Thursday, September 30, 2010

பானா காத்தாடி - ஒரு பைத்தியம் பிடிக்குதுஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே
அதன் வைத்தியம் உன் இரு கண்ணே கண்ணே
சிரித்தேனே நான் தானே மெல்ல
துடித்தேனே என் உள்ளம் சொல்ல
காதல் பாரம் சுமந்தேனே
வலி இருந்தும் சுகமாய் உணர்ந்தேனே
(ஒரு பைத்தியம்..)

எதை தேடி நீ வந்தாய் அதை தந்த பின்னாலும்
என்னை தேட வைத்தாயடி
எதிர்காலம் நிகழ்காலம் எல்லாமே நீ என்று
சொல்லாமல் தவித்தேனடி
கேள்வித்தாளோடு உன் முன்னே நான் நிற்க
காதல் தேர்வும் இல்லை ஹோ
தோல்வி இல்லாமல் உன் நெஞ்சை நான் வெல்ல
வழிகள் இங்கா இல்லை
வருவேன் தருவேன் ஒரு வார்த்தை சொல்ல
வழியில் ஏனோ நான் விலகிச் செல்ல
மௌனங்கள் போலே ஒரு மொழியேதடி

நீ எந்தன் வீட்டுக்குள் நான் வாழும் சேற்றுக்குள்
பூவாக பூத்தாயடி
என் இன்பம் என் துன்பம் என்னாளும் இளைப்பாற
தோள்சாய வந்தாயடி
எந்த வழி சொல்ல புரியாமல் நான் நிற்க
எதிரில் ஒரு தேவதை ஹோ
என்னை நான் ஆக்கி என் வாழ்வை நேராக்கி
மீட்டு தந்தாய் என்னை
ஒரு நாள் ஒரு நாள் உன்னை கண்ணில் கண்டேன்
மறு நாள் மறு நாள் என் நெஞ்சில் கண்டேன்
உனக்காக உயிரோடு வாழ்ந்தேனடி
(ஒரு பைத்தியம்..)

படம்: பானா காத்தாடி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: கார்த்திக்
வரிகள்: நா. முத்துக்குமார்

Wednesday, September 29, 2010

பானா காத்தாடி - தாக்குதே கண் தாக்குதேதாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை தான் பார்த்ததே பூங்காத்ததை கை கோர்த்ததே
கோர்த்ததை பூ ஏற்றதை தன் வார்த்தையில் தேன் வார்த்ததே
வார்த்தையில்லா பார்வையில் தான் வாய்க்கலாமோர் வாழ்க்கையே
யாரோடு யாரென்று யார்தான் சொல்வாரோ
(தாக்குதே..)

பார்த்த பொழுதே பூசல் தான் போக போக ஏசல் தான்
பூசல் தீர்ந்து ஏசல் தீர்ந்து இன்று ஹாப்பி
பெட்டை மொழிதான் ஆண் மொழி கொட்டை மொழி தான் பெண் மொழி
ஒன்றுக்கொன்று வோர்க்கவுட் ஆச்சே நல்ல கெமிஸ்ட்ரீ
வங்கக்கடலின் ஓரத்தில் வெயில் தாழாத நேரம் பார்த்து
நேசம் பூத்து பேசுதே ஏதோ ஏதோ தான்
(தாக்குதே..)

செல்லில் தினமும் சேட்டிங் தான் காப்பி ஷாப்பில் மீட்டிங் தான்
ஆனா போதும் ஆசை நெஞ்சில் பூத்ததில்லை
பஞ்சும் நெருப்பும் பக்கம் தான் பற்றிக்காமல் நிற்க்கும் தான்
பூமியின் மேல் இவர்களை போல் பார்த்ததில்லை
தீண்டும் விரல்கள் தீண்டலாம் தீண்டும்பொழுதும்
தூய்மை காக்கும் தோழமைக்கு சாட்சியே வானம் பூமிதான்
(தாக்குதே..)

படம்: பானா காத்தாடி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: நா. முத்துக்குமார்

Tuesday, September 28, 2010

என்ன சொல்லி நான் எழுதபதிவர் யாழினியின் விருப்பப்பாடல் இன்றைய அவரின் பிறந்தநாளுக்காக ஒலிக்கிறது. வாழ்த்துக்கள் யாழினி.


என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர
என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர
மேலாடைக்குள் நான் போராடினேன்
நூலாடைக்குள் ஒரு நூலாகினேன்
பேதை என்னை வாதை செய்யும் வெட்கம் விடுமோ ஹோய்... (என்ன சொல்லி)

அறியாதவள் நான் தெரியாதவள்
உன் அனுபவம் ஏதும் புரியாதவள்
எத்தனையோ தோணுது மனசினிலே
அது அத்தனையும் எழுதத் தெரியாதவள்
என்ன சொல்ல... எப்படி எழுத... ம்ம்ம்ஹூஹூம்...
மஹாராஜ ராஜஸ்ரீ...

காற்றாகப் போனாலும் அவர் கன்னங்களை நான் தொடுவேன்
காற்றாகப் போனாலும் அவர் கன்னங்களை நான் தொடுவேன்
பெண்ணானப் பாவம் அச்சம் மடம் நாணம்
கொண்டேனே நானும் கண்ணாவின் கோபம்
கொல்லாதே கொண்டாலும் சொல்லாலே கொல்லாதே
கண்ணான கண்ணா... கண்ணா... கண்ணா... (என்ன சொல்லி)

இதயம் துடிக்குது என் செவிக்கே கேட்குதம்மா... கேட்குதம்மா
வளையல் நடுங்குது வாய் வார்த்தை குளறுதம்மா... குளறுதம்மா...
என்ன செய்ய.. என்ன செய்ய... ம்ம்ம்ஹூஹூம்...

காத்தாடி போலானேன்
என் கண்ணுக்குள்ளே நோயானேன்
காத்தாடி போலானேன்
என் கண்ணுக்குள்ளே நோயானேன்
பெண்ணான பாவம் வெட்கம் சொந்தமாகும்
கல்யாண காலம் வந்தபின்பு மாறும்
நெஞ்சோடு நெஞ்சாக கொஞ்சாமல் போவேனோ
கண்ணான கண்ணா... கண்ணா.. கண்ணா... (என்ன சொல்லி)

படம் : ராணித்தேனீ
இசை : இளையராஜா
பாடியவர் : பி. சுசீலா

இனிது இனிது - அம்மாக்களே ஓ அப்பாக்களேஅம்மாக்களே ஓ அப்பாக்களே
சொந்தங்கள் இப்போ சுட்டுங்களேன்
எங்களைப் புரிந்துக்கொள்ளுங்கள்
உங்கள் உலகம் தத்தம் புதுசு
எங்கள் உலகம் புத்தம் புதுசு
இனிமேல் எங்கள் தேசியப்பறவை
ஆக்கிரோச்சியன்கள் அறிவுப் பறவை
செல்போன் எண்கள் காதல் காதலி
இணையம் இணையம் எங்கள் இதயம்
அன்று நமது பாரத நாடு
அமெரிக்காவை கடன் கேட்கும்
இன்று எங்கள் அறிவைப்பார்த்து
அமெரிக்காவே கடன் கேட்கும்
அன்று நமது பாரத நாடு
அமெரிக்காவை கடன் கேட்கும்
இன்று எங்கள் அறிவைப்பார்த்து
அமெரிக்காவே கடன் கேட்கும்

உங்கள் போட்டி உள்ளூருப்போட்டி
எங்கள் போட்டி உலகப்போட்டி
எல்லையில் இல்லை தில்லையில் இல்லை
டெல்லியில் இல்லை திருச்சியில் இல்லை
மதுரைக்காட்டும் மாணவனுக்கும்
மாஸ்க்கோ மாணவன் போட்டி
லாலாப்பேட்டை மாணவனுக்குக்
லண்டன் மாணவன் போட்டி
சிகாலப்பட்டி மாணவனுக்கு
சிட்னி மாணவன் போட்டி
வாடிப்பட்டி மாணவனுக்கு
வாஷிங்டன்னில் போட்டி
எட்டுத்திசையய் எங்கள் பக்கம் திரும்பி
வைக்கும் திருவணிகம்
இண்டர்னேஷனல் சந்தையில் இன்று
இந்திய மூளைக்கு விலை அதிகம்
சில்மிஷம் ஒன்றில் கல் விஷம் இல்லை
ஸ்பரிசம் உண்டு நேசம் இல்லை
தகவல் உண்டு தாண்டுதல் இல்லை
போட்டிகள் உண்டு பொறாமை இல்லை
(அன்று..)

எங்களின் பக்கம் கல்பனா சாவ்லா
எங்களின் அண்ணி சுனிதா வில்லியம்
சுனிதா வில்லியம்

செயற்கைக்கோல் சுற்றும் உலகின் ஆண்களும்
எல்லாம் ஆக்கம் ஆச்சு
அன்றே வீடு தூரம் ஆச்சு
கண்ணால் பார்த்தால் கற்புப்போய்விடும் என்பது
உங்கள் உலகம்
கட்டியணைத்தும் கெடவில்லை என்பது
எங்கள் உலகம்
பகவான் பார்த்து ஞானம் கொடுப்பான் என்பது
உங்கள் உலகம்
பத்து நொடிகள் தியானம் வேணும் என்பது
எங்கள் உலகம்

படம்: இனிது இனிது
இசை: மிக்கி ஜே மேயர்
பாடியவர்கள்: மிக்கி ஜே மேயர், கிருஷ்ணா சைத்னே, ஆதித்யா, கார்த்திக்
வரிகள்: வைரமுத்து

Monday, September 27, 2010

இனிது இனிது - நம் இளமையே உலகம் ஹேப்பி டேய்ஸ்நம் இளமையே உலகம் ஹேப்பி டேய்ஸ்
நம் இரவுகள் உலகம் ஹேப்பி டேய்ஸ்
நம் கனவுகள் உலகம் ஹேப்பி டேய்ஸ்
திகட திகட ஹேப்பி டேய்ஸ்
நம் குறும்புகள் உலகம் ஹேப்பி டேய்ஸ்
நம் நரம்புகள் உலகம் ஹேப்பி டேய்ஸ்
திகட திகட ஹேப்பி டேய்ஸ்
(நம் இளமை..)

இன்பம் எதிரிலே கண் எதிரிலே
கண் அருகிலே வா வா
துள்ளும் வயதிலே நம் மனதிலே
பூப்பூக்குதே வா
நண்பன் அருகிலே நம் அருகிலே
மழத் தூறுதே வா
நெஞ்சம் நனையுதே வா அருகிலே வா

நாளை நாமும் எங்கு வாழ்வோம்
ஆயினும் காலேஹ் போல் வருமா
நல்லது பாதி கெட்டது பாதி
இங்கேக் கற்றோமே
இளமைக்காலம் புயலைப்போலே
தடைகள் போட்டால் கேட்டிடுமா
வானம் தேடிப்போகும் வயதில்
வா வா பறப்போமே
நேற்று சிறகெனப் பறந்துவிட்டோமே
வரும் நாளை
வரும் வரை தானன தானன நா
(நம் இளமை..)

படம்: இனிது இனிது
இசை: மிக்கி ஜே மேயர்
பாடியவர்கள்: கார்த்திக், திம்மி, க்ரிட் லாக்
வரிகள்: நா. முத்துக்குமார்

Sunday, September 26, 2010

இனிது இனிது - கோடி கனவு கண்ணில்கோடி கனவு கண்ணில் அலைப்போல் மோதும்
கரையில் வந்து உடைந்து நுரையாய் போகும்
காதலும் கடல் அலைதான்
கரைவதும் நூறு நினைவா

இதயமே ஓஹோ ஓஹோ ஓஹோ
எதிரிலே
ஓஹோ ஓஹோ ஓஹோ

காதலே காதலே காதலே
காதலே காதலே காதலே

காதில் கேட்டால் சாட்சிப்பிழையாய் ஆகும்
கண்ணில் பார்த்தால் காட்சி மெய்யாய் ஆகும்
காதலும் சிறு கரைதான்
முடிவுகள் விடுகதைதான்
உயிரது ஓஹோ ஓஹோ ஹோஹோ ஹோஹோ
உயிரது ஓஹோ ஓஹோ ஹோஹோ ஹோஹோ

காதலே காதலே காதலே
காதலே காதலே காதலே
(காதலே..)

படம்: இனிது இனிது
இசை: மிக்கி ஜே மேயர்
பாடியவர்: நரேஷ் ஐயர்
வரிகள்: நா. முத்துக்குமார்

Saturday, September 25, 2010

சிக்கு புக்கு - விழி ஒரு பாதிவிழி ஒரு பாதி விரல் ஒரு பாதி
விரும்பிய பூந்தேகம் நிற்கும் நேரம்
தொலைந்தது பாதி கொதித்தது பாதி
கொடுத்தது போதாமல் கேட்கும் நேரம்

சிறு நூலாடை போல நான்
இடை மேல் ஆட வேண்டுமே
அதற்கொரு நாள் பார்த்து வருகிறேன்
(தொலைந்தது..)

நீ வைத்த விழிகளில் ராவெல்லாம்
நான் வைத்த கனவுகள் போதுமோ
நீ வைத்த கனவுகள் நாளெல்லாம்
தீ வைத்த கொடுமையை கூறவோ
நிதம் வரும் வரும் நீல மேகம் நாம்
நேசம் கண்டு நல்வாழ்த்துக்கள் கூறவும்
இலக்கணம் தழுவிய இலக்கிய உறவிது
தேவ தேவி தாங்கள் மேனி அணைத்தேன்
(தொலைந்தது..)

தூரத்தில் இருக்கின்ற வான் அதன்
ஈரத்தில் மிதக்கின்ற வாடையில்
நெஞ்சத்தில் இனிக்கின்ற காட்சிகள்
நாம் கொண்ட உறவுக்கு சாட்சிகள்
பிறர் விரல் தொடும் நீங்கிடாது
ஒரே நோன்பிடாது நம் நேசம் வாழும்
இடி பல கலங்கிது
எவர் இதை அறிவது
வானம் பூமி வாழும் காலம் வரை
(விழி..)

படம்: சிக்கு புக்கு
இசை: ஹரிஹரன் - லெஸ்லி
பாடியவர்கள்: அட்னான் சாமி, சுஜாதா
வரிகள்: வாலி

Friday, September 24, 2010

சிக்கு புக்கு - ஒரு நிலாஒரு நிலா தொடும் தூரத்தில்
இருந்தும் முடியவில்லை தீண்ட
திருவிழா இந்த நேரத்தில்
தயக்கம் வரம்புகளை தாண்ட

உனை பார்த்தேன் நான் எனை தோற்றேனே
உயிர் காற்றாய் நான் உனை ஏற்றேனே
உடன் நடக்கும் நிழல் நானே
(ஒரு நிலா..)

நான் வாழும் நாள் வரை
என் வீரன் கை சிறை
கல்யாண நலுங்கு தான்
கண்ணே ஒரே விலங்கு தான்
ஓடை பூவை பனி
ஓசை இன்றே தொடும்
ஓ காவல் மீறி வரும்
காற்றுக்கேது தடம்
அடடா எனக்கோர் அவஸ்தை நீ
(திருவிழா..)

கால் கொலுசு இசை பாடும்
கை வளையல்கள் அசைந்தாடும்
கண் விழியில் ஒரு நாளும்
காமன் அவன் தரும் பாடம்
மேளம் தாளம் வேஹம் கோஷம் கேட்கும்
மாலை சூடிடும் வைபோகம்
சொந்தம் பந்தம் பேரன் பேத்தி யாவரும்
வாழ்த்து பாடிடும் கல்யாணம்

ஓ தென்காசி தூரல் போல்
ஏன் கண்ணே வேர்க்கிறாய்
பூ வைத்த பூவைக்குள்
தீ வைத்து பார்க்கிறாய்
கண்ணில் நூறு கனா
நெஞ்சில் நூறு வினா
காதல் யாரை விடும்
தேதி பார்த்தா தொடும்
வலிக்கும் காதல் வலியது
(ஒரு நிலா..)

படம்: சிக்கு புக்கு
இசை: ஹரிஹரன் - லெஸ்லி
பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன், உமா பத்மநாபன், சந்திராயி பத்தசர்யா
வரிகள்: வாலி

Thursday, September 23, 2010

சிக்கு புக்கு - தூரல் நின்றாலும் சாரல் நின்றாலும்உன்னை உன்னிடம் தந்துவிட்டேன்
நீ என்னை என்னிடம் தந்துவிடு
போதும் போதும்
எனை போக விடு

கண்மணி
எனை போக விடு
கண்மணி
கண்மணி

தூரல் நின்றாலும் சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே
தூர சென்றாலும் தொலைவில் நின்றாலும் எண்ணம் உன்னிலே
இரவில் தூங்காத இமைகள் ஓரம் நீதான் நிற்கிறாய்
எனது தூக்கத்தை நீதான் வாங்கி எங்கே விற்கிறாய்
(தூரல்..)

உயிர் உயிரே

உன்னை கேட்காமல் என்னை கேட்காமல்
காதல் உண்டானதே
எனை போக விடு
கண்மணி

விழிகள் என்கின்ற வாசல் வழியாக காதல் உட்சென்றதே
இனியும் உன் பேரை என் நென்ச்ஜோடு ஒட்டி வைப்பதா
எனது பொருள் அல்ல நீதான் என்று எட்டி வைப்பதா
விடைகள் இல்லா வினாக்கள் தானடி
(தூரல்..)

படம்: சிக்கு புக்கு
இசை: ஹரிஹரன் - லெஸ்லி
பாடியவர்கள்: ஹரிஹரன், வடலி பிரதர்ஸ்
வரிகள்: வாலி

Wednesday, September 22, 2010

சிக்கு புக்கு - அடி சாரலேஅடிக்குதே மழை ரெண்டு நெஞ்சோட
துடிக்குதே அணல் துண்டு பஞ்சோட
தரையிலே கால் தாளம் போட்டிருக்க
மரங்கொத்தி பறவையாய் மனசை செதிலாக்கும் பார்வை
உலகமே ஒரு நொடி உருண்டு கையோடு சேர
நான் வாங்கி வந்த வார்த்தை எல்லாம் மழையில் கரைஞ்சோட

அடி சாரலே பனி தூரலே ஏ
உன் பார்வையில் தேய்கிறேன்
உனக்குள்ளே நானே குடை சாய்கிறேன்
சாய்கிறேன் உயிர் வாழ்கிறேன்

அடி சாரலே பனி தூரலே ஏ
உன் பார்வையில் தேய்கிறேன்
உனக்குள்ளே நானே குடை சாய்கிறேன்
சாய்கிறேன் உயிர் வாழ்கிறேன்

படம்: சிக்கு புக்கு
இசை: ஹரிஹரன் - லெஸ்லி
பாடியவர்கள்: பிரதீப் விஜய், சுவி
வரிகள்: பா. விஜய்

Tuesday, September 21, 2010

சிக்கு புக்கு - ஜாரா ஜாராஎங்கெங்கேயோ நான் ஜாரா ஜாரா
எடையில்லாமல் ஜாரா ஜாரா
பறக்கின்றேனே பாரா பாரா
மிதக்கின்றேனே ஜாரா ஜாரா
பறக்கலாம் ஏய் ஜாரா ஜாரா
(எங்கெங்கேயோ..)

உன் விரல் நுனியில் என் விரல் நுழைத்து
இவ்வுலகெங்கும் போகலாம்
உன் தலை முடியில் என் இதழ் பதித்து
நம் பயணங்கள் பேசலாம்

துடுவானம் தொடவேண்டும்
வா இன்னும் கொஞ்ச தொலைவே
உன்னை என் மேல் விழ செய்ய
வரம் நூறு நூறு கேட்பேன்
ஜாரா ஜாரா
(எங்கெங்கேயோ..)

என் இமைகளிலே உன்னிரு விழிகள்
வந்து சேறுதே
என் தனிமையிலே உன் நினைவலைகள்
சுற்றியும் வந்து மேயுதே

ஒரு பூமி ஒரு வானம்
அது போதவில்லை நமக்கே
புதிதாக மனம் தூண்ட
இனி ஏது எல்லை அழகே
ஹேய்..

ஜாரா ஜாரா
ஜாரா ஜாரா
ஜாரா ஜாரா
ஜாரா ஜாரா

படம்: சிக்கு புக்கு
இசை: ஹரிஹரன் - லெஸ்லி
பாடியவர்கள்: பென்னி தயால், லாவன்யா
வரிகள்: பா. விஜய்

Monday, September 20, 2010

அ ஆஆஹா இன்று தேன் நிலவுபடம்: எதிரிகள் ஜாக்கிரதை
பாடியவர்:எல்.ஆர்.ஈஸ்வரி
படம் : எதிரிகள் ஜாக்கிரதை
நடிகர்கள்: ரவிச்சந்திரன்,மனிமாலா,சி.எல்.ஆனந்தன்,விஜயலக்‌ஷ்மி
தயாரிப்பு: மாடர்ன் தியேட்டர்ஸ்
இயக்குநர்:ஆர்.சுந்தரம்

Get this widget | Track details | eSnips Social DNA


அ ஆஆஹா இன்று தேன் நிலவு
அம்மம்மா இது யார் நிலவு
அ ஆஆஹா..ஹா..ஹா.ஹா.அ ஆஆஹா
அ ஆஆஹா..ஹா..ஹா.ஹா.அ ஆஆஹா
இங்கே வா

ஓஓஓஓ நீலத்தில் மாறுகின்ற கண்கள்
இல்லாமல் தான் இந்த பெண்கள்
ஓஓஓஓ பாடுங்கள் ஆனந்த சிந்து
பாருங்கள் வாசலில் வந்து ஓஓஓஓ

அ ஆஆஹா..அ ஆஆஹா..அ ஆஆஹா
அ ஆஆஹா..அ ஆஆஹா..அ ஆஆஹா
இங்கே வா

அ ஆஆஹா இன்று தேன் நிலவு
அம்மம்மா இது யார் நிலவு
அ ஆஆஹா..ஹா..ஹா.ஹா.அ ஆஆஹா
அ ஆஆஹா..ஹா..ஹா.ஹா.அ ஆஆஹா
இங்கே வா

ஆஆஆஆ என்றைக்கும் ஏன் இந்த தொல்லை
பெண்னுக்கு நேர் ஒன்றும் இல்லை
ஓஓஓஓ இன்றைக்கும் நான் கண்ட எல்லை
இன்பமில்லா ஒன்றும் இல்லை ஓஓஓஓ
அ ஆஆஹா..ஹா..ஹா.ஹா.அ ஆஆஹா
அ ஆஆஹா..ஹா..ஹா.ஹா.அ ஆஆஹா
இங்கே வா

அ ஆஆஹா இன்று தேன் நிலவு
அம்மம்மா இது யார் நிலவு
அ ஆஆஹா..ஹா..ஹா.ஹா.அ ஆஆஹா
அ ஆஆஹா..ஹா..ஹா.ஹா.அ ஆஆஹா
இங்கே வா

அ ஆஆஹா இன்று தேன் நிலவு
அம்மம்மா இது யார் நிலவு

பாஸ் என்கிற பாஸ்கரன் - தத்தி தாவும் paper நான்தத்தி தாவும் paper நான்
என்னை boata போல செஞ்சாளே
கிக் ஏத்தி ஏத்திதான்
என்னை கவுத்தாளே
Inku போன பேனா நான்
வந்து wine-அ ஊத்தி போனாளே
மப்பு ஏத்தி ஏத்திதான்
மெல்ல ஒடச்சாளே

என்ன பாடுறேன் என்ன பேசுறேன்
எனக்கு புரிய வில்லை
எங்கு போகிறேன் என்ன பண்ணுறேன்
எனக்கு தெரிய வில்லை

உன் சொந்தம் நான் என் அன்பு நீ
உன் mummy என் aunty
உன் sister-உம் என் brother-போல்
என்றுமே நாம் வாழலாம் வா வா

சட்டை பக்கெட் -இல் வைக்கிற
Cigaratte பக்கெட் -ஆ மாறுறா
Heart-u பக்கத்தில் செல்லமா
சீண்டுறா

Hero honda-va ஓட்டுறேன்
Hero-போலவே மத்துறா
Zero பக்கத்தில் கோடுத்தான்
போடுறா

College போயும் தேரல
Knowledge எதுவும் ஏறல
Marriage பண்ணா தேவல
மானே உடனே வா
(தத்தி..)

Town-னு bus-ல ஏறியே
Ticket வாங்கி நீ நீட்டுனா
வெத்து டிக்கெட் -உம் lottery ஆகுமே
England-huku ராணியா
English நீ பேசினா
ABCD-a நேசிக்க தோணுமே
Incoming calluku காசு இல்ல
Outgoing callukum காசு இல்ல
உன் number தவிர பேசல
மானே உடனே வா ..
(தத்தி..)

படம்: பாஸ் என்கிற பாஸ்கரன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: கார்த்திக்
வரிகள்: நா. முத்துக்குமார்

Sunday, September 19, 2010

வ குவாட்டர் கட்டிங் - உன்னை கண் தேடுதேஉன்னை கண் தேடுதே உள்ளம் நாடுதே
உன்னை கண் காணாமல் பறந்தோடுதே
குடி குடியை கெடுக்கும் தெரியுமடி
ஆனாலும் குடிக்க பிடிக்குமடி
மப்பு கிக்கு பூஸ்ட்டு டக்கரு
குவாட்டரு மேட்டர் கிடைக்கலையே
(உன்னை..)

கல்யாணி ராகம் இல்ல
ஐயய்யயோ பிச்சு பிச்சு ஒதறுரேயே
சாமியார்தான் யாகம் இல்ல
பிண்ணி பூ வச்சி ரிப்பன் கூட சுத்துறியே
(கல்யாணி..)

கீழே தட்டி மேலே திருகி
அதுதான் சொர்கம் போகும் வழி
குனிஞ்சா பொறந்து நிமிந்தா மனுஷன்
குடிச்சா ஞான புருசனடீ
மப்பு கிக்கு பூஸ்டு டக்கரு
குவாட்டரு மேட்டர் கிடைக்கலையே
(உன்னை..)

ஏ குவாட்டர் குவாட்டர் குவாட்டர் குவாட்டர் குவாட்டர்
ஏ குவாட்டர் குவாட்டர் குவாட்டர் குவாட்டர் குவாட்டர்

படம்: வ குவாட்டர் கட்டிங்
இசை: GV பிரகாஷ்குமார்
பாடியவர்கள்: GV பிரகாஷ்குமார், கானா உலகநாதன்
வரிகள்: குமரராஜா

Saturday, September 18, 2010

வ குவாட்டர் கட்டிங் - தேடியே தேடியேதேடியே தேடியே கண்கள் ஓய்கின்றதே
அம்புலி போல நம் வெட்கை தேய்கின்றதே
அல்ஜெப்ரா அல்கோரிதம் போலவே இருந்த என் வானில்
மின்னல் மின்னும் நேரத்தை
(தேடியே..)

எங்கோ என் லைஃபும் ஓடும்
சீஷாவில் ஆடும் பிள்ளை போலே
மேல் வந்தும் கீழே போகும்
வந்தும் வராமல் போகும்
ஈரெல்லாம் தும்மல் போலே தேடும்
என் லக்கும் ஏமாற்றியே போகும்
(தேடியே..)
(எங்கோ..)

தேடினேன் தேடினேன் கண்ணில் தெரிகின்றதே
அம்புலி போல நம் வெட்கை வளர்கின்றதே
பாட்டியின் கம்பளி போலவே அகண்ட என் வாழ்வில்
விண்மீன்கள் கண்கொட்டும்
(தேடினேன்..)

ஓ எங்கும் சந்தோஷம் பொங்கும்
ஊஞ்சலில் பிள்ளை போலாடிடும்
பின்வந்தும் முன்னே போகும்
கண்ணால் கண்டாலே போதும்
கொட்டாவி போலே ஒட்டிக்கொள்ளும்
என் ஆனந்தம் தொற்றிக்கொள்ளும்
(தேடினேன்..)
(எங்கும்..)

படம்: வ குவாட்டர் கட்டிங்
இசை: GV பிரகாஷ்குமார்
பாடியவர்: ஆண்ட்ரியா
வரிகள்: குமரராஜா

Friday, September 17, 2010

பாஸ் என்கிற பாஸ்கரன் - அட பாஸு பாஸு பாஸுபாஸு

அட பாஸு பாஸு பாஸு
என் பேரை கேளு பாஸு
அட பாஸு பாஸு பாஸு
என் பேரே தாண்டா பாஸு
(அட பாஸு..)
அட வேலை வெட்டி இல்லை
ரொம்ப பிஸியான புள்ளை
க்ரிக்கேட் ஆடும் போது
அந்த கோபுரம்தான் எல்லை
நான் நல்லவனா கெட்டவனா
யாரும் கேட்டதில்லை
(அட பாஸு..)

காலையில அஞ்சு மணி
நாங்க கண்ணு முழிப்போம்
பாலம் மேல ஏறி நின்னு
காவிரியில் குளிப்போம்
எட்டு முதல் பத்து வரை
பஸ் ஸ்டாப்பில் சிரிப்போம்
மத்தியானம் வரைக்கும் நாங்க
சலூனில கெடப்போம்
தள்ளு வண்டி கடையில
கடன் சொல்லி லஞ்சுடா
எங்களோட ஆபிஸ் எல்லாம்
டீக்கடை பெஞ்சுடா
(அட பாஸு..)

நாலு முதல் அஞ்சு வரை
காலேஜில் கெடப்போம்
வால் எல்லாம் சுருட்டிட்டு
நல்லவனா நடிப்போம்
ஆறு மணி மேல நாங்க
தியேட்டருல கூடுவோம்
அப்புறமா வந்து நாங்க
குவாட்டர் எங்கே தேடுவோம்
(அட பாஸு..)

படம்: பாஸ் என்கிற பாஸ்கரன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: சத்யன்
வரிகள்: நா. முத்துக்குமார்

Thursday, September 16, 2010

பாஸ் என்கிற பாஸ்கரன் - ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலேஐலே ஐலே
ஐலே ஐலே
ஐலே ஐலே
ஐலே ஐலே

ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே
ஐலே ஐலே வெண்மேக கூட்டங்கள் கீழே
ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே

புடிச்சிருக்கு புடிச்சிருக்கு கொதிக்குது காய்ச்சல் போலே
அணலிருக்கு குளிருக்கு எல்லாமே உன்னாலே

ஒரு முத்தம் தந்து செல்கிறாய் தண்டவாளத்தை போலே
மறு முத்தம் ஜோடி கேட்குதே மீண்டும் தீண்டலிலே
இதழ் மொத்தம் ஈரமானது பாரமனது போலே
ஏதோ ஓர் மோகம் இது எனக்கா தரும் தாகம்

ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே
ஐலே ஐலே வெண்மேக கூட்டங்கள் கீழே

அந்நாளில் ஆப்பிள் தின்றதடி ஏவாள் முத்தம்
பின்னாளில் நாங்கள் வம்சத்திலே அதனால் யுத்தம்
எந்நாளும் கேட்டும் நிறுத்தாமல் முத்த சத்தம்
முத்தங்கள் மோதிக் கொண்டால்தான் உலகம் சுத்தம்
நம் ஆதியும் அண்டமும் முத்தமே முத்தமே
முத்தம் தா முத்தம் தா கண்மணி ஓ
யாரையும் வீரனாய் முத்தமே மாற்றுமே
முத்தத்தால் மேகம் அது மின்சாரமே

ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே
ஐலே ஐலே வெண்மேக கூட்டங்கள் கீழே

அன்பென்ற வேதம் சொல்லுமடி அன்னை முத்தம்
அறிவென்னும் பாடம் சொல்லுமடி தந்தை முத்தம்
ஆகாயம் தாண்ட சொல்லுதடி காதல் முத்தம்
அதனால்தான் நெஞ்சம் கேட்குதடி வெற்றிச் சத்தம்
என் வாழ்க்கையே மாற்றுதே முத்தமே முத்தமே
முத்தம்தா முத்தம் தா கண்மணி ஓ
காலமும் நேரமும் முத்தத்தால் மாறுதே
உன் முத்தத்தால் அந்த மேகம் ஒரு மின்சாரம் ஆகும்

ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே
ஐலே ஐலே வெண்மேக கூட்டங்கள் கீழே
ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே

புடிச்சிருக்கு புடிச்சிருக்கு கொதிக்குது காய்ச்சல் போலே
அணலிருக்கு குளிருக்கு எல்லாமே உன்னாலே
ஒரு முத்தம் தந்து செல்கிறாய் தண்டவாளத்தை போலே
மறு முத்தம் ஜோடி கேட்குதே மீண்டும் தீண்டலிலே
இதழ் மொத்தம் ஈரமானது பாரமனது போலே
ஏதோ ஓர் மோகம் இது எனக்கா தரும் தாகம்

ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே
ஐலே ஐலே வெண்மேக கூட்டங்கள் கீழே

ஐலே ஐலே
ஐலே ஐலே

படம்: பாஸ் என்கிற பாஸ்கரன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: விஜய் பிரகாஷ்
வரிகள்: நா. முத்துக்குமார்

Wednesday, September 15, 2010

பாஸ் என்கிற பாஸ்கரன் - யார் இந்த பெண்தான் என்று கேட்டேன்யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என்னை பார்க்கிறாள் ஏதோ கேட்கிறாள் எங்கும் இருக்கிறாள் ஓ
கண்ணால் சிரிக்கிறாள் முன்னால் நடக்கிறாள் நெஞ்சை கிழிக்கிறாள் ஓ
கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள்
தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தாள்
என்னை ஏதோ செய்தாள்
(யார் இந்த..)

என் வீட்டு முற்றத்தில் இவள் போடும் கோலங்கள்
எப்போதும் வேண்டும் என்று கேட்டேன்
அணில் ஆடும் கூடத்தில் இவள் பாடும் ராகத்தில்
அதிகாலை சூரியனை பார்த்தேன்
கண்ணாடி வளையலை போலே
கையோடு நானும் பிறக்கவே துடிப்பேன்
கால் தீண்டும் கொலுசில் என்னோட மனசை
சேர்த்து கோர்க்கவே தவிப்பேன்
காதோடு தவழும் கம்மல் போல் கிடப்பேன்
கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன்
என்னை ஏதோ செய்தாள்
(யார் இந்த..)

நான் கொஞ்சம் பார்த்தால் எங்கேயோ பார்ப்பாள்
பார்க்காத நேரம் என்னை பார்ப்பாள்
என்னை பார்த்து சிரிப்பாள் நான் பார்த்தால் மறைப்பாள்
மெய்யாக பொய்யாகத்தான் நடிப்பாள்
பெண் நெஞ்சம் புதிததை போல எப்போதும்
யாரும் அறிந்ததே இல்லை
ஆண் நெஞ்சின் துடிப்பும் அன்றாட தவிப்பும்
பெண்கள் மதிப்பதே இல்லை
மனம் நொந்த பிறகே முதல் வார்த்தை சொல்வாள்
மழை நின்ற பிறகே குடை தந்து செல்வாள்
என்னை ஏதோ செய்தாள்
(யார் இந்த..)

படம்: பாஸ் என்கிற பாஸ்கரன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ஹரிசரன்
வரிகள்: நா. முத்துக்குமார்

Tuesday, September 14, 2010

என் கனவினை கேள் நண்பாஎன் கனவினை கேள் நண்பா உனக்கு புரியும்

என் கனவினை கேள் நண்பா உனக்கு புரியும்
என் உணர்வினை நீ அறிந்தால் உதிரம் கொதிக்கும்
ஒரு புறம் வறுமையும்
மறுப்புறம் கொடுமையும்
ஏழையை வெறுத்தது தெரியுமா
இந்த மண் குடில் ஆசையை
மாளிகை அறிந்திடுமா

நண்பனே..
இது மாற வேண்டும்
பசியாற வேண்டும்
இந்த இலைஞர் கையில்
இந்த தேசம் மாற வேண்டும்
(என் கனவினை..)

மகராசன் சீமையில
மழை இல்லாமல் இருந்தது ஒரு காலம்
அட காந்தி போர்கள்
நீங்க வந்ததினால் நாடு
இப்ப செழிச்சு வளம் கொளிச்சி
பஞ்சம் பசி தீர்ந்ததடி
எப்பை எப்பை ஹே ஹையோ
எப்பை எப்பை ஹே ஹையோ

பாட்டி பால் விற்ற கணக்கை
கம்பியூட்டர் பதிய வேண்டும்
நாத்து நடுகின்ற பெண்ணும்
செல் போனில் பேச வேண்டும்
உழவன் ஏர் ஓட்ட
பென்ஸ் கார் ஓட்டி போக வேண்டும்
விளையும் பயிருக்கு
நாங்கள் சொல்கின்ற விலைகள் வேண்டும்
நாங்கள் சொல்கின்ற விலைகள் வேண்டும்
ஒலிம்பிக் கேமில் சிலம்பம் ஆடி
ஜெயித்திட வேண்டும் வேண்டும்
வேற்று நாட்டோர் நமது நாட்டில்
வேலைக்கு அலைய வேண்டும்
ஏழை நெஞ்சில் கோடி ஆசைகள்
செய்தது என்ன உங்கள் அரசுகள்
சுதந்திர வேள்வியை நடத்தும் படை இருக்கு
சுரண்டலை எதிர்த்திட இனியும் பயம் எதுக்கு
தோழனே..
(என் கனவினை..)

பட்டி தொட்டிக்கும் பளிங்கு கல்லாலே
ரோடு வேண்டும்
நடை பாதையில் தூங்கும்
ஏழைக்கும் சொந்த வீடு வேண்டும்
இருக்கும் பல கட்சி மாறி
ஒரு அக்ட்சி ஆக வேண்டும்
மக்கள் நம் மக்கள்
என்ற உணர்வுள்ள தலைவன் வேண்டும்
உண்மை உணர்வுள்ள தலைவன் வேண்டும்
ஏவு கணையாய் இருக்கும் மக்கள்
வெடித்திட வேண்டும் வேண்டும்
உலக அரங்கில் நமது நாடு
முதல் இடம் வாங்க வேண்டும்
இந்தியாவின் இளைஞர் கூட்டமோ
இளைத்தது அல்ல எந்த நாட்டுக்கும்
சுதந்திர வேள்வியை நடத்தும் படை இருக்கு
சுரண்டலை எதிர்த்திட இனியும் பயம் எதற்கு
தோழனே..
(என் கனவினை..)

படம்: தேசிய கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்: ஹரிஹரன்

Monday, September 13, 2010

துள்ளி திரிந்ததொரு காலம்துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்

துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்
காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே
இன்பத்தை தேடுது பூங்கொடியே பூங்கொடியே
(துள்ளி...)

அன்னை மடி தனில் சில நாள்
அதை வி..
அன்னை மடி தனில் சில நாள்
அதை விடுத்தொரு சில நாள்
திண்ணை வெளியினில் சில நாள்
உண்ண வழியின்றி சில நாள்
நட்பின் அரட்டைகள் சில நாள்
நம்பி திரிந்ததும் பல நாள்
காணல் நீரினில் சில நாள்
கடல் நடுவிலும் சில நாள்
கன்னி மயக்கத்தில் திருநாள்
கையில் குழந்தையும் அதனால்
ஓடி முடிந்தது காலங்கள் காலங்கள் பூங்கொடியே
(துள்ளி..)

துள்ளும் அலையென அலைந்தேன்
நெஞ்சில் கனவினை சுமந்தேன்
வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தேன்
வானம் எல்லை என நடந்தேன்
காதல் வேள்வி தனில் விழுந்தேன்
கேள்விக்குறி என வளைந்தேன்
உன்னை நினைத்து இங்கு சிரித்தேன்
உணமை கதையினை மறைத்தேன்
பதில் சொல்லிட நினைத்தேன்
சொல்ல மொழியின்றி தவித்தேன்
வாழ்கின்ற வாழ்வெல்லாம்
நீர்குமிழ் போன்றது பூங்கொடியே
(துள்ளி..)

படம்: என்றும் அன்புடன்
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ

Sunday, September 12, 2010

இதயமே இதயமேஇதயமே இதயமே
உன் மௌனம் என்னை கொல்லுதே
இதயமே இதயமே
என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே
(இதயமே..)

பனியாக உருகி நதியாக மாறி
அலைவீசி விளையாடி இருந்தேன்
தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து
உயிர் காதல் உறவாடி கலந்தே நின்றேன்
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
கோலம் கலந்ததே புது சோகம் பிறந்ததே
நீயில்லாத வாழ்வு இங்கு காணல்தான்
(இதயமே..)

என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று
உன் மீது படவில்லை துடித்தேன்
அரங்கேரும் பாடல் உலகெங்கும் கேட்டும்
உன் நெஞ்சை தொடவில்லை ஏன் சொல்லம்மா
இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன்
இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன்
ஜீவன் நீயம்மா என் பாடல் நீயம்மா
நீயில்லாத வாழ்வு இங்கு காணல்தான்
(இதயமே..)

படம்: இதயம்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

Saturday, September 11, 2010

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலாபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
வாழ்நாள் தோரும் தினம்தான் காதோரம்
பாடல் கூறும்
(பொட்டு..)

ஆராத ஆசைகள் தோன்றும் என்னை தூண்டும்
ஆனாலும் வாய் பேச அஞ்சும் இந்த நெஞ்சம்
அவள் பேரை நாளும் அசை போடும் உள்ளம்
அவள் போகும் பாதை நிழல் போல செல்லும்
மௌனம் பாதி மோகம் பாதி
என்னை கொல்லும் எந்நாளும்
(பொட்டு..)

எப்போது சேராதோ பாட்டு தமிழ் பாட்டு
தோப்போடு சேராதோ காற்று பனிக்காற்று
வினா தாள் போல் இங்கே கனா காணும் காலை
விடை போலே அங்கே நடை போடும் பாவை
ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும்
போனாள் இங்கு எந்நாளோ
(பொட்டு..)

படம்: இதயம்
இசை: இளையராஜா
பாடியவர்: KJ ஜேசுதாஸ்

Friday, September 10, 2010

மணமகளே மணமகளே

இன்று திருமண வாழ்வில் திரு. செந்தில்குமாரை கரம் பிடிக்கும் அக்கா காயத்ரி @ ஜி3க்கு சமர்ப்பணம் - தேன்கிண்ணம்மணமகளே மணமகளே வாழும் காலம் சூழும்
மங்கலமே மங்கலமே
குணமகளே குலமகளே பாலும் தேனும் நாளும்
பொங்கிடுமே...பொங்கிடுமே
குற்றம் குறை இல்லா ஒரு குண்டுமணிச்சரமே
மஞ்சள் வளமுடனே என்றும் வாழணும் வாழணுமே

மணமகளே மணமகளே வாழும் காலம் சூழும்
மங்கலமே மங்கலமே
குணமகளே குலமகளே பாலும் தேனும் நாளும்
பொங்கிடுமே...பொங்கிடுமே

வலது அடி எடுத்து வைத்து வாசல் தாண்டி
வா வா பொன்மயிலே பொன்மயிலே
புகுந்த இடம் ஒளிமயமாய் உன்னால்தானே
மாறும் மாங்குயிலே...மாங்குயிலே
இல்லம் கோயிலடி அதில் பெண்மை தெய்வமடி
தெய்வம் உள்ள இடம் என்றும் செல்வம் பொங்குமடி

மணமகளே மணமகளே வாழும் காலம் சூழும்
மங்கலமே மங்கலமே
குணமகளே குலமகளே பாலும் தேனும் நாளும்
பொங்கிடுமே...பொங்கிடுமே

படம்: தேவர் மகன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: சுஜாதா, மின்மினி

Thursday, September 9, 2010

காலை பனி சிந்துகின்ற ஓசை

காலை பனி சிந்துகின்ற ஓசை
கொஞ்சுதே
தேவனே எனை மூடுதே
உந்தன் வாசனை உந்தன் வாசனை
(காலை..)

ஈரம் காயாது
கண்ணீர் துணையோடு
கண்கள் உனை தேடிடும்
குயில் இங்கே குரல் எங்கே
(ஈரம்..)
ஆசைகள் கணக்கும்
தேகத்தில் கொஞ்சம்
சுமை தாங்கவா ஆ
(காலை..)

நேற்று என்னோடு
ஆடைதான் எடுத்து
நிலவை நீ மூடினால்
ராணி போல் மாறினால்
(நேற்று..)
ராத்திரி போர்வை
ஆனதே சேலை
துயில் மூடவா
(காலை..)

படம்: கேட்டவரெல்லாம் பாடலாம்
இசை: RD பர்மன்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், ஸ்வர்ணலதா

Wednesday, September 8, 2010

வாராயோ வான்மதி தாராயோ நிம்மதி

நடிகர் முரளிக்கு அஞ்சலிகள்.
வாராயோ வான்மதி
தாராயோ நிம்மதி
ஏதேதோ என்னாசை
கேட்டுப்போ நீ
காதல் தூது போ நீ
என் மனம் உன் வசம்
இனி அது மதுவசம்
(வாராயோ வான் மதி)

காதல் தந்த தோல்வியால்
நானும் இன்று தேவதாஸ் - தேவதாஸ்
எங்கு என் பார்வதி
(காதல் தந்த )
வாழ்வு எல்லாம் மாயமே
தேகமெல்லாம் தேயுமே
வாடினேன் நானுமே
சொல்லிவா மேகமே

( வாராயோ )
நானும் பாடும்
நானும் பாடும் பாடலே
காதில் கேட்கவில்லையோ
இல்லையோ
ஆறுதல் இல்லையோ
(நானும் பாடும்)
ஆசை கொண்ட மனதினை
நான் மறந்தேன் தலைவனே
இன்று நான் மாறினேன்
சம்மதம் கூறினேன்
வாராயோ வான்மதி
தாராயோ நிம்மதி
ஏதேதோ என்னாசை
கேட்டுப்போ நீ
காதல் தூது போ நீ
என் மனம் உன் வசம்
இனி எல்லாம் பரவசம்
வாராயோ
வான்மதி
தாராயோ ?
பாடல் : வாலி
பாடலைப்பாடிவர்கள் : ரமேஷ் , வாணி ஜெயராம்?!
இசை :இளையராஜா
திரைப்படம் : பகல் நிலவு

ஒரு வார்த்தை சொன்னால் போதுமடி

ஒரு வார்த்தை சொன்னால் போதுமடி
என் வாழ்வில் சொர்க்கம் கூடுமடி

ஒரு வார்த்தை சொன்னால் போதுமடி
என் வாழ்வில் சொர்க்கம் கூடுமடி
என் வார்த்தை எல்லை தாண்டுதடி
உன்னை வாரி அணைக்க தூண்டுதடி
உன் பூமுகமே ஒரு பூச்சரமே
என் வாழ்வில் வாசம் வீசுமடி

ஒரு தாமரை நடக்குது தரை மேலே
அதன் காலடி சுவடுகள் கவி போலே
(ஒரு தாமரை..)
வரும் பாதையில் மணம் வீசுதே
மணம் பரவட்டும் பரவட்டும் விண்மேலே
(ஒரு தாமரை..)

என் தேகம் தீர்க்கும் தேவதையே
உன் பாடல் கேட்டேன் பூங்குயிலே
(என் தேகம்..)
ஒரு பார்வை பட்டால் போதுமடி
என் பசியும் பறந்து போகுமடி
உன் பூமுகமே ஒரு பூச்சரமே
என் வாழ்வில் வாசம் வீசுதடி
(ஒரு தாமரை..)

படம்: கேட்டவரெல்லாம் பாடலாம்
இசை: RD பர்மன்
பாடியவர்: ஹரீஷ் ராகவேந்திரா

Tuesday, September 7, 2010

ஒரு தாமரை நடக்குது தரை மேலே

ஒரு தாமரை நடக்குது தரை மேலே
அதன் காலடி சுவடுகள் கவி போலே
(ஒரு தாமரை..)
வரும் பாதையில் மணம் வீசுதே
மணம் பரவட்டும் பரவட்டும் விண்மேலே
(ஒரு தாமரை..)

ஒரு வார்த்தை சொன்னால் போதுமடி
என் வாழ்வில் சொர்க்கம் கூடுமடி
(ஒரு வார்த்தை..)
என் ஆசை எல்லை தாண்டுதடி
உன்னை வாரி அணைக்க தூண்டுதடி
உன் பூமுகமே ஒரு பூச்சரமே
என் வாழ்வில் வாசம் வீசுமடி
(ஒரு தாமரை..)

என் தேகம் தீர்க்கும் தேவதையே
உன் பாடல் கேட்டேன் பூங்குயிலே
(என் தேகம்..)
ஒரு பார்வை பட்டால் போதுமடி
என் பசியும் பறந்து போகுமடி
உன் பூமுகமே ஒரு பூச்சரமே
என் வாழ்வில் வாசம் வீசுதடி
(ஒரு தாமரை..)

படம்: கேட்டவரெல்லாம் பாடலாம்
இசை: RD பர்மன்
பாடியவர்: திப்பு

Monday, September 6, 2010

நரம்பூக்கள் தேடும்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

நரம்பூக்கள் தேடும்
திருத் தும்பியே
எதை கண்டு என் மேல்
மையல் ஊற்றினாய்
(நரம்பூக்கள்..)

இது இதழ் கொண்டு
தேன் போதுமா
கூத்தாடவே குடைந்தாடவே
பூவென்ற தேன் கூடவா
பூக்காடுகள் உன் வீடுகள்
என்னோடு தான் உறவா
(நரம்பூக்கள்..)

பன்னோடு வீழும்
மழை நீரை போல
பின்னோடு நீ வந்தனை
பெண்ணோடு யாரும்
காணாத ஒன்று
என்னோடு நீ கண்டனை
ஒரு பூவினோடு
ஒரு வாசம் தானே
கொடியோடு
யாம் கண்டனம்
வெவ்வேறு பாகம்
வெவ்வேறு வாசம்
நின்னோடு யாம்
கண்டனம்

புலனைந்து போதும் பூமி வெல்ல
புலன் நூறு வேண்டும் காதல் கொள்ள
ஆழங்களில் மெய் தேடுதே
தள்ளாடுதே உன் பேர் ஹோ
நீ தொட்டதும் என் ஆவியை
எஊ உண்டானாய் தும்பியே
(நரம்பூக்கள்..)

முள்ளனையின் மேலே பள்ளிக்கொள்ளல் போலே
உள்ளம் நோகுதே காதலி
உன் பேரை சொல்லி உயிர் போகும் முன்னே
தடுத்தாளவா நாயகி
அள்ளி தந்து வாழ அங்கம் மனசால
ஆசை முற்றுதே அன்பனே
மீனான கண்ணில் நீர் வற்றும் முன்னே
மெய் சேற வா நண்பனே
பூவை சுற்றும் வண்டு ஓய்ந்து கொள்ளும்
பூமி சுற்றும் காற்றாய் ஓய்வு கொள்ளும்
முள் ஆவியை நீ தீண்டவே
காற்றாக வா தலைவா
என் வாழ்வெல்லாம் சருகானதே
நீ மட்டுமே வரவா
(நரம்பூக்கள்..)

படம்: உற்சாகம்
இசை: ரஞ்சித் பரோட்
பாடியவர்கள்: நந்தினி ஸ்ரீகர், ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து

Sunday, September 5, 2010

எந்தன் வானின் காதல் நிலவேவாழ்க வாழ்கவே வாழ்க நீயும்
வானம் உள்ளவரை வாழ்க என்றும்
வாழ்க வாழ்கவே காதல் வாழும் வரை வாழ்கவே

எந்தன் வானின் காதல் நிலவே
இன்று தேய்வது எதனால் நிலவே
எந்தன் வானின் காதல் நிலவே
இன்று தேய்வது எதனால் நிலவே
நீயும் வளர் பிறையாக நிலவே
உயிரை தருவேன் காதல் நிலவே நிலவே
(எந்தன் வானின்..)

வெண்பனி நீ தூங்கிய புல்வெளி நான்
வெண்ணிலா நீ மின்னிய விண்வெளி நான்
வெண்பனி நீ தூங்கிய புல்வெளி நான்
வெண்ணிலா நீ மின்னிய விண்வெளி நான்
மின்னல் கோடி சேர்த்து வைத்து நீ சிரித்த காட்சிகள்
யாவும் இன்று மாயமாக யாரை கேட்க சாட்சிகள்
உன்னை எண்ணி வாழ்ந்த காலம் கண்கள் ரெண்டும் ஈரமாக
காதல் ஒன்றும் காயமல்ல காலப்போக்கில் ஆறி போக
நெஞ்சம் எல்லாம் வாடுதே தழும்புகளை
(எந்தன் வானின்..)

என்னை விட்டு போனது அமைதியன்றோ
நீயும் இல்லா நானுமே அகதியொன்றோ
நூறு கோடி ஆண்டு காலம் வாழ்வதிங்கு வீணடி
எந்தன் காதல் நீ அறீந்தால் போதும் அந்த ஓர் நொடி
புல்லின் மீது போகும் போதும் கால் சிவந்த மென்மை நீ
கல்லின் மீது நீயும் இங்கே போவதென்ன கண்மணி
இந்த ஜென்மம் வாழ்வதே உனக்கென தான்
(எந்தன் வானின்..)

படம்: காதல் வைரஸ்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்

Saturday, September 4, 2010

அருவிகள் மேலே நோக்கி பாய்ந்திடுதேஅருவிகள் மேலே நோக்கி பாய்ந்திடுதே
மலைகளும் துள்ளி துள்ளி நடந்திடுதே
என்னை எனக்கே அறிமுகம் செய்தாய்

அருவிகள் மேலே நோக்கி பாய்ந்திடுதே
மலைகளும் துள்ளி துள்ளி நடந்திடுதே
என்னை எனக்கே அறிமுகம் செய்தாய்

அழகிய சின்ரெல்லா சின்ரெல்லா மீண்டும் வந்தாள்
அவள் வந்து நெஞ்சமெல்லாம் நெஞ்சமெல்லாம் லட்சம் மின்னல் தந்தாள்
முதல் முறை பெண்ணின் வாசம் வீசுதே
முதல் முறை முக்தி நிலை வந்ததே
ஓ என்னை எனக்கே தான் நீ அறிமுகம் செய்தாய்
உன்னை எனக்குள்ளே விதைக்கும் செய்தாய்
ஒன்றா ரெண்டா இந்தா அவஸ்தை
(அழகிய சின்ரெல்லா..)

கொஞ்சி கொஞ்சி வந்தாள்
மிஞ்சி மிஞ்சி போனாள்
கொஞ்சி கொஞ்சி வந்தாள்
மிஞ்சி மிஞ்சி போனாள்

என்னை சுற்றி இன்ப சிறை கட்டி கொண்டுதான்
இன்று வரை வாழ்ந்து முடித்தேன்
சிறை சுவர் முட்டி மோதி பூவின் வேர்வந்து
என்னை தொட ஆவி சிலிர்த்தேன்
என் ஸ்வாசத்தில் பூ வாசம் வந்தது
அது யார் என்றேன் சின்ரெல்லா என்றது

கொஞ்சி கொஞ்சி வந்தாள்
மிஞ்சி மிஞ்சி போனாள்
கொஞ்சி கொஞ்சி வந்தாள்
மிஞ்சி மிஞ்சி போனாள்
கொஞ்சி கொஞ்சி வந்தாள்
மிஞ்சி மிஞ்சி போனாள்
கொஞ்சி கொஞ்சி வந்தாள்
மிஞ்சி மிஞ்சி போனாள்
கொஞ்சி கொஞ்சி வந்தாள்
மிஞ்சி மிஞ்சி போனாள்

வானத்திலே வந்த ஒரு வாழ்த்து செய்தியாய்
எந்தேன் காதில் தென்றல் சொன்னது
சொர்கத்திலே வந்த ஒரு அழைப்பிதழ்
எந்தன் கையில் பூக்கள் தந்தது
ஆகாயம் ஆசிர்வதிக்க என்னுள்ளே ஏதோ நடக்க
(அழகிய சின்ரெல்லா..)

கொஞ்சி கொஞ்சி வந்தாள்
மிஞ்சி மிஞ்சி போனாள்
கொஞ்சி கொஞ்சி வந்தாள்
மிஞ்சி மிஞ்சி போனாள்
கொஞ்சி கொஞ்சி வந்தாள்
மிஞ்சி மிஞ்சி போனாள்
கொஞ்சி கொஞ்சி வந்தாள்
மிஞ்சி மிஞ்சி போனாள்
கொஞ்சி கொஞ்சி வந்தாள்
மிஞ்சி மிஞ்சி போனாள்
கொஞ்சி கொஞ்சி வந்தாள்
மிஞ்சி மிஞ்சி போனாள்
கொஞ்சி கொஞ்சி வந்தாள்
மிஞ்சி மிஞ்சி போனாள்

படம்: கண்களால் கைது செய்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஹரிஹரன்
வரிகள்: பா. விஜய்

Friday, September 3, 2010

தென்மேற்கு பருவக்காற்றுதென்மேற்கு பருவக்காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் முத்துச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலு சிலுவென்று
சிந்துதம்மா தூரல் முத்துத் தூரல்
வெங்காத்து பக்கக்கல்லி சட்டென்று மொட்டுவிட
செங்காத்து சொல்லிச்செடி சில்லென்று பூவெடுக்க
(தென்மேற்கு..)

வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்
பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்
தாளத்தில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள்
பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்
மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு தொட்டதுதே
மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூரக் கல்லூருதே
(தென்மேற்கு..)

நீயென்றும் நானென்றும் இரு வார்த்தை ஒன்றாகி
நாம் என்ற ஓர் வார்த்தை உண்டானதே
ஆனென்றும் பெண்ணென்றும் இரு வார்த்தை ஒன்றாகி
ஆள் என்ற ஓர் வார்த்தை உண்டானதே
காதல் என்னும் மந்திரத்தின் மாயமென்ன
கல்லும் முள்ளும் இப்போது பூவானதே
வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே
(தென்மேற்கு..)

படம்: கருத்தம்மா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சித்ரா, உன்னி கிருஷ்ணன்
வரிகள்: வைரமுத்து

Thursday, September 2, 2010

புன்னகையில் தீமூட்டி போனவளேபுன்னகையில் தீமூட்டி போனவளே
கண்ணீரில் அதை அணைக்க சொன்னவளே
பெண்ணே என் பூமியே முள்ளானதே
ஐயோ என் காற்றெல்லாம் நஞ்சானதே

என்னுயிரே என் தேகம் தின்னாதே
என் விழியே முகம் தாண்டி செல்லாதே

என்னுயிரே என் தேகம் தின்னாதே
என் விழியே முகம் தாண்டி செல்லாதே
பெண்ணே மெய்யென்பதே பொய்யாகினால்
ஐயோ பொஇயென்பது என்னாகுமோ

பொய் காதல் உயிர் வாழுமோ...

படம்: ஜீன்ஸ்
இசை: AR ரஹ்மான்

Wednesday, September 1, 2010

சின்னப்பெண்ணான போதிலே

சின்னப்பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஓருநாளிலே
எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா
அம்மா
நீ சொல் என்றேன் ?

(சின்னப்பெண்ணான போதிலே)

வெண்ணிலா நிலா
என் கண்ணல்ல வா கலா
உன் எண்ணம் போல வாழ்விலே
இன்பம் தானென்றாள்
வெண்ணிலா நிலா

கன்னியென்னாசை காதலே
கண்டேன் மணாளன் நேரிலே
என்னாசை காதல் இன்பம் உண்டோ
தோழி நீ சொல் என்றேன்
வெண்ணிலா நிலா
என் கண்ணல்ல வா கலா
உன் எண்ணம் போல வாழ்விலே
இன்பம் தானென்றாள்
வெண்ணிலா நிலா

கண் ஜாடை பேசும் எந்நிலா
கண்ணாளன் எங்கே சொல் நிலா
என் க்ண்கள் தேடும் உண்மை தனை
சொல் நிலவே நீ என்றேன்.
வெண்ணிலா நிலா
என் கண்ணல்ல வா கலா
உன் எண்ணம் போல வாழ்விலே
இன்பம் காணலாம்திரைப்படம்:ஆரவல்லி
பாடியவர்கள் : ஜிக்கி , ஏ எம் ராஜா
இசை: ஜி. ராமநாதன்
பாடல்வரிகள்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

[பிரபல திகில் பட மன்னன் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கின் படமான, 'The Man who knew too much' என்ற படத்தில் வரும் டோரிஸ் டே (Doris Day) பாடிய 'கே செரா செரா' (Que Sera Sera) என்ற பாட்டின் தமிழ்ப் பதிப்பு இது]

டெலிபோன் மணிப்போல்டெலிபோன் மணிப்போல் சிரிப்பவள் இவளா
மெல்போர்ன் மலர்ப்போல் மெல்லிய மகளா
டிஜிட்டலில் செதுக்கிய குரலா
எலிசபெத் டெய்லரின் மகளா
ஜாகிர் ஹுசேன் தபலா இவள்தானா
சோனா சோனா இவள் அங்கம் தங்கம் தானா
சோனா சோனா இவள் லேட்டஸ்ட் செல்லுலார் போனா
கம்பியூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா
(டெலிபோன்..)

நீயில்லை என்றால் வெயிலுமடிக்காது துளி மழையுமிருக்காது
நீயில்லை என்றால் சந்திரன் இருக்காது ஒரு சம்பவம் எனக்கேது
உன் பேரைச் சொன்னால் சுவாசம் முழுதும் சுக வாசம் வீசுதடி
உன்னைப் பிரிந்தால் வீசும் காற்றில் வேலை நிறுத்தமடி
நீரில்லை என்றால் அருவி இருக்காது மழை அழகு இருக்காது
நீ இல்லாமல் போனால் இதயம் இருக்காது என் இளமை பசிக்காது
வெள்ளை நதியே உன்னுள் என்னை தினம் மூழ்கி ஆட விடு
வெட்கம் வந்தால் கூந்தல் கொண்டு உனைக் கொஞ்சம் மூடிவிடு
(டெலிபோன்..)

உன் பேரை யாரும் சொல்லவும் விடமாட்டேன் அந்த சுகத்தைத் தரமாட்டேன்
உன் கூந்தல் பூக்கள் விழவே விட மாட்டேன் அதை வெயிலில் விட மாட்டேன்
பெண்கள் வாசம் என்னைத் தவிர இனி வீசக்கூடாது
அன்னை தெரெஸ்ஸா அவரைத் தவிர பிறர் பேசக்கூடாது
நீ போகும் தெருவில் ஆண்களை விடமாட்டேன் சில பெண்களை விடமாட்டேன்
நீ சிந்தும் சிரிப்பைக் காற்றில் விடமாட்டேன் அதை கவர்வேன் தரமாட்டேன்
புடவை கடையில் பெண்ணின் சிலையை நீ தீண்டக்கூடாது
காதல் கோட்டை கற்புக்கரசா நீ தாண்டக்கூடாது
(டெலிபோன்..)

படம்: இந்தியன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஹரிஹரன், ஹரிணி
வரிகள்: வைரமுத்து

Last 25 songs posted in Thenkinnam