Thursday, June 26, 2008

535.பொங்கும் கடலோசை...

பொங்கும் கடலோசை
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை

பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும் அதிகாலையில்
மன்னவன் ஓடம் பார்த்ததோ
மயக்கம் கொண்டு ஆடுதோ
சாதனை செய்கையில் சோதனை தோன்றினால்
மயங்குவதேனோ -
பொங்கும் கடலோசை

தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
வெள்ளி அலை வந்து மோதலாம்
செல்லும் வழி திசை மாறலாம்
பொன் மலை காற்று வீசினால்
படகு தாளம் போடலாம்
நீரலை... மேடையில்... மீனவன் ...
நாடகம் நடிப்பதும் ஏனோ
பொங்கும் கடலோசை

தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
பொங்கும் கடலோசை
கொஞ்சும் தமிழோசை

PongumKadalosai.mp3 -

பாடலைப்பாடியவர் :வாணி ஜெயராம்
திரைப்பட ம் : மீனவநண்பன்
இசையமைப்பாளர்: எம்.எஸ்.வி
பாடலாசிரியர்:வாலி
வருடம்:77

3 Comments:

லதானந்த் said...

அன்பார்ந்த கய்ல்விழி முத்துலட்சுமி அவர்களுக்கு!

இன்றுதான் இந்தத் தளம் வந்தேன். பாடல்கள் மற்றும் பதிவா அல்லது வேறு செய்திகளும் எழுத்கிறீர்களா?

முகவை மைந்தன் said...

இலங்கை வானொலி நாட்களை நினைவுபடுத்தும் இன்னொரு பாட்டு. கேட்டு இப்பக்கி 20 ஆண்டுகள் இருக்கும். நன்றி.

பின்னூட்டங்கள் கவனிக்கப்படுவதில்லையோ? லதானந்த்துக்கு விடை தருவது யாராம்?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

லதானந்த் சார்.. இது கூட்டுப்பதிவு..பாடல்வரிகள் தரூவதுதான் நோக்கம்.. பாடலுக்கான ஒலிவடிவம் உண்டு.. சில சமயம் ஒளிவடிவமும் உண்டு.. வேறு செய்திகள் வெகுசிலசமயமே உண்டு..

-------------
முகவை மைந்தன் நன்றி.. கூட்டுப்பதிவாதலால்.. பின்னூட்டம் உடனே பதில் சொல்லாமல் விட்டுவிட்டது .. :(

Last 25 songs posted in Thenkinnam