Friday, June 6, 2008

487. செண்பகமே செண்பகமே


Senbakame... - Enga Ooru Paattukaaran

பட்டு பட்டு பூச்சி போல எத்தனையோ வண்ணம் மின்னும்
நட்டு வச்சேன் நான் பறிக்க நான் வளர்த்தேன் நந்தவனம்
கட்டி வைக்கும் என் மனசு வாசம் வரும் மல்லிகையும்
தொட்டு தொட்டு நான் பறிக்க துடிக்குதந்த செண்பகம்

செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே

உன் பாதம் போகும் பாத நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசப்பட்டு காத்து காத்து நின்னேனே
உன் பாதம் போகும் பாத நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசப்பட்டு காத்து காத்து நின்னேனே
உன் முகம் பாத்து நிம்மதி ஆச்சு
என் மனம் தானா பாடிடலாச்சு
என்னோட பாட்டு சத்தம் தேடும் உன்ன பின்னாலே
எப்போதும் உன்னத்தொட்டு பாடப்போறேன் தன்னால
(செண்பகமே..)

மூணாம்பிறையைப் போல தானும் நெற்றி பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும் இந்த பாட்டோட
மூணாம்பிறையைப் போல தானும் நெற்றி பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும் இந்த பாட்டோட
கருத்தது மேகம் தல முடி தானோ
இழுத்தது என்ன பூவிழி தானோ
எள்ளுப்பூ பற்றி பேசி பேசி தீராது
உன்பாட்டுக்காரன் பாட்டு உன்ன விட்டு போகாது
(செண்பகமே...)

படம்: எங்க ஊரு பாட்டுக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: P சுசீலா

3 Comments:

வல்லிசிம்ஹன் said...

அருமையோ அருமை. நன்றி.

சதங்கா (Sathanga) said...

இதே போல் ஒரு பாட்டு மனோவும் பாடியிருபார் என்று நினைக்கிறேன்.

நல்ல பாடல் தந்தமைக்கு நன்றி.

Rajan Kanyakumari said...

இந்தப் பாடலை பாடியது சுனந்தா நண்பரே

நல்ல பாடல் தந்தமைக்கு நன்றி.

Last 25 songs posted in Thenkinnam