Sunday, March 8, 2009

991. தாய் மடியே உன்னை தேடுகிறேன்




தாய் மடியே உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக வாடுகிறேன்
பத்து திங்கள் என்னை சுமந்தாயே
ஒரு பத்தே நிமிடம் தாய் மடி தா தாயே
நீ கருவில் மூடி வைத்த என் உடம்பு
நடு தெருவில் கிடைக்கிறது பார்த்தாயோ
உதிரம் வெளியேறும் காயங்களில்
என் உயிரும் கொலுகும் என்னை பார்த்தாயே
தெய்வங்கள் இங்கில்லை உன்னை அழைக்கின்றேன்

விண்ணை இடிக்கும் தோள்கள் மண்ணை அளக்கும் கால்கள்
அள்ளி கொடுத்த கைகள் அசைவில் வந்தேனே
காணல்கள் தின்னும் கன்னங்கள்
கனிந்து நிற்கும் இதழ்கள்
உதவி செய்யும் பார்வை
உயிர் குறைந்ததென்ன பாரத போர்கள்
முடிந்தபின்னும் கொடுமைகள் இங்கே குறையவில்லை
ஏசுகள் என்றோ மாண்ட பின்னாலே
சிலுவைகள் இன்னும் மறிக்கவில்லே

படை நடத்தும் வீரன் பசித்தவர்கள் தோழன்
பகைவருக்கும் நண்பன் அழுக்கில் அவன் என்ன
தாய் பாலை உண்ட ரத்தம்
தரை விழுந்ததென்ன இவன் பேருக்கு ஏற்ற வண்ணம்
நிலம் சிவந்ததென்ன தீமைகள் என்றும்
ஆயுதம் ஏந்தி தேர்களில் ஏறி வருவதென்ன
தர்மங்கள் என்றும் பல்லக்கில் ஏறி
தாமதமாக வருவதென்ன

படம்: ரெட்
இசை: தேவா
பாடியவர்: கார்த்திக்

2 Comments:

அஜித்தின் 50வது படம் said...

Nice Song. Hatts off

கார்க்கிபவா said...

இதை பாடியவர் திப்புதானே?

Last 25 songs posted in Thenkinnam