எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாய்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
இன்னும் கண்கள் திறக்காத செல்வம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்…
அறிவை மயக்கும் மாய தாகம்
இவளைப் பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்
கனவுகளில் வாழ்ந்த நாளை
கண் எதிரே பார்க்கிறேன்
கதைகளிலே கேட்டப் பெண்ணா
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
அங்கும் இங்கும் ஓடும் கால்கள்
அசைய மறுத்து வேண்டுதே
இந்த இடத்தில் இன்னும் நிற்க
இதயம் கூட ஏங்குதே..
என்னானதோ… ஏதானதோ…
கண்ணாடி போல் உடைந்திடும் மனது
கவிதை ஒன்று பார்த்து போக
கண்கள் கலங்கி நானும் ஏங்க
மழையின் சாரல் என்னைத் தாக்க
விழிகள் எல்லாம் கேள்வி கேட்க
எங்கேயோ பார்த்த…
ஆதி அந்தமும் மறந்து
உன் அருகில் கரைந்து நான் போனேன்
ஆண்கள் வெக்கபடும் தருணம்
உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
இடி விழுந்த வீட்டில் இன்று
பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி
கடவுள் பதில் கேக்கிறதே
வியந்து வியந்து உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
இந்த நிமிடம் மீண்டும் பிறந்து
உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து…
படம்: யாரடி நீ மோகினி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
படியவர்: உதித் நாராயன்
Saturday, February 26, 2011
எங்கேயோ பார்த்த மயக்கம்
பதிந்தவர் MyFriend @ 2:33 AM
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
அருமையான பாடல்... உதித்நாராயனன் அவர்களது குரலே ஒரு மயக்கம் தான்...
பாடல் ஒளிப்பதிவும் ரசனையுடன் எதார்த்தமாக இருக்கும்...
பாடல் பதிவிற்கு மிக்க நன்றி...
அன்புடன்
மதுரை அருண்
Post a Comment