Sunday, February 27, 2011

வெண்மேகம் பெண்ணாக உருவானதோவெண்மேகம் பெண்ணாக உருவானதோ
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன?
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

வெண்மேகம்…

மஞ்சள் வெயில் நீ..
மின்னல் ஒளி நீ..
உன்னைக் கண்டவரை
கண் கலங்க நிற்க வைக்கும் தீ…
பெண்ணே என்னடி.. உண்மை சொல்லடி..
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி…
தேவதை வாழ்வது வீடில்லை கோயில்
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
ஒன்றா.. இரண்டா.. உன் அழகை பாட
கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்­ரில் ஆனந்தம் நான் காண்கிறேன்
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

எங்கள் மனதை கொள்ளை அடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும்
எங்கு சென்று படித்தாய்?
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லக்கினில்
தூக்கி செல்ல கட்டலைகள் விதித்தாய்
உன் விரல் பிடித்திடும்
வரம் ஒன்று கிடைக்க…
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ…
உன் பாதத்தில் மண்ணாகுமோ…

வெண்மேகம்…

படம்: யாரடி நீ மோகினி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ஹரிஹரன்

Saturday, February 26, 2011

எங்கேயோ பார்த்த மயக்கம்எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாய்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
இன்னும் கண்கள் திறக்காத செல்வம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்…
அறிவை மயக்கும் மாய தாகம்
இவளைப் பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்

கனவுகளில் வாழ்ந்த நாளை
கண் எதிரே பார்க்கிறேன்
கதைகளிலே கேட்டப் பெண்ணா
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
அங்கும் இங்கும் ஓடும் கால்கள்
அசைய மறுத்து வேண்டுதே
இந்த இடத்தில் இன்னும் நிற்க
இதயம் கூட ஏங்குதே..
என்னானதோ… ஏதானதோ…
கண்ணாடி போல் உடைந்திடும் மனது
கவிதை ஒன்று பார்த்து போக
கண்கள் கலங்கி நானும் ஏங்க
மழையின் சாரல் என்னைத் தாக்க
விழிகள் எல்லாம் கேள்வி கேட்க

எங்கேயோ பார்த்த…

ஆதி அந்தமும் மறந்து
உன் அருகில் கரைந்து நான் போனேன்
ஆண்கள் வெக்கபடும் தருணம்
உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
இடி விழுந்த வீட்டில் இன்று
பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி
கடவுள் பதில் கேக்கிறதே
வியந்து வியந்து உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
இந்த நிமிடம் மீண்டும் பிறந்து
உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து…

படம்: யாரடி நீ மோகினி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
படியவர்: உதித் நாராயன்

Friday, February 25, 2011

பாட்டாலே புத்தி சொன்னார்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்

பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுபட்டேன்
அந்த பாட்டுகள் பலவிதம்தான்
(பாட்டாலே..)

காளையர்கள் காதல் கன்னியரை
கவர்ந்திட பாடல் கேட்டார்கள்
ஏழைகளும் ஏவல் அடிமைகளாய்
இருப்பதை பாட சொன்னார்கள்
கதவோரம் கேட்டிடும் கட்டில் பாடலின்
மெட்டு போட சொன்னார்கள்
தெருவோரம் சேர்ந்திட திருவாசகம்
தேவாரம் கேட்டார்கள்
நான் பாடும் பாடல்கள் அந்த ஏடுகள்
அதை எழுதினாலும் முடிந்திடாது
(பாட்டாலே..)

பூஜையில் குத்துவிளக்கேற்றி வைத்து
அதுதான் நல்லதென்றார்கள்
படத்தில் முதல் பாடலை பாட வைத்து
அது நல்ல ராசி என்றார்கள்
எத்தனையோ பாடுகளை அதை பாடல்களாய்
நான் விற்றேன் இதுவாரியில்
அத்தனையும் நல்லவையா அவை கெட்டவையா
அறியேன் உண்மையிலே
எனக்கு தான் தலைவர்கள் என் ரசிகர்கள்
அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்
(பாட்டாலே..)

படம்: கரகாட்டக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜா

Thursday, February 24, 2011

பூ மாலை வாங்கிபூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
தினம் தினம் பூ மாலை வாங்கி வந்தான்
பூக்கள் இல்லையே
செவி இல்லை இங்கொரு இசை எதற்கு
விழி இல்லை இங்கொரு விளக்கெதற்கு
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே

கையில் கிண்ணம் பிடித்து விட்டான்
இனிக்கின்ற விஷத்துக்குள் விழுந்துவிட்டான்
ராகம் தாளம் மறந்துவிட்டான்
ரசிகரின் கடிதத்தை கிழித்துவிட்டான்
கடற் கரை எங்கும் மணல்வெளியில்
காதலி காலடி தேடினான்
மோகனம் பாடும் வேளையிலும்
சிந்துபில் ராகம் பாடினான்
விதி எனும் ஊஞ்சலில் ஆடினான்
போதையினால் புகழ் இழந்தான்
மேடையில் அணிந்தது வீதியில் விழிந்திட
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே

நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான்
குடிக்கின்ற கோப்பையை உடைத்துவிட்டான்
மீண்டும் அவள் முகம் நினைத்துவிட்டான்
சபதத்தை அவன் இன்று உடைத்துவிட்டான்
இசைக்கொரு குயிலென்று.. அஹ.. அஹ..
இசைக்கொரு குயிலென்று பேரெடுத்தான்
இருமலை தான் என்று சுரம்பதித்தான்
மனிதர்கள் இருப்பதை மறந்துவிட்டான்
மானத்தின் மானத்தை வாங்கிவிட்டான்
போதையின் பாதையில் போகின்றான்
தன்முகமே தான் மறந்தான்
சூடவும் தோளில்லை ஆளில்லை இவன் அன்று

பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
தினம் தினம் பூ மாலை வாங்கி வந்தான்
பூக்கள் இல்லையே
செவி இல்லை இங்கொரு இசை எதற்கு
விழி இல்லை இங்கொரு விளக்கெதற்கு
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே..

படம்: சிந்து பைரவி
இசை: இளையராஜா
பாடியவர்: KJ ஜேசுதாஸ்
வரிகள்: வைரமுத்து

Wednesday, February 23, 2011

கோரே கோகோரேகோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே
கோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே

கொட்டு கொட்டு பூவே உன் கண்ணில் மழையை வைத்தாய்
ஏப்ரல் மாத வெயிலை உன் சொல்லில் ஏன் வைத்தாய்
கொட்டு கொட்டு பூவே உன் கண்ணில் மழையை வைத்தாய்
ஏப்ரல் மாத வெயிலை உன் சொல்லில் ஏன் வைத்தாய்

உள்ளே தண்ணீர் வெளியே வெப்பம்
ரெண்டும் சேர்ந்தது பெண்ணினமே
நீ தீயை எறிந்தால் தண்ணீர் ஆவேன்
தள்ளி இருப்பது கண்ணியமே
மதனா மதனா நான் மஞ்சம் வந்த தங்க தேரா
கோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே
கோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே

முதல் முத்தம் கொடுத்தது எவிடம்
முதல் மொட்டு உடைவது எவ்விதம்
சரியாக சொல்லி விட்டால் அன்பு
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு

முதல் முத்தம் கொடுத்தது எவிடம்
முதல் மொட்டு உடைவது எவ்விதம்
சரியாக சொல்லி விட்டால் அன்பு
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு

இதழில் மேலே பாய்ந்த என முத்தம்
இடறி விழுந்தது கன்னத்தில்
ரெண்டோ மூன்றோ தோல்வி அடைந்து
மொட்டு உடைந்தது வேகத்தில்

ரதியே ரதியே நான் சொல்லிய உண்மைகள் நூற்றுக்கு நூறு
கோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே
கோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே

Oh Girl My Love Is True
Just Turn And Leave Me Alone You
If You Want To Be Mine
If You Want To Be Mine
Ah Ah Ah Ah

முதல் முறை பார்த்தது எந்த நாள்
உன்னில் முதல் விரல் படித்து எவ்விடம்
சரியாக சொல்லி விட்டால் அன்பு
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு

முதல் முறை பார்த்தது எந்த நாள்
உன்னில் முதல் விரல் படித்து எவ்விடம்
சரியாக சொல்லி விட்டால் அன்பு
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு

ஆசை பார்வை பார்த்து கொண்டது
அக்டோபர் மாதம் ௭’யாம் நாள்
முதல் விரல் பதிந்தது எவ்விடம் என்பதை
என ஆடைகள் அறியும் நானறியேன்
மதனா மதனா
நான் சொல்லிய உண்மைகள் நூற்றுக்கு நூறு ..

கோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே
கோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே

படம்: மாஸ்கோவின் காவேரி
இசை: தமன்
பாடியவர்கள்: கார்த்திக், சுசித்ரா

Tuesday, February 22, 2011

தேன் முத்தம் சிந்த

தேன் முத்தம் சிந்த ஏன் நேரம் இல்லை
உன் அலட்சியம் பிடிக்கவில்லை
சிலுமிஷம் பண்ண உன் சிருந்தாடி கேட்டேன்
நீ Shave செய்தால் பிடிக்கவில்லை

என் காவேரி உன் தொல்லை அன்புதொல்லை
என் காதலி உன் பிள்ளை கோபம் பிடிக்கவில்லை
என் காவேரி உன் தொல்லை அன்புதொல்லை
உன் அன்பிலே என் வன்முறை
உன் ஆசை இம்சை பிடிக்கவில்லை

தேன் முத்தம் சிந்த சிந்த.. என் காவேரி..
தேன் முத்தம் சிந்த ஏன் நேரம் இல்லை
உன் அலட்சியம் பிடிக்கவில்லை

அஞ்சல் தலை முதிரைபோல
அன்பால் ஒரு முத்தம் வைத்தேன்
ஆனால் நீ துடைத்து பிடிக்கவில்லை
அழகான எசாம் வைத்து
அன்போடு பருகத்தந்த
தேநீரை கொட்டியது பிடிக்கவில்லை

காக்க வைத்து பெண் கயுதருது
கயுதருது பின் காதலித்து
நீ போடும் ரெட்டை வேஷம்
பிடி பிடி பிடிக்கவில்லை

தேன் முத்தம் சிந்த ஏன் நேரம் இல்லை
உன் அலட்சியம் பிடி பிடி பிடிக்கவில்லை

கூடல் அதுகூடல் இல்லை
காதல் இடமாறும் வேஷம்
உள்ளத்தால் உன்னை என்றும் வெறுக்கவில்லை
காமம் அதுகூடல் தேடும்
காதல் அது ஊடல் தேடும்
கண்ணோடு இமைகள் மோதி காயமில்லை
காவேரிபோல் நாம் பிரிந்திருந்தோம்
கொள்ளிடத்தில் வந்து கூடிகொண்டோம்
நீரென்றும் நீரடித்து பிரி பிரி பிரிவதில்லை

தேன் முத்தம் சிந்த..
தேன் முத்தம் சிந்த..
தேன் முத்தம் சிந்த ஏன் நேரம் இல்லை
உன் அலட்சியம் பிடிக்கவில்லை
சிலுமிஷம் பண்ண உன் சிருந்தாடி கேட்டேன்
நீ Shave செய்தால் பிடிக்கவில்லை

படம்: மாஸ்கோவின் காவேரி
இசை: தமன்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், சுசித்ரா

Monday, February 21, 2011

ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது


ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது(2)
ஆடும் காத்துல கீத்துல
தாளம்போட்டு - ஆத்து மேட்டுல ஒரு பாட்டுகேக்குது
(ஆத்து மேட்டுல)

காட்டுல கட்டில் ஒன்னு போடவா
கையிலே கட்டிக்கொண்டு ஆடவா

ஏஹே என்ன ஆசை
ஏக்கம் வந்து பேச
கண்ணுக்குள்ள மோகம் தோணுது
கன்னிப்பொண்ண காணும் போது (ஆத்து மேட்டுல)

கேக்கவா ஒன்னே ஒன்னு கேக்கவா
சேர்க்கவா கையில் ஒன்ன சேர்க்கவா
ஊஹூம்மாட்டேன் மாட்டேன்
ஏதும் பேச மாட்டேன்

சொல்லச்சொல்ல வேகம் ஏறுது
தூக்கிக்கிட்டு போகப்போறேன் ( ஆத்து மேட்டுல)பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி
திரைப்படம் : கிராமத்து அத்தியாயம்
இசை : இளையராஜா

ஆகாயம் பூமி என்றும் ஒன்றா?

ஆகாயம் பூமி என்றும் ஒன்றா?
நீ அந்த வானம்
நானிந்த பூமி
ஒன்றென்று யார் சொல்வார்

என்னை நானேஏ ஏ
கேட்கின்ற கேள்வி இது - நானே
கேட்கின்ற கேள்வி இது

சாமந்திப்பூவோ எட்டாத தூரம்
ஊமத்தம்பூவோ என் வீட்டின் ஓரம்
இதில் வாசம் இல்லை
என்னெஞ்சில் பாசம் இல்லை
அது பக்கம் இல்லை
நான் சூட யோகம் இல்லை
இது மேடை இன்றி ஆடும் நாடகம்
வானத்து மீனை
வலைபோடச் சொன்னால் நானெங்கு போவதம்மா?

(ஆகாயம் பூமி)
தேகங்கள் பேதங்கள் பேசும்
நாம் வாழும் நாட்டில்
ஏனிந்த காதல்
இது சேரிக்காற்று
ஊருக்கு ஆகாதம்மா
இது ஏரித்தண்ணீர்
முத்துக்கள் இங்கேதம்மா
கடல் மீனும் வானில் நீந்துமா
நீ கொண்ட காதல்
நேரல்ல கானல்
தாகத்தை தீர்ப்பதுண்டோ?

(ஆகாயம் பூமி)

திரைப்படம் : சாமந்திபூ
இசை: மலேசியா வாசுதேவன்
பாடியவர் : மலேசியா வாசுதேவன்

நீ ஒன்றும் ஆழகி இல்லைநீ ஒன்றும் ஆழகி இல்லை
ஆனால் என்னக்கு உன்னைபோல் இன்னொருத்தி அழகி இல்லை
நீ ஒன்றும் வெள்ளை இல்லை
ஆனால் என்னக்கு உன்னைபோல் கண்கூசும் வண்ணமில்லை
நீ ஒன்றும் உயரமில்லை
ஆனால் உன்னை அன்னாந்துப் பார்த்தாலே தாழவில்லை
நான் தூங்காமல் இருந்ததில்லை
ஆனால் பெண்ணே அக்டோபர் 7′ழு முதல் தூங்கவில்லை

வந்ததடி வந்ததடி வந்ததடி காதல்
சிந்துதடி சிந்துதடி சிந்துதடி ஜீவன்

நீ ஒன்றும் ஆழகி இல்லை
ஆனால் என்னக்கு உன்னைபோல் இன்னொருத்தி அழகி இல்லை
நீ ஒன்றும் வெள்ளை இல்லை
ஆனால் என்னக்கு உன்னைபோல் கண்கூசும் வண்ணமில்லை

கண்ணை பரிகுதடி கண்ணை பரிகுதடி
நித்தம் ஒரு மில்லி மீட்டர் வளர்கின்ற அழகு
நெஞ்சத்தை துளைகுதடி நெஞ்சத்தை துளைகுதடி
கோடி எட்டு வைத்தாலும் முட்டுகின்ற நிலவு
உன் கவனம் எந்தன் மார்பு துளைக்க
மௌனம் எந்தன் முதுகு துளைக்க
எங்கனம் எங்கனம் வாழ்வது
இன்னும் எத்தனை முறைதான் சாகுவது
நிலவை தின்று அமுதம் குடிக்கும்
அனுபவம் தானே காதல்
இல்லை நெருப்பைதின்று கண்ணீர் துடிக்கும்
அனுபவம் தான காதல் காதல் காதல்

வந்ததடி வந்ததடி வந்ததடி காதல்
சிந்துதடி சிந்துதடி சிந்துதடி ஜீவன்

உள்ளம் கருகுதடி உள்ளம் கருகுதடி
உன்னுடைய பிம்பம்கள் கண் மறையும்போது
தொல்லை பெருகுதடி தொல்லை பெருகுதடி
துப்பட்டா சில சமயம் தோளில் மறக்கும்போது
ஆயிரம் சொற்கள் நெஞ்சில் பிறக்க
ஒவ்வொரு சொல்லாய் உதடு இனிக்க
எங்கனம் எங்கனம் பேசுவது
நம்மிடைவெளி எப்படி தீருவது
நிலவை தின்று அமுதம் குடிக்கும்
அனுபவம்தானே காதல்
இல்லை நெருப்பைதின்று தண்ணீர் குடிக்கும்
அனுபவம் தான காதல் காதல் காதல்

வந்ததடி வந்ததடி வந்ததடி காதல்
சிந்துதடி சிந்துதடி சிந்துதடி ஜீவன்

நீ ஒன்றும் ஆழகி இல்லை
ஆனால் என்னக்கு உன்னைபோல் இன்னொருத்தி அழகி இல்லை
நீ ஒன்றும் வெள்ளை இல்லை
ஆனால் என்னக்கு உன்னைபோல் கண்கூசும் வண்ணமில்லை

படம்: மாஸ்கோவின் காவேரி
இசை: தமன்
பாடியவர்கள்: நவீன், ராகுல் நம்பியார்

Sunday, February 20, 2011

கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச

மலேசியா வாசுதேவன் அவர்களுக்கு அஞ்சலிகள்

கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச (கட்டி)

இந்த நேரம்
பொன்னான நேரம் ஒ ஒ
வந்த கல்யாண காலம் ஆ ஆ


இந்த நேரம் பொன்னான நேரம் ஒ ஒ
வந்த கல்யாண காலம் ஆ ஆ (கட்டி)


தனியா தவம் இருந்து இந்த ராசாத்தி கேட்டதென்ன
மனம் போல் வரம் கொடுத்து இந்த ராசாவும் வந்ததென்ன


கன்னி மலர்களை நான் பறிக்க
இன்பக் கலைகளை நான் படிக்க
கற்பு நிலைகளில் நான் பழக
அன்பு உறவினில் நான் மயங்க
கொத்து மலரென நீ சிரிக்க நீ சிரிக்க
மொட்டு மலர்ந்தது தேன் கொடுக்க தேன் கொடுக்க

மாறாது இது மாறாது
தீராது சுவை தீராது

ஆயிரம் காலமே(கட்டி)

அந்த சுகத்துக்கு நேரம் உண்டு
இந்த உறவுக்கு சாட்சி உண்டு
தொட்டு தொடர்வது சொந்தமம்மா
தொட்டில் வரை வரும் பந்தமம்மா

அன்புக் கரங்களில் நீ அணைக்க நீ அணைக்க
முத்துச் சரமென நீ சிரிக்க சிரிக்க

மாறாது இது மாறாது
தீராது சுவை தீராது
ஆயிரம் காலமே (கட்டி)


இந்த பொன்னான நேரம் ஒ ஒ
வந்த கல்யாண காலம் ஒ ஒ


திரைப்படம் : என் ஜீவன் பாடுது
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் , ஜானகி
இசை: இளையராஜாGet Your Own Hindi Songs Player at Music Plugin

நான் ஒரு சிந்துநான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
தந்தை இருந்தும் தாயும் இருந்தும்
சொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
தந்தை இருந்தும் தாயும் இருந்தும்
சொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல

இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ
இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ
விதியோடு நான் ஆடும் வெளையாட்ட பாரு
வெளையாத காட்டுக்கு வெத போட்டதாரு
பாடு படிச்சா சங்கதி உண்டு
என் பாடுக்குள்ளையும் சங்கதி உண்டு கண்டு பிடி

பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே
தலை எழுத்தென்ன என் மொதல் எழுத்தென்ன
தலை எழுத்தென்ன மொதல் எழுத்தென்ன சொல்லுங்கள்ளேன்

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
தந்தை இருந்தும் தாயும் இருந்தும்
சொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல

படம்: சிந்து பைரவி
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா

Saturday, February 19, 2011

பாடறியேன் படிப்பரியேன்பாடறியேன் படிப்பரியேன் பள்ளிக்கூடம்தானரியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்

பாடறியேன் படிப்பரியேன் பள்ளிக்கூடம்தானரியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்
ஏட்டுல எழுதவில்ல எழுதி வெச்சு பழக்கமில்ல
இலக்கணம் படிக்கவில்ல தலகனமும் எனக்கு இல்ல

பாடறியேன் படிப்பரியேன் பள்ளிக்கூடம்தானரியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்

அர்தத்த விட்டுப்புட்டா அதுக்கொரு பாவமில்ல
பழகின பாஷையில படிப்பது பாவமில்ல
என்னவோ ராகம் என்னன்னவோ தாளம்
தலைய ஆட்டும் புரியாத கூட்டம்
எல்லாமே சங்கீதந்தான் .. ஆஆ..
எல்லாமே சங்கீதந்தான் சத்தத்தில் பொறந்த சங்கதிதான்
சஜமமென்பதும் தெய்வதமென்பதும்
பஞ்ச பரம்பரைக்கு அப்புறந்தான் பாடறியேன் படிப்பரியேன் பள்ளிக்கூடம்தானரியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்

கவல ஏதுமில்ல ரசிக்கும் மேடிக்குடி
சேறிக்கும் சேரவேணும் அதுக்கும் பாட்டு படி
என்னையே பாரு எத்தன பேறு
தங்கமே நீயும் தமிழ் பாட்டும் பாடு
சொன்னது தப்பா தப்பா .. ஆ ஆ..
சொன்னது தப்பா தப்பா ராகத்தில் புதுசு என்னதப்பா..
அம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்பொரதுல சொன்னதப்பா

பாடறியேன் படிப்பரியேன் பள்ளிக்கூடம்தானரியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்
ஏட்டுல எழுதவில்ல எழுதி வெச்சு பழக்கமில்ல
இலக்கணம் படிக்கவில்ல தலகனமும் எனக்கு இல்ல

பாடறியேன் படிப்பரியேன் பள்ளிக்கூடம்தானரியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்

படம்: சிந்து பைரவி
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா

Friday, February 18, 2011

ஒரு முறை நீ என்னை பார்த்தால் போதும்

ஒரு முறை நீ என்னை பார்த்தால் போதும்
ஒரு கோடி மின்னல்கள் நெஞ்சுக்குள் மோதும்
அன்பே அன்பே அன்பே ஓ ஓ
(ஒரு முறை..)
முத்தமிடலாமா
சத்தமின்றி சத்தமின்றி
முத்தமிடலாம்
(ஒரு முறை..)

மேகம் கருக்கும் போது முத்தமிடலாம்
மேனி சிலிர்க்கும் போது முத்தமிடலாம்
தென்றல் அடிக்கும் போது முத்தமிடலாம்
சாரல் தெறிக்கும் போது முத்தமிடலாம்
விண்மீன்கள் உதிரும் போது முத்தமிடலாம்
வெண்பனி சொட்டும் போது முத்தமிடலாம்
பூக்கள் மலரும் போது முத்தமிடலாம்
பகல் மெல்ல இருட்டும் போது முத்தமிடலாம்
பாதி இரவில் விழிக்கும் போது முத்தமிடலாம்
பொழுது விடியும் போது முத்தமிடலாம்
குயில்கள் கூவும் போது முத்தமிடலாம்
மரணத்திலும் முத்தம் இட்டு மரணத்தையே வென்றிடலாம்
(ஒரு முறை..)

படம்: முத்தமிடலாமா
இசை: பரணி
பாடியவர்: உன்னி கிருஷ்ணன்

வெண்ணிலவுக்கு ஆசைப்பட்டேன்

வெண்ணிலவுக்கு ஆசைப்பட்டேன் கிட்டுமோ கையில் கிட்டுமோ
வானவில்லுக்கு ஆசைப்பட்டேன் எட்டுமோ அது எட்டுமோ
ஏழையின் மனமே ஏங்குது தினமே
நல்லது நடக்கும் நாளும் மலரட்டுமே

வானத்து தாரகையோ யாரவள் தேவதையோ
வார்த்தைகளும் மயங்கிடும் கலைவாணியின் மகளோ
வண்ணத்தில் தீட்டிடவோ எண்ணத்தை காட்டிடவோ
பார்த்தப்படிசொல்லிடத்தான் வார்த்தைகள் வருமோ
மலராய் சிரிப்பாள் மனதை பறிப்பாள்
மலராய் சிரிப்பாள் மனதை பறிப்பாள்
கனவில் தினமும் வந்து கண்ணடிப்பாள்
(வானத்து..)

சுட்டும் விழிச் சுடர் பார்த்து மனம் கெட்டதை சொல்லட்டுமா
கொட்டும் பனித் துளி கூட என்னை சுட்டதை சொல்லட்டுமா
கம்பனிடம் கடன் கேட்டு கொஞ்சம் கற்பனை வாங்கட்டுமா
காதல் கொண்ட முகம் பார்த்து நான் வர்ணனை செய்யட்டுமா
அவள் வாங்கி போனாள் என் தூக்கம்
முகம் கண்டாலும் தீராது என் ஏக்கம்
கண்டுப்பிடி யாரு கண்டுப்பிடி
பிரம்மனுக்கு ஒரு தந்தி அடி
அவள் பேச்சு மொழி அல்ல மகுடி
(வானத்து..)

மொட்டு விரித்ததை போலே அந்த பட்டுத் துளிர் மோகமோ
முத்துச் சிதறுதல் போலே சின்ன சின்ன சிரிப்பழகோ
தித்தித்திடும் தேன் சுவையை நான் சொல்வது எப்படியோ
பொங்கி வரும் மலர் வாசம் அதை அள்ளுவதெப்படியோ
ஸ்வரம் ஏழில் அடங்காத ராகம்
இது எல்லோர்க்கும் கிடைக்காத கீதம்
ராதை அவள் நானும் கண்ணன் இல்லை
ராணிக்கு நான் ஒரு மன்னன் இல்லை
அவளோடு பொருந்தாது என் அழகு
(வானத்து..)

படம்: பூந்தோட்டம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஹரிஹரன், இளையராஜா

Thursday, February 17, 2011

நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக


Get Your Own Hindi Songs Player at Music Plugin

நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக
(நிலவு..)
என்னை இழந்தேன் செந்தேன் மொழியில்
விண்ணில் பறந்தேன் சிந்தும் கவியில்
(நிலவு..)

நீயும் நானும் சேர்ந்ததற்கு காதல் தானே காரணம்
காதல் இங்கு இல்லை என்றால் வாழ்வில் ஏது தோரணம்
தீபங்களை மெல்ல மெல்ல ஏற்றிச் செல்லு அன்பே அன்பே
கீதங்களை சொல்ல சொல்ல ஏக்கம் கொண்டேன் அன்பே அன்பே
அலை விளையாடும் நதியினில் ஆடி உருகிட நாமும் சேரலாம்
சிறகுகள் வாங்கி உறவென்னும் தேரில் வெகு வெகு தூரம் போகலாம்
(நிலவு..)

பூங்குருத்து பூங்கழுத்தில் பூத்தொடுத்து சூடினேன்
பூ மரத்து பூச்சரங்கள் பூத்திருக்க கூடினேன்
இன்பம் என்றால் என்னவென்று உன்னிடத்தில் கண்டு கொண்டேன்
இன்னும் என்ன உண்டு என்று சொர்க்கம் வரை செல்கிறேன்
அறுசுவையோடு புது விருந்தாக சுக பறிமாறும் தேவியே
தலை முதல் பாதல் சுகம் தரும் வேதம் படித்திட தூண்டும் ஆவியே
(நிலவு..)

படம்: என்றும் அன்புடன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, S ஜானகி

Wednesday, February 16, 2011

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமாபாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து

இன்று வந்த புது வசந்தம் என்றும் தங்கும்
தென்றல் எங்கள் பாதைகளில் பூவை தூவும்
குயில்களுக்கு தடைகள் போடும் மனிதர் இங்கே யாரு
குரல் கொடுத்தால் நிலவின் முதுகில் உரசும் நாளை பாரு
பயணங்கள் எங்கே என்று பாட்டில் கூற முடியாது
இசையென்னும் கடலின் ஆழம் எங்கே என்று தெரியாது
பாடுவதால் வாழுகிறோம் சோகமில்லையே
(பாட்டு ஒன்னு..)

ஏழை எங்கள் கூரை அது வானம் ஆகும்
இதயம் தானே எங்களது வாசல் ஆகும்
பாட்டுக்கென கூட்டில் சேர்ந்து பறவை போல வாழ்ந்தோம்
பசியெடுத்தால் பாட்டை உன்னு திசைகள் தேடி சேர்ந்தோம்
ஒரு தெய்வம் நேரில் வந்து உறவைசொல்லி துணையாச்சு
உலகங்கள் இதுதான் என்று கவிதை தந்து உயிராச்சு
வானங்களை பாட்டெடுத்து வாகை சூடுவோம்
(பாட்டு ஒன்னு..)

படம்: புது வசந்தம்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், P சுசீலா

Tuesday, February 15, 2011

முள்ளாக குத்தக் கூடாதுரோஜா ரோஜா
ரோஜா ரோஜா
முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே
சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே
(முள்ளாக..)

நீ விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி
உன்னை நினைத்துவிட்டேன்
தேளாய் கொட்டினாலும் சரி
திட்டினாலும் சரி என்னை கொடுத்திவிட்டேன்
(நீ விரும்பினாலும்..)
ரோஜா ஐ லவ் யூ..
(முள்ளாக..)

ஆளக்கால ழிஷம் உண்ட சிவனைக் கண்டேன்
அது போல காதல் விஷம் நானும் உண்டேன்
உண்டாலோ உடன் கொல்லும் சாதா விஷம்
மெல்ல மெல்ல ஆளைக் கொல்லும் அது காதல் விஷம்
காதல் விஷம் பெண்ணில் கண்டேன்
கண்ணால் அதை நானும் உண்டேன்
பெண்ணோட நெனப்புத்தான் நெறுப்பென்று
தெரிஞ்சு நான் விழுங்கி விட்டேன்
நெஞ்சத்தை எறித்தாலும் துப்பத்தான்
முடியாமல் தவிக்கின்றேன்

மறக்கத்தான் நீ சொன்னாய் முடியிலையடி
முயற்சி தான் செய்தும் மனம் கேட்களடி
பறிக்காதே என்னை என்று ஒரு பூ சொல்லுது
கேட்காமல் மனம்தான் பெண் பின் செல்லுது
முட்டாள் மனம் திருந்தாதடி
போனால் மனம் திரும்பாதடி
எறிகின்ற நெருப்பாலே
வெண்சங்கை சுட்டாலும் நிறம் மாறுமா
பெண்ணும் தான் வெறுப்பாளே
என் நெஞ்சை சுட்டாலும் மனம் தான் மாறுமா
ரோஜா ஐ லவ் யூ

படம்: சொன்னால்தான் காதலா
இசை: T ராஜேந்தர்
பாடியவர்: சிலம்பரசன்
வரிகள்: T ராஜேந்தர்

Monday, February 14, 2011

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது


Get Your Own Hindi Songs Player at Music Plugin

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது (2)
கண்மணியே ஓ கண்மணியே..
கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும்
நீ வேண்டும் என்னுயிரே ஓ.... என் உயிரே.. (நீ தூங்கும் )

பூ ஒன்று உன் மீது விழுந்தாலும் தாங்காது
என் நெஞ்சம் புண்ணாய் போகுமே ஓஓ..
நீ தூங்கும் ஓ..கண்மணியே..ஆரிரோ..ஆரிரோ..ஆரிரோ..
ஆரிரோ..ஆரிரோ..ஆரிரோ..ஆரிரோ..ஆரிரோ..ஆரிரோ..

மடி மீது நீ இருந்தால்
சொர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ
நொடி நேரம் பிரிந்தாலும்
காலங்களும் நின்று போகாதோ
ஒரு மூச்சில் இரு தேகம்
வாழ்வது நாமன்றி வேறாரோ
நம் காதல் வெள்ளத்தில்
நடுவே நாம் இருந்தாலும்
என் நெஞ்சம் தாகம் கொள்ளுதே ஓஓ

(நீ தூங்கும்)

கண்ணோடும் நெஞ்சோடும்
உயிரால் உன்னை மூடிக் கொண்டேனே
கனவோடும் நினைவோடும்
நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே
மதி பறிக்கும் மதிமுகமே
உன் ஒளி அலை தன்னில் நான் இருப்பேனே
எங்கே நீ சென்றாலும்
அங்கே நான் வருவேனே
மனசெல்லாம் நீ தான் நீ தானே ஓஓ

(நீ தூங்கும் )
திரைப்படம்: மனசெல்லாம்
இசை:இளையராஜா
பாடியவர் : ஹரிஹரன்


கரவ மாடு மூனுகரவ மாடு மூனு
காள மாடு ஒன்னு
அடிச்சேன் லக்கி ப்ரைஸு
அதிர்ஷ்ட காரன் நானு
சுகவாசி ஆட்டம் போடும் நேரம்
மனசுல வெளவாசி போல போதை ஏறும்
(கரவ..)

தூங்கவில்லை நெடு நாளா
தென்றல் தாக்கியதே கொடுவாலா
தூங்கவில்லை நெடு நாளா
தென்றல் தாக்கியதே கொடுவாலா
நான் இருந்தேன் தனி ஆளா
இன்று நாம் கலக்கும் கும்ப மேளா
தாமரை மேனி தீண்டிடும் தேனி நானடி ராணி
என்னை நாடியே வா நீ
நீ என்னை கொஞ்சம் கொஞ்சும் நேரம்
இன்பம் இன்பம் ஆரம்பம்

அடிச்சா பாரு கண்ணு ஐயர் ஆத்து பொண்ணு
மடிசார் கட்டும் ராணி மயிலாப்பூருக்கு வா நீ
விளக்கேத்தும் சாயங்கால நேரம்
மனசுல உருவாச்சு உன்னால் ஒரு பாரம்
அடிச்சா பாரு கண்ணு ஐயர் ஆத்து பொண்ணு
மடிசார் கட்டும் ராணி மயிலாப்பூருக்கு வா நீ ஈஈஈ...

நான் உன்னை நெனச்சு ஏங்கினேன்
முள் மேல படுத்து தூங்கினேன்
ஆனாலும் அசடு..
ஆனாலும் அசடு நீங்க தான்
வாங்கொண்ணா மடியில் தூங்கத்தான்
சிந்தாமனி செம்மாங்கனி என்னாளும் நீ என் மோகினி
ஆச தீர கட்டுங்கோ கோந்து போல ஒத்துங்கோ
நேக்கு தான் என்னவோ பண்றதே தொட தொட

வயசு பொண்ண மாமோ
வளச்சு கட்டு பாப்போம் அ அ அ அ
தேங்கப்பால தேடி வந்ததிந்த ஆப்பம்
சவடால சைட் அடிச்சா நேத்து
எதிரிலே சமஞ்சாடும் சாத்தி பூவ பாத்து

அடியே ஆத்தா நீ நாட்டுக்கட்ட
புடிச்சேன் பாரு வந்து மாட்டி கிட்ட
அடடா ராசா உன் அழக எண்ணி
நெடுநாள் ஆச்சு நான் நாஷ்தா பண்ணி
அடியே குப்ப குளம் நீ கூட்டும்போது
இடுப்ப பார்க்காதவன் ஆபிஸ்ல ஏது
முன்னால் உள்ளது சிங்காரம் பின்னால் உள்ளது ஒய்யாரம்
கண்ணால் கண்டதும் அள்ளாரும்
தன்னால் போடணும் கிண்ணாரம்
அட சும்மா இப்படி நின்னா எப்புடி மாமோ
(கரவ..)

படம்: மகளிர் மட்டும்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி

Sunday, February 13, 2011

சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்

சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

புது நாணம் கொள்ளாமல்
ஒரு வார்த்தை இல்லாமல்
மலர் கண்கள் நான்கும்
மூடிக்கொள்ளும் காதல் யோகம்
சோலைப்பூவில்)


சந்தனக்காடு நானுன் செந்தமிழேடு
மான் விழி மாது நீயோ மன்மதன் தூது

மேகத்துக்குள் மின்னல் போல நின்றாயே
மின்னல் தேடும் தாழம் பூவாய் நானும் வந்தேனே
தாகம் தீர்க்கும் தண்ணீர் போல நீயும் வந்தாயே
தாவிப்பாயும் மீனைப்போலே நானும் ஆனேனே

என்னில் இல்லா சொர்க்கம் தன்னை
உன்னில் இங்கு கண்டேனே
கள்ளில் இல்லா இன்பம் உந்தன்
சொல்லில் இங்கே கண்டேனே

லலலா லலலா லலலா லலலா
லலலலா-- (சோலைப்பூவில்)


செந்நிலம் மேலே தண்ணீர் சேர்ந்தது போலே
ஆனது நெஞ்சம் நீயென் வாழ்க்கையின் சொந்தம்
என்றும் என்றும் எந்தன் உள்ளம் உன்னோடு
எந்தன் நெஞ்சில் பொங்கும் அன்பில் நாளும் நீ..ரா..டு

கங்கை வெள்ளம் வற்றும் போதும் காதல் வற்றாது
திங்கள் வானில் தேயும் போதும் சிந்தை தேயாது

மண்ணில் தோன்றும் ஜென்மம் யாவும்
உன் மேல் அன்பும் மாறாது
உன்னை அன்றி தென்றல் கூட எந்தன் தேகம் தீண்டாது

லலலா லலலா லலலா லலலா
லலலா லலலா- (சோலைப்பூவில்)

புது நாணம் கொள்ளாமல் பப்பா
ஒரு வார்த்தை இல்லாமல் பப்பா
மலர் கண்கள் நான்கும்
மூடிக்கொள்ளும் காதல் யோகம்

சோலைப்பூவில் மாலைத்தென்றல் பாடும் நேரம்
ஆசைக்கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
இசை: இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.பி.பி. எஸ்.ஜானகி.
திரைப்படம் : வெள்ளைரோஜா

மகளிர் மட்டும் அடிமை பட்ட

மகளிர் மட்டும் அடிமை பட்ட
இனமா இனமா
மகளிர் மட்டும் வருத்தப்பட்ட
குலமா குலமா
மகளிர் மட்டும் ஒதுக்கப்பட்ட
நிலமா நிலமா
மகளிர் மட்ட உணர்வை விட்ட
ஜடமா ஜடமா

பாரப்பா ரபப்பப்பா
பெண் பாடு பெரிதப்பா
மகளிர் மட்டும்
மகளிர் மட்டும்
(மகளிர்..)

வேலைக்கு போய் தீரும் சில பேர்க்கு
போராடும் பதில் கூறும் கடமை பல பேர்க்கு
நட்போடு சேர்கின்ற விஷயம் பெரும்பாடு
ஆனாலும் உழைக்காமல் ஏது சாப்பாடு
எவருக்கு இங்கே புரியும் பெண் இதயம்
அவதிப்பட்டால் தெரியும் ஊர் அறியும்
வரவும் செலவும் சரிவர
இரவும் பகலும் உழைப்பது
மகளிர் மட்டும்
மகளிர் மட்டும்

சாராயம் ஓயாமல் குடிக்கும் ஆளோடு
சம்சாரம் போதாமல் இருக்கும் நாளேது
நாள் தோரும் மார்வாடி கடைக்கு போகாது
நகையோடு பேதைப்பெண் இருக்க முடியாது
வருமைக்கோட்டில் உயரும் பெண் துயரம்
எடுத்துச்சொன்னால் இமயம் ஓர் இதயம்
புயலில் கடலா எதுவரை
கடலில் பெருக
மகளிர் மட்டும்
மகளிர் மட்டும்

கல்யாணம் பெண் பாடு பெரிய விவகாரம்
பெண் பார்க்கும் மாப்பிள்ளை நடத்தும் வியாபாரம்
ஏதேதோ எதிர்ப்பார்த்து கண்ணை பார்பாரு
ஏராளம் சீர் செய்த பிறகும் கேட்பாரு
அடங்கிப்போகும் இதயம் பெண் இதயம்
வெடிக்கக்கூடும் ஸ்டவ்வும் சில சமயம்
(மகளிர்..)

படம்: மகளிர் மட்டும்
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி

Saturday, February 12, 2011

வங்காலக் கடலேவங்காலக் கடலே என்னை உன் ஆசை விடலே
எங்க அக்காவின் மகளே நீ முத்தாலக்கடலே
என்ன மாமனுதான் கொஞ்சிடணும் மானே
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே
(வங்காலக்..)

போட்டானே பானம் பொன் மாலை நேரம்
ஆத்தாடி ராவும் பகலும் தூக்கம் வரல
பாலோடு தேனும் எப்போதும் வேணும்
அம்மாடி நானும் கேட்டு நீதான் தரல
கல்லூரும் பாலே முன்னாடி தானே
உண்ணாம நானே திண்டாடுறேன்
அடி சோறேது நீரேது உன் ஞாபகம்
இனி தாங்காது தூங்காது என் வாலிபம்
அடி சோறேது நீரேது உன் ஞாபகம்
இனி தாங்காது தூங்காது என் வாலிபம்
(வங்காலக்..)

படம்: மனதில் உறுதீ வேண்டும்
இசை: இளையராஜா
பாடியவர்: KJ ஜேசுதாஸ்

Friday, February 11, 2011

மனதில் உறுதி வேண்டும்மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளி படைத்த பார்வை வேண்டும்
ஞான தீபம் ஏற்ற வேண்டும்
(மனதில்..)

இடை வரும் பலவித தடைகளை தகர்த்திங்கு வாழ்ந்து காட்ட வேண்டும்
இலக்கிய பெண்ணுக்கு இலக்கணம் நீயென யாரும் போற்றவேண்டும்
மாதர் தம்மை கேலி பேசும் மூடர் வாயை மூடுவோம்
மானம் காக்கும் மாந்தர் யாருக்கும் மாலை வாங்கி போடுவோம்
ஏசினாலும் பேசினாலும் அஞ்சிடாமல் வாழ வேண்டும்
(மனதில்..)

சமைக்கின்ற கரமிங்கு சரித்திரம் படைப்பதை பூமி பார்க்க வேண்டும்
தூரத்து தேசத்தில் பாரத பெண்மையின் பாடு கேட்கவேண்டும்
பெண்கள் கூட்டம் பேய்கள் என்று சொன்ன சித்தர்களும்
ஈன்ற தாயும் பெண்மையென்று எண்ணிடாத பித்தர்களே
வீடு ஆளும் பெண்மையிங்கு நாடு ஆளும் காலம் வேண்டும்
(மனதில்..)

படம்: மனதில் உறுதி வேண்டும்
இசை: இளையராஜா
பாடியவர்: KJ ஜேசுதாஸ்
வரிகள்: பாரதியார்

Thursday, February 10, 2011

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமாகண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா அதன் ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா
(கண்ணின்..)

சாத்திரங்கள் பெண் இணத்தை மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
சாத்திரங்கள் பெண் இணத்தை மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தால்
ஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்
ஏனென்று கேட்கத்தான் இப்போது ஆள் இல்லை
சம நீதி கேட்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை
உலகமெல்லாம் விடிந்த பின்னும்
உங்களின் இரவுகள் விடியவில்லை
(கண்ணின்..)

பாய் விரிக்கும் பெண்மை என்ன காதல் பதுமைகளா
தினம் ஏவள் செய்ய ஆடவர்க்கு காவல் அடிமைகளா
பொன்னள்ளி வைத்தால்தானே பூமாலை தோளில் ஏறும்
இல்லாத ஏனையர்க்கெல்லாம் பொல்லாத தனிமை கோலம்
எரிகின்ற நேரத்தில் ஒவ்வொன்றும் பொய் இல்லை
கனவுகளில் மிதந்ந்தப்படி
கலங்குது மயங்குது பருவக்கொடி
(கண்ணின்..)

படம்: மனதில் உறுதி வேண்டும்
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா
வரிகள்: வைரமுத்து

Wednesday, February 9, 2011

சங்கத் தமிழ்க் கவியேசங்கத் தமிழ்க் கவியே
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக இசைத்தால் தாகம் அடங்கிடுமோ
(சங்கத்..)

மாதுளம் பூவிருக்க அதற்க்குள் வாசனைத் தேனிருக்க
பாதியை நானெடுக்க மெதுவாய் மீதியை நீ கொடுக்க
காதலன் கண்ணுரங்க தலைவி கூந்தலில் பாய் விரிக்க
ஒரு புறம் நான் அணைக்க தழுவி மறு புறம் நீ அணைக்க
சாத்திரம் மீறியே கீர்த்தனம் பாட சுகங்களில் லயிப்பவள் நான்
(சங்கத்..)

பூங்குயில் பேதைத்தனைத் தேடத்தான் ஆண் குயில் பாடியோட
ஓடத்தைப் போல் நானும் ஆடத்தான் ஓடையும் வாடியாடாதோ
காதலன் கைத்தொடத்தான் இந்தக் கண்களும் தேடியதோ
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன்
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன்
தோழியர் யாவரும் கேலிகள் பேச தினம் தினம் நான் தவித்தேன்
(சங்கத்..)

படம்: மனதில் உறுதி வேண்டும்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: சித்ரா,
வரிகள்: வைரமுத்து

Tuesday, February 8, 2011

கண்ணா வருவாயாகண்ணா வருவாயா ..

கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்
மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து
(கண்ணா..)

நீலவானும் நிலவும் நீரும் நீயென காண்கிறேன்
உண்ணும்போதும் உறங்கும்போதும் உன் முகம் பார்க்கிறேன்
கண்னன் வந்து நீந்திடாது காய்ந்து போகும் பாற்கடல்
உன்னை இங்கு ஆடை போல ஏற்றுக்கொள்ளும் பூவுடல்
வேரில்லையே பிருந்தாவனம்
விடிந்தாலும் அம் ஆளிங்கனம்
சொர்க்கம் இதுவோ
(கண்ணா..)

மல்லிகைப் பஞ்சனை இட்டு
மெல்லிய சிற்றிடை தொட்டு மோகம் தீர்க்கவா
மல்லிகைப் பஞ்சனை இட்டு
மெல்லிய சிற்றிடை தொட்டு மோகம் தீர்க்கவா
மன்மத மந்திரம் சொல்லி வந்தனல் சுந்தரவள்ளி
ராகம் சேர்க்கவா
மன்மத மந்திரம் சொல்லி வந்தனல் சுந்தரவள்ளி
ராகம் சேர்க்கவா
கொடி இடை ஒடிவதன் முன்னம் மடியினில் எடுத்திடவா
மலர்விழி மயங்கிடும் வண்ணம் மதுரசம் கொடுத்திடவா
இரவு முழுதும் உறவு மழையிலே
இருவர் உடலும் நனையும் பொழுதிலே
ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே
(கண்ணா..)

படம்: மனதில் உறுதி வேண்டும்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், சித்ரா
வரிகள்: வாலி

Monday, February 7, 2011

ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாளன் காட்சிஆச்சி ஆச்சி நல்ல கண்ணாளன் காட்சி
இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி
நாட்டரசன் கோட்டையிலே பொண்ணெடுத்து
மாமா நூறு சனம் பார்க்கையிலே பூ முடிச்சா
(ஆச்சி..)

வெள்ள பணியாரம் போல வெள்ளருக்கன் பூவ போல
வெள்ல மனம் உள்ள புள்ள நீதான் வாம்மா
வெள்ள பணியாரம் போல வெள்ளருக்கன் பூவ போல
வெள்ல மனம் உள்ள புள்ள நீதான் வாம்மா
ஊருணியின் நீரப்போல ஊர் இழுக்கும் தேரைப்போல
ஓடி வந்து என்னை கொஞ்சு மாமா மாமா
ஊருணியின் நீரப்போல ஊர் இழுக்கும் தேரைப்போல
ஓடி வந்து என்னை கொஞ்சு மாமா மாமா
பரிசம் கண்ணாளம் போட்டாச்சு
பதிலும் எண்னான்னு கேட்டாச்சு
புருஷன் நீதான்னு ஆயாச்சு
பூவும் பிஞ்சாகி காயாச்சு
இரவா பகலா எளைச்சேன் பொதுவா
உன்னால ராத்தூக்கம் போச்சு
(ஆச்சி..)

படம்: மனதில் உறுதி வேண்டும்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: சித்ரா, மனோ
வரிகள்: வைரமுத்து

Sunday, February 6, 2011

ஓ வெண்ணிலாவே வா ஓடிவா

ஓ வெண்ணிலாவே ஏ ஏ வா ஓடிவா (2)
நாளை இந்த வேளை எமை நீ காண வா- ஓ
பால் போல வா

(ஓ வெண்ணிலாவே)

நிலவின் ஜாடை தெரியும் ஓடை
அழகே நீயும் நீராடு ஹோ
மலர்கள் சேர்த்து மாலை கோர்த்து
அடடா நீயும் பூச்சூடு
கதைகள் பேசு
கவிகள் பேசு
விடியும் வரையில் நீ பாடு
நிலவே நீயும் தூங்காதே ஹோய்
நாளை இந்த வேளை எமை நீ காண வா
பால் போல வா

(ஓ வெண்ணிலாவே)
லாலிலாலி லாலிலாலா லாலி லாலி

இதமாய்ச் சாய்ந்து இமைகள் மூடு
இதுதான் முடிவு வேறேது ஹோ
இறக்கும்போதும் இதுவே போதும்
இனிமேல் பிறவி வாராது
காதல் மாலை
சூடும் வேளை
அழுகை ஏனோ கூடாது
நிலவே நீயும் தூங்காதே ஹோய்
நாளை இந்த வேளை எமை நீ காண வா
ஓ பால் போல வா

(ஓ வெண்ணிலாவே)

ஆனந்தம் கொண்டு நீங்கள்
இன்று போல் வாழ்கவே
ஆயிரம் பௌர்ணமிகள் கண்டுதான் வாழ்கவே
ஆதியில் சேர்ந்த காதல் ஆனந்தம் காணவே
ஆகாயம் உள்ள மட்டும் அழியாமல் வாழ்கவே

திரைப்படம் : ஆனந்தக் கும்மி
இசை :இளையராஜா
பாடியவர்கள்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி

Get Your Own Hindi Songs Player at Music Plugin

மை டியர் மார்த்தாண்டா பட்டணம் போரான்டாவீட்டுக்குள்ள கட்டுப்பட்ட பச்சைக்கிளி
கூட்ட விட்டு ஓடுதிப்போ இஷ்டப்படி
வீட்டுக்குள்ள கட்டுப்பட்ட பச்சைக்கிளி
கூட்ட விட்டு ஓடுதிப்போ இஷ்டப்படி
வட்டம் இப்போ வட்டம் இல்லே
சட்டம் எப்போ பக்கம் இல்லே
பட்டம் பேர தேவை இல்லே
கஷ்டம் இல்லே நஷ்டம் இல்லே
கெட்டிக்கார சுட்டி புள்ளே
கொட்டமடி பட்டணத்திலே

மை டியர் மார்த்தாண்டா பட்டணம் போரான்டா
மை டியர் மார்த்தாண்டா பட்டணம் போரான்டா
வீட்டுக்குள்ள கட்டுப்பட்ட பச்சைக்கிளி
கூட்ட விட்டு ஓடுதிப்போ இஷ்டப்படி
வீட்டுக்குள்ள கட்டுப்பட்ட பச்சைக்கிளி
கூட்ட விட்டு ஓடுதிப்போ இஷ்டப்படி

தங்கமணி காட்டிலே தத்தி தத்தி வந்த புள்ளே
நெஞ்சுக்குள்ளே வஞ்சனை இல்லே
பந்தம் உண்டு பந்தம் இல்லே
சொந்தம் உண்டு சொந்தம் இல்லே
மாயம் இல்லே மந்திரம் இல்லே

மை டியர் மார்த்தாண்டா பட்டணம் போரான்டா
மை டியர் மார்த்தாண்டா பட்டணம் போரான்டா
மை டியர் மார்த்தாண்டா பட்டணம் போரான்டா
மை டியர் மார்த்தாண்டா பட்டணம் போரான்டா

படம்: மை டியர் மார்த்தாண்டன்
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜா

Saturday, February 5, 2011

பாக்கு வெத்தல போட்டேன் பத்தலபாக்கு வெத்தல போட்டேன் பத்தல பொண்ணு பார்த்ததாலே
ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல பரிசம் போட்டதாலே
ஆத்தாடி ராசாத்தி அடிச்சாளே சூடேத்தி
புடிச்சேன் ஒரு கொம்பு அது புளியங் பூங்கொம்பு
புடிச்சான் ஒரு கொம்பு அது புளியங் பூங்கொம்பு
(பாக்கு..)

பாதி கண்ணாலே சேதி சொன்னாளே கிட்ட நாடி சத்தமாச்சு
மோகம் தாங்காம தேகம் தாங்காம மொட்ட மாடி கெட்டுப்போச்சு
சூடும் உண்டாச்சு மூடும் வந்தாச்சு ஜோடி நான் சேரத்தான்
காதல் தந்தது ஊரில் சுந்தரி
மாலை சூட வேலை கூட போதை ஏற ஆசை தீர ஹோய்
(பாக்கு..)

நாடு பூராவும் தேடி பார்த்தாலும் நம்மாளு போல ஏது
மாமன் தானாக பாவம் தானாக வாசல் தேசி வந்த மாது
ஆள பார்த்தாச்சு மாலை போட்டாச்சு ஜோடி சேர்தாச்சும்மா
பால காச்சுடா பாயை போடுடா
வாசம் வீசும் ரோஜா பூவை வாங்கி வந்து தூவு தூவு ஹேய்
(பாக்கு..)

படம்: மை டியர் மார்த்தாண்டன்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வாலி

Friday, February 4, 2011

உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி


Get Your Own Hindi Songs Player at Music Plugin

உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி
நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி

உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி
நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி

பெத்தெடுத்தவ யாரு
அழகு பேருவச்சது யாரு
தத்தெடுத்தது யாரு
இப்போ தத்தளிப்பது யாரு
(உள்ளுக்குள்ள..)

அம்மா வந்து சொன்னால்தான் அப்பாவின் பேர் தெரியுமடா
அவளும் சொல்லவில்லையென்றால் தப்பாகத்தான் போகுமடா
அம்மா வந்து சொன்னால்தான் அப்பாவின் பேர் தெரியுமடா
அவளும் சொல்லவில்லையென்றால் தப்பாகத்தான் போகுமடா

எல்லோரும் இங்கே மயக்கத்திலே
எப்போதும் வாழ்வோம் கலக்கத்திலே
எல்லோரும் இங்கே மயக்கத்திலே
எப்போதும் வாழ்வோம் கலக்கத்திலே
ஒரு பொழுது அது விடியாதா
அட போடா உலகம் கெடக்குது கெடக்குது
(உள்ளுக்குள்ள..)

பந்தி போட்டு பரிமாற பச்சை இலை வெட்டி வெட்டி
உண்ட பின்பு எறிவாரே எச்சில் இலை குப்பை தொட்டி
பந்தி போட்டு பரிமாற பச்சை இலை வெட்டி வெட்டி
உண்ட பின்பு எறிவாரே எச்சில் இலை குப்பை தொட்டி

என் தாயும் அன்று பச்சை இலை
நான் இன்று இங்கே எச்சில் இல்லை
என் தாயும் அன்று பச்சை இலை
நான் இன்று இங்கே எச்சில் இல்லை
புயலாச்சு பெரும் மழையாச்சு
இந்த விளக்கு அதிலும் எறியுது எறியுது
(உள்ளுக்குள்ள..)

படம்: பணக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜா

Thursday, February 3, 2011

சைலண்ஸ் காதல் செய்யும் நேரம் இது


Get Your Own Hindi Songs Player at Music Plugin

சைலண்ஸ் சைலண்ஸ்
சைலண்ஸ் சைலண்ஸ்
சைலண்ஸ் சைலண்ஸ்
சைலண்ஸ் சைலண்ஸ்
சைலண்ஸ்

சைலண்ஸ் காதல் செய்யும் நேரம் இது
சைலண்ஸ் காமல் பள்ளிக்கூடம் இது
சைலண்ஸ் காதல் செய்யும் நேரம் இது
சைலண்ஸ் காமல் பள்ளிக்கூடம் இது

மௌனம்தான் இங்குள்ள பாடங்கள்
பார்வையில் சங்கீதம் பாடுங்கள்
மௌனம்தான் இங்குள்ள பாடங்கள்
பார்வையில் சங்கீதம் பாடுங்கள்

சைலண்ஸ் காதல் செய்யும் நேரம் இது
சைலண்ஸ் காமல் பள்ளிக்கூடம் இது
சைலண்ஸ்

எழுதாத உம்மேனி நான் படிக்கவே
தெரியாத வண்னங்கள் தெரியுதே
இதழாலே முத்துக்கள் நானும் கோர்க்கவே
இடையோடும் எண்ணங்கள் தெரியுமே
பார்க்கும் பார்வையில் பாதி வேர்த்ததே
என் மேனி வேர்த்து வேர்த்துதான் மீதி தேய்ந்ததே
பாவை மேனியே பாடமானதே
தொட்ட ஆடைக்கூடத்தான் பாரமானதே
ஆண்மை நாளும் காவல் காக்க
ஆசை தேனை அள்ளி சேர்க்க
ராகதேவன் பாடல் போல
ராகம் தாளம் நாமும் சேர்ந்து பாடும் நேரம்
(சைலண்ஸ்..)

வானிலாடும் நிலவுதனில் ஆடை ஏதடி
மண்ணில் வந்த நிலவு நீயும் கூறடி
பெண்ணுக்கிங்கு நாணமுண்டு அறிந்துக்கொள்ளையா
நிலவுக்கென்று நாணம் இல்லை தெரிந்துக்கொள்ளையா
ஒருவருக்குதான் சொந்தமானது
என்னோடு இருவிதத்திலும் பந்தமானது
காதல் இரவுதான் விடியலானதே
அந்த காமன் உறவுதான் தொடரலானதே
காதல் ஆற்றில் நீந்தும் வேளை
காற்று போல நானும் மாற
ஜாதி பூவில் வாசம் போல
ஆவல் இன்றி நாமும் சேர்ந்து பாடும் நேரம்
(சைலண்ஸ்..)

படம்: பணக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி

Wednesday, February 2, 2011

மரத்தை வச்சவன்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்
மனசை பார்த்துதான் வாழ்வ மாத்துவான்
ஏ மனமே கலங்காதே வீணாக வருந்தாதே
பாரங்கள் எல்லாமே படைத்தவன் எவனோ அவனே சுமப்பான்
ஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம்
(மரத்தை..)

படைத்தவனின் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்கு
இதயத்திலே துணிவிருக்க வருத்தமிங்கே உனக்கெதற்கு
படைத்தவனின் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்கு
இதயத்திலே துணிவிருக்க வருத்தமிங்கே உனக்கெதற்கு
உன்னை நல்ல ஆளாக்க உத்தமனை போலாக்க
எண்ணியவன் யார் என்று கண்டுக்கொள்ள யாருண்டு
ஊரெல்லாம் உந்தன் பேரை போற்றும் நாள் வரும்
ஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம்
ஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம்
(மரத்தை..)

உதவி இன்றி தவிப்பவருக்கு உதவிடவே நீ படிப்பாய்
உணவு இன்றி துடிப்பவர்க்கு உணவுத்தர நீ படிப்பாய்
உதவி இன்றி தவிப்பவருக்கு உதவிடவே நீ படிப்பாய்
உணவு இன்றி துடிப்பவர்க்கு உணவுத்தர நீ படிப்பாய்
புத்தியுள்ள உனக்கெல்லாம் புத்தகத்து படிப்பெதற்கு
சக்தி உள்ள உனக்கெல்லா சத்தியத்தில் தவிப்பென்ன
காத்திருப்பது எத்தனை பேரோ உன்னிடம் தோற்ப்பதற்கு
ஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம்
ஓம் ஷாந்தி ஓம் ஓம் ஷாந்தி ஓம்
(மரத்தை..)

படம்: பணக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜா

Tuesday, February 1, 2011

இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்ததுடிங் டாங் டாங் டிங் டாங்
டிங் டாங் டாங் டிங் டாங்

இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது
இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது
ஒன்றும் அசையாமல் நின்று போனது
காதல் காதல் டிங் டாங்
கண்ணில் மின்னல் டிங் டாங்
ஆடல் பாடல் டிங் டாங்
அள்ளும் துள்ளும் டிங் டாங்
(இரண்டும்..)

காதலில்லா ஜீவனை நானும் பார்த்ததில்லை
வானமில்லா பூமிதன்னை யாரும் பார்த்ததில்லை
தேகமெங்கும் இன்பம் என்னும் வேதனை வேதனை
நானும் கொஞ்சம் போட வேண்டும் சோதனை சோதனை
உந்தன் கை வந்து தொட்ட சத்தம்
டிங் டா டிங் டாங் டா டிங் டாங்
அன்பு முத்தங்கள் இட்ட சத்தம்
டிங் டா டிங் டாங் டா டிங் டாங்
அங்கும் இங்கும் டிங் டாங்
ஆசை பொங்கும் டிங் டாங்
நெஞ்சில் நெஞ்சம் மஞ்சம் கொள்ளும்
(இரண்டும்..)

காதல் கண்ணன் தோளிலே நானும் மாலை ஆனேன்
தோளில் நீயும் சாயும்போதும் வானை மண்ணில் பார்த்தேன்
நீயும் நானும் சேறும்போது கோடையும் மார்கழி
வார்த்தை பேச நேரம் ஏது கூந்தலில் பாய் விரி
எங்கு தொட்டாலும் இன்ப நாதம்
டிங் டா டிங் டாங் டா டிங் டாங்
என்றும் தீராது நெஞ்சின் வேகம்
டிங் டா டிங் டாங் டா டிங் டாங்
அங்கும் இங்கும் டிங் டாங்
சொர்க்கம் தங்கும் டிங் டாங்
உந்தன் சேவை எந்தன் தேவை
(இரண்டும்..)

படம்: பணக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி

Last 25 songs posted in Thenkinnam