Tuesday, June 17, 2008

510. சித்திரை செவ்வானம் சிரிக்கக்கண்டேன்..

தையரத்தைய்யா தையரத்தைய்யா (4)
சித்திரை செவ்வானம் சிரிக்கக்கண்டேன்..
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
குய்ய இலவாலி தண்ணு நிலவாலம்
தையரத்தய்யா தையரத்தைய்யா
தையரதையர தையரத்தய்யா( சித்திரை செவ்வானம்)

மைய்யை இட்ட கண்ணாலே மையல் தந்த நேரம்
முதல்முதலா தொட்டேனே வாய்க்காக்கரை ஓரம்
சாயாமல் சாய்ந்தாலே மார்பிலே
அள்ளிக்கட்டும் கண்டாங்கி அரைகுறையா ஒதுங்க
அலுங்காம அணைச்சாளே வெதுவெதுப்பா மயங்க
மஞ்சள் கண்ட கைகாரி
மயக்கிவிட்டா என்னை
ஏகுய்யஇலவாலி தன்னு நிலவாலம்

தையரத்தைய்யா தையரத்தய்யா (சித்திரை செவ்வானம்)
போய்வரவா என்றாலே ஏக்கத்துடன் பார்ப்பா
நான் திரும்பி வரும்வரையில் கரையினில் நிப்பா
உணவில்லை உறவில்லை வாடுவாள்
என் முகத்தைப்பார்த்ததுமே துள்ளித்துள்ளி வருவா
முத்தான முத்தங்களை அள்ளி அள்ளித்தருவா
சொக்கி சொக்கி சிரிப்பாளே சொக்கத்தங்கம் போலே
குய்ய இலவாலி தன்னு நிலவாலம்
தையரத்தைய்யா (சித்திரை செவ்வானம்.)



யாராவது இந்த குய்ய இலவாலி ங்கற வரிக்கான சரியான எழுத்துக்களை சொல்லுங்கப்பா.. எதோ எழுதிட்டேன்.. காதுல கேட்டது இதுதான்..

வாரம் :ஜெயச்சந்திரன் வாரம்
பாடியவர் : ஜெயச்சந்திரன்
இசை :இளையராஜா
திரைப்படம்: காற்றினிலே வரும் கீதம்

1 Comment:

pudugaithendral said...

புலிய இல வாரித் தண்டுல வாலம் தய்யரத்தய்யா

இதுதான் சரின்னு நினைக்கிறேன்.

Last 25 songs posted in Thenkinnam