கை யானபோதும்
பகுத்து உண்ணும் நெஞ்சம் தான்
காதல் இன்றி காதலோடு
மகிழும் மனசுதான்
அடி ஆத்தி ரெண்டும் வெட்கப்பட்டு சிரிக்கிறதே
சுகம் ஏத்தி மனம் எல்லை தாண்டி பறக்குதே


காட்டு செடிக்கு காவல் கிடைச்சாச்சே
காட்டுக்குள பாடம் படிச்சாச்சே



படம்: பதினாறு (2011)
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: கார்த்திக் ராஜா
வரிகள்: சினேகன்

நங்கை நிலாவின் தங்கை



வள்ளியே சக்கர வள்ளியே
மல்லியே சந்தன மல்லியே
பள்ளியே பங்கண பள்ளியே

நங்கை நிலாவின் தங்கை
மங்கை நீ தானே செங்காய்
பாவை என் தோழி ஆவாய்
பூவாய் நிற்காதே தீவாய்

மண்டாகினி மாங்கனனி
சிந்தாமணி வா வா அம்சவேணி
நீ பெளர்ணமி வா ரதி நீ
ரூனாலினி நீ என் சொப்பராணி

நங்கை நிலாவின் தங்கை
மங்கை நீ தானே செங்காய்
பாவை என் தோழி ஆவாய்
பூவாய் நிற்காதே தீவாய்

உன்னை பார்த்ததும் ஊரை விட்டு ஆங்கிலம்
ஓடி போனதென்ன
சீலைட் செம்மொழி செந்தமிழ் தான் என் மொழி
என்றே ஆனதென்ன

முன்னாலே நான் ஜான்ஹாரி
உன்னாலே இப்போ முத்துமாரி
முன்னாலே நான் ஜான்ஹாரி
உன்னாலே இப்போ முத்துமாரி
உன்ன நான் உப்பு கண்டமா
தொட்டுக்க உப்பு குடுமா
உன்னால டம்மா துண்டம்மா உடைஞ்சேன்

நங்கை நிலாவின் தங்கை
மங்கை நீ தானே செங்காய்
பாவை என் தோழி ஆவாய்
பூவாய் நிற்காதே தீவாய்

சோழன் புத்திரி சுற்றும் விழிகள் கத்திரி
வெயில் போல காய
கம்பன் பிள்ளை தான் காதல் உள்ளம் வெள்ளை தான்
நாளும் வெந்து சாய

கண்ணம்மா நாம் ஒட்டலாமா
எங்கம்மா உன் அத்தைதாம்மா
கண்ணம்மா நாம் ஒட்டலாமா
எங்கம்மா உன் அத்தைதாம்மா

வள்ளியே சக்கர வள்ளியே
மல்லியே சந்தன மல்லியே
பள்ளியே பங்கண பள்ளியே
உன்னைத்தான்

நங்கை நிலாவின் தங்கை
மங்கை நீ தானே செங்காய்
பாவை என் தோழி ஆவாய்
பூவாய் நிற்காதே தீவாய்

மண்டாகினி மாங்கனனி
சிந்தாமணி வா வா அம்சவேணி
நீ பெளர்ணமி மா ரதி நீ
மெர்னாலினி யு மை சொப்பராணி

படம் : எங்கேயும் காதல் (2011) 
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர் : ரிச்சர்ட், ராகுல் நம்பியார், நவீன் மாதவ்
வரிகள் : வாலி

Wednesday, October 3, 2012

யார் சொல்லி காதல் வருவது



யார் சொல்லி காதல் வருவது
யார் சொல்லி காதல் போவது
யாருக்கு அடிமை இந்த காதல்
ஏன் இந்த காலம் நகருது
ஏன் இந்த காதல் தகருது
ஏன் இந்த மாறுப்பட்ட தேடல்

இதயங்கள் இழையும் தருணம் தெரிந்தால் சொல்வாய்
இமைமூடி இருந்தாலே வெளிச்சம் வருமா சொல்வாய்
பூமி முழுக்க காதல் இருக்க எங்கு ஓடி ஒளிகிறாய்
பூமி தாண்ட வழியே இல்லை வா
காதல் இங்கே தவறு என்றால்
கடவுள் கூட தவறுதான்
காதல் இன்றி கடவுள் இல்லை வா

உன்னை நீ ஏன் வதைக்கிறாய் காரணங்கள் தெரியாமல்
காதல் தானே மீண்டும் உன்னை மீட்டு எடுக்கும்
என்னை நீ ஏன் வெறுக்கிறாய் என் நிலமை புரியாமல்
காதல் உன்னை மௌனமாக அழுகவைக்கும்
தேதி போல் காதலை நீயும் கிழித்து விட முடியாதே
ஆகாயத்தை உள்ளங்கையில் மறைத்து வைக்க முடியாதே
காதலுக்கு மாற்று எதுவும் இல்லையே

ஆடை போல கழட்டி போட முடியவில்லை உன்னை நான்
உயிரை போல எனக்குள் உள்ளாய் வா
என்னை மீறி உன்னை எதுவும் செய்திடாது காதல் தான்
காதலைத்தான் நம்புகின்றேன் நான்

இதயத்தில் நீ காதலை பூட்டி வைக்க முடியாதே
சாவி எனது கரத்தில் இருக்கு புரிந்து கொள்வாய்
வாய் வழி நீ என்னை தான் வேண்டாம் என்று சொன்னாலும்
உன்னை ஒரு நாள் உந்தன் மனமே கொன்று விடுமே
நீயும் நானும் சேர்ந்தே செய்தோம் காதல் என்னும் சிற்பத்தை
சிற்பம் வேண்டாம் என்றே நீயும் தொடங்கினாய் யுத்தத்தை
இது என்ன நியாயம் நீ சொல்லடி
இன்னும் நூறு தலைமுறை இந்த மண்ணில் வாழுமே
அன்றும் இந்த காதல் இருக்கும் வா
உயிர்கள் ஜனித்த நொடியில் இருந்து
காதல் இங்கே வாழுதே
காதல் இன்றி உயிர்கள் ஏது வா

யார் சொல்லி காதல் வருவது
யார் சொல்லி காதல் போவது
யாருக்கு அடிமை இந்த காதல்
ஏன் இந்த காலம் நகருது
ஏன் இந்த காதல் தகருது
ஏன் இந்த மாறுப்பட்ட தேடல்


இதயங்கள் இழையும் தருணம் தெரிந்தால் சொல்வாய்
இமைமூடி இருந்தாலே வெளிச்சம் வருமா சொல்வாய்
பூமி முழுக்க காதல் இருக்க எங்கு ஓடி ஒளிகிறாய்
பூமி தாண்ட வழியே இல்லை வா
காதல் இங்கே தவறு என்றால்
கடவுள் கூட தவறுதான்
காதல் இன்றி கடவுள் இல்லை வா


படம்: பதினாறு (2011)
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: யுவன் சங்கர் ராஜா
வரிகள்: சினேகன்

முதல் முறை என் வாழ்வில்




முதல் முறை என் வாழ்வில் மரணத்தை பார்கிறேன்
கனவுடன் சூதாடி கடைசியில் தோற்கிறேன்
பாழடைந்த வீடாக புழுதியில் வாழ்கிறேன்
பாவி இந்த விதியாலே அழுதிங்கு சாகிறேன்

விட்டு விட்டு போ என்று வேதனைகள் சொல்லுதே
வந்து விடு வா என்று ஞாபகங்கள் கொல்லுதே
கனவில்லை நிஜம் என்று என்னை கிள்ளி பார்கிறேன்

எங்கு இனி நான் போக பாதையினை மறக்கிறேன்
இன்று வந்த பின்னாளும் நேற்றில் சென்று மிதக்கிறேன்
காதல் என்னும் நாடகத்தை கண்ட பின்பு அழுகிறேன்

முதல் முறை என் வாழ்வில் மரணத்தை பார்கிறேன்
கனவுடன் சூதாடி கடைசியில் தோற்கிறேன்

படம் : அவன் இவன் (2011) 
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : விஜய் பிரகாஷ்
வரிகள் : நா. முத்துக்குமார்

Tuesday, October 2, 2012

அண்ணன் என்ன தம்பி என்ன



அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்தபின்பு
என்னடி எனக்கு வேலை
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றுமில்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையைக் கண்டவன் ஞானி
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றுமில்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையைக் கண்டவன் ஞானி
அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன

ஆசையில் நான் வைத்த பாசத்தில் நேசத்தில்
வந்ததிங்கு வேதனையும் சோதனையும்தான்
நெஞ்சம் வெந்ததடி சோகத்தினில் தான்
பாம்புக்கு பால் வைத்து நான் செய்த பாவத்தில்
வந்ததிங்கு கொஞ்சமல்ல நஞ்சமல்லடி
எந்தன் நெஞ்சமிங்கு நெஞ்சமில்லடி
காருக்கும் பேருக்கும் தேருக்கும் ஆசையென்ன
நேருக்கு நேர் நின்று ஏய்த்திடும் மோசம் என்ன
ஊருக்கு நியாயங்கள் சொல்லிடும் வேஷம் என்ன
உண்மையை கொன்றபின் நெஞ்சுக்கு நீதி என்ன
போகும் பாதை தவறானால்
போடும் கணக்கும் தவறாகும்

அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்தபின்பு
என்னடி எனக்கு வேலை
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றுமில்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையைக் கண்டவன் ஞானி
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றுமில்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையைக் கண்டவன் ஞானி
அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன

தந்தையின் சொல் நின்று மந்திரம் தான் என்று
கண்டதடி பிள்ளை என்ற உண்மை உள்ளமே
என்தன் உள்ளம் எங்கும் அன்பு வெள்ளமே
சொந்தத்தில் பந்தத்தில் மோசத்தில் சோகத்தில்
வந்து நின்று உண்மைதனை இன்று உணர்ந்தேன்
இதை கண்டு கண்டு இன்று தெளிந்தேன்
பட்டது பட்டது என் மனம் பட்டதடி
சுட்டது சுட்டது சட்டிகள் சுட்டதடி
விட்டது விட்டது கைகளும் விட்டதடி
கொட்டுது கொட்டுது ஞானமும் கொட்டுதடி
வானம் பார்த்து பறக்காதே
பூமியில் பிறந்தாய் மறக்காதே

அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்தபின்பு
என்னடி எனக்கு வேலை
நம்பி நம்பி வெம்பி வெம்பி
ஒன்றுமில்லை என்ற பின்பு
உறவு கிடக்கு போடி
இந்த உண்மையைக் கண்டவன் ஞானி

அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன
சொல்லடி எனக்கு பதிலை
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்தபின்பு
என்னடி எனக்கு வேலை

அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன

படம் : தர்மதுரை (1991) 
இசை : இளையராஜா 
பாடியவர் : ஜேசுதாஸ் 
வரிகள் : பஞ்சு அருணாச்சலம்

நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா



ஊருக்கு உழைத்தவனே உறங்குகிறாயோ
உழைத்தது போதுமென்று உறங்குகிறாயோ
ஊராருக்கு அழுதவனே உறங்குகிறாயோ
ஊராரை அழ வைத்து உறங்குகிறாயோ

நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்
நாடு முன்னேற நாளும் உழைத்தவனை
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

பள்ளி அறியாத பிள்ளை பல பேரின் முகத்தை பார்த்தானடா
அது ஊரு சுற்றாமல் சோறு தான் போட்டு படிக்க வைத்தானடா

மாடு பிடித்த கையில் ஏடு கொடுத்த மகராஜன் இவன்தானடா
ஊரு உலகெங்கும் தேடி பார்த்தாலும் ஈடு எவந்தானட

இத்தனை தவம் தான் என்று வருந்த வைக்கிறானே
திரும்ப வர வேண்டுமே எங்கள் கருப்பு காந்தி இவனே

நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்
நாடு முன்னேற நாளும் உழைத்தவனை
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

பதவி இருந்தாலும் பதவி போனாலும் உதவி புரிவானடா
தனை பெற்ற தாயை விட பிறந்த நாடு தான் பெரிது என்பானடா
ஆற்று நீரையே அணைகள் கட்டியே தேக்க வைத்தானடா
கண்கள் ஊற்றும் நீரை தடுக்க இயலாமல் ஏங்க வைத்தானடா
வலிமை இருந்த போதும் மிக எளிமையோடு இருந்தான்
வெள்ளை உள்ளம் கொண்ட எங்கள் கருப்பு காந்தி இவனே

நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்
நாடு முன்னேற நாளும் உழைத்தவனை
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

இசை : இளையராஜா
பாடியவர் : இளையராஜா
வரிகள் : வாலி




Last 25 songs posted in Thenkinnam