Monday, June 30, 2008

539. நேற்று வரை நீ யாரோ நான் யாரோ


Netru Varai Nee Yaaro.mp3 - PB Srinivasநேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே

(நேற்று வரை)

உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே
நேரிலே பார்த்தால் என்ன
நிலவென்ன தேய்ந்தா போகும்
புன்னகை புரிந்தால் என்ன
பூமுகம் சிவந்தா போகும்

(நேற்று வரை)

பாவை உன் முகத்தைக் கண்டேன்
தாமரை மலரைக் கண்டேன்
கோவை போல் இதழைக் கண்டேன்
குங்குமச் சிமிழைக் கண்டேன்
வந்ததே கனவோ என்று
வாடினேன் தனியே நின்று
வண்டு போல் வந்தாய் இன்று
மயங்கினேன் உன்னைக் கண்டு

(நேற்று வரை)படம் : வாழ்க்கைப்படகு
இசை : எம். எஸ்.விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர் : PB ஸ்ரீனிவாஸ்

Friday, June 27, 2008

538. மூங்கில் இலை காடுகளேமூங்கில் இலை காடுகளே
முத்து மழை மேகங்களே
பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்

மாலையிட்ட மங்கையர்க்கு
தற்கொலை தான் சொர்க்கம் என்றால்
மேளம் என்ன தாலி என்ன கூறுங்கள்...
கூறுங்கள்...
[மூங்கில் இலை...]

மாம்பூக்களே மைனாக்களே
கல்யாணபாவை என் கண்ணீரை பாருங்கள்
நாணல்களே நாரைகளே
பெண்பட்ட பாடுகள் எல்லோருக்கும் கூறுங்கள்
பேரம் பேசவே கல்யாண சந்தையோ
பெண்கள் யாவரும் வெள்ளாட்டு மந்தையோ
கல்யாண ஊர்வலம் எல்லாமே நாடகம்
[மூங்கில் இலை...]

பூச்சூடவும் பாய் போடவும்
கல்யாண மாப்பிள்ளை கேட்பாரே வாடகை
பொன்னோடுதான் பெண் தேடுவாள்
அம்மாடி மாமியார் பெண்ணல்ல தாடகை
கேள்வி என்பதே இல்லாத தேசமா?
யாரும் உண்மையை சொல்லாத தோசமா
பெண் இங்கு தாரமா? வந்தாலே பாரமா?
[மூங்கில் இலை...]

படம்: பெண்மணி அவள் கண்மணி
இசை: சங்கர் கணேஷ்
பாடியவர்கள்: வாணி ஜெயராம்

537. நாதமெனும் கோவிலிலே
நாதமெனும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணை விட நீ கிடைத்தாய்.....
நாதமெனும் கோவிலிலே ........

இசையும் எனக்கிசையும் தினம்
என் மனம் தான் அதில் அசையும்
கரமும் உந்தன் சிரமும் - நீ
அசைத்தாய் நான் இசைத்தேன்
[நாதமெனும்...]

விலையே எனக்கிலையே தினம்
வெறும் கதையானது கலையே
நிலையே சொல்லி உனையே - நான்
அழைத்தேன் உயிர் பிழைத்தேன்

[நாதமெனும்...]

இறைவன் என ஒருவன் எனது
இசையில் மயங்கிட வருவான்
ரசிகன் என்ற பெயரில் - இன்று
அவன் தான் உன்னைக் கொடுத்தான்

[நாதமெனும்...]

படம்: மன்மதலீலை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: வாணி ஜெயராம்
பாடல்: கவிஞர் கண்ணதாசன்

536. உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
ராகம் பல நூறு பாடும் தினம்தோறும்
காலம் நேரம் ஏதுமில்லை

(உன்னைக் காணும் நேரம்)

கண்ணில் மின்னும் காதல் ஜோதி
கன்னி மேனி மானின் ஜாதி
கண்கள் சொல்லும் காமன் சேதி
கண்டும் என்ன நாணம் மீதி

ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்
தொட வேண்டி கைகள் ஏங்கும்
படவேண்டும் பார்வை எங்கும்

இந்த பார்வை ஒன்று போதும்
போதும் இடைவேளை
மீதி இனி நாளை
மாலை வேளை வீணாய் போகும்
இந்த பார்வை ஒன்று போதும்

கண்ணால் உன்னைக் கண்டால் போதும்
பன்னீர் பூக்கள் பந்தல் போடும்
மன்னா உன்னை மார்பில் தாங்கும்
பொன்னாள் கண்டே பெண்மை தூங்கும்
மடி மீது சாயும் சாபம்
தரவேண்டும் ஆயுள் காலம்
பலகோடி காலம் வாழ
பனி தூவி வானம் வாழ்ஹ்ட்தும்


(உன்னைக் காணும் நெஞ்சம்)


படம்: உன்னை நான் சந்தித்தேன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், வாணி ஜெயராம்

Thursday, June 26, 2008

535.பொங்கும் கடலோசை...

பொங்கும் கடலோசை
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை

பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும் அதிகாலையில்
மன்னவன் ஓடம் பார்த்ததோ
மயக்கம் கொண்டு ஆடுதோ
சாதனை செய்கையில் சோதனை தோன்றினால்
மயங்குவதேனோ -
பொங்கும் கடலோசை

தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
வெள்ளி அலை வந்து மோதலாம்
செல்லும் வழி திசை மாறலாம்
பொன் மலை காற்று வீசினால்
படகு தாளம் போடலாம்
நீரலை... மேடையில்... மீனவன் ...
நாடகம் நடிப்பதும் ஏனோ
பொங்கும் கடலோசை

தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
பொங்கும் கடலோசை
கொஞ்சும் தமிழோசை

PongumKadalosai.mp3 -

பாடலைப்பாடியவர் :வாணி ஜெயராம்
திரைப்பட ம் : மீனவநண்பன்
இசையமைப்பாளர்: எம்.எஸ்.வி
பாடலாசிரியர்:வாலி
வருடம்:77

534. பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா


BHARATHI KANNAMMA - SPB - Vani Jayaramபாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா கேளடி பொன்னம்மா
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா

பாரதி கண்ணய்யா நீயே சின்னைய்யா கேள் இதை பொன்னையா
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யாஒரே ராகங்களைப் பாடும் விதம் மாறும் தினம் மாறும்
ஒரே ராகங்களைப் பாடும் விதம் மாறும் தினம் மாறும்
மேகங்களில் காணும் படம் மாறும் தினம் மாறும்
அழகிய கலை அது இவளது நிலை இது
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா


நிலா காலங்களில் சோலைகளில் ஆடும் சுகம் கோடி
நிலா காலங்களில் சோலைகளில் ஆடும் சுகம் கோடி
தோகை இடம் காணும் சுகம் இன்னும் பல கோடி
பலவகை நறுமணம் தருவது திருமணம்
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா


பாரதி கண்ணய்யா நீயே சின்னய்யா கேளிதை பொன்னய்யா
அதிசய மலர்முகம், தினசரி பலரகம்
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா


விழாக் காலங்களில் கோவில் சிலை பாடும் உரை பாடும்
விழாக் காலங்களில் கோவில் சிலை பாடும் உரை பாடும்
காலை வரை காமன் கனை பாயும் வரை பாயும்
சுகம் ஒரு புறம் வரும் இடையிடை பயம் வரும்
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா


அலைமோதும்படி ஓடும் நதி நெஞ்சம் இளநெஞ்சம்
அலைமோதும்படி ஓடும் நதி நெஞ்சம் இளநெஞ்சம்
ஆசை வலை தேடும் சுகம் மஞ்சம் மலர் மஞ்சம்
முதன்முதல் பயம் வரும் வரவர சுகம் வரும்
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா


(பாரதி கண்ணய்யா)படம்: நினைத்தாலே இனிக்கும்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்

Wednesday, June 25, 2008

533.நானே நானா யாரோ தானா?

நானே நானா யாரோ தானா ?
மெல்ல மெல்ல மாறினேனா?
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன் ( நானே நானா)

ஒருவன் நினைவிலே உருகும் இதயமே
இதோ துடிக்க,
உலர்ந்த உதடுகள் தனிமைக் கவிதைகள்
எதோ படிக்க,
மதுவின் மயக்கமே உனது மடிமேல்இனி
இவள் தான் சரணம் சரணம்

பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும்
ஒரே நிலவு
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும்
ஒரே மனது
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம்
நரகம் சரணம் சரணம்
Naane Naana - Ilayaraja

பாடலை விரும்பிக்கேட்டவர் : ஜிரா (எ) கோ.ராகவன்
பாடலைப்பாடியவர் : வாணி ஜெயராம்
இசையமைத்தவர் :இளையராஜா
பாடலாசிரியர் : வாலி
வருடம் : 1979

532. மல்லிகை என் மன்னன்
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ.....

எந்நேரமும் உன்னாசைபோல்
பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ.....

வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
திங்கள்மேனியைத் தொட்டுத் தாலாட்டுது!
குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி!
கொஞ்சிப்பேசியே அன்பைப் பாராட்டுது
என் கண்ணன் துஞ்சத்தான்
என் நெஞ்சம் மஞ்சம்தான்
கையோடு நானள்ளவோ
என் தேவனே உன் தேவி நான்
இவ்வேளையில் உன் தேவை என்னவோ

[மல்லிகை...]

பொன் மாங்கல்யம் வண்ணப் பூச்சரம்
பொன் மாங்கல்யம் வண்ணப் பூச்சரம்
மஞ்சள் குங்குமம் என்றும் நீ தந்தது!
ஓராயிரம் இன்பக்காவியம்
உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது!
நம் இல்லம் சொர்க்கம்தான்
நம் உள்ளம் வெள்ளம்தான் ஒன்றோடு ஒன்றானது
என் சொந்தமும் இந்த பந்தமும் உன்னோடுதான்
நான் தேடிக்கொண்டது

[மல்லிகை...]

படம்: தீர்க்க சுமங்கலி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: வாணி ஜெயராம்
பாடல்: கவிஞர் வாலி

விரும்பி கேட்டவர்: மாஜா

531.ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா...ஓ..ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணாஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா
ஆண்: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ...ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ண
ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணே ... ஏ....ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ....ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ண
பெண்: அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்
ஆண்: இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே
பெண்: அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்
ஆண்: இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே
பெண்: அன்று கடல் மீது ஒரு கண்ணன் துயில் மேவினான
ஆண்: இன்று துயில் மேவ நீ வேண்டும் கண்ணே
பெண்: என் மன்னனே... ஒரே கண்ணன் ஒன்றே ராதை வாராய் கண்ணா...ஆ...
ஆண்: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ண
ஆண்: இங்கே விண் மீன்கள் கண்ணாகி பார்க்கின்ற
பெண்: நான் வெறும் கோயில் ஆகாமல் காக்
ஆண்: உந்தன் கண்மீன்கள் என்மீது விளையாடட்டும
பெண்: அந்த விண்மீன்கள் சுவையாக பார்க்கதேர் கொண்டு வா....கண்ணன் வந்து கீதம் சொன்னால், நான் ஆடுவேன்....
ஆண்: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே ஓ...ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே
பெண்: அந்த மணிச்சங்கின் ஓலிகேட்டு நான் ஆடுவேன
ஆண்: இந்த மழைமேகம் உன்மீது ஆடும
பெண்: அந்த மணிச்சங்கின் ஓலிகேட்டு நான் ஆடுவேன
ஆண்: இந்த மழைமேகம் உன்மீது ஆடும்வண்ணப் படத்தோடும் முகத்தோடும் நீ கூடலாம
பெண்: இந்த பழத்தோட்டம் உன்னோடு கூடும
ஆண்: புது வெள்ளமே... ஏ...ஒரே சொர்கம் எந்தன் பக்கம், வேறில்லையே...
பெண்: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா....

பாடல் பாடியவர் : வாணி ஜெயராம் , எஸ்.பி.பாலசுப்ரமணியம்
படம்: நீயா
வருடம் :1979
இசை: சங்கர்-கணேஷ்
ore jeevan ondre ullam.mp3 -

Tuesday, June 24, 2008

530.கேள்வியின் நாயகனே..

இயக்குநர் சிகரம் K.பாலசந்தரின் இயக்கத்தில், கண்ணதாசன் வரிகளில் அபூர்வராகங்கள் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது. இலைமறை காய்மறை அர்த்தங்கள் பொதிந்த வரிகளுடன் கதாநாயகி பாடும் பாடல் இது.
வாணி ஜெயராமின் குரலுக்காவே நிறைய முறை கேட்க வைக்கும், கேட்டு பாருங்களேன்.கேள்வியின் நாயகனே - இந்தக்
கேள்விக்கு பதிலேதய்யா?
இல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தை
எல்லோரும் நடிக்கின்றோம் - நாம்
எல்லோரும் பார்க்கின்றோம்

(கேள்வியின்)

பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும் - கன்று
பாலருந்தும் போதா காளை வரும்?
சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம் - கொஞ்சம்
சிந்திந்தால் உனக்கு பிறக்கும் வெட்கம்
தாலிக்கு மேலொரு தாலி உண்டா?
வேலிக்குள்ளே ஒருவன் வேலி உண்டா?
கதை எப்படி? அதன் முடிவெப்படி?

(கேள்வியின்)

தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான் - மங்கை
தர்ம தரிசனத்தை தேடுகிறான்
அலமேலு அவன் முகத்தை காண்பாளோ? மங்கை
அவனோடு திருமலைக்குச் செல்வாளோ?
செல்வாளோ? செல்வாளோ?

(கேள்வியின்)

ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால்
பார்த்துக்கொண்டால்...அவை
ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன?
இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் - அவை
இரண்டுக்கும் பார்வையிலே பேதமென்ன?
பேதம் மறைந்ததின்று கோவில் கண்ணே
நமது வேதம் தனை மணந்து நடக்கும் முன்னே
கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன?
உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன?
உடல் எப்படி?
முன்பு இருந்தாற்படி...
மனம் எப்படி?
நீ விரும்பும்படி...

(கேள்வியின்)

பழனி மலையிலுள்ள வேல் முருகா - சிவன்
பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா
பிடிவாதம் தன்னை விடு பெருமுருகா - கொஞ்சம்
பிரியத்துடன் பக்கத்திரு முருகா
திருமுருகா...திருமுருகா...

படம்:- அபூர்வராகங்கள்
பாடல்:- கவியரசு கண்ணதாசன்
இசை:- M.S.விஸ்வநாதன்

529. ஒரே நாள் உனை நான்ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது...

ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது...

மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க

சங்கமங்களில் இடம் பெறும் சம்பவங்களில் இதம் இதம்

மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன....

[ஒரே நாள்...]

நெஞ்சத்தில் பேர்எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
நெஞ்சத்தில் பேர்எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்

கற்பனைகளில் சுகம் சுகம்
கண்டதென்னவோ நிதம் நிதம்

மழை நீ, நிலம் நான், மயக்கமென்ன...

[ஒரே நாள்...]

பஞ்சனை பாடலுக்கு... பல்லவி நீ இருக்க
பஞ்சனை பாடலுக்கு... பல்லவி நீ இருக்க

கண்ணிரண்டிலும் ஒரே ஸ்வரம்
கையிரண்டிலும் ஒரே லயம்

இரவும், பகலும், இசை முழங்க....

[ஒரே நாள்...]

படம்: இளமை ஊஞ்சலாடுகிறது
இசை: இளையராஜா
பாடியவர்: வாணி ஜெயராம், SP பாலசுப்ரமணியம்
பாடல்: கவிஞர் வாலி

Monday, June 23, 2008

528. ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை

வீடியோ பார்க்க
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி

காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
(ஏழு)

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது
கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித
இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
(ஏழு)

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று
(ஏழு)

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
என்றும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்
(ஏழு)

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க - எந்த
வேதனையும் மாறும் மேகத்தைப் போல
(ஏழு)


படம்: அபூர்வ ராகங்கள்
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: வாணி ஜெயராம்
பாடல்: கண்ணதாசன்

527. சங்கத்தில் பாடாத கவிதை


சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையோடு என்
முன்னே யார் வந்தது
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது

கையின்றே செங்காந்தழ் மலரே
நீ சொன்னால் நான் நம்பவோ
கால் என்றே செவ்வாழை இலைகளை
நீ சொன்னால் நான் நம்பி விடவோ
மை கொஞ்சம்.......
பொய் கொஞ்சம்........
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்திலே....

அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா..அ...
கொஞ்சம் தா..ஆ..
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்திலே

ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே அனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டு...ஆ
மெய் தொட்டு..ஆ
சாமத்திலே தூங்காத விழிகளில்
சந்தித்தேன் என்னென்ன மயக்கம்
தமிழ் சங்கத்திலே பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது

படம்: ஆட்டோ ராஜா
இசை: இளையராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்கள்: இளையராஜா, ஜானகி

விரும்பிக் கேட்டவர்: ஜெயராதாசிங்

Sunday, June 22, 2008

526. சோதனை தீரவில்லை


Sodhanai Theeravillai - Jayachandranகனவாக வந்த உறவு
கலைந்து போனதம்மா
கண்ணீரில் நனைந்த நெஞ்சு
கலங்கி வாடுதம்மா

சோதனை தீரவில்லை
சொல்லி அழ யாருமில்ல
முன்னப்பின்ன அழுததில்ல
சொல்லித்தர ஆளுமில்ல
சொல்லுங்க சொல்லுங்க
அழுத்திச் சொல்லுங்க
சொல்லிக் கொடுக்கவும் புத்தனில்ல
வாழ்ந்து முடிச்சவன்
கூட்டிக் கழிச்சான்
கொண்டு போக இங்கு மிச்சமில்ல

(சோதனை தீரவில்ல)

சொந்தம் இங்கே யாரோ யாரோ
வந்த பந்தம் எல்லாம் கானல் நீரோ
முத்தெடுக்கப் போனேன் நானே
மூச்சடைச்சுப் போனேன் மானே
பாசம் ஒரு வேஷம் தானே
நம்புவது மோசம்தானே
சொல்லுங்க சொல்லுங்க
அழுத்திச் சொல்லுங்க
சொல்லிக் கொடுக்கவும் புத்தனில்ல
பந்தத்தையும் ஒரு சொந்தத்தையும்
நம்பிக் கிடப்பதில் இங்கே அர்த்தமில்ல

யாரோ சொந்தம் யாரோ
யாரோ யாரறிவாரோ

ரோசாப்பூவூ எங்கே எங்கே
அது ராசா மார்பில் ஆடும் அங்கே
புத்திக் கெட்டுப் போனேன் தாயே
பொட்டு வச்சு வாழ்க நீயே
பூப்பறிச்ச பாவி நானே
பூ முடிச்சு வாழ்க மானே
நந்தவனம் ஒன்னு வெந்துவிடுமின்னு
தண்ணி கொண்டுவந்து காத்திருந்தேன்
அந்த வனத்திலே ஜீவநதி ஒன்னு
வந்து கலப்பதைப் பார்த்திருந்தேன்

(சோதனை தீரவில்லை)


படம்: செந்தூரப் பூவே
இசை: மனோஜ் க்யான்
பாடியவர்: ஜெயச்சந்திரன்


**

விரும்பிக் கேட்டவர்: லோஷன்

525. பொன்னென்ன பூவென்ன கண்ணே
பொன்னென்ன பூவென்ன கண்ணே - உன்
கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப்
புவி காணாமல் போகாது பெண்ணே

( பொன்னென்ன பூவென்ன )

மார்கழியில் மாலையிலே
மலர்ந்ததொரு மல்லிகைப்பூ
யார் வருவார் யார் பறிப்பார்
யார் அறிவார் இப்போது

( பொன்னென்ன பூவென்ன )

ஊர்கோலம் போகின்ற பூந்தென்றலும்
ஒலியோடு நடை போடும் நீரோடையும்
சுகமானது சுவையானது
உன் வாழ்வும் அது போல உயர்வானது

( பொன் )

செவ்வான மேகங்கள் குழலாகுமா
செந்தூரம் விளையாடும் முகமாகுமா
நடை போடுமா இசை பாடுமா
நடந்தாலும் அவை யாவும் நீயாகுமா

( பொன் )படம்: அலைகள்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: ஜெயச்சந்திரன்

***

விரும்பிக் கேட்டவர்: ஜிரா

524.முதல் மழை எனை நனைத்ததே...

முதல் மழை எனை நனைத்ததே
முதல் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

ம்ம்ம்...முதல் மழை நம்மை நனைத்ததே
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ம்ம் இதமாய் மிதந்ததே


கனவோடு தான் அடி நீ தோன்றினாய்
கண்களால் உன்னைப் படம் எடுத்தேன்

என் வாசலில் நேற்று உன் வாசனை
நீ நின்ற இடம்நின்று உணர்ந்தேன்

எதுவும் புரியாப் புது கவிதை
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்

கையை மீறும் ஒரு குடையாய்
காற்றோடு தான் நானும் பறந்தேன்
மழைக் காற்றோடு தான் நானும் பறந்தேன்


முதல் மழை எனை நனைத்ததே
ல ல லலா
முதன் முறை ஜன்னல் திறந்ததே
ல ல லலா

பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

ஓர் நாள் உன்னை நானும் காணா விட்டால்
என் வாழ்வில் அந்த நாளே இல்லை

ஓ ஓ ஓர் நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால்
அந்நாளின் நீளம் போதவில்லை

இரவும் பகலும் ஒரு மயக்கம்
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்

உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம்
இறந்தாலுமே என்றும் இருக்கும்
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்


பெயரே தெரியாத பறவை அழைத்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

மேஹுல்மேஹூல் மாஹியாஹியோ ?? :-) பாட்டில் இடையில் வருவது இது தானா

muthan mazai.mp3 -
பாடல்வரிகள்: நா.முத்துக்குமார்
திரைப்படம்: பீமா
பாடியவர்: ஹரிஹரன் , மஹதி, ஆர்.ப்ரசன்னா
இசை:ஹாரிஸ் ஜெயராஜ்

விரும்பிக்கேட்டவர் : எஸ்வி ரங்கன்

Saturday, June 21, 2008

523. உன்னருகில் வருகையில் உள்ளே ஓர் பரவசம்


Unnarugil Varugayi - Harini Sudhakar, Haricharanஉன்னருகில் வருகையில் உள்ளே ஓர் பரவசம்
உன்னாலே தோழனே நான் இல்லை என் வசம்
(உன்னருகில்..)
உன் பெயரை கேட்கையில் உற்சாகம் துளிர் விடுதே
உன் நிழலை தேடியே என் நிழலும் தொடருதே இன்று
எப்போது மாறினேன் என்னை நான் மீறினேன்
என் நெஞ்சை கேட்கிறேன் பதில் சொல்லிடு விழியே..
(உன்னருகில்..)

உன் கண்கள் மீது ஒரு பூட்டு வைத்து பூட்டும்போதும்
உன் இதயம் தாண்டி வெளியே வருமே பெண்ணே
நீ பயணம் போகும் பாதை வெண்டாம் என்று சொல்லும்போதும்
உன் கால்கள் வருமே வருவதை தடுத்துவிட முடியாதே

உன் உடல் என் மனம் இங்குடல் எல்லாம்
இன்று புதிதாக உருமாறும்
நண்பர்கள் பேசும் வார்த்தைகள் எல்லாம்
காதில் நுழையாமல் வெளியேறும்
இது அன்பால் வருகிற அவஸ்தைகளா?
இல்லை உன்மேல் வருகிற ஆசைகளா?
இதுவரை சேர்ந்து இன்பம் துன்பங்களை
உன்னுடன் பகிர்ந்திட துடிக்கிறேனே
இது என்ன இது என்ன புது மயக்கம்
இரவோடு பகலோடு வெயிலடிக்கும்
ஆ...
ஆ...

கனவினில் தினம் தினம் பூத்திடும்
பூக்களை கைகளில் பறித்திட முடிந்திடுமா?
எதிரினில் பேசிட தயங்கிடும் வார்த்தைகள்
சொன்னால் அது புரிந்திடுமா?
கடவுளின் இருப்பிடம் காதலின் ரகசியம்
இரண்டையும் அறிந்திட முடிந்திடுமா?
இடம் பொருள் ஏவலும் இதயத்தின் காவலும்
இன்றே வெல்ல மீறிடுமா?
உன் கண்கள் பார்க்கும் திசையோடு
காரணமின்றி திரிகின்றேன்
உந்தன் பார்வை எந்தன் மீது விழ
ஏனோ நானும் காத்திருப்பேன்
வெளியே சொல்லா ரகசியமாய்
என் நெஞ்சை உருட்டுகிறாய் நீயே
சொல்லாமல் நான் மறைத்தாலும்
என் கண்ணின் மணிகள் என்னை காட்டிவிடும்

படம்: கல்லூரி
இசை: ஜோஷ்வா ஸ்ரீதர்
பாடியவர்கள்: ஹரிணி சுதாகர், ஹரிசரண்
வரிகள்: நா. முத்துக்குமார்

***

விரும்பி கேட்டவர்: கதிர்

522.காகித ஓடம் கடலலை மீது ...

காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்
கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி
தேரையும் ஓட்டி தீயையும் வைத்தான்
காலமும் பார்த்து நேரமும் பார்த்து
வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான் ( காகித)
அழுவதைக் கேட்க ஆட்களும் இல்லை
ஆறுதல் வழங்க யாருமே இல்லை
ஏழைகள் வாழ இடமே இல்லை
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை ( காகித)
தாயின் மடியும் நிலைத்திடவில்லை
தந்தையின் நிழலும் காத்திடவில்லை
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
அம்மா எங்களை அழைத்திடு தாயே (காகித)

kakitha odam.mp3 -

பாடலை விரும்பிக்கேட்டவர்: தமிழ்ப்பிரியன்
பாடலைப்பாடியவர் : பி.சுசீலா

திரைப்படம் : மறக்க முடியுமா?

இசை : ராமமூர்த்தி

Friday, June 20, 2008

521. சின்னப் பூவே மெல்லப் பேசு


Chinna Poove - Jayachandranசின்னப் பூவே மெல்லப் பேசு
உந்தன் காதல் சொல்லிப் பாடு
வண்ணப் பூவிழி பார்த்ததும் பூவினம் நாணுது
காலடி ஓசையில் காவியம் தோணுது

(சின்னப் பூவே)

பாவையின் தேன்குழல் மேகமோ
பொன்வானத்தில் வரைந்திடும் கோலமோ
கண்கள் நீரினில் நீந்திடும் மீன்களோ
எந்தன் காதலை மையெனப் பூசவோ
சின்னப் பாதங்கள் தாங்கிடும்
பொன்னெழில் மேனியை
அள்ளவோ கொஞ்சம் கிள்ளவோ

(சின்னப் பூவே)

வாலிபச் சோலையின் வாசமே
எந்தன் வாசலில் ஆடிடும் நேசமே
ஆனந்த சங்கம சந்தமே
எந்தன் ஆசையில் விளைந்திடும் சொந்தமே
இன்பத் தென்றலின் பாதைகள்
எங்கிலும் ஆசைகள்
பொங்குதே உன்னைக் கெஞ்சுதே

(சின்னப் பூவே)


படம்: சின்னப் பூவே மெல்லப் பேசு
இசை: எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடியவர்: ஜெயச்சந்திரன்

520. பூவிலே மேடை நான் போடவா
பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
தோள் இரண்டில் இரு பூங்கொடி
என் சொந்தம் எல்லாம் இதுதானடி
பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா


பூவிதழ் போல முல்லை என் பிள்ளை
புன்னகை செய்தால் கண்படும்
கண்மணி பிள்ளை கொஞ்சமும் வாட
கண்ட என் நெஞ்சம் புண்படும்

அன்னை தந்தை யாவும் அண்ணன் தானடி
அன்பு கொண்டு வாழும் சொந்தம் தானடி
நூறு நூறு ஜென்மம் கூடி நின்று வாழும்
வரவும் வேண்டி தினமும் தவமிருக்கும்

பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
தோளிரண்டில் இரு பூங்கொடி
என் சொந்தம் எல்லாம் இது தானடி
பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா


படம்: பகல் நிலவு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், பி.சுசீலா

519. கவிதை அரங்கேறும் நேரம்
சப்த ஸ்வரதேவி உணரு
இனி என்னில் வர தானமருளு
நீ அழகில் மமமாவில் வாழும்
என் கருவில் ஒளி தீபமேற்று
சப்த ஸ்வரதேவி உணரு

கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு சங்கீதமாகும்
கவிதை அறங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்

பார்வை உன் பாதம் தேடி
வரும் பாவை என் ஆசை கோடி
இனி காமன் பல்லாக்கில் ஏறி
நாம் கலப்போம் உல்லாச ஊரில்
உன் அங்கம் தமிழோடு சொந்தம்
அது என்றும் திகட்டாத சந்தம்

(கவிதை அரங்கேறும்)


கைகள் பொன்மேனி கலந்து
மலர்ப்பொய்கை கொண்டாடும் விருந்து
இனி சொர்க்கம் வேறொன்று எதற்கு
எந்த சுகமும் ஈடில்லை இதற்கு
மனம் கங்கை நதியான உறவை
இனி எங்கே இமை மூடும் நிலவை


(கவிதை அரங்கேறும்)


நீரில் நின்றாடும் போதும்
சுடும் நெருப்பாய் என் தேகம் ஆகும்
அது நேரில் நீ வந்த மாயம்
இந்த நிலைமை எப்போது மாறும்
என் இளமை மழை மேகமானால்
உன் இதயம் குளிர் வாடை காணும்

(கவிதை அரங்கேறும்)


படம்: அந்த ஏழு நாட்கள்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி

518. ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்

Oru Vanavil - Ilayaraja


ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய்

(ஒரு வானவில்)


வளர் கூந்தலின் மணம் சுகம் இதமாகத் தூங்கவா
வன ராணியின் இதழ்களில் புது ராகம் பாடவா
மடி கொண்ட தேனை மனம் கொள்ள வருகின்ற முல்லை இங்கே
கலைமானின் உள்ளம் கலையாமல் களிக்கின்ற கலைஞன் எங்கே
கலைகள் நீ கலைஞன் நான் கவிதைகள் பாடவா

(ஒரு வானவில்)


உனக்காகவே கனிந்தது மலைத்தோட்ட மாதுளை
உனக்காகவே மலர்ந்தது கலைக் கோயில் மல்லிகை
இனிக்கின்ற காலம் தொடராதோ இனியெந்தன் உள்ளம் உனது
அணைக்கின்ற சொந்தம் வளராதோ இனியெந்தன் வாழ்வும் உனது
தொடர்கவே வளர்கவே இது ஒரு காவியம்

(ஒரு வானவில்)


படம்: காற்றினிலே வரும் கீதம்
இசை: இளையராஜா
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி


***

விரும்பிக் கேட்டவர்: ரத்தினம்

Thursday, June 19, 2008

517. காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்து வர சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீயிருந்து நான் அணைச்சா நிம்மதியாகுமடி

(காத்திருந்து)


முக்குளிச்சு நானெடுத்த முத்து சிப்பி நீதானே
முத்தெடுத்து நெஞ்சுக்குள்ளே பத்திரமா வச்சேனே
வச்ச இடம் காணாம நானே தேடுறேன்
ராத்திரியில் தூங்காம ராகம் பாடுறேன்
நான் படிக்கும் மோகனமே நான் படைச்ச சீதனமே
தேன் வடிக்கும் பாத்திரமே தென் மதுரப் பூச்சரமே
கண்டது என்னாச்சு கண்ணீரில் நின்னாச்சு

(காத்திருந்து)


நீரு நிலம் நாலு பக்கம் நான் திரும்பிப் பார்த்தாலும்
அந்தப் பக்கம் இந்தப் பக்கம் அத்தனையும் நீயாகும்
நெஞ்சுக்குள்ள நீங்காம நீதான் வாழுற
நாடியில சூடேத்தி நீதான் வாட்டுற
ஆலையிட்ட செங்கரும்பா ஆட்டுகிற என் மனசை
யார விட்டு தூது சொல்லி நானறிவேன் உம்மனசை
நெஞ்சமும் புண்ணாச்சு காரணம் கண்ணாச்சு

(காத்திருந்து)


படம்: வைதேகி காத்திருந்தாள்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜெயச்சந்திரன்


****

விரும்பிக் கேட்டவர்: மஜா

516. பூ வண்ணம் போல நெஞ்சம்
Poovannam2azhiyaathakOlangaL.mp3 -பூ வண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம் என் உள்ளம் போடும் தாளம்

பூ வண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம் என் உள்ளம் போடும் தாளம்

பூ வண்ணம் போல நெஞ்சே ஹே..ஏஹேஹே

இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ

பிறக்கும் ஜென்மங்கள் பிணைக்கும்
பந்தங்கள் என்றென்றும் நீ
[இனிக்கும்....]

இணைந்த வாழ்வில் பிரிவும் இல்லை
தனிமையும் இல்லை

பிறந்தால் எந்த நாளும் உன்னோடு
சேர வேண்டும்
[பூ வண்ணம்...]

படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள்
துடிக்கும் தேகமோ என் வெள்ளங்கள்

பனிக்குள் வாட்டங்கள் அணைக்கும்
மூட்டங்கள் என் இன்பங்கள்
[படிக்கும்...]

இணையும் போது இனிய எண்ணம்
என்றும் நம் சொந்தம்

இமைக்குள் ஏழு தாளம் என்றென்றும்
காண வேண்டும்
[பூ வண்ணம்...]


படம்: அழியாத கோலங்கள்
இசை: சலீல் சௌத்ரி
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் - பி.சுசீலா

515. கத்தாழங் காட்டு வழி

Kathaazhan Kaattu Vazhi - PJayachandran & SJanaki


கத்தாழங் காட்டு வழி
கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே
வாக்கப்பட்டு போறவளே

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா


தாயி விருமாயி மனசு மருகுதம்மா
உழுத புழுதியிலும் உன் முகமே தெரியுதும்மா
தங்கம் போல நான் வளர்த்த தங்கச்சி பிரியக் கண்டு
கத்தாழங் காட்டுக்குள்ள காளைகளும் கதறுதம்மா
வாசப்படி கடக்கையிலே வரலையே பேச்சு
பள்ளப்பட்டி தாண்டிப்புட்டா பாதி உயிர் போச்சு

(வண்டி மாடு எட்டு வச்சு)


அண்ணே போய் வரவா அழுது போய் வரவா
மண்ணே போய் வர்வா மாமரமே போய் வரவா
அணில் வால் மீச கொண்ட அண்ணே உன்னைவிட்டு
புலிவால் மீசை கொண்ட புருசனோட போய் வரவா
சட்டப்படி ஆம்பளைக்கு ஒத்த இடம்தானே
தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு இடம்தானே

(வண்டி மாடு எட்டு வச்சு)


படம்: கிழக்குச் சீமையிலே
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: வைரமுத்து
பாடியோர்: ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி

Wednesday, June 18, 2008

514. கொடியிலே மல்லிகைப்பூ

KODIYILE


கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம்

கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே


மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல இன்பதுன்பம் யாரால


பறக்கும் திசையேது இந்தப் பறவை அறியாது
உறவோ தெரியாது அது உனக்கும் புரியாது
பாறையிலே பூ முளைச்சு பார்த்தவங்க யாரு
அன்பு கொன்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு
காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே


(கொடியிலே)படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
பாடியோர்: ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி

513. ராஜ்ஜியமா இல்லை இமயமா

Ivan Vasam - Jeyachandran


இவன் வசம் இருந்தது ஏழு வரம்
ஏழும் இன்று தீர்ந்தாச்சு
கை வசம் ஒரு வரம் இல்லையடா
காப்பதேது தாய் மூச்சு
தரணியில் இதுவரை திருமகனை
தங்க வைத்த தாய் பந்தம்
முடிகின்ற பொழுது இங்கு நெருங்கி விட
மகனின் கையில் தீர்ப்பந்தம்
முடிந்தது பாபாவின் முன் ஜென்ம வாசம்தான்
அவன் இங்கு ஆள்வானே
ஆன்மீக தேசம்தான்
அவன் மனம் தெளிந்தது
நதியை போல் நடந்தது

ராஜ்ஜியமா இல்லை இமயமா
எங்கிவன் நாளை எங்கிவன்
மன்னனா இல்லை மௌள்தியா
யார் இவன் நாளை யார் இவன்

ஆயிரம் அதிசயம்
அமைந்தது பாபா ஜாதகம்
ஆயிரம் அதிசயம்
அமைந்தது பாபா ஜாதகம்

கேள்வியா வாழ்கிறான்
மௌனத்தை ஆள்கிறான்

ராஜ்ஜியமா இல்லை இமயமா
ராஜ்ஜியமா இல்லை இமயமா
படம்: பாபா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஜெயச்சந்திரன்
பாடல்: வாலி

***

விரும்பி கேட்டவர்: ஆயில்யன்

512. வாழ்க்கையே வேஷம்

Vaazhkkaye Vesham - Jeyachandran


வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
காலத்தின் கோலம் புரிந்தது
ஞானிதானே நானும்
வாழ்க்கையே வேஷம்..

அன்பை நான் கண்டேன்
தினம் ஆசையோடு காவல் நின்றேன்
சொந்தமே என்றேன்
அவள் வாழ்வுக்காக வாழ்ந்து வந்தேன்
நெஞ்சிலே ஈரம்
அது காய்ந்து போன பால்தானா
வரண்ட நிலம் நீரை தேடுது
கசந்த மனம் ஞாபம் பேசுது
ஞானிதானே நானும்.
வாழ்க்கையே வேஷம்..


மலர்களை அள்ளி
தரும் கைகள் மீது வாசம் சேரும்
முள்ளையே கண்டேன்
அந்த காயம் தந்த பாடம் போதும்
கலங்குதே கண்கள்
நான் போன ஜென்மம் செய்த பாவம்
நினைப்பவர்கள் மறந்த நேரமே
மறப்பதுக்கு ஞானம் வேண்டுமே
ஞானிதானே நானும்

(வாழ்க்கையே வேஷம்..)


படம்: ஆறிலிருந்து அறுபது வரை
இசை: இளையராஜா
பாடியவர்: ஜெயச்சந்திரன்
வரிகள்: பஞ்சு அருணாசலம்

***

விரும்பி கேட்டவர்: ஆயில்யன்

Tuesday, June 17, 2008

511. காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ

KALIDASAN.mp3 -

காளிதாசன் கண்ணதாசன்
கவிதை நீ நெருங்கி வா ..படிக்கலாம் ..ரசிக்கலாம்...
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ

காளிதாசன் கண்ணதாசன்
கவிதை நீ நெருங்கி வா ..படிக்கலாம் ..ரசிக்கலாம்...
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ

ஓடை பாயும் தண்ணீரில் ஆடைகள் நனைய ...
ஊஞ்சலாடும் நெஞ்சோடு ஆசைகள் விளைய
தாமரை மடலே தளிர் உடலே அலை தழுவ
பூ நகை புரிய இதழ் விரிய மது ஒழுக

இனிமை தான் ... இனிமை தான் பொழிந்ததே வழிந்ததே
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
நெருங்கி வா... படிக்கலாம்... ரசிக்கலாம்...
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ

ஆதி அந்தம் எங்கேயும் அழகுகள் தெரிய ... ஹோய்
மேலும் கீழும் கண் பார்வை அபினயம் புரிய
பூ உடல் முழுக்க விரல் பதிக்க மனம் துடிக்க
பாற் கடல் குளிக்க இடம் கொடுக்க தினம் மிதக்க
சமயம் தான் ...
சமயம் தான் அமைந்ததே அழைத்ததே

காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
நெருங்கி வா ..படிக்கலாம் ..ரசிக்கலாம்...

காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ

திரைப் படம்: சூரக் கோட்டை சிங்கக் குட்டி
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், பி.சுசீலா மற்றும் குழுவினர்
இசை: இளையராஜா

510. சித்திரை செவ்வானம் சிரிக்கக்கண்டேன்..

தையரத்தைய்யா தையரத்தைய்யா (4)
சித்திரை செவ்வானம் சிரிக்கக்கண்டேன்..
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
குய்ய இலவாலி தண்ணு நிலவாலம்
தையரத்தய்யா தையரத்தைய்யா
தையரதையர தையரத்தய்யா( சித்திரை செவ்வானம்)

மைய்யை இட்ட கண்ணாலே மையல் தந்த நேரம்
முதல்முதலா தொட்டேனே வாய்க்காக்கரை ஓரம்
சாயாமல் சாய்ந்தாலே மார்பிலே
அள்ளிக்கட்டும் கண்டாங்கி அரைகுறையா ஒதுங்க
அலுங்காம அணைச்சாளே வெதுவெதுப்பா மயங்க
மஞ்சள் கண்ட கைகாரி
மயக்கிவிட்டா என்னை
ஏகுய்யஇலவாலி தன்னு நிலவாலம்

தையரத்தைய்யா தையரத்தய்யா (சித்திரை செவ்வானம்)
போய்வரவா என்றாலே ஏக்கத்துடன் பார்ப்பா
நான் திரும்பி வரும்வரையில் கரையினில் நிப்பா
உணவில்லை உறவில்லை வாடுவாள்
என் முகத்தைப்பார்த்ததுமே துள்ளித்துள்ளி வருவா
முத்தான முத்தங்களை அள்ளி அள்ளித்தருவா
சொக்கி சொக்கி சிரிப்பாளே சொக்கத்தங்கம் போலே
குய்ய இலவாலி தன்னு நிலவாலம்
தையரத்தைய்யா (சித்திரை செவ்வானம்.)யாராவது இந்த குய்ய இலவாலி ங்கற வரிக்கான சரியான எழுத்துக்களை சொல்லுங்கப்பா.. எதோ எழுதிட்டேன்.. காதுல கேட்டது இதுதான்..

வாரம் :ஜெயச்சந்திரன் வாரம்
பாடியவர் : ஜெயச்சந்திரன்
இசை :இளையராஜா
திரைப்படம்: காற்றினிலே வரும் கீதம்

509. மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்

Mayanginen Solla - Naane Raja Naane Mandhiri


மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாத வாழும் வாழ்வுதான் ஏனோ?


(மயங்கினேன்)


உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?
வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் - கொதித்திருக்கும்
கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்

எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ
துன்பக் கவிதையோ கதையோ?
இரு கண்ணும் என் நெஞ்சும்
இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ?


(மயங்கினேன்)


ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்
மாலை மங்களம் கொண்டாடும் வேலை வாய்க்குமோ?
மணவறையில் நீயும் நானும்தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ?

ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான்
உந்தன் உறவுதான் உறவு!
அந்த நாளை எண்ணி நானும்
அந்த நாளை எண்ணி நானும் வாடினேனே

(மயங்கினேன்)


படம்: நானே ராஜா நானே மந்திரி
இசை: இளையராஜா
பாடியவர்: ஜெயச்சந்திரன், பி.சுசீலா

508. மாஞ்சோலை கிளிதானோ

MANJOLAI Kili Thaano - Jayachandran


மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ
வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ
இவள் ஆவாரம்பூதானோ
நடை தேர்தானோ
சலங்கைகள் தரும் இசை தேன்தானோ

(மாஞ்சோலை கிளிதானோ)


நீரோடை போலவே சிரித்தாடி ஓடினாள்
வளையோசையே காதிலே சிந்து பாடுதே
பளிங்குச்சிலையே பவழக்கொடியே
குலுங்கிவரும் இடையில் புரளும்
சடையில் மயக்கும் மலர்க்கொடி

(மாஞ்சோலை கிளிதானோ)


மின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும்
அழகோ தேவதையோ
அங்கம் ஒரு தங்கக்குடம் அழகினில்
மங்கை ஒரு கங்கை நதி உலகினில்
துள்ளும் இதழ் தேன்தான்
அள்ளும் கரம் நான்தான்
மஞ்சமதில் வஞ்சிக்கொடி வருவாள்
சுகமே தருவாள் மகிழ்வேன்
கண் காவியம் பண் பாடிடும்
பெண்ணோவியம் செந்தாமரையே

மேலாடை மாங்கனி அசைந்தாடும் வேளையில்
பலகோடிகள் ஆசையே வந்து மோதுதே
கரும்பு வயலே குறும்பு மொழியே
இளமையெனும் தனிமை நெருப்பை
அணைக்கும் பருவ மழைமுகில்

(மாஞ்சோலை கிளிதானோ)


படம்: கிழக்கே போகும் ரயில்
இசை: இளையராஜா
பாடல்: முத்துலிங்கம்
பாடியவர்: ஜெயச்சந்திரன்

Monday, June 16, 2008

507. கொல்லையிலே தென்னை வைத்து

Kollaiyile Thennai - PJayachandran


கொல்லையிலே தென்னை வைத்து
குருத்தோலைப் பெட்டி செஞ்சு
சீனி போட்டு நீ திங்க
செல்லமாய்ப் பிறந்தவளோ

மரக்கிளையில் தொட்டில் கட்ட
மாமன் அவன் மெட்டுக் கட்ட
அரண்மனையை விட்டு வந்த
அல்லிராணி கண்ணுறங்கு

(கொல்லையிலே தென்னை வைத்து)


படம்: காதலன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்: ஜெயச்சந்திரன்

506. தாலாட்டுதே வானம்

Thalattude Vaanam

தாலாட்டுதே வானம்
தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது
தார்மீகக் கல்யாணம்
இது கார்கால சங்கீதம்

(தாலாட்டுதே)


அலை மீது ஆடும்
உள்ளம் எங்கும்
ஒரே ராகம்

நிலை நீரில் ஆடும்
மீன்கள் ரெண்டும்
ஒரே கோலம்

மேல்வானத்தில் ஒரு நட்சத்திரம்
கீழ்வானத்தில் ஒரு பெண் சித்திரம்

எண்ணம் ஒரு வேகம்
அதில் உள்ளம் தரும் நாதம்

(தாலாட்டுதே வானம்)


இரு கண்கள் மோதி
செல்லும் போதும்
ஒரே எண்ணம்

ஒரு சங்கில் தானே
பாலை உண்ணும்
ஒரே ஜீவன்

சொர்க்கத்திலே இது முடிவானது!
சொர்க்கம் என்றே இது முடிவானது!

காதல் ஒரு வேதம்
அது தெய்வம் தரும் கீதம்

(தாலாட்டுதே வானம்)


படம்: கடல் மீன்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி

505. வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்

Vasandha Kaalangal - T. Rajendar


வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புதுமுகமான மலர்களே நீங்கள்
நதிதனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள்

(வசந்த காலங்கள்)


கருவண்டு நடனம் தருகின்ற நளினம்
இதயத்தில் சலனம் அம்மம்மா..அம்மம்மா
உன் மைவிழிக் குளத்தினில் தவழ்வது மீனினமோ
கவி கண்டிட மனத்தினில் கமழ்வது தமிழ்மணமோ
செம்மாந்த மலர்கள் அண்ணாந்து பார்க்கும் உன் காந்த விழிகள்
ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட ஏதேதோ குயில்கள்
மலையில் நெளியும் மேகக்குழல்கள் தாகம் தீர்த்திடுமோ
பூவில் மோத பாதம் நோக நெஞ்சம் தாங்கிடுமோ
நெஞ்சம் தாங்கிடுமோ

(வசந்த காலங்கள்)


மாதுளம் இதழாள் மாதவி எழிலாள்
மாங்கனி நிறத்தாள் அம்மம்மா அம்மம்மா
சுருள் வாழையின் மென்மையை மேனியில் கொண்டவளே
இருள் காடெனும் கூந்தலை இடை வரைக் கண்டவளே
நூல் தாங்கும் இடையாள் கால் பார்த்து நடக்க நெளிகின்ற வடிவம்
மத்தாளத்தைப் போலே தேகத்தை ஆக்கி குழல் கத்தை ஜாலம்
பாவை சூடும் வாடை கூடப் பெருமை கொள்ளுமடி
தேவை உந்தன் சேவை என்று இதழ்கள் ஊறுமடி
இதழ்கள் ஊறுமடி...இதழ் கள் ஊறுமடி

(வசந்த காலங்கள்)படம்: இரயில் பயணங்களில்
இசை: டி.ராஜேந்தர்
பாடியவர்: ஜெயச்சந்திரன்
பாடல்: டி.ராஜேந்தர்

504. ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு
ராசாத்தி உன்னக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ராசாத்தி உன்னக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு
பொன்மானே உன்னத் தேடுது


(ராசாத்தி உன்னக் காணாத நெஞ்சு)


கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
தத்தித் தவழும் தங்கச் சிமிழே
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணே


(ராசாத்தி உன்னக் காணாத நெஞ்சு)


மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன?
அத்தை மகளோ மாமன் மகளோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீதான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்

(ராசாத்தி)


படம்: வைதேகி காத்திருந்தாள்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜெயச்சந்திரன்

***

தேன்கிண்ணத்தில் இந்த வாரம் பாடகர் ஜெயச்சந்திரன் பாடிய பாடல்கள் ஒலிபரப்பப்படும். நேயர்கள் தங்கள் விருப்பப் பாடல்களை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இதுவரை தேன்கிண்ணத்தில் வந்த பாடல்கள் இங்கே சொடுக்கிக் கேட்கலாம்.

Sunday, June 15, 2008

503. தானா வந்த சந்தனமே

Thaanaa Vantha - ooru vittu ooru vanthu

தானா வந்த சந்தனமே
உன்னை தழுவ தினம் சம்மதமே
தானா வந்த சந்தனமே
உன்னை தழுவ தினம் சம்மதமே
இது வேறாரும் பறிக்காத மல்லிகை தோட்டமே
யாராலும் படிக்காத மங்கல ராகமே
(தானா வந்த..)

வண்ண வண்ண வளைவி போட்டு
வசமாக வளைச்சு போட்டு
என்னை கட்டி இழுத்து போகும் இளந்தேகமே
கூரப்பட்டு களைஞ்சிடாம குறை ஏதும் நடந்துடாம
ஆசைப்பட்டு அணைக்க வேண்டும் மகராசனே
முன்னே பின்னே அறிஞ்சதில்லை
முறையாக தெரிஞ்சதில்லை
சின்ன சின்ன தவறை நீயும் பொருத்தாக வேணுமே
புத்தகத்தில் படிக்கவில்லை புரியாமல் நடிக்கவில்லை
வித்தைகளை வெவரமாக வெளியாக்க வேணுமே
இந்த மேனி இன்ப தோனி
ராணி இந்த ராணி
இந்த ராஜனோட விருப்பமே
(தானா வந்த..)

முத்து நவ ரத்தினத்தோடு முழுசான லட்சணத்தோட
மெத்தையில நானும் கூட வரவேண்டுமே
முன்னம் ரெண்டு பவளத்தோட முன் வாயில் மதுரத்தோட
கண்ணனுக்கு காதல் விருந்து தரவேண்டும் நீ
தொட்டு தொட்டு சுகமும் கூட சுதியோடு கலந்து பாட
விட்டு விட்டு விலகி ஓடா முடியாமல் போகுமே
கொத்து மல்லி கொண்டையில் ஆட
குளிர்ப்பார்வை வண்டுகள் ஆட
புத்தம் புது செண்டுகள் ஆட
புது தாகம் தோணுமே
மெல்ல ராசா சொல்லு லேசா
ராசா இந்த ராசா
இந்த ராணியோட பொருத்தமே
(தானா வந்த..)

படம்: ஊரு விட்டு ஊரு வந்து
இசை: இளையராஜா

விரும்பி கேட்டவர்: மஜா

502. பூவாசம் புறப்படும் பெண்ணே


Poo Vaasam.mp3 - Anbe Sivam

பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி
(பூவாசம்..)

புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்
உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்
கோடு கூட ஓவியத்தின் பாகமே
ஊடல் கூட காதல் என்று ஆகுமே
ஒரு வானம் வரைய நீல வண்ணம் நம் காதல் வரைய என்ன வண்ணம்
என் நெஞ்சத்தின் இடம் தொட்டு
விரல் என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா...
(பூவாசம்..)

ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது
உற்றுப் பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது
பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது ஆண்தொடாத பாகம் தன்னில் உள்ளது
நீ வரையத்தெரிந்த ஒரு கவிஞம் கவிஞன்
பெண் வசியம் தெரிந்த ஒரு கலைஞன் கலைஞன்
மேகத்தை ஏமாற்றி மண்சேரும் மழை போலே
மடியோடு விழுந்தாயே வா...
(பூவாசம்..)

படம்: அன்பே சிவம்
இசை: வித்யாசாகர்
படியவர்கள்: விஜய் பிரகாஷ், சாதனா சர்கம்
வரிகள்: வைரமுத்து

விரும்பி கேட்டவர்: விக்னேஷ்வரன்

501. ஈர நிலா விழிகளை மூடி


Eera Nila - Aravindan

ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே
விழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ
அழகே கை சேரும் சொந்தம் இன்பம் இன்பம்
(ஈர நிலா..)

நீருக்கு நிறம் ஏது நேசத்தில் பேதம் வராது
உன் அன்பில் அழுதாலும் கண்ணீர் இனிக்கும்
முள் மீது என் பாதை பூவாகும் உந்தன் பார்வை
நீ பாடும் தாலாட்டில் சோகம் உறங்கும்
நம்மை விழி சேர்த்ததோ
இல்லை விதி சேர்த்ததோ
உள்ளம் ஒன்றானதே
போதும் இன்பம் போதும்
(ஈர நிலா..)

தாயான பூமாது தோள்மீது சாய்ந்திடும்போது
என் நெஞ்சில் பாலூரும் அன்பு தவிப்பு
தலைமுறை கண்டாலும் தாளாது உந்தன் அன்பு
எப்போதும் வேண்டும் உன் இன்ப அழைப்பு
சேரும் நதி ரெண்டுதான்
பாதை இனி ஒன்றுதான்
வெள்ளை மழை மண்ணிலே
தூறும் வண்ணம் சூடும்
(ஈர நிலா..)

படம்: அரவிந்தன்
இசை:யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ஷோபனா
வரிகள்: வைரமுத்து

500. மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா


Malligai Poove - Sujatha, UnniKrishnan

மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா

மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
ஆயிரம் கோடிகள் செல்வம்
அது யாருக்கு இங்கே வேண்டும்
அரை நொடி என்றால் கூட
இந்த ஆனந்தம் ஒன்றே போதும்
பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
வெண்பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா
(மல்லிகைப் பூவே..)

சின்ன சின்ன கைகளிலே ட்
வண்ணம் சிந்தும் ரோஜாப்பூ
சிரித்து பேசி விளையாடும்
நெஞ்சம் இங்கு மத்தாப்பூ
இன்னும் அந்தி வானில்
பச்சைக்கிளி கூட்டம்
என்ன சொல்லி பறக்கிறது?
நம்மை கண்டு நானி
இன்னும் கொஞ்ச தூரம்
தள்ளி தள்ளி போகிறது
எங்களின் கதை கேட்டு
தலையாட்டுது தாமரைப்பூ
மயிலே நாம் ஆடிய கதையை நீ பேசு
(மல்லிகைப் பூவே..)

அலைகள் வந்து மோதாமல்
கடலில் கரைகள் கிடையாது
எந்த அலைகள் வந்தாலும்
எங்கள் சொந்தம் உடையாது
சுற்றி சுற்றி வருதே
பட்டு தென்றல் காற்று
இங்கே இங்கே பார்க்கிறது
மொட்டு விடும் மலரை
காஞ்சி பட்டு நூலில்
கட்டி தர கேட்கிறது
வேலிகள் கிடையாது
எந்த வெள்ளமும் நெருங்காது
நிலவே இது கொஞ்சும் கிளிகளின் இசைப்பாட்டு
(மல்லிகைப் பூவே..)

படம்: உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், சுஜாதா

499. சித்திரை நிலவு சேலையில் வந்தது

Chithrai Nilavu - Jayachandran, Minmini
வீடியோ இங்கே

சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே
உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே
அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு
அது வேருக்கு தெரியும்
இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு
அது சேலைக்கு தெரியும்
(சித்திரை நிலவு..)

வண்ண வண்ண வானவில் ஒன்று
வானில் வந்தால் ஊருக்கு தெரியும்
கன்னி பொண்ணு நெஞ்சுக்குள்ள
காதல் வந்தால் யாருக்கு தெரியும்
மேகங்களில் எத்தனை துளியோ
மின்னல் பெண்ணா யாருக்கு தெரியும்
மோகம் கொண்ட பெண் யாரென்று
முத்தம் தரும் சாமிக்கு தெரியும்
நிலா எது விண்மீன் எது
நீரில் நிற்கும் அல்லிக்கு தெரியும்
நாணம் எது ஊடல் எது
நானும் கண்ட புள்ளிக்கு தெரியும்
(சித்திரை நிலவு..)

மரங்களில் எத்தனை பழமோ
பழம் உண்ணும் பறவைகள் அறியும்
பழங்களில் எத்தனை மனமோ
ஊரில் இங்கே ய்ஆருக்கு தெரியும்
எந்த உறை தன் உறை என்று
உள்ளே செல்லும் வாலுக்கு தெரியும்
எந்த இடை தன் இடையென்று
எட்டி தொடும் ஆளுக்கு தெரியும்
நிலாவிலே காற்றே இல்லை
இது எத்தனை பேருக்கு தெரியும்
காதல் வந்தால் கண்ணே இல்லை
காதல் கொண்ட யாருக்கு தெரியும்
(சித்திரை நிலவு..)

படம்: வண்டிசோலை சின்னராசு
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஜெயசந்திரன், மின்மினி
வரிகள்: வைரமுத்து

498. துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்


Thuli Thuliyai - Parvai Onre Pothume

துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்
என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல்
மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்
ஒளி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய்
என் ரகசிய சலங்கையை ரசித்துவிட்டாய்
ரசித்ததையே நீ ரசித்ததையே
என் அனுமதி இல்லாமல் ருசித்து விட்டாய்
பூவென நீ இருந்தால் இளம் தென்றலைப்போல் வருவேன்
நிலவென நீ இருந்தால் உன் வானம் போலிருப்பேன்
(துளி துளியாய்..)

பூமி எங்கும் பூப்பூத்த பூவில்
நான் பூட்டி கொண்டே இருப்பேன்
பூக்களுக்குள் நீ பூட்டிக் கொண்டால்
நான் காற்று போல திறப்பேன்
மேகம் உள்ளே வாழ்ந்திருக்கும் தூறல் போலவே
நானும் அந்த மேகம் அதில் வந்து நானும்
உன்னை தான் முத்தம் இட்டு முட்த்ஹம் இட்டு போகிறேன்
ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி ஆனந்த மழையில்
நனைந்திட நனைந்திட
(துளி துளியாய்..)

நீல வானில் அட நீயும் வாழ
ஒரு வீடு கட்டி தரவா
நீல வானில் என் கால் நடந்தால்
விண் மீன்கள் கொட்டும் தலையால்
ஓர கண்ணில் போதை கொண்டு நீயும் பார்க்கிறாய்
மேல் உதட்டை கீழ் உதட்டை அசைக்கிறாய்
பூ வனத்தை பூ வனத்தை கொய்து போகிறாய்
பெண் இனத்தை பொண் இனத்தை ரசிக்கிறாய்
கனவுகள் வருதே கனவுகள் வருதே காதலியே
உன்னை தழுவிட தழுவிட
(துளி துளியாய்..)

படம்: பார்வை ஒன்றே போதுமே
இசை: பரணி
பாடியவர்கள்: ஹரிஹரன், ஸ்வர்ணலதா
வரிகள்: பா. விஜய்

Saturday, June 14, 2008

497. ஒரே ஒரு பார்வையால்

OrE oru - Anbe Un Vaasam

ஒரே ஒரு பார்வையால்
என்னை கைது செய்கிறாய்
ஒரே ஒரு செய்கையால்
எந்தன் நெஞ்சை கேட்கிறாய்
(ஒரே ஒரு..)

ஒரே ஒரு வார்த்தையால்
சொல்லாததை சொல்கிறாய்
ஒரே ஒரு காதலால்
என்னை வெல்கிறாய்
உயிர் கொல்கிறாய்

ஒரே ஒரு துளியாய் இதயத்தில் விழுந்தாய்
இன்று ஒரு கடலென ஆனாய்
ஒரே ஒரு செடியாய் மனசுக்குள் முளைத்தாய்
இன்று ஒரு நந்தவனமானாய்
ஒரே ஒரு நட்சத்திரம் ஆனாய்
என்னை விட்டு தள்ளி தள்ளி போனாய்
ஒரே ஒரு மேகமாய் எந்தன் விண்ணில் வருகிறாய்
ஒரே ஒரு தீபமாய் கண்ணீல் தெரிகிறாய்
என்னில் எறிகிறாய்
(ஒரே ஒரு..)

ஒரே ஒரு நொடிக்குள் எந்த விழி இரண்டில்
சின்ன சின்ன சிறைகளை வைத்தாய்
ஒரே ஒரு சிரிப்பில் எந்தன் உயிர் கிடங்கில்
வெடி வைத்து தகர்த்திட பார்த்தாய்
ஒரே ஒரு கண்ணசைவு போதும்
அதில் எந்தன் அர்த்தமது மாறும்
ஒரே ஒரு சொர்க்கமாய் எந்தன் முன்பு நிற்கிறாய்
ஒரே ஒரு தென்றலாய் எனை தீண்டினாய்
வலி தூண்டினாய்
(ஒரே ஒரு..)

படம்: அன்பே உன் வாசம்
இசை: தீனா
பாடியவர்கள்: கார்த்திக், சாதனா சர்கம்

496. அம்புலி மாமா அம்புலி மாமா


Ambulimama - Karthik

அம்புலி மாமா அம்புலி மாமா
அம்புலிமாமா நாந்தானே
வானத்து மதியை திருமதியாக்கி
கைத்தலம் பற்றி கொண்டேனே
அழகி பேரழகி எதிரில் நின்றாளே
அழகன் பேரழகன் எனை வென்றாளே
சுகமாய் ஹேய் கொன்றாளே
(அம்புலி மாமா..)

ஒரு குடை பிடித்து இருவரும் நடப்போம்
வெயிலிலும் ஹோய் மழையிலும்
அழகிய ஜோடி பரிசுகள் பெருவோம்
தினம் தினம் ஹோய் தினம் தினம்
உறக்கம் விழிகளை மூடிடும் போதும்
கனவில் இமைகளை திறப்போமே
முத்தத்தில் இரவை மூழ்கடிப்போமே
இருமுறை குளிப்போமே..
(அம்புலி மாமா..)

இவன் ஒரு பாதி உமதொரு பாதி
கோவிலில் ஹோந் கோவிலில்
இவன் ஒரு பாதி அவள் ஒரு பாதி
வீட்டினில் என் வீட்டினில்
உழவியில் அரிசியை போட்டிடும் போது
பக்கத்தில் இருந்து உதவனுமே
குழந்தை பெருகிற நேரத்தில் நானும்
அருகினில் இருக்கணுமே
(அம்புலி மாமா..)

படம்: பேரழகன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: கார்த்திக்

495. சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ


Oruu thuli - En Swasa Katre

க்ளங்க்ளங் க்ளங்க்ளங்க்
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
க்ளங்க்ளங்க்ளங் க்ளங்க்ளங்க்
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி இரு துளி
சில துளி பல துளி
படபட தடதட சடசடவென சிதறுது

சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ
சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ
சக்கரவாகமோ மழையை அருந்துமா - நான்
சக்கரவாகப் பறவை ஆவேனோ
மழையின் தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

(சின்னச்சின்ன)

சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேந்துளியாய் வருவாய்
சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே முதிர்வாய்
பயிர் வேரினிலே விழுந்தால் நவதானியமாய் விளைவாய்
என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்
அந்த இயற்கையன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது
அட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது
இவள் கன்னியென்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது

(சக்கரவாகமோ)

மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்புக்கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலயிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்
அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழவந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்
நீ கண்கள் மூடிக் கரையும்போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய் (2)

ஓஹோஹோ ஒஹோ ஒஹோ ஓஹொஹொஹோஹோ (3)

(சக்கரவாகமோ)
(சின்னச்சின்ன)

படம்: என் ஸ்வாசக் காற்றே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: MG ஸ்ரீகுமார்
வரிகள்: வைரமுத்து

494. மேகம் கருக்குது மழை வரை பார்க்குது

Meham Karukudhu - Aanandha Raagam

மாமரச்சோலையில் பூமழை தேடுது
மழை மேகம் வர வேண்டும்
சில்லுன்னு காத்தாடிச்சா சந்தோஷம் சேருது..
சில்லுன்னு காத்தாடிச்சா சந்தோஷம் சேருது..

மேகம் கருக்குது மழை வரை பார்க்குது
வீசியடிக்குது காத்து காத்து

ஏன் நிறுத்திட்டீங்க? பாட்டு நல்லா இருக்கு
இன்னொரு தடவை பாடுங்களேன்
அது.. அது வந்து..
இந்த பாட்டு எதுக்கு உங்களுக்கு?
பாட்டு ரொம்ப நல்லா இருக்கு
கேட்கணும் போல ஆசையா இருக்கு
அட.. பாடுங்கண்ணா..

மேகம் கருக்குது மழை வரை பார்க்குது
வீசியடிக்குது காத்து
காத்து மழை காத்து
காத்து மழை காத்து
(மேகம் கருக்குது...)
ஒயிலாக மயிலாடும் அலை போல
மனம் பாடும்
(மேகம் கருக்குது...)

தொட்டு தொட்டு பேசும் சிட்டு
துள்ளி துள்ளி ஓடுவதென்ன
(தொட்டு தொட்டு...)
தென்றல் பட்டு ஆடும் மொட்டு
அள்ளி வந்த வாசம் என்ன
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து...
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து..
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து
என்னனம்மோ ஆகிப்போச்சு
சேராமல் தீராது
வாடைக் குளிரில் வாடுது மனசு
(மேகம் கருக்குது...)

பூவுக்குள்ள வாசம் வச்சான்
பாலுக்குள்ள நெய்யை வச்சான்
(பூவுக்குள்ள..)
கண்ணுக்குள்ள என்ன வச்சான்
பொங்குதடி என் பனசு
(கண்ணுக்குள்ள..)
பார்த்த கண்ணு சொக்கி சொக்கி
பைத்தியம்தான் ஆகிப்போச்சு
நீ..
நீ வாடி நீ வாடி
ஆசை மயக்கம் போடுற வயசு
(மேகம் கருக்குது...)

படம்: ஆனந்த ராகம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், S ஜானகி

493. இருபது கோடி நிலவுகள் கூடி


Iruvathu Kodi Nilavu - Thullatha Manamum Thullum

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெழிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ

நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே
ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ..
(இருபது..)

தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன
வந்து உந்தன் பாதம் கண்டு வணக்கம் சொல்லவோ
தேன் மிதக்கும் உதடு சேர்ந்திருப்பதென்ன
ஒன்றை ஒன்று முத்தமிட்டு இன்பம் கொள்ளவோ
மானிடப் பிறவி என்னடி மதிப்பு
உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு
(நூறு கோடி..)
(இருபது..)

ஜூலை மாதம் பூக்கும் கொன்றைப் பூக்கள் போல
சேலை கொண்ட பெண்ணின் அங்கம் தோற்றம் காட்டுதே
தாஜ்மகாலின் வண்ணம் மாறக்கூடும் பெண்ணே
மேனி கொண்ட கன்னம் மின்னும் வண்ணம் கூடுதே
நிறமுள்ள மலர்கள் சோலைக்கு பெருமை
நீ உள்ள ஊரில் வசிப்பது பெருமை
(நூறு கோடி..)
(இருபது..)

படம் :துள்ளாத மனமும் துள்ளும்
இசை :SA ராஜ்குமார்
பாடியவர்: ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து

Wednesday, June 11, 2008

492. மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்


Madrasa_Suthi - Shahul Hameed, Manorama

மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்
மெரினாவில் வீடு கட்ட போறேன்
லைக்ட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்
நான் மங்காத்தா ராணி போல வாரேன்
(மெட்ராஸை..)

ஹே.. மெட்ராஸை சுத்தி காட்ட போறேன்
மெரினாவில் சுண்டல் வாங்கி தாரேன்
இதுதானே நிப்பன் பில்டிங் பாரு
இதுக்கு உங்கப்பன் பேர் வைக்க சொல்ல போறேன்
(இதுதானே..)

அட சினிமா பிடிக்கும் கோடம்பாக்கம்
ஏரோப்ளேன் இறங்கும் மீனம்பாக்கம்
பாரின் சரக்கு பர்மபஜார்
நம்ம உள்ளூர் சரக்க் பாம்பஜாரு

ஏ பொண்ணு ஏ பொண்ணு
இதை பார்க்காத கண்ணு என்ன கண்ணு
பொண்ணு ஏ பொண்ணூ
என்னை இழுத்துக்குனு போடி என் கண்ணு

மெட்ராஸின் ஹீரோ அது மெட்ரோ வாட்டர்
ஆனா ஸ்டைலுன்னா இப்போ குடி மினரல் வாட்டர்
மெட்ராஸின் கீதம் அது ஆட்டோ ஆட்டோ சத்தம்தான்
ஆல் இன் ஆல் கேட்டால்
ஒரு போட்டோ போட்டோ கையில்தான்
இங்கே மாமியார் தொல்லை
இல்ல முகமூடி கொள்ளை
ஆனால் இஸ்மாயிலும் அப்ரஹாமும்
இந்தியனாக வாழும் ஊரு
(மெட்ராஸை..)

பொண்ணு ஏ பொண்ணு
நாத்தான் துண்ண வாடி என் கண்ணு
உன்னை கூட்டிகினு போறேன் சினிமாவுக்கு
இல்ல கொத்திகினு போவான் பொறம்போக்கு

காலம் கெட்டு போச்சு மகராசி
சும்மா கப்புன்னு இசுக்குது முவராசி
மூத்த சொல்றேன் இதை யோசி
நான் மூனு தலைமுறையா மகராசி

வெள்ளைக்காரன் கோட்டை அது பழைய மெண்ட்ராஸ்
ராணியம்மா பேட்டை இது புதிய மெட்ராஸ்
ஒன் வேயில் புகுந்து கூட மெட்ராஸை சுத்தி பார்க்கலாம்
செண்ட்ரலையும் எக்மோரையும் சுத்தி காட்டி நீ துட்டு சேர்க்கலாம்
சினிமா பைத்தியம் என்றால் மெட்ராஸ்
காதல் வைத்தியம் என்றால் மெட்ராஸ்
இங்கே இல்ல ஜோலி பக்கேட் காலி
ஆனா லைஃப் இப்போ ஜாலி ஜாலி
(மெட்ராஸை..)

படம்: மே மாதம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஷாஹுல் ஹமீட், மனோரமா
வரிகள்: வைரமுத்து

Tuesday, June 10, 2008

491. டெல்லிக்கு ராஜான்னாலும்டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்ல தட்டாதே
பட்ட படிப்பு படிச்சு வந்தாலும் பாட்டி சொல்ல தட்டாதே
கொமரிக்கு அழகுண்டு கெழவிக்கு அறிவுண்டு
அழகுல அறிவ நீ மறக்காதே..

(டெல்லிக்கு....)

கட்சி ஒன்ன தேர்ந்தெடுத்தாலும் தாய்க்குலங்கள் ஆதரித்தாலும்
பாட்டி சொல்ல தட்டாதே
புட்டி வாங்கி விருந்து வெச்சாலும் பொட்டி பணத்த தொறந்து வெச்சாலும்
பாட்டி சொல்ல தட்டாதே
வாழ்க்கை இங்க அநியாயம் பெரியார் சொன்ன வெங்காயம்
வாழ்க்கை இங்க அநியாயம் நம்ம பெரியார் சொன்ன வெங்காயம்
மூத்தோர் சொன்ன வார்த்தை அது கடலில் விட்ட பெருங்காயம்

(டெல்லிக்கு....)

சேத்த பணத்த செலவழிச்சாலும் சொத்த மாத்தி எழுதி வெச்சாலும்
பாட்டி சொல்ல தட்டாதே
மந்திரியாக ஒசந்து நின்னாலும் மந்தையோரம் ஒதுங்கி நின்னாலும்
பாட்டி சொல்ல தட்டாதே
அழுத புள்ள ஜெயிக்காது அவுச்ச நெல்லு முளைக்காது
தங்கம் வெச்சு தேச்சாகூட எருமை நிறம் வெளுக்காது

(டெல்லிக்கு....)

பினாமி பேரில் நிலமிருந்தாலும் ஸ்விஸ்ஸு பேங்கில் பணமிருந்தாலும்
பாட்டி சொல்ல தட்டாதே
தலைவன் என்று கொடிகட்டும் போதும் சட்டசபையில் அடிபட்ட போதும்
பாட்டி சொல்ல தட்டாதே
வாழ்க்கை வெறும் சாப்பாடா புள்ள பெறும் ஏற்பாடா
வீடும் இந்த நாடும் நலம் காணும்படி நீ வாடா

(டெல்லிக்கு....)

படம் : பாட்டி சொல்ல தட்டாதே
இசை : சந்திரபோஸ்

Monday, June 9, 2008

490.வா வாத்யாரே ஊட்டாண்டே

தமிழ் திரையுலக வரலாற்றில் தனிபெரும் இடத்தை இன்னமும் தக்க வைத்து கொண்டிருப்பதில் அதிலும் குறிப்பாக பெண் நடிகர்களில் மனோரமா முக்கியமானவர். அவருடைய திரையுலக வரலாற்றில் தமிழ்நாட்டு முதலமைச்சர்கள் அண்ணாதுரை,கலைஞர்,எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா என அனைவருடனும் சேர்ந்து நடித்தவர் என்ற பெருமையை பெற்றவர்.

மாலையிட்ட மங்கை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி மாலையிட்ட மங்கையில் நகைச்சுவை நடிகையாக அறியப்பட்டார்.

முதன்முதலில் தன்னுடைய குரலில் பாடிய படம் பொம்மலாட்டம். அதில் இடம் பெற்ற இந்த பாடலை காணலாம்.
வா வாத்யாரே ஊட்டாண்டே நீ
வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான்
சைதாப்பேட்ட கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான்
சைதாப்பேட்ட கொக்கு

வா வாத்யாரே ஊட்டாண்டே நீ
வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான்
சைதாப்பேட்ட கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான்
சைதாப்பேட்ட கொக்கு

வாராவதிலே நின்னுகினிருந்தேன் அமராவதியாட்டம்
சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே அம்பிகாபதியாட்டம்
வாராவதிலே நின்னுகினிருந்தேன் அமராவதியாட்டம்
சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே அம்பிகாபதியாட்டம்
லவ்வாப் பாத்து சோக்கா பேசி டேக்கா குடுத்தே பின்னாலே
லவ்வாப் பாத்து சோக்கா பேசி டேக்கா குடுத்தே பின்னாலே
சர்தான் வாம்மா கண்ணு படா பேஜாராச்சி நின்னு
அட சர்தான் வாம்மா கண்ணு படா பேஜாராச்சி நின்னு

வா வாத்யாரே ஊட்டாண்டே நீ
வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான்
சைதாப்பேட்ட கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான்
சைதாப்பேட்ட கொக்கு

நைனா உன் நினப்பாலே நான் நாஸ்தா துன்னு நாளாச்சு
நைனா ஆ...
நைனா உன் நினப்பாலே நான் நாஸ்தா துன்னு நாளாச்சு
மச்சான் ஒன் மூஞ்சேப் பாத்துஜால்னா நெனப்பு வந்தாச்சு
அட மச்சான் ஆ........
மச்சான் ஒன் மூஞ்சேப் பாத்துஜால்னா நெனப்பு வந்தாச்சு

ஆயா கடை இடியாப்போன்னா பாயாக்கறியும் நீயாச்சு
ஆயா கடை இடியாப்போன்னா பாயாக்கறியும் நீயாச்சு
வாவா மச்சான் வா மச்சான்
வாவா மச்சான் வா மச்சான்
வாவா மச்சான் ஒண்ணா சேந்து வாராவதிக்கே போவலாம்

வா வாத்யாரே ஊட்டாண்டே நீ
வராங்காட்டி நான் உடமாட்டேன்

ஜாம்பஜார் ஜக்கு நான்
சைதாப்பேட்ட கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான்
சைதாப்பேட்ட கொக்கு

படம்: -பொம்மலாட்டம்
இசை:- வி.குமார்.


இந்த வாரம் முழுவதும் மனோரமா பாடல்கள் தேன்கிண்ணத்தில் இடம் பெறும். உங்களுக்கு விருப்பமான பாடல்களை நேயர்விருப்பத்தில் கேட்கலாம்.

Friday, June 6, 2008

489. சொந்தம் வந்தது வந்தது

Sondham Vanthathu - Pudhu Pattu

யூ டியூப்: சொந்தம் வந்தது

சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
மாசங்கள் போனாலும் ....... பாசங்கள் போகாது மாமா
சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது
மாசங்கள் போனாலும் வருசங்கள் ஆனாலும்
பாசங்கள் போகாது மாமா
சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது

கண்ணேன்னு சொல்ல வேண்டாம் கிளியேன்னு கிள்ள வேண்டாம்
கண்ணாலே கொஞ்சம் பொறு போதும்
நீ வாழும் வீட்டுக்குள்ளே நீ போடும் கோட்டுக்குள்ளே
நீங்காம இந்த பொண்ணு வாழும்
உன்னையே நானே உசுரா தானே
நினைச்சேன் மாமா நெசந்தான் ஆமா
நான் வாங்கும் மூச்சிக்காத்து உன்னாலதான் உன்னாலதான்
ஓயாம உள்ளஞ்சொல்லும் உன் பேரை தான் உன் பேரை தான்
சொந்தம் பந்தம் நீ.....
(சொந்தம் வந்தது..)

பூப்போல தேகம் தொட்டு சோப்பாலே தேச்சி விட்டு
நீராட்ட நீயும் ஒரு சேய் தான்
வாய்யான்னு உன்னை கொஞ்சி வாயார உன்னை சொல்லி
சோரூட்ட நானும் ஒரு தாய் தான்
இரவா பகலா இருப்பேன் துணையா
கண்ணீர் வடிஞ்சா தடுப்பேன் அணையா
போகாது உன்னை விட்டு என்னாசை தான் என்னாளும்தான்
போனாலும் மண்ணை விட்டு பொட்டோடுதான் பூவோடு தான்
வாழ்வோம் மாமா நாம்....
(சொந்தம் வந்தது..)

படம்: புது பாட்டு
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா

488. ராசாத்தி மனசுல

Rasathi Manasula - Raasaave Unnai Nambi

யூ டியுப்: ராசாத்தி மனசுல


ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான்
இந்த ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான்
புது நேசம் உண்டானது
இரு நெஞ்சம் கொண்டாடுது
புது நேசம் உண்டானது
இரு நெஞ்சம் கொண்டாடுது

ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புத்தான்
இந்த ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புத்தான்

முள்ளிருக்கும் பாதை நீ நடந்த போதும்
முள்ளெடுத்து போட்டு நீ நடக்கலாகும்
வீதியிலே நீ நடந்தா கண்களெல்லாம் உன் மேலேதான்
முள்ளு தச்சா தாங்கும் நெஞ்சம்
கண்கள் தச்சா தாங்காதையா
நெதமும் உன் நெனப்பு
வந்து வெரட்டும் வீட்டில
உன்னை சேர்ந்தாலும் உன் உருவம்
என்னை வாட்டும் வெளியிலே
இது ஏனோ அடி மானே
அத நானோ அறியேனே..
(ராசாத்தி மனசுல..)

செங்குருக்க கோலம் வானத்துல பாரு
வந்து இந்த நேரம் போட்டு வச்சதாரு
சேறும் இள நெஞ்சங்களை
வாழ்த்து சொல்ல கோர்த்தார்களா?
ஊருக்குள்ள சொல்லாததை
வெளியில் சொல்லித் தந்தார்களா?
வானம் போடுது
இந்த பூமி பாடுது
ஊரும் வாட்டுது இந்த உலகம் வாட்டுது
தடை ஏதும் கிடையாது
அதை நானும் அறிவேனே
(ராசாவின் மனசுல..)

படம்: ராசாவே உன்னை நம்பி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, P சுசீலா

487. செண்பகமே செண்பகமே


Senbakame... - Enga Ooru Paattukaaran

பட்டு பட்டு பூச்சி போல எத்தனையோ வண்ணம் மின்னும்
நட்டு வச்சேன் நான் பறிக்க நான் வளர்த்தேன் நந்தவனம்
கட்டி வைக்கும் என் மனசு வாசம் வரும் மல்லிகையும்
தொட்டு தொட்டு நான் பறிக்க துடிக்குதந்த செண்பகம்

செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே

உன் பாதம் போகும் பாத நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசப்பட்டு காத்து காத்து நின்னேனே
உன் பாதம் போகும் பாத நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசப்பட்டு காத்து காத்து நின்னேனே
உன் முகம் பாத்து நிம்மதி ஆச்சு
என் மனம் தானா பாடிடலாச்சு
என்னோட பாட்டு சத்தம் தேடும் உன்ன பின்னாலே
எப்போதும் உன்னத்தொட்டு பாடப்போறேன் தன்னால
(செண்பகமே..)

மூணாம்பிறையைப் போல தானும் நெற்றி பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும் இந்த பாட்டோட
மூணாம்பிறையைப் போல தானும் நெற்றி பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும் இந்த பாட்டோட
கருத்தது மேகம் தல முடி தானோ
இழுத்தது என்ன பூவிழி தானோ
எள்ளுப்பூ பற்றி பேசி பேசி தீராது
உன்பாட்டுக்காரன் பாட்டு உன்ன விட்டு போகாது
(செண்பகமே...)

படம்: எங்க ஊரு பாட்டுக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: P சுசீலா

Thursday, June 5, 2008

486. மதுர மரிக்கொழுந்து வாசம்
வீடியோ இங்கே

மதுர மரிக்கொழுந்து வாசம் - என்
ராசாத்தி உன்னுடைய நேசம்
மானோட பார்வை மீனோட சேரும்
மாறாம என்னைத் தொட்டுப் பேசும் - இது
மறையாத என்னுடைய பாசம்


பொட்டுன்னா பொட்டு வச்சு
வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு
பட்டுனு சேலையைக் கட்டி
எட்டு வச்சு நடந்துகிட்டு

கட்டுன்னா கட்டிப்புட்ட
நெஞ்சக் கொஞ்சம் தட்டிப்புட்ட
வெட்டும் இரு கண்ணை வச்சு
என்னைக் கட்டிப் போட்டுப்புட்ட

கட்டு அது உனக்கு மட்டும்தானா
இந்த சிட்டும்கூட சிக்கியது ஏனா
எப்போதோ விட்டக்குறை மாமா
அது இரு உசிரை கட்டுதய்யா தானா
இது இப்போது வாட்டுதுன்னு
பாட்டு ஒன்னை அவுத்துவிடு

(மதுர மரிக்கொழுந்து)

மெட்டுன்னா மெட்டு கட்டி
இட்டு கட்டி பாடிக்கிட்டு
கட்டுனா ராகம் என்னும்
மாலை ஒன்னை கட்டிப்புட்டு

சுத்துனா சுத்தி அதை
என் கழுத்தில் போட்டுப்புட்ட
ஒன்ன மட்டும் விட்டுப்புட்ட
தாலி கட்ட மறந்துப்புட்ட

நீதானே என்னுடைய ராகம்
என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம்
ஏழேழு ஜென்மம் உன்னைப் பாடும்
உன்னோட பாட்டுக்காரன் பாட்டும்
என் மனசேனோ கிறங்குதடி
சிறகடிச்சுப் பறக்குதடி

(மதுர மரிக்கொழுந்து)

படம்: எங்க ஊரு பாட்டுக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ, சித்ரா

***

விரும்பிக் கேட்டவர்கள்: விவேகானந்தன், மதுரையம்பதி

485. ஊரு விட்டு ஊரு வந்து

Ooru Vittu - M. Vasudevan

ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பண்ணாதீங்க
பேரு கெட்டு போன பின்னால்
நம்ம பொழப்பு என்னாவதுங்க
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேரு வீடு உங்களை நம்பி
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேரு வீடு உங்களை நம்பி
(ஊரு விட்டு..)

அண்ணாச்சி என்னை எப்போதும் நீங்க தப்பாக எண்ண வேண்டாம்
பொண்ணால கெட்டு போவேனோ என்று ஆராய்ச்சி பண்ண வேண்டாம்
ஊருல உலகத்துல எங்க கதை போலெதும் நடக்கலையா?
வீட்டையும் மறந்துப்புட்டு வேற ஒரு நாட்டுக்கு ஓடவில்லையா?
மன்மத லீலையை வென்றவர் உண்டோ
இல்லே இல்லே..
மங்கயில்லாத ஓர் வெற்றியும் உண்டோ..
இல்லே இல்லே..
மன்மத லீலையை வென்றவர் உண்டோ
மங்கயில்லாத ஓர் வெற்றியும் உண்டோ..
காதல் ஈடேற பாடு என் கூட
(ஊரு விட்டு..)

ஆணா பொறந்தா எல்லாரும் உன்னை அன்பாக எண்ண வேண்டும்
வீணா திரிஞ்சா ஆனந்தம் இல்ல வேறென்ன சொல்ல வேணும்?
வாழ்க்கைய ரசிக்கணும்ன்னா வஞ்சிக்கொடி வாசனை பட வேண்டும்..
வாலிபன் இனிக்கனும்ன்னா
உன்னை கொஞ்சம் ஆசையில் தொட வேண்டும்
கன்னியை தேடுங்க கற்பனை வரும்
ஆமா ஆமா
கண்டதும் ஆயிரம் காவியம் வரும்
ஆமா ஆமா
கன்னியை தேடுங்க கற்பனை வரும்
கண்டதும் ஆயிரம் காவியம் வரும்
காதல் இல்லாமல் காதல் பூமியில் ஏது?
(ஊரு விட்டு..)

படம்: கரகாட்டக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: மலேசிய வாசுதேவன்

484. நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்


Netru Oruthara - Pudhu Pattu

நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

காத்து...குளிர் காத்து
கூத்து...என்ன கூத்து

சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது
பாட்டுத்தான்...புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க...கூட்டுத்தான்
இணஞ்சதொரு...கூட்டுத்தான்
பாட்டுத்தான்...புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க...கூட்டுத்தான்
எணஞ்சதொரு...கூட்டுத்தான்

நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

ஆத்தங்கரையோரம் பூத்திருக்கும் அழகுப் பூவாசம்
பாத்து மனசோரம் பசிச்சிருக்கும் பல நாள் உன் நேசம்
அடி ஆத்தி ஆத்திமரம் அரும்பு விட்டு ஆரம் பூத்தமரம்
மாத்தி மாத்தி தரும் மனசு வச்சு மால போட வரும்
பூத்தது பூத்தது பார்வ போர்த்துது போர்த்துது போர்வ
பாத்ததும் தோளில தாவ கோர்த்தது கோர்த்தது பூவ

போட்டா...கண போட்டா
கேட்டா...பதில் கேட்டா

வழி காட்டுது...பலசுகம் கூட்டுது...வருகிற…

பாட்டுத்தான்...புதுப்பாட்டுத்தான்
தனக்குத்தக்க...கூட்டுத்தான்
எணஞ்சதொரு...கூட்டுத்தான்

நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்
ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

அழகா சுதி கேட்டு நீ நடக்கும் நடையில் ஜதி கேட்டு
படிப்பேன் பல பாட்டு தினம் நடக்கும் காதல் விளையாட்டு
இந்த மானே மரகதமே ஒன்ன நெனச்சு நானே தினம் தினமே
பாடும் ஒரு வரமே எனக்களிக்க வேணும் புது ஸ்வரமே
பாத்தொரு மாதிரி ஆச்சு ராத்திரி தூக்கமும் போச்சு
காத்துல கரையுது மூச்சு காவிய மாகிட லாச்சு

பாத்து...வழி பாத்து
சேத்து...ஒன்ன சேத்து
அரங்கேத்துது மனசுல பூத்தது பூத்தது

பாட்டுத்தான்…ஹே ஹே ஹே...புதுப்பாட்டுத்தான்
தனக்குத்தக்க...கூட்டுத்தான்... ஹே ஹே ஹே...
எணஞ்சதொரு...கூட்டுத்தான்

நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்
ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

காத்து...குளிர் காத்து
கூத்து...என்ன கூத்து

சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது

பாட்டுத்தான்...புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க...கூட்டுத்தான்
எணஞ்சதொரு...கூட்டுத்தான்
பாட்டுத்தான்...புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க...கூட்டுத்தான்
எணஞ்சதொரு...கூட்டுத்தான்

படம்: புதுப்பாட்டு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, சித்ரா

Wednesday, June 4, 2008

483.வாசலிலே பூசணிப்பூ வச்சிப்புட்டா வச்சிப்புட்டா

ஆண் :வாசலிலே பூசணிப்பூ வச்சிப்புட்டா வச்சிப்புட்டா நேசத்திலே
என் மனசை தச்சிப்புட்டா தச்சிப்புட்டா
பூவும் பூவும் ஒன்னு கலந்தது இப்போது
தேனும்பாலும் பொங்கி வழியுது இப்போது

பெண்: வாசலிலே பூசணிப்பூ வச்சதென்ன வச்சதென்ன
நேசத்திலே என் மனசை தச்சதென்ன தச்சதென்னபெண்: பிரிச்ச போதும் பிரியவில்லையே சொந்தம் நானே
வழிய மறந்த குயிலும் சேர்ந்தது ஆஆஆ

ஆண்: கோலம்போட்டு சாடை சொன்னது நானே
கோடு நமக்கு யாரு போட்டது..

பெண்: நெஞ்சுக்குள்ளே நெஞ்ச வச்சு உள்ளதெல்லாம் கண்டுகிட்டேன்..

நெத்தியிலே பொட்டுவச்சு உங்களைத்தான் தொட்டுக்கிட்டேன்..

ஆண்: நானும் நீயும் ஒன்னாசேந்தா நாளும் நாளும் சந்தோஷம்..

பெண்: ராகம் தாளம் சேரும் நேரம் ஆனந்தம் பாடும் சங்கீதம்..

(வாசலிலே பூசணிப்பூ )ஆண்: மீண்டும் மீண்டும் கூடி சேருது பொன்னிஆறு

மோகத்தோடு கூடி பாடுது ஆஆஅ

பெண்: கேட்டுகேட்டு கிறங்கத்தோணுது உங்க பாட்டு..

கேள்வி போல என்னை வாட்டுது

ஆண்: ஆத்து வெள்ளம் மேட்ட விட்டு

பள்ளத்துக்கு ஓடிவரும்

ஆசையிது தேடிக்கிட்டு ஆனந்தமாய் பாடிவரும்

பெண்: ஏதோ ஒன்னை சொல்லிச்சொல்லி

என்னை இப்ப கிள்ளாதே

பெண்: போதும் போதும் கண்ணால்

என்ன கட்டி இழுக்கற செண்பகமே!( வாசலிலே பூசணிப்பூ)Vaasalile poosani Poo - janaki ,manoபாடலைப்பாடியோர் : ஜானகி , மனோ
இசை : இளையராஜா
திரைப்படம் : செண்பகமே செண்பகமே

482. குடகு மலை காற்றில் வரும்


Kudugu Malai - M. Vasudevan, Chitra

குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி
எதோ நினவுதான் உன்னை சுத்தி பறக்குது
என்னோட மனது தான் கண்ட படி தவிக்க்து
ஒத்த வழி என் வழி தானே மானே
(குடகு மலை..)

மானே மயிலே மரகத குயிலே
தேனே நான் பாடும் தென்மாங்கே
பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே
காதில் கேட்டாயோ என் வாக்கே
உன்னை எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னந் தனியாக நிற்க்கும் தேர் போல ஆனேன்
பூ புத்த சோலையிலே பொன்னான மாலையிலே
நீ வந்த வேளையிலே மயிலே
நீர் பூத்த கண்ணு ரெண்டு
நீங்காத ராகம் கொண்டு பாட்டு பாடுது
(குடகு மலை..)

மறந்தால் தானே நினைக்கனும் மாமா
நின்னைவே நீ தானே நீ தானே
மனசும் மனசும் இணைந்தது மாமா
நினச்சு தவிச்சேனே நான் தானே
சொல்லி விட்ட பாட்டு தெற்கு காற்றோடு கேட்டேன்
தூது விட்ட ராசா மனம் தடுமாற மாட்டேன்
ஊரென்ன சொன்னால் என்ன
ஒன்னாக நின்னா என்ன
உம் பேரை பாடி நிப்பேன் மாமா
தூங்காம உன்னை ந்ண்ணி துடிச்சாலே இந்த கன்னி மாமா
(குடகு மலை..)

படம்: கரகாட்டக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: சித்ரா, மலேசிய வாசுதேவன்

481. காட்டு குயிலு மனசுக்குள்ள - தளபதிகாட்டு குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்லை பாடத்தான்
தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலைவிட்டு கச்சைகட்டு ஆடத்தான்
(காட்டுக்குயிலு... )
எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே உல்லாசம் நெஞ்சத்திலே...
(காட்டுக்குயிலு... )

போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழச எல்லாம் சுட்டுத்தள்ளு
புதுசா இப்போ பொறந்தோமுன்னு எண்ணிக்கொள்ளடா டோய்
பயணம் எங்கே போனால் என்ன பாதை நூறு ஆனால் என்ன
தோட்டம் வெச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா டோய்
ஊதக்காத்து வீச உடம்புக்குள்ள கூச
குப்பைக்கூளம் பத்தவெச்சு காயலாம்
தை பொறக்கும் நாளை.. விடியும் நல்ல வேளை
பொங்கப்பாலு வெள்ளம் போல பாயலாம்
அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கறும்பு
அத்தனையும் தித்திக்கிற நாள் தான்..

(காட்டுக்குயிலு... )

பந்தம் என்ன சொந்தம் என்ன போனா என்ன வந்தா என்ன
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நானில்லே..
பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க
அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லை
உள்ள மட்டும் நானே உசிரைக் கூடத்தானே
என் நண்பன் கேட்டா வாங்கிக்கோன்னு சொல்லுவேன்..
என் நண்பன் போட்ட சோறு நிதமும் திண்ணேன் பாரு
நட்பைக்கூட கற்பை போல எண்ணுவேன்
சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகம் இட்டு தாளம் இட்டு
பாட்டு பாடும் வானம்பாடி நான் தான்..

படம் : தளபதி
இசை : இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ்

*****************

இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரு. எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

480. சொர்கமே என்றாலும்


SorgameEnralum - Ilaiyaraja

ஹேய் தந்தன தந்தன தந்தா
சொர்கமே என்றாலும்
அது நம் ஊரைப் போல வருமா?
அட என் நாடு என்றாலும்
அது நம் நாட்டுக் கீடா ஆகுமா?
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா?
(சொர்கமே..)

ஏரிக்கரை காத்தும் ஏலேலோ பாட்டும்
இங்கே ஏதும் கேட்கலையே
பாடும் குயில் சத்தம் ஆடும் மயில் நித்தம்
பார்க்க ஒரு சோலை இல்லையே
வெத்தலைய மடிச்சு மாமன் அதை கடிச்சி
துப்ப ஒரு வழியில்லையே
ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கி குளிக்க
அட ஒரு ஓடை இல்லயே
இது ஊரு என்ன ஊரு நம் ஊரு ரொம்ப மேல்
அட ஓடும் பல காரு வீண் ஆடம்பரம் பாரு
ஒரு தாகம் தீர்க்க அது மோரு
(சொர்கமே..)

மாடு கண்ணு மேய்க்க மேயிறதைப் பார்க்க
மந்தவெளி இங்கே இல்லையே
ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட
அரசமரம் மேடை இல்லையே
காளை ரெண்டு பூட்டி கட்ட வண்டி ஓட்டி
கானம் பாட வழியில்லையே
தோழிகளை அணைச்சு சொல்லி சொல்லி ரசிச்சு
ஆட்டம் போட முடியலையே
ஒரு எந்திரத்தை போல அட இங்கு உள்ள வாழ்க்கை
இத எங்கே போயி சொல்ல மனம் இஷ்டப்படவில்லை
நம் ஊரை போல ஊரும் இல்லை
(சொர்கமே என்றாலும்..)

படம்: ஊரு விட்டு ஊரு வந்து
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S ஜானகி, இளையராஜா

Last 25 songs posted in Thenkinnam