சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
கன்று தாயை விட்டு சென்றபின்னும்
கன்று தாயை விட்டு சென்றபின்னும்
அது நின்ற பூமி தன்னை மறப்பதில்லை
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
அறிவுலகம் உன்னை அழைக்கின்றது
ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது
அரண்மனை வாசல் திறக்கின்றது
அரண்மனை வாசல் திறக்கின்றது
அங்கே ஆணவம் புன்னகை புரிகின்றது
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
நீ இருக்கும் இடத்தில் நானிருப்பேன்
உன் நிழலிலும் பொருளாக குடியிருப்பேன்
தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை - மகனே
தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை- இந்த
தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை
எந்த சபையிலும் உனக்கு நடுக்கமில்லை
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
விரும்பிக்கேட்டவர்: suvek
பாடியவர் : கே.பி. சுந்தராம்பாள்
திரைப்படம்: மகாகவி காளிதாஸ்
Monday, June 2, 2008
478.சென்று வா மகனே! சென்று வா !
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 2:53 PM
வகை KP சுந்தராம்பாள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment