Thursday, December 29, 2011

ஒரு கிளி காதலில் ஒரு கிளி ஆசையில்


ஒரு கிளி காதலில் ஒரு கிளி ஆசையில்
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது..
ஒரு கிளி காதலில் ஒரு கிளி ஆசையில்
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது..

யார் மீது ஆசை கூடிப்போக தேகம் இளைத்தாயோ
நான் காதலோடு தோழனான சேதி அறிவாயோ
யார் மீது ஆசை கூடிப்போக தேகம் இளைத்தாயோ
நான் காதலோடு தோழனான சேதி அறிவாயோ
குறையிது குறையிது இடைவெளி குறையிது
நிறையிது நிறையிது சுகம்
இணையிது இணையிது இரு உடல் இணையிது
கவிதைகள் எழுதுது நகம்
நீ விடும் மூச்சிலே காதலின் கூச்சலே
ஒரு கிளி காதலில் ஒரு கிளி ஆசையில்
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது..

உன் சேலை கூறும் காதல் பாடம்
நான் பயில வேண்டும்
என் ஆயுள் ரேகை நீயுமாகி
கூட வர வேண்டும்
உன் சேலை கூறும் காதல் பாடம்
நான் பயில வேண்டும்
என் ஆயுள் ரேகை நீயுமாகி
கூட வர வேண்டும்
கொடியது கொடியது தனிமைகள்கொடியது
இனியது இனியது துணை
மிரளுது மிரளுது அழகுகள் மிரளுது
இமைகளில் முடிந்திடு எனை
தாவணி வீதியில் காமனின் வேதியல்
ஒரு கிளி காதலில் ஒரு கிளி ஆசையில்
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது..
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது..
இசை: வித்யாசாகர்
திரைப்படம்: பரமசிவன்
பாடியவர்கள் :மது பாலக்ருஷ்ணன், சுஜாதா

வரிகள் : யுகபாரதி

Wednesday, December 28, 2011

என்ன இது இது என்ன தொல்லை

என்ன இது இது என்ன தொல்லை
என் மனசு என்னிடமும் இல்லை
மௌனம் வந்து விழுங்குது சொல்லை
ஏனோ
காலிரண்டும் உடன் வரவில்லை
புன்னகையும் புரிந்திடவில்லை
கண்ணிமைகள் உறங்கிடவில்லை
ஏனோ ஏனோ

உந்தன் தனிமையின் உலகினில் முதன்முறை
ஒருமுகம் அடிக்கடி  அடிக்கடி வருதோ
உந்தன் தலையணை உறைகளில்
கனவெனும் பூச்செடி வட்டமிட்டு பூக்களைத்தருதா
உந்தன் நடையுடை பாவனை சிந்தனை யாவிலும்
புதுப்புது மாற்றங்கள் வருதா

ஒரு செல்லமான கள்ளத்தனம்
கண்ணுக்குள்ளே வந்து நின்று
விட்டுவிட்டு வேதனைகள் தருதாஇது ஏனோ இது ஏனோ
என்னயிதுவோ என்னயிதுவோ
என்னவென்று அய்யோ தெரியாதா
கண்ணை மூடி உன்னை  நீயே
உற்றுப்பார்த்தால்
உள்ளம் சொல்லாதா

என்ன இதுவோ  என்ன இதுவோஎன்னவென்று
அய்யோதெரியாதா
ஒன்றும் ஒன்றும் ஒன்று சேர்ந்து
ஒன்றாகும் உண்மைப் புரியாதா
ஏனோ ஏனோ

(என்ன இது )

நேரம் வரும் வரை என் மனதுக்குள்
நூறு தீ அலை இது எதனாலோ
அய்யோ

பார்வை ஒரு முறை நீ பார்த்ததும்
சாரல் பலமுறை எதனாலோ
நீ ஒருமுறை பார்த்தால்
இருதயம்  உறையும்
இது என்ன இது ஏனோ

அய்யோ நீ மறுமுறை பார்த்தால்
இருதயம்
இது என்ன இது ஏனோ

ஒன்றாக தொலைந்தோமோ
என்ன இதுவோ என்ன இதுவோ
என்னவென்று அய்யோ தெரியாதா
விரும்பிவந்து மாட்டிக்கொண்ட
மந்திரத்தை உள்ளம் சொல்லாதா
 என்ன இதுவோ என்ன இதுவோ
என்னவென்று
அய்யோ தெரியாதா
திரும்ப திரும்ப மாட்டிக்கொள்ளும்
தந்திரத்தால் உள்ளம் துள்ளாதா
ஏனோ ஏனோ
திரைப்படம் : மௌனகுரு
இசை: தமன்
வரிகள் : நா.முத்துகுமார்
பாடியவர்கள்: ராகுல் நம்பியார், ரஞ்சித்,ரீட்டா, ரம்யாTuesday, December 27, 2011

சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்

http://www.saavn.com/popup/psong-c2VIrL4g.html&L=tamil

சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்
வெண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட
நீலாம்பரி கேட்கலாம் நீலாம்பரி கேட்கலாம்
(சந்தனம்)


மாணிக்க மேகங்கள் வைரங்கள் விண்மீன்கள்
வான் தந்த காதல் சீதனம் (மாணிக்க)

இளவேனில் காலங்கள் ரீங்கார நாதங்கள்
இளவேனில் காலங்கள் ரீங்கார நாதங்கள்
இசைவந்து பாடும் மோகனம்
இசைவந்து பாடும் மோகனம்

(சந்தனம்)

நீ பார்க்கும் நேரங்கள் நிலம் பார்க்கும் நாணங்கள்
நெஞ்சுக்குள் ஏதோ செய்தன (நீ பார்க்கும்)

இதமாக மை போட்டு இமையென்னும் கைபோட்டு
இதமாக மை போட்டு இமையென்னும் கைபோட்டு
உன் கண்கள் என்னைக் கொய்தன
உன் கண்கள் என்னைக் கொய்தன

(சந்தனம்)

திரைப்படம்: துடிக்கும் கரங்கள்
பாடியவர்கள்: எஸ்.ஜானகி, எஸ்.பி.பி
இசை:எஸ்.பி.பி

Thursday, December 22, 2011

யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ

யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ

வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும் மழை தானோ
நாளும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ

உன் மார் மீதும்
தோள் மீதும் நான் தூங்கினேன்
உயிர் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்
கரைகளே இல்லா நதி ஒரே ஒன்றில் கதி

ஓர் ஆகாய தூரம்
நான் போகின்ற போதும் என் பக்கத்தில் நிற்பாள் அவள்
நான் வீழ்கின்ற நேரம் ,
பொன் கை ரெண்டும் நீளும் தன் கக்கத்தில் வைப்பாள் அவள்

நான் காலைப் பனி
நீ புல்லின் நுனி நான் வீழாமல் நீ தாங்கினாய்

நான் கேளா ஒலி
நீதானே மொழி என் ஓசைக்கு பொருளாகிறாய்…ஓஓ ஹோ …

யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ

நான் தூங்காத போதும்
என் துன்பத்தின் போதும் என் அன்னை போல் காத்தாய் எனை
பொன் வான் எங்கும் நீயே
விண்மீன் ஆகின்றாயே நான் அண்ணாந்து பார்ப்பேன் உனை
நான் கேட்கும் வரம்
என் வாழ் நாள் தவம் உன் அன்பன்றி வேறேதடி

ஒஹ் பாரா முகம்
நீ காட்டும் கணம் நான் கூறாமல் சாவேனடி …ஹோ ஹோ …

யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ

வானின் புலம் தாணி நிலம் தீண்டும் மழை தானோ
நாளும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ

உன் மார் மீதும்
தோள் மீதும் நான் தூங்கினேன்
உயிர் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்

திரைப்படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடியவர்: முகமத் இர்ஃபான்
வரிகள்: தாமரை
ஜிவிப்ரகாஷ்: இசை

யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ

வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும் மழை தானோ
நாளும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ

உன் மார் மீதும்
தோள் மீதும் நான் தூங்கினேன்
உயிர் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்
கரைகளே இல்லா நதி ஒரே ஒன்றில் கதி

ஓர் ஆகாய தூரம்
நான் போகின்ற போதும் என் பக்கத்தில் நிற்பாள் அவள்
நான் வீழ்கின்ற நேரம் ,
பொன் கை ரெண்டும் நீளும் தன் கக்கத்தில் வைப்பாள் அவள்

நான் காலைப் பனி
நீ புல்லின் நுனி நான் வீழாமல் நீ தாங்கினாய்

நான் கேளா ஒலி
நீதானே மொழி என் ஓசைக்கு பொருளாகிறாய்…ஓஓ ஹோ …

யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ

நான் தூங்காத போதும்
என் துன்பத்தின் போதும் என் அன்னை போல் காத்தாய் எனை
பொன் வான் எங்கும் நீயே
விண்மீன் ஆகின்றாயே நான் அண்ணாந்து பார்ப்பேன் உனை
நான் கேட்கும் வரம்
என் வாழ் நாள் தவம் உன் அன்பன்றி வேறேதடி

ஒஹ் பாரா முகம்
நீ காட்டும் கணம் நான் கூறாமல் சாவேனடி …ஹோ ஹோ …

யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ

வானின் புலம் தாணி நிலம் தீண்டும் மழை தானோ
நாளும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ

உன் மார் மீதும்
தோள் மீதும் நான் தூங்கினேன்
உயிர் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்

திரைப்படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடியவர்: முகமத் இர்ஃபான்
வரிகள்: தாமரை
ஜிவிப்ரகாஷ்: இசைதிரைப்படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடியவர்: முகமத் இர்ஃபான்
வரிகள்: தாமரை
ஜிவிப்ரகாஷ்: இசை
<p><a href="http://musicmazaa.com/tamil/audiosongs/movie/Muppozhudhum+Un+Karpanaigal.html?e">Listen to Muppozhudhum Un Karpanaigal Audio Songs at MusicMazaa.com</a></p>

Wednesday, December 21, 2011

கண்கள் நீயே காற்றும் நீயே

கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பில் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊணும்நீ ..உயிரும் நீ


பல நாள் கனவே
ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ ..வேறில்லை

முகம் வெள்ளை தாள்
அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே
இதழ் எச்சில்
எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே


(கண்கள் நீயே..காற்றும் நீயே )

இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னைத்தாங்க ஏங்கினேன்
அடுத்தக்கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்

தோளில் ஆடும் தேனே
தொட்டில் தான் பாதிவேளை
பலநூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
இசையாக பலபல ஓசை செய்திடும்
இராவணன் ஈடில்லா என்மகன்

எனைத்தள்ளும் முன்
குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே
எனைக்கிள்ளும் முன்
விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே

என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்
போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்

சுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ
பசி என்றால் தாயிடம் தேடும் மானிட மர்மம் நீ
நான் கொள்ளும் கர்வம் நீ

கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை
உடல் ஜவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை

கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பும் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊனும் நீ ..உயிரும் நீ

இசை: ஜி.வி ப்ரகாஷ்
வரிகள்: தாமரை
திரைப்படம்: முப்பொழுதும் உன் கற்பனைகள்
பாடியவர்:சிதாரா
<p><a href="http://musicmazaa.com/tamil/audiosongs/movie/Muppozhudhum+Un+Karpanaigal.html?e">Listen to Muppozhudhum Un Karpanaigal Audio Songs at MusicMazaa.com</a></p>

Tuesday, December 20, 2011

ஹேஹேஹே கீச்சுக் கிளியே - 2000வது பாடல்

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை-நீ இன்று திறந்தாய்

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை-நீ இன்று திறந்தாய்

கருவொன்று பிறப்பது பத்து மாதத்தில்,
இருதயம் துடிப்பது ஏழு மாதத்தில்,
அதன் உயிர்சதை இசைவது
என்றும் அந்த நாதத்தில்,

உயிர்களின் சுவாசம் காற்று,
அந்த காற்றின் சுவாசம் கானம்,
உலகே இசையே… ஏ…
எந்திர வாழ்கையின் இடையே,
நெஞ்சில் ஈரத்தில் புசிவதும் இசையே,
எல்லாம் இசையே, …ஏ…
காதல் வந்தால் அட அங்கும் இசைதான்,
கண்ணீர் வந்தால் அட அங்கும் இசைதான்,
தொட்டில் குழந்தை ஒன்று அழுதால்,
அதை தூங்க வைப்பதும் இந்த இசை தான்,
யுத்த தளத்தில் தூக்கம் தொலைத்து,
கண் விழிப்பதற்கும் இந்த இசை தான்,

இசையோடு வந்தோம்… இசையோடு வாழ்வோம்,
இசையோடு போவோம்… இசையாவோம்…

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை,
நீ இன்று திறந்தாய்

இன்னிசை நின்று போனால் என் இதயம்,
நின்று போகும் இசையே… உயிரே…
எந்தன் தாய்மொழி இசையே,
என் இமைகள் துடிப்பதும் இசையே,
எங்கும் இசையே,
மௌனம் மௌனம் என் நெஞ்சை அடைக்கும்,
கீதம் கேட்டால் அது மீண்டும் துடிக்கும்,
ஐம்புலன்கள் எந்தன் இருப்பு,
செவி மட்டும் தான் ரொம்ப சிறப்பு,
நெஞ்சில் உள்ளது ஜீவன் பிறப்பு,
ஆனால் காதில் உள்ளது ஜீவன் எனக்கு,

இசையோடு வந்தேன்… இசையோடு வாழ்வேன்…
இசையோடு போவேன்… இசையாவேன்…

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை,
நீ இன்று திறந்தாய்

ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்,
இசையாலே எனது புதிய நாளை,
நீ இன்று திறந்தாய்

இசை:தேவா
பாடியவர்:ஹரிஹரன்
திரைப்படம்:முகவரி
வரிகள்: வைரமுத்து

அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே


அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே
அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே
அன்பே அன்பே அன்பே அன்பே என்னோடு நான் இல்லயே
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடீ....
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடா...
அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே

ஓட்டுக்குள்ளே நத்தையைப் போல்
ஒளிந்திருந்த ஒரு நெஞ்சம்
பறவை போல பறக்கிறதே
பார்த்துகொள்ளு நீ கொஞ்சம்
மின்னல் வந்து விளக்கேற்றும்
மேகம் வந்து தாலாட்டும்
நினைக்கும் திசையில் பறந்திடலாம்
காதல் உனக்கு கை கொடுக்கும்
குட்டி குட்டி செடி அது
தொட்டில் கட்டும் மலர்
தினம் உன் பெயரை சொல்லிசொல்லி
அது அழைக்கிறதே
பெற்றவர்கள் முகம்
சுற்றி உள்ளவர்கள் முகம் - அட
அத்தனையும் நெஞ்சம் இன்று மறக்கிறதே


ஆ..நீயின்றி நானில்லை அது நிச்சயம்
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடா...
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடீ....
அன்பே அன்பே லலலாலலாலா..
அன்பே அன்பே லலலாலலாலா..

தேவதையின் கதைக் கேட்டு
சின்ன வயதில் தூங்கினேன்
தூக்கம் பறிக்கும் தேவதையை
நேரில் இன்று பார்க்கிறேன்..
சின்ன வயதில் பார்த்த நிலா
தூரமாகிப் போகலாம்
இந்த வயதில் நீ நினைத்தால்
நிலவின் மடியில் வாழலாம்..

ஒ...காதல் ஒரு வனம்
அதில் அலைவது சுகம்
வா சுற்றி சுற்றி எங்கும் நாம் நடந்திடலாம்
ஒ...காதல் ஒருமழை
அதில் தேவை இல்லை குடை
வா சொட்ட சொட்ட அதில் நாம் நனைந்திடலாம்...

ஆ ..நீயின்றி நானில்லை அது நிச்சயம்
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடா...
ஒரேமுறை ஒரேமுறை ஒரேமுறை பாரடீ....
அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே
அன்பே அன்பே அன்பே அன்பே நீயின்றி நான் இல்லயே
அன்பே அன்பே அன்பே அன்பே என்னோடு நான் இல்லயே

திரைப்படம் :: அன்பே அன்பே
பாடியவர்கள்: சாதனா சர்கம், ஹரிஹரன்
இசை: பரத்வாஜ்

Monday, December 19, 2011

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்

ஆரீராரோ ஆரீராரீரோ
ஆரீராரோ ஆரீராரீரோ

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே....ஏ..ஏ...ஏ...
உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்....
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே........ஏ..ஏ...ஏ...

கண்ணின் மணியே நீயும் உறங்கு
கண்ணின் மணியே நீயும் உறங்கு

ஆடாத தீபம் தான் என் இல்லம்...ம்..ம்..ம்
பூங்காற்றுக்கும் தாங்காது என் உள்ளம்...ம்..ம்..ம்
உன் அன்பாலே பொங்காதோ ஆனந்த வெள்ளம்
கனவுகளே கனவுகளே இரவெனும் தீபம் எரிகின்ற நேரம்
உறவைத் தேடி வாருங்கள் கண்களில்....ல்...ல்..ல்
தென்றல் வீசும் கண்ணுறங்கு
உன்னை நீயே மறந்துறங்கு

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே....ஏ..ஏ...ஏ...
ராரீரோ ஆரீராரீரோ
கண்ணின் மணியே நீயும் உறங்கு


ஆகாயம் மண் மீது வீழாது...
நம் சொந்தங்கள் எந்நாளும் மாறாது....
இனி என் போன்ற அன்னைக்கு ஏகாந்தம் ஏது
உறவுகளால் ஒரு உலகம்
இது ஒரு தோட்டம் கிளிகளின் கூட்டம்
ஆட்டம் பாட்டம் ஆர்பாட்டம் கேட்கலாம்
அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள்
இன்னும் கொஞ்சம் ஓய்வெடுங்கள்

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே....ஏ..ஏ...ஏ...
கண்ணின் மணியே நீயும் உறங்கு
கண்ணின் மணியே நீயும் உறங்கு
ஆரீராரோ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் லால லால லாபடம்: உயிரே உனக்காக
இசை: லக்ஷ்மிகாந்த் பியாரிலால்
வரிகள்: வைரமுத்து
பாடியவர் : ஜானகி

தாரா அவர் வருவாரா


தாரா அவர் வருவாரா
கண்கள் தவிப்பதைத் தான் அறிவாரா
மாறா அன்பு கொள்வாரா
இன்ப மழை தனையே பொழிவாரா

தனியே பேசி மனம் மகிழ்ந்தாடுவாரா
தணியாக்காதலுடன் உறவாடுவாரா
அழைப்பாரா அணைப்பாரா
நினைத்தாலே இன்பம் மீறுதடி
(என் தாரா ..)

இதய வீணைதனில் ஒலி மீட்டுவாரா
இன்பக்காவியமாய் சுவையூட்டுவாரா
புதுமை ஊஞ்சலிலே தாலாட்டுவாரா
புகழ்வாரா மகிழ்வாரா
நினைத்தாலே இன்பம் மீறுதடி
(என் தாரா ..)
திரைப்படம் : அரசிளங்குமரி
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை:ஜி.ராமனாதன்

Sunday, December 18, 2011

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
...

காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மையென்றது
காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மையென்றது
காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மையென்றது
காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மையென்றது
இதழுடன் இதழாட.. நீ இளமையில் நடமாடு
நினைத்தால் போதும்.. வருவேன்
ஆ ஆஆ.. தடுத்தால் கூட தருவேன்

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்


வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது
வேகம் வந்த நேரம் இன்ப இல்லம் கண்டது
இனியொரு பிரிவேது.. அந்த நினைவுக்கு முடிவேது
இரவும் பகலும் கலையே
ஆ ஆஆ.. இருவர் நிலையும் சிலையே

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
...

ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது

கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
என்னடி விளையாட்டு என்று சொன்னவன் மொழி கேட்டு
ஆசையில் விழுந்தேன் அங்கே
ஆ ஆஆ.. காலையில் கனவுகள் எங்கே

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்

பாடியவர் : ஜானகி
இசை: எம்.எஸ்.வி
திரைப்படம்: அவளுக்கென்று ஒரு மனம்
வரிகள் : கண்ணதாசன்

Saturday, December 17, 2011

உன் மனசுல பாட்டுத்தான் இருக்குது

தந்தனன தானானா
தந்தனன
தானானா
தந்தானா
தந்தானா
தந்தனா னானா

உன் மனசுல பாட்டுத் தான் இருக்குது
என் மனசதை கேட்டுத் தான் தவிக்குது

அதில் என்னை வச்சுப் பாட மாட்டியா
நெஞ்சத் தொட்டு ஆளும் ராசையா
மனசு முழுதும் இசை தான் உனக்கு
அதிலே எனக்கோர் இடம் நீ ஒதுக்கு

(உன் மனசுல )

பாட்டாலே புள்ளி வச்சேன்
பார்வையிலே கிள்ளி வச்சே
பூத்திருந்த என்னை சேர்ந்த தேவனே
போடாத சங்கதிதான் போட ஓரு மேடை உண்டு
நாளு வச்சு சேர வாங்க ராசனே
நெஞ்சோடு கூடு கட்டி நீங்க வந்து வாழனும்
நில்லாம பாட்டு சொல்லி காலம் எல்லாம் ஆளனும்
சொக்க தங்கம் உங்களை தான் சொக்கி சொக்கி பார்த்து
தத்தளிச்சேன் நித்தம் நித்தம் நானா பூத்து

(உன் மனசுல)

நீ பாடும் ராகம் வந்து நிம்மதியை தந்ததையா
நேற்று வரை நெஞ்சில் ஆசை தோணலை
பூவான பாட்டு இந்த பொண்ணத் தொட்டுப் போனதையா
போன வழி பார்த்த கண்ணு மூடலை
உன்னோட வாழ்ந்திருந்தா ஊருக்கெல்லாம் ராணி நான் ..
என்னோட ஆசை எல்லாம் ஏத்துக்கணும் நீங்க தான் ..
உங்களத் தான் எண்ணி எண்ணி என்னுசுரு வாழும்
சொல்லுமையா நல்லச்சொல்லு சொன்னா போதும்

ஏங் மனசுல பாட்டுத் தான் இருக்குது
உன் மனசதை கேட்டுத் தான் தவிக்குது


நான் உன்னை மட்டும் பாடும் குயிலுதான்
நீ என்னை எண்ணி வாழும் மயிலதா
மனசு முழுதும் இசைதான் எனக்கு
இசையோடொனக்கு இடமும் இருக்கு
என் மனசுல பாட்டு தான் இருக்குது
உன் மனசதை கேட்டுத்தான் தவிக்குது

திரைப்படம்: பாண்டி நாட்டு தங்கம்
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா, மனோ


Friday, December 16, 2011

பருவமே புதிய பாடல் பாடு

படம்: நெஞ்சத்தைக் கிள்ளாதே.
இசை: இளையராஜா.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி.


பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்

பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா
சிரிக்கிறாள் ஹோ ஹோ ஹோ ரசிக்கிறான் ராஜா
சிவக்கிறாள் ஹோ ஹோ ஹோ துடிக்கிறாள் ராணி
தீபங்கள் போலாடும் பார்வை சேரும்

(பருவமே புதிய பாடல் பாடு...)

தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ
அணைக்கிறான் ஹோ ஹோ ஹோ நடிக்கிறான் தோழன்
அணைக்கிறான் ஹோ ஹோ ஹோ தவிக்கிறாள் தோழி
காலங்கள் பொன்னாக மாறும் நேரம்

(பருவமே புதிய பாடல் பாடு...)

எங்கும் நிறைந்த இயற்கையில்

பாடலைக் இங்கே காணலாம்.எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கிவரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ

எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கிவரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ

பார்வை ஜாடை சொல்ல
இளம் பாவை நாணம் கொள்ள
பார்வை ஜாடை சொல்ல
இளம் பாவை நாணம் கொள்ள
அங்கு காதல் கோலமிடும்
மனம் ராகம் பாடிவரும்

எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கிவரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ

வெண்பனி போல் அவள் தேகம்
அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம்
வெண்பனி போல் அவள் தேகம்
அள்ளும் செங்கனி போல் இதழ் மோகம்
தேனாக...லல லல லல லல...லாலா லாலா
ஆசை...தேனாக ஆசை
அது ஆறாக...வாழ்வில் இன்பம் நூறாக
வா...ம்ம்ம்
வா...ம்ம்ம்
வா...ம்ம்ம்

எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கிவரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ

தங்கமும் வைரமும் போலே
தொட்டுத் தழுவிடும் ஆசைகள் மேலே
தங்கமும் வைரமும் போலே
தொட்டுத் தழுவிடும் ஆசைகள் மேலே
சேராதோ...லல லல லல லல...லாலா லாலா
மோகம்...சேராதோ மோகம்
அது தீராதோ...தேகம் கொஞ்சம் வாடாதோ
வா...ம்ம்ம்
வா...ம்ம்ம்
வா...ம்ம்ம்

எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கிவரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ

எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கிவரும் சின்னஞ்சிறு உள்ளங்களில் என்ன கனவோ
எண்ணங்களில் என்ன சுவையோ

திரைப்படம் : இது எப்படி இருக்கு
பாடியவர்கள்: எஸ்.ஜானகி, கே.ஜே. யேஸுதாஸ்
இசை: இளையராஜா

Tuesday, December 13, 2011

வசந்த காலக் கோலங்கள்


வசந்த காலக் கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
வசந்த காலக் கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

அலையிலாடும் காகிதம்
ம் ம் ம்
அலையிலாடும் காகிதம் அதிலும் என்ன காவியம்
நிலையில்லாத மனிதர்கள் அவர்க்குமென்ன உறவுகள்
உள்ளம் என்றும் ஒன்று அதில் இரண்டும் உண்டல்லவோ
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

தேரில் ஏறும் முன்னமே தேவன் உள்ளம் தெரிந்தது
நல்ல வேளை திருவுளம் நடக்கவில்லை திருமணம்
நன்றி நன்றி தேவா உன்னை மறக்க முடியுமா
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

(வசந்த )
திரைப்படம்: தியாகம்
பாடியவர் : ஜானகி
எழுதியவர் : கண்ணதாசன்
இசை: இளையராஜா

Thursday, December 1, 2011

அள்ளி அள்ளி வீசுதம்மா

அள்ளி அள்ளி வீசுதம்மா
அன்பைமட்டும்
அந்த நிலா நிலா
மாளிகை மாடம் மட்டும் வீசாம
ஓலைக்குடிசை என்னும் பாக்கம
அள்ளி அள்ளி வீசுதம்மா
அன்பை மட்டும்
அந்த நிலா நிலா

என் கோயிலில் தீபம் ஏற்றி
நான் வாழ்கிறேன் உன்னாலே உன்னாலே
என் நெஞ்சிலோர் ராகம் உண்டு
நாளும் பாடுவேன் அன்பாலே அன்பாலே
என் நேசமும் என் ஆசையும் உன்னோடு உன்னோடு
பூமாலையும் நீ சூடவா
பூமாலையும் நீ சூடவா
பாராட்டவா சீராட்டவா

(அள்ளி அள்ளி)

பூந்தென்றலாய் உன்னை நானும்
நான் வாழ்த்துவேன் பூப்போலே பூப்போலே
தாய்போலவே உன்னை நானும்
சீராட்டுவேன் தேன்போலே தேன்போலே
என் சொந்தமும் உன் பந்தமும்
என்னாளும் நீங்காது
என் ஜீவனே என்னாளுமே
என் ஜீவனே என்னாளுமே
உன் பேரையே கொண்டாடுமே

திரைப்படம் : அத்தை மக ரத்தினமே
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: கங்கை அமரன்


திரைப்படம் : அத்தை மக ரத்தினமே
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: கங்கை அமரன்

Last 25 songs posted in Thenkinnam