சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையோடு என்
முன்னே யார் வந்தது
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
கையின்றே செங்காந்தழ் மலரே
நீ சொன்னால் நான் நம்பவோ
கால் என்றே செவ்வாழை இலைகளை
நீ சொன்னால் நான் நம்பி விடவோ
மை கொஞ்சம்.......
பொய் கொஞ்சம்........
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்திலே....
அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா..அ...
கொஞ்சம் தா..ஆ..
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்திலே
ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே அனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டு...ஆ
மெய் தொட்டு..ஆ
சாமத்திலே தூங்காத விழிகளில்
சந்தித்தேன் என்னென்ன மயக்கம்
தமிழ் சங்கத்திலே பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
படம்: ஆட்டோ ராஜா
இசை: இளையராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்கள்: இளையராஜா, ஜானகி
விரும்பிக் கேட்டவர்: ஜெயராதாசிங்
Monday, June 23, 2008
527. சங்கத்தில் பாடாத கவிதை
பதிந்தவர் ஜே கே | J K @ 9:52 AM
வகை 1980's, S ஜானகி, இளையராஜா, கங்கை அமரன்
Subscribe to:
Post Comments (Atom)
23 Comments:
கானா பிரபா பல மொழிகளில் வெளியான பாடல்களை ஒருங்ஙகே தந்திருந்தார். மீண்டும இங்கே கேட்கக் கிடைத்ததில் மகிழ்ச்சி. ஜேகே, நிறைய பிழைகள் பாடல் வரிகளில். ஒருமுறை சரி பாருங்களேன்.
பிழை நீக்கிய பாடல் வரிகள்..
சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையோடு என்
முன்னே யார் வந்தது
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
கையென்றே செங்காந்தள் மலரை
நீ சொன்னால் நான் நம்பவோ
கால் என்றே செவ்வாழை இணைகளை
நீ சொன்னால் நான் நம்பி விடவோ
மை கொஞ்சம்.......
பொய் கொஞ்சம்........
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்தில்…..
அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா..ஆ…
கொஞ்சத்தான்..ஆ..
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்தில்…..
ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டும்...ஆ
மெய் தொட்டும்..ஆ
சாமத்தில் தூங்காத விழியின்
சந்திப்பில் என்னென்ன நயனம்
தமிழ் சங்கத்திலே பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
மெய் என்றால் உண்மை.
மெய் பொய் என்று இருக்க வேண்டும்
இதுபோன்ற வரிகள் என்றும் கிடைக்காத வரம்
மெய் என்றால் உடல் என்று பொருள்
புலமை பித்தன் வரிகள்,,
அந்திப்போர் காணாத இளமை, அந்திப்போர் என்றால் என்ன பொருள் ???
மெய் என்னும் சொல்லுக்கு உடல் என்ற பொருளும் உண்டு
முதுமையின் உடல்நலக் குறைப்பாட்டும் இன்ன பிற நோய்களால் ஏற்படும் பாதிப்பிற்கு உள்ளாகாத இளமையை குறிக்கிறது
அருமை சார் மிக்க நன்றி
பிழையாய் இருக்கிறதே என நினைத்தேன்
கீழே அதை திருப்பி சீராக இந்த வேலையை முடித்து விட்டீர்கள் நன்றி
எழுத்துப் பிழைகளை திருதுங்கள்.
அந்தி என்பது பகல் மறைந்து இரவான நேரம் அந்த வேளையில் ஆண் பெண் கூடல் இருக்கும் அதைத்தான் இந்த இடத்தில் அந்திப்போர் என்கிறார். அந்தப்போர்களில் காணாத ஒரு இளமை ஆடட்டும் என் கைகளில்.
Really feel excellent lyrics with raja sir and janaki madam voice also.
காலத்தால் மூவாத உயர் தமிழ் என்றால் என்ன?
மூவாத.... முதுமை ஆகாத...
https://youtu.be/GJKky4yWNLQ
இளையராஜா அவர்களும் ஜானகி அவர்களும் இணைந்து பாடிய இந்த பாடல் வரிகளை இரவு 11 மணிக்குப்பின் கண்களை மூடிக்கொண்டு கேட்டு ரசியுங்கள். மிக அற்புதமான பாடல்.
அங்கத்தில் யார் தந்தது. பொருள் கூற முடியுமா
அந்திப்போர்.என்பது.மாலைக்குபின்.வறும்.கலவி
உடல் உறவை கவிதை நடையோடு கூறும் பாடல்...
சந்தத்தில் மாறாத நடையொடு என்....
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது
அங்கம்- உடல் (உறுப்பு)
சங்ககாலத்தில் கூட இல்லாத அழகிய கவிதைகளை உன் உடலில் தந்தது யார்? எனப் பொருள்படும் (dheenasmiles@gmail.com)
அருமையோ.. அருமை..
Post a Comment