Monday, January 31, 2011

பூசு மஞ்சள் பூசு மஞ்சள் (பெண்)பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசுது பூவொன்று
எண்ணம் போலே எண்ணம் போலே வந்தது வாழ்வென்று
தாய் தந்தை வாழ்த்துக்களால்
இன்று என் காதல் ஈடுரூதே
ஏன் இந்த மாற்றங்களோ
இன்று என் கண்ணில் தேனூருதே
பொங்குதே சந்தோஷம் பொங்குதே
சிந்துதே கண்ணீரும் சிந்துதே
(பூசு மஞ்சள்..)

கடல் நீரை கடன் வாங்கி ர்ன் கண் கொண்டு அழுதாலும்
நான் சொல்லும் நன்றிக்கு போதாதம்மா
பொங்குதே சந்தோஷம் பொங்குதே
இடம் மாறி வந்தாலும் தடம் மாறி போகாமல்
என் காதல் கைக்கூட கண்டேனம்மா
சிந்துதே கண்ணீரும் சிந்துதே
எண்ணம் போல் வாழ்வு கண்டேன் எல்லோரும் வாழ்த்தட்டுமே
முன்னூறு ஆண்டு வரை என் மஞ்சள் வாழட்டுமே
ஏழு பிறப்பினிலும் மறு பிறப்பினிலும்
இந்த தந்தைக்கும் தாய்க்கும் வந்து மகளென்று பிறந்திட
ஏங்குதே என் உள்ளம் ஏங்குதே
பொங்குதே சந்தோஷம் பொங்குதே
(பூசு மஞ்சள்..)

ஆண் என்றால் ஒரு வீடு பெண் என்றால் இரு வீடு
தாய்நாட்டு பண்பாடு தடை போடுமே
பொங்குதே கண்ணீரும் பொங்குதே
கிளை எங்கு போனாலும் என் வேர்கள் இங்கேதான்
என் ஜீவன் இங்கும் அங்கும் விளையாடுமே
பொங்குதே சந்தோஷம் பொங்குதே
பொன் மாலை தந்தவனை எந்நாளும் காதலிப்பேன்
வெண் மேகம் சிறகு தந்தாஇ விண்ணோடு வலம் வருவேன்
எந்தன் உயிர் மலரை உந்தன் திருவடியில் தந்து
உனக்குள் கரைந்து இந்த உலகத்தை மறந்திட
ஏங்குதே என் உள்ளம் ஏங்குதே
பொங்குதே கண்ணீரும் சிந்துதே
(பூசு மஞ்சள்..)

படம்: கனவே கலையாதே
இசை: தேவா
பாடியவர்: அனுராதா பாட்வல்
வரிகள்: வைரமுத்து

Sunday, January 30, 2011

பூசு மஞ்சள் பூசு மஞ்சள் (ஆண்)பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்னு
பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இங்கு
என் கண்கள் பொய் சொல்லுமா
வேரில்லாமல் பூப்பூக்குமா
கண்ணோடு ஆனந்தமா
நெஞ்சோடு பூகம்பமா
பிம்பமா உன் போலே பிம்பமா
நம்புமா என் உள்ளம் நம்புமா
(பூசு மஞ்சள்..)

உயிர் நீங்கி போனவளே
என் உயிர் வாங்கி போனவளே
என் உயிர் போன தேகம் மட்டும் நடமாடுது
பாரம்மா என் வாழ்வை பாரம்மா
நீ தந்த காயங்கள் நெஞ்சோடு ஆறுமுன்னே
அழகான வாளொன்று அதை கீருதே
தாங்குமா என் உள்ளம் தாங்குமா
உன் போன்ற புன்னகையால் என் வாழ்வை குடிப்பது யார்
உன் போன்ற பார்வையினால் என் கண்ணை எரிப்பவள் யார்
ஒரு விடுகதையே இங்கு தொடர்கதையா
அந்த விடையின் முதல் எழுத்தை
எந்தன் விதி வந்து மறைத்ததே
பொங்குதே கண்ணீரும் பொங்குதே
கண்களில் உன் பிம்பம் தங்குதே
(பூசு மஞ்சள்..)

வடக்கே ஒரு அஷ்டமனம்
தெற்கே ஒரு சந்திரோதயம்
ஆகாயம் என்னோடு திசை மாறுதே
உண்மையா நான் என்ன பொம்மையா
ஒரு ஜென்மம் வாங்கி வந்து
இரு ஜென்மம் வாழுகின்றேன்
இது என்ன கதை என்று விதி கேட்குதே
மாறுமா என் கண்ணீர் மாறுமா
எங்கேயோ தொலைந்த விதை
இங்கே வந்து பூத்தன
முல்லைப்பூ என்றிருந்தேன்
முள்ளை பாய்கிறதே
நான் ஓட நினைக்க
நிழல் என்னை துரத்த
உயிர் தழைக்கும் பயணம்
எந்த திருப்பத்தில் முடியும்
ஓய்ந்ததே என் கால்கள் ஓய்ந்ததே
தீர்ந்ததே கண்ணீரும் தீர்ந்ததே
(பூசு மஞ்சள்..)

படம்: கனவே கலையாதே
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து

Saturday, January 29, 2011

பூந்தேனா பூவுல போவேனா


Get Your Own Hindi Songs Player at Music Plugin

பூந்தேனா பூவுல போவேனா
விரலுல உசுர தழுவ மழைய
மனசுல விழுவேனா
நெனப்புல தவிக்கேனா
மடியில சருக சரிஞ்ச
இமைய இமையென நடுவேணா

பூவுல செந்தேனா வேர் வழி வந்தேனா
பூவுல செந்தேனா வேர் வழி வந்தேனா
வேருல தேணா ஊரி இருந்தேனா
மார்புல பூத்தேனா மார்கழி பார்த்தேனா
மார்கழி தேனா மாறி குளிர்ந்தேனா
மாமனே நானா ஈர உயிர் தேனா
மாமனே நானா ஈர உயிர் தேனா
உயிருமா உடலுமா இணைசேர மாட்டேனா
(பூந்தேனா..)

காதல வளர்த்தேனா தீயில வார்த்தேனா
காதல வளர்த்தேனா தீயில வார்த்தேனா
தீயில தேனா மாறி விழுந்தேனா
கனவுல வேர்த்தேனா நிலவுல கோர்த்தேனா
நிலவுல தேனா ஊரி வழிந்தேனா
மாமனே நானா ஆசை வழி தேனா
மாமனே நானா ஆசை வழி தேனானா
துளியுமா குளிருமா உன்னுள்ள காத்தேனா
(பூந்தேனா..)

படம்: ஈர நிலம்
இசை: சிற்பி
பாடியவர்: சின்மயி

Friday, January 28, 2011

ச்சா ச்சா ச்சா காதலிச்சாச்சா ச்சா ச்சா காதலிச்சா சம்மதிச்சா இந்த மோனலிசா
அட மெல்ல சிரிச்சா என்னை அள்ளி குடிச்சா
நான் கட்டிப்புடிச்சா மெல்ல மூச்சடைச்சா
கனவு கொடுத்து உறக்கம் பறிச்சா
முத்தம் கொடுத்து மொத்தமா நனச்சா
(ச்சா ச்சா..)

மடியிலே விழுந்ததே ஒரு நிலா ஹேய்
இளமைக்கு இன்று தான் திருவிழா ஹேய்
உறவில் விழுந்தாள் இதயம் கலந்தாள்
மயக்கம் வருமோ இங்கே
பருவ விருந்தாய் அருவியில் நனைந்தாய்
வெட்கம் போனது இங்கே
முத்தத்தில் கரையாமல் சொர்கத்தில் திரியாமல்
அம்மம்மா காதலுக்குள் இன்பம் இங்கு இல்லையே
(ச்சா ச்சா..)

நெருக்கமாய் இருக்கலாம் அணைக்கலாம் ஹேய்
உதட்டினால் உயிரையே நனைக்கலாம் ஏய்
கொதிக்கும் உடம்பும் தவிக்கும் மனசும்
எனக்கு தந்தாய் நீயே
குளிர குளிர குளிக்கும் பொழுதும்
எனக்குள் இருக்கும் தீயே
கண்ணோடு துயிலில்லை என்னோடு நான் இல்லை
இப்போதும் எனக்கென்று ஏதும் இங்கு இல்லையே
(ச்சா ச்சா..)

படம்: ஜானகி ராமன்
இசை: சிற்பி
பாடியவர்கள்: ஹரிஹரன், நிர்மலா

Thursday, January 27, 2011

கனவே கலைகிறதேகனவே கலைகிறதே
காற்றென வலிகள் நுழைகிறதே
தேவதை
சிறகில் இறகாய் உயிரும் உதிர்க்கிறதே ஏய்
காதல் இது தானா
உலகமெல்லாம்
வலிகள் பொது தானா
மனசுக்குள்
அணில் பிள்ளை போல
அழுவதும் அது தானா
வார்த்தைகளை
மௌனம் கொன்று தின்றதில்
தனிமையிலே
தினம் கத்தி கத்தி
உந்தன் பெயர் சொல்லி அழுதேனே
காற்று வந்து காதல் சொன்னதா

இதுதானா காதல் இதுதானா
வேர் அறுந்து வீசும் புயல் தானா
உதுதானா காதல் இதுதானா
அணு அணுவாய் சாகும் வழி தானா
(கனவே..)

அழைப்பது காணல் நீரா
அறியாது பறவை கூட்டம்
தொடுவானம் போலே காதல்
அழகான மாய தோற்றம்
உனக்கான வார்த்தை தனி
ஆயுள் சிறையில் வாழ்கிறதே
நமக்கென விண்மீன்
நீ அறியும் முன்பே உதிர்கிறதே
தரையில் மோதி மழைத்துளி சாகும்
விரலினை தேடி இமையோடு கண்ணீர் காயும்
வலிக்கின்ற போதும் சிரிக்கின்ற நானும்
உனக்காக நாளும் தேய்கிறேன்

சரிதானா காதல் பிழைதானா
ஆயுள் வரை தொடரும் வலிதானா
இதுதானா காதல் இதுதானா
ஐம்புலனில் ஐயோ தீயானாள்

மழை நீர் சுடுகிறதே
மனசுக்குள்
அணில் பிள்ளை அழுகிறதே
தேவதை சிறகில் இறகாய்
உயிரும் உதிர்கிறதே

படம்: அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா

Wednesday, January 26, 2011

எங்களுக்கு லக லக லக


Get Your Own Hindi Songs Player at Music Plugin

எங்களுக்கு லக லக லக
இதுதான் பாஸ் எங்கள் நட்பின் பவர்
பேபி பேபி பேபி

எங்களுக்கு லக லக லக
இதுதான் பாஸ் எங்கள் நட்பின் பவர்
பேபி பேபி பேபி
பேபி பேபி பேபி

அழுது வரண்டால் பத்து கண்ணும் துடிக்கும்
ஆதலினிசைத்தால் நட்பு ரொம்ப இனிக்கும்
பேபி பேபி

ஈஸ்ட் ஓர் வெஸ்ட் எங்கள் ஃபிரண்ஷிப்பே பெஸ்ட்
ஈஸ்ட் ஓர் வெஸ்ட் எங்கள் ஃபிரண்ஷிப்பே பெஸ்ட்

எங்களுக்கு லக லக லக
இதுதான் பாஸ் எங்கள் நட்பின் பவர்

படம்: ஃபைவ் ஸ்டார்
இசை: பரசுராம் ராதா
பாடியவர்கள்: தேவன், கனிகா

Tuesday, January 25, 2011

காதல் சிலுவையில் அறைந்தாள் என்னைகாதல் சிலுவையில் அறைந்தாள் என்னை
தீயின் புடுவையில் அடைத்தாள் கண்ணை
(காதல்..)

கனவுகளில் விழுந்த என்னை கவலையிட மனப்புகிறாள்
இலமை என்னும் கருவரி ந்ன்னும் எறித்தாழாய் கொளுத்துகிறாள்

உயிர் உதிரும்போது உரவுஅக்ளும் வீனோ
உலகம் இதுதானோ!

கழுகுகளின் கண்களிலே மரண பயம் இல்லை
ஊமைகளின் தாலாட்டை செவி உணர வாய்ப்பில்லை
புழுதியிலே ரத்தினமாய் இருந்ததொரு தொல்லை
பாவங்களை பாராமல் பழகியதனால் தொல்லை
சேவை பூமியடி தேனாக்கும்
கோபம் துயரங்களை சேர்க்கும்
(கனவுகளில்..)

அவளுடைய கற்பனையை எழுத வழி இல்லை
கூண்டு கிளி நான் ஆனேன் வெளி வரவும் வாய்ப்பு இல்லை
இவனுடைய உண்மைகளை உளர வழி இல்லை
தோல்விகளின் வீடானேன் துணைவரவும் ஆளில்லை
வாழும் மானிடரின் சுமைகள் தீராது
காலம் உறவுகளின் தீர்வோ
(கனவுகளில்..)

படம்: சுப்ரமணியபுரம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்

Monday, January 24, 2011

உன்னில் நானும் என்னுள் நீயும் ஒளிந்துக்கொள்வோமாஉன்னில் நானும் என்னுள் நீயும் ஒளிந்துக்கொள்வோமா
உயிர் உயிரால் அறியும் உயிரின் உறவை உள்ளே காண்போமா

ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
கண்ணாலே கொள்ளாதே
(ஓ நெஞ்சே..)
(உன்னில் நானும்..)

தீ மனசிலே பறவுதே பறவுதே
சிறகுடன் நான் இதயமே பறக்குதே பறக்குதே

சடுகுடு சடுகுடு நடக்குதே
நடந்து முடிக்குதே உள்ளுக்குள்ளே
அட படப்பட படவென துடிக்குதே
துடித்து வெடிக்குதே உள்ளத்திலே
வெப்பம் கொஞ்சம் கார்காலம் கொஞ்சம்
இரண்டும் இணைத்தது பெண்மைதானா
கப்பம் முழுக்க நான் தந்த போது
சிறையும் சரிதானா
சின்ன சின்ன பொய்கள் சொல்லாதே
சிக்க வைக்கும் பார்வை பார்க்காதே
ஹார்மோனுக்கு ஆசை மூட்டாதே
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
(தீ மனசிலே..)

உதடுகள் திறக்காமல் உனது பெயர்
உரக்க கத்துவேனே காலாதலா
உந்தன் சுவடுகள் பதிக்கிற இடங்களில்
ஸ்பரிசம் செய்தேனே தாராராரா
நட்பும் வேண்டும் தாய்மையும் வேண்டும்
உனது தழுவலில் இரண்டும் தானே
முத்தம் வேண்டும் இம்சைகள் வேண்டும்
எனக்கு நீ வேண்டும்

மின்னல் ஒன்று மண்ணில் வந்து
கண்ணில் ஒரு காயம் தந்து
காதல் என்று சொல்லி சென்றதே
ஜன்னல் வரை வந்து காற்று
நெஞ்சில் மாலை வீசும்போது
காதல் என்று சொல்லி சென்றதே
நீ இருக்கிறாய் மறைக்கிறாய் காதலே
இதயத்தில் நீ சுடுகிறாய் குளிர்கிறாய் காதலே

ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே ஓ நெஞ்சே
கண்ணாலே கொள்ளாதே
(ஓ நெஞ்சே..)
(உன்னில் நானும்..)
(தீ மனசிலே..)

என் நண்பனே கவலை வேண்டாம்
காத்திருந்ததற்கு பலம் சேரும்
காதல் ஒரு கண்கட்டி வித்தை மாயம்
ஆணை விட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம்
என் நாபி கமலம் உள்ளிருந்து வரும் வாக்கு என்னை நம்பு
இப்பொழுது நட்பு மட்டும் உனக்கு தெம்பு
அன்பான நண்பனை மனம் ஆபத்தில் அறியும்
உயிர் காதலியை பிரிந்தால் மனம் அழுகும்
காதலில் அடையும் விரக்தி அதுதான் ஆத்மசாந்தி
வருவாள் ஒரு நாள் அது வரை உனர்ச்சிகள் எழுத்தாக்கு
உண்மைகளை பாடலாக்கு
உனக்காக இறைவனை நான் வேண்டிக்கொள்கிறேன்
ஆலய மணி தான் இத்ற்கு சாட்சி
இன்னும் கொஞ்சம் இருக்கு அதையும் சொல்லி விடுகிறேன்
ஆற்றில் போட்டாலும் அழந்து போது
அன்பான காதலிக்கு அனைத்தையும் கொடு
நான் ஒற்றன் உன் அந்ண்பன்
காதலில் வெற்றி அடைந்தால் சொல்லி அனுப்பு

படம்: சிவி
இசை: தரன்
பாடியவர்கள்: ரஞ்சித், ஷ்வேதா, Dr. பெர்ன்

Sunday, January 23, 2011

சாபூ த்ரீ போட்டு மனச நீ காட்டுYou Wanna Saaay Yoway, Way Awaay
நாநநநாநா நாநநநாநா

சாபூ த்ரீ போட்டு மனச நீ காட்டு
ஒன் வே ல போனா தப்பான ரூட்டு
கிளி வந்து எடுத்து போட்டாச்சா சீட்டு
முகத்துக்கு ஏண்டா திண்டுக்கல் பூட்டு

சும்மாத்தான் சிரிச்சேன் சோழி உருட்டாதிங்க
சாவியை போட்டா மனசு திறக்காதுங்க
(சாபு த்ரீ..)

அறிய பயலே உன்னை எவந்தான் கெடுத்தான்
அடங்காத புயலு ஒன்னு
அட சுடிதாரில் யாரு அடைச்சா

மழைதா நின்னாலும் அட கிளைதான் நிக்குமா
சின்ன சின்ன தூரல் பொழுது
சிரிச்சப்படி நனையத்தான் விட்டு விடுங்க

நெருப்பத்தான் காகிதத்தில் கட்டத்தான் யாரு உண்டா
நெனப்பத்தான் கட்டி வைக்க கயிறு உண்டா
(சாபூ த்ரீ..)

மாலை பொருத்தம் அது எப்போ உனக்கு
மாலை நேரம் வந்த பிறகு
விளக்கு வைக்க வேணும் ஒரு குத்து விளக்கு

மாலை சுமக்க இப்ப ஆசை எதுக்கு
இன்னார்க்கு இன்னவள்ன்னு எழுதி வச்சா
மாறாதே அந்த கணக்கு

யார் உன்னை எதிர்க்கும் போது
தூள் தூளாய் நொறுக்கும் ஆளு
பூ ஒன்று மோதி இன்று
விழுந்த மாயம் என்ன

படம்: சரவணா
இசை: ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர்கள்: கார்த்திக். ஹரிணி, அனுராதா ஸ்ரீராம், பேபி வைஷாலி

Saturday, January 22, 2011

ஓடிவா காதலே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஓடிவா காதலே
சிறு காற்றாய் தலை கோர்த்து வா
தேடிடும் போதிலே
என்னை பின்னாலே கண் மூடவா

தொலைதூரம் கேட்கும் இசையினிலே
என் தூக்கம் கொஞ்சம் கலைகிறதே
அதை மீட்டும் உந்தன் விரல் தொடவே
நான் விழித்திருப்பேன் அன்பே
மின்சாரம் தொலையும் இரவினிலே
தன் காதலை சொல்லும் தெருவிளக்கு
நீ இமைகளை மூடும் இடைவெளிதான்
என் காதல் சொல்வதற்கு

ஓடி வா காதலே
நீ வா ...
நானே...
யார் முகம் காணிலும் முகம் தோணுதே
இமை தூங்குமா

அதிகாலை ஜன்னல் திறக்கையிலே
சில பூக்கள் சிரிக்கிறதே
அறை நுழையும் பட்டம் பூச்சி என
உன் ஞாபகம் வருகிறதே
வெயிலோடு மழை வரும் நாட்களிலே
அந்த பூக்கள் பூக்கிறதே
அந்த காட்டுப் பூவுக்கு உன் பெஅயரை
இன்று சூட்டிவிட்டேன் அன்பே

படம்: அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: கார்த்திக், யுவன் ஷங்கர் ராஜா

Friday, January 21, 2011

கனவிலே கனவிலே பல நாள் கண்டதுகனவிலே கனவிலே பல நாள் கண்டது
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது
எதுவும் பேசாமலே உரைப்பேன் என் காதலை
விழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலை
அவள் என் வாசமே என்னும் சங்கதியாய்
எட்டு திசைகளும் அதிருமே

சிறு புன்னகையில் எனை வென்றுவிடும் அவள் தென்றலை
இரு கண்களையும் எழில் செய்துவிடும் அவள் மின்னலை

காலை மாலை யாவுமே
காதல் கொள்ள வேணுமே
தினம் பேசி போகிற ஜாடைகள்
பல நூறு கவி சொல்லுதே

இரவே பகலே இரவாய் தோன்றிடு
நிலவே நிலவே பகலை நீங்கிடு
மூச்சுக் குழலிலே மோகம் விரியுதே
கூச்சம் தொலையவே தேகம் சரியுதே
(கனவிலே..)

உடை தொட்ட இடம் விரல் தொட்டுவிட்ட உயிர் கெஞ்சுமே
அடைப்பட்ட நதி உடைப்பட்டுவிட அலை பொங்குமே
வேகம் வீசும் பூவிலே நாளும் உந்தன் வாசனை
மிதமான சூரிய தீபமாய் இமை நாங்கும் ஒளி சிந்துமே

எது நீ எது நான் இனிமேல் தேடுவோம்
நதி நீ கரை நான் கலைந்தே ஓடுவோம்
பூக்கள் முழுவதும் மீண்டும் விரியுமே
கூட்டம் நடத்துமே பூக்கும் அழகிலே
(கனவிலே..)

படம்: நேபாளி
இசை: ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர்கள்: சத்யன், ஷ்வேதா, கிரேஷ்
வரிகள்: யுகபாரதி

Thursday, January 20, 2011

Pushing It Hardhey u yuvan u there?
yeah
spin that shot up
i thought i told u that we wont stop
i thought i told u that we cant stop
yeah i thought i told u that we wont stop
i thought i told u that we cant stop
say it again yah
i thought i told u that we wont stop
i thought i told u that we cant stop
huh-huh yeah
i thought i told u that we wont stop
Yoh that is what we do
we do it better than u

I'm pushing u hard
I'm pushing u real
I'm pushing it harder and faster
u're pushing me hard
u're pushing me real
u're pushing me harder and faster

சொர்கம் அதன் மறு பெயர் திருமணம்
தேவதை வருவாள் எதற்காக
நரகம் அதன் மறு பெயர் திருமணம்
தெரிந்தே விழுவது எதற்காக
தாலி நீ கட்டினால்
உயிரை தர விரும்புவாள்
ஹேய் அது தேவை இல்லை

I can do whatever I want
I really want a piece of life
Its so hot buddy
marriage just aint on my mind
i really want a piece of life
its so hot buddy

ஓ வெளியே நீ கிளம்பினால்
வாசல் வரை வந்து நின்று அனுப்பி வைப்பாளே
i aint gotta do nothing with this

விட்டுருடா விட்டுருடா
தொந்தரவு திலகம் நீ டா
ஒத்துக்கடா ஒத்துக்கடா
சட்டுனு தான் சம்மதம் தா டா
நரகம் அதன் மறு பெயர் திருமணம்
தெரிந்தே விழுவது எதற்காக
ஹே சொர்கம் அதன் மறு பெயர் திருமணம்
தேவதை வருவாள் உனக்காக

காலை சுற்றி வேலிகள் வேண்டாம்
சூரியனை சிம்னிக்குள் அடைக்கவும் வேண்டாம்
மழையில் நான் நனையனும்
குடைகளும் உடைகளும் வேண்டாம் வேண்டாம்
ஈரத்தை அவள் துவட்டுவாள்
காய்ச்சல் வந்தால் இரவெல்லாம் அருகே இருப்பாள்
I aint gotto do nothing with this

I'm pushing it hard
I'm pushing it real
I'm pushing it harder and faster
'coz u know why
want to go in my lamborigini
check my chicks out
in the club
ladies night
smoking weed
getting high
yeah
wait up man
dont u know me
want to know me
dont u know me
yeah
i got the magic stick
i'm the love doctor
a ha

ஓஹோஹோ நீ சிரித்தால் தான் சிரித்து
நீ அழுதால் தான் அழுது உனக்கே வாழ்வாள்
ஓஹோஹோ நான் சிரித்தால் தான் சிரித்து
நான் அழுதால் தான் அழுது
மனைவிகளே பைத்தியமா
பகிர்தல் அதில் ஆயிரம் அர்த்தம்
அதனால் தான் திருமணம் சொர்கம்
கடையில் எந்த பொருளும் விற்கும்
காலம் சென்று காதல் நிற்கும்
பறைவைகள் பல ஒன்றாய் கூடி
ஜோடிகள் அவை தினம் தினம் மாறி
கவலை இன்றி ரசிக்கணும் வாழ்வை

ஒத்துக்கடா ஒத்துக்கடா
சட்டுனு தான் சம்மதம் தா டா
விட்டுருடா விட்டுருடா
தொந்தரவு திலகம் நீ டா

I'm pushing u hard
pushing u real
I'm pushing it harder and faster
u're pushing me hard
pushing me real
u're pushing me harder and faster

மெதுவாய் பூ மலர்ந்திடும்
அது உனக்கே ஒரு நாள் தெரிந்திடும்
நறுமணம் பரவிடும்
பல ஜென்மங்கள் அது உனை தொடர்ந்திடும்

ஒத்துக்கடா ஒத்துக்கடா
சட்டுனு தான் சம்மதம் தா டா
ஒத்துக்கடா ஒத்துக்கடா
சட்டுனு தான் சம்மதம் தா டா
check it out...

படம்: கண்ட நாள் முதல்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, க்ளிண்டன், ப்ரேம்ஜி அமரன்
வரிகள்: தாமரை

Wednesday, January 19, 2011

ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்
ஓ பியூட்டியின்னா பியூட்டிதான்

ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்
ஓ பியூட்டியின்னா பியூட்டிதான்
பின்னழகைக் காட்டிச் சின்னப் பையன்களை வாட்டி
மின்னலிடை ஆட்டி வரும் மஞ்சள் நிலா நெஞ்சைக் கிள்ளாதோ
(ஓ பார்ட்டி..)

காத்திருந்தா கண்மணியே பஸ் கிடைக்கும்
காதலிச்சா பொன்மனியே கிஸ் கிடைக்கும்
கைவுவான் கன்னியரைப் பல்லவந்தான்
கைக்கொடுப்போம் நாங்களெல்லாம் நல்லவர்தான்

அருகில் நாங்கள் வந்தால் உனக்கேன் கூச்சமே
கடைக்கண் பார்வை பட்டாலே கிடைக்கும் மோட்சமே
தரையோடு ஜலதரங்கம் தராவிட்டால் சுருதி இறங்கும்
உனை வாலிபந்தான் கூப்ப்பிடுது வானவில்லே வா வா
(ஓ பார்ட்டி..)

பிள்ளைகளை நீ சுமக்கும் பருவமடி
பூக்ஸை எல்லாம் நீ சுமந்தால் பாவமடி
பள்ளியறைப் பாடம் சொல்ல நாங்க ரெடி
பூங்குயிலே நீ சம்மதிச்சா போதுமடி

அடியே ஆடைகளாலே அழகைப் பூட்டாதே
இடையை ஆடவிட்டேதான் ஆணலை மூட்டுதே
பூஞ்ரிப்பில் மோனலிசா போலிருக்கும் கல் மனசா
இளமீச வெச்ச ஆம்பளைங்க ஆச வச்சோம் வா வா
(ஓ பார்ட்டி..)

படம்: இதயம்
இசை: இளையராஜா
பாடியவர்: மலேசிய வாசுதேவன்

Tuesday, January 18, 2011

வானத்திலிருந்து குதிச்சு வந்தேனா


Get Your Own Hindi Songs Player at Music Plugin

வானத்திலிருந்து குதிச்சு வந்தேனா
பூமிக்குள் இருந்து வெடிச்சு வந்தேனா

வானத்திலிருந்து குதிச்சு வந்தேனா
பூமிக்குள் இருந்து வெடிச்சு வந்தேனா
வானத்திலிருந்து குதிச்சு வந்தேனா
பூமிக்குள் இருந்து வெடிச்சு வந்தேனா

அப்பன் இன்றி அம்மை இன்றி வந்தவனா
ஆண்டவனே தந்தை என்று கொண்டவனா
சுற்றுகின்ற பூமி என்னை
நாதியற்ற பிள்ளை என்று
தத்தெடுத்து கொண்ட மகனா
நான் மண்ணோட மகனா
விண்ணோட மகனா
தன்னால பொறந்தேனா
என்னோட உலகில் அம்மவென்றெனக்கு
யாரேனும் கிடையாதா
(வானத்தில்..)

எங்கோ ஒரு மூளையில
என்னை பெத்த தாய் இருக்கா
அம்மா உன் நெஞ்சினிலே
என்னை பெத்த நெனப்பிருக்கா
அம்மா உந்தன் மடியில்
சாய்ந்து அழுதால் கொஞ்சம் நிம்மதி
என்னை மறந்த தாயே
நானும் மறந்தால் என்ன என் கதி
தொப்புள் கொடி வெட்டிய போதே
உறவை வெட்டி விட்டாயா
தொலைவில் இருந்து பார்த்துக்கொண்டே
துயரில் மிதக்க வைத்தாயா
எங்கிருக்கே எங்கிருக்கே
நல்ல பதில் சொல்லம்மா
(வானத்தில்..)

உலகில் நானும் படித்ததெல்லாம்
ஒன்றும் அற்ற படிப்பல்லவா
வேலை தேடும் ஊருக்குள்ளே
தாயை தேடும் மகனல்லவா
தாயின் விரலை பிடித்தே
நடக்கும் மகனை பார்க்கும் போதிலே
தனியாய் நானும் நடந்தேன்
எந்தன் தாயின் எண்ணம் நெஞ்சிலே
பெத்தெடுத்த தாயே தாயே
எறியுதடி பாசத் தீயே
திரையை விலக்கி வந்திடுவாயா
அன்பு மழை பொழிந்திடுவாயா
எங்கிருக்கே எங்கிருக்கே
நல்ல பதில் சொல்லம்மா
(வானத்தில்..)

படம்: பூந்தோட்டம்
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜா

Monday, January 17, 2011

மீட்டாத ஒரு வீணைமீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்
ஆகாய பூக்கள் மழை தூவும் நேரம்
மனதின் ராகம்
(மீட்டாத..)

பளிங்கினால் ஒரு வீடு அமைக்க வா பொன்மானே
விழியினால் இரு தீபம் ஏற்றவா அது போலே
மறந்த அந்த பாடலுக்கு அடி எடுத்து கொடுக்க வா
பிரித்து என்னை பரிதவித்து புதுக்கவிதை படிக்க வா
எரிமலையும் பனிமலை என்றே மாறுது ஏ பைங்கிளி
(மீட்டாத..)

கனவிலே துயில் நீங்கி திரும்பினால் உன் உருவம்
முழு நிலா முகம் பார்க்க மலர்ந்ததே உன் வடிவம்
நடந்து செல்லும் வழி முழுதும் என் நிழலை அனுப்பவா
துணைக்கு வந்த நிழல் அதற்கு குடை எடுத்து பிடிக்கவா
ஒரு கணமும் பல யுகம் என்றே ஆகுது சொல் பைங்கிளி
(மீட்டாத..)

படம்: பூந்தோட்டம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஹரிஹரன், மகாலெட்சுமி ஐயர்

Sunday, January 16, 2011

பொங்கலு பொங்கலு
பொங்கலு பொங்கலு வெக்க மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி

பூப்பூக்கும் மாசம் தை மாசம்
ஊரெங்கும் வீசும் பூவாசம்
சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
புது ராகம் புது தாளம்
வந்து சேரும் நேரம் இந்நேரம்
(பூப்பூக்கும்..)

வாய்காலையும் வயற்காட்டையும்
படைத்தான் எனக்கென காதல் தேவதை
தெம்மாங்கையும் தெருக்கூத்தையும்
நினைத்தால் இனித்திடும் வாழும் நாள் வரை
குழந்தைகள் கூட குமரியும் ஆட
மந்த மாருதம் வீசுது மலையமாருதம் பாடுது
ஓஹோ
(பூப்பூக்கும்..)

நான் தூங்கியே நாளானது
அது ஏன் எனக்கொரு மோகம் வந்தது
பால் மேனியும் நூலானது
அது ஏன் அதுக்கொரு தாகம் வந்தது
மனதினில் கோடி
நினைவுகள் ஓடி
மன்னன் யாரென தேடுதோ
உன்னைப்பார்த்ததும் கூடுதோ?படம்: வருஷம் 16
இசை: இளையராஜா
பாடியவர்: P சுசீலா
வரிகள்: வாலி

Saturday, January 15, 2011

மலரே பேசு மௌன மொழிமலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஓடும் ஆசை வழி
வாசலை தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
(மலரே..)

வாசனை பூக்கள் வாய் வெடிக்க
ஆயிரம் ஈக்கள் தேன் குடிக்க
நான் ஒரு பூவோ நீ பறிக்க
நாள் வகை குணமும் நான் மறக்க
மெதுவாய் குலுங்கும் மாங்கனியே
கிடைத்தால் விடுமோ ஆண் கிளியே
மடி மேல் கொடி போல் விழுந்தேனே
(மலரே..)

ஏந்திய வீணை நான் இருக்க
ஏழிசை மீட்ட நீ இருக்க
ராத்திரி நேர ராகம் இது
பூவோடு காற்று பாடுவது
இதழால் இனிமேல் நீ எழுதும்
கதை தான் படித்தேன் நாள் முழுதும்
படித்தால் எங்கும் இனிக்காதோ ஓ
(மலரே..)

படம்: கீதாஞ்சலி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, சித்ரா

Friday, January 14, 2011

சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனை கண்டாலென்ன என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
(சோலை..)

கண்ணா ஜோடிக்குயில் மாலையிடுமா இல்லை ஓடி விடுமா
கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா கங்கை வற்றி விடுமா
உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
கல்யாணமா கச்சேரியா தாளாதது நெஞ்சு
கொக்கு ஒன்னு காத்திருக்குது
தண்ணீரில் தத்தளித்து மீனிருக்குது
(சோலை..)

உன்னை மீறி ஒரு மாலை வருமா சொந்தம் மாறி விடுமா
உள்ளம் காத்திருந்து இற்று விடுமா தன்னை விற்று விடுமா
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வழிய நான் பொறுக்கையிலே
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வழிய நான் பொறுக்கையிலே
பன்னீருக்கும் மண்ணென்னைக்கும் கல்யாணமாம் சாமி
காவலுக்கு நாதி இல்லையா
என்னாளும் காதலுக்கு நீதி இல்லையா
(சோலை..)

படம்: இங்கேயும் ஒரு கங்கை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கங்கை அமரன், SP ஷைலஜா
வரிகள்: கங்கை அமரன்

Thursday, January 13, 2011

தாழம்பூவே வாசம் வீசு

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
இரவும் இல்லே பகலும் இல்லே
அன்புக்கு பஞ்சமில்லே
தாலேலோ தாலேலோ

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு

நடந்தா காஞ்ச நிலம் செழிக்கும்
சிரிச்சா கோயில் மணி அடிக்கும்
கண்ட கண்ணு படும்

பேசும் போது தாயப் பார்த்தேன்
தோளில் தூங்கும் பிள்ளை ஆனேன்

நெஞ்சத்திலே ஏஏ
நெஞ்சத்திலே ஊஞ்சல் கட்டி
ஆரிரரோ பாடவோ

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு
வீடெதும் இல்லே வாசலுமில்லே
அன்புக்கு பஞ்சமில்லே
தாலேலோ தாலேலோ

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப்பேசு

இனி நான் கோடி முறை பொறப்பேன்
உன நான் பார்க்க விழி தொறப்பேன்
இது சத்தியமேநீரும் போனா மேகம் ஏது
நீயும் போனா நானும் ஏது
என்னுயிரே ஏஏ

என்னுயிரில் நீ இருக்க
உன்னுயிரும் போகுமோ
(தாழம்பூவே வாசம் வீசு)

துபாய் ரங்கனின் நேயர் விருப்பமாக ..

திரைப்படம் : கைகொடுக்கும் கை
பாடியவர்கள் : SPB , S .ஜானகி
இசை: இளையராஜாGet Your Own Hindi Songs Player at Music Plugin

ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லேஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சி போச்சுடா
இந்த ஊரும் பிடிக்கலே உலகம் பிடிக்கலே போரு போருடா

இது தேவையா அட போங்கையா ஜூன் ஜூலையா
பட்டாம்பூச்சிகள் பறக்குது பறக்குது
கண்ணாமூச்சிகள் நடத்துது நடத்துது
பச்சை பசுமைகள் தெரியுது தெரியுது
அழகு கிளிகள் நமது விழியில் வலம் வருதே
(ஏப்ரல்..)

குர்த்தா மேக்ஸியும் சல்வார் கமீஸும் சுமந்த பெண்களே ஹஹஹஹ
எங்கே என்றுதான் இங்கே இன்றுதான் வருந்தும் கண்களே ஹொஹொஹொஹொ
வீட்டில் நிக்கற காவல் காரரும் மொறச்சு பார்க்கிறான் ஆமாமா
சோல கொள்ளையின் பொம்மை போலவே வெறச்சி போகிறார் அடடடா
ட்ரைவ் இன் ஹாட்டலும் சேந்தோம் பீச்சும் டல்லா தோண்றுதே பாருங்கள்
பன்னீர் பூக்களை பார்த்தால் இன்று கண்ணீர் வார்க்கிறோம் நாங்கள்
நெஞ்சம் தாங்குமா கண்கள் தூங்குமா துன்பம் நீங்குமா
(ஏப்ரல்..)

காலேஜ் அழகியும் கான்வெண்ட் குமரியும் தியேட்டர் போகுறா ஹோஹோஹோ
டாக்ஸி ட்ரைவரும் பார்த்து பார்த்துதான் மீட்டர் போடுவார் டுடுடுடுடு
காலை மாலைதான் ஏலை பார்ப்பவர் மகிழ்ச்சி கொள்கிறார் அஹஹஹஹா
வாழை குமரிகள் சாலை கடக்கையில் வாயை பிளக்கிறார் அடடடாஅ
ஸ்டெல்லா மேரிஸும் குவீன் மேரிஸும் தென்றல் வீசிடும் பூந்தோட்டம்
வஞ்சி பாவைகள் தோன்றும் போது நெஞ்சம் போடுதே ஆட்டம்
எங்கள் பாடுதான் சக்க போடுதான் பட ஜோருதான்
(ஏப்ரல்..)

படம்: இதயம்
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜா

Wednesday, January 12, 2011

தகதகதக தகதகவென ஆடவா

ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி
இசை பாடுங்கால் பாட வந்தேன் பரம்பொருளே (2)
ஆடுங்கால் எடுத்து நடமிடுவாய் இறைவா
உன் தமிழமுதை படித்த நான் பாடும் படி ( 2)

தகதகதக தகதகவென ஆடவா
சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா (தகதக)

ஆலகாலனே ஆலங்காட்டினில் ஆடிடும் நாயகனே
நீலகண்டனே வேத நாயகா நீதியின் காவலனே(ஆலகாலனே)
தாள வகைகளோடு மேள துந்துபிகள் முழங்கிட ஓர் கணமே
காலைத்தூக்கியே ஆனந்தத் தாண்டவம் ஆடுக மன்னவனே(தாள)

முத்து கொடி சக்தி குலமகள் வித்துகொரு
வெள்ளம் துணையென பக்திகொடி
படரும் நெஞ்சினில் விளையாட

தித்தித்திப்பது இறைவன் செயலென
பற்றுதரும் பரமன் துணையென
சுத்தத்தொடு மனிதர் குலமொரு இசை பாட

கற்று தரும் ஒரு வகை அறிவினில்
முற்றும் தெரிவது போல் மனிதர்கள்
கற்று புகழ்பெறுவார்கள்
அவர்களும் உறவாட
திக்கு பல திமிதிமியென
தக்கத்துணை தகதகவென
தக்கக்கடல் அலையென நடமிடுஉலகாள

இம்மைக்கும் ஏழேழு
பிறவிக்கும் பற்றாகி
எழிலோடு எமையாளவா


இயல் இசை நாடக
முத்தமிழ் தம்மிலே
இயங்கியே உலகாளாவா
அம்மைக்கும் நாயகா
அப்பனே அய்யனே
அரசனே நடமாடவா

ஆடுகிற காலழகில் காடு பொடியாகவென அம்மையுடன் நீயாடவா

சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச்செய்த நீ
நெருப்புக்குள் நீரொன்று தரச்செய்த நீ(சிரிப்புக்குள்)
கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர்தந்த நீ
களிப்புக்குள் உலகங்கள் நடமாடவா (கருப்பைக்குள்)

உலகத்து நிதியே
சமயத்து பொருளே
இதயத்து அறிவே
இருளுக்கு ஒளியே

ஆடவா நடமாடவா
விளையாடவா உலகாடவா (ஆடவா)
நாத கீத போத வேத
பாவ ராக தாளமோடு (நாத)

அடியவர் திருமுடி வணங்கிட
கொடி உயர்ந்திட படை நடுங்கிட
தகதகதக தகதகவென ஆடவா
சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா (தகதக)

ஓம் நமச்சிவாய(4)

பாடல்வரிகள்: கண்ணதாசன்
பாடியவர் : கேபி சுந்தராம்பாள்.
திரைப்படம் : காரைக்கால் அம்மையார்

பூங்கொடிதான் பூத்ததம்மா


Get Your Own Hindi Songs Player at Music Plugin

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன் வண்டுதான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க
வாடைக்காற்று பூப்பறித்து போனதம்மா
(பூங்கொடி..)

ஆசைக்கு தாள் போட்டு அடைத்தென்ன லாபம்
அதுதானே குடம் தன்னில் எறிகின்ற தீபம்
மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்
மழைநீரை பொழியாமல் இருக்கின்ற மேகம்
சிலருக்கு சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது
துணிச்சல்கள் பிறக்காமல் கடஹ்வுகள் திறக்காது
காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப்போல்
(பூங்கொடி..)

தாய்க்கூட அழுகின்ற பிள்ளைக்குத்தானே
பசியென்று பறிவோடு பாலூட்ட வருவாள்
உன் வீட்டு கண்ணாடி ஆனாலும் கூட
முன் வந்து நின்றால் தான் முகம் காட்டும் இங்கே
மனதுக்குள் பல கோடி நினைவுகள் இருந்தாலும்
உதடுகள் திறந்தால் தான் உதவிகள் பெறக்கூடும்
கோழைக்கு காதலென்ன ஊமைக்கும் பாடலென்ன ஓ
(பூங்கொடி..)

படம்: இதயம்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

Tuesday, January 11, 2011

ஆனாக்கா அந்தமடம் ஆவாட்டிஇசையன்பர்களே ரொம்ப நாள் கழித்து வருகிறது இந்த வானொலித்தொகுப்பு அறிவிப்பாளினி தேவகி ஸ்ரீனிவாசன ஸ்வாரசியமான குரலில் கேட்டு மகிழுங்கள்.

1.உத்தரவின்றி உள்ளேவா,உத்தரவின்றி உள்ளேவா
2. கை நிறைய சோழி,வெள்ளிவிழா,பி.சுசீலா,வி,குமார்
3.ஆனாக்கா அந்தமடம்,ஆயிரம் ரூபாய்,பி.சுசீலா,கே.வி.மஹாதேவன்
4.பாட்டுக்காரன் பாடிப்பார்க்கலாம்,திக்குத் தெரியாத காட்டில்,எஸ்.பி.பி,எல்.ஆர்.ஈஸ்வர்,வசந்தா,எம்.எஸ்.வி
5.சுந்தரக் கண்ணே மந்திரலோகம், மல்லிகை மங்களம்,ஏ.எல்.ராகவன்,ஜமுனாராணி
6.பெண்ணும் பறவையும் ப்ரீ ப்ரீ, கல்லும் கனியாகும்,எல்.ஆர்.ஈஸ்வரி
7.லேடி லேடி, எஸ்.சி.கிருஷ்னன்,சாம்ராட்,8.கோவா மாம்பழமே, சந்திரபாபு,மனோஹடி,
8.ஓரிடம் தனிலே,கே.வி.ஜானகி,லீலா,வேலைக்காரி,
9.ப்யூடீபுல் ப்யூடிபுல் எக்ஸ்லண்ட்,சீர்காழி கோவிந்தரஜன், எல்.ஆர்.ஈஸ்வரி,மனை ஒரு குரங்கு
10.இன்பம் எங்கே இன்பம் எங்கே, சீர்காழிகோவிந்தராஜன்.

Get this widget | Track details | eSnips Social DNA

சின்ன சின்னதாய் பெண்ணேசின்ன சின்னதாய் பெண்ணே
என் நெஞ்சை முட்களால் தைத்தாய்
என் விழியின் வால் கொண்டு வீசி
இள மனதில் காயங்கள் செய்தாய்
துன்பம் மட்டும் உன் உறவா
உனை காதல் செய்தாய் தவறா

உயிரே உயிரே
காதல் செய்தால் பாவம்
பெண்மை எல்லாம் மாயம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே
பெண்கள் கண்ணில் சிக்கும்
ஆண்கள் எல்லாம் பாவம்
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே

காதல் வெறும் மேகம் என்றேன்
அடை மழையாஇ வந்தாய்
மழையோடு நனைந்திட வந்தே
நீ தீயை மூட்டினாய்
மொழியாக இருந்தேனே
உன்னல் இசையாக மலர்ந்தேனே

உயிரோடு கலந்தவள் நீதான் ஹேய் பெண்ணே
கனவாகி கலைந்திடும் எனோ சொல் கண்ணே
மௌனம் பேசியதே உனக்கது தெரியலையா
காதல் வார்த்தைகள் கண்கள் அறியலையா

துணை இன்றி தனியாய் சென்றேன்
என் நிழலாய் வந்தாய்
இழை தேடும் மாணவன் ஆனேன்
என் விடையும் நீயென
வந்தாயே என் வாழ்வில்
கடம் தந்தாயே உன் மொழியில்

என் நெஞ்சில் காதல் வந்து நான் சொன்னேன்
உன் காதல் வேரோர் மனதில் எனை நொந்தேன்
கண்கள் உள்ளவரை கடல் அழிவதில்லை
பெண்கள் உள்ளவரை ஆண்கள் ஜெயிப்பதில்லை

காதல் செய்தால் பாவம்
பெண்மை எல்லாம் மாயம்

படம்: மௌனம் பேசியதே
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஹரிஹரன், யுவன் ஷங்கர் ராஜா

Monday, January 10, 2011

பேசா மடந்தையே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

பேசா மடந்தையே
விழி பேசும் சித்திரமே
சேலைக் குழந்தையே
என் செல்லக் கலவரமே

இதயமெனும் பூப்பறித்தேன்
நரம்பு கொண்டு சரம் தொடுத்தேன்
கையில் கொடுத்தேன் கண்ணே
நீ காலில் மிதித்தாய் பெண்ணே
(பேசா மடந்தையே..)

ஏழு நிறங்களை எண்ணி முடிக்கும் முன்
வானவில் கரைந்தது பாதியிலே
மறுபடி தோன்றுமா பார்வையிலே
பெண்ணின் மன நிலை கண்டு தெளியும் முன்
வாழ்க்கை முடிந்தது குழப்பத்திலே
வானம் நடுங்குது மயக்கத்திலே

காதலை சொல்லி கரம் குவித்தேன்
கற்புக்கு பழி என்று கலங்குகிறாய்
பூஜைக்கு உனக்கு பூப் பறித்தேன்
பூக்களின் கொலை என்று நடுங்குகிறாய்

வார்த்தைகளால் காதலித்தேன்
ஜாடைகளால் சாகடித்தாய்
மழை தான் கேட்டேன் பெண்ணே
இடி மின்னல் தந்தாய் கண்ணே
(பேசா மடந்தையே..)

மூங்கில் காட்டிலே தீயும் அழகுதான்
ஆனால் அதை நான் ரசிக்கவில்லை
ஐயோ இதயம் பொறுக்கவில்லை

கோபம் மூழ்கையில் நீயும் அழகுதான்
ஆனால் அதை நான் சுகிக்கவில்லை
சகியே என் மனம் சகிக்க வில்லை

உன் சினம் கண்டு என் இதயம்
உடம்புக்கு வெளியே துடிக்குதடி
உன் மனம் இரண்டாய் உடைந்ததென்று
என் மனம் நான்காய் உடைந்ததடி

விதை உடைந்தால் செடி முளைக்கும்
மனம் உடைந்தால் புல் முளைக்கும்
தண்டனை என்பது எளிது
உன் மௌனம் வாலினும் கொடியது
(பேசா மடந்தையே..)

படம்: மொழி
இசை: வித்யாசாகர்
பாடியவர்: மது பாலகிருஷ்ணன்
வரிகள்: வைரமுத்து

Sunday, January 9, 2011

பிள்ளை தாமரை பிள்ளை தாமரைபிள்ளை தாமரை பிள்ளை தாமரை
அழுவது ஏனம்மா
விழியில் தேங்கிய கண்ணீர் துடைத்திடும்
விரல்கள் நானம்மா

இந்த தாழ்வார வீட்டுக்குள் தெய்வம் நீ
என் தாய்ப்போல வாழ்கின்ற ஆதாரம் நீ
விழியோரம் கண்ணீரை வேரோடு அறுப்பாய்
(பிள்ளை..)

ஓஹோ நூறு பூக்களும்
ஓர் காம்பில் பூக்கும் காலங்கள்
இது தானடி ஓ இதுதானடி
இரண்டு வீட்டுக்கு
ஓர் வாசல் இங்கு காண்கிறோம்
நாம் தானடி ஓ நாம்தானடி
ஒரு சிலந்தி கூட்டமாய்
பாச வலைகள் பின்னுவோம்
ஒரு வைக்கோல் கூட்டுக்குள்
பல குருவியாய் வாழ்கிறோம்
நம் கைகளிலே நம் கைகளிலே
ஆயுள் ரேகை நூறு ஆண்டு
அதில் கனிக்கும்
ஒருவர் விழியில் ஒருவர் விழிப்போம்
(பிள்ளை..)

ஓ விண்மீன் பந்தலில்
நாம்தானே வாழ்கின்றோம்
நிலவின் மடியினில்
நாம்தானே துயில்கிறோம்
இங்கு நான் உன்னை கை சேர
ஏதோ ஒரு தவம்
செய்தேனடா ஓ செய்தேனடா
ஒரு மெழுகின் குடும்பமாய்
தினம் உருகி கரைகிறோம்
சிறு எறும்பின் வரிசையாய்
ஒரு வழியில் நடக்கிறோம்
இது யார் அறிவார் இது யார் அறிவார்
ஊரும் பார்த்தால் என்ன சொல்ல
கண் படுமே
விரலாய் இருக்க மரமாய் பிறந்தோம்
(பிள்ளை..)

படம்: ஆல்பம்
இசை: கார்த்திக் ராஜா
பாடியவர்: மது பாலகிருஷ்ணன்

Saturday, January 8, 2011

கண்ணாலே மிய்யா மிய்யாகண்ணாலே மிய்யா மிய்யா
கிள்ளாதே கிய்யா கிய்யா
உள்ளே ஓர் உய்யா உய்யா
நீ இல்லாமையா
(கண்ணாலே..)

காதலால் சொக்கி பையா
இழுக்குதே கண்கள் மெய்யா
இனிக்குமே உந்தன் கையா
இதழின் ஓரம் வேரையா
(கண்ணாலே..)

பாதி கண்கள் மூடும்
மீதி கண்கள் தேடும்
மூடிக் கொண்டும் கண்கள்பார்க்கும் அல்லோ
பார்வை தப்பும் நேரம்
நாணம் கப்பல் ஏறும்
கூந்தல் கூட கொஞ்சம் கூசும் அல்லோ
முதல் முதல் எழுதும் ஹோய்
தேர்வின் பயம்தான்
உயிரினில் ஃஉழையும் ஹோய்
நேரம் இது தான்
ஹேய் கொஞ்சம் சும்மா இரு
பக்கம் வந்தால் வம்பா இது
இமை கொத்தி கிள்ளும்
இதழ் திட்டி செல்லும்
நிழல் கட்டிக் கொள்ளும்
ஒரே நிழல் மிஞ்சும்
(கண்ணாலே..)

தீயை தின்னும் நேரம்
தேகம் எங்கும் ஈரம்
மோகம் கொண்ட முத்தம் காயாதல்லோ
காமன் கட்டில் ஆடும்
மூச்சின் வெப்பம் கூடும்
ஆடை பற்றிக் கூடும் அல்லோ
தலையணை முழுதும் ஹோய்
கூந்தல் அலை தான்
ஹேய் என்னை தீண்டாதிரு தள்ளாதிரு
கண்கள் ரெண்டும் பள்ளம்
வேர்வௌ கொட்டி வெள்ளம்
கட்டில் வெட்கம் செல்லும்
ஒரே நிழல் மிஞ்சும்
(கண்ணாலே..)

படம்: அள்ளி தந்த வானம்
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: உன்னி மேனன், ஸ்ரீவர்த்தினி
வரிகள்: அறிவுமதி

Thursday, January 6, 2011

ஏய் ஞானம் அப்பா ஞானம்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஏய் ஞானம் அப்பா ஞானம்
சீதாவை காணுமாம்
பொழுது விடிஞ்சா போக போது மானம் டோய்

ஏய் ஞானம் அப்பா ஞானம்
சீதாவை காணும்
பொழுது விடிஞ்சா போக போது மானம்
(ஏய் ஞானம்..)

அன்னிக்கு போன கீதா நான் இன்னிக்கு போய் பார்த்தா
ஆயிட்டாளே ஆத்தா அவ புருஷன் ஒரு தாத்தா
(ஏய் ஞானம்..)

தாத்தாவுக்கும் கீதாவுக்கும் பொறந்திடுச்சு லவ்வு
வத்திக்குச்சி இல்லாமதான் பத்திக்கிவ்வு லவ்வு
ஐட்டம் ஒன்னு கிடைச்சுடுச்சுன்னா தாத்தா போல கவ்வு
அட டாவடிச்சு பாரு ரொம்ப டாப் டக்கர் ஜோரு
(ஏய் ஞானம்..)

செத்தவன புதைக்க போனா வெட்டியான் கேப்பான் மாலு
அட மாலு கொஞ்சம் குறைச்சு கொடுத்தா வெளிய தெரியும் காலு
உசுரு போர நேரத்துல ஊத்த மாட்டான் பாலை
நீ கால நீட்டி படுத்து புட்டா எவ்வளோ பெரிய மாலை
(ஏய் ஞானம்..)

தமிழ் நாட்டுல வந்ததுங்க தண்ணிக்கு கூட பஞ்சம்
மேலிடத்துல சொல்ல போனா கேக்குறாங்க லஞ்சம்
லஞ்ச பணத்துல தண்ணி வந்தது டேன்க்ல தான் கொஞ்சம்
அந்த கியூல நிக்கிற சிஸ்டர் அட அங்கே போனா கஷ்டம்
(ஏய் ஞானம்..)

படம்: இந்து
இசை: தேவா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வாலி

Wednesday, January 5, 2011

ஏ குட்டி முன்னால நீ பின்னால நான் வந்தால


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஏ குட்டி முன்னால நீ பின்னால நான் வந்தால
ஏதோ எம்மனசுதான் படப்படங்குது உன்னால
(ஏ குட்டி..)
டீ ரொட்டி என்னோட நீ இல்லாம நான் துன்னால
ஏதோ என் வவுருதான் கடபுடங்குது தன்னால

மை டியர் மைனா உங்க நைனா கிட்ட சொல்லாத
பண்னாத ரவுசுதான் பல பலங்குது ப்ளைசுதான்
பண்னாத ரவுசுதான் பள பளங்குது ப்ளைசுதான்
(ஏ குட்டி..)

ஹேய் குமரிப்பொண்ணு கொழாப்புட்டு கன்னம் ரெண்டும் கமர்க்கட்டு
மச்சி உன் அழக கண்டு மயங்குதடி பொள்ளாச்சிதான்
எதுக்கு இங்க டபாய்க்கிற எங்கிட்ட நீ சதாய்க்கிற
சின்ன குட்டி செவந்த குட்டி சிக்குமானு வெடாய்க்கிற
வெண்ணையின்னா வெண்ண இது ஊத்துக்குளி வெண்ண இது டோய்
இது ஒரச ஒரச உருகுதுடா டோய்
ஹேய் மச்சான் இங்க வுடாத நீ டூப்பு டூப்பு
ஹு ஆனை மலை பச்சைக்கிளிதான் தோப்பு தோப்பு
ஹேய் ஆத்தா எம்மனசைதான் நீ கடையுறியே மத்தாள
(டீ ரொட்டி..)
(ஏ குட்டி..)

உரலு ஒன்னு அங்க இருக்கு உலக்க ஒன்னு இங்க இருக்கு
ந்நெல்லு குத்தும் நேரம் எது சொல்லுடி என் சித்திரமே
பல்லு குத்தும் பவுசு இல்லை பாவம் நீதான் விடல பையன்
நெல்லு குத்த இடம் கொடுத்தா மாட்டிக்குவ ஒரலுக்குள்ளே
கட்டையின்னா கட்ட இது கடஞ்செடுத்த்ட நாட்டு கட்ட டோய்
இவ அலுக்கி குலுக்கி அசத்திப்புட்டா டோய்
ஹோய் ஓட்டமாத்தான் ஒடுங்கி நில்லு தூரம் தூரம்
நாங்கடிச்சா பச்ச மொளகா காரம் காரம்
ஹேய் பாத்தா உன் சொகுசுதான் விசிலடிக்குது மனசுதான்
(ஏதோ என் மனசுதான்..)

படம்: இந்து
இசை: தேவா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
வரிகள்: வாலி

Tuesday, January 4, 2011

வா முனிம்மா வா முனிம்மா


Get Your Own Hindi Songs Player at Music Plugin

கொத்தமல்லி வாசம் கொத்து கொத்தா வீசும்
அப்படித்தான் மாமன் அத்தை மவ நேசம்
வெண்ணையில மாமா நெய் வாசம்
என் திண்ணையில மாமா உன் வாசம்

கொத்தமல்லி வாசம் கொத்து கொத்தா வீசும்
அப்படித்தான் மாமன் அத்தை மவ நேசம்
வெண்ணையில மாமா நெய் வாசம்
என் திண்ணையில ந ந நாராசம்

நான்சன்ஸ்
ஏய் என்ன திட்டுற
உனக்கு பாட்டுதானே வேணும்?
ஏ பட்டாசு
இப்போ பாரு பட்டைய கிளப்புறேன்

ஹேய் வா முனிம்மா வா முனிம்மா வா முனிம்மா வா
ஹேய் வா முனிம்மா வா முனிம்மா வா முனிம்மா வா
அடி நீயும் நானும் ஜோடி சும்மா பீச் சு பக்கம் வாடி
அடி நீயும் நானும் ஜோடி சும்மா பீச் சு பக்கம் வாடி

அதோ வர்றா பொண்ணு நம்ம ஆயா கடை பன்னு
அதோ வர்றா பொண்ணு நம்ம ஆயா கடை பன்னு
இளிச்சிடாத நின்னு அவ கட்டிடுவா டின்னு
இளிச்சிடாத நின்னு அவ கட்டிடுவா டின்னு
தண்ணி கொண்டா சொம்புல தள்ளி நிக்கும் பொம்பளை
தண்ணி கொண்டா சொம்புல தள்ளி நிக்கும் பொம்பளை
கோவம் வந்தா வம்புல நான் அடிச்சுடுவேன் கொம்புல
(வா முனிம்மா..)

ஒன்னும் ஒன்னும் ரெண்டு நான் கினத்துக் கடவு நண்டு
ஒன்னும் ஒன்னும் ரெண்டு நான் கினத்துக் கடவு நண்டு
நீயும் நானும் ஃபிரண்டு உங்க வாத்தியாரு மண்டு
நாலும் நாலும் எட்டு நம்மை பிரிக்க வந்தா வெட்டு
எட்டு ரெண்டு பத்து நம்ம நண்பர் எல்லாம் முத்து
ராவையரா ரா ராத்திரிதான் ரா
ஜிங்குனு ஜோரா நீயும் தட்டிடு ஜால்ரா
ஜிங்குனு ஜோரா நீயும் தட்டிடு ஜால்ரா
(வா முனிம்மா..)

ஐயோ யம்மா காலு அங்க கொட்டிடுச்சு தேளு
ஐயோ யம்மா காலு அங்க கொட்டிடுச்சு தேளு
கை கொடுத்த ஆளு நம்ம கழுத்தருத்தான் பாரு
சும்மா நின்ன சங்கு இதை ஊதிப்புட்டா இங்கு
எங்கே எங்க பங்கு இல்ல எழுத்திடுவோம் நொங்கு
ராவையரா ரா ராத்திரிதான் ரா
ஜிங்குனு ஜோரா நீயும் தட்டிடு ஜால்ரா
(வா முனிம்மா..)

படம்: இந்து
இசை: தேவா
பாடியவர்கள்: மனோ, மின்மினி
வரிகள்: வாலி

Monday, January 3, 2011

திட்றாங்க திட்றாங்க திட்றாங்க திட்றாங்க


Get Your Own Hindi Songs Player at Music Plugin

திட்றாங்க திட்றாங்க திட்றாங்க திட்றாங்க
எதுக்கு திட்றாங்க
திட்றாங்க திட்றாங்க திட்றாங்க திட்றாங்க

திட்றாங்க திட்றாங்க திட்றாங்க திட்றாங்க
எதுக்கு திட்றாங்க
திட்றாங்க திட்றாங்க திட்றாங்க திட்றாங்க

தம் அடிச்சா திட்றாங்க
அட தண்ணி அடிச்சா திட்றாங்க
சைக்ட் அடிச்சா திட்றாங்க
பெண்ணை ரக்ட் கொடுத்தா திட்றாங்க
ராகிங் பண்ணா திட்றாங்க
நைட் வால்கிங் போனா திட்றாங்க
டேடியும் மம்மியும் திட்றாங்க
ஒரு டால்பி சவுண்டில் திட்றாங்க
(திட்றாங்க..)

வெள்ளைக்காரன் போயிட்டான்னு கொடி ஏத்தி சொல்றாங்க
இங்கிலீஷில் ஃபெயிலா போனா எக்குதப்பா திட்றாங்க
ஃபைனான்ஸில் பணத்த சுட்டா ஸைலண்டா விடுறாங்க
டீ கடையில் அக்கவுண்டு வச்சா வயலண்டா திட்றாங்க
பில் கேட்ஸ் பரம்பரைன்னு லவ் பண்ண வர்றாங்க
பாக்கேட் மணி காலி ஆனா வேஸ்ட்டுன்னு திட்றஆங்க
பெருசுங்க தம் அடிச்சா டென்ஸ்ஹன்னு சொல்றாங்க
சிறுசுங்க தம் அடிச்சா தேராதுன்னு திட்றாங்க
மாமு மாமு மாமு மாமு
தோடா ஃபீலிங்ஸ் மச்சி டோண்ட் வோரி டேக் இட் ஈசி டா
பேச்சலர் லைஃப்ல தப்பெல்லாம் பண்ணிட்டு
பேரண்ட்ஸ் ஆனதும் ஃபியுச்சர் சொல்லி திட்றாங்க திட்றாங்கப்பா
(திட்றாங்க..)

ஆண்டி சூப்பர்ன்னா ஸ்டுபிட்ன்னு திட்றாங்க
ஸ்கூட்டி ஃபாலோ பண்ணா நாட்டின்னு திட்றாங்க
ஃபிகருக்கு ரூட்டு போட்டா எல்லாரும் திட்றாங்க
தியேட்டரில் விசில் அடிச்சா தோர்ச்சருன்னு திட்றாங்க
சீட் மேலே காலை வச்சா சீக்ரட்டா திட்றாங்க
பிஞ்சிலே பழுத்ததுன்னு பார்த்தவங்க திட்றாங்க
ஃபிரண்ஷிப் சரியில்லைன்னு அப்பா அம்மா திட்றாங்க
மாமு மாமு மாமு மாமு
டேய் மச்சான் மனசு விட்ராதடா
எல்லாத்துக்கு நம்ம மேல பொகைச்சல் டாஅ
(திட்றாங்க..)

படம்: கும்மாளம்
இசை: காந்திதாசன்
பாடியவர்கள்: யுகேந்திரன், திப்பு

Sunday, January 2, 2011

சுத்துதே சுத்துதே பொண்ணு ஒன்னு சுத்துதே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

சுத்துதே சுத்துதே பொண்ணு ஒன்னு சுத்துதே
சொக்குதே சொக்குதே ஹேய் கண்ணு ரெண்டும் சொக்குதே
அண்ணனோட தோழி கிட்ட அக்கம் பக்கம் ஆண்டி கிட்ட
தம் அடிச்சி மாட்டிக்கிட்டா கெஞ்ச வேணாம்
தங்க பஸ்பம் நான் இருக்க
தாகம் கொண்டு வாட்டம் என்ன
என்னை வந்து அள்ளி தின்ன அஞ்ச வேணாம்
லேப்டாப் யுவதியே காஸ்ட்லி கவிதையே
லைஃப் லாங் ரசிகையே வா வா நெருங்கியே
(சுத்துதே..)

நீரோவின் நகல் நான் ஆழ்வார்கள் குழல் நான்
ஆள் காட்டி விரலால் மை போடும் மதன் நான்
வேதாள கதை நான் தாராள யுவன் நான்
ஒரு பாதி பிழை நான் ஆனாளும் கலை நான்
கேய் கிமு முதல் அட கிபி வரை
காதலுக்கு கிராம்மர் இல்லையே
அட நின்றுக்கொண்டே தினம் எண்ணிக்கிடும்
உயர் நட்சத்திரம் நொம்ப இல்லையே
ஜீரோ டிக்ரீ கனவோடு திரியும் அழகன் நானடி
டாலர் கணக்கில் முத்தங்கள் கேட்கும் கலைஞன் நானடி
ஆல் க்ளாஸ் ரசிகன் நான் பச்சை தமிழன் நான்
பிறவி கலைஞன் நான் வான் அண்ட் ஆன்லி நான்
(சுத்துதே..)

ஒரு கோடி கிடைத்தால்
சரி பாதி கொடுப்பேன்
சரி ஜோடி கிடைத்தால்
சளிக்காமல் சுகிர்ப்பேன்
விழுந்தாலும் மழையாய் பெண் மீது விழுவேன்
எரிந்தாலும் மெழுகாய் அவள் வீட்டில் எரிவேன்
இரு கண்ணை கட்டி இருள் காட்டில் விட்டால்
பல கைகள் ரெண்டும் பென்ணை தேடுதே
அட கொட்டும் மழை அது வற்றும் வரை
சில எல்லை மீற நெஞ்சம் துள்ளுதே
கனவில் திரியும் பெண்ணோடு இணைந்து உலகை சுற்றவா
உலகை சுற்றும் நிமிடங்கள் தோறும் கனவை தேடவா
டேக்கோ இரவு நான் தான்சன் விளக்கு நான்
மூன்லைக்ட் நிகழ்ச்சி நான் ஸ்விஸ் பேங்க் கர்ரன்ஸி நான்
(சுத்துதே..)

படம்: நேபாளி
இசை: ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர்கள்: யுகேந்திரன், விஜய்

Saturday, January 1, 2011

where do we gO


Get Your Own Hindi Songs Player at Music Plugin

where do we gO
well iam sorry girl
where do we gO
will love find the way
where do we gO
will it take us far
where do we gO

கண்களுக்கு கண் இமை சுமையாக
பூக்களுக்கு வாசனை வலியாக
பூமிக்கு தான் மழை என்ன பகையாக
நீ எனக்கு

என்ன சொல்ல ஏதோ ஓர் உணர்ச்சி
உள்ளுக்குள்ளே ஒளி விட்டு சுழற்சி
சோகத்துக்குள் ஒரு துளி மகிழ்ச்சி
என்ன இது

என்றென்றும் வாழ்க்கையிலே
எது நடக்கும் ஏதும் நடக்கும்

where do we gO
well iam sorry girl
where do we gO
will love find the way
where do we gO
will it take us far
where do we gO

படம்: புதுக்கோட்டையிலிருந்து சரவணன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: பா. விஜய்

Last 25 songs posted in Thenkinnam