Wednesday, March 11, 2009

996. படிக்காதவன் - ஏ வெற்றிவேலா

ஏ வெற்றி வேலா நம்ம ஆட்டம்தான் எகுறுது தோழா
ஏ அடி ஜோரா நாம எப்போதும் ஜெயிக்கணும் தோழா
பள்ளிக்கூடம் போகாமலே ஃபர்ஸ்ட் க்ளாஸில் பாஸ் ஆன கூட்டம் இது
பாடம் கீடம் படிக்காமலே நான் சொல்லும் அன்பான பாடம் இது
ஏத்தி விட்டா ஏத்தி விட்டா ஏறலாம் ஏறலாம் முன்னேறலாம்
சுத்தி சுத்தி உன்னை சுத்தி ஆட்டம்தான் போட்டுதான் கொண்டாடலாம்
(ஏ வெற்றி வேலா..)

என் பேரு ஊரில் படிக்காதவன்
ஆனாலும் பொய்யா நடிக்காதவன்
ஆறேழு டிக்ரீ முடிக்காதவன்
யார் காலும் வார துடிக்காதவன்
புரட்சி தலைவரு எங்கேடா படிச்சாரு?
டாக்டர் பட்டம் கொடுத்தாங்கப்பா
ஐயா கலைஞரு எழுதாத எழுத்தா
எந்த காலேஜ் போனாருப்பா?
நான் படிச்ச நல்ல பாடம்தான் இது இது
(ஏ வெற்றி வேலா..)

டெந்துல்கர் படிச்சது பத்தாவது
ஆனாலும் அடிச்சார் நூறாவது
அம்பானி காலேஜ் போனதுல்ல
ஆனாலும் பேரு வானம் போல
சைக்கிள் கடைதான் வச்சாங்க பசங்க
ஃப்ளைட்டு கண்டு பிடிச்சாங்கப்பா
தானா படிச்சு தனியாளா ஒருத்தன்
ட்ரெயினு செஞ்சு முடிச்சானப்பா
ஏய் அடிடா வெறும் மேளம்தான் பிப்பி டும்டும்
(ஏ வெற்றி வேலா..)

படம்: படிக்காதவன்
இசை: மணிஷர்மா
பாடியவர்கள்: நவீன், ரஞ்சித்

Tuesday, March 10, 2009

995. யாரோ எவளோ என்று தெரியவில்லை

யாரோ எவளோ என்று தெரியவில்லை
துளியா கடலா என்று புரிவதில்லை
ஏதோ செய்தாய் என்னை அறிவதில்லை
நானும் நானாய் இன்று இல்லை இல்லை

என் என் என்ன செய்தாய்
என்னை என்ன செய்தாய்
ஏன் இப்படி ஆகிவிட்டேன்
நான் மெல்ல மெல்ல காதல் என்னும் ஏணி படி ஏறிவிட்டேன்
நகம் நறுக்க சென்று விரலை நறுக்கி கொண்டேன்
இன்னும் என்னை என்ன செய்வாயோ
(யாரோ எவளோ..)

மின்சாரம் ரோஜாப்பூ தீ ஜுவாளை
கார் மேகம் எல்லாமே ஒன்றான பெண் கண்டேன்
விஞ்ஞானம் மெய் ஞானம் மேல் வானம் கீழ் ஞானம்
எல்லாமே ஒன்றான கண் கண்டேன்
ஆஹா பூ மரமோ தேன் குளமோ சிற்றின்பமோ பேரின்பமோ
சத்தியமா நிச்சயமா நீ இன்ப தொல்லையா
(யாரோ எவளோ..)

அசையாத மலை செய்து மலையெங்கும் சிலை செய்து
என் முன்னே பெண் ஆகி வந்ததோ தங்கத்தில் தூண் செய்து
தூணுக்கு துணி நெய்து பெண்ணே உன் தேகம் ஆனதோ
ஹா அங்கங்கே ஹோ மெல்லினம் ஹோ அழகுக்கு ஹோ
உயிர் சின்னமோ எத்தனையோ எத்தனையோ
நான் சொல்ல வந்தது இத்தனைதான் இத்தனைதான்
என் கண்கள் கண்டது
(யாரோ எவளோ..)

படம்: ரெண்டு
இசை: D இம்மான்
பாடியவர்: ரஞ்சித்

994. நீ என் தோழியா இல்லை காதலியா





நீ என் தோழியா இல்லை காதலியா
நீ என் தோழியா இல்லை காதலியா
தோழி என்றால் என் உயிரை கொடுப்பேன்
காதலி என்றால் உன் உயிரை எடுப்பேன்

நீ என் தோழியா இல்லை காதலியா
நீ என் தோழியா இல்லை காதலியா
என் உயிரை எத்தனை முறை
வென்றாலும் எடுத்துக்கொள் நீ எடுத்துக்கொள்
ஆனால் என்னை உடனே உன் தான் உயிரில் காதலியாய்
மாற்றிக்கொள் என்னை மாற்றிக்கொள்
நீ என் தோழியா இல்லை காதலியா
நீ என் தோழியா இல்லை காதலியா

கையும் காலும் ஓடாது கண் இமையும் ஆடாது
கண்ணி நெஞ்சம் தூங்காது பஞ்சு மெத்தை கேட்காது
பையா பையா காதல் நீதான்
சொல்லாமல் இதயத்தை எடுத்து நீட்டு நீ
சொல்லுற எந்தன் காட்டுல இதழ்களை கொஞ்சம் காட்டு நீ
எழுதுகிறேன் காதல் உயிலை நானே
கத்தி இன்றி ரத்தம் இன்றி பிச்சி தர்ரேன் இதயத்த
காதலன் காதலி வரிசையில் சேர்ந்திட்டோம் நாமதான்
நீ என் தோழியா இல்லை காதலியா
நீ என் தோழியா இல்லை காதலியா

சொன்ன பேச்சை கேட்காது
அப்பா மூஞ்ச பார்க்காது
அம்மா கூட பேசாது
நேரம் காலம் தெரியாது
பொண்ணுக்குத்தான் காதல் மட்டும் வந்தாலே
உன்னை விட மோசம் நானடி
ஊரு பேரு மறந்து போச்சுடி
மூளை கூட கயந்து போச்சுடி
எனக்குள்ளே நீ வந்ததாலே விடு விடு
காதலிக்க மூளையெல்லாம் எதுக்குடா
போடி உன்னை காதலிக்க
மூளை ஒன்னும் வேண்டாமடி
எனக்கு இது வேணும்டா
இன்னமும் வேணும்டா தேவுடா
(நீ என் தோழியா..)

படம்: ரெண்டு
இசை: D இம்மான்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், சுஜாதா

Monday, March 9, 2009

993. குறை ஒன்றும் இல்லை என் காதலியே





யாஹூ..
தள்ளி தள்ளி தள்ளி என்னை விட்டுட்டாளே இந்த காதல் கடலில்
கிளு கிளு கிளுப்பாக என்னை வச்சுட்டாளே உடல் நோகும் வரையில்

குறை ஒன்றும் இல்லை என் காதலியே குறை ஒன்றும் இல்லை
குறை ஒன்றும் இல்லை என் காதலியே குறை ஒன்றும் இல்லை
நான் பார்த்ததும் பார்த்தாய் நான் சிரித்ததும் சிரித்தாய்
நான் அழைத்ததும் வந்தாய் என் அருகில் நின்றாய்
நான் காதலை சொன்னதும் ஏற்றுக்கொண்டாய் நம்ப முடியவில்லை
குறை ஒன்றும் இல்லை என் காதலியே குறை ஒன்றும் இல்லை

ஒரு நாள் முழுவதும் உன்னை இமைக்காமல் பார்க்க வேண்டும்
இதுவே என் கண்களின் முதல் ஆசை வாழ்நாள் முழுவதும் உன்னை
கண்ணாக காக்க வேண்டும் இதுவே என் இமைகளின் முதல் ஆசை
உனக்காக ஓவாமல் கடிகாரம் பார்க்காமல்
உழைப்பதே என் கைகளின் ஆசை ஆகை மழை கால தவளை போல
விழிய விழிய உன் பெயரை சொல்ல வேண்டும் என்பதே என் குரள் ஆசை
குறை ஒன்றும் இல்லை என் காதலியே குறை ஒன்றும் இல்லை

ஜென்மம் முழுவதும் உந்தன் துணையாக வாழ வேண்டும்
இதுவே என் உடலின் முழு ஆசை ஒரு யுகம் முழுவதும் உந்தன்
நிழலாக மாற வேண்டும் இதுவே என் பிறப்பின் முழு ஆசை
உனக்காகவே வாழ்ந்து உன் மீது நான் சாய்ந்து
இறப்பதே என் உயிரின் ஆசை கோவில் குளம் சுற்றும் பக்தை போல
தினம் தினம் நான் உன்ன சுற்றும் வேண்டும் என்பதே என் பேராசை
(குறை ஒன்றும்..)

படம்: ரெண்டு
இசை: D இம்மான்
பாடியவர்கள்: அதர்ஷ், ஜெய்

992. ரோஜாக்காடு சுடிதார் போட்டு




ரோஜாக்காடு சுடிதார் போட்டு
மதுரை வீதியில் வந்தா
அட மனம் குதிக்குது பந்தா
கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா
தீயாய் இருந்தேனடா திரியாய் வந்தாளடா
கலக்கும் காட்டாறு நான் தரையே அவள் தானடா
(ரோஜாக்காடு..)

அழகு பெண்ணழகு ஆயிரம்தான் இருக்குதடி
ஆன என் மனசு உன் மடியில் விழுந்ததடி
ஓ பிடிச்சது முன்னழகோ பின்னழகோ இல்லையடி
அதுக்கும் மேலே ஒரு தாயழகும் உள்ளதடி

அவள பொண்ணு கேட்டு போடப் போறேன் தாலி
திருபுரன் குன்றத்து கோவிலிலே மேலே மாசி வீதி வர
மேலே சட்டம் கேட்கும் மூனு முடி போடும் வேளையிலே
வீட்டுக்குள்ளே பாய் போடுவேன் பிள்ளை பெத்து வெளியேறுவேன்
அவள மனம் முடிச்சு அரசர் அடியில் குடியிருப்பேன்
வேர்த்த அழகர் மலை காற்றை கொஞ்சம் திருப்பி வைப்பேன்

மதுரை மல்லிகை பூ வண்டி கட்டி வாங்கி வருவேன்
மேட்டினிக்கு டைட்டானீக் இங்க்லீஷ் படம் பாக்க வைப்பேன்
செம்பு வலை விரல் விட்டு நகம் விழுந்தாலும் அந்த ஒரு
முட்ட வச்சிருப்பேன் பட்டு வண்ண கூந்தல் விட்டு
ம்டி விழுந்தாலும் பரம்பரை சொட்டாக வச்சிருப்பேன்
மடியில் சீராட்டுவேன் விடிந்திடும் வாலாட்டுவேன்
(ரோஜாக்காடு..)

படம்: ரெட்
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன்

Sunday, March 8, 2009

991. தாய் மடியே உன்னை தேடுகிறேன்




தாய் மடியே உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக வாடுகிறேன்
பத்து திங்கள் என்னை சுமந்தாயே
ஒரு பத்தே நிமிடம் தாய் மடி தா தாயே
நீ கருவில் மூடி வைத்த என் உடம்பு
நடு தெருவில் கிடைக்கிறது பார்த்தாயோ
உதிரம் வெளியேறும் காயங்களில்
என் உயிரும் கொலுகும் என்னை பார்த்தாயே
தெய்வங்கள் இங்கில்லை உன்னை அழைக்கின்றேன்

விண்ணை இடிக்கும் தோள்கள் மண்ணை அளக்கும் கால்கள்
அள்ளி கொடுத்த கைகள் அசைவில் வந்தேனே
காணல்கள் தின்னும் கன்னங்கள்
கனிந்து நிற்கும் இதழ்கள்
உதவி செய்யும் பார்வை
உயிர் குறைந்ததென்ன பாரத போர்கள்
முடிந்தபின்னும் கொடுமைகள் இங்கே குறையவில்லை
ஏசுகள் என்றோ மாண்ட பின்னாலே
சிலுவைகள் இன்னும் மறிக்கவில்லே

படை நடத்தும் வீரன் பசித்தவர்கள் தோழன்
பகைவருக்கும் நண்பன் அழுக்கில் அவன் என்ன
தாய் பாலை உண்ட ரத்தம்
தரை விழுந்ததென்ன இவன் பேருக்கு ஏற்ற வண்ணம்
நிலம் சிவந்ததென்ன தீமைகள் என்றும்
ஆயுதம் ஏந்தி தேர்களில் ஏறி வருவதென்ன
தர்மங்கள் என்றும் பல்லக்கில் ஏறி
தாமதமாக வருவதென்ன

படம்: ரெட்
இசை: தேவா
பாடியவர்: கார்த்திக்

990. மழைத்துளி மழைத்துளி





மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
(மழைத்துளி..)

ஆழாலகண்டா ஆடலுக்கு தகப்பா வணக்கமுங்க
என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும்
நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்றபோதும்
சபை ஆடிய பாதமிது நிக்காது ஒரு போதும்
(மழைத்துளி..)

தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல
எனக்குள்ள நான் அழுதா துடிக்கவே எனக்கொரு நாதியில்ல
என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரம் ஆகுமே
சபதம் சபதம் என்றே சலங்கை சலங்கை பாடுமே
மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
விழியே விழியே இமையே தீயும்போதும் கலங்காதிரு

நதி நதி அத்தனையும் கடலில் சங்கமம்
நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்
கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்
(மழைத்துளி..)

மழைக்காகத்தான் மேகம் அட கலைக்காகத்தான் நீயும்
உயிர் கலந்தாடுவோம் நாளும் மகனே
நீ சொந்தக்காலிலே நில்லு
தலை சுற்றும் பூமியை வெல்லு
இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்
புலிகள் அழுவது ஏது அட பறவையும் அழ அறியாது
போர்க்களம் நீ புகும்போது
முள் தைப்பது கால் அறியாது
மகனே காற்றுக்கு ஓய்வென்பது ஏது அட ஏது
கலைக்க்கொரு தோல்வி கிடையாது கிடையாது

படம்: சங்கமம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஹரிஹரன், MS விஸ்வநாதன்

Saturday, March 7, 2009

989. நதியே நதியே காதல் நதியே





தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண் தானே
அடி நீயும் பெண் தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ
சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைந்தோடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே
சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைந்தோடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே
தினம் மோதும் கரை தோறும் அட யாரும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

காதலில் அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உறையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

படம்: ரிதம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: உன்னி மேனன்

988. ஹைர ஹைர ஹைரப்பா



எனக்கே எனக்கா மதுமிதா மதுமிதா

ஹைர ஹைர ஹைரப்பா
ஹைர ஹைர ஹைரப்பா
ஃபிஃடி கேஜி தாஜ்மஹால் எனக்கே எனக்கா
ஃப்ளைக்டில் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா
ஹைர ஹைர ஹைரப்பா
ஹைர ஹைர ஹைரப்பா
பாக்கேட் சைஸில் வெண்ணிலவு எனக்கே எனக்கா
ஃபேக்ஸில் வந்த பெண் கவிதை எனக்கே எனக்கா
முத்த மழையில் நனைஞ்சுக்கலாமா
கூந்தல் கொண்டு துவட்டிக்கலாமா
உன்னை எடுத்து உடுத்திக்கலாமா
உதட்டின் மேலே படுத்துக்கலாமா
பட்டுப் பூவே குட்டித் தீவே
விரல் இடைத்தொட வரம் கொடம்மா
(ஹைர..)

அன்பே இருவரும் பொடிநடையாக
அமேரிக்காவை வலம் வருவோம்
கடல்மேல் சிவப்பு கம்பளம் விரித்து
ஐரோப்பாவில் குடி புகுவோம்
நம் காதலை கவிப்பாடவே ஷெல்லியின் பைரோனின்
கல்லரை தூக்கத்தை கலைத்திடுவோம்
விண்ணைத்தாண்டி நீ வெளியில் குதிக்கிறாய்
உன்னோடு நான் என்னானதோ
கும்மாளமோ கொண்டாட்டமோ
காதல் வெறிய்இல் நீ காற்றை கிழிக்கிறாய்
பிள்ளை மனம் பித்தாகுமோ
என்னாகுமோ ஏதாகுமோ
வாடைக் காற்றுக்கு வயசாச்சு
வாழும் பூமிக்கு வயசாச்சு
கோடியுகம் போனாலென்ன
காதலுக்கு எப்போதும் வயசாகாது
(ஹைர..)

ச்செர்ரிப் பூக்களை திருடும் காற்று
காதில் சொன்னது ஐ லவ் யூ
சைப்ரஸ் மரங்களில் தாவும் பறவை
என்னிடம் சொன்னது ஐ லவ் யூ
உன் காதலை நீ சொன்னதும்
தென்றலும் பறவையும்
காதல் தோல்வியில் கலங்கியதே
ஒற்றைக் காலிலே நின்றாடத்தான்
பூமாலையே பூச்சூடவா
சிந்தும் மழைத்துளி மண்ணில் வீழ்வது
உன் கன்னத்தில் முத்தாடத்தான்
நானும் உன்னை முத்தாடவா
இதயம் துடிப்பது நின்ற்ஆலும்
இரண்டு நிம்டம் உயிரிருக்கும்
அன்பே எனை நீ நீங்கினால்
ஒரு கணம் என்னுயிர் தாங்காது
(ஹைர..)

படம்: ஜீன்ஸ்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், SP பல்லவி

Friday, March 6, 2009

987. அன்பே அன்பே கொல்லாதே



அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கில்லாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே
(அன்பே..)

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா ப்ரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி
மின்னலைப் பிடித்து தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கி
சிற்பிகள் செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி
(அன்பே..)

கொடுத்து வைத்த பூவே பூவே
அவள் கூந்தல் மனம் ச்ல்வாயா
கொடுத்து வைத்த நதியே நதியே
அவள் குளித்த சுகம் சொல்வாயா
கொடுத்து வைத்த கொலுசே கொலுசே
அவள் கால் அளவைச் சொல்வாயா
கொடுத்து வைத்த மணியே மணியே
அவள் மாரழகைச் சொல்வாயா

அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு
உயிருக்கு உயிராய் உரையிடுவேன்
மேகத்தைப் பிடித்து மெத்தை அமைத்து
மெல்லிய பூ உன்னை தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மாது வேர்கின்ற போது
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்
பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக
பனித்துளியெல்லாம் சேகரிப்பேன்
தேவதை குளித்த துளிகளை அள்ளி
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்
(அன்பே..)

படம்: ஜீன்ஸ்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்:ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம்

986. ஷாந்தி ஷாந்தி ஓம் ஷாந்தி ஒரே





ஷாந்தி ஷாந்தி ஓம் ஷாந்தி ஒரே
ஷாந்தி ஷாந்தி ஓம் ஷாந்தி ஒரே
சம்பா சம்பா ஓ லம்பா ஒரே க ச ரி ரி
ஓ லம்பா ஒரே க ச ரி ரி க க ப க ரெ

ஓ ஷாந்தி ஓம் ஷாந்தி நான் பாடட்டா சந்தோஷம்
என் தேசம் நான் ஆடட்டா அம்மணி அம்மணி
உன் பணத்துக்கும் உனக்கும் த த த த
ஓ ஷாந்தி ஓம் ஷாந்தி நான் பாடட்டா சந்தோஷம்
என் தேசம் நான் ஆடட்டா அம்மணி அம்மணி
உன் பணத்துக்கும் உனக்கும் த த த த
சம்பா சம்பா ஓ லம்பா ஒரே க ச ரி ரி
ஓ லம்பா ஒரே க ச ரி ரி க க ப க ரெ
என் இசை கேட்டால் நகக்கண்ணும் விழிக்கும்
என் தமிழ் கேட்டால் தண்டவாளம் துளிர்க்கும்
இயற்கை அழகினில் எனக்கொரு மயக்கம்
செயற்கை கோள்களில் என் புகழ் மணக்கும்
மக்களே மக்களே நீங்கள் தான் நினைத்தால்
எதுவும் நடக்கும்

சம்பா சம்பா ஓ லம்பா ஒரே
க ச ரி ரி க க ப க ரெ சம்பா சம்பா
ஓ லம்பா ஒரே க ச ரி ரி க க ப க ரெ
ஷாந்தி ஷாந்தி திக் திக் தாரா
திக்கி திக்கி தை திக்கி ஷாந்தி ஓம் தை
திக் திக் தாரா திக்கி திக்கி தை திக்கி ஷாந்தி ஓம்
ஷாந்தி ஷாந்தி ஷாந்தி ஷாந்தி
சிங்கார குயில்கள் ஸ்ருதி சொல்ல வேண்டும்
சங்கீத காற்றில் ஜதி சொல்ல வேண்டும்
வங்காள கடலும் கை தட்ட வேண்டும்
விண்மீன்கள் அமைக்காதோ வெண் நிலாவில்
எனக்கோர் ரசிகர் மன்றம்

Samba Lamba Am Gonna Make You Scary
Big Fat Ruby Lups Hard To Carry
Is It Ever Gonna Ever Gonna Feel So Wiery
Street And Not Be Stones And Fairies The Feline
The Bow And The Pisces And The Aries
In A Gonna In A Gonna In A Gonna Fiery
Caught Up In The Middle Caught Up In The Meantime
Caught Up In The Middle Of A Nameless World
Had You Stop Squeeze Stop Whole Bunch
Crash Town Girl You' ve Got One Big Problem

சம்பா சம்பா ஓ லம்பா ஒரே
க ச ரி ரி க க ப க ரெ சம்பா சம்பா
ஓ லம்பா ஒரே க ச ரி ரி க க ப க ரெ
ஓ ஷாந்தி ஓம் ஷாந்தி நான் பாடட்டா சந்தோஷம்
என் தேசம் நான் ஆடட்டா அம்மணி அம்மணி
உன் பணத்துக்கும் உனக்கும் த த த த

Samba Lamba Am Gonna Make You Scary
Big Fat Ruby Lups Hard To Carry
Is It Ever Gonna Ever Gonna Feel So Wiery
Street And Not Be Stones And Fairies The Feline
The Bow And The Pisces And The Aries
In A Gonna In A Gonna In A Gonna Fiery
Caught Up In The Middle Caught Up In The Meantime
Caught Up In The Middle Of A Nameless World
Had You Stop Squeeze Stop Whole Bunch
Crash Town Girl You' ve Got One Big Problem

படம்: லவ் பெர்ட்ஸ்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: அஸ்லாம் முஸ்தஃபா

Thursday, March 5, 2009

985. கம் ஆன் கம் ஆன் ஓ காமாட்சி



கம் ஆன் கம் ஆன் ஓ காமாட்சி
கண்ணாமூச்சிதான் என் காட்சி
கம் ஆன் கம் ஆன் ஓ காமாட்சி
கண்ணாமூச்சிதான் என் காட்சி
கோழி முட்டைக்குள் முயலை எடுக்கிறேன்
இதுதான் என் கண்காட்சி
மணலை திரித்து மல்லிகை ஆக்குறேன்
மாலா ஓ நீ சாட்சி
கம் ஆன் கம் ஆன் ஓ காமாட்சி
கண்ணாமூச்சிதான் என் காட்சி

ம ம மேஜிக் நோ நோ லாஜிக்
ம ம மேஜிக் நோ நோ லாஜிக்
மேஜிக் மேஜிக் டவுன் மேஜிக் ஹெவன் மேஜிக்
மேஜிக் கூல் மேஜிக் கூல்
அப்பர் மேஜிக் டவுன் மேஜின்
ஹெவன் மேஜிக்

பெண்ணின் தலையை நான் தடவினால்
கூந்தல் ஆற்டி வளருமே
குண்டு பையனை தொட்டு பார்த்ததும்
தொப்பை மாயமாய் மாறையுமே
கணக்கு புரோஃபஸர் கோட் பையிலே
கருத்தடை சாதனம் இருக்குமே
தண்ணீ அடிச்சவன் கையில் இன்னைக்கு
ஆறு விரல் முளைக்குமே
பெண்ணை ஆணாய் மாற்றவும் முடியும்
ஆனை பெண்ணாய் ஆக்கவும் தெரியும்
நாளும் தெரிந்த நரசிம்மராவே சிரிக்க
(கம் ஆன்..)

காதல் கடிதங்கள் எந்த பையிலே
கையும் களவுமாய் காட்டுவேன்
ரெண்டு காதலன் உள்ள பெண்ணுக்கு
மீசை வரும்படி மாற்றுவேன்
டை டை அடித்தவன் தலைகள் யாவிலும்
சட்டென்று வெண் நரை காட்டுவேன்
வாத்தியார்களின் பரிட்சை மார்க்கைத்தான்
நோட்டிஸ் போர்டில் மாட்டுவேன்
பாட்டில் விழுங்கி சிரிக்கவும் முடியும்
ப்ளேடை தின்று பிழைக்கவும் முடியும்
எல்லா தெரியும் பரிட்சை வந்தால்
ம ம மேஜிக் நோ நோ லாஜிக்
(கம் ஆன்..)

படம்: லவ் பெர்ட்ஸ்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: மனோ

984. அன்பே இது நிஜம்தானா





அன்பே இது நிஜம்தானா
என் வானில் புது விண்மீனா
யாரைக் கேட்டது இதயம்
உன்னை தொடர்ந்து போக
என்ன துணிச்சல் அதற்கு
என்னை மறந்து போக
இருந்தும் அவை இனிய வரிகளே

கலகலவென பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ
ஒலியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ
(கலகலவென..)
விரல் தொடவில்லையே நகம் படவில்லையே
விரல் தொடவில்லையே நகம் படவில்லையே
உடல் தடையில்லையே
இது போல் ஒரு இணையில்லையே
(கலகலவென..)

விழியும் விழியும் கலந்து கலந்து பார்வை ஒன்று ஆனதே
உயிரும் உயிரும் கலந்த போது உலகம் நின்று போனதே
(விழியும்..)
(கலகலவென..)

அழைக்கும்போது உதிக்க முடிந்தால் அதற்குப் பெயரும் நிலவில்லையே
நினைக்கும்போது நிலவு உதிக்கும் நிலவு அழைக்கக் குரலில்லையே
(அழைக்கும்போது..)
யாரை கேட்டது இதயம்
யாரைக் கேட்டது இதயம்
விழி தொடுவது விரல் தொடவில்லையே
(கலகலவென..)

படம்: ரிதம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சாதனா சர்கம்

Wednesday, March 4, 2009

983. போகும் வழியெல்லாம் காற்றே




போகும் வழியெல்லாம் காற்றே
என் நெஞ்சத்தில் கால் வைத்து நடந்தாய்
கண் இரண்டும் இமைக்காமல் பார்த்தேனே
என் கண்ணோடு கண்ணீரை விடைத்தாய்
(போகும்..)

கை ஏந்தி காதல் வரம் கைத்தேனே
என் கைகளுக்கு பரிசு இது தானா
கடிதத்தில் வைக்கின்றானே என் இதயம்
இது காதல் உலகத்தில் புது உதயம்
புது உதயம் புது உதயம் புது உதயம்
(போகும்..)

உன்னை விட்டு விட முடியாமல்
இந்த உலகை விடுகின்றேனே
உன்னை விட்டு விட முடியாமல்
இந்த உலகை விடுகின்றேனே

படம்: ரட்சகன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சித்ரா

Tuesday, March 3, 2009

982 பாலோடு தேன்கலந்த அபிஷேகம்



பாலோடு தேன்கலந்த அபிஷேகம்

1. பச்சைமணி பூங்கொடியாள், பதினெட்டாம் படி, டாக்டர். பாலமுரளி கிருஷ்னா
2. மன்மதன் கைக்கரும்பின், காஞ்சிக்காமாட்சி, டாக்டர். சீர்காழி கோவிந்தராஜன்
3. பழகும் தமிழே பார்த்திபன் மகனே, பார்த்திபன் கனவு, ஏ.எம்.ராஜா,பி.சுசீலா
4. அகப்பட்டவரையில், இப்படியும் ஒரு பெண், மனோரமா, பானுமதி
5. கண்டதும், அம்பிகாவதி, ஞானசரஸ்வதி,
6. பாலோடு தேன்கலந்த அபிஷேகம், ஞானக்குழந்தை, டி.எம்.சவுந்திராஜன், வாணிஜெயராம்
7. பக்தி கொண்டாடுவோம்,பட்டினத்தார், டி.எம்.சவுந்திரராஜன்
8. இந்த பச்சைக்குழந்தைக்கு ஒரு, நீதிக்கு தலைவணங்கு, எஸ்.வரலட்சுமி

ஒலித்தொகுப்பு வழங்கியவர்:

ஜெயலக்‌ஷ்மி பிச்சைமணி
அனுப்பர்பாளையம்
திருப்பூர்

பாடல் தலைப்புகளை பார்த்தவுடனே புருவங்கள் உயர்த்தியிருப்பீற்களே? ஏதோ இணையதளத்தை திறந்தாமோ பாடல் கேட்டோமா என்று இருந்து வருகிறோம். எப்பவாவது இதுப்போல் ஆக்கங்களை தர முயற்சி செய்திருக்கிறோமா? இல்லை அப்படித்தானே அதற்க்கு நேரம் காலம் தான் நமக்கு கிடைப்பதில்லை. நமக்காகவே, பாடல்கள் உள்ளே சென்று
நுட்பமாக ஒவ்வொரு வரியையும் ரசிக்கும் ரசிகர்கள் இன்றும் உண்டு அதுவும் பழைய பாடல்களை அலசி ஆராயும் இசையன்பர்கள் வானொலியில் ஏராளம் அவர்களின் ஒலித்தொகுப்புகள் தான் நான் தேன் கிண்ணத்தில் பதிந்து வருவது. அந்த வகையில் இதோ சென்ற வாரம் இரவின் மடியில் ஒலிப்பரபபிய ஓர் அற்புத சிந்தனைகளை உடைய திருமதி.
ஜெயலக்‌ஷ்மி பிச்சைமணி அவர்களின் பாடல் தொகுப்பும் ஒவ்வொரு பாடலை தான் ரசித்ததை தன் வார்த்தை ஜாலங்களில் சதிராடிவிட்டார். ஓலிப்பரப்பட்ட பாடல் தலைப்புக்களை மட்டும் உங்கள் பார்வைக்கு வழங்கியிருக்கிறேன். அதிகம் விவரங்கள் நான் எழுத விரும்பவில்லை ஏனென்றால் நேயரின் ரசனை வரிகளையும், ஒலித்தொகுப்பை
வழக்கம் போல் நம் ஆதர்ஸ அறிவிப்பாளர் “டிஜ்ஜிடல் குரலோன்” ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்களின் குரல் அவர் பாணியிலே வழங்கியிருப்பது மிகவும் சிறப்பு. கேளுங்கள் உங்கள் உணர்வுகளை எழுதுங்கள்.

முக்கியமாக, எனது இரவின் மடியில் தொகுப்பான அனங்கன் அங்கஜன், அன்பன் தொகுப்பில் ஒரு பாட்டை அனுப்பியிருந்தேன். அந்த பாட்டு பட்டியலில் இருக்கும் கடைசிபாடலான இந்த பச்சைக்குழந்தை பாடல் நேரம் போதாதால் என் ஒலித்தொகுப்பில் சேர்த்திருக்கிறார்கள் அந்த பாடல் பாடிய வரலட்சுமி அவர்களின் ரசிகன் எனது நண்பர் அகிலா விஜயகுமார் அவக்ரளூக்கு
பிடித்தமான பாடலை சேர்த்தது கேட்டு நானும் மகிழ்ந்தேன். இந்த ஒலித்தொகுப்பில் ஒரு சூசுமம் உள்ளது அது உங்களூக்கு புரியாது ஏனென்றால் வானொலி அன்பர்களுக்கு மிகவும் நன்றாக தெரியும் இருந்தாலும் அவை என்னவென்று தங்களூக்கு விளக்குவதில் எதுவும் தப்பில்லை என்று கருதுகிறேன். ஒலித்தொகுப்பை வழங்கிய நேயர் வானொலி அன்பர்களின் பெயர்களை தன் விளக்கங்களில் மிகநேர்த்தியாக சேர்த்து வழங்கியிருப்பது சிறப்பான திறமை. மிகவும் பாராட்டபட வேண்டிய ஒன்று.

வாழ்த்துக்கள் ஜெயலக்‌ஷ்மி அவர்களே.

Get this widget | Track details | eSnips Social DNA

981. சௌக்கியமா கண்ணே சௌக்கியமா





சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா சௌக்கியமா
தன தன தோம் தனத்தோம் திக்கு திக்கு
தன தன தோம் தனத்தோம் திக்கு திக்கு
தன தன தோம் தனத்தோம்
தன தன தோம் தனம்தோம்தா தீமினா
விழிகளில் நடனமி்ட்டாய் பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்
மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்
மனதை தருவும் ஒரு அம்பானாய்
மனதை தருவும் ஒரு அம்பானாய்
பருவம் கொட்டிவிட்டு பறவை ஆனாய்
பருவம் கொட்டிவிட்டு பறவை ஆனாய்
ஜனுத தீம் ஜனுத தீம் ஜனுத தீம்
சலங்கையும் ஏங்குதே
அது கிடக்கட்டும் நீ
(சௌக்கியமா..)

சூரியன் வந்து வாவெனும் போது
சூரியன் வந்து வாவெனும் போது
சூரியன் வந்து வாவெனும் போது
என்ன செய்யும் இந்த பனியின் துளி
என்ன செய்யும் இந்த பன்யின் துளி
கோடிக் கையில் என்னைக் கொல்லையிடு
கோடி கையில் என்னை அள்ளி எடு
கோடி கையில் என்னை கொல்லையிடு
கோடி் கையில் என்னை அள்ளி எடு

அன்பு நாதனே நீ அணிந்த மோதிரம்
வளையலாகவே துறும்பென இளைத்தேன்
அந்த மோதிரம் ஒட்டியாணமாய்
ஆகுமென அன்பே அழைத்தேன்
என் காற்றில் சுவாசம் இல்லை
என் காற்றில் சுவாசம் இல்லை
என் காற்றில் சுவாசம் இல்லை
என் காற்றில் சுவாசம் இல்லை
அது கிடக்கட்டும் விடு
உனக்கென ஆச்சு

படம்: சங்கமம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: நித்யஸ்ரீ

Monday, March 2, 2009

980. அழகே சுகமா





அழகே சுகமா உன் கோவங்கள் சுகமா
அழகே சுகமா உன் கோவங்கள் சுகமா
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா

தலைவா சுகமா சுகமா
உன் தனிமை சுகமா சுகமா
வீடு வாசல் சுகமா
உன் வீட்டு தோட்டம் சுகமா
பூக்கள் எல்லாம் சுகமா
உன் பொய்கள் எல்லாம் சுகமா
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா

அழகே உன்னை பிரிந்தேன் என் அறிவில் ஒன்றை இழந்தேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
அன்பே உன்னை வெறுத்தேன் என் அறிவை நானே எறித்தேன்
உறவின் பெருமை கண்டு உயிரில் பாதி குறைந்தேன்
உறவின் பெருமை கண்டு உயிரில் பாதி குறைந்தேன்
பழைய மாலையில் புதிய பூக்கள்தான் சேராதா
பழைய தாலியில் புதிய முடிச்சுகள் போடாதா
வாழ்க்கை ஓர் வட்டம்போலே முடிந்த இடத்தில் தொடங்காதா
வாழ்க்கை ஓர் வட்டம்போலே முடிந்த இடத்தில் தொடங்காதா
அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா

படம்: பார்த்தாலே பரவசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், சாதனா சர்கம்

Sunday, March 1, 2009

979. நீதான் என் தேசிய கீதம்





காதலே ஜெயம் நீதான் என் தேசிய கீதம் ரஞ்சனா ரஞ்சனா
என் ஒரே பாடலே உயிர் காதலே
என் மரியாதைக்கு உரியவளே மனதிற்கு இனியவளே
காலையும் நீயே மாலையும் நீயே
கனவிலும் நீயே கனவிலும் நீயே ரஞ்சனா ரஞ்சனா

என் பிரவா மழலைகளை உன் விழியில் பார்க்கிறேன்
என் பிரவா மழலைகளை உன் விழியில் பார்க்கிறேன்
நான் எழுதா கவிதைகளை
மொழியில் கேட்கிறேன் உன் மொழியில் கேட்கிறேன்
நான் வேண்டிய வரங்களை
வரவில் பார்க்கிறேன் ம்ம் வரவில் பார்க்கிறேன்
என் விடியா இரவுகளை
உறவில் பார்க்கிறேன் உன் உறவில் பார்க்கிறேன்
காதலே ஜெயம்

காதலே ஜெயம் காண்பதா உண்மையம்
என் மரியாதைக்கு உரியவளே மனதிற்கு இனியவளே
என் ஒரே பாடலே

உடலால் வரும் சுகத்தை உதற பார்க்கிறேன்
வெறும் உடலால் வரும் சுகத்தை உதற பார்க்கிறேன்
நம் இரண்டும் இரவானிலை எதிர்ப்பார்க்கிறேன் எதிர்ப்பார்க்கிறேன்
எல்லாம் எழுத்துக்களும் உயிர் தொடக்கம் உயிர் தொடக்கம்
என் எல்லா உணர்வுகளும்
என் எல்லா உணர்வுகளும் நீ தொடக்கம் நீ தொடக்கம்
காதலே ஜெயம்

காதலே ஜெயம் அது கடவுலின் குணம்
என் மரியாதைக்கு உரியவளே மனதிற்கு இனியவளே
காலையும் நீயே மாலையும் நீயே
கனவிலும் நீயே கனவிலும் நீயே
உன் உரே பாடலே உயிர் காதலே
என் மரியாதைக்கு உறியவனே
இந்த மண்ணிலும் பெரியவனே
காலையும் நீயே மாலையும் நீயே
கனவிலும் நீயே நினைவிலும் நீயே
ரஞ்சனா ரஞ்சனா..

படம்: பார்த்தாலே பரவசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: பால்ராம், சித்ரா

978. காலையில் தினமும்





காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கை தொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா என் தாய் போல் ஆகிடுமா
அன்பென்றாலே அம்மா என் தாய் போல் ஆகிடுமா
இமை போல் இரவும் பகலும் என்னை காத்த அன்னையே
உன் அன்பு பார்த்த பின்பு அதை விட
வானம் பூமி யாவும் சிறிது
(காலையில்..)

நிறை மாத நிலவே வா வா
நடை போடு மெதுவா மெதுவா
அழகே உன் பாடு அறிவேனம்மா
மசக்கைகள் மயக்கம் கொண்டு
மடி சாயும் வாழை தண்டு
சுமையல்ல பாரம் சுகம் தானம்மா
தாயான பின்பு தான் நீ பெண்மணி
தோள் மீது தூங்கடி கண்மணி கண்மணி
(காலையில்...)

ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கையில் கொண்டு
உறவாடும் யோகம் ஒரு தாய்க்கு இன்று
மழலை போல் உந்தன் நெஞ்சம்
உறங்கட்டும் பாவம் கொஞ்சம்
தாய்க்கு பின் தாரம் நான் தான் ஐயா
தாலேலோ பாடுவேன் தாயாகி வைத்ததே
நீயாட நீயாட தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
பனிசே பூவிழி தாலோ பொன்மணி தாலேலோ
நிலவோ நிலத்தில் இறங்கி உன்னை கொஞ்ச என்னுதோ

அதிகாலை சேவல் கூவும் அது வரை
வஞ்சி நெஞ்சில் நீயும் உறங்கிடு
தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
பனிசே பூவிழி டாலோ பொன்மனி தாலேலோ
பொன்மனி தாலேலோ பொன்மனி தாலேலோ

படம்: நியூ
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சாதனா சர்கம்

Last 25 songs posted in Thenkinnam