Tuesday, May 28, 2013

கனவே நீ இல்லையேல் உலகம் இது இல்லையே


கனவே நீ இல்லையேல் உலகம் இது இல்லையே
இரு கண்ணுக்குள்ளே கூடு கட்டி வாழ்கிறாய்
இந்த இதயத்தில் நீ மட்டும் ஆள்கிறாய்
தினம் இன்பங்களை துன்பங்களை சேர்த்து தந்து
நீ வாழ்க்கையே என்கிறாய்

மண்ணில் உள்ள மனிதன் கண்ணுக்குள்ளே நுழைந்து
தொடத் தொடத் துரத்துகிறாய்
வானத்தை பிடித்து மேகத்தை உடுத்த
ஆசையை நீட்டுகிறாய்

கனவில் வசிப்பதும் ஒரு சுகம் தான்
வலியும் கூட இங்கு ஒரு வரம் தான்
கனவு காணா கண்கள் எங்கும்
இல்லையே

மண்ணில் உள்ள மனிதன் கண்ணுக்குள்ளே நுழைந்து
தொடத் தொடத் துரத்துகிறாய்
வானத்தைப் பிடித்து மேகத்தை உடுத்த
ஆசையை நீட்டுகிறாய்

என்னன்னவோ மனதிலே விதைப்பாய்
விதைத்ததைக் கொஞ்சம் வளர்ப்பாய்
வளர்ந்ததை விரும்பியே கலைப்பாய்
உனக்கிது அழகா?



என்ன சொல்லி என்ன செய்ய
உன்னை விட்டால் எங்களுக்கு வேறு வழி இல்லையே
மண்ணில் வந்து பிறந்ததும்
இறந்திடும் வரை யாரும்
காண உந்தன் பிள்ளையே

கனவில் பாடும் பாடல் அதை கேட்டு
காலை எழுந்து போகுதே மேற்கு
புதிய விடியலை கண்களில் சேர்த்து
வைத்திங்கு  கனவுகள் காண்போமே

மண்ணில் உள்ள மனிதன் கண்ணுக்குள்ளே நுழைந்து
தொடத் தொடத் துரத்துகிறாய்
வானத்தை பிடித்து மேகத்தை உடுத்த
ஆசையை நீட்டுகிறாய்

நூலில் ஆடும் பொம்மை போல ஆடுகிறோம்
எங்கள் நூலை உந்தன் கையில் வந்து தேடுகிறோம்
அங்கும் இங்கும் காற்றில் ஆடி நீந்துகிறோம்
அனுதினம் வாடினோம் ஆயினும் நாடினோம்

உணவைப் போலே உன்னை உண்டோம்
உன்னை தவிர என்னக் கண்டோம்
மனித வேதனைக்கு கனவினைப் போல் ஒரு
மருந்தினை யார் தருவார்

மண்ணில் உள்ள மனிதன் கண்ணுக்குள்ளே நுழைந்து
தொடத் தொட துரத்துகிறாய்
வானத்தைப் பிடித்து மேகத்தை உடுத்த
ஆசையை நீட்டுகிறாய்



கனவே நீ இல்லையேல்.. உலகம் இது இல்லையே..

வரிகள் : நா. முத்துக்குமார்
பாடல்: ஷ்ரேயா கோஷல்(?)
இசை: மெஜோ ஜோசப்
திரைப்படம் : சென்னையில் ஒரு நாள்

Sunday, May 12, 2013

பூவே இளைய பூவே



பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமே
மலர் மீது தேங்கும் தேனே
எனக்குத் தானே எனக்குத் தானே

குழல் வளர்ந்து அலையானதே
இரவுகளின் இழையானதே
விழி இரண்டு கடலானதே
எனது மனம் படகானதே
இளம் பளிங்கு நகம் சேர்த்ததே
நிலவு அதில் முகம் பார்த்ததே
இனிக்கும் தேனே எனக்கு தானே

இளஞ்சிரிப்பு ருசியானது
அது கனிந்து இசையானது
குயில் மகளின் குரலானது
இருதயத்தில் மழை தூவுது
இரு புருவம் இரவானது
இருந்தும் என்ன வெயில் காயுது
இனிக்கும் தேனே எனக்கு தானே


படம்: கோழி கூவுது
இசை: இளையராஜா
பாடல்: வைரமுத்து
பாடியவர்: மலேசியா வாசுதேவன்

Friday, May 10, 2013

என் வானிலே ஒரே வெண்ணிலா




என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம்

நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்த்தைகள் தேவையா

நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா


படம்: ஜானி
இசை: இளையராஜா
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: ஜென்சி

Thursday, May 9, 2013

நதி வெள்ளம் மேலே - தங்க மீன்கள்





நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முன் அந்தி நிலவில் என் மானே மானே
நீ ஓடிய மென்சுவடுகள் மீண்டும் உனைக் கேட்கும்
அடி என் கண்ணின் இரு கருவிழிகள்
உன் முகத்தைத் தேடுதடி
கண்ணீர்த்துளிகள் காட்சியை மறைக்குதடி
என் காட்டில் ஒரு மழை வந்தது
மகரந்த ஈரங்கள் காயும் முன்னே
இடிமின்னல் விழுந்து காடே எரிந்ததடி

அலைந்திடும் மேகம்
அதைப் போல இந்த வாழ்க்கையே
காற்றின் வழியில் போகின்றோம்
கலைந்திடும் கோலம்
என்றபோதிலும் அதிகாலையில்
வாசலில் வண்ணம் விதைக்கின்றோம்
உயிரே உன்னைப் பிரிந்தேன்
உடனே நானும் இறந்தேன்
உடல் நான் அங்கு வாழும் நீதானே
எந்தன் உயிரே

மலர் ஒன்று விழுந்தால்
அதை ஏந்த பலர் ஓடுவார்
இலைகள் விழுந்தால் சருகாகும்
வறியவன் வாழ்க்கை
இலை போல என்றபோதிலும்
சருகுகள் ஒரு நாள் உரமாகும்
உயிரே உன்னைப் பிரிந்தேன்
உடனே நானும் இறந்தேன்
உடல் நான் அங்கு வாழும் நீதானே
எந்தன் உயிரே



படம்: தங்க மீன்கள்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்: ராகுல் நம்பியார்

Tuesday, May 7, 2013

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - தங்க மீன்கள்




ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய் 
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் 
பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு பூவில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி

தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேக்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி 
அடி கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி

உன் முகம் பார்த்தால் தோணுதடி
வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பார்க்குதடி
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி


படம்: தங்க மீன்கள்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்: ஶ்ரீராம் பார்த்தசாரதி

Thursday, May 2, 2013

எதிர் நீச்சல் - பூமி என்ன சுத்துதே


பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு கத்துதே
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி நிக்குதே
டேமேஜ் ஆன பீசு நானே
ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூணு நேரா ஆனேன்

ஹே என்னோட பேரு சீரானதே
ஹே என்னோடு பாதை நேரானதே
ஹே ஜீரோவும் இப்போ நூறானதே
அட நூறானதே

ஹே என்னோட பேரு சீரானதே
ஹே என்னோடு பாதை நேரானதே
ஹே ஜீரோவும் இப்போ நூறானதே
அட நூறானதே

சந்தை பக்கம் போகலாம்
பஞ்சு மிட்டாய் வாங்கலாம்
பீச்சு பக்கம் போகலாம்
ரங்கராட்னம் சுத்தலாம்

வாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதே
ஜோடி வந்து இப்போ ஜாலி ஆனதே
பைக்கு ரைய்டு கூட ஹப்பி ஆனதே
காலம் வந்ததே கெத்து ஆனதே

வாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதே
ஜோடி வந்து இப்போ ஜாலி ஆனதே
பைக்கு ரைய்டு கூட ஹப்பி ஆனதே
காலம் வந்ததே கெத்து ஆனதே

எங்கேயோ போகும் காற்று
இப்போ என் ஜன்னல் பக்கம் வீசும்
என் கூட பொறந்த சாபம்
இப்ப தன்னாலேயே தீரும்

டேமேஜ் ஆன பீசு நானே
ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன்
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூணு நேரா ஆனேன்

ஹே பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு கத்துதே
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி
கைய கட்டி கைய கட்டி நிக்குதே

படம் : எதிர் நீச்சல் (2013) 
இசை : அனிருத் 
பாடியவர் : அனிருத்
வரிகள் : தனுஷ்

Wednesday, May 1, 2013

தீபாவளி தல தீபாவளி



தெற்கு சீமையிலே என்னை பத்தி கேளு
தூளு கெளப்பறவன் தூத்துக்குடி ஆளு
ராசா எட்டு வச்சா படபடக்கும் ஊரு
லேசா கண்ணடிச்சா வெடி வெடிக்கும் பாரு
தீபாவளி தல தீபாவளி
தீபாவளி தல தீபாவளி

தெற்கு சீமையிலே என்னை பத்தி கேளு
தூளு கெளப்பறவன் தூத்துக்குடி ஆளு

ஒரு காலத்திலே தெரு ஓரத்திலே
தாயே என்னை தள்ளி வெச்சா
இந்த ஜென்மத்திலே என்னை பாக்காதேனு
கண்ணில் ஊசி வெச்சு தச்சா

ஒத்தையிலே விட்ட செடி என்னாச்சு
அது எந்திரிச்சு மாமரமாய் நின்னாச்சு
ஒத்தமரம் ஒத்தமரம் கோர்த்தாச்சு
அது முட்டுனு வானம் மேலே போயாச்சு
பட்டாசை போட்டு மத்தாளம் கூட்டு
என் பேரை நீ சொல்லி கொண்டாடு
தீபாவளி தல தீபாவளி
தீபாவளி தல தீபாவளி

ஒரு நல்லவனா நீயும் வாழ்ந்திருந்தா
ஊரே தோளில் ஏறி நிற்கும்
ஒரு வல்லவனா நீயும் வாழ்ந்து வந்தா
ஊரே தோளில் ஏத்தி வைக்கும்

ஒரு நல்லவனா நீ வாழ்ந்திருந்தா
ஊரே தோளில் ஏறி நிற்கும்
ஒரு வல்லவனா நீயும் வாழ்ந்து வந்தா
ஊரே தோளில் ஏத்தி வைக்கும்
வெட்டவரும் எதிரியை எருவாக்கு
நீ நட்டு வெச்ச பூச்செடிக்கு உரமாக்கு
உனக்கென்று ஒரு கூட்டம் உருவாக்கு
நீ உழைப்பதை ஊருக்கு விருந்தாக்கு
பட்டாசை போட்டு மத்தாளம் கூட்டு
என் பேரை நீ சொல்லி கொண்டாடு
தீபாவளி தல தீபாவளி
தீபாவளி தல தீபாவளி

தெற்கு சீமையிலே என்னை பத்தி கேளு
தூளு கெளப்பறவன் தூத்துக்குடி ஆளு
ராசா எட்டு வச்சா படபடக்கும் ஊரு
லேசா கண்ணடிச்சா வெடி வெடிக்கும் பாரு
தீபாவளி தல தீபாவளி
தீபாவளி தல தீபாவளி
தீபாவளி தல தீபாவளி
தீபாவளி தல தீபாவளி

படம் : அட்டகாசம் (2004) 
இசை : பரத்வாஜ் 
பாடியவர் : மனோ 
வரிகள் : வைரமுத்து

Last 25 songs posted in Thenkinnam